மா விளம் காய் x2 - அறுசீர் விருத்தம்?

6 views
Skip to first unread message

Siva Siva

unread,
Jul 23, 2026, 9:10:09 PM (2 days ago) Jul 23
to santhavasantham
மா விளம் காய் - அரையடி வாய்பாடு
இந்த அமைப்பில் முன்னோர் பாடல்களில் அறுசீர் விருத்தம் உள்ளதா?

வி. சுப்பிரமணியன்

Subbaier Ramasami

unread,
Jul 24, 2026, 8:12:51 AM (yesterday) Jul 24
to santhav...@googlegroups.com
முன்னோர் பாடல் இருக்கிறதா என்பதை ஆராய வேண்டும். விருத்தம் எழுத வருத்தம் எதற்கு ?     புத்தகப் பயிற்சியில் இருக்கிறது

விளம்விளம் புளிமா

உறங்கிடும் பொழுதிலும் உனையே

உளத்தினுள் பதிப்பனென் கனியே

கறங்கிடும் உலகினில் எதுவும்

கவர்ந்திட விலைஉனக் கிணையாய்

கிறங்கிடப் புரிந்திடும் அமுதே

கிளர்ந்திட எழுப்பிடும் சுவையே

பறந்திட விழைகிறேன் இணையாய்

பரவச மளித்திட வருக!

விளம் மா காய்

நெஞ்சினில் ஓர்புள் பாடுகையில்

நெறிமுறை தப்பிப் போகாது

வஞ்சம னத்தன் வாழ்ந்தாலும்

மண்ணிற் கவனோர் பாரந்தான்

கொஞ்சமும் சலனம் இல்லாமல்

கொள்கையைப் பற்றி நடக்கிறவன்

விஞ்சிடும் துன்பம் வந்தாலும்

மேலவன் ஆக வாழ்கின்றான்

மா விளம் காய்

                  ஓர்புள் நெஞ்சினில் பாடுகையில்
                               உள்ளம் தப்பியே போகாது
                   நேர்மா றாகவே வாழ்கிறவன்
                                நிலத்திற் கவனொரு பாரந்தான்
                   யார்வத் தெதிர்ப்பினும்  சிறிதேனும்
                                ஆட்டம் இன்றியே செல்கிறவன்
                   சேர்தீ மையினுக் கஞ்சாமல்
                                சிறப்பாய்  நலமொடு வாழ்வானே!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCPspCQRePvX7UQqrDpo1Sa%3DiVv4i0q8C%2BEQXgo11HMx3A%40mail.gmail.com.

Siva Siva

unread,
Jul 24, 2026, 9:24:19 AM (yesterday) Jul 24
to santhav...@googlegroups.com
Thanks.

நேற்று எழுதிய ஒரு பதிகம் இந்த வாய்பாட்டில் அமைந்தது.

வி. சுப்பிரமணியன்
On Fri, Jul 24, 2026 at 8:12 AM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
முன்னோர் பாடல் இருக்கிறதா என்பதை ஆராய வேண்டும். விருத்தம் எழுத வருத்தம் எதற்கு ?     புத்தகப் பயிற்சியில் இருக்கிறது
..

மா விளம் காய்

                  ஓர்புள் நெஞ்சினில் பாடுகையில்
                               உள்ளம் தப்பியே போகாது
                   நேர்மா றாகவே வாழ்கிறவன்
                                நிலத்திற் கவனொரு பாரந்தான்
                   யார்வத் தெதிர்ப்பினும்  சிறிதேனும்
                                ஆட்டம் இன்றியே செல்கிறவன்
                   சேர்தீ மையினுக் கஞ்சாமல்
                                சிறப்பாய்  நலமொடு வாழ்வானே!

Kaviyogi Vedham

unread,
Jul 24, 2026, 10:32:11 AM (yesterday) Jul 24
to santhav...@googlegroups.com
attagasam thalaivaa. vazga, 
yo..

On Fri, Jul 24, 2026 at 8:12 AM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

Siva Siva

unread,
Jul 24, 2026, 11:18:01 AM (yesterday) Jul 24
to santhav...@googlegroups.com
நேற்று எழுதிய பதிகத்திலிருந்து ஒரு பாடல் கீழே.

3)

பார்த்தன் விழைபடை ஈந்தருளப் .. பண்டு பன்றியைத் தொடர்வேடன்

நேத்தி ரந்திகழ் நெற்றியினான் .. நிமலன் பெரும்பசி உடையான்போல்

ஆத்தி நிழல்தனில் வீற்றிருந்தான் .. அரவம் வளர்மதி உடனாகச்

சேர்த்த சடையிடைக் கங்கையினான் .. செங்காட் டங்குடிப் பெருமானே.

வி. சுப்பிரமணியன்

On Fri, Jul 24, 2026 at 10:32 AM Kaviyogi Vedham <kaviyog...@gmail.com> wrote:

Sai Ganesan H

unread,
Jul 24, 2026, 12:21:16 PM (yesterday) Jul 24
to santhav...@googlegroups.com
சிறப்பு! 

— சத்யவேழன் H சாயி கணேசன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Sai Ganesan H

unread,
Jul 24, 2026, 12:32:50 PM (yesterday) Jul 24
to santhav...@googlegroups.com
வணக்கம். 
சென்ற வருடம் எழுதிய ஒரு முருகன்பாடலின் சரணத்தில் அரையடி’ மா விளம் விளம் ‘வரும்படி எழுதியிருந்தேன். அதனோடு ஓர் நேரசைச்சீர் சேர்த்ததும் வந்த பாடல் இதோ: 
(அரையடி : மா விளம் காய்) 

மாலின் சீர்மரு கோன்நினையே

மாசில் பூஜைகள் செய்கையிலே

காலில் தோன்றிடும் உணர்வுகள்தான்

காலன் வருவதைக்  காட்டிடுமே! 

வேலி னையேமனம் நினைத்தவுடன்

வேத னையும்முடன் விலகிடுமே! 

பீலி கொள்மயில் நீதரவே

பீதி மாயைகள் அகன்றிடுமே! 

— சத்ய வேழன்  H சாயி கணேசன் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Jul 24, 2026, 12:39:32 PM (yesterday) Jul 24
to santhav...@googlegroups.com
/ காலில் தோன்றிடும் உணர்வுகள்தான்  / = ?

/ பீலி கொள்மயில் நீதரவே  / = ?

V. Subramanian

Sai Ganesan H

unread,
Jul 24, 2026, 10:38:31 PM (17 hours ago) Jul 24
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி. 

காலில் தோன்றும் உணர்வுகள்தான் -  கால்கள்  நடுங்குவதைக் குறிப்பிட்டேன். 

பீலிகொள் மயில் நீ தர  —. வேலும் மயிலும் தான் கால பயம் போக்கி ஆன்மாவை இறைவனோடு சேர்க்கும் என்பது நம்பிக்கை. 
 —- சத்ய வேழன் H சாயி கணேசன் 
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages