என் சந்தப்பாடல்

6 views
Skip to first unread message

Sai Ganesan H

unread,
Jul 11, 2026, 11:39:33 AM (yesterday) Jul 11
to santhav...@googlegroups.com
வணக்கம். 

அடியேனின் எளிய முதல்  முயற்சி! எண்சீரச் சந்த விருத்தம்! 

பிழைகளைச் சுட்டிக் காட்டினால் நன்றியுடன் திருத்திக் கொள்வேன். 

நாஞ்சில் நாடு 
———————

(அரையடி: புளிமாங்காய் புளிமாங்காய் புளிமாங்காய் தேமா)

( தனதான தனதான தனதான தான)


நலமேசெய் பழையாறும் நடுவேதான் ஓடும்

நறுவாச மலர்சோலை நதியோரம் கூடும்


மலைமேலே முகில்வந்தே மரமெங்கும் மூடும்

மழைதந்த அணைநீரும் மடையெங்கும் சாடும்


நிலமீதில் உயர்தெங்கும் நெடுமாவோ டாடும்

நிறைவாழை வயல்தான்நீர் நிலையெங்கும் சூழும்


உலகெங்கும் பசிதீர்க்க உணவுக்காய் நாடும்

உழவோர்கள் பலர்வாழும் உயர்நாஞ்சில் நாடே. 



குறியோடே ஒருநாரை குளமீதில் பாயும்

குளிமீனைப் பிளமூக்கும் கொணரத்தான்  நீளும்


நெறியோடே களைநீக்க நெடுநேரம் நின்றும்

நெகிழாத  திடமாதர்  நிறைசேய்தா னெங்கும்


சிறியோரின் உணவென்றே சிசுவுக்கும் ஊட்டும்

சிறுமட்டிப் பழமும்தான் செழுவாழை ஈட்டும்


வறியோரும் புலவோரும் வயலைக்கொண் டோரும்

வழிகாட்டும் அறவோரும் வசிநாஞ்சில் நாடே. 

(செய்= வயல்) 

— சத்ய வேழன் H சாயி கணேசன். 
11-07-2026

Sai Ganesan H

unread,
Jul 11, 2026, 12:03:32 PM (yesterday) Jul 11
to santhav...@googlegroups.com
வணக்கம். 
ஒரு திருத்தமுடன்—- 

நாஞ்சில் நாடு
———————

(அரையடி: புளிமாங்காய் புளிமாங்காய் புளிமாங்காய் தேமா)

( தனதான தனதான தனதான தான)

நலமேசெய் பழையாறும் நடுவேதான் ஓடும்

நறுவாச மலர்சோலை நதியோரம் கூடும்


மலைமேலே முகில்வந்தே மரமெங்கும் மூடும்

மழைதந்த அணைநீரும் மடையெங்கும் சாடும்


நிலமீதில் உயர்தெங்கும் நெடுமாவோ டாடும்

நிறைவாழை வயல்தான்நீர் நிலையெங்கும் சூழும்


உலகெங்கும் பசிதீர்க்க உணவுக்காய் நாடும்

உழவோர்கள் பலர்வாழும் உயர்நாஞ்சில் நாடே. 



குறியோடே ஒருநாரை குளமீதில் பாயும்

குளிமீனைப் பிளமூக்கும் கொணரத்தான்  நீளும்


நெறியோடே களைநீக்க நெடுநேரம் நின்றும்

நெகிழாத  திடமாதர்  நிறைநன்செய் யெங்கும்


சிறியோரின் உணவென்றே சிசுவுக்கும் ஊட்டும்

சிறுமட்டிப் பழமும்தான் செழுவாழை ஈட்டும்


வறியோரும் புலவோரும் வயலைக்கொண் டோரும்

வழிகாட்டும் அறவோரும் வசிநாஞ்சில் நாடே. 

—- சத்ய வேழன் H சாயிகணேசன்

Siva Siva

unread,
Jul 11, 2026, 12:44:11 PM (yesterday) Jul 11
to santhav...@googlegroups.com
Nice.

1)
When posting more than one song, please use sequence numbers.

2)
Indenting half lines will help the reader.

3)
இப்பாடல்கள் அசைச்சந்தம் என்று கொள்கின்றேன்.

/ மலைமேலே முகில்வந்தே   /

இவை புளிமாங்காய்ச்சீர்கள். 
ஆனால் தனதான என்ற சந்தம் அல்ல.
இவ்வாறே பிற இடங்களிலும்.

4)
See some other comments below.

V. Subramanian

On Sat, Jul 11, 2026 at 12:03 PM Sai Ganesan H <saisree...@gmail.com> wrote:
வணக்கம். 
ஒரு திருத்தமுடன்—- 

நாஞ்சில் நாடு
———————

(அரையடி: புளிமாங்காய் புளிமாங்காய் புளிமாங்காய் தேமா)

( தனதான தனதான தனதான தான)

நலமேசெய் பழையாறும் நடுவேதான் ஓடும்

..  நறுவாச மலர்சோலை நதியோரம் கூடும்

மலைமேலே முகில்வந்தே மரமெங்கும் மூடும்

..  மழைதந்த அணைநீரும் மடையெங்கும் சாடும்

நிலமீதில் உயர்தெங்கும் நெடுமாவோ டாடும்

..  நிறைவாழை வயல்தான்நீர் நிலையெங்கும் சூழும்

உலகெங்கும் பசிதீர்க்க உணவுக்காய் நாடும்

..  உழவோர்கள் பலர்வாழும் உயர்நாஞ்சில் நாடே. 


==>
 / மலர்சோலை  /
வினைத்தொகை எனில் சரியே. நறுவாசம் மலர்கின்ற சோலை.

மலர்கள் இருக்கும் சோலை = மலர்ச்சோலை;


2)

குறியோடே ஒருநாரை குளமீதில் பாயும்

குளிமீனைப் பிளமூக்கும் கொணரத்தான்  நீளும்

==>
குளிமீன் = ? 


நெறியோடே களைநீக்க நெடுநேரம் நின்றும்

நெகிழாத  திடமாதர்  நிறைநன்செய் யெங்கும்


சிறியோரின் உணவென்றே சிசுவுக்கும் ஊட்டும்

சிறுமட்டிப் பழமும்தான் செழுவாழை ஈட்டும்

==>
இங்கே,  ஈட்டும் = ?

Sai Ganesan H

unread,
Jul 11, 2026, 8:12:34 PM (23 hours ago) Jul 11
to santhav...@googlegroups.com
Thank you. I noted the points. 
மலர்சோலை - வினைத்தொகையாகத்தான் எழுதினேன். 
குளிமீன் - மீன்கள் எப்போதும் குளித்துக்கொண்டிருப்பவை. 

ஈட்டும் - தரும் என்னும் பொருள்பட எழுதினேன். 


—- சத்ய வேழன். H சாயி கணேசன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCPzxvP_jBccRW8iuBSXmon4Jxq1ENnuo%2BC83%3DPfQxXc_w%40mail.gmail.com.

Siva Siva

unread,
Jul 11, 2026, 8:23:59 PM (23 hours ago) Jul 11
to santhav...@googlegroups.com
/  குளிமீன் - மீன்கள் எப்போதும் குளித்துக்கொண்டிருப்பவை.    /

Interesting.

கொழுமீன் - may fit as well.

V. Subramanian
Reply all
Reply to author
Forward
0 new messages