Subrahmanya Bhujangam - An english translation: http://greenmesg.org/stotras/murugan/subramanya_bhujangam.php
My translation of Subrahmanya Bhujangam (into Tamil - in verses in Bhujangam meter)
சுப்ரமண்ய புஜங்கம் - (தமிழாக்கம் - புஜங்கச் சந்தத்திலேயே)
---------------
(புஜங்க அமைப்பு - சந்தக் கலிவிருத்தம் - "தனானா தனானா தனானா தனானா";
இச்சந்தத்தைத் "தனாதான தானா தனாதான தானா" என்றும் நோக்கலாம். சந்தம் ஒன்றே)
1)
सदा बालरूपाऽपि विघ्नाद्रिहन्त्री
महादन्तिवक्त्राऽपि पञ्चास्यमान्या ।
विधीन्द्रादिमृग्या गणेशाभिधा मे
विधत्तां श्रियं काऽपि कल्याणमूर्तिः ॥१॥
Sadaa Baala-Ruupa-Api Vighna-Adri-Hantrii
Mahaa-Danti-Vaktra-Api Pan.caasya-Maanyaa |
Vidhi-Indra-[A]adi-Mrgyaa Gannesha-Abhidhaa Me
Vidhattaam Shriyam Kaa-Api Kalyaanna-Muurtih ||1||
Meaning:
1.1: (Salutations to Sri Ganesha) Who Always has a Child-like Form, but can Destroy Mountains of Obstacles,
1.2: Who has an Elephant Face with a Huge Tusk, but is respected by the Five-Faced Shiva,
1.3: Who is sought after by Vidhi (Brahma), Indra and Others; and Who is known as Ganesha; To me ...
1.4: ... please bestow Sri (Glory and Prosperity), O the Lord with an Auspicious Form.
நிதம்பா லனேமா தடைக்கல் பொடிப்பாய்
விதந்தைம் முகத்தான் விரும்போர் மருப்பா
பதம்தேடு வானோர் பராவும் கணேசா
இதம்செல்வ மீயாய் நலம்தங்கு மூர்த்தீ.
பதம் பிரித்து:
நிதம் பாலனே; மா தடைக்கல் பொடிப்பாய்;
விதந்து ஐம்முகத்தான் விரும்பு ஓர் மருப்பா;
பதம் தேடு வானோர் பராவும் கணேசா;
இதம் செல்வம் ஈயாய்; நலம் தங்கு மூர்த்தீ.
வி. சுப்பிரமணியன்
நிதம்பா லனேமா தடைக்கல் பொடிப்பாய்
விதந்தைம் முகத்தான் விரும்போர் மருப்பா
பதம்தேடு வானோர் பராவும் கணேசா
இதம்செல்வ மீயாய் நலம்தங்கு மூர்த்தீ.
வி. சுப்பிரமணியன்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCPHKHoMDMhVhm0vXJnft-CZg%3DJepdf7zu2B0QM0QMfCQQ%40mail.gmail.com.
--
2)
न जानामि शब्दं न जानामि चार्थं
न जानामि पद्यं न जानामि गद्यम् ।
चिदेका षडास्या हृदि द्योतते मे
मुखान्निःसरन्ते गिरश्चापि चित्रम् ॥२॥
Na Jaanaami Shabdam Na Jaanaami Ca-Artham
Na Jaanaami Padyam Na Jaanaami Gadyam |
Cid-Ekaa Ssaddaasyaa Hrdi Dyota-Te Me
Mukhaan-Nihsarante Girash-Ca-Api Citram ||2||
Meaning:
2.1: (Salutations to Sri Subramanya) I know neither Words, nor their Meanings O Lord,
2.2: And I know neither Poetry, nor Prose, but ...
2.3: ... within the Core of my Heart, I see the Conscious Effulgence of Your Six Faces, ...
2.4: ... which is making these various Words pour forth through my Mouth.
அறிந்தேனு மல்லேன் பதங்கள்பொ ருள்கள்
அறிந்தேனு மல்லேன் இயற்கூறி ரண்டும்
அறிந்தேன் முகங்கள் பிறங்காறெ னுள்ளே
சிறந்தூறு சொற்கள் வரும்வாயி னின்றே.
பதம் பிரித்து:
அறிந்தேனும் அல்லேன் பதங்கள் பொருள்கள்;
அறிந்தேனும் அல்லேன் இயல் கூறு இரண்டும்;
அறிந்தேன் முகங்கள் பிறங்கு ஆறு என் உள்ளே;
சிறந்து ஊறு சொற்கள் வரும் வாயினின்றே.
இயல் - இயற்றமிழ் - Literary Tamil, poetry or prose;
கூறு - கூறுபாடு; பகுதி;
வரும் வாயினின்று - வாயின் நின்று வரும் (என் வாயிலிருந்து வரும்) / வாயின் இன்று வரும் (என் வாயில் இன்று வரும்);
வி. சுப்பிரமணியன்
My translation of Subrahmanya Bhujangam (into Tamil - in verses in Bhujangam meter)
சுப்ரமண்ய புஜங்கம் - (தமிழாக்கம் - புஜங்கச் சந்தத்திலேயே)
---------------
1)
3)
मयूराधिरूढं महावाक्यगूढं
मनोहारिदेहं महच्चित्तगेहम् ।
महीदेवदेवं महावेदभावं
महादेवबालं भजे लोकपालम् ॥३॥
Mayuura-Adhiruuddham Mahaa-Vaakya-Guuddham
Manohaari-Deham Mahac-Citta-Geham |
Mahii-Deva-Devam Mahaa-Veda-Bhaavam
Mahaa-Deva-Baalam Bhaje Loka-Paalam ||3||
Meaning:
3.1: (Salutations to Sri Subramanya) Whose Form Mounted on a Peacock represents the deepest Secret of the Upanishadic Maha Vakyas,
3.2: Whose Heart-Stealing Beautiful Body Dwells within the Great Heart of Spiritual Consciousness,
3.3: Who is the Great God of the Devas and represents what the Great Vedas convey,
3.4: I Worship that Son of Mahadeva (another name of Shiva) Who is the Protector of the World.
பெருஞ்சொல்லு ணின்றாய் மயில்மீ தமர்ந்தாய்
அருஞ்சுந்த ரத்தாய் திகழ்ஞான சித்தா
பெருந்தேவ தேவா புகழ்வேத சாரா
இரும்பார் புரப்பாய் அரன்மைந்த போற்றி.
பதம் பிரித்து:
பெருஞ்சொல்லுள் நின்றாய்; மயில்மீது அமர்ந்தாய்;
அரும் சுந்தரத்தாய்; திகழ் ஞான சித்தா;
பெரும் தேவதேவா; புகழ் வேத சாரா;
இரும் பார் புரப்பாய்; அரன் மைந்த; போற்றி.
பெரும் சொல் - மகா வாக்கியம்;
இரும் பார் புரப்பாய் - பெரிய உலகைக் காப்பவனே;
வி. சுப்பிரமணியன்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCOiCZ%3DRv_ZTWW4nQ5ey9MxehcCahbzoYvgBGgUrAnDvJg%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCPHKHoMDMhVhm0vXJnft-CZg%3DJepdf7zu2B0QM0QMfCQQ%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCOiCZ%3DRv_ZTWW4nQ5ey9MxehcCahbzoYvgBGgUrAnDvJg%40mail.gmail.com.
நீங்கள் சொல்வது சிந்திக்கவேண்டிய ஒன்றே.
मनोहर a. pleasing, charming, attractive, fascinating, lovely
मनोहारिन् a. heart-stealing, captivating, agreeable, pleasing
मनोहारिदेहं - மனோஹாரி தேஹம்
- மனத்தை ஈர்க்கின்ற பேரழகுள்ள வடிவமுள்ளவர் - (தமிழில் உரை - ஸ்ரீ S.V. ராதாகிருஷ்ண சாஸ்திரி)
- having wonderfully attractive body - (translation by Ganesa Iyer)
என் எண்ணத்தில்: இவ்விடத்தில் சொல்லப்படும் கருத்து முருகனது அழகிய வடிவம்.
"அரும் சுந்தரத்தாய்" என்ற சொற்றொடரில் "ஆரழகன்" என்ற கருத்தைச் சொல்ல முயன்றேன்.
மூலத்தில் உள்ள கருத்தை இதே சந்தத்தில் இன்னும் சிறக்கச் சொல்ல எனக்கு இயலுமா என்று அறியேன்.
வி. சுப்பிரமணியன்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCP7FmwyY4%2BQz6s_YLdJMbFb90touX9kGSARhyi6d%2Bn%3DKQ%40mail.gmail.com.
"bhAvam" என்ற சொல்லுக்குப் பல பொருள்கள். அவற்றுள் சில:
भावः bhāvaḥ - 1 Being, existing, existence; -3 State, condition, state of being; -6 (a) True condition or state, truth, reality; -7 Innate property, disposition, nature, temperament; -9 Feeling, emotion, sentiment; -11 Purport, drift, gist, substance; -12 Meaning, intention, sense, import;
महावेदभावं - மஹாவேதபாவம் -
- பேரிலக்கியமாகிற வேதங்களின் உட்பொருள். (தாமே வேதமாக உருக்கொண்டவரும் கூட). - (தமிழில் உரை - ஸ்ரீ S.V. ராதாகிருஷ்ண சாஸ்திரி)
- O the quintessence of four vedas! - (translation by Ganesa Iyer)
சாரம் - 5. Essence; gist;
सारम् sāram - 1 Essence, essential part, quintessence; -4 Real truth, main point.
மேற்காண்பவற்றின் அடிப்படையில், இவ்விடத்தில் "புகழ்வேத சாரா" (புகழுடைய வேதங்களின் சாரமாக இருப்பவனே) - என்பது பொருந்தும் என்றே தோன்றுகின்றது.
வி. சுப்பிரமணியன்
பெருஞ்சொல்லு ணின்றாய் மயில்மீ தமர்ந்தாய்
அருஞ்சுந்த ரத்தாய் திகழ்ஞான சித்தா
திருந்தந்த ணாளர் புகழ்வேத சாரா
இரும்பார் புரப்பாய் அரன்மைந்த போற்றி.
பதம் பிரித்து:
பெருஞ்சொல்லுள் நின்றாய்; மயில்மீது அமர்ந்தாய்;
அரும் சுந்தரத்தாய்; திகழ் ஞான சித்தா;
திருந்து அந்தணாளர் புகழ் வேத சாரா;
இரும் பார் புரப்பாய்; அரன் மைந்த; போற்றி.
திருந்து அந்தணாளர் புகழ் வேத சாரா - செவ்விய அந்தணர்கள் புகழ் வேதங்களின் சாரமாக இருப்பவனே;
(திருந்துதல் - செவ்விதாதல்; மேன்மையாதல்); (அந்தணாளர் - மறையோர்);
(मही - மகி - mahī - பூமி); (महीदेव - பூசுரர் - மறையோர்);
V. Subramanian
4)
यदा संनिधानं गता मानवा मे
भवाम्भोधिपारं गतास्ते तदैव ।
इति व्यञ्जयन्सिन्धुतीरे य आस्ते
तमीडे पवित्रं पराशक्तिपुत्रम् ॥४॥
Yadaa Samnidhaanam Gataa Maanavaa Me
Bhava-Ambhodhi-Paaram Gataas-Te Tadai[a-E]va |
Iti Vyan.jayan-Sindhu-Tiire Ya Aaste
Tam-Iidde Pavitram Paraashakti-Putram ||4||
Meaning:
4.1: (Salutations to Sri Subramanya) When Persons come to My Presence (and completely surrender to me),
4.2: They have Indeed Crossed the Ocean of the Samsara,
4.3: Thus You seem to proclaim Manifesting on the Shore of the Sea (at Tiruchendur) and Dwelling there,
4.4: May I always Praise You, O the Ever Pure Son of Parashakti (Divine Mother).
அடைந்தேத்து மன்பர் துயர்ச்சாக ரத்தைக்
கடந்தா ரெனற்கே திரைத்தோத மார்க்கும்
இடஞ்செந்தி னின்றாய் பராசத்தி மைந்தா
கடம்பா மலங்கள் படாத்தூய போற்றி.
பதம் பிரித்து:
அடைந்து ஏத்தும் அன்பர் துயர்ச்சாகரத்தைக்
கடந்தார் எனற்கே திரைத்து ஓதம் ஆர்க்கும்
இடம் செந்தில் நின்றாய்; பராசத்தி மைந்தா;
கடம்பா; மலங்கள் படாத் தூய; போற்றி.
கடம்பா - கடம்பனே; (கடம்பன் - கடப்பமலர் மாலை அணிந்தவன்); (Note: This is not mentioned in this verse in the Sanskrit original).
வி. சுப்பிரமணியன்
5)
यथाब्धेस्तरङ्गा लयं यन्ति तुङ्गाः
तथैवापदः सन्निधौ सेवतां मे ।
इतीवोर्मिपंक्तीर्नृणां दर्शयन्तं
सदा भावये हृत्सरोजे गुहं तम् ॥५॥
Yatha-Abdhes-Taranggaa Layam Yanti Tunggaah
Tathai[aa-E]va-[A]apadah Sannidhau Sevataam Me |
Iti-Ivo[a-Uu]rmi-Pangktiir-Nrnnaam Darshayantam
Sadaa Bhaavaye Hrt-Saroje Guham Tam ||5||
Meaning:
5.1: (Salutations to Sri Subramanya) Like the Huge Waves of the Sea Disappear within the Sea, ...
5.2: ... similarly, the Calamities of My Devotees will Disappear Who come to My Presence where I Dwell (and completely surrender to me),
5.3: Thus You seem to proclaim showing the Rows of Waves on the Sea (to the Devotees),
5.4: May I always Meditate on You, O Guha (another name of Subramanya) within the Lotus of my Heart.
இரைக்கின்ற ஓதம் கரைப்பட்டொ டுங்கும்
உரைத்துப் பணிந்தார் இடுக்கண்ணு மற்றே
திரைச்சிந்து காட்டித் தெரிக்கும் குகாநின்
மரைத்தா ளிரண்டும் தரித்தேன் மனத்தே.
பதம் பிரித்து:
"இரைக்கின்ற ஓதம் கரைப்பட்டு ஒடுங்கும்;
உரைத்துப் பணிந்தார் இடுக்கண்ணும் அற்றே";
திரைச்சிந்து காட்டித் தெரிக்கும் குகா, நின்
மரைத்தாள் இரண்டும் தரித்தேன் மனத்தே.
ஓதம் - அலை;
ஒடுங்குதல் - அடங்குதல்; அமைதல்;
அற்று - அத்தன்மையது; அது போன்றது;
திரை - அலை;
சிந்து - கடல்;
தெரித்தல் - வெளிப்படுத்துதல்; சொல்லுதல்; விளக்குதல்;
மரை - தாமரை - முதற்குறை விகாரம்;
தரித்தல் - மறவாது உள்ளத்துக்கொள்ளுதல்;
வி. சுப்பிரமணியன்
4)
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCMNfKzrpp8uDDAxFxaJqeniE2LpLrJGZmtT4-5mstHsXw%40mail.gmail