கவியரங்கம் 61

218 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
Nov 6, 2025, 12:35:39 AMNov 6
to santhavasantham

கவியரங்கம் 61 -தோரண வாயில்

 

வஞ்சத்தில் ஒன்றானை நெஞ்சத்தில் நின்றானை மாசற்றானை
                வலம்வந்து கனியொன்றைப் பெற்றானை வயிற்றானை துதிக்கை யானை
விஞ்சித்தான் நின்றிட்ட கஜமுகனை வென்றானை மாற்றிட்டானை
                  வித்தானை மறையானை குறையானை வள்ளியினை வெருட்டி னானை
கஞ்சத்தாள் பதத்தானை கதித்தோடும் மதத்தானை கருணையானை
                   கமண்டலத்தைக் கவிழ்த்தானை காவிரியை விரித்தானை கவிதையானை
தஞ்சந்தான் என்றவரைத் தள்ளானை புரப்பானை தாங்கு வானை
                   தமிழ் கேட்கும் இருபெரிய செவியானைப்  பாடுகிறேன் காக்க நன்றே

 

இரண்டாயி ரத் தொன்று நவம்பரே ழாம்நாளில்  என்றன் நெஞ்சில்
திரண்டோடிப் பெருகியதோர் ஆர்வத்தால் தினவெடுக்க இணையந் தன்னில்
மரபுப்பா வுக்கென்றரிய  தளமொன்றை வடிவமைத்தே தொடங்கி வைத்தேன்
இருபத்தைந் தாமாண்டைத் தொடும் சந்த வசந்தத்தின்  ஏற்றம் வாழ்க!

 

சாதனைகள் ஒன்றிரண்டா  சாற்றுதற்கு? மரபுப்பாத் தளங்கள் தம்மில்
ஏதிதனைத் தொன்மையிலே வெலக்கூடும்? தொடர்ந்துவரும் இயக்கந்தன்னில்
ஆதிமுதல் இன்றுவரை ஆற்றிவரும் தொண்டுகளை அளக்கப் போமோ?
போதனையா, பயிற்சிதரும் புதுமைகளும் ஒன்றிரண்டா புகலுதற்கே!

 

கவியரங்கம், கவிப்பட்டி மண்டபங்கள் ஆய்வரங்கம் கருத்தாக் கங்கள்
எவருமிங்கே பயின்றி டலாம் குறைசுட்டிக் காட்டிடலாம், இகலே இன்றி
சுவைதரலாம், சுவைபெறலாம், தொடரிடுகை எழுதிடலாம்  துலக்கலாமே!
கவிதையினை மதிக்கின்றோம், கண்ணியத்தைக் கடமையெனக் காக்கின்றோமே!

 

பாவகைகள் பாவினங்கள் சித்ரகவி, சிந்துப்பா, பழமைச் செய்யுள்
தேவைகளுக் கேற்பயிங்கே செப்புகிறோம், எழுதுகிறோம், சிந்த னைக்கு
மேவுகிற விவாதங்கள், வினாவிடைகள், வித்தகங்கள், மேலும் மேலும்
ஆவலுடன் வேற்றுமொழி இலக்கணங்கள் நமக்கேற்ப ஆக்கி யுள்ளோம்

 

இத்தனைநாம் செய்திருக்கும் போதினிலும்  திருப்தி இல்லை , இன்னும் கொஞ்சம்
வித்தகமாய்ச் சிந்தித்தே இவ்வாண்டு முதலாக விளக்க மாக
புத்தமுத மாகவினும் எதுதரலாம் எனவெண்ணிப்  புகல லாமே!
வித்தையினுக் கேதெல்லை விருப்பமட்டும் இருந்துவிட்டால் மேலும் வெற்றி

 

சிறந்தவழி இன்னும்கொஞ் சம்சிந்தித்  தேநாமும் தேடுவோமே
கறந்துகொண் டேயிருந்தால் போதாது, மேன்மேலும் கறக்க நல்ல

கறவையொடு கறவைக்குத் தீவனமும் காட்டுவது  கடமை யாகும்
திறமைமட்டும் போதாது திறமையினைப் பயன்படுத்தித் சேவை செய்வோம்.

 

சந்த வசந்தப் பிறந்த தினம்
     சரித்தி ரத்தில் பதிவாகும்
எந்தத் தடையும் இல்லாமல்
      இருபத் தைந்தைத் தொடுகிறது
இந்த வண்ணம் மேன்மேலும்
       இன்னும் இன்னும் சிறந்திடுக
கந்தன் அருளால் தொண்டாற்றிக்
        காரி யத்தில் மிளிரட்டும்!

 

என்ன தொண்டு செய்தாலும்
        இன்னும் கொஞ்சம் சிந்திப்போம்
என்னும் எண்ணம் மேன்மேலும்
        ஏற்றம் கொள்ளச் சிறந்திடுவோம்
உன்ன தங்கள் இலக்கியத்தில்
        ஊன்றி நிலைக்க வென்றிடுவோம்!

பின்னும் பின்னும் முனைந்திடுவோம்
        பேறென் றெண்ணி உழைத்திடுவோம்.

 

இன்னும் கொஞ்சம் சிந்திப்போம்
         என்னும் தலைப்பில் கவியரங்கம்
இன்னும் ஒருநாள் தள்ளியிங்கே
        இறங்கி வரத்தான்  போகிறது
கன்னல் கவிஞர் ராம்கிராம்
        கருத்து மிக்க தலைமையிலே
தின்னற் கேற்ற சுவையமுதத்
        தீனி கிட்டப் போகிறது

 

ஆர்வம் மிக்கார் ராம்கிராம்
          யாப்பில் வல்லார் ராம்கிராம்
பார்வை பட்ட காட்சிகளைப்
          படம்போல் கவிதை யாக்கிறவர்
தேர்ச்சி மிக்க வார்த்தைகளைத்
          தேர்ந்தெடுத்துக் கவிசெய்வார்
வார்த்தைத் தேடல் வேண்டாமல்
           வந்து சேரும் வரமுடையார்

 

இன்னும் கொஞ்சம் எனும் தலைப்பில்
      எத்த  னையோ ஆண்டுகளின்
முன்னர்க் கல்கி மலரினிலே
       முனைப்பாய் இட்ட கவிதையினை
இன்றிவ் வரங்கில் இடுகின்றேன்
        இன்னும் கொஞ்சம் அதனோடே
பின்னும் சேர்த்தே இடுகின்றேன்
   பிறங்கும், சிறக்கும் பெரிதாக!

 

இன்னும் கொஞ்சம் ஏன் முடியாது?


இந்திய இளஞனே , என்ன படிக்கிறாய்

                எழுதி எழுதி எதனைப் பிடிக்கிறாய்
சிந்தனை வண்டியைத் தூக்கி நிறுத்து

         சீக்கிரம் சீக்கிரம் அச்சைப் பொருத்து

 

உன்றனை விட்டால் கதிவேறில்லை
               
உறங்கு கின்றாயே அதுதான் தொல்லை
சென்ற கணங்கள் திரும்புவதில்லை
               
சிங்கமடா நீ அகற்றிடு கல்லை

ஒருகணத் துடிப்பில் உச்சியைப் பிடிப்பாய்
       
உதவிய மகிழ்ச்சியில் மீண்டும் கிடப்பாய்
இருகணத் தொடர்ச்சி ஏன் கிடையாது?
               
இன்னும் கொஞ்சம் ஏன் முடியாது?

 

ஒருநாள் போட்டியில் உலகை வெல்லுவாய்
       
ஒருசில நாட்களா உறுதி கொல்லுவாய்
சரிவினில் ஏறுதல் சாத்திய மாகும்
               
சாதனை செய்யச் சங்கடம் தீரும்

இராவணன் தம்பியாய் உறங்கிட வேண்டாம்

இலக்குவனாகவும் இருந்திடவேண்டாம்

சராசரி அல்ல நீ, சாதனை வீரன்
        
சவால்கள் எதனையும் சந்திக்கும் தீரன்

ஒருகணம் விட்டால் ஒருபடி பிந்துவாய்

         ஒருகணம் தொட்டால் இருபடி முந்துவாய்
வருகணம் ம்பெறும் வகையில் வருக நீ

         வாலிப வெற்றி மலைகளைத் தருகநீ!

 

சோம்பிக் கிடந்திடும் சோம்பேறியாநீ
        தூங்கி வழிந்திடும்  தேவாங்கு தானா
தேம்பிக் கிடந்து சிதைந்து போகாமல்
        தெம்பாய் நடக்கநீ இன்னும் கொஞ்சம்


இலந்தை

6-11-2025

Ram Ramakrishnan

unread,
Nov 6, 2025, 1:17:52 AMNov 6
to santhav...@googlegroups.com
அருமையான கவியரங்கத் தோரண வாயில் அமைத்த கவிவேழம் அவர்களின் கவிதைக்குப்
பின்னூட்டம்:


தோரணங்கள் அணிவகுத்துத் தொம்பைகளில் மின்னும்

… துங்கமிகு அறிஞர்பலர்க் கண்டவிந்த மன்றம்

வேர்முளைத்துப் பெரிதான விருட்சமிந்தக் கூட்டம்

… வேழத்தின் தலைமையிலே வெற்றிக்கொடி நாட்டும்

ஈர்க்கின்ற சொல்வன்மை ஈட்டத்தின் வரமே

… எச்செல்வ மென்றாலு மிதன்பின்னே வருமே

வேர்ப்பலவாம் கவிஞர்தம் விருப்பமிகு வாய்ச்சொல்

… வெள்ளிவிழா ஆண்டிதனில் வீறுகொளும் பாய்ச்சல்.

 

தேர்ந்தென்னை அழைத்திட்டார் செந்தமிழில் வல்லார்

… திறம்படவிக் கவியரங்கம் நடத்திடென்று சொல்வார்

யார்கொடுத்த தலைப்பெனினு மிடங்கொடுத்துக் கேட்டார்

…. “இன்னமுமே சிந்திப்போம்” இத்தலைப்பு வேட்டார்

கார்பூட்டும் மழைபோலே களங்கூட்டின் பொழிவு

… காத்திருப்போர் கேட்பதற்குக் களிப்பதனின் திறவு

சீர்தூக்கிச் சொற்கோத்துச் சிறப்பாக்க வாரீர்

,,, செவ்வனேயிங் கமர்ந்தோரின் செவிக்கின்பம் தாரீர்


கவிஞர்களே, அறிஞர்களே ஒன்று கூடி வாருங்கள். துவக்க நாள் நாளை, நவம்பர் திங்கள் 7 ம் திகதி.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)





--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBBqY5FeM-y4vJzEdFdofPATHh9MU%3DBjCvy0LjSx5guVfA%40mail.gmail.com.

Govindaraju Arunachalam

unread,
Nov 6, 2025, 2:14:07 AMNov 6
to santhav...@googlegroups.com

கவிவேழம் இலந்தை அவர்களின் ‘தோரண வாயில்’ கவிதைக்குப் பின்னூட்டப் பா.

குறள் வெண்செந்துறை யாப்பில் அமைந்தது

வாய்பாடு: மா மா காய்.

 

இலந்தை தந்த இனிக்கும்பா

    இனிய தேனில் ஆவின்பால்

கலந்து வைத்த கவியமுதம்

   காணும் போதே இனிக்கிறது!

 

வித்தைக் கெல்லை இல்லையென

   விளம்பக் கேட்டோம் இதுபற்றிச்

சித்தம் குவித்துச் சிந்திப்போம்

   சிறப்பாய்த் தளத்தில் செயல்படுவோம்!

 

-கருவூர் இனியன்

   

sudha's creations

unread,
Nov 6, 2025, 2:23:03 AMNov 6
to santhavasantham
இந்த வஞ்சத்தில் ஒன்றானே பாட்டை நான் எனது சின்ன வயதிலிருந்து.. .... கேட்டு வருகிறேன்...
இந்த கவியரங்க தலைப்பு ரொம்பவும் யோசிக்க வைக்கும் அற்புதமான தலைப்பாகும்.. வாய்ப்புக்கு நன்றி.. இலந்தை மாமா அவர்களுக்கும்.. புலவர் பெருமக்கள் அனைவருக்கும்..🙏🙏
சுதா வேதம் 



Siva Siva

unread,
Nov 6, 2025, 5:38:16 AMNov 6
to santhav...@googlegroups.com
தோரணவாயில் அழகு.

உன்றனை விட்டால் கதிவேறில்லை
      உறங்கு கின்றாயே அதுதான் தொல்லை /

எவரையும் எழுப்பும் வரி!

வி. சுப்பிரமணியன்

On Thu, Nov 6, 2025 at 12:35 AM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

கவியரங்கம் 61 -தோரண வாயில்

 

..

 

இரண்டாயி ரத் தொன்று நவம்பரே ழாம்நாளில்  என்றன் நெஞ்சில்
திரண்டோடிப் பெருகியதோர் ஆர்வத்தால் தினவெடுக்க இணையந் தன்னில்
மரபுப்பா வுக்கென்றரிய  தளமொன்றை வடிவமைத்தே தொடங்கி வைத்தேன்
இருபத்தைந் தாமாண்டைத் தொடும் சந்த வசந்தத்தின்  ஏற்றம் வாழ்க!

 

..

  

என்ன தொண்டு செய்தாலும்
        இன்னும் கொஞ்சம் சிந்திப்போம்
என்னும் எண்ணம் மேன்மேலும்
        ஏற்றம் கொள்ளச் சிறந்திடுவோம்
உன்ன தங்கள் இலக்கியத்தில்
        ஊன்றி நிலைக்க வென்றிடுவோம்!

பின்னும் பின்னும் முனைந்திடுவோம்
        பேறென் றெண்ணி உழைத்திடுவோம்.

 

..

Arasi Palaniappan

unread,
Nov 6, 2025, 5:47:54 AMNov 6
to சந்தவசந்தம்
வாரண முகத்தான் வணக்கம் தொடங்கித் 
தோரண வாயில் சொக்கும் அழகு!
காரண காரியம் காட்டும் கவிதை 
பூரண மான புகழ்சேர் பொலிவே!

--

Lalitha & Suryanarayanan

unread,
Nov 6, 2025, 7:14:43 AMNov 6
to santhav...@googlegroups.com

On Thu, Nov 6, 2025 at 11:47 AM Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:

NATARAJAN RAMASESHAN

unread,
Nov 6, 2025, 10:00:59 AMNov 6
to santhav...@googlegroups.com
அற்புதமான தொடக்கம்
தலைவருக்கு வணக்கம் 

      — தில்லைவேந்தன்

இமயவரம்பன்

unread,
Nov 6, 2025, 6:17:16 PMNov 6
to santhav...@googlegroups.com, santhavasantham
பேரெழில் மிக்க தோரண வாயிலின்  எழுச்சிமிக்க எழுத்துகள் இனிமை! 

Ram Ramakrishnan

unread,
Nov 6, 2025, 10:02:55 PMNov 6
to santhav...@googlegroups.com
கவியரங்கம் -  61

 

இன்னும் கொஞ்சம் சிந்திப்போம்

 

தொடக்கநாள்  7- 11- 2025

 

கவியரங்கத் தலைமைக் கவிதை:


 

இறைவணக்கம்


வந்தவினை தீர்த்தருளும் தொந்தி கணநாதா

சிந்தை நிறைத்தவென் சிங்காரா - சந்த

வசந்தக் கவியரங்கம் மாண்புறச்செய் தற்கே

இசைந்தருளி வந்திடுவா யிங்கு.

