Fwd: ஹரி கிருஷ்ணன் பாராட்டு கவிதை

11 views
Skip to first unread message

Kaviyogi Vedham

unread,
May 8, 2026, 6:14:26 PM (4 days ago) May 8
to santhavasantham


---------- Forwarded message ---------
From: sudha's creations <sudhave...@gmail.com>
Date: Thu, May 7, 2026 at 2:47 PM
Subject: ஹரி கிருஷ்ணன் பாராட்டு கவிதை
To: Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>
Cc: swaminathan subramanian <swami....@gmail.com>


கவிஞர் ஹரி கிருஷ்ணன் அவர்களுக்கான விருதுக் கவிதை
------------------------------------------------------------------பரியேறும் அழகர் போல் -- இவர்
      பாட்டுக்கள் பவனி வரும் !
சரியான நேரத்தில் 
        சந்தங்கள் துள்ளி விழும் !
வரிவரியாய் இலக்கியமும் , (இவர்)   
     விளக்கத்தால் மெருகேறும் ! ஹரிகிருஷ்ணன் எனும் புலவர்-
      இவர்புலமை உலகறியும்!!

கம்பரைத் தன் தமிழாலே ,
      கற்பிக்கும் அழகாலே ,
நம்மனதை ஈர்த்திடுவார் !
     நாகநந்தி மாணாக்கர்!
சும்மாவா விருது பெற்றார்.?! -தமிழ்ச்
      சூரியனாய் உலா வந்தார் !!
 அம்மம்மா , தமிழுக்காய் 
      அளப்பரிய தொண்டு செய்தார் !


வள்ளுவரும் ,பாரதியும் ,
    வான் பறந்த அனுமாரும் ,
உள்ளபடி ஹரிதமிழால் 
     உவகையில் மிதந்தார்கள் !!
துள்ளிவரும் தமிழ்ப் பண்கள் ,
     துவளாத கவிநெஞ்சம் ,
அள்ளித்தான் கற்பித்தார் !
     ஆசிரியர் ஹரிகிருஷ்ணன் !


கலகலப்பாய்த் தமிழ்ப் பேசி ,
     காந்தமாக இழுத்திடுவார் !
பலகாலம் முன்பிருந்தே,
       பதிவேற்றிக் ,கணினியிலே, படைப்புகள் வைத்திட்டார் ! பொக்கிஷமாய் காத்திட்டார் !
நலமுடனே இறையருளால்,
      நம் கவிஞர் வாழ்ந்திடுவார் !
உலகெங்கும் அவர் ரசிகர் 
      உளமாறப் பிரார்த்தியுங்கள் !!

என்றும் வணக்கங்களுடன் ,
🙏🙏🙏🙏🙏🙏🙏
சுதா வேதம்




M. Viswanathan

unread,
May 9, 2026, 10:29:24 AM (3 days ago) May 9
to Santhavasantham
அருமை.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAPxnw-JqHE03XSXTWQ5V%2B%2BYaUoOSiyzFme1U2%3DHPNJVXF1D-xw%40mail.gmail.com.

Ram Ramakrishnan

unread,
May 9, 2026, 10:39:15 PM (3 days ago) May 9
to santhav...@googlegroups.com
அருமையான பாராட்டு.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On May 9, 2026, at 19:59, M. Viswanathan <meev...@gmail.com> wrote:



VETTAI ANANTHANARAYANAN

unread,
May 9, 2026, 11:29:30 PM (2 days ago) May 9
to santhav...@googlegroups.com
அருமை நண்பர் ஹரிக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்! 

..அன்புடன்,
அனந்த்

சந்த வசந்தம் குழு தொடங்கிடும் முன்னமே ஹரி, பசுபதி, நான் மேலும் சில நண்பர்கள் ஃபோரம் ஹப், ஆறாம் திணை, மரபுப்பா போன்ற தளங்களின் வழியே  இணையம் வழி இணைந்துள்ளோம். பழைய புகைப்படங்களைத் தேடி அனுப்ப முயல்கிறேன். 

Reply all
Reply to author
Forward
0 new messages