இராம நவமி - தாமதப் பாட்டு

4 views
Skip to first unread message

Arasi Palaniappan

unread,
Mar 28, 2026, 6:50:28 PM (5 days ago) Mar 28
to சந்தவசந்தம்
       இராம நவமி நன்னாள் 

நவமி  திதிபிறந்த நல்லான்அவன் ; என்றும் 
உவமானம் இல்லா ஒருவன் - கவிஞானக் 
கம்பன் அருள்கவியில் காட்சிதரு நாயகன் 
அம்புவியில்  ஓங்கும்  அறம்!

பத்துரதன் புத்திரனாய்ப் பாரிற் பிறந்தருள்செய் 
உத்தமன்; சீதைக்(கு) உயர்கேள்வன் - வித்தகம்சேர் 
கம்பன் திருநாக் களமாடும் நாயகன் 
அம்புவியில் ஓங்கும் அறம்!

ஒருசொல், ஒருவில், பின் ஓர்இல் ஒழுக்க
அருள்வாழ்வே வாழ்ந்த அரசன் - பொருளோங்கு 
கம்பன் அருள்ராம காதைக்கு நாயகன் 
அம்புவியில் ஓங்கும் அறம்.


அரசி. பழனியப்பன் 








S.Palaniappan

Arasi Palaniappan

unread,
Mar 28, 2026, 7:01:30 PM (5 days ago) Mar 28
to சந்தவசந்தம்
நவமி திதிபிறந்த நல்லனவன் 
என்றிருக்க வேண்டும். பிழை பொறுத்தாற்றுக!

Siva Siva

unread,
Mar 28, 2026, 7:41:57 PM (5 days ago) Mar 28
to santhav...@googlegroups.com
Nice.

Some questions.

1)  /..... காட்சிதரு நாயகன் அம்புவியில்  ஓங்கும்  அறம்! /

"அவன் அருளால்" = என்பதைச் சொல்லெச்சமாகக் கொண்டு,
.....நாயகன் "அவன் அருளால்" உலகில் அறம் தழைக்கும் == என்று பொருள்கொள்ளவேண்டுமா?

2)  / .. திதிபிறந்த /

திதிப்பிறந்த என்று வரும் என்று எண்ணுகின்றேன்.

3)  / பத்துரதன் /

a) தசரதனை இப்படியும் சொல்வது உண்டா?

ஆம் என்றால்,
b) பத்து + இரதம் = பத்திரதம் ==> பத்திரதன்?

V. Subramanian

Rajagopalan Soundararajan

unread,
Mar 28, 2026, 7:48:03 PM (5 days ago) Mar 28
to சந்தவசந்தம்
பத்துத் திசைகளிலும் தேர் செலுத்தும் திறன் உடையவர். அவரிடம், ப்த்துக்கு மேலே, எண்ணிக்கையற்ற தேர்கள் உண்டே!
ஸௌந்தர் 

On Saturday, 28 March 2026 at 19:41:57 UTC-4 Siva Siva wrote:
Nice.

Some questions.


3)  / பத்துரதன் /

a) தசரதனை இப்படியும் சொல்வது உண்டா?

ஆம் என்றால்,
b) பத்து + இரதம் = பத்திரதம் ==> பத்திரதன்?

V. Subramanian

Arasi Palaniappan

unread,
Mar 28, 2026, 8:49:09 PM (5 days ago) Mar 28
to சந்தவசந்தம்


On Sun, 29 Mar 2026, 12:41 am Siva Siva, <naya...@gmail.com> wrote:
Nice.

Some questions.

1)  /..... காட்சிதரு நாயகன் அம்புவியில்  ஓங்கும்  அறம்! /

"அவன் அருளால்" = என்பதைச் சொல்லெச்சமாகக் கொண்டு,
.....நாயகன் "அவன் அருளால்" உலகில் அறம் தழைக்கும் == என்று பொருள்கொள்ளவேண்டுமா

ஆம் 
?

2)  / .. திதிபிறந்த /

திதிப்பிறந்த என்று வரும் என்று எண்ணுகின்றேன்.

திதி - வடசொல் - பிறந்த - தமிழ்ச்சொல் - ஒற்று வராது என்பது என் கருத்து.

3)  / பத்துரதன் /

a) தசரதனை இப்படியும் சொல்வது உண்டா?