 

வெள்ளிவிழா ஆண்டில் கவியரங்க முதற்செய்தியும் சந்த வசந்தக் குழுமத் தலைவர்க்குப் பாராட்டும்

 

வெள்ளிவிழா வாண்டில் விளக்கொளிபோற் சிந்தனைகள்

அள்ளித் தரவந்த ஆன்றோரே – எள்ளுரையைத்

தள்ளிடுவோம் முள்ளைப்போல் தைத்தல் தவிர்த்திடின்

உள்ள முவக்கு முயர்வு.

 

எள்ளுரை : இகழ்ச்சியுரை

 

கவிவேழம் தோற்றிய கண்கவருஞ் சோலை

புவிபோற்றி நிற்கின்ற பொற்பு., – தவமாய்த்

தமிழ்ப்பணி செய்தாரின் தாளாண்மை ஏத்து(ம்)

இமிழ்சந்த மீடில்லா வின்பு

 

தாளாண்மை - ஊக்கம்

இமிழ் – இனிமை, இசை

 

அவையடக்கம்

 

பொருளார்ந்த பாப்புனையப் புஞ்சும் கவிகாள்

சிரந்தாழ வந்தடைந்தேன் தேடி – சரமதனில்

நாராகி நல்கிய நற்கவிப் பூக்களைச்

சீராகக் கோத்தளிப்பேன் தேர்ந்து.

 

புஞ்சும் – ஒன்று கூடும்

 

இன்னும் கொஞ்சம் சிந்திப்போம்

நேரிசைக் கலிவெண்பா

 

எந்தையும் தாயு மிருந்து சிறந்ததந்நாள்

வந்துதித்த நாள்தொடங்கி வாழ்வினிக்கச் – சிந்தைமகிழ்

தெள்ளிய செய்கையில் சீருற்றோம். அந்நாளில்

அள்ளித் கொடுத்த அறிவுரைகள் – உள்ளத்தி(ல்)

ஊன்றி யியல்புட னொட்டிக் கலந்தன.

சான்றொன்று கண்டோம் சமத்துவத்தில். – தோன்றிய

வள்ளுவர் சாற்றினார் "உள்ளவருள் ஒண்பொருளே"

ஒள்ளிய பாரதி ஓதியதே., – விள்ளா

அறிவின் விரிவதனி லார்வ முடனாய்ச்

செறிவை யடைந்துலக ணைத்தார் – உறவும்                        10

செழித்தது., செய்திறனில் சேவை மனத்தில்

விழிப்புணர்வு மேவ விரிந்து – பழுத்தநற்

பண்பில் பகிர்ந்துண்ணும் பாசம் வளர்ந்தது.,

மண்ணில் மனிதநேயம் மாண்பினில் – விண்ணுறும்.,

ஈதலின் உண்டோ இனிதென்றார்., இத்துடன்

யாதுமெம் ஊரே யெனச்சொன்னார்., – ஓதிய

முன்னோரின் காலம் முடிந்த துணருங்கால்

சின்னேரம் நின்றிங்குச் சிந்திப்போம்., – பொன்னான

அக்காலம் இன்றுளதோ? அன்பே உலகணைக்கும்.,

தக்காத பேச்சுத் தகவொழிக்கும்., – எக்காளம்                         20    

அன்பொழிக்கும்., சிந்தனையின் ஆழத்தில் செல்வோமா?

முன்பிருந்த நிம்மதி சென்றதெங்கு? – நன்றெனவாய்

நெஞ்சில் நினைவலைகள் நீந்திடும்., நீரோடை

கொஞ்சிக் குலவிடும் வாடையுடன்., – பஞ்சாய்ப்

பறந்திடும் புள்ளினங்கள்., பச்சைநிறக் காடு.,

உறவில் களித்தநல் லுள்ளம்., – அறமோங்க

ஓமச் சடங்குகள்., ஊர்கூடித் தேரிழுத்தல்.,

பூமியில் சீரான தட்பவெப்பம்., – சேமமுற

மெய்ஞ்ஞானம் போற்றிய மேன்மை., அறிவிற்கு

விஞ்ஞான மஃதளித்த வேட்கையின் – விஞ்சுதல்.,                     30      

எத்துணை நற்பயனும் என்றோர்நாள் முற்றுமன்றோ?

அத்தனின் சித்தத்தை ஆரறிவார்? – இத்தலத்தில்

மூண்டவிருள் காரணத்தை மீண்டொருகால் சிந்திப்போம்,

காண்கின்ற நாச விளைவுகளின் – பூண்டொழிக்க.,

நீர்நிலைகள் காய்ந்தவிடம் நீண்ட தொழிற்கூடம்.,

ஆர்த்திடு முற்பத்தி யச்சுறுத்தல்., – ஊரழித்துக்

கோடிகளைச் சேர்த்துக் குவிக்கச் சதித்திட்டம்.,

மூடிம றைத்தவூழல் வித்திட – வாடிடும்

மக்கள்., வளர்ச்சியென வான்முட்டும் கட்டடங்கள்.,    

பக்கத்தில் குப்பைசூழ்க் கோலங்கள்., – சிக்கலுறச்                      40            

சூழ்நிலையின் சீர்கேட்டால் சோதனை., வானிலையால்       

ஆழ்கடலின் பேரலைகள் மூழ்கடித்தல்., – வீழ்துயரில்

அண்டத்தில் வெப்பமயம்., மண்டும் சுழற்காற்று.,

தண்மைசூழ்க் கோடு பனியவிழ்க்க – மண்மூழ்கல்.,

சீற்றத்தில் பூமித்தாய் செய்தவற்றைச் சிந்திப்போம்.

ஆற்றொணாத் தீச்செயலில் ஆயுதங்கள்., – தூற்றுவகை

வாணிகத்தில் தீராத வாஞ்சை வளர்த்தது..

நாணமற்று வீசும் நெகிழிகள்., – பூணும்

சுயநலன்., சூழழிவுச் சித்தாந்த நோக்கம்..

முயற்சியின்மை.. செல்வத்தில் மோகம்.. – துயரிதாம்.,                   50

கார்மேகம் போலாம் கரும்புகையில் வான்விரியும்.

யார்தந்தார் ஈங்கிதற் காதரவு – ஓர்க.,

கமழிப் படலம் கணிசமாய் நீங்க

இமைப்பொழுதில் தோல்நோயு மிங்காம் – அமிழ்த்திட்டு

நம்மவரோ டன்னியர்க்கும் நஞ்சளிக்கும்., காசீட்ட

வம்பான மாசை வரவழைத்தல் -  தெம்பாமோ?  

இத்தனையும் சிந்தனையில் முந்திவரச் சீரமைக்கும்                  

வித்தகத்தைச் சாற்றுவகைப் பற்றுவமேல் – சித்தி.,

இயற்கையன்னை தந்ததெலாம் எல்லோர்க்கும் சொந்தம்

தயக்கமின்றி ஏற்றிடுதல் சால்பு – முயற்சி                                 60

திருவினை யாக்கும்., ஒருபக்கம் சாராக்

கருமங்கள் தாமாக்கும் பாதை., – வெருவுதல்

வேண்டாம்., முனைந்து வினையில் விழைதலே

தூண்டிலின் மீனெனும் சோகத்தைத் – தாண்டும்.,

அரசமரஞ் சுற்றி அடிவயிற்றைப் பார்த்தால்

விரைவில் பயனொன்றும் மேவா., – தருணத்தைக்                    

கச்சிதமாய்க் கண்டறிந்து காரியம் செய்வோமேல்

நிச்சியமாய் பூமித்தாய் நேர்படுவள் – இச்சையுடன்

பூமிக்காய் நாசவினைப் போரின் புடைசாரோம்

சேமமுறச் செய்வோம் சமரசம்., – நாமெல்லாம்                           70

வேண்டுவம் ஓரினமாய்  யாண்டு மொருமித்து

ஆண்டவ னாக்கிய அண்டத்தில் – மீண்டும்                           

இயற்கையைப் போற்று மியல்புற்று வாழ                             

நயந்தேன் நடக்குமென நம்பு.                                                74

 

முடிவுரை

கட்டளைக் கலித்துறை

 

இன்னமும் கொள்ளணும் இன்மனச் சிந்தனை ஏற்றமுற

சொன்னமும் சொர்க்கமும் கூடு மிதாலெனச் சூளுரைப்பேன்

இன்மையைத் தீர்க்க வியற்கையைப் போற்றணும் இன்முகத்தே

வன்தொழில் நீங்கிட வண்மையும் சேர்ந்திடும் வாழ்நிலத்தே

 

பெற்ற சுதந்திரம் பேணப் பகையதன் பேரொழித்து

கற்றவர் சூழ்ந்திடக் கல்வி யெனுமொளி காத்திடணும்

சுற்றுப் புறமதன் சூழலும் மேம்படத் துப்புரவைச்

சற்றுநம் சிந்தனை சாரணும் பின்வரும் சந்ததிக்கே.

 

அருஞ்சொற்பொருள்:

வள்ளுவர் சாற்றினார் "உள்ளவருள் ஒண்பொருளே":

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள” (திருக்குறள் – 241)

ஒண்பொருள் – சிறந்த பொருள்

ஒள்ளிய – அறிவு மிகுந்த

“பகைவனுக் கருள்வாய் நன்நெஞ்சே” – பாரதி

தக்காத – தகாத என்பதன் நீட்டல் விகாரம்

தகவு – பெருமை, மதிப்பு, ஒழுக்கம்

எக்காளம் – இறுமாப்பு, கேலி

ஓமச் சடங்கு – வேள்வி

வாடை – வடக்கிலிருந்து வீசும் காற்று

விஞ்சுதல் – மேன்மையுறல்

அத்தன் – மேலோன், இறைவன்

மண்டும் – நெருங்கும்

ஆர்த்திடும் – ஓங்கி முழங்கிடும்

கோடு – மலை, மலைத்தொடர்

வாஞ்சை – ஆசை, விருப்பம்

நெகிழி -  இளகிய நிலையிலிருந்து இறுகிய நிலைத்தாம் பொருள் – plastic items

கமழிப் படலம் – ozone layer., இது அண்டத்தில் குறைவதனால் தோல் சம்பந்தமான நோய்கள் ஏற்படும்.

சித்தி – வெற்றி

வெருவுதல்  - அஞ்சுதல்

யாண்டும் - எப்போதும்

சொன்னம் – சுவர்ணம், தங்கம்

வன்தொழில் – வஞ்சகமான செயல்., வண்மை - வளமை


அன்பன்

ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Lalitha & Suryanarayanan

unread,
Nov 6, 2025, 11:01:36 PMNov 6
to santhav...@googlegroups.com

Dr. Pushpa Christy Canada

unread,
Nov 7, 2025, 12:37:11 AMNov 7
to santhav...@googlegroups.com
அருமையான கவியரங்கத் தோரண வாயில் இலந்தை ஐயா. வாழ்த்துகள்
சோதரி புட்பா கிறிட்டி


 

சோம்பிக் கிடந்திடும் சோம்பேறியாநீ
        தூங்கி வழிந்திடும்  தேவாங்கு தானா
தேம்பிக் கிடந்து சிதைந்து போகாமல்
        தெம்பாய் நடக்கநீ இன்னும் கொஞ்சம்


இலந்தை

6-11-2025

--

Govindaraju Arunachalam

unread,
Nov 7, 2025, 3:46:39 AMNov 7
to santhav...@googlegroups.com

ராம்கிராம் கவிதைக்குப் பின்னூட்டம்

 

நண்பர் ராம்கிராம் கவிதையிலே

   நல்ல செய்திகள் நிறைந்திருக்கும்

கண்ணின் மணியென இயற்கையினைக்

   கருதிப் போற்றிட வேண்டுகின்றார்!

 

சுற்றுச் சூழலை மேம்படுத்திச்

   சுகமாய் வாழ்ந்திட அழைக்கின்றார்

சற்றே சிந்தனை செய்திடுவோம்

   சாலப் பணிகளைச் செய்திடுவோம்!

Arasi Palaniappan

unread,
Nov 8, 2025, 1:18:00 AMNov 8
to சந்தவசந்தம்
திரு ராம்கிராம் அவர்களின் தலைமைக் கவிதைக்குசீரார் ப் பின்னூட்டம் 


இயற்கையினைப் பேண இசைந்துநம் மாந்தர் 
செயலாற்ற சிந்திக்கத் தெளிவூட்டும் நற்கவிதை 
மானுடத்தைப் போற்ற மகத்தான சிந்தனையை
தேன்கலந்து தந்த சிறப்பான ஒருகவிதை
சிந்தனையைப் பட்டியலாய்த் தேர்ந்தளித்தீர்! என்போன்றோர்
சிந்தையும் சிந்திக்கத் தேர்ந்தகவி
தந்தீர்!
இராம்கிராம் ஐய! இசைகொண்டீர்! உம்பா
தராதரம் ஓங்கு தமிழ்!




Lalitha & Suryanarayanan

unread,
Nov 8, 2025, 1:23:20 AMNov 8
to santhav...@googlegroups.com
அழகிய பின்னூட்டம்.
இராம்கிராம் ஐய! இசைகொண்டீர்! உம்பா
தராதரம் ஓங்கு தமிழ்!   -- அசத்தலான எதுகை.

சிவசூரி.

Arasi Palaniappan

unread,
Nov 8, 2025, 1:24:54 AMNov 8
to சந்தவசந்தம்
மிக்க நன்றி 🙏

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Lalitha & Suryanarayanan

unread,
Nov 8, 2025, 1:25:33 AMNov 8
to santhav...@googlegroups.com
என் கவிதை இராம்கிராம் கவிதைக்குப் பின்னூட்டம் என்று நான் குறிப்பிடவில்லை. ஆனால் அது பின்னூட்டமே.!

சிவசூரி.

Siva Siva

unread,
Nov 8, 2025, 8:18:30 AMNov 8
to santhav...@googlegroups.com
உலகத்தில் காணும் சீர்கேட்டின் வரிசைபோல் அவற்றை நிரலிடும் பாடலும்  நீளம்!
இவற்றைச் சிந்தித்துச் செயல்படவேண்டும் என்ற அவா!

வாழ்க!

வி. சுப்பிரமணியன்
On Thu, Nov 6, 2025 at 10:02 PM Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:
கவியரங்கம் -  61

 

இன்னும் கொஞ்சம் சிந்திப்போம்

 

தொடக்கநாள்  7- 11- 2025

 

கவியரங்கத் தலைமைக் கவிதை:


 ...

இன்னும் கொஞ்சம் சிந்திப்போம்

நேரிசைக் கலிவெண்பா

 

எந்தையும் தாயு மிருந்து சிறந்ததந்நாள்

வந்துதித்த நாள்தொடங்கி வாழ்வினிக்கச் – சிந்தைமகிழ்

தெள்ளிய செய்கையில் சீருற்றோம். அந்நாளில்

அள்ளித் கொடுத்த அறிவுரைகள் – உள்ளத்தி(ல்)

ஊன்றி யியல்புட னொட்டிக் கலந்தன.

....

Subbaier Ramasami

unread,
Nov 8, 2025, 8:32:07 AMNov 8
to santhav...@googlegroups.com
பரிவுணர்வும் சீர்கேட்டைச் சீர்செய்கின்ற
             பணியுணர்வும் கலந்துவர பாடல் செய்தே
விரிவமைய அரங்கத்தின் தலைவர் இங்கே
             வித்தகமாய்க் கவிதந்தார், வாழ்க, வாழ்க!
இலந்தை

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Nov 8, 2025, 8:44:47 AMNov 8
to santhav...@googlegroups.com
கவியரங்கத் தலைவர் கவிஞர் இராமகிருஷ்ணனின் அற்புதமான தலைமைப் பாடல் மிக அருமையான சிந்தனையைத் தூண்டும் விதத்தில் அமைந்துள்ளது.
என் பின்னூட்ட வெண்பா:
        

              கண்டேன்நான் நற்றேன் கவி!

மாசில் இயற்கை வனப்பை விதந்துரைத்துக்

காசு விரும்பும் கயவரின் - ஆசையால்

உண்டாகும் பேரழிவை ஓர்ந்துரைத்த சிந்தனையில்

கண்டேன்நான் நற்றேன் கவி!

                                —தில்லைவேந்தன்.

….



இமயவரம்பன்

unread,
Nov 8, 2025, 8:50:26 AMNov 8
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிகச் சிறப்பு!

ஏர்கொண்ட சொல்லால் இராம்கிராம் ஈந்தார்பார்ச்
சீர்கேட்டைச் சாடும் செயுள்.

KKSR

unread,
Nov 9, 2025, 3:26:19 AMNov 9
to santhav...@googlegroups.com
தொடக்கமே எழுச்சிதரத் தோன்றும் வண்ணம்
தொடங்கிட்ட கவிவேழம் வாழ்த்துப் பெற்றே
தொடங்கிடுவோம் கவியரங்கம் நலமாய் இங்கே
தொடர்ந்துவரும் நன்மையெலாம் நம்மைத் தேடி!

அருமையான தோரண வாயில் அமைத்தீர் மாமா! அருகிருக்கும் எங்களுக்கு வசந்தம் இதுவே!

அன்புடன்
சுரேஜமீ
09.11.2025 பிற்பகல் 12:25




---------------------------------------------------------------------------------------------------
This email transmission is confidential and intended for the addressee only. It may contain privileged and confidential information. If you are not the person or organisation to whom it is addressed, you must not copy, distribute, or take any action in reliance upon it. If you have received this message in error, please notify the sender immediately.


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

KKSR

unread,
Nov 9, 2025, 4:05:50 AMNov 9
to santhav...@googlegroups.com
உள்ளக் கிடக்கையை ஊருக்குச் சொல்லி உவகையுறத்
தெள்ளத் தெளிவாய் இயம்பிச் மனமும் தெளிவுறவே
வெள்ளத் தனைய விளங்கும் மலர்போல் வெளிப்படுத்தி
உள்ளம் உயர இராம்கிராம் அண்ணல் உரைத்தனரே!

சிறப்பான தொடக்கம் அண்ணலே!

அன்புடன்
சுரேஜமீ
9.11.2025 பிற்பகல் 01:04


---------------------------------------------------------------------------------------------------
This email transmission is confidential and intended for the addressee only. It may contain privileged and confidential information. If you are not the person or organisation to whom it is addressed, you must not copy, distribute, or take any action in reliance upon it. If you have received this message in error, please notify the sender immediately.

Ram Ramakrishnan

unread,
Nov 9, 2025, 4:32:31 AMNov 9
to santhav...@googlegroups.com
அடியேனது தலைமைக் கவிதையைப் படித்துப் பின்னூட்டம் அளித்த திருவாளர்கள் சிவசூரி, இனியனார், பழனியப்பன், தில்லைவேந்தன், இமயவரம்பன், சிவசிவா, இலந்தையார், சுரேஜமீ அனைவருக்கும் இதயங் கலந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பின்னூட்டம் அளித்தவர்தம் பெயரெதேனும் இட்ட பட்டியலில்  விடுபட்டதெனின் என்னை மன்னிப்பீராக. 

முதலழைப்பு:

சந்த வசந்தக் குழுமத் தலைவர் கவிவேழம் இலந்தையாருக்கு முதல் மரியாதை செய்ய விழைந்து, அன்னார் பங்கேற்றுக் கவிதை இங்கிட அழைப்பு விடுக்கின்றேன்.

கவிமாமணி சந்தவசந்தக் குழுமத்தின் தலைவர் இலந்தையாருக்கு அழைப்பு:

சந்தக் கலிவிருத்தம்


துதிபோலிவர் விளையாட்டென வினிதாங்கவி பொழிவார்

சதிராடிடு மொழியாற்பல கவிநூற்பவர் அறிவோம்

கதியாகிடு *லகுவாரஹி* யருளேமிக விழைவார்

எதிலாலென வியல்பாமிவர் நிலைமாறிட லரிதே


தொலைபேசியின் துறைசார்ப்பணி மிகவாற்றிய செயலார்

பலமேடையி லொருவாயிர மரிதாங்கவி புனைவார்

கலைமேவிடும் மொழியார்வலர் இணையாயுள ரிலரே

உலையாதவர் கவிமாமணி யுடனாய்க்கவி தருவார்  


*லகுவாரஹி* லகுவாராஹி என்பதன் இடைக்குறை– வாராகி அம்மனின் மற்றொரு பெயர்.  

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On 9 Nov 2025, at 2:35 PM, KKSR <aur...@gmail.com> wrote:



Lalitha & Suryanarayanan

unread,
Nov 9, 2025, 5:25:01 AMNov 9
to santhav...@googlegroups.com
அருமையான அழைப்பு. வாழ்க ராம்கிராம்.

சிவசூரி.

Ram Ramakrishnan

unread,
Nov 9, 2025, 5:30:04 AMNov 9
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. சிவசூரி.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Nov 9, 2025, 7:29:53 AMNov 9
to santhav...@googlegroups.com
குழுமத் தலைவருக்குக் கவியரங்கத் தலைவர் விடுத்த அழைப்பு மிகச் சிறப்பாக உள்ளது.

                             —தில்லைவேந்தன்.
.

Ram Ramakrishnan

unread,
Nov 9, 2025, 7:34:00 AMNov 9
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, வேந்தரே.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On 9 Nov 2025, at 5:59 PM, NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:


குழுமத் தலைவருக்குக் கவியரங்கத் தலைவர் விடுத்த அழைப்பு மிகச் சிறப்பாக உள்ளது.

                             —தில்லைவேந்தன்.
.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Govindaraju Arunachalam

unread,
Nov 9, 2025, 11:09:50 AMNov 9
to santhav...@googlegroups.com

கவியரங்கத் தலைவரின் அழைப்புப் பா வண்ணம் குறித்து:

 

குதிபோட்டிடும் களிகூர்கவி கரும்பாகவே உளதே

நதிபோலவே நடைபோடவே நகையாகுமே அழகே

மதிகாட்டிடும் ஒளிபோலிது; மணம்வீசிடும் மலரே

இதுபோலவே எழுத்தோவியம் இனிதாக்கிட இலரே!

 

-கருவூர் இனியன்

Ram Ramakrishnan

unread,
Nov 9, 2025, 11:11:31 AMNov 9
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, இனியனாரே.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On 9 Nov 2025, at 9:39 PM, Govindaraju Arunachalam <agrp...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Subbaier Ramasami

unread,
Nov 9, 2025, 11:57:20 AMNov 9
to santhav...@googlegroups.com

கவியரங்கம்- 61

நாள் 8-11-2025

தலைப்பு: இன்னும் கொஞ்சம் சிந்திப்போம்

தலைவர்:   கவிஞர் ராம் ராமகிருஷ்ணன்

 

ஒரு தந்தம் இருதிணை மும்மதம் நால்வாயோ(டு)

ஓங்கைந்து கரங்கொண்டவன்

ஒப்பரிய ஆறுதலை ஏழுதலை முறையெட்டும்

ஒய்யாரம் தருகின்றவன்

தெருவெங்கும் நவமாக அருள்பொங்கும் பதியாகத்

      தேடியே வருகின்றவன்

செழித்தோங்கும் இன்பத்தைக் கொழித்தோங்கச் செய்பவன்

சித்தாந்தம் ஆகின்றவன்                             

தெருள்கூடும் ஞாயிறு திங்கள் அக்கினியெனத்

திகழ் மூன்று கண்கொண்டவன்

தேடரும் மறைச் செவ்வாய் அற்புதன் ஞானமெனும்

தேனருவியாழ நதியான்

அருள்வெள்ளியங்கிரி சிறுபிள்ளை சனியினால்

அற்றதலை மற்றுடையவன்

ஆனைமுகன் கணபதி ஞானவிழி நாயகன்

ஆதாரமாய்க் காக்கவே

 

 

 

அவையோர்

இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என்றே சிந்தித்து
      மின்னல் வீச்சில் வீறு கொள்ளும்  விந்தைப் பாவாணர்
      கன்னல் பாடல் இங்கே நித்தம்  காட்டும்   பேறாளர்
      அன்னார் கட்கென்   அன்பின் வாழ்த்தை  ஆகா கூறேனோ?

 

கவியரங்கத் தலைவர்

எந்தத் தலைப்பிலும்  எண்ணம் சிறந்திடச்
சந்தம் குழைத்துத் தருபவராம்-  சிந்தித்தே
பல்வித மாகப் படைத்துச் சிறப்போடு
நல்குகிறார் நம்ராம்கி ராம்

இன்னும் கொஞ்சம் சிந்திப்போம்

சந்த  வசந்தத் தளத்தில் புதுமையாய்
சிந்தை கவரும் சிறப்பாக-  விந்தையென

என்னவிது என்னவிது வென்றே  பலர்புகழ


இன்னும்கொஞ் சம்சிந்திப் போம்

இன்னும் கொஞ்சம் இரட்டைக் கத்தி
 நன்மை செய்யும் நறுக்கவும் செய்யும்
என்பத னாலே எச்ச ரிக்கையாய்
உன்ன தத்தில்   உயர்த்தி வைப்போமே!

இன்னும் கொஞ்சம்...

என்றன் மதத்தில் ஆறுதலை

     எய்த முடியாக் காரணத்தால்

இன்னோர் மதத்தைத் தழுவுகிறேன்

     இந்த வண்ணம் மூன்றுமதம்

சென்று பார்த்தும் அமைதியிலை

      காக்க, என்றவன்பால்

இன்றோர் கதைகேள் எனச்சொன்னார்

     இராம கிருஷ்ண பரமஹம்சர்.

தனது வீட்டுத் தோட்டத்தில்

     தண்ணீர்க் காகக் கிணறெடுக்க

முனைந்தான் ஒருவன், ஓரிடத்தில்

     முப்ப தடிகள் எடுத்தபினும்

நனைந்த தரையைக் காணவிலை

     நாற்ப தடிகள் வேறிடத்தில்

தனியே எடுத்தான், நீரில்லை

     தளரா தின்னோர் இடம்பார்த்தான்

வெட்டி வெட்டித் தரையெல்லாம்

     வீணாய்ப் போன தன்றியொரு

சொட்டுத் தண்ணீர் கூட்யெங்குத்

     தோண்டிப் பார்த்தும் பெறவில்லை

எட்டே அடிகள் முதலிடத்தில்

     இன்னும் தோண்டிப் பார்த்திருந்தால்

கிட்டி யிருக்கும், அவ்விடந்தான்

     கிளர்ந்த  ஊற்றுப் பொங்குமிடம்.

இன்னும் கொஞ்சம் பார்ப்பமெனும்

எண்ணம் இல்லாக் காரணத்தால்

என்ன செய்தும் நீரில்லை

எங்கெங் கெங்கோ தேடுகிறான்

இன்னுங் கொஞ்சம் என்பதுதான்

ஏற்றம் நல்கும் மந்திரமாம்

இன்னும் கொஞ்சம் ஓரிடம்நில்

     என்றார் அந்தப் பெருஞானி

 

இன்னுங்கொஞ்சம்...

 

ஊற்றுத் திறந்தே ஒடுங்கா(து) இன்னுங்கொஞ்சம்

ஊற்றிக்கொண் டேயிருந்தால் ஓடுகிற ஆறுவரும்

இன்றைக் கிதுபோதும் என்றே முடிவெடுத்து

இன்னுங்கொஞ் சம்வேண்டாம் என்றெண்ணி எங்கெங்கும்

வீசுகிற காற்று விடைபெற்றுக் கொண்டுவிட்டால்

ஓசைகள் உண்டா, உயிருண்டா, மண்ணுலகில்

இன்னுங்கொஞ் சம்என்றே ஏறும் முயற்சியின்கை

மின்னுகிற மந்திரவாள், மேவும் தடைகளை

வெட்டிப் புறங்கண்டு வெற்றி பெறச்செய்யும்

அட்டியின்றி வாழ்க்கையிலே ஆக்கம் வரவாக்கும்

காடுகளை வெட்டிக் கவின் நகரம் ஆக்கியே

ஈடிலா நாகரிகம் இவ்வுலகில் தாம்கொணர

நம்முன்னோர் மட்டும் நலிவடைந்து போயிருந்தால்

இம்மண்ணில் நாமெல்லாம் எங்கிருப்போம் யாரறிவார்?

ஒற்றடுக்குக் கட்டியவன் ஒவ்வொன்றாய் மேலேபோய்

மற்றொன்று மற்றொன்றாய் மாடி யெழுப்புதற்கு

ஆன முயற்சிகள் அளவின்றிக் கொண்டதனால்

வானைத் தொடமுயலும் மாளிகைகள் காண்கின்றோம்

இன்னுங்கொஞ் சம்கொஞ்சம் என்றே பயணத்தை

அன்று கொலம்பஸ் அடம்பிடித்து நீட்டியதால்

புத்தம் புதுக்கண்டம் பூத்திருக்கக் காணுகிறோம்

எத்தனை இன்னல்கள் எய்திடினும் வாடாமல்

கண்டு பிடித்தல் ஒன்றே கச்சிதமாய் நெஞ்சத்தில்

கொண்டு செலுத்திக் குலையாது பாடுபட்டுத்

துஞ்சாது, என்றும் துவளாது தான்முயன்ற

விஞ்ஞான மேதைகளின் வெற்றி சொலப் போமா?

மேற்கிருந் தேகிழக்காய் வேண்டி நடக்கிறவன்

ஏற்பாய் இன்னுங்கொஞ்சம் என்றே தொடர்வானேல்

மேற்குத் திசைக்குத்தான் மீண்டுமவன் வந்திடுவான்

ஏற்கும் அனுபவம்தான் இங்கே பெருஞ்சொத்து

எண்ணித் தொடர்கின்ற இவ்வாழ்க்கை ஓட்டத்தில்

மண்ணில் பிறப்பும் வருமிறப்பும் இப்படித்தான்.

இன்னுங் கொஞ்சந்தான் எனுமந்திரத்தாலே

உச்சியைப் பார்க்கும் உயர்வு கிடைக்கிறது

நிச்சயமாய்ச் சோம்பல் நெருங்காதிருக்கிறது

இன்னுங்கொஞ்சம் என்பது

நெஞ்சின் உறுதி, நினைவுக ளின் இளமை

ஓடுகிற காலத்தின் ஒவ்வோர் கணத்திற்கும்

கூடு நிறையக் கொடுக்கும் பெருவள்ளல்

எய்திய வெற்றி இழந்துபோ காதிருக்கச்

செய்யும் முயற்சித் திருமாளிகை வாசல்

ஓடாத மாட்டினையும் ஓடவைக்கும் தார்க்குச்சி

காடா, மலையா, கடலா, பெருவெளியா

நீரா, நெருப்பா, நெருக்கி உயிர்குடிக்கும்

போரா, புயலா, பொடிக்கும் எரிமலையா

ஏதாயிருந்தாலும், எள்ளளவும் அஞ்சாமல்

தோதாக நம்பிக்கை சொல்லித் தரும் ஆசான்

இன்னும்கொஞ்சம் பற்றி என்னதான் சொன்னாலும்

இன்னும்கொஞ்சம் சொல்லும் எண்ணம் வருகிறது

இன்னுங்கொஞ்சம் சற்றே ஏறுமாறாய்ப் போய்விட்டால்

என்னாகும் எல்லாம் எதிர்மறையாய் மாறிவிடும்

இன்னுங்கொஞ்சம் தூரம் இந்நிலத்தில் செல்லுகிறேன்

என்றே கடலும் எகிறிக் குதிதுவிட்டால்

நீருள் நிலமடங்கும், நேராகப் பாரொடுங்கும்

யாரும் உயிர்வாழ்ந்திங் கல்லல் படமாட்டார்

இன்னுங்கொஞ்சம் வேகம் ஏற்பேன் எனக் காற்றும்

தன்னுள் உயிர்த்தால், தரைமட்டம் அத்தனையும்

இன்னும்கொஞ்சம் நான் எரிவேன் எனத் தீயும்

முன்னி எழுந்தால் முழுவதும் சாம்பல்தான்

இன்னுங்கொஞ்சம் நான் இறங்கி வருகின்றேன்

என்றிந்த வானம் இறங்கிவரின் என்னாகும்?

இன்னுங்கொஞ்ச நேரம் இப்படியே தூங்குகிறேன்

என்றே உறங்கிவிடில் எல்லாமே பாழாகும்

இன்னுங்கொஞ்சம் கொஞ்சம் இன்பம் அனுபவித்தால்

பின்னர் துவண்டு பிணியில் விழுந்திடுவார்

கத்தியிதை நல்லபடி கையாளத் தேர்ந்துவிடின்

இத்தரையில் எல்லாம் இனிது.

 

 

Kaviyogi Vedham

unread,
Nov 9, 2025, 12:01:25 PMNov 9
to santhav...@googlegroups.com
அட்டகாசம் இலந்தையாரே. எப்படித்தான் இப்படியெல்லாம் சிந்திக்கிறீரோ..!,
  வாழ்க ,
 யோகியார்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Arasi Palaniappan

unread,
Nov 9, 2025, 12:14:22 PMNov 9
to சந்தவசந்தம்
இலந்தைக் கவிவேழம் ஐயா அவர்களின் வித்தகக் கவிதைக்குப் பின்னூட்டம் 

இன்னும் கொஞ்சம் எனநீட்டி 
     எல்லாம் சொல்லி விட்டீரோ?
 இன்னும் என்போல் கவிஞர்களும் 
     எதனை வந்து பாடுவதோ?
மின்னும் கவிதை! ஒளிதந்து
     மிளிரும் கவிதை, கவி வேந்தை
அன்னை வயிறு தாங்கியதும் 
    அரிதே! அரிதே! வியக்கின்றேன்!

வணங்கி வாழ்த்தும் 
அரசி. பழனியப்பன் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Nov 9, 2025, 3:07:12 PMNov 9
to santhav...@googlegroups.com
மிக அருமையான அழைப்புக் கவிதை, திரு. இராம்கிராம்!

இமயவரம்பன்

unread,
Nov 9, 2025, 4:45:18 PMNov 9
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com

மிக அருமை, இலந்தையாரே!


என்னெஞ் சுருக்கும் இலந்தையார் இன்கவிதை

இன்னுங்கொஞ் சம்வேண்டும் இன்று. 

Siva Siva

unread,
Nov 9, 2025, 7:18:46 PMNov 9
to santhav...@googlegroups.com
இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என்று விதவிதமாக நோக்கி விரிவாக எழுதிய பாடல்.
அருமை.

இருதிணை /
இங்கே என்ன பொருள்?

வி. சுப்பிரமணியன்

 
On Sun, Nov 9, 2025 at 11:57 AM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

கவியரங்கம்- 61

நாள் 8-11-2025

தலைப்பு: இன்னும் கொஞ்சம் சிந்திப்போம்

தலைவர்:   கவிஞர் ராம் ராமகிருஷ்ணன்

 

ஒரு தந்தம் இருதிணை மும்மதம் நால்வாயோ(டு)

ஓங்கைந்து கரங்கொண்டவன்

ஒப்பரிய ஆறுதலை ஏழுதலை முறையெட்டும்

ஒய்யாரம் தருகின்றவன்

தெருவெங்கும் நவமாக அருள்பொங்கும் பதியாகத்

      தேடியே வருகின்றவன்

செழித்தோங்கும் இன்பத்தைக் கொழித்தோங்கச் செய்பவன்

சித்தாந்தம் ஆகின்றவன்                             

.....

இன்னும் கொஞ்சம் இரட்டைக் கத்தி
 நன்மை செய்யும் நறுக்கவும் செய்யும்
என்பத னாலே எச்ச ரிக்கையாய்
உன்ன தத்தில்   உயர்த்தி வைப்போமே!

இன்னும் கொஞ்சம்...

...


இன்னும் கொஞ்சம் பார்ப்பமெனும்

எண்ணம் இல்லாக் காரணத்தால்

என்ன செய்தும் நீரில்லை

எங்கெங் கெங்கோ தேடுகிறான்

இன்னுங் கொஞ்சம் என்பதுதான்

ஏற்றம் நல்கும் மந்திரமாம்

இன்னும் கொஞ்சம் ஓரிடம்நில்

     என்றார் அந்தப் பெருஞானி

 

இன்னுங்கொஞ்சம்...

 

...

இன்னுங்கொஞ் சம்கொஞ்சம் என்றே பயணத்தை

அன்று கொலம்பஸ் அடம்பிடித்து நீட்டியதால்

புத்தம் புதுக்கண்டம் பூத்திருக்கக் காணுகிறோம்

...

இன்னுங்கொஞ்சம் என்பது

...

இன்னும்கொஞ்சம் பற்றி என்னதான் சொன்னாலும்

இன்னும்கொஞ்சம் சொல்லும் எண்ணம் வருகிறது

இன்னுங்கொஞ்சம் சற்றே ஏறுமாறாய்ப் போய்விட்டால்

என்னாகும் எல்லாம் எதிர்மறையாய் மாறிவிடும்

...

Ram Ramakrishnan

unread,
Nov 9, 2025, 8:50:57 PMNov 9
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. இமயவரம்பன்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On 10 Nov 2025, at 1:37 AM, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:

மிக அருமையான அழைப்புக் கவிதை, திரு. இராம்கிராம்!


On Nov 9, 2025, at 4:32 AM, Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:

துதிபோலிவர் விளையாட்டென வினிதாங்கவி பொழிவார்

சதிராடிடு மொழியாற்பல கவிநூற்பவர் அறிவோம்


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Lalitha & Suryanarayanan

unread,
Nov 9, 2025, 11:59:49 PMNov 9
to santhav...@googlegroups.com
ஒருபால்கதை ஒருபால்கவி  ஒருபாலெழில் எனவே
ஒருபால்மனம் மகிழ்வோர்திகழ் அவையாமிதில் இனிதே
கருமாமுகில் எனவேகவி வேழம்பொழி கவியில்
இருபால்உள கவியோர்குழு நனைந்தேதனை மறக்கும்.

சிவசூரி.

Ram Ramakrishnan

unread,
Nov 10, 2025, 12:09:07 AMNov 10
to santhav...@googlegroups.com
அருமையான பின்னூட்டம், திரு. சிவசூரி.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On 10 Nov 2025, at 10:29 AM, Lalitha & Suryanarayanan <lall...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Lalitha & Suryanarayanan

unread,
Nov 10, 2025, 2:36:09 AMNov 10
to santhav...@googlegroups.com
மிக மிக அருமையான விருத்தம். உங்களின் வெண்பாவைப்போல் விருத்தமும் மிக அழகு!

சிவசூரி.

Arasi Palaniappan

unread,
Nov 10, 2025, 3:27:49 AMNov 10
to சந்தவசந்தம்
தங்கள் பாராட்டுக்கு மனமார்ந்த நன்றி 🙏

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

KKSR

unread,
Nov 10, 2025, 5:13:19 AMNov 10
to santhav...@googlegroups.com
வழிகளைச் சொல்லி வளம்சேர்த்த வேழம் 
அடிபணிந்தேன்; கொஞ்சுகவி யாண்டு!

அன்புடன்
சுரேஜமீ
10.11.2025 பிற்பகல் 11.10.2025


---------------------------------------------------------------------------------------------------
This email transmission is confidential and intended for the addressee only. It may contain privileged and confidential information. If you are not the person or organisation to whom it is addressed, you must not copy, distribute, or take any action in reliance upon it. If you have received this message in error, please notify the sender immediately.

On Sun, Nov 9, 2025 at 8:57 PM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

கவியரங்கம்- 61

நாள் 8-11-2025

தலைப்பு: இன்னும் கொஞ்சம் சிந்திப்போம்

தலைவர்:   கவிஞர் ராம் ராமகிருஷ்ணன்

 

ஒரு தந்தம் இருதிணை மும்மதம் நால்வாயோ(டு)

ஓங்கைந்து கரங்கொண்டவன்

ஒப்பரிய ஆறுதலை ஏழுதலை முறையெட்டும்

ஒய்யாரம் தருகின்றவன்

Govindaraju Arunachalam

unread,
Nov 10, 2025, 9:46:38 AMNov 10
to santhav...@googlegroups.com

இலந்தையாரின் கவிதைக்கு என் பின்னூட்டம்

 

இன்னும் கொஞ்சம் எனச்சொல்லி

   இலந்தை சொன்ன கருத்தெல்லாம்

இன்னும் மனத்தில் பல்விதமாய்

   எண்ணிப் பார்க்க வைக்கிறதே

இன்னும் சொல்ல இல்லையென

   இயம்பத் தோன்றும் வகையினிலே

இன்னும் கொஞ்சம் சிந்திக்க

   எல்லாம் சொன்னார் வாழியவே!

 

-கருவூர் இனியன்

 

 

 

NATARAJAN RAMASESHAN

unread,
Nov 10, 2025, 10:23:20 AMNov 10
to santhav...@googlegroups.com

ஆழமான கருத்துள்ள  பரமஹம்சரின் கதையைச் சொன்ன விதம் அருமை!

இன்னும் கொஞ்சம் சிந்திக்கச் செய்வதற்கு, எத்தனை அழகான, ஆணித்தரமான எடுத்துக்காட்டுகள்!

தம் கவிதைப் பெருக்கால்  களிப்பெய்தச் செய்து விட்டார் நம்தலைவர் இலந்தையார்!

                     — தில்லைவேந்தன்.


Subbaier Ramasami

unread,
Nov 10, 2025, 1:37:36 PMNov 10
to santhav...@googlegroups.com
கவிதை மிக நன்று. அழகான விருத்தம்.
இலந்தை

Subbaier Ramasami

unread,
Nov 10, 2025, 1:38:48 PMNov 10
to santhav...@googlegroups.com
என் கவிதைக்குப் பின்னூட்டம் அளித்த அனைவருக்கும் நன்றி.
இலந்தை

On Sun, Nov 9, 2025 at 10:57 AM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:


Arasi Palaniappan

unread,
Nov 10, 2025, 10:18:18 PMNov 10
to சந்தவசந்தம்
மிக்க நன்றி தலைவரே!🙏

Ram Ramakrishnan

unread,
Nov 10, 2025, 11:00:04 PMNov 10
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com


கவிவேழம் இலந்தையாரின் கவிதைக்குப் பின்னூட்டம்

 

வெண்கலிப்பா

இருமுனைவாள் என்றழைத்தார் “இன்னுங்கொஞ் சமெ”ன்பதையே

வெருவுதலாம் நிலையதனை வேண்டற்க வென்றுரைத்து

இன்னமுமே கொஞ்சமென்ப தற்கிரண்டாம் காரணத்தைக்

கன்னலதாம் மொழியதனால் கவினுறவே உரைத்தாரே

முயற்சியினை யடிப்படையாய் முனைந்திட்டு ழைத்தலிலே

தயக்கத்தை விடுதிவென வுரைத்தலதில் முத்தாய்ப்பு.

கடல்பொங்கி நீரதனால் நிலமுழுக லென்றாலும்

மடைதிறந்து விடவூற்றுப் பெருகுநிலை உலகணைத்தும்

இன்னமுமே முயன்றிடுவ மெனுங்கூற்றை நாமேற்கோம்

இன்னலினைக் களைந்திட்டு இன்னமும் செய்தற்கே

அன்னவரும் உரைத்தனவா மத்தனையும் முன்னேற.,

விஞ்ஞானம் வளர்தலுடன் மேன்மையுறும் வாழ்க்கைநலன்

அஞ்சலிலாச் சீர்முயற்சி அனுதினமும் செய்திடுக.,

மலைத்தலும் நீங்கிட மந்திரமே இருமுனைவாள்

இலந்தையவர் தந்தமொழி யேற்பு.



கவியரங்கத்தில் இரண்டாவது அழைப்பு

கவிஞர் சிவசூரி


எட்டடித் தரவு கொச்சகக் கலிப்பா


மயிலாடு துறைபிறப்பு மயிலையிலே இருப்பிடம்

அயராத உழைப்பினிலே அரவிந்தர் நாடகத்தோ(டு)

உயர்வான மொழிபெயர்ப்பை யொண்டமிழில் தந்திடுவர்

வியக்குவகைக் கீர்த்தனைகள் விதவிதமாய்ச்  சிறுகதைகள்

பயனளித்த பொதுமேலர் பதவியிலே மேன்மைறும்

நயக்கின்ற சிறப்புடைத்தார் நாமறிந்த சிவசூரி

அயக்காந்த மெனவிழுக்கு ருமைத்தா மிவர்கவிதை

இயல்பான சந்தநடை இவையனைத்து முடன்கொண்ட

எயிறிலியாம் சிவசூரி இவண்வந்து கவிதருக.


அயக்காந்தம் - ஊசிக்காந்தம்.பொருள்களைத் தன்பால் இழுக்க வல்லது.

எயிறிலி- சூரியன் .இங்குச் சூரியநாராயணன் என்ற சிவசூரியைக் குறித்தது.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

Ram Ramakrishnan

unread,
Nov 10, 2025, 11:36:15 PMNov 10
to santhav...@googlegroups.com
சிறு திருத்தம், இலந்தையார் கவிதைக்குப் பின்னூட்டக் கவிதையில்:

களைந்திட்டு என்பதை மாற்றிக் களைந்திட்டே எனக் கொள்க.

