சிறுதுளி ஈகை. - மீ. விசுவநாதன்

0 views
Skip to first unread message

M. Viswanathan

unread,
May 2, 2026, 12:26:21 PM (4 days ago) May 2
to Santhavasantham, M. Viswanathan
"சிறுதுளி ஈகை"
           (மீ. விசுவநாதன்)

"ஒருதுளி நீரில் உருவாகி
ஒர்நூ றாண்டு வாழ்கின்றான்
ஒருசிறு ஈகை செய்வதற்கு
உளத்தில் சண்டை யிடுகின்றான்
வருகிற வரவில் மனம்வைத்து 
மனித நேயம் மறக்கின்றான் 
ஒருநொடி அன்பில் உயிர்க்கின்ற
உறவின் துடிப்பைத் துறக்கின்றான்

இருள்வரும் பின்னே ஒளிபரவும்
என்னும் இயற்கை அறியாமல்
உருள்கிற வண்டிச் சக்கரமாய் 
ஓய்வே இலாமற் சேர்க்கின்றான்
வருகிற காலம் வசந்தமென
வண்மை எண்ணத் திண்ணமுடன்
தருகிற தர்மச் சிறுதுளியால்
தழைக்கும் வம்சப் பேர்பெறுவான்.
             (02.05.2026 21.15pm)

Kaviyogi Vedham

unread,
May 2, 2026, 8:26:41 PM (3 days ago) May 2
to santhav...@googlegroups.com
romba arumai,
 yo--

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CACXjW-vW4MH1ZgmcPAt5%2B5BFOqyW8GwtkPiDnHDsDj55r3q60w%40mail.gmail.com.

M. Viswanathan

unread,
May 2, 2026, 9:30:53 PM (3 days ago) May 2
to Santhavasantham
கவியோகியாரின் கருத்துக்கு மகிழ்ச்சி. நன்றி.

Subbaier Ramasami

unread,
May 3, 2026, 8:26:54 AM (3 days ago) May 3
to santhav...@googlegroups.com
அருமையான கவிதை

இலந்தை

On Sat, May 2, 2026 at 12:26 PM M. Viswanathan <meev...@gmail.com> wrote:

M. Viswanathan

unread,
May 3, 2026, 8:30:02 AM (3 days ago) May 3
to santhav...@googlegroups.com

அன்புக் கவிவேழம் இலந்தையார் அவர்களின் கருத்துக்கு மகிழ்ச்சி. நன்றி.
அன்பன்,
மீ. விசுவநாதன் 
03.05.2026 17.59 pm
Reply all
Reply to author
Forward
0 new messages