ஆம்! பத்து ரதன் என்றே கொள்க!

"பத்துரதன் புத்திரனின் சத்துருவின் மித்திருவின் 
பத்தினியின் கால்நீக்கித் தேய்!"

பழம் பாடல் 


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCNPPUJj4aQsHFXCgMz7zYtg7ogThjFm5HiaO2xdro8pVw%40mail.gmail.com.

Siva Siva

unread,
Mar 28, 2026, 9:00:34 PM (5 days ago) Mar 28
to santhav...@googlegroups.com
Sanskrit grammar sandhi rules appl;y only when both words are Sanskrit.
If any one of two words is Tamil word, then Tamil grammar sandhi rules apply.

V. Subramanian

Arasi Palaniappan

unread,
Mar 28, 2026, 9:24:27 PM (5 days ago) Mar 28
to சந்தவசந்தம்
நவமி திதி" என்பதே சரியான பயன்பாடு ஆகும். நவமித் திதி என்று சொல்வது இலக்கணப்படி சந்திப்பிழையாகக்  (மிகினெழுத்து) கருதப்படுகிறது. நவமி (ஒன்பதாம் நாள்) என்பது திதியைக் குறிக்கும் சொல் என்பதால், இடையில் 'த்' சேர்க்காமல் நவமி திதி என்று கூறுவதே மரபு. 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Mar 28, 2026, 9:28:57 PM (5 days ago) Mar 28
to santhav...@googlegroups.com
Yes, நவமிதிதி is fine - as both are Sanskrit words.

My comment was about - திதியில் பிறந்த - part.

9.29.1
குழல் ஒலி யாழ்ஒலி கூத்தொலி ஏத்தொலி
    எங்கும் குழாம்பெருகி
விழவொலி விண்ணள வுஞ்சென்று விம்மி
    மிகுதிரு வாரூரின்
மழவிடை யாற்கு வழிவழி ஆளாய்
    மணஞ்செய் குடிப்பிறந்த
பழவடி யாரொடுங் கூடிஎம் மானுக்கே
    பல்லாண்டு கூறுதுமே 

V. Subramanian

Siva Siva

unread,
Mar 28, 2026, 9:29:26 PM (5 days ago) Mar 28
to santhav...@googlegroups.com
9.29.11 

Arasi Palaniappan

unread,
Mar 28, 2026, 9:40:01 PM (5 days ago) Mar 28
to சந்தவசந்தம்
திதி பிறந்த என்பதே சரியான பயன்பாடு ஆகும். ஒரு நபர் எந்த திதியில் பிறந்தாரோ, அதுவே அவரின் பிறந்த திதி (பிறந்தநாள் திதி) எனக் குறிப்பிடப்படுகிறது. 'திதிப் பிறந்த' என்பது தமிழ் இலக்கணப்படி தவறான புணர்ச்சியாகும். 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Mar 28, 2026, 9:48:50 PM (5 days ago) Mar 28
to santhav...@googlegroups.com

7.39.10 - 
திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்
 
மேலுள்ள அடியில் முதல் இருசீர்களிடையே "ப்" மிகுமா மிகாதா?

வி. சுப்பிரமணியன்

Arasi Palaniappan

unread,
Mar 28, 2026, 9:57:42 PM (5 days ago) Mar 28
to சந்தவசந்தம்
திருவாரூர்ப் பிறந்தார் 

குடிப்பிறந்தார் 

இரண்டிலும் 

இரண்டும் தமிழ்ச் சொற்கள்!

🙏

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Mar 28, 2026, 10:08:57 PM (5 days ago) Mar 28
to santhav...@googlegroups.com

When both words are of Sanskrit nature - then the whole phrase is combined in Sanskrit as per that Sanskrit sandhi ( = it is treated as a whole Sanskrit phrase) and then brought into Tamil form.

So, no Tamil sandhi is applied between those 2 words.


நீலகண்டன்

கமலபாதம்


But if only one word is Sanskrit and the other word is Tamil - then all normal Tamil sandhi rules apply.


கறைக்கண்டன்

மலர்ப்பாதம்

தமிழ்ச்சங்கம்


That is my understanding. Of course, it is quite possible that my understanding is incorrect.

V. Subramanian
Reply all
Reply to author
Forward
0 new messages