இன்னலினைக் *களைந்திட்டே* இன்னமும் செய்தற்கே

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On 11 Nov 2025, at 9:30 AM, Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:



Ram Ramakrishnan

unread,
Nov 10, 2025, 11:39:51 PMNov 10
to santhav...@googlegroups.com
மற்றொரு சிறுதிருத்தம்

“விடுதிவென” -> “விடுதியென” என்க.

திரு. சிவசிவா அவர்களை முந்திக் கொண்டதில் அற்ப சந்தோஷம்:-)😀 

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On 11 Nov 2025, at 10:06 AM, Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:

சிறு திருத்தம், இலந்தையார் கவிதைக்குப் பின்னூட்டக் கவிதையில்:

Lalitha & Suryanarayanan

unread,
Nov 11, 2025, 12:10:53 AMNov 11
to santhav...@googlegroups.com
கவியரங்கத்தில் இரண்டாவது அழைப்பு

கவிஞர் சிவசூரி


எட்டடித் தரவு கொச்சகக் கலிப்பா


மயிலாடு துறைபிறப்பு மயிலையிலே இருப்பிடம்

அயராத உழைப்பினிலே அரவிந்தர் நாடகத்தோ(டு)


கவியரங்கத் தலைவரின் அன்பான அழைப்புக்கு நன்றி.

கவியரங்கம் : இன்னும் கொஞ்சம் சிந்திப்போம் 

தலைவர் : கவிஞர் ராம் ராமகிருஷ்ணன்

( எழு சீர் விருத்தம் மேல் ஓரடி வைப்பு )

கவியரங்கத் தலைவர் வணக்கம்.

1)
இன்னும் சிந்தி இன்னும் சிந்தி யென்று தந்த பொருளிலே
மன்றம் வந்து மகிழ்ந்து கவிதை சிந்த வந்த சூரிநான்
முன்னம் வந்து ராம்கி ராமை இன்பு கொண்டு வணங்குவேன்!
நன்றி சொல்லி  நாவில் வாணி வந்து தங்க வேண்டுவேன்!
  நல்ல நண்பர் கூடு மன்றம் நானும் அடியை இடுவனே!

2)
முகம்க லங்க முன்னம் இங்கு முத்து தேட வந்தனன்!
சகம்கு லுங்க சந்தம் நெஞ்சில் தமிழ்கு லுங்க வேண்டுமே!
சுகம்கு லுங்க மலர்கு லுங்கும் தூய வாசம் தோன்றவே
அகம்கு லுங்க அடியன் பாவில் அழகு தோன்ற வேண்டுமே
  அன்பு கொண்ட புலவர் உள்ளம் இன்பில் தோய வேண்டுமே!
   
***
3)
ஈடி லாத புலவ னாக எதிரில் வந்தி லந்தையார்
கூடி நல்ல குழுவை மண்ணில் கூட வைத்த தலைவரே
கோடி கோடி வண்ணம் பாடல் கொட்ட வைத்த கூடலார்
வாடி நின்ற பயிரின் மீதில் மாரி யாக வந்தவர்
   வாழி வாழி வாழை போல வாழி யென்றும் வாழ்கவே.

4)
குரலி ழந்து போன மனைவி குரலை மீண்டும் பெற்றிட
விரலை வைத்து வேகம் கவிதை வித்தை செய்த விந்தையால்
குரல்கொ டுக்கும் பஞ்ச கத்தை புவனை மீது செய்யவே
சரள மாக  பானு அம்மை தம்மை மறந்து பேசிடும்
  வரம டைந்த மன்னன் நமது மன்றை ஆளி லந்தையே.

5)
நேச மிக்க மனைவி பேசல் நேரில் பூமி காணவே
பேச வைக்கும் பேற ளித்த பெருமை வாய்ந்த பஞ்சகம்
ஆசை யோடு  சொல்ப வர்க்கும் அருள ளிக்கும் அதிசயம்
தேசு மிக்க தென்னி லந்தை வாசம் வீசும் வித்தகம்
  தென்னன் எங்கள் மன்னன் என்று செப்பும் சூரி நெஞ்சகம்.

6)
கடல்க டந்து வேலை செய்யும் காலம் கயவன் ஒருவனே
சொக்க வைக்கும் கவிதை சிந்த வழிகள் காட்டும் சுந்தரா
   சூரி யின்று பாரி காரி  ஓரி யென்று வாழ்த்துவன்.

8)
செய்ய பங்க யப்ப தங்கள் சென்னி வைத்த சீரினான்
ஐயன் என்றன் நெஞ்சில் வந்து ஆசி சிந்தும் பேறினால்
செய்யு பாடல் திறனை எண்ண சிந்தை யின்னும் எண்ணுமே
பைய இந்த பானு தேவன் பார்வை நமது மேல்விழ
  உய்யு மாறு நல்ல பாடல் உலகில் நாமும் செய்வமே.

9)
முகத்தி ரண்டு கோரைப் பற்கள் முளைத்தெ ழுந்த தேவியை
அகத்தி ருத்த அருமை மிக்க நூல்கள் கோடி ஆகவே
நகத்தி ருக்கும் கூர்மை கொண்டு நாசம் தன்னை அழிப்பவள்
சகத்தி ருக்கும் குடிகள் வாழ தமிழில் தங்க வைத்தவர்
  இகத்தி லெம்மை இனிய பாடல் இன்றும் எழுத வைப்பரே.

10)

நூறு நூறு கவிதை நூல்கள் நொடியில் செய்யும் நூதனர்
ஆறு போல ஆடி ஓடி கவிதை  சிந்தும் அற்புதர்
ஏறு போல நடையில் எங்கள் எதிரில் நிற்கும் விற்பனர்
பேறு கொண்ட பிள்ளை நாங்கள் பெற்ற நல்ல பெருமையால்
   பீடு பெற்ற கவிதை நூல்கள் பெறுவம் நாமும் அருளினால்.

11)
இத்தி றத்த கவிதை சிந்த இனிது நாமும் எண்ணுவோம்
வைத்த நல்ல வித்தை கூட மேலும் நம்மை நண்ணுமே
சித்தி ரத்தில் நின்ற தெய்வம் நமது சிந்தை தங்குமே
இத்த லத்தில் இறையை வேண்ட இன்ப வாழ்வை அடையவே
  புத்தி தன்னில் புலமை வந்து புதுமை செய்ய வாழ்வமே.

சிவசூரி.

(இலந்தையார் முன்பொரு சமயம் அன்னை புவனேஸ்வரி மேல் யாத்த " குரல் தா பஞ்சகம்" , வேறொரு சமயம் அட்டமத்துச் சனியும் இன்னருள் பொழிய எழுதிய " சனி பகவான் விருத்தம்"  மற்றும்  பின்னர் பல சமயங்களில் அன்னை வாராஹி தேவி மேல் செய்த பல நூல்கள் ஆகியவற்றை மேலே சில பாடல்களில் சுட்டியுள்ளேன்.அப்படிப் பட்ட  அருட்கவிதைகள் நாமும் இயற்ற இன்னும் இன்னும் சிந்திப்போம், வந்திப்போம். )





Arasi Palaniappan

unread,
Nov 11, 2025, 6:43:58 AMNov 11
to சந்தவசந்தம்
பாவலர் திருவாளர் சிவசூரி அவர்களின் கவிதைக்குப் பின்னூட்டம்

சிந்தி என்று சொல்லப்     பாட்டைச் சிந்தி விட்ட மாகவி
பந்தி யிட்டுப் பாவ ரங்கில்
    பாப்ப டைத்த நாவலார்
செந்த மிழ்வல் தென்னி லந்தைச்
      செம்ம லாரைப் போற்றியே
வந்த னைசெய் பாடல் முந்த
        வாக்கு யர்ந்த பாடலே!

வணங்கி வாழ்த்தும்
அரசி. பழனியப்பன்

    
  
      


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Govindaraju Arunachalam

unread,
Nov 11, 2025, 9:12:55 AMNov 11
to santhav...@googlegroups.com

கவிஞர் சிவசூரி அவர்களின் கவிதைக்குப் பின்னூட்டம்

தன்னே ரிலாத தகைசால் கவிவேழம்

முன்னே ரெனவே முறையாகச் செல்வதைப்

பன்னி உரைத்தாரே பாட்டில் சிவசூரி

உன்னி உணர்ந்தேன் உவந்து.

 

-கருவூர் இனியன்

Subbaier Ramasami

unread,
Nov 11, 2025, 9:37:29 AMNov 11
to santhav...@googlegroups.com
கம்பன் முன்பு தந்த சந்தப் பாவி லிங்கோர் அற்புதம்(உறங்கு கின்ற கும்ப கர்ண)
தம்க  விக்குள் என்னைப் பற்றிச் சாற்றி விட்டார்  விந்தையாய்,
தெம்பில் மீண்டும் ஏறு தற்குத் தேவை யான  ஔடதம்
நம்பன் கந்தன் காக்க காக்க வாழ்க வாழ்க சூரியே!

இலந்தை

பி.கு
இவ்வகையான சந்தத்தில் முதற்சீர் தவிர  எல்லாச் சீர்களும்  தேமாச் சீர்களாகவும் அடியின் இறுதிச் சீர் கூவிளமாகவும் அமைவது சிறப்பு.முதற்சீர் புளிமாகவோ தேமாவாகவோ இருக்கலாம்



NATARAJAN RAMASESHAN

unread,
Nov 11, 2025, 9:46:31 AMNov 11
to santhav...@googlegroups.com
தலைவரைப் போல் தரமான கவிதைகள் படைக்க நாம் இன்னும் கொஞ்சம் சிந்திப்போம் என்ற கவிஞர் திரு சிவசூரியின் கருத்து மிகவும் ஏற்புடையது.

                              —தில்லைவேந்தன்.
..


Siva Siva

unread,
Nov 11, 2025, 10:01:42 AMNov 11
to santhav...@googlegroups.com
இலந்தையாரையும் அவர் தமிழ்ப்புலமையையும் இன்னும் கொஞ்சம் சிந்திப்போம் என்ற கருத்தில் சிவசூரியார் எழுதிய பாடல்கள் நன்று.
மேல் வைப்பாக எழுதியதும் நன்று.

வி. சுப்பிரமணியன்
On Tue, Nov 11, 2025 at 12:10 AM Lalitha & Suryanarayanan <lall...@gmail.com> wrote:
கவியரங்கத்தில் இரண்டாவது அழைப்பு

கவிஞர் சிவசூரி

...


( எழு சீர் விருத்தம் மேல் ஓரடி வைப்பு )

கவியரங்கத் தலைவர் வணக்கம்.

...

Ram Ramakrishnan

unread,
Nov 11, 2025, 10:17:23 AMNov 11
to santhav...@googlegroups.com
அருமை, தலைவரே.

தான தான தான தான தான தான தானனா 

அல்லது

தனான தான தான தான தான தான தானனா

என்ற சந்த அமைப்பு என்று நினைக்கிறேன்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On 11 Nov 2025, at 8:07 PM, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:



Kaviyogi Vedham

unread,
Nov 11, 2025, 10:46:17 AMNov 11
to santhav...@googlegroups.com
மிகத்  தரமான  அழகிய கவிதை.  சந்தம்  சூரியிடத்தில் சரசமாடுகிறதே,
 யோகியார்

இமயவரம்பன்

unread,
Nov 11, 2025, 10:47:49 AMNov 11
to santhav...@googlegroups.com
சிவசூரியார் பாடல் மிகச் சிறப்பு!

பிந்தி நின்ற பேரெ லாம்பெ ருத்த ஞானம் எய்திட
இந்த மன்ற மைத்த சீர் இலந்தை யாரை வாழ்த்தியே 
சந்த மார்ந்த பாடல் தந்த சூரி யார்தம் மாண்பினை
எந்த வார்த்தை கொண்டு நானும் எந்த வண்ணம் ஏத்துவேன்? 

Subbaier Ramasami

unread,
Nov 11, 2025, 11:34:02 AMNov 11
to santhav...@googlegroups.com
ஆமாம்
இலந்தை

On Tue, Nov 11, 2025 at 9:17 AM Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:
அருமை, தலைவரே.

தான தான தான தான தான தான தானனா 

அல்லதுகம்பன் முன்பு தந்த சந்தப் பாவி லிங்கோர் அற்புதம்(உறங்கு கின்ற கும்ப கர்ண)

M. Viswanathan

unread,
Nov 11, 2025, 12:15:27 PMNov 11
to Santhavasantham
அன்புக் கவிஞர் சிவசூரி அவர்களின் கவிதை அற்புதம்.
மீ.வி.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Nov 11, 2025, 3:57:37 PMNov 11
to santhav...@googlegroups.com
சிவ சூரி கவிதை  மிக மிக அருமை! 
அனந்த்

Sent from my iPhone

On Nov 11, 2025, at 10:47 AM, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Lalitha & Suryanarayanan

unread,
Nov 11, 2025, 7:40:10 PMNov 11
to santhav...@googlegroups.com
நன்றி.
என் கவியரங்கக் கவிதைக்கு அன்பும் அழகும் நிறைந்தோங்க பெரும் புலவர்கள் ஆன அன்பர்கள் ஆகும் தமது தந்தையின் நல்லாசி பெற்றுள்ள பெருங் கவிஞர் அரசி பழனியப்பன் முதல், ஆசையுடன் அழகிய கவிதை தந்துள்ள இனியன் அவர்கள், எப்பொழுதும் என் மேல் அன்பைப் பொழியும் நமது மன்றத்  தலைவர் வழிகாட்டி கவிவேழம் அவர்கள், போதெல்லாம் கவிபாடும் ஆடலரசன் அவர்கள், சிவனடியார் திருக்கூட்டத்தைச் சேர்ந்த சிவசிவா அவர்கள், அரங்கத் தலைவர் அன்பு ராம்கிராம் அவர்கள், எப்பொழுதும் சிறப்பாக வாழ்த்தும் கவியோகி அவர்கள், நாளொரு மேனியும்  கவிதையே நெஞ்சமாகக் கொண்டிலங்கும் அன்பு நண்பர் இமயவரம்பன் அவர்கள், கதையும் கவிதையும் வாரி வழங்கும் அன்பு நண்பர் மீ.வி அவர்கள், மன்றத்தில் நான் நுழைந்த நாள் முதலாக இன்றுவரை என்னை ஊக்குவிக்கும் உயர்ந்த பேராசான் வேட்டையார் அவர்கள் வரை அனைவருக்கும் என் நன்றி கலந்த வணக்கங்களை உரித்தாக்குகிறேன். வேறென் செய்ய வல்லேன்!

சிவசூரி.

Kaviyogi Vedham

unread,
Nov 11, 2025, 8:38:59 PMNov 11
to santhav...@googlegroups.com
Aha.. enna parandha uLlam. ellooraiyum  ingku  konarnthiir,
  yogiyar

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Nov 11, 2025, 9:44:29 PMNov 11
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
சிவசூரியாரின் மனமார்ந்த நன்றியுரைக்கு மிக்க நன்றி!

சந்தவசந்தக் கவிஞர்கள் அனைவர் பெயரையும் வரிசையாகக் குறிப்பிட்டு வாழ்த்திய சிவசூரியாரின் இவ்வுரை, திருத்தொண்டத் தொகையில் சுந்தரமூர்த்தி நாயனார் சிவனடியார்கள் ஒவ்வொருவரையும் வாழ்த்திப் பாடியதை நினைவுக்குக் கொண்டு வந்து நெகிழ வைக்கிறது. 

On Nov 11, 2025, at 7:40 PM, Lalitha & Suryanarayanan <lall...@gmail.com> wrote:



Ram Ramakrishnan

unread,
Nov 12, 2025, 10:08:59 PMNov 12
to santhav...@googlegroups.com
கவிஞர் சிவசூரியின் கவிதைக்குப் பின்னூட்டம்

எழுசீர்ச் சந்த விருத்தம்


தென்னி லந்தை முந்தி  வந்து பக்தி வாகை சூடினார்

அன்று தித்த விந்தை மேவ நின்ற சூரி யாமிவர்

மன்ற லுற்ற மாலை யாக வன்று தொட்டு நோக்கினார்

கன்று கண்ட தாயி னுள்ள மென்று சாரும் பாங்கினார்

 

சந்த வண்ண மின்ப மாயென் சிந்தை யேறும் போகமே

பந்த மாயி லந்தை தந்த பாவி னால்க ரைந்திடு

முந்து கின்ற வெண்ண வோட்டம் சூரி யைக்க வர்ந்திட

அந்தி வான வர்ண ஜாலம் சூரி தூரி கைவணம்.

 

மன்றல்- வாசனை

கரைந்திடு- கரைந்திட்டு என்பதன் இடைக்குறை

வணம்- வண்ணம் என்பதன் இடைக்குறை


கவியரங்கத்தில் மூன்றாம் அழைப்பு:

கவிஞர் தங்கவேல் காஞ்சிபுரம்

 எண்சீர் விருத்தம்

எங்குநிறை ஆண்டவன்பா லென்றும் சித்தம்

…. ஏற்றமுறும் கவிதைகளோ விதமாய் நித்தம்

துங்கமுகன் வாரணனின் துதியின் ஆர்ப்பு

…. துணைகொள்ளும் இசைவல்லார் கேண்மை யேற்பு

வெங்கடவன் சீருரைக்க விருத்தப் பாட்டு

….. வெண்மதிகொள் விரிசடையோன் புகழில் நாட்டம்

மங்கையர்கள் சூழவரும் மயிலோன் மாட்சி

….. மனமயங்க இவர்தருவார் கவிதைக் காட்சி

 

சந்தத்தில் மலர்கின்ற தமிழால் கவிதை

…. சன்மார்க்கக் குறள்வெண்பா துதிக்கச் சுவையே

விந்தைமிகு விற்பாட்டு பண்ணில் பெறவே

…. வேண்டுவகை அருள்பெற்றார் மயிலன் தரவே

வந்துவிழும் ஆராரோ வள்ளிப் பாட்டு

….. வாயாரப் பாடுவமேல் வினையின் ஓட்டம்

சிந்தனையில் வந்தவற்றைச் செப்பு தற்கே

…. சிங்காரக் கச்சிநகர் வேலன் வருவார்


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On 12 Nov 2025, at 8:14 AM, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Lalitha & Suryanarayanan

unread,
Nov 13, 2025, 12:59:26 AMNov 13
to santhav...@googlegroups.com
உங்கள் அனுப்புக் கவிதைக்கு மிக்க நன்றி.

சிவசூரி.

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Nov 13, 2025, 2:02:31 AMNov 13
to சந்தவசந்தம்
அனைவரும் வணக்கம்  

சந்த வசந்த சபைக்கோர் வணக்கம் 
    சான்றோர் நிறைந்த சபைக்கோர் வணக்கம்
கந்தம் கமழும் தமிழ்க்கோர் வணக்கம்
    கவிதை படிக்கும் கவிக்கோர் வணக்கம் 
 
தலைப்பு : இன்னும் கொஞ்சம் சிந்திப்போம்
தலைவர் : கவிஞர் ராம் ராமகிருஷ்ணன்

சிந்தனை அமுதப் பத்து
       (அறுசீர் விருத்தம்) 

மன்னும் உலகில் மனிதர் வாழ
  வள்ளல் பெருமான் வழியில் சென்றால் 
துன்பம் நிறைந்த வாழ்வும் மாறும் 
   துணையாய் வருவார் அருளைத் தருவார்
இன்பம் பெற்று நலமாய் வாழ
   இனிக்கும் அருட்பா அமுதை நாளும் 
இன்னும் கொஞ்சம் சிந்திப் போமே
   இறப்பைத் தவிர்த்து வாழ்வோம் இனிதே (1)

சரணம் என்று சன்மார்க் கத்தில்
    சார்ந்து பயின்று ஞானம் பெற்று
மரணம் என்னும் செயலை மாற்ற
   வள்ளல் பெருமான் வழியில் செல்லும் 
தருணம் இதுவே தருணம் இதுவே
   தயக்க மின்றி வாரீர் வாரீர் 
அருட்பா என்னும் அமுதக் கடலை
   ஆழ்ந்து நாளும் சிந்திப் போமே (2)

சாதி மதத்தை முற்றும் விட்டு
   சன்மார்க் கத்தில் இணைவோம் இன்று 
சோதி வடிவ மான ஞான
  சுத்த சிவத்தைக் கருணை யாலே
ஓதி உணர்ந்தே உண்மை அறிவோம் 
     உடலை வளர்க்கும் உபாயம் அறிவோம் 
நீதி நிறைந்த  அருட்பா  அமுதை
   நித்தம் நித்தம் சிந்திப் போமே (3)

கரிப்பான் தூது முசுக்கை ஆரை
  காலை நாளும் உண்டே வந்தால்
சரியும் உடலின் பிணிகள் நீங்கித்
   தங்கம் போல மின்னும் மேனி
மரிக்கா நிலையும் பெருவாய் என்று
  வள்ளல் பெருமான் வகுத்து தந்த 
அரிய அறிய அருட்பா அமுதை
  அமரர் ஆகச்  சிந்திப் போமே(4)

நெற்றிக் கண்ணைத் திறக்கும் சாவி
    நெஞ்சில் கருணை வந்தால் கிட்டும் 
கற்று மறக்கா கல்வி கற்று
     காலம் கடந்து வாழ்வோம் வாழ்வோம்
சற்றும் தயக்கம் இன்றி என்றும் 
   சாகா வரத்தை அளிக்க வல்ல
வெற்றி வள்ளல் தந்த அமுதை
   மெல்லப் பருகிச் சிந்திப் போமே(5)

பயந்து பயந்து வாழ வேண்டாம் 
   பணத்தில் மோகம் கொள்ள வேண்டாம் 
மயக்கம் கொண்டு வாழ வேண்டாம் 
  வள்ளல் பெருமான் வழியில் சென்று 
தயவு நிறைந்த மனிதர் ஆகிச்
  சன்மார்க் கத்தைச் சார்ந்து வாழ்வோம் 
உயர்ந்த அருட்பா அமுதை நாளும் 
   ஓதி உணர்ந்து சிந்திப் போமே(6)

அள்ளிப் பருக அமுதம் இருக்க
    அழிவை அளிக்கும் கள்ளை உண்ணேல்
கள்ளம் நிறைந்த எண்ணம் வேண்டாம் 
     களவு காமக் குரோதம்  வேண்டாம்
உள்ளத் தினிலே ஒளியுண் டாக
    உண்மை ஞானத் தெளிவுண் டாக
வள்ளல் தந்த அருட்பா அமுதை
   வாழ்வு மலரச் சிந்திப் போமே(7)

உறங்கும் போதும் கவனம் வேண்டும் 
     உணவில் என்றும் கவனம் வேண்டும் 
உறவின் போதும் கவனம் வேண்டும்
    ஒழுக்க முறையை ஓம்ப வேண்டும் 
அறத்தில் வழியில் நடத்தல் வேண்டும்
     அன்பு கொண்ட நெஞ்சம் வேண்டும் 
இறப்பை அறுக்கும் அருட்பா அமுதை
      இன்னும் கொஞ்சம் சிந்திப் போமே(8)

இருளை அகற்றி இன்பம் அளிக்கும் 
    எல்லா உயிர்க்குள் உயிராய் இருக்கும் 
கருணை நிறைந்த கடவுள் தன்னை 
    காயத் தினிலே காணும் வழியை
அருளும் வள்ளல் வழியில் செல்வோம் 
    அன்பைப் பகிர்ந்து மகிழ்ச்சி கொள்வோம் 
பெருமை மிக்க அருட்பா அமுதை
      பேணிப் போற்றிச் சிந்திப் போமே(9)

கொல்லா விரதம்  உலகில் எங்கும் 
    குடிகொண் டாலே  நலமே விளையும் 
எல்லா உயிரும் வாழும் வாழ்த்தும் 
  இன்னல் தீரும் இன்பம் பெருகும் 
அல்லல் அகற்றும் அருட்பா அமுதை
   அல்லும் பகலும் சிந்திப் போமே
சொல்லித் துதித்தால் வள்ளல் புகழைச்
   சொர்க்கம் ஆகும் இந்தப் புவியே(10)

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி 
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

அன்புடன் 
காஞ்சிபுரம் க. தங்கவேல் 

பிற்குறிப்பு

வள்ளலார் அருளிய அருட்பா அமுதம் 


On Thursday, November 13, 2025 at 8:38:59 AM UTC+5:30 Ram Ramakrishnan wrote:

கவியரங்கத்தில் மூன்றாம் அழைப்பு:

கவிஞர் தங்கவேல் காஞ்சிபுரம்

 எண்சீர் விருத்தம்

எங்குநிறை ஆண்டவன்பா லென்றும் சித்தம்

…. ஏற்றமுறும் கவிதைகளோ விதமாய் நித்தம்

துங்கமுகன் வாரணனின் துதியின் ஆர்ப்பு

…. துணைகொள்ளும் இசைவல்லார் கேண்மை யேற்பு

வெங்கடவன் சீருரைக்க விருத்தப் பாட்டு

….. வெண்மதிகொள் விரிசடையோன் புகழில் நாட்டம்

மங்கையர்கள் சூழவரும் மயிலோன் மாட்சி

….. மனமயங்க இவர்தருவார் கவிதைக் காட்சி

 

சந்தத்தில் மலர்கின்ற தமிழால் கவிதை

…. சன்மார்க்கக் குறள்வெண்பா துதிக்கச் சுவையே

விந்தைமிகு விற்பாட்டு பண்ணில் பெறவே

…. வேண்டுவகை அருள்பெற்றார் மயிலன் தரவே

வந்துவிழும் ஆராரோ வள்ளிப் பாட்டு

….. வாயாரப் பாடுவமேல் வினையின் ஓட்டம்

சிந்தனையில் வந்தவற்றைச் செப்பு தற்கே

…. சிங்காரக் கச்சிநகர் வேலன் வருவார்


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

 எண்சீர் விருத்தம் சிறப்பாக உள்ளது.

மிக்க நன்றி ஐயா 

NATARAJAN RAMASESHAN

unread,
Nov 13, 2025, 3:32:04 AMNov 13
to santhav...@googlegroups.com
மன்னும் பெருமை அருட்பா அமுதை
    வாழ்வில் படித்து முன்னேற
இன்னும் கொஞ்சம் சிந்தித் திருப்போம்
    என்று சொன்ன கவிதைநன்று

Ram Ramakrishnan

unread,
Nov 13, 2025, 3:33:15 AMNov 13
to santhav...@googlegroups.com
அழைப்புக் கவிதையைப் பாராட்டியதற்கு நன்றி, திரு. தங்கவேல்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Subbaier Ramasami

unread,
Nov 13, 2025, 9:35:02 AMNov 13
to santhav...@googlegroups.com
இன்னும்கொஞ் சம்சிந்திப் போமென் தலிப்பினிலே
மன்னுகிற வள்ளலார் மாட்சியினை - நன்னயமாய்
இங்கெடுத்து நல்ல இனிய வகைசொன்ன
தங்கவேல் பாடல் தரம்.

இலந்தை

Lalitha & Suryanarayanan

unread,
Nov 13, 2025, 9:43:07 AMNov 13
to santhav...@googlegroups.com
தங்கவேல் அவர்களின் உயர்ந்த கவிதை அடக்கியுள்ளது மிக உன்னதமான கருத்தை.. பாராட்டுகள்.

சிவசூரி.

Govindaraju Arunachalam

unread,
Nov 13, 2025, 10:29:57 AMNov 13
to santhav...@googlegroups.com

தங்கம் நிகர்த்த தனிப்பா விழைவார்க்குத்

தங்கவேலர் பாடல் தகும்.

 

-கருவூர் இனியன

Kaviyogi Vedham

unread,
Nov 13, 2025, 11:16:49 AMNov 13
to santhav...@googlegroups.com
 அரங்கத் தலைவரின் கவியும்  தங்கவேல் கவியும் மிக அழகியது. சிறப்பான  கருத்து,   வாழ்க  பாவலர்கள்,
  யோகியார்

Arasi Palaniappan

unread,
Nov 13, 2025, 11:23:09 AMNov 13
to சந்தவசந்தம்
கவிஞர் காஞ்சி தங்கவேல் கவிதைக்குப் பின்னூட்டம்

என்றும் சிந்தைக் கினிய வள்ளலார்
நன்றாம் பாக்களை நயமுற இன்றும் 
சிந்திக்கச் சொன்ன சிறப்பால்
தங்கவேல் தம்பி தமிழ்போல் வாழியே!

அன்புடன்
அரசி. பழனியப்பன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Nov 13, 2025, 3:16:40 PMNov 13
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
“வள்ளல் பெருமான் வழியில் செல்லும் 
தருணம் இதுவே தருணம்”

அருமையான வரிகள். வள்ளல் பெருமானுடைய இந்த வார்த்தைகளை நினைவுறுத்துகிறது.

“தருவகைஇத் தருணம்நல்ல தருணம்இதில் எனக்கே
          தனித்தஅருட் பெருஞ்சோதி தந்தருள்க”

————
சிறு குறிப்பு: தங்கள் ஐந்தாம் பாட்டில் “கற்று மறக்கா கல்வி கற்று” என்னும் இடத்தில், “மறக்கா” என்பது “மறவா” என்று வந்தால் மேலும் சிறக்கும் என்று நினைக்கிறேன். 

- இமயவரம்பன் 

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Nov 13, 2025, 8:50:47 PMNov 13
to சந்தவசந்தம்
அனைவருக்கும் வணக்கம் 

கவிதையைப் படித்தை கருத்து தெரிவித்த
திரு. தில்லை வேந்தன் ஐயா , 
ராம்கிராம் ஐயா
இலந்தை ஐயா ,
 சிவசூரி ஐயா, 
கருவூர் இனியன் ஐயா,
யோகியார் ஐயா,  
அரசி. பழனியப்பன் ஐயா , 
இமயவரம்பன் ஐயா

மேலும் இனி படிப்பவர்களுக்கும் நன்றி மலர்கள் பல.






