குரோதி வருடம்

23 views
Skip to first unread message

Ram Ramakrishnan

unread,
Apr 13, 2024, 12:37:33 PM4/13/24
to santhav...@googlegroups.com

அனைத்துக் கவிஞர்களுக்கும் அடியேனது இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

N. Ganesan

unread,
Apr 13, 2024, 3:55:16 PM4/13/24
to santhav...@googlegroups.com

"நித்திரையில் இருக்கும் தமிழா!, சித்திரையல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு, அண்டிப் பிழைக்கவந்த ஆரியர் கூட்டம் காட்டியதே அறிவுக் கொவ்வாத அறுபது ஆண்டுகள் தரணியாண்ட தமிழருக்கு தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!'' (யார் செய்த செய்யுள்?? செய்யுளா இது??)

என் கணிப்பு: பாரதிதாசனார் மறைந்து 40+ ஆண்டுகள் கழிந்தபின் ஏற்பட்ட வசனம் இது. புரட்சிக்கவி வாக்கன்று.  இந்த வரிகள் மரபிலக்கணப்படி செய்த செய்யுளாகவும் இல்லை.

>  தாயேயுன் புத்தாண்டைச் சொல்ல அயல்மொழிக்
>  காயே யனையசொல் லேன்?  - கோதை மோகன்

தொல்காப்பியப் பாயிரம் கூறும் ஐந்திரம் (< இந்திர-) பற்றி முதலில் நூல் எழுதியவர் டாக்டர் ஆர்தர் கோக் பர்னல். அவர் தமிழாண்டுப் பெயர்கள் பற்றி முக்கியமான ஒரு கருத்தினைக் கூறினார்.

தமிழ் வருடங்கள், மாதங்களில் 11 பெயர்கள் பிராகிருதப் பெயர்களே. “தை” ஒரு  திங்கள் பெயர் தான் தமிழ். காரணங்கள் உண்டு. https://nganesan.blogspot.com/2022/01/makaram-in-tanittamil-12-rasi-months.html

தைத் திங்களைப் புத்தாண்டு என பாரதிதாசன் ஏற்றுள்ளார். அதற்கு நல்ல பாடல்களும் பாடியுள்ளார். மறைவதற்கு ஓரிரண்டு ஆண்டுகள் முன். ஆனால், கோதைமோகன் கொடுத்துள்ளது புரட்சிக்கவி செய்யுள் அன்று. நல்ல தமிழாசான் இப்படி ஒரு பாடல் எழுதுவாரா?

-------------------------------------------------

பாரி நிலையம், 1958-ல் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் இயற்றிய இளைஞர் இலக்கியம் என்ற நூலை வெளியிட்டது. அப்போது, பாரதிதாசன் முன்னுரையும் எழுதினார். அப்போதெல்லாம், சித்திரை ஆண்டின் முதல் திங்கள் எனக் கருத்துக் கொண்டிருந்தவர் பாரதிதாசனார் என்பது அவரது பாடல்களால் அறிய முடிகிறது. இந்த நூல் குழந்தை இலக்கியத்தில் சிறந்த ஒன்று.

3.19. திங்கள் பனிரண்டு
------------------
சித்திரைவை காசிஆனி ஆடிஆவணி-பு
     ரட்டாசி ஐப்பசிகார்த் திகைமார்கழி
ஒத்துவரும் தைமாசி பங்குனிஎல்லாம்-இவை
    ஓராண்டின் பனிரண்டு திங்களின் பெயர்.
கொத்துக் கொத்தாய்ப் பூவிருக்கும் சித்திரையிலே
    கூவும்குயில் மழை பெய்யும் கார்த்திகையிலே
மெத்தக்குளி ராயிருக்கும் மார்கழியிலே-மிக
   வெப்பக்கதிர் காட்சிதரும் தைப்பிறப்பிலே.  (பாரதிதாசன், 1958-ல் பாடியது).
https://tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0023255_இளைஞர்_இலக்கியம்.pdf

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து!
நா. கணேசன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/DE2F6E89-D0BC-4695-BCB9-28A8776F1098%40gmail.com.

Virus-free.www.avg.com

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Apr 13, 2024, 7:53:23 PM4/13/24
to சந்தவசந்தம்
அருமையான பதிவு திரு நா கணேசன் ஐயா,

அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் 
On Sunday, April 14, 2024 at 1:25:16 AM UTC+5:30 N. Ganesan wrote:
On Sat, Apr 13, 2024 at 11:37 AM Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:

அனைத்துக் கவிஞர்களுக்கும் அடியேனது இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

"

3.19. திங்கள் பனிரண்டு
------------------
சித்திரைவை காசிஆனி ஆடிஆவணி-பு
     ரட்டாசி ஐப்பசிகார்த் திகைமார்கழி
ஒத்துவரும் தைமாசி பங்குனிஎல்லாம்-இவை
    ஓராண்டின் பனிரண்டு திங்களின் பெயர்.
கொத்துக் கொத்தாய்ப் பூவிருக்கும் சித்திரையிலே
    கூவும்குயில் மழை பெய்யும் கார்த்திகையிலே
மெத்தக்குளி ராயிருக்கும் மார்கழியிலே-மிக
   வெப்பக்கதிர் காட்சிதரும் தைப்பிறப்பிலே.  (பாரதிதாசன், 1958-ல் பாடியது).
https://tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0023255_இளைஞர்_இலக்கியம்.pdf

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து!
நா. கணேசன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/DE2F6E89-D0BC-4695-BCB9-28A8776F1098%40gmail.com.

Virus-free.www.avg.com
Reply all
Reply to author
Forward
0 new messages