தமிழ் தரும் தனிநிறைவு

4 views
Skip to first unread message

இமயவரம்பன்

unread,
Nov 22, 2025, 8:19:13 AM (4 days ago) Nov 22
to santhavasantham

தமிழ் தரும் தனிநிறைவு

(எண்சீர் ஆசிரிய விருத்தம்)


சிறகுவிரித்(து) அகல்வானில் பறந்து பாடித் 

… திளைக்கின்ற தோர்வாழ்வுக் கேங்கும் நெஞ்சே!

வெறுமையெனும் எரிதழலுன் உணர்வை வாட்ட

… மீளும்வழி அறியாமல் உழல்வ தேனோ ?

எறிதிரைபோல் தமிழமுதம் உனக்குள் பொங்க 

… இனித்திடுநற் கவிதையெலாம் இயற்று வாயேல்

விறுவிறென விசைத்துவரும் இடர்கள் ஓய்ந்து  

… மிகுமகிழ்வே உனதுணர்வில் நிறைந்தி டாதோ?

  • இமயவரம்பன் 

Arasi Palaniappan

unread,
Nov 22, 2025, 8:31:17 AM (4 days ago) Nov 22
to சந்தவசந்தம்
தனித்த தமிழ்நிறைவு சாற்றும் விருத்தம் 
இனித்தம் உடையதென் பேன்!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/F87DC6CB-57C3-4505-B505-5EBB64C528AA%40gmail.com.

Ram Ramakrishnan

unread,
Nov 22, 2025, 8:45:43 AM (4 days ago) Nov 22
to santhav...@googlegroups.com
அருமை.

நெஞ்சை விளித்து நிரம்பக் கணைதொடுக்கத்
துஞ்ச லொழித்த துயர்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On 22 Nov 2025, at 6:49 PM, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:


--

இமயவரம்பன்

unread,
Nov 22, 2025, 8:46:36 AM (4 days ago) Nov 22
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
இனிக்கும் குறள்வாழ்த் தெனக்கிங் குரைத்தீர்
மனத்தில் அமுதமழை வார்த்து.

மிக்க நன்றி, திரு. பழனியப்பன்

இமயவரம்பன்

unread,
Nov 22, 2025, 8:53:03 AM (4 days ago) Nov 22
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
எஞ்சலில் அன்பின் கவிஞர் இராம்கிராம்
செஞ்சொற் குறட்பா சிறப்பு.

மிக்க நன்றி, திரு. ராம்கிராம்!

NATARAJAN RAMASESHAN

unread,
Nov 22, 2025, 8:54:28 AM (4 days ago) Nov 22
to santhav...@googlegroups.com
சிறப்பான விருத்தம

    —தில்லைவேந்தன்

இமயவரம்பன்

unread,
Nov 22, 2025, 8:58:08 AM (3 days ago) Nov 22
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. தில்லைவேந்தன்

Kaviyogi Vedham

unread,
Nov 22, 2025, 10:39:19 AM (3 days ago) Nov 22
to santhav...@googlegroups.com
Reply all
Reply to author
Forward
0 new messages