வெண்பா ஈற்றடி

147 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
Apr 21, 2025, 3:32:18 PM4/21/25
to santhavasantham
ஈற்றடிதான் வெண்பாவுக்கே உயிரானது. அது நன்றாக அமைந்துவிட்டால் வெண்பாவுக்குப் பொலிவு வந்துவிடும்.

தமிழிலக்கியத்திலே பல அழகிய வெண்பா இலக்கியங்கள் உள்ளன. 

பாரத வெண்பா , முத்த்தொள்ளாயிரம், நாளவெண்பா, நளாயினி வெண்பா எனப்பல. தற்காலத்தில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் வெண்பாக்கள் மிகச் சிறப்பானவை.

தமிழிலே மிகச் சிறந்த வெண்பா நூல்கள் உள்ளன. பாரத வெண்பா என்ற ஒரு வெண்பாநூல் பெருந்தேவனார் பாடியது. குறைந்த அளவே அதன் பாடல்கள் கிடைத்துள்ளன. சான்ருகள் சில

உன்வசனங் குன்றாமல் உம்பியேரா ேடகின்றான்

தன்வசனங் குன்றான் தளர்ந்து

*

கூரிருளை மேற்போர்த்துக் கொண்டு .

*

ஏசும் படியோ இருப்பேன், இருநிலத்தார்

பேசும் படியிருப்பேன் பின்

கவிமணியின் வெண்பாக்கள்

திருமால் திருவடி போய்ச் சேர்ந்துதிரு மூலப்

பெருமான் பெரும்பேறு பெற்றான் - உருமேங்கு

விண்மழை போல வியன்வஞ்சி மாதழுத

 கண்மழை வெள்ளங் கடந்து .

.

. முத்துப் பவழம் முழுவயிரம் மாணிக்கம்

பத்தியொளி வீசு பதக்கமெலாம் - சித்தன்

சிரங்கப்ப ராயன் சிறியேன் எனக்குத்

 தரங்கண்டு தந்த தனம் .

ஆறுமுகம் பிள்ளை அவதானம் கண்டெளியேன்
வேறுமுகன் கூற வேண்டுமோ? – தேறுமதி
சேஷையா மெச்சித் திருவாய் மலர்ந்து சபாஷ்
பேஷையா என்ற பிறகு

நெஞ்ச மசைய நினைவசைய அந்நினைவில்
விஞ்சையென எந்நா விரைந்தசைய- செஞ்சொல்
மொழியசைய செய்தி முகமசைய வாழ்க்கை
வழியசைய எந்நாவில் வா -  இலந்தை

இன்னும் எத்தனையோ காட்ட முடியும்!

இதோ ஒரு ஈற்றடி

வெட்ட வெளியில் விருந்து

எட்டி நடந்தேன் எதிரே பலபாடம்
கொட்டிக் கிடக்கும்  குறிப்பறிந்தேன் – இட்டமுடன்
ஒட்டி எடுத்தேன் உளத்தே  புடம்போட்டேன்
வெட்ட வெளியில் விருந்து.---இலந்தை

இந்த ஈற்றடிக்கு வெண்பா எழுதுக

ஒருவிகற்ப நேரிசை வெண்பா(ஏல்லா அடிகளிலும் தனிச்சொல்லிலும் ஒரே எதுகை

பொழிப்பு  மோனை  - முதல் மூன்றாம் சீர்களில் மோனை

இலந்தை

Ram Ramakrishnan

unread,
Apr 21, 2025, 5:29:37 PM4/21/25
to santhav...@googlegroups.com
இது தந்தேன் தலைவரே 

நிட்டை கலைந்து நிசப்தம் நிலவுகையில்

அட்டி இலதாம் அனுபவம்- எட்டத்தில்

பட்டு விரல்தடவிப் பாவைதரும் வீணையிசை

வெட்ட வெளியில் விருந்து.

அட்டி - தடை 

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Apr 21, 2025, at 15:32, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBBx-Wsa50d77z7tBBLZOEH_1K98Bj4_Wmd2btZLrp2jZA%40mail.gmail.com.

Subbaier Ramasami

unread,
Apr 21, 2025, 10:55:18 PM4/21/25
to santhav...@googlegroups.com
புதிய கோணத்தில் பார்த்திருக்கிறீர்கள்..  அருமை.

இலந்தை

Ram Ramakrishnan

unread,
Apr 21, 2025, 10:57:15 PM4/21/25
to santhav...@googlegroups.com
மிக க நன்றி, தலைவரே.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Apr 21, 2025, at 22:55, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

Siva Siva

unread,
Apr 21, 2025, 11:02:48 PM4/21/25
to santhav...@googlegroups.com

2025-04-21

விருந்து

---------------

ஒட்டும் விளம்பரத்தில் உண்டு கழுதைக்குக்

கட்டப் படும்நற் கறவைக்குக் கொட்டிலில்

வட்டங்கள் இட்டுயர் வானார் கழுகிற்கு

வெட்ட வெளியில் விருந்து.

V. Subramanian

On Mon, Apr 21, 2025 at 3:32 PM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

இதோ ஒரு ஈற்றடி

வெட்ட வெளியில் விருந்து

இந்த ஈற்றடிக்கு வெண்பா எழுதுக

NATARAJAN RAMASESHAN

unread,
Apr 21, 2025, 11:31:36 PM4/21/25
to santhav...@googlegroups.com
நெட்டை மலைமேல் நெடுவானச் சீலையில்
கொட்டியது செக்கர்க் குழம்போசொல் - சட்டென
வட்டக் கதிரவன் மாலைவரை ஓலியம்
வெட்ட வெளியில் விருந்து!

                      -தில்லைவேந்தன்

NATARAJAN RAMASESHAN

unread,
Apr 21, 2025, 11:36:36 PM4/21/25
to santhav...@googlegroups.com
Typo

ஓலியம்— ஓவியம்

NATARAJAN RAMASESHAN

unread,
Apr 21, 2025, 11:37:38 PM4/21/25
to santhav...@googlegroups.com
நெட்டை மலைமேல் நெடுவானச் சீலையில்
கொட்டியது செக்கர்க் குழம்போசொல் - சட்டென
வட்டக் கதிரவன் மாலைவரை ஓவியம்
வெட்ட வெளியில் விருந்து!

                      -தில்லைவேந்தன்

Ramamoorthy Ramachandran

unread,
Apr 22, 2025, 12:06:32 AM4/22/25
to santhav...@googlegroups.com

வான்மேவு மாவி மழைமேக மாகுங்கால்

தானே விருந்தாகித் தாழ்ந்தது-  தான்மேலே

கொட்டுந் துளியை விழுங்கியே முத்தாக்கல்

வெட்ட வெளியில் விருந்து!