On Friday, November 14, 2025 at 1:46:40 AM UTC+5:30 இமயவரம்பன் wrote:
“வள்ளல் பெருமான் வழியில் செல்லும் 
தருணம் இதுவே தருணம்”

அருமையான வரிகள். வள்ளல் பெருமானுடைய இந்த வார்த்தைகளை நினைவுறுத்துகிறது.

“தருவகைஇத் தருணம்நல்ல தருணம்இதில் எனக்கே
          தனித்தஅருட் பெருஞ்சோதி தந்தருள்க”

————
சிறு குறிப்பு: தங்கள் ஐந்தாம் பாட்டில் “கற்று மறக்கா கல்வி கற்று” என்னும் இடத்தில், “மறக்கா” என்பது “மறவா” என்று வந்தால் மேலும் சிறக்கும் என்று நினைக்கிறேன். 

- இமயவரம்பன் 

அப்படியே மாற்றிக்கொள்ள விழைகிறேன் ஐயா மிக்க மகிழ்ச்சி.
On Nov 13, 2025, at 2:02 AM, தங்கவேல் காஞ்சிபுரம் <k.thanga...@gmail.com> wrote:

நெற்றிக் கண்ணைத் திறக்கும் சாவி
    நெஞ்சில் கருணை வந்தால் கிட்டும் 
கற்று மறவா கல்வி கற்று
 காலம் கடந்து வாழ்வோம் வாழ்வோம்
நன்றி ஐயா 

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Nov 13, 2025, 8:57:16 PMNov 13
to சந்தவசந்தம்
இலந்தை ஐயா அவர்களுக்கு வணக்கம் 

தங்களின் வெண்பா வாழ்த்து சிறப்பாக உள்ளது மிக்க நன்றி 
ஆனால் 
இன்னும்கொஞ் சம்சிந்திப் போமென் தலிப்பினிலே

முதல் வரியின் நான்காம் சீரின் பொருள் அறிய விழைகிறேன்.

முதல்வரியின் பொருளறியா முட்டாளாய் உள்ளேனே
அதன்விளக்கம் அளித்தாலே அகமகிழ்வேன் இலந்தையாரே


On Thursday, November 13, 2025 at 8:05:02 PM UTC+5:30 Subbaier Ramasami wrote:
இன்னும்கொஞ் சம்சிந்திப் போமென் தலிப்பினிலே
மன்னுகிற வள்ளலார் மாட்சியினை - நன்னயமாய்
இங்கெடுத்து நல்ல இனிய வகைசொன்ன
தங்கவேல் பாடல் தரம்.

இலந்தை


Subbaier Ramasami

unread,
Nov 13, 2025, 11:03:09 PMNov 13
to santhav...@googlegroups.com
அது தட்டச்சுப் பிழை. தலைப்பினிலே என்றிருக்க வேண்டும்.

இலந்தை

On Thu, Nov 13, 2025 at 7:57 PM தங்கவேல் காஞ்சிபுரம் <k.thanga...@gmail.com> wrote:

Ram Ramakrishnan

unread,
Nov 14, 2025, 3:23:20 AMNov 14
to santhav...@googlegroups.com
கவியரங்கத்தில் பங்கேற்கவுள்ள கீழ்க்கண்ட கவிஞர்கள் அவர்தம் தயார் நிலையைத் தெரிவித்தால்
முறையாக அழைத்தற்கு ஏதுவாகும். அழுத்தம் தருவதாக எண்ண வேண்டாம். 

1. திரு பழனியப்பன்
2. திரு. மீ. விஸ்வநாதன்
3. திருமிகு சுதா வேதம்
4. திருமிகு புட்பா கிறிட்டி
5. திரு. சுரேஜமீ
 
எந்த வரிசை எண்ணில் அழைப்பு விடுவிக்க வேண்டும் என்ற அவர்தம் விருப்பத்தையும் தெரிவிக்கலாம்.

உங்கள் பதிலை எதிர்பார்க்கும்,


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Arasi Palaniappan

unread,
Nov 14, 2025, 3:52:32 AMNov 14
to சந்தவசந்தம்
பணி நிமித்தம் பயண அலுவலில் இருப்பதால், நிறைவாக  அதாவது 5 ஆவதாக அழைக்க வேண்டுகிறேன். மிக்க நன்றி.

Ram Ramakrishnan

unread,
Nov 14, 2025, 6:13:45 AMNov 14
to santhav...@googlegroups.com
சரி, அன்பரே. பட்டியலில் இறுதியாக உங்கள் பெயரைச் சேர்த்தேன்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)


Arasi Palaniappan

unread,
Nov 14, 2025, 7:23:31 AMNov 14
to சந்தவசந்தம்

Kaviyogi Vedham

unread,
Nov 14, 2025, 10:47:21 AMNov 14
to santhav...@googlegroups.com
    அன்பு    சுதாம்மா.. உன் அப்பா    அதாவது  வேதம் யோகியார் ஏற்கெனவே தன் கவிதையை 
  தலைவர்க்கு அனுப்பியாச்சு. ஆகவே விரைவில்  உன்-கவிதையை   அவருக்கு  அனுப்பு,
 வேதம்

Ram Ramakrishnan

unread,
Nov 14, 2025, 9:46:51 PMNov 14
to santhav...@googlegroups.com
கவிஞர் காஞ்சிபுரம் தங்கவேல் அவர்கள் கவிதைக்குப் பின்னூட்டம்


கலிவெண்பா


எல்லையற்ற பேரொளியா யெங்குநிறை ஆண்டவனின்

வல்ல பெரும்புகழை வாயார வாழ்த்திடும்

வள்ளலார் தந்த திருவருட்பா மந்திரம்.,

அள்ளிக் கொடுத்த வமுதத் திரட்டினில்

கிள்ளிக் கொடுத்திடு கேண்மையர் தங்கவேல்

இன்னும்நாம் சிந்தித்த லின்றியமை யாதென்றே

நன்மைகளின் பட்டியலை நம்சபையோர்க் கீந்தார்

சமரச சன்மார்க்கப் பாதையைச் சார்ந்து

பிமரங் கெடமெய்ப் பொருளை யுணர்த்திட்டால்

உள்ளத்தி னொண்பொருளே ஞானத் தெளிவாக்கும்

கொல்லா விரதக் குணமாம் மனங்கொண்டு

நல்லபல மூலிகைகள் நாள்தவறா துட்கொண்டு

கற்று மறவாத கல்வியதில் வாழ்வமைத்துப்

பற்றும் பயமும் பணத்தினில் மோகமும்

நீங்கு வகைக்காக நீங்காது சிந்திக்க

ஈங்கிட்ட பாட லினிது.


பிமரம் - மாயை, பொய்யான தோற்றம்,


கவியரங்கத்தில் நான்காம் அழைப்பு:

கவிஞர் இமயவரம்பன்

நேரிசை ஆசிரியப்பா


கற்றது விடுவன் முற்றெனக் கழன்றார்,

பற்பல விதமாய்ப் பாக்களைக் கொடுப்பவர்

“இமயச் சாரல்” இன்சுவைக் கவிதைகள்

சமயம திலார்வம் தண்டமிழ்த் தெளிவுடன்

உமையவள் பதியோ டுத்தமன் புகழினை

விளக்கிடு முரைகள் வேல்மணிச் சரமென

அளப்பறு தமிழ்கொ டாத்த நூற்பல.

அமைதியி னுருவம் ஆழ்ந்தநற் கவிவலர்

உணர்வுடன் கவிதைக்  கோவிய மளிப்பவர்,

அருமை நண்பர்., ஆன்மிக மனத்தவர்.,

பணியென முனைப்பில் பைந்தமிழ்க் கவிதைகள்

குணமுளர் கொடுத்தல் நாம்செய் நற்றவம்

இமயமாம் சிந்தனை வளமுடன்

தமதாம் பாட்டினைத் தருபவர் வரம்பரே.

Lalitha & Suryanarayanan

unread,
Nov 14, 2025, 10:37:01 PMNov 14
to santhav...@googlegroups.com
தங்கவேல் அவர்களுக்குத் தலைவர் நீங்கள் கொடுத்துள்ள பின்னூட்டம் மிக அருமை!
சிவசூரி.

இமயவரம்பன்

unread,
Nov 14, 2025, 10:46:17 PMNov 14
to santhav...@googlegroups.com
அழகிய கவிதையால் அடியேனை வாழ்த்தி அழைத்த அவைத்தலைவர் திரு.ராம்கிராம் அவர்களுக்கு மிக்க நன்றி!

கவியரங்கம்- 61
நாள் 15-நவம்பர்-2025
தலைப்பு: இன்னும் கொஞ்சம் சிந்திப்போம்
தலைவர்:   கவிஞர் ராம் ராமகிருஷ்ணன்

திருவரங்கன் துதி
(எழுசீர் ஆசிரிய விருத்தம் 
கருவிளம் புளிமா கருவிளம் புளிமா/கருவிளம் கருவிளம் புளிமா)
(குறிப்பு: சில இடங்களில் விளச்சீருக்குப் பதிலாக மாங்காய்ச் சீர் பயின்று வரும்)

உருவெலாம் கடந்த ஒருவனே உணர்வார்க்(கு)
… உறவனே உலகின்வாழ் முதலே
பரிவினால் விரைந்தோர் கரியையா தரித்த
… பரமனே பரவரும் பொருளே
உரகமாம் அணைமேல் ஒளிருமா மலையே
… உரவுநீர் மருவுநீ ளரங்கா
விரைகொள்தா மரைவாழ் திருவின்நா யகனே
… வினையினேற்(கு) அருள்கவான் கழலே. 

(பரவரும் = பரவுதற்கு அரிய
உரகம் = பாம்பு
உரவு நீர் = பாய்ந்து ஓடும் காவிரி ஆறு
மருவு = சூழ்ந்த)

சந்தவசந்த வாழ்த்து
(எண்சீர்ச் சந்த விருத்தம் 
தானன தானன தானன தானா - அரையடிக்கு)

சந்ததம் இன்கவி சாற்றிடு மன்றம்
… தண்ணமர் பண்ணிசை ஆர்த்திடு மன்றம்
சிந்தையில் ஐயம் விலக்கிடு மன்றம்
… செய்யுளின் நுட்பம் விளக்கிடு மன்றம்
முந்துற மெய்ம்மை முழங்கிடு மன்றம்
… முத்தமிழ் இன்பம் வழங்கிடு மன்றம்
நந்தலில் சந்த வசந்த(ம்)நம் மன்றம்
… நன்றிது வாழிய வண்ணம் மிகுந்தே. 

கவியரங்கத் தலைவர் வாழ்த்து
(கட்டளைக் கலித்துறை)

வண்ணம் சிறக்கும் மணிச்சொல் வளத்தால் மருள்விலக்கி
எண்ணம் தெளிக்கும், இதயம் முழுதும் இனித்திடவோர்
பண்ணின்(பு) அளிக்கும், பரிவைப் பொழியும் பனிமழைபோல்
தண்ணென் றிருக்கும் தலைவர் இராம்கிராம் தம்தமிழே.

(தெளிக்கும் = தெளிவடையச் செய்யும்; பண்ணின்பு = பண்ணாகிய இன்பம்)

அவையடக்கம்:
(நேரிசை வெண்பா)

கன்னங் கருநிறத்தோர் காகம் கவின்சிகரம்
மின்னும் இமயமலை மேலிருக்க - நன்றதன் 
மேனி மிளிர்ந்ததுபோல் மேன்மையுற்றேன் வீறுதமிழ்
ஞானச் சபைபுகுந்த நான்.

(கருத்து: இமயமலையின் ஒளி பட்டுக் கரிய நிறமுடைய காகமும் மிளிர்ந்தது போல, 
அறிஞர்கள் கூடியுள்ள இந்தக் கவியரங்கத்தின் மாட்சியால் சிறப்பேதும் இல்லாதவனான நானும் சிறப்புற்றேன்). 

கவியரங்கப் பாடல்
தலைப்பு: இன்னும் கொஞ்சம் சிந்திப்போம்

1. என்றன் மனமே
(பாவகை : சிந்துக் கண்ணிகள்)

(பல்லவி)
என்றன் மனமே என்றன் மனமே
… இன்னும் கொஞ்சம் சிந்திப்பாய்! - இனி 
என்றும் இதுபோல் உன்னை வினவி
… இருளை ஒழிக்க முந்திப்பாய்!

(முந்திப்பாய் = முந்திப் பாய்வாயாக)

(சரணம்)

இனத்தால் மதத்தால் நிறத்தால் பிரிப்பார்  
… இழைக்கும் கொடுமை எதிர்ப்பாயோ - அன்றி
இனப்போர் மதப்போர் எனப்-பார் அழிய
… எனக்கேன் எனப்பார்த்(து) இருப்பாயோ? (1) (என்றன் மனமே)

உனைப்போல் உணர்வே எவர்க்கும் உளதென்(று)
… உலகை உறவாய் மதிப்பாயோ - அன்றி
நினைப்புக் கருத்து நெறிவேற் றுமையால்
… நிதமும் சகத்தை வெறுப்பாயோ (2) (என்றன் மனமே)

பரிவே பலனாய் அறிவே வழியாய்ப்
… பயிலும் படிப்பே உயர்வன்றோ - பொன்
பொருளே குறியாய்ப் பலநூல் பயின்றும்
… பொருளில் படிப்பால் பயனுண்டோ (3) (என்றன் மனமே)

மருள்சேர் கணிநூல் கரரே கையெலாம்
… வழிகாட் டிடுமோ ஒருநாளும் - மிகும்
இருள்சூழ் பொழுதில் விழிப்போ டிருந்தால்
… இடர்தான் உறுமோ வருகாலம் (4) (என்றன் மனமே)

(கணிநூல் = சோதிடநூல்; கரரேகை = கைரேகை)

பரிவொன்(று) அறியா(து) உறுபற் றுடனே
… பழகும் உறவு பழுதன்றோ - என்றும்
பிரிவொன்(று) இலதாய் ஒருபற் றிலதாய்ப்
… பிணையும் உறவே உறவன்றோ (5) (என்றன் மனமே)

(கருத்து: அன்பு இல்லாமல் பற்றும் சார்வும் மட்டும் இருக்கும் உறவு பழுது; 
பற்று ஒன்றும் இல்லாமல் அன்பால் இணைந்த உறவே உறவே)

நளிர்நீர் உலகின் நலம்நாம் நினைந்தால்
… நனிதீ(து) உறுமோ காடெல்லாம் - மிகு
வளிமா(சு) அறுக்கும் மரந்தான் அழிந்தால் 
… வளமோங் கிடுமோ நாடெல்லாம் (6) (என்றன் மனமே)

(நளிர்நீர் = குளிர்ந்த கடல் நீர் சூழ்ந்த)

இடுதக் கணையை! விடுதுக் கமெலாம்!
… எனவக் கணையாய்ப் பலபேசி - இங்குப்
படிறே புரிவார்க்(கு) அடிமை யுறவோ 
… படைத்தான் இறைவன் இதையோசி (7) (என்றன் மனமே)

(தக்கணை = தட்சணை; 
இடுதக்கணையை = தக்கணையை இடு; 
விடுதுக்கமெலாம் = துக்கத்தை விடு; 
படிறு = வஞ்சகம்(பொய்த்தவ வேடம்))

வன்க ணவரால் புண்பட் டுழலும்
… மாதர் துயரம் பொறுப்பாயோ - அன்றி
நின்கண் உகுநீர் எரியாய்க் கிளர 
… நீசர் செயலை ஒறுப்பாயோ? (8) (என்றன் மனமே)

(வன்கணவர் = கொடியவர்)

2. நான் யார்
(கட்டளைக் கலிப்பா)

வேண்டு செல்வத்(து) உறுபொருள் தேடியே
… வீண லைந்து திரிந்திடு வாழ்வினில் 
மீண்டும் மீண்டும் இடர்க்குழி வீழ்ந்திருள்
… மேவி வாடி மெலிந்திடு நெஞ்சமே!
யாண்டும் எண்ணம் எழுந்தொறும் ‘எண்ணும் நான்
… யார்’என்(று) ஆழ்ந்து வினவிட வல்லையேல்
தீண்டு நல்லருள் சேர்ந்துனுள் தேனெனத் 
… தெள்ளத் தேறித் தெளிந்துதித் திக்குமே.  

(யாண்டும் = எப்பொழுதும்; 
எண்ணம் = எந்தவொரு நினைவும்; 
வல்லையேல் = உன்னால் முடியும் என்றால்; )

3. பிணக்கமும் இணக்கமும் 
(கட்டளைக் கலிப்பா)

வணங்கு தெய்வம், மருவு விழா,மொழி,  
… மத(ம்)இ வற்றின் மகிமைகள் பேசியே 
பிணங்கி வாதிடும் பேதையர் காண்பரோ
… பிரிவி லாச்சமு தாயத்தின் மாண்பெலாம்?
இணங்கி வாழ்ந்திடு பாரதம் ஒன்றுமே
… இருநி லத்தினுக்(கு) இன்னொளி யா(ம்),இதைக்
கணங்கள் தோறும் நினைந்து நினைந்திடக்
… கடிதின் மேன்மைகள் காண்பது திண்ணமே. 

(மருவு = தழுவும் அல்லது பின்பற்றும் அல்லது பழக்கப்படும்
பிணங்கி = கருத்து/கொள்கை வேறுபாடு கொண்டு
ஒன்றுமே = ஒன்று மட்டுமே
இரு நிலம் = பெரிய உலகம்
கடிதின் = விரைவில்)

- இமயவரம்பன்

On Nov 14, 2025, at 9:46 PM, Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:

கவியரங்கத்தில் நான்காம் அழைப்பு:

Ram Ramakrishnan

unread,
Nov 14, 2025, 11:50:57 PMNov 14
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. சிவசூரி.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Nov 15, 2025, at 09:07, Lalitha & Suryanarayanan <lall...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Arasi Palaniappan

unread,
Nov 15, 2025, 3:21:11 AMNov 15
to சந்தவசந்தம்
திரு இமய வரம்பரின் கவிதை க்குப் பின்னூட்டம்

சிந்தித்(து) அழகாய்ச் சிந்துக் கண்ணி
      சிந்து கின்ற நாவலார்
சிந்த னைசேர் சிறந்த கவிகள்
        சீராய் நல்கும் செல்வராம்
இந்த நாளில் மன்ப தைக்கே
          ஏற்றம் நல்க வேண்டிடும்
எந்தை மாலைச் சிந்திக் கின்ற
           இமய வரம்பர் வாழியே!

அன்புடன் வாழ்த்தும்
அரசி. பழனியப்பன்



--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Lalitha & Suryanarayanan

unread,
Nov 15, 2025, 5:17:51 AMNov 15
to santhav...@googlegroups.com
மயிலாக வந்து குயிலாகப் பாடி
   மனமெங்கும் நிறைந்துள்ள இமயா!
பயிலாத பாடல் பார்மீதில் இல்லை
    பாரென்று சொல்கின்ற விதமாய்
ஒயிலாக வந்து ஒப்பின்றித் தந்த 
    உன்பாடல் எல்லாமும் நன்றே!
அயல்நாட்டி ருந்தும் அருகாமை வந்தே
    அவையையும் பாடுவாய் அழகாய்! 

தெளிவான சொல்லும்  சீரான முகமும்
    திகழ்கின்ற துன்றன் பாவில்!
அளவான சொல்லும் அழகான பொருளும்
    ஆகுமவை ஒன்றாகச் சேர்ந்தே
ஒளிவீசும் பொருளாய் உளமீது மோத
    உனைவாழ்த்து கின்றேன் சூரி!
கிளிகொஞ்சும் குரலில் கேள்வியும் பதிலும்
     யாரேனும் இசைத்திடவே வேண்டும்!

கேள்வியைப் படித்தேன் மீண்டுமே படித்தேன்
   கேள்வியில் கிறங்கினேன் நானே!
வேள்வியா அல்லது கேள்வியா அறியேன்,
    விடையெவர் சொல்வர் எனக்கே!
கோளதா நாளதா கொன்றது  எதுவெனக்
    கூறுமோ பூமி இங்கே?
மீள்வரோ மாண்டவர் மேதினி கூறுமோ
    விதியெனில் விடுவ தாமோ?

சிவசூரி
     
 

Ram Ramakrishnan

unread,
Nov 15, 2025, 5:52:26 AMNov 15
to santhav...@googlegroups.com
அழகான பின்னூட்டம், திரு. சிவசூரி.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On 15 Nov 2025, at 3:47 PM, Lalitha & Suryanarayanan <lall...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Subbaier Ramasami

unread,
Nov 15, 2025, 8:59:15 AMNov 15
to santhav...@googlegroups.com
கன்னங் கருநிறத்தோர் காகம் கவின்சிகரம்
மின்னும் இமயமலை மேலிருக்க - நன்றதன் 
மேனி மிளிர்ந்ததுபோல் மேன்மையுற்றேன் வீறுதமிழ்
ஞானச் சபைபுகுந்த நான்.---- மிக அருமையான பாடல்

மிகு
வளிமா(சு) அறுக்கும் மரந்தான் அழிந்தால் 
… வளமோங் கிடுமோ நாடெல்லா- நல்ல சிந்தனை

அமைகிற பாவில் அருமையாய்ச் சொல்லும்
இமயவரம் பன்பா இனிது

இலந்தை

On Fri, Nov 14, 2025 at 9:46 PM இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:

NATARAJAN RAMASESHAN

unread,
Nov 15, 2025, 10:13:33 AMNov 15
to santhav...@googlegroups.com
அருமையான அவையடக்கப் பாடல்.
மனத்தைக் கேட்கும் கேள்விகள் நம்மை இன்னும் கொஞ்சம் மட்டுமின்றி நிறையவே சிந்திக்க வைக்கின்றன. இணக்கமாக வாழச் சொல்லி இமயவரம்பன் அவர்கள் முடித்த விதம் அருமை.  

                          —தில்லைவேந்தன்.
..

Kaviyogi Vedham

unread,
Nov 15, 2025, 10:47:25 AMNov 15
to santhav...@googlegroups.com
aam.   mika arumai.
yogiyaar

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

sudha's creations

unread,
Nov 15, 2025, 11:13:03 AMNov 15
to santhavasantham
இமயவரம்பன் சார் அவர்களது கவிதை.. ரொம்பவே சிந்திக்க வைக்கிறது..
வாழ்த்துக்கள் 
சுதா வேதம்

KKSR

unread,
Nov 15, 2025, 11:26:38 AMNov 15
to santhav...@googlegroups.com
என்ன சொல்ல? இங்கு என்னை இணைத்த நாளை எண்ணினேன்
கன்னல் வார்த்துக் கவிதை சொல்லும் கணத்தை நானும் கண்டனன்
மின்னல் வேக மிளிர்ந்த நடையில் விண்ணை யளக்கும் எந்தையர் (இலந்தையார்)
சொன்ன சொற்கள் சுடர்க ளாகக் கோத்த சூரி அண்ணல் வாழ்கவே!

அருமை அண்ணா!

அன்புடன்
சுரேஜமீ
15.11.25 இரவு மணி 08:24



---------------------------------------------------------------------------------------------------
This email transmission is confidential and intended for the addressee only. It may contain privileged and confidential information. If you are not the person or organisation to whom it is addressed, you must not copy, distribute, or take any action in reliance upon it. If you have received this message in error, please notify the sender immediately.


On Tue, Nov 11, 2025 at 9:10 AM Lalitha & Suryanarayanan <lall...@gmail.com> wrote:
கவியரங்கத்தில் இரண்டாவது அழைப்பு

கவிஞர் சிவசூரி


எட்டடித் தரவு கொச்சகக் கலிப்பா


மயிலாடு துறைபிறப்பு மயிலையிலே இருப்பிடம்

அயராத உழைப்பினிலே அரவிந்தர் நாடகத்தோ(டு)


கவியரங்கத் தலைவரின் அன்பான அழைப்புக்கு நன்றி.

கவியரங்கம் : இன்னும் கொஞ்சம் சிந்திப்போம் 

தலைவர் : கவிஞர் ராம் ராமகிருஷ்ணன்

( எழு சீர் விருத்தம் மேல் ஓரடி வைப்பு )

கவியரங்கத் தலைவர் வணக்கம்.

(இலந்தையார் முன்பொரு சமயம் அன்னை புவனேஸ்வரி மேல் யாத்த " குரல் தா பஞ்சகம்" , வேறொரு சமயம் அட்டமத்துச் சனியும் இன்னருள் பொழிய எழுதிய " சனி பகவான் விருத்தம்"  மற்றும்  பின்னர் பல சமயங்களில் அன்னை வாராஹி தேவி மேல் செய்த பல நூல்கள் ஆகியவற்றை மேலே சில பாடல்களில் சுட்டியுள்ளேன்.அப்படிப் பட்ட  அருட்கவிதைகள் நாமும் இயற்ற இன்னும் இன்னும் சிந்திப்போம், வந்திப்போம். )






On Tue, Nov 11, 2025 at 10:09 AM Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:
மற்றொரு சிறுதிருத்தம்

“விடுதிவென” -> “விடுதியென” என்க.


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Nov 15, 2025, 11:29:34 AMNov 15
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மகிழ்வூட்டும் வாழ்த்துப் பாடலுக்கு மிக்க நன்றி, திரு. பழனியப்பன்!

எழில்நி றைந்த இன்பக் கவிதை

… என்னை வாழ்த்தும் தீங்கவிதை - திரு

பழனி யப்பக் கவிஞர் இன்று

…. பரிவின் யாத்த பூங்கவிதை 

Siva Siva

unread,
Nov 15, 2025, 11:31:00 AMNov 15
to santhav...@googlegroups.com
NIce.

/மரிக்கா நிலையும் பெருவாய் என்று
  வள்ளல் பெருமான் வகுத்து தந்த /

/மரிக்கா / ==> மரியா
/பெருவாய் / = Typo.
/வகுத்து தந்த / ==> சந்தி.

/மறக்கா கல்வி/ ==> மறவாக் கல்வி.
/கற்று காலம் கடந்து / == சந்தி.

வி. சுப்பிரமணியன்

On Thu, Nov 13, 2025 at 2:02 AM தங்கவேல் காஞ்சிபுரம் <k.thanga...@gmail.com> wrote:
அனைவரும் வணக்கம்  



சிந்தனை அமுதப் பத்து
       (அறுசீர் விருத்தம்) 

மன்னும் உலகில் மனிதர் வாழ
  வள்ளல் பெருமான் வழியில் சென்றால் 
துன்பம் நிறைந்த வாழ்வும் மாறும் 
   துணையாய் வருவார் அருளைத் தருவார்
இன்பம் பெற்று நலமாய் வாழ
   இனிக்கும் அருட்பா அமுதை நாளும் 
இன்னும் கொஞ்சம் சிந்திப் போமே

Siva Siva

unread,
Nov 15, 2025, 11:41:05 AMNov 15
to santhav...@googlegroups.com
அழகிய கருத்து.
பலவகை யாப்பு.
சரணங்கள் - இனிய அமைப்பு. இயைபு.

வாழ்க.

வி. சுப்பிரமணியன்



On Fri, Nov 14, 2025 at 10:46 PM இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:
அழகிய கவிதையால் அடியேனை வாழ்த்தி அழைத்த அவைத்தலைவர் திரு.ராம்கிராம் அவர்களுக்கு மிக்க நன்றி!

கவியரங்கம்- 61
நாள் 15-நவம்பர்-2025
தலைப்பு: இன்னும் கொஞ்சம் சிந்திப்போம்
தலைவர்:   கவிஞர் ராம் ராமகிருஷ்ணன்
...

1. என்றன் மனமே
(பாவகை : சிந்துக் கண்ணிகள்)

(பல்லவி)
என்றன் மனமே என்றன் மனமே
… இன்னும் கொஞ்சம் சிந்திப்பாய்! - இனி 
என்றும் இதுபோல் உன்னை வினவி
… இருளை ஒழிக்க முந்திப்பாய்!

(முந்திப்பாய் = முந்திப் பாய்வாயாக)

(சரணம்)

இனத்தால் மதத்தால் நிறத்தால் பிரிப்பார்  
… இழைக்கும் கொடுமை எதிர்ப்பாயோ - அன்றி
இனப்போர் மதப்போர் எனப்-பார் அழிய
… எனக்கேன் எனப்பார்த்(து) இருப்பாயோ? (1) (என்றன் மனமே)
....

KKSR

unread,
Nov 15, 2025, 11:41:44 AMNov 15
to santhav...@googlegroups.com
தங்கம் போல கவிதை தந்த தங்கவேலன் வாழியவே!

அருமை!

அன்புடன்
சுரேஜமீ
15.11.2025 இரவு 08:40


---------------------------------------------------------------------------------------------------
This email transmission is confidential and intended for the addressee only. It may contain privileged and confidential information. If you are not the person or organisation to whom it is addressed, you must not copy, distribute, or take any action in reliance upon it. If you have received this message in error, please notify the sender immediately.

On Thu, Nov 13, 2025 at 11:02 AM தங்கவேல் காஞ்சிபுரம் <k.thanga...@gmail.com> wrote:
அனைவரும் வணக்கம்  

சந்த வசந்த சபைக்கோர் வணக்கம் 
    சான்றோர் நிறைந்த சபைக்கோர் வணக்கம்
கந்தம் கமழும் தமிழ்க்கோர் வணக்கம்
    கவிதை படிக்கும் கவிக்கோர் வணக்கம் 
 
தலைப்பு : இன்னும் கொஞ்சம் சிந்திப்போம்
தலைவர் : கவிஞர் ராம் ராமகிருஷ்ணன்

சிந்தனை அமுதப் பத்து
       (அறுசீர் விருத்தம்) 

மன்னும் உலகில் மனிதர் வாழ
  வள்ளல் பெருமான் வழியில் சென்றால் 
துன்பம் நிறைந்த வாழ்வும் மாறும் 
   துணையாய் வருவார் அருளைத் தருவார்
இன்பம் பெற்று நலமாய் வாழ
   இனிக்கும் அருட்பா அமுதை நாளும் 
இன்னும் கொஞ்சம் சிந்திப் போமே
   இறப்பைத் தவிர்த்து வாழ்வோம் இனிதே (1)


 எண்சீர் விருத்தம் சிறப்பாக உள்ளது.

மிக்க நன்றி ஐயா 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
It is loading more messages.
0 new messages