அன்பின் பெயரே கடவுள்

5 views
Skip to first unread message

இமயவரம்பன்

unread,
Nov 26, 2025, 6:30:58 AM (yesterday) Nov 26
to santhavasantham

அன்பின் பெயரே கடவுள்


அன்பின் பெயரே கடவுள் - ஆன்ற 

… அறிவின் பெயரே கடவுள்

முன்பின் அறியார் துயரைப் - போக்க

… முனையும் பரிவே கடவுள்


பொன்பின் அலையா மனமும் - மெய்ம்மை

… போற்றும் குணமும் கடவுள்

துன்பம் அலைபோல் வரினும் - என்றும்

… துவளாத் துணிவே கடவுள்


தன்னை அறியும் அறிவால் - வரும்

… சாந்த நிலையே கடவுள்

சென்றுள் கலந்த அருளால் - இருள்

… தீர்ந்த தெளிவே கடவுள்


- இமயவரம்பன் 

Arasi Palaniappan

unread,
Nov 26, 2025, 6:33:31 AM (yesterday) Nov 26
to சந்தவசந்தம்
மிக அருமை!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/E6510673-FE70-4900-B6C1-969951605973%40gmail.com.

இமயவரம்பன்

unread,
Nov 26, 2025, 7:26:23 AM (24 hours ago) Nov 26
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி

Ram Ramakrishnan

unread,
Nov 26, 2025, 10:17:44 AM (21 hours ago) Nov 26
to santhav...@googlegroups.com
அருமை, திரு. இமயவரம்பன்.
அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On 26 Nov 2025, at 5:00 PM, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:


--

Swaminathan Sankaran

unread,
Nov 26, 2025, 11:17:24 AM (20 hours ago) Nov 26
to santhav...@googlegroups.com
"தன்னை அறியும் அறிவால் - வரும்

… சாந்த நிலையே கடவுள்

சென்றுள் கலந்த அருளால் - இருள்

… தீர்ந்த தெளிவே கடவுள்."


உண்மை தான்.

அதனால் தான் கடவுளை அறிவதும் அடைவதும் மிகக் கடினம் போலும்.


சங்கரன் 





--
 Swaminathan Sankaran

Kaviyogi Vedham

unread,
Nov 26, 2025, 11:20:49 AM (20 hours ago) Nov 26
to santhav...@googlegroups.com

இமயவரம்பன்

unread,
Nov 26, 2025, 6:42:53 PM (13 hours ago) Nov 26
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. ராம்கிராம் 

இமயவரம்பன்

unread,
Nov 26, 2025, 6:46:40 PM (13 hours ago) Nov 26
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
நன்றி, திரு. சங்கரன்

இமயவரம்பன்

unread,
Nov 26, 2025, 6:47:14 PM (13 hours ago) Nov 26
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
யோகியாருக்கு மிக்க நன்றி

> On Nov 26, 2025, at 11:20 AM, Kaviyogi Vedham <kaviyog...@gmail.com> wrote:
>
> wonderful imayam.. yogiyar

இமயவரம்பன்

unread,
Nov 26, 2025, 7:11:54 PM (12 hours ago) Nov 26
to santhavasantham
வேறு விதமாக எழுதிப் பார்த்தேன் :

அன்பின் உருவே கடவுள் 

(பல்லவி)
அன்பின் உருவே கடவுள் - திகழ்
… அறிவில் தெளிவே கடவுள்

(அனுபல்லவி)
கன்னல் தமிழின் கவிபோல் - அருள் 
… கனியும் அமுதே கடவுள்

(சரணம்)
புண்பட் டறியா உளமும் - நிதம்
… புதுமை பொலிவாண் முகமும்
மண்டும் களிசேர் விழியும் - கொண்ட
… மழவின் சிரிப்பே கடவுள்.  (அன்பின் உருவே)

மன்னும் விழிப்பாம் எரியால்  - மருண்
… மாய்க்கும் தவமே கடவுள் 
தன்னை அறியும் அறிவால் - வரும்
… சாந்த நிலையே கடவுள். (அன்பின் உருவே)

பொன்னும் பொருளும் விழையா  - ஒரு 
… புரையில் நெறியே கடவுள்
வன்மச் செயலைக் கடியும் - அற
… வாளின் வலியே கடவுள்.  (அன்பின் உருவே)

அங்கண் உலகின் உறவாய்  - உயிர்
… ஆளும் உணர்வே கடவுள்  
இங்(கு)இக் கணமே நிசமாம் - என 
… எண்ணும் நினைவே கடவுள்.  (அன்பின் உருவே)

சொற்பொருள்:
வாண்முகம் = ஒளி பொருந்திய முகம்
புரையில் = குற்றமற்ற 
அங்கண் = அழகிய

Kaviyogi Vedham

unread,
Nov 26, 2025, 8:47:27 PM (11 hours ago) Nov 26
to santhav...@googlegroups.com
romba   azagu.. vazga
 yogiyar

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Nov 26, 2025, 8:57:50 PM (10 hours ago) Nov 26
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
யோகியாரின் அன்புக்கு மிக்க நன்றி 

On Nov 26, 2025, at 8:47 PM, Kaviyogi Vedham <kaviyog...@gmail.com> wrote:

romba   azagu.. vazga
 yogiyar

Ram Ramakrishnan

unread,
Nov 26, 2025, 9:47:03 PM (10 hours ago) Nov 26
to santhav...@googlegroups.com
எல்லாவற்றையும் கடந்தவன் என்றாலும் நம்முள்ளிலும் இருக்கிறான் என்பதை அறிந்து விட்டால் எல்லாமே எளிது.

ஞானிகள் ஆதல் கடினமே எனினும் முயற்சிக்கு அப்பாற் பட்டதன்று.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On 26 Nov 2025, at 9:47 PM, Swaminathan Sankaran <swamina...@gmail.com> wrote:



இமயவரம்பன்

unread,
Nov 26, 2025, 10:05:52 PM (9 hours ago) Nov 26
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிகச் சிறப்பாகச் சொன்னீர்கள், திரு. ராம்கிராம்.

“முயற்றி சுமந்தெழுந்து முந்துற்ற நெஞ்சே” என்பது நம்மாழ்வார் திருவாக்கன்றோ?
Reply all
Reply to author
Forward
0 new messages