- புலவர் இராமமூர்த்தி

On Mon, Apr 21, 2025, 20:37 NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:
நெட்டை மலைமேல் நெடுவானச் சீலையில்
கொட்டியது செக்கர்க் குழம்போசொல் - சட்டென
வட்டக் கதிரவன் மாலைவரை ஓவியம்
வெட்ட வெளியில் விருந்து!

                      -தில்லைவேந்தன்

On Tue, Apr 22, 2025 at 9:06 AM NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:
Typo

ஓலியம்— ஓவியம்

On Tue, Apr 22, 2025 at 9:01 AM NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:
நெட்டை மலைமேல் நெடுவானச் சீலையில்
கொட்டியது செக்கர்க் குழம்போசொல் - சட்டென
வட்டக் கதிரவன் மாலைவரை ஓலியம்
வெட்ட வெளியில் விருந்து!

                      -தில்லைவேந்தன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Arasi Palaniappan

unread,
Apr 22, 2025, 1:37:09 AM4/22/25
to சந்தவசந்தம்
பட்டப் பகலில் படுவெயிலில் நின்றுழைக்கும் 
கட்டுடலின் வெம்மையினைக் கண்டிரங்கிப் - பட்டென்று
கொட்டுகிற வானத்துக் கோடை மழைநீரே
வெட்ட வெளியில் விருந்து!

அரசி. பழனியப்பன் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

KKSR

unread,
Apr 22, 2025, 2:39:07 AM4/22/25
to santhav...@googlegroups.com
அடடா!

சுட்டபழம் என்றும் சுடாப்பழம் என்றுமன்று
பட்டறியச் சொன்னவன்தான் பாவைக்கு - எட்டநின்று
நட்டதனை ஔவையோ நாடறியச் செய்ததுதான்
வெட்ட வெளியில் விருந்து!

~ சுரேஜமீ

Sent from Mobile

Mahesh Krishnamurthy

unread,
Apr 22, 2025, 3:51:11 AM4/22/25
to santhav...@googlegroups.com

பட்டென விட்டது, பட்டெனப் பட்டது,
சுட்டிய உண்மை சுடரது, - சட்டென
வெட்டிய வேளை, வெளியும் வெளியிலா,

வெட்ட வெளியில் விருந்து

(வியாபகத்தைப் பார்த்து , நானழிந்து,   ஓன்றுமற எல்லாமாய் உணர்ந்த தருணம் பற்றி..)

Mahesh

My humble pranams to you Sir on your 83rd Birthday.. 

--

Subbaier Ramasami

unread,
Apr 22, 2025, 6:17:02 AM4/22/25
to santhav...@googlegroups.com
அருமை

On Mon, Apr 21, 2025 at 11:02 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

Subbaier Ramasami

unread,
Apr 22, 2025, 6:18:01 AM4/22/25
to santhav...@googlegroups.com
அருமை அருமை

Imayavaramban

unread,
Apr 22, 2025, 6:18:39 AM4/22/25
to சந்தவசந்தம்

நட்சத் திரங்கள் நடமிடல்போல் பூம்பொறிகள்

எட்டுத் திசையும் இறைந்தொளிர்க்கும் - கொட்டுமொலி

மட்டில் மகிழ்வளிக்கும் வானவெடி கண்களுக்கு

வெட்ட வெளியில் விருந்து. 

- இமயவரம்பன்

Subbaier Ramasami

unread,
Apr 22, 2025, 6:19:49 AM4/22/25
to santhav...@googlegroups.com
சிறப்பு

On Tue, Apr 22, 2025 at 1:37 AM Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:
பட்டப் பகலில் படுவெயிலில் நின்றுழைக்கும் 
கட்டுடலின் வெம்மையினைக் கண்டிரங்கிப் - பட்டென்று

NATARAJAN RAMASESHAN

unread,
Apr 22, 2025, 8:17:00 AM4/22/25
to santhav...@googlegroups.com

.

. வெட்ட வெளியில் விருந்து!-2

சொட்டும் மழைத்துளியில் சூரிய நல்லொளி

பட்டுச் சிதறிய பான்மையினால் - எட்டவான்

விட்டெழும் ஏழுநிற வில்லின் எழில்தோற்றம்

வெட்ட வெளியில் விருந்து 

—தில்லைவேந்தன்

NATARAJAN RAMASESHAN

unread,
Apr 22, 2025, 8:46:45 AM4/22/25
to santhav...@googlegroups.com
.              
வெட்ட வெளியில் விருந்து (3)

நட்டமிடும் எம்மானை நானந்த ஆகாயப்
பட்டு விரிப்பினில் பார்த்திருந்தேன் -- கிட்டியதோ
மட்டில்லா ஆனந்தம், மாந்திய கண்களுக்கோ

வெட்ட வெளியில் விருந்து!

Siva Siva

unread,
Apr 22, 2025, 9:31:45 AM4/22/25
to santhav...@googlegroups.com

2025-04-22

விருந்து

---------------

2)

ட்டுத் திசையின் இருளோட்டும் மின்விளக்குப்

பட்டப் பகல்போலப் பண்ணுகின்ற - பட்டணத்தை

விட்டுமிகு தூரத்தூர் மேவினால் அல்லில்வான்

வெட்ட வெளியில் விருந்து.

V. Subramanian

On Mon, Apr 21, 2025 at 11:02 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

Siva Siva

unread,
Apr 22, 2025, 10:13:30 AM4/22/25
to santhav...@googlegroups.com

2025-04-22

விருந்து

---------------

3)

மட்டற்ற இன்பந்தான் வண்டியிழு மாட்டுக்கன்(று)

ட்டப் படியுண்ண எம்மூரில் - எட்டடுக்குக்

கட்டடம் கட்டக் கருதிப் புதரெல்லாம்

வெட்ட வெளியில் விருந்து.

V. Subramanian

Ramamoorthy Ramachandran

unread,
Apr 22, 2025, 10:45:24 AM4/22/25
to santhav...@googlegroups.com

ஒருகாலை வானத்தில் ஊன்றி மறுகால்

திசையெட்டில் சுற்றித் திரிந்து - இசையோடே

கிட்டிய தாளம் கிளர்வான சங்கீதம்

வெட்ட வெளியில் விருந்து!

- புலவர் இராமமூர்த்தி

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Subbaier Ramasami

unread,
Apr 22, 2025, 10:49:14 AM4/22/25
to santhavasantham
மிக அருமையான பின்னூட்டங்கள். சில கற்பனை வளம் மிகுந்தவை. அடுத்த ஈற்றடி நாளை வரும்

இலந்தை

On Mon, Apr 21, 2025 at 3:32 PM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

Govindaraju Arunachalam

unread,
Apr 22, 2025, 6:02:09 PM4/22/25
to santhav...@googlegroups.com

கொட்டும் மழையினில் கோலக் குயிலிணை

நெட்டை மரத்தில் நெடுநேர மாயிருந்து

பட்டை கிளப்பும் பரவசப் பாட்டது

வெட்ட வெளியில் விருந்து.

-கவிஞர் கருவூர் இனியன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

--
rgds,
 
Dr. A. GOVINDARAJU,
Retired Principal - National Awardee,

RNachi

unread,
Apr 22, 2025, 7:45:24 PM4/22/25
to சந்தவசந்தம்
வெட்ட வெளியில் விருந்து

எட்டும் தொலைவில் எனக்குள் ஒளிர்ந்திருப்பான்
தொட்டுப் பணிந்து தொழுதேத்தி - இட்டமுடன்
கொட்டும் அருள்மழையில் கொஞ்சிக் களிஉண்பேன்

வெட்ட வெளியில் விருந்து

இராம நாச்சியப்பன்

On Tuesday, April 22, 2025 at 3:32:18 AM UTC+8 Subbaier Ramasami wrote:
ஈற்றடிதான் வெண்பாவுக்கே உயிரானது. அது நன்றாக அமைந்துவிட்டால் வெண்பாவுக்குப் பொலிவு வந்துவிடும்.
 
இதோ ஒரு ஈற்றடி

RNachi

unread,
Apr 22, 2025, 8:57:15 PM4/22/25
to சந்தவசந்தம்
வெட்ட வெளியில் விருந்து (2)

கொட்டி நிறையக் கொடுப்பார், இருப்பினும்
கெட்டது வேண்டின் கெடுத்தருள்வார் - இட்டடி
பட்டது போதுமெனப் பற்று(அ)றுப் பார்க்குண்டு

வெட்ட வெளியில் விருந்து

இராம நாச்சியப்பன்

Subbaier Ramasami

unread,
Apr 25, 2025, 7:50:01 AM4/25/25
to santhavasantham
அடுத்த ஈற்றடி.
சற்றே சிரமமானது

சொல்லுக்குள் இன்னொரு சொல்

இனிமை  பெருக  இயற்றி ஒருபா
புனைந்தே எழுத்தில் புகுத்த-  இனித்தேவை
நல்லபடி ஏட்டிலே நானெழுத முன்வார்த்தைச்
சொல்லுக்குள் இன்னொரு சொல்.

முன்வார்த்தை-   இனிமை

ஏட்டிலே எழுத அச்சொல்லிலுள்ள மை என்னும் சொல் தேவை

இலந்தை

On Mon, Apr 21, 2025 at 3:32 PM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

Mahesh Krishnamurthy

unread,
Apr 25, 2025, 8:10:05 AM4/25/25
to santhav...@googlegroups.com
குறிப்பாய் பொருளை குறித்தாள் எனக்கு
அறிந்தேன் அவளின் அறிக்கை - அறிவீரே
இல்லற வாழ்வை இனிதுணர்ந் தோரறிவர்

சொல்லுக்குள் இன்னொரு சொல்

Mahesh
( As a newbie amongst doyens, look forward to inputs , corrections or a token ok.. :)

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Subbaier Ramasami

unread,
Apr 25, 2025, 8:39:41 AM4/25/25
to santhav...@googlegroups.com
அருமை

On Tue, Apr 22, 2025 at 6:02 PM Govindaraju Arunachalam <agrp...@gmail.com> wrote:

கொட்டும் மழையினில் கோலக் குயிலிணை

நெட்டை மரத்தில் நெடுநேர மாயிருந்து

Siva Siva

unread,
Apr 25, 2025, 8:46:56 AM4/25/25
to santhav...@googlegroups.com

2025-04-25

ஈற்றடிக்கு வெண்பா - "சொல்லினுள் இன்னொரு சொல்"

---------------

கல்லினுள் இன்னொரு கல்லினைக் கண்டதுண்டோ

அல்லினுள் இன்னுமோர் அல்லுண்டோ - நல்லதமிழ்

வல்லனது வாக்கினில் வாய்த்திடக் காணலாம்

சொல்லினுள் இன்னொரு சொல்.

அல் - 1. இருள்; 2. சூரியன்; வெயில்;

வாக்கு - வாய்;

V. Subramanian

Mahesh Krishnamurthy

unread,
Apr 25, 2025, 9:25:32 AM4/25/25
to santhav...@googlegroups.com

அருமை

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Apr 25, 2025, 9:49:03 AM4/25/25
to santhav...@googlegroups.com

2025-04-25

ஈற்றடிக்கு வெண்பா - "சொல்லினுள் இன்னொரு சொல்"

---------------

2)

கல்லெனக் கல்லாரைக் காணில் உரைப்பவன்

இல்லையகம் என்பான் இருந்தாலும் - சொல்லமரில்

வெல்லவலான் நிந்தைமொழி வென்ற ஒருவார்த்தை

சொல்லினுள் ளின்னொரு சொல்.

கல்னக் கல்லாரைக் காணில் உரைப்பவன் - (கல் - 1. கற்றுக்கொள்; 2. பாறை);

இல்லைகம் என்பான் இருந்தாலும் - (இல்லை - 1. உண்டு என்பதன் எதிர்மறை; 2. வீட்டை); (அகம் - வீடு);

சொல்-மரில் வெல்ல-வலான் - (அமர் - போர்);

நிந்தைமொழி வென்ற ஒரு வார்த்தை சொல்லின் உள் இன்னொரு சொல் - (வெல்தல் - ஒத்தல்); (உள்ளுதல் - எண்ணுதல்);

V. Subramanian

Ram Ramakrishnan

unread,
Apr 25, 2025, 9:55:09 AM4/25/25
to santhav...@googlegroups.com

இதோ என்னுடைய கவிதை, தலைவரே.

அல்லலில் வேண்டிய ஔவைக்கு வேலவன்

ஒல்லையில் சொன்னசொல் ஒண்பொருளே- சொல்வல்லாள் 

தொல்லையை நீக்கிடச் சுட்டபழம் தந்தவன்

சொல்லுக்குள் இன்னொரு சொல்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Apr 25, 2025, at 09:25, Mahesh Krishnamurthy <mahes...@gmail.com> wrote:

NATARAJAN RAMASESHAN

unread,
Apr 25, 2025, 10:32:12 AM4/25/25
to santhav...@googlegroups.com
.                    சொல்லுக்குள் இன்னொரு சொல்!

இல்லுக்குள்  இன்பம் இருக்கும்; உமிமூடும்
நெல்லுக்குள் நம்மூண் நிறைந்திருக்கும்;- நல்லுலகில்
தொல்லைக்குள் ஒற்றைத் தொலைத்தால் இருக்கும்பார் 
சொல்லுக்குள் இன்னொரு சொல்.

குறிப்பு:
                           ஊண்- உணவு (அரிசி)

'தொல்லை' என்ற சொல்லுக்குள் இருக்கும் ஒற்றாகிய 'ல்' என்பதைத் தொலைத்துவிட்டால் (நீக்கி விட்டால்) 'தொலை' என்ற இன்னொரு சொல் இருப்பதைக் காணலாம்.

                                                           -- தில்லைவேந்தன்.   

....

Subbaier Ramasami

unread,
Apr 25, 2025, 10:45:13 AM4/25/25
to santhav...@googlegroups.com
அருமை

VETTAI ANANTHANARAYANAN

unread,
Apr 25, 2025, 11:52:51 AM4/25/25
to santhav...@googlegroups.com
சொல்லினுள் இன்னொரு சொல்.
 ஒரு சொல் என்ன சிவசிவாவின் கவிதையில்  சொல்லினுள் ஒரு சொல் என்ன ஒன்பது சொல் காணலாம்! :-))
அனந்த்

On Fri, Apr 25, 2025 at 8:46 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

Govindaraju Arunachalam

unread,
Apr 25, 2025, 1:48:42 PM4/25/25
to santhav...@googlegroups.com

இயற்கை இனிமை இருப்பதைக் கண்டேன்/

முயற்கா தனையதாய் மொய்தா மரையிதழ்/

நெல்லையில் ஆண்டாள் நெடுமாலை சூடுவாள்/

சொல்லுக்குள் இன்னொரு சொல்.

வெண்பாவின் கருத்துக்குத் தொடர்பில்லாத பன்னிரண்டு சொற்கள் சொல்லுக்குள் சொல்லாக அமையப்பெற்ற வெண்பா.

-கவிஞர் கருவூர் இனியன்

Siva Siva

unread,
Apr 25, 2025, 1:56:48 PM4/25/25
to santhav...@googlegroups.com
Thanks.

V. Subramanian

Dr. Pushpa Christy Canada

unread,
Apr 25, 2025, 2:54:22 PM4/25/25
to santhav...@googlegroups.com

வணக்கம் ஐயா, 
எனது சிறு முயற்சி
சொல்லுக்குள் இன்னொரு சொல்

பல்லில் கொதிப்புப் படர்ந்து அதுவாகத்
தொல்லையும் தந்து தொடங்கிய - வில்லங்கம்
நில்லா வரையிலே நிற்கவும் செய்வதில்

சொல்லுக்குள் இன்னொரு சொல்
புட்பா கிறிட்டி

KKSR

unread,
Apr 25, 2025, 4:07:08 PM4/25/25
to santhav...@googlegroups.com

பகலுண்டு பாரில் இரவுண்டு! நாளில்
துகளுண்டு! தூசியும் உண்டு! - நிகழும்
நகலுண்டு! நற்றமிழும் உண்டு! அதனைப்
புகலக்கல் லோடுகள்ளும் உண்டு!

~ சுரேஜமீ
26.04.2025 காலை 00:06

---------------------------------------------------------------------------------------------------
This email transmission is confidential and intended for the addressee only. It may contain privileged and confidential information. If you are not the person or organisation to whom it is addressed, you must not copy, distribute, or take any action in reliance upon it. If you have received this message in error, please notify the sender immediately.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Arasi Palaniappan

unread,
Apr 25, 2025, 9:31:12 PM4/25/25
to சந்தவசந்தம்
இல்லத்தில் பெற்றோர் இனிய வழிவந்த 
செல்லத்தின் நன்மழலை சேர்க்குமின்பம் - 
பல்முளைக்கும் 
நல்லதொரு போதில் நவில்வ(து) உளமயக்கும் 
சொல்லுக்குள் இன்னொரு சொல்.

அரசி. பழனியப்பன்

மழலையில் அது வேறு சொல்லும். அந்தச் சொல்லுக்குள் உள்ள சொல்லை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Mahesh Krishnamurthy

unread,
Apr 25, 2025, 9:59:49 PM4/25/25
to santhav...@googlegroups.com

KKSR

unread,
Apr 25, 2025, 11:51:27 PM4/25/25
to santhav...@googlegroups.com
ஈற்றடியை மறந்துவிட்டேனே…

பகலுண்டு பாரில் இரவுண்டு! நாளில்
துகளுண்டு! தூசியும் உண்டு! - நிகழும்
நகலுண்டு! நற்றமிழும் உண்டு! நயமாம்
சொல்லுக்குள் இன்னொரு சொல்!

~ சுரேஜமீ
26.04.2025 காலை 07:50

Sent from Mobile

Subbaier Ramasami

unread,
Apr 26, 2025, 9:18:57 AM4/26/25
to santhavasantham
இது சற்றே மாறுபட்டது.

ஒரு முறை போஜ ராஜன் அவரது அவைக்களப் புலவர்களுக்கு ஒரு ஈற்றடி கொடுத்தார்.

குளுகுக் குளுகுக் குளு. காளிதாஸர் மட்டும் பதில் கூறினார். நன்றாகப் ப்ழுத்திருந்த நாவல் மரத்திலிருந்த பழங்களைக் குரங்குகள் உலுக்க பழங்கள் குளத்தில் விழுந்த ஓசை குளுகுக்குளுகுக் குளு என்ற  பொருள் வரும் படி பாடினார்.

இதை ஒரு குறள் வெண்பாவாக நான் எழுதினேன்

குளத்திலே நாவல் குரங்குலுக்கும் ஓசை
குளுகுக் குளுகுக் குளு
அவருக்கு இன்னொரு அடியும் கொடுக்கப்பட்டது
டடண்டண் டடண்டன் டடண்

அவர் எதைப் பாடியிருப்பார்?

நான் சைதாப்பேட்டையில் குடியிருந்த போது அடிக்கடி கேட்கக்கூடிய ஓசை டக்கடி டக்கடி டக்

மண்ணுலகத்து நல்லோசைகள் என்ற என் கவிதையில் இதைப் பயன் படுத்தியிருக்கிறேன். அது என்னவாக இருக்கும்?

வெண்பாவாக எழுதவும்

இலந்தை

Subbaier Ramasami

unread,
Apr 26, 2025, 10:19:23 AM4/26/25
to santhavasantham
ஜம்பூ³ப²லாநி பக்வாநி பதந்தி விமலே ஜலே |
கபிகம்பிதஸா²கா²ப்⁴யோ கு³ளு கு³க்³கு³ளு கு³க்³கு³ளு ||
போஜ ராஜன் கொடுத்த ஈற்றடிக்குக் காளிதாசன் பாடியது.
அதன் தமிழ் வடிவம்
குரங்குலுக்க நாவல் குளம்வீழும் ஓசை
குளுகுக் குளுகுக் குளு

இமயவரம்பன்

unread,
Apr 26, 2025, 11:54:56 AM4/26/25
to santhav...@googlegroups.com
சொல்லுக்குள் இன்னொரு சொல்

தணிகைத் தலத்தின் தனிப்பெயர்க்குள் நெஞ்சம்

தணிவாய் எனும்பொருளைத் தாங்கித் - தணியென்னும்

வெல்லுஞ்சொல் நின்று மிளிருமே ஈதன்றோ

சொல்லுக்குள் இன்னொரு சொல்.

(பாரதியின் இந்தப் பாடல் வரிகளைத் தழுவி எழுதப்பட்டது : 

திருத்தணிகை யென்பதிங்கு பொறுமை யின்பேர்

செந்தமிழ்கண் டீர்பகுதி 'தணி' னுஞ்சொல்)

- இமயவரம்பன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Rajagopalan Soundararajan

unread,
Apr 26, 2025, 12:40:24 PM4/26/25
to சந்தவசந்தம்

இம்பர்வான் எல்லை இராமனையே பாடுகையில்

கம்பமா என்னும் களிறொன்றைச்- சும்மெனவே

நல்வண்ணம் தோற்ற நவிலும் கவியழகில்

சொல்லுக்குள் இன்னொரு சொல்.

ஸௌந்தர் 

Siva Siva

unread,
Apr 26, 2025, 3:28:26 PM4/26/25
to santhav...@googlegroups.com
/  டக்கடி டக்கடி டக் /

Sounds like the prayer / wish of a bowler (or the fielding team's captain) before starting to bowl to the incoming new batsman - in cricket.

V. Subramanian

On Sat, Apr 26, 2025 at 9:18 AM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
இது சற்றே மாறுபட்டது.
...

Ram Ramakrishnan

unread,
Apr 26, 2025, 3:41:59 PM4/26/25
to santhav...@googlegroups.com
இதோ என் முதல் ஒலிக்கான வெண்பா:

மடலவிழ ஈங்காரம் வண்டினோசை சீறிப்
படமெடுக்கும் நாகம்  பயமே- உடற்கைப்
படபட வாம்நெடி, பார்வீழ் மழையோ
டடண்டண் டடண்டண் டணண்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Apr 26, 2025, at 15:28, Siva Siva <naya...@gmail.com> wrote:

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
Apr 26, 2025, 4:11:59 PM4/26/25
to santhav...@googlegroups.com
இதோ இரண்டாம் ஈற்றடிக்கு வெண்பா

பக்கத்தில் பார்க்கையில் பாம்பொன்று சீறியது
அக்கரை தாண்டலில் ஐயமெழ - சிக்கலறத்
தக்கெனத் தாவும் தனிமரத்தில் வேங்கைதரும்
டக்கடி டக்கடி டக்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Apr 26, 2025, at 15:41, Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:

இதோ என் முதல் ஒலிக்கான வெண்பா:

Ram Ramakrishnan

unread,
Apr 26, 2025, 5:04:51 PM4/26/25
to santhav...@googlegroups.com
டடண்டண் டடண்டண் டடண்

என்று வாசிக்கவும்

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)
On Apr 26, 2025, at 15:41, Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:

இதோ என் முதல் ஒலிக்கான வெண்பா:

இமயவரம்பன்

unread,
Apr 26, 2025, 5:41:16 PM4/26/25
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
அருமை! அந்தகக்கவி வீரராகவ முதலியார் என்பார் எழுதிய சிலேடைக் கவிதை ஒன்றை நினைவுறுத்துகிறது.

https://thamizhppanimanram.blogspot.com/2019/09/blog-post-paanan-paadal-imbarvaan-ellai.html?m=1

யானையின் முப்பத்தெட்டுப் பெயர்களாகச் சேந்தன் திவாகரம் என்னும் நிகண்டு நூலில் கூறப்பட்டுள்ள சொற்களில் சிலவற்றை இக்கவிதையில் காணலாம்

யானையின் முப்பத்தெட்டுப் பெயர்களாவன: தும்பி, கடிவை, புகர்முகம், தோல், கரி, உம்பல், வயமா, பகடு, நால்வாய், கரிணி, குஞ்சரம், கயமே, களபம், மருண்மா, தந்தி, மாதங்கம், ஒருத்தல், களிறு, சிந்துரம் , கறையடி, எறும்பி, வழுவை, வாரணம், வேழம், வல்விலங்கு, நாகம், மதகயம், அத்தி, இபம், கும்பி, போதகம், உவாவே, தூங்கல், மாதிரம், மறமலி, கைம்மா, ஆம்பல், கோட்டுமா, புழைக்கை.

On Apr 26, 2025, at 12:40 PM, Rajagopalan Soundararajan <rsou...@gmail.com> wrote:

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Subbaier Ramasami

unread,
Apr 26, 2025, 10:31:18 PM4/26/25
to santhav...@googlegroups.com
இது தறி நெய்பவர்கள் கதிரை இடம் வலமாக ஓட்டும் போது எழும் ஓசை. தறி நெய்யும் ஓசை. சைதாப்பேட்டையில் அந்தக்காலத்தில் தரி நெய்பவர்கள் அதிகம். வீதிகளில் நூலைச் சாயம் ஏற்ரிக் காயவைப்பார்கள். பின் நூலைத் தரியில் ஏற்ரி ஓடம் என்ரு சொல்லப்படும் ஒரு கருவியை இடம் வலமாக ஓட்டுவார்கள். காலால் தரிக்கட்டையை ஒரு கணக்கில் மிதிப்பார்கள். அப்பொழுது எழும் ஓசைதான் டக்கட்டி டக்கட்டி டக்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Apr 26, 2025, 10:38:25 PM4/26/25
to santhav...@googlegroups.com

ஈற்றடிக்கு வெண்பா

2025-04-26

டக்கடி டக்கடி டக்

---------------

இக்கொடுங் காலத்தில் எந்தம் தமிழ்நாட்டில்

எக்குழந்தை வாத்துதனை என்னவெனில் - அக்கறையோ

டக்குழந்தைக் கன்னை அவள்அன்பால் சொல்வது

டக்கடி டக்கடி டக்

V. Subramanian

Subbaier Ramasami

unread,
Apr 27, 2025, 8:07:39 AM4/27/25
to santhav...@googlegroups.com
😅😅

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Govindaraju Arunachalam

unread,
Apr 27, 2025, 8:57:03 AM4/27/25
to santhav...@googlegroups.com

எக்காலும் நெய்வர் எமதூர் நெசவாளர்

அக்காலும் கையிரண்டும் ஆங்கே இயங்குமே

திக்கெட்டும் கேட்கும் தெருவில் எழுமோசை

டக்கட்டி டக்கட்டி டக்.

-கவிஞர் கருவூர் இனியன்

Arasi Palaniappan

unread,
Apr 27, 2025, 11:38:59 AM4/27/25
to சந்தவசந்தம்
பக்கத்து நாடுபிடி பண்டையநாள் வேந்தருக்கு
மிக்க விரைவுடைய வெல்புரவி - தக்கதுணை
அக்கறையாய் வென்றே 
அவைஓய்ந்து செல்லோசை
"டக்கடி டக்கடி டக் "

அரசி. பழனியப்பன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Govindaraju Arunachalam

unread,
Apr 27, 2025, 12:23:07 PM4/27/25
to santhav...@googlegroups.com
அவைஓய்ந்து செல்லோசை
"டக்கடி டக்கடி டக் "

அழகிய காட்சி வெண்பா!

rgds,
 
Dr. A. GOVINDARAJU,
Retired Principal - National Awardee,

Arasi Palaniappan

unread,
Apr 27, 2025, 12:34:56 PM4/27/25
to சந்தவசந்தம்
மிக்க நன்றி ஐயன்மீர்!

RNachi

unread,
Apr 27, 2025, 8:26:00 PM4/27/25
to சந்தவசந்தம்

சொல்லுக்குள் இன்னொரு சொல்

அல்லுக்குள் அல்போல அல்லைக்குள் இன்பிருக்கும்
மல்லிக்குள் மோக மணமிருக்கும் - நல்லாரும்
கல்லுக்குள் காணும் கடவுள்போல் நற்றமிழ்ச்
சொல்லுக்குள் இன்னொரு சொல்

இராம நாச்சியப்பன்

Arasi Palaniappan

unread,
Apr 27, 2025, 10:18:29 PM4/27/25
to சந்தவசந்தம்
அருமை நாச்சி!

On Mon, 28 Apr 2025, 5:56 am RNachi, <rna...@gmail.com> wrote:

சொல்லுக்குள் இன்னொரு சொல்

அல்லுக்குள் அல்போல அல்லைக்குள் இன்பிருக்கும்
மல்லிக்குள் மோக மணமிருக்கும் - நல்லாரும்
கல்லுக்குள் காணும் கடவுள்போல் நற்றமிழ்ச்
சொல்லுக்குள் இன்னொரு சொல்

இராம நாச்சியப்பன்

On Saturday, April 26, 2025 at 11:54:56 PM UTC+8 இமயவரம்பன் wrote:
சொல்லுக்குள் இன்னொரு சொல்

தணிகைத் தலத்தின் தனிப்பெயர்க்குள் நெஞ்சம்

தணிவாய் எனும்பொருளைத் தாங்கித் - தணியென்னும்

வெல்லுஞ்சொல் நின்று மிளிருமே ஈதன்றோ

சொல்லுக்குள் இன்னொரு சொல்.

(பாரதியின் இந்தப் பாடல் வரிகளைத் தழுவி எழுதப்பட்டது : 

திருத்தணிகை யென்பதிங்கு பொறுமை யின்பேர்

செந்தமிழ்கண் டீர்பகுதி 'தணி' னுஞ்சொல்)

- இமயவரம்பன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Subbaier Ramasami

unread,
Apr 28, 2025, 10:26:12 AM4/28/25
to santhav...@googlegroups.com
ARUMAI

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Dr. Pushpa Christy Canada

unread,
Apr 28, 2025, 12:31:45 PM4/28/25
to santhav...@googlegroups.com
ஐயா வணக்கம். 

படத்திலே மூழ்கினாள் பாசமான தங்கை
கடவுளை எண்ணும் கடமை - விடமாய்
உடலதன் போக்கில் உணர்வில் விழுந்திட
டக்கடி டக்கடி ட்டக் 
சோதரி

Dr. புட்பா கிறிட்டி

RNachi

unread,
Apr 29, 2025, 10:38:03 AM4/29/25
to சந்தவசந்தம்
நன்றி அண்ணா

Subbaier Ramasami

unread,
Apr 29, 2025, 1:55:03 PM4/29/25
to santhavasantham
ஈற்றடி

பத்திலே எத்தனை பல்

பல்லின்றி என்செருப்பு, பாதம் கடிக்கிறது

பல்லில்லாச் சீப்பால் பயனில்லை- புல்லுமின்

பத்திலே பல்லும் பரவசமே, கூராம்ரம்

பத்திலே எத்தனை பல்!

இலந்தை

Ram Ramakrishnan

unread,
Apr 29, 2025, 4:01:34 PM4/29/25
to santhav...@googlegroups.com
அடியேனின் வெண்பா இதோ, தலைவரே:

பல்லாண்டு பாடும் பரனடியார் பல்வேறாய்ப்

பல்கும் பெருக்கின் பரவசத்தார் - பல்பொருளில்

பல்நாக்கில் பட்டுப் பகைபேசல் பல்விதமே

பல்லிலே எத்தனை பல்

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Govindaraju Arunachalam

unread,
Apr 29, 2025, 4:12:43 PM4/29/25
to santhav...@googlegroups.com

என்னுடைய பங்கில் ஒரு வெண்பா

ஆண்டாள் விரும்பிய ஆம்பல் மலரிலே,

பூண்டிலே, மற்றுமென் பேரனுக்கு ஆண்டுகள்

பத்திலே, பல்லாடும் பாட்டிக்கு பாட்டனுக்கெண்

பத்திலே எத்தனை பல்.

விளக்கம்:

ஆம்பல் என்னும் சொல்லில் ஒரு பல். அடுத்தது பூண்டுப்பல். பேரனுக்கு பத்து வயதிலும், பாட்டன் பாட்டிக்கு எண்பது வயதிலும் எத்தனை பல் இருக்கும்?

-கவிஞர் கருவூர் இனியன்.

--

Siva Siva

unread,
Apr 29, 2025, 4:40:17 PM4/29/25
to santhav...@googlegroups.com

ஈற்றடிக்கு வெண்பா

2025-04-29

பத்திலே எத்தனை பல்

---------------

இத்தரையில் வந்தநாள் இல்லைமுன் வந்தனவ

நித்தியமே பின்முளைத்த நித்திலம் - ஒத்தனவும்

எத்திறம்முப் பத்திரண்டில் எண்ணிலெண்ப தோடொரு

பத்திலே எத்தனை பல்?

V. Subramanian

On Tue, Apr 29, 2025 at 1:55 PM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
ஈற்றடி

Siva Siva

unread,
Apr 29, 2025, 4:57:15 PM4/29/25
to santhav...@googlegroups.com

ஈற்றடிக்கு வெண்பா

2025-04-29

பத்திலே எத்தனை பல்

---------------

2)

வித்தகம் மிக்க வியாபாரி ஓர்தேங்காய்

கத்தியால் பல்வெட்டிக் கட்டிவிற்றான் - எத்தொடுபல்

பத்திலொன்றொ ளித்தான் பகரும் அவன்விற்கும்

பத்திலே எத்தனை பல்?

V. Subramanian

On Tue, Apr 29, 2025 at 4:40 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

Arasi Palaniappan

unread,
Apr 29, 2025, 11:38:31 PM4/29/25
to சந்தவசந்தம்
பல்லிளித்துப் பல்லிளித்துப்
பாடுபடும் ஏழைக்குப்
பல்லிழிவு நேருமிந்தப் பாருலகில்- பல்கூர்மை
குத்திக் கிழிக்கக் 
குனிந்(து)அவர்கள் 
ஏற்கும்துன்
பத்திலே எத்தனை பல்?!

அரசி. பழனியப்பன்

--

NATARAJAN RAMASESHAN

unread,
Apr 30, 2025, 12:02:15 AM4/30/25
to santhav...@googlegroups.com
.                        பத்திலே எத்தனை பல்

வேட்டைக்குச் சென்றவன்கை வேல்பட்டுச் சீறிய
காட்டுப் புலிக்கண் கனன்றது - தீட்டிய
கத்திபோல் மின்னும்பல் காட்டிப்பின் பாய்ந்த்துகோ
பத்திலே எத்தனை பல்!

                                              -- தில்லைவேந்தன்

NATARAJAN RAMASESHAN

unread,
Apr 30, 2025, 12:07:27 AM4/30/25
to santhav...@googlegroups.com
                               —தில்லைவேந்தன்

……

Mahesh Krishnamurthy

unread,
Apr 30, 2025, 12:09:55 AM4/30/25
to santhav...@googlegroups.com

Subbaier Ramasami

unread,
Apr 30, 2025, 7:17:51 AM4/30/25
to santhav...@googlegroups.com
பின்னூட்டமாக வந்த எல்லா வெண்பாக்களுமே மிக அருமை. அன்பர்களின் ஆர்வமும் திறமையும் அற்புதமானவை

இலந்தை

On Tue, Apr 29, 2025 at 4:01 PM Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:

Ramamoorthy Ramachandran

unread,
Apr 30, 2025, 1:04:50 PM4/30/25
to santhav...@googlegroups.com

சொத்தைப்பல் லென்று பிடுங்கினார்  பண்டுவர்நம்

சொத்தையே கூலியெனக் கேட்டிட்டார்- மெத்தவும்

செத்திட்ட பல்லென்று கொட்டினார் செத்தப்பல்

பத்திலே எத்தனை பல்!

- புலவர் இராமமூர்த்தி

Dr. Pushpa Christy Canada

unread,
Apr 30, 2025, 6:15:29 PM4/30/25
to santhav...@googlegroups.com
உத்தமர் வாழ்வில் உயர்வுடன் சென்றாலும்
பித்தராய் வாழ்ந்த பிதற்ரரும்   - புத்தியால்
வித்தகம் என்றே வியந்திடச் செய்யுமின்  
பத்திலே எத்தனை பல்
சோதரி 

Siva Siva

unread,
May 1, 2025, 10:15:18 AM5/1/25
to santhav...@googlegroups.com
"கைக்கு வளையும் கவின்" - 
என்ற ஈற்றடிக்கு ஒரு பாடல் எழுதினேன்.

V. Subramanian

Subbaier Ramasami

unread,
May 1, 2025, 10:58:17 AM5/1/25
to santhav...@googlegroups.com

மிக்கழ கான விநாயக ரின்தும்பிக்
கைக்கு வளையும் கவின்.

(பிள்ளையார் தும்பிக்கையில் வளை காண்க.   

மிக்கழ கான விநாயகரின்  நீண்டதொரு 
கைக்கு வளையும் கவின் .
 வளையம் கவின் என்றும் கொள்ளலாம்
இலந்தை

image.png

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
May 1, 2025, 11:01:17 AM5/1/25
to santhav...@googlegroups.com
Nice.

அகராதியில் கண்ட ஒரு பொருள்:
வளை - 5. Hole; துளை.

V. Subramanian

On Thu, May 1, 2025 at 10:58 AM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

மிக்கழ கான விநாயக ரின்தும்பிக்
கைக்கு வளையும் கவின்.

(பிள்ளையார் தும்பிக்கையில் வளை காண்க.   

மிக்கழ கான விநாயகரின்  நீண்டதொரு 
கைக்கு வளையும் கவின் .
 வளையம் கவின் என்றும் கொள்ளலாம்
இலந்தை

Arasi Palaniappan

unread,
May 1, 2025, 11:22:34 AM5/1/25
to சந்தவசந்தம்
காலுக்கு நூபுரம், கண்டத்தில் கண்டசரம்
மேலுக்கு வெண்பட்டு,மென்காதில் - டோலக்கு
மெய்க்(கு)இடையில் ஒட்டியா ணம், மேலும் பெண்களுக்குக்
கைக்கு வளையும் கவின்

கைக்குவளை என்றொரு மலரும் இருப்பதாகத் தெரிகிறது.

அரசி. பழனியப்பன்

Siva Siva

unread,
May 1, 2025, 11:29:41 AM5/1/25
to santhav...@googlegroups.com
சர்வாலங்கார பூஷிதை வெண்பா நன்று!

Ram Ramakrishnan

unread,
May 1, 2025, 11:32:13 AM5/1/25
to santhav...@googlegroups.com
மிக அருமை, திரு பழனியப்பன்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On May 1, 2025, at 11:29, Siva Siva <naya...@gmail.com> wrote:

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
May 1, 2025, 11:34:54 AM5/1/25
to santhav...@googlegroups.com

2025-05-01

ஈற்றடிக்கு வெண்பா - கைக்கு வளையும் கவின்

---------------

எக்கவியால் ஏட்டில் எழுதி இயம்பவொணும்

முக்கணன் ஓர்கணையால் முப்புரமும் - ஒக்கவெரி

புக்கழியப் போர்செய் பொருவில்லான் முன்தாட

கைக்கு வளையும் கவின்.

வி. சுப்பிரமணியன்

Arasi Palaniappan

unread,
May 1, 2025, 11:42:48 AM5/1/25
to சந்தவசந்தம்
அருமை 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Arasi Palaniappan

unread,
May 1, 2025, 11:43:03 AM5/1/25
to சந்தவசந்தம்
மிக்க நன்றி 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Arasi Palaniappan

unread,
May 1, 2025, 11:43:51 AM5/1/25
to சந்தவசந்தம்
மிக்க நன்றி திரு ராம்கிராம் அவர்களே!

NATARAJAN RAMASESHAN

unread,
May 1, 2025, 12:37:42 PM5/1/25
to santhav...@googlegroups.com
.                    கைக்கு வளையும் கவின்

அன்னைத் தமிழுக்(கு) அணிமுடிச்சிந் தாமணியும்
மின்னுசெவிக் குண்டலமும் மேவுமே- சின்னவிடை
துய்க்கமணி மேகலையும் தூயபரல் காற்சிலம்பும்
கைக்கு வளையும் கவின்

                                    -- தில்லைவேந்தன்.

Arasi Palaniappan

unread,
May 1, 2025, 12:40:23 PM5/1/25
to சந்தவசந்தம்
அருமை.

காதொளிரும் குண்டலமும் கைக்குவளை
         யாபதியும் கருணை மார்பின்
    மீதொளிர்சிந் தாமணியும் மெல்லிடையில்
         மேகலையும் சிலம்பார் இன்பப்
    போதொளிரும் திருவடியும் பொன்முடிசூ
         ளாமணியும் பொலியச் சூடி
    நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத்
         தாங்குதமிழ் நீடு வாழ்க

கவியோகி சுத்தானந்த பாரதியார் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
May 1, 2025, 12:51:02 PM5/1/25
to santhav...@googlegroups.com
Nice.

V. Subramanian

Subbaier Ramasami

unread,
May 1, 2025, 1:54:08 PM5/1/25
to santhav...@googlegroups.com
மிக அருமை

On Thu, May 1, 2025 at 11:22 AM Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBDCsuo7Kx2GkN8saKZBdUt-4o6GPSzYbnp9VBqYFoy61w%40mail.gmail.com.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
May 1, 2025, 2:49:40 PM5/1/25
to santhav...@googlegroups.com

மங்கை முகத்தில் மலர்கின்ற புன்னகையும்

செங்காந்தள் பூவன்னச் செவ்விதழும் -

கங்குல்போல்

மைக்கருப்பில் நீள்குழலும் மாந்தளிர் 

மேனியதில்

கைக்கு வளையும் கவின்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On May 1, 2025, at 13:54, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

Siva Siva

unread,
May 1, 2025, 3:20:01 PM5/1/25
to santhav...@googlegroups.com
Nice.

பூவன்னச் செவ்விதழும் /

I think.- ச் - will not come here.

V. Subramanian

Ram Ramakrishnan

unread,
May 1, 2025, 4:09:07 PM5/1/25
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. சிவசிவா. திருத்தம் செய்கிறேன்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On May 1, 2025, at 15:20, Siva Siva <naya...@gmail.com> wrote:

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
May 1, 2025, 6:07:40 PM5/1/25
to santhav...@googlegroups.com

2)

அக்கரவம் பூண்டானை ஆரணங்கோர் பாகமாம்

முக்கணனை மூவா முதல்வனைச் - சொக்கனை

மைக்கணினார் மார்கழியில் வாழ்த்திநீ ராடும்பொய்

கைக்கு வளையும் கவின்.

வி. சுப்பிரமணியன்

Subbaier Ramasami

unread,
May 1, 2025, 7:56:00 PM5/1/25
to santhav...@googlegroups.com
arumai

On Thu, May 1, 2025 at 6:07 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

2)

.com.

Govindaraju Arunachalam

unread,
May 1, 2025, 8:27:59 PM5/1/25
to santhav...@googlegroups.com

தம்பிக்கு நான்தந்த தங்கமணி யாரமும்

நம்பிக்கு நங்கைக்கு நாளும் துணிமணி

தைக்கும் மகளுக்குத் தாவணியும் என்னவள்

கைக்கு வளையும் கவின்.

-கவிஞர் கருவூர் இனியன்

On Thu, May 1, 2025 at 7:56 PM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
arumai

Arasi Palaniappan

unread,
May 1, 2025, 10:46:30 PM5/1/25
to சந்தவசந்தம்
மக்களுள்ளே இல்லார்க்கு மாற்றுப்பொன் கானல்நீர்
எக்காலும் சும்மா(டு) இவர்தலைக்(கு)ஓர் ஆபரணம்
மெய்க்(கு)அணியோ மேவும் வியர்வை; குழல்சூடும்
*கைக்கு வளையும் கவின்!

அரசி. பழனியப்பன்

*கைக்குவளைப் பூ 

Subbaier Ramasami

unread,
May 1, 2025, 10:47:35 PM5/1/25
to santhavasantham
கொட்டுக்குச் சாகும் கொசு

ஈற்றடிக்கு எழுதுக

Siva Siva

unread,
May 1, 2025, 10:55:22 PM5/1/25
to santhav...@googlegroups.com
Thanks.
Wrote one more. Will share it tomorrow
=======.

NATARAJAN RAMASESHAN

unread,
May 2, 2025, 12:32:44 AM5/2/25
to santhav...@googlegroups.com

.            கொட்டுக்குச் சாகும் கொசு!

திட்டமிட்டுத் தாக்குகின்ற தீவிர வாதியைப்போல்

வட்டமிட்டு மேனியின்மேல் வாய்வைத்துச் - சொட்டருந்தக்

கிட்டவரும் வேளையிலே கிண்ணென்ற வன்கையின்

கொட்டுக்குச் சாகும் கொசு!

                               —தில்லைவேந்தன்

Arasi Palaniappan

unread,
May 2, 2025, 1:06:48 AM5/2/25
to சந்தவசந்தம்
பட்டுக்குப் பூச்சி,வதை பட்டழியும் ; செய்யில்களைக் 
கொட்டுக்குப் புல்லும் குறைந்தொழியும் - வெட்டுக்(கு)ஆட்
பட்(டு)ஒழிவர் தீயவர்கள்; மாந்தர்கை *மின்மட்டைக்
கொட்டுக்குச் சாகும் கொசு!

* Mosquito mat

அரசி.பழனியப்பன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
It is loading more messages.
0 new messages