summava vanthathintha suthanthiram

24 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
Mar 22, 2026, 11:04:54 PM (2 days ago) Mar 22
to santhavasantham

 

சும்மாவா வந்த திந்தச் சுதந்திரம்- அதுதான்

சுவாசமாய் உயிரைக் காக்கும் மந்திரம்

 

அன்று

 

கட்டுண்டார் , கொசுக்க ளாலே

      கடியுண்டார், கத்தி யாலே

வெட்டுண்டார், தீயின் சூட்டு

      வெப்புண்டார், வசைச்சொல் லாலே

திட்டுண்டார், கசையின் வீச்சால்

      சிதைப்புண்டார், தேள்க ளாலே

கொட்டுண்டார், விளையாட் டாகக்

      கொலையுண்டார் தேச பக்தர்       சும்மாவா?

 

 

திருமணம் செய்த அன்றே

      சிறையிலே தள்ளப் பட்டும்

உரிமைகொள் சொத்து வெள்ளை

      உலுத்தனால் கவரப் பட்டும்

அரும்பெரும் மானம் போக்கி

     அம்மண மாக்கப் பட்டும்

கருகிய மொட்டாய் நாளைக்

      கடத்தினர் தேச பக்தர்

                                   (சும்மாவா..)

தழும்புகள் நகைகள் என்றும்

      சழக்கனின் வஞ்சம் செய்த

தொழும்புகள், பூக்குழிக்குள்

      சுடுகதிர்த் தொழுகை என்றும்

விழும்பொழு தெல்லாம் அன்னை

      மென்மடி கிடப்பதென்றும்

பிழம்பெனச் சுடர்விட் டன்று

      பேசினர் தேச பக்தர்.            (சும்மாவா....)

 

தூக்கிலே தொங்கி, எங்கோ

      தொலைவிலே தீவில் வெந்து

சீக்கிலே செத்து , கல்விச்

      சிறப்பினை நீக்கி , என்றும்

வாக்கிலே தாயின் வந்தே

      மாதரம் முழங்கி, சொந்த

யாக்கையைத் துச்ச மாக

      ஆக்கினர் தேச பக்தர்            (சும்மாவா...)

 

யாக்கையும் துச்ச மானால்

      அடிதடி என்ன செய்யும்?

வாக்கிலே தாயி ருந்தால்

      வன்முறை என்ன செய்யும்?

நோக்கிலே தெளிவிருந்தால்

      நோவுகள் பொருட்டே இல்லை?

வாழ்க்கையைத் தேசத் திற்கே

       வார்த்தனர் தேச பக்தர்           (சும்மாவா...)

 

பெற்றவர் சொந்த மில்லை

       பிள்ளைகள் சொந்த மில்லை

உற்றவர் சொந்த மில்லை

       ஊருளோர் சொந்த மில்லை

மற்றெதும் சொந்த மில்லை

       வணங்கிடும் பார தத்தாய்

பற்றதே சொந்தம் என்று

       பற்றினர் தேச பக்தர்             (சும்மாவா...)

 

சுதந்திரம் பெறுவ தற்குத்

       தொண்டுகள் அவரேன் செய்தார்?

இதந்தரும் வசதி வாழ்க்கை

       எய்துவோம் என்றா? இல்லை

பதவிகள் வீட்டு வாசல்

       படியிலே நிற்கும் என்றா?

எதையுமே தனக்கென் றெண்ணா

       ஏந்தல்கள் தேச பக்தர்             (சும்மாவா...)

 

அப்படிப் பெற்ற ஒன்றை

       ஐயகோ என்ன செய்தோம்

கொப்பிலே பழுத்த ஒன்றைக்

       குரங்குகள் கையில் தந்தோம்

எப்படிப் பெற்றோம் என்றே

       எண்ணியே பார்த்தி டாமல்

தப்படி வைத்தே இன்று

       தன்சுகம் தேடு கின்றோம்           (சும்மாவா...)

 

நல்லது செய்வ தெல்லாம்

       நமக்கெது கிடைக்கு மென்னும்

எல்லையில் நின்று பார்க்கும்

       எழுச்சிதான், நாட்டு நன்மை

சொல்லிலே மட்டும் தொட்டுச்

         சுகங்களைத் தேடு வோரை

 வல்லவர் என்று சொல்லி

         மாயையில் வீழு கின்றோம்      (சும்மாவா.}

Ram Ramakrishnan

unread,
Mar 22, 2026, 11:26:05 PM (2 days ago) Mar 22
to santhav...@googlegroups.com
அற்புதம், கருத்தும், எண்ணவோட்டமும், கவிதையும், தலைவரே.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Mar 23, 2026, at 08:34, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBC-BqMpsseiPt5NmnbS9i6koCgMi7X1opAVSXs8OD6XMQ%40mail.gmail.com.

sudha's creations

unread,
Mar 23, 2026, 2:04:03 AM (2 days ago) Mar 23
to santhavasantham
வாக்கிலே தாயி ருந்தால்

      வன்முறை என்ன செய்யும்?

நோக்கிலே தெளிவிருந்தால்

      நோவுகள் பொருட்டே இல்லை

என்ன அற்புதமான வரிகள் உணர்ச்சி பிழம்பாக இருக்கு..

துரந்த் 2 படம் சமீபத்தில் பார்த்து அதன் கருத்துக்களால் மனம் கொஞ்சம் சலனப்பட்டது. 
நிஜமாகவே இந்தியாவில் வாழ்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள் தான். 
ரொம்ப அற்புதமான கவிதை மாமா அன்புடன் சுதா வேதம்

Govindaraju Arunachalam

unread,
Mar 23, 2026, 6:33:57 AM (2 days ago) Mar 23
to santhav...@googlegroups.com



சும்மா வரவில்லை சுதந்திரம் என்று

அம்மா அழகாக அளித்தபா நன்று

இம்மா நிலத்துள்ளார் இதனையே இன்று

கும்மாங் குத்திட்டு குதிப்பரே தின்று!


-கருவூர் இனியன்.


Subbaier Ramasami

unread,
Mar 23, 2026, 9:32:26 AM (2 days ago) Mar 23
to santhav...@googlegroups.com
நன்றி

On Sun, Mar 22, 2026 at 11:26 PM Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:
அற்புதம், கருத்தும், எண்ணவோட்டமும், கவிதையும், தலைவரே.

Subbaier Ramasami

unread,
Mar 23, 2026, 9:34:40 AM (2 days ago) Mar 23
to santhav...@googlegroups.com
நன்றி

On Mon, Mar 23, 2026 at 6:33 AM Govindaraju Arunachalam <agrp...@gmail.com> wrote:



சும்மா வரவில்லை சுதந்திரம் என்று

Swaminathan Sankaran

unread,
Mar 23, 2026, 10:52:45 AM (2 days ago) Mar 23
to santhav...@googlegroups.com
Excellent, and most moving as well as inspiring.
Sankaran

 Swaminathan Sankaran

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Subbaier Ramasami

unread,
Mar 23, 2026, 8:55:00 PM (2 days ago) Mar 23
to santhav...@googlegroups.com
நாட்டின் உள் நடப்புகளைப் பார்க்கும் போது மனம் வேதனைப்படுகிறது. என்ன செய்ய?

On Mon, Mar 23, 2026 at 2:04 AM sudha's creations <sudhave...@gmail.com> wrote:
வாக்கிலே தாயி ருந்தால்

Subbaier Ramasami

unread,
Mar 23, 2026, 8:55:34 PM (2 days ago) Mar 23
to santhav...@googlegroups.com

இமயவரம்பன்

unread,
Mar 24, 2026, 7:14:10 AM (19 hours ago) Mar 24
to santhav...@googlegroups.com, santhavasantham
கருத்தும் நடையும் சிறக்கும் பாடல்கள், மிக அருமை தலைவரே! 

- இமயவரம்பன் 

Kaviyogi Vedham

unread,
Mar 24, 2026, 10:48:33 AM (16 hours ago) Mar 24
to santhav...@googlegroups.com
yes. very  good  poem
yogiyar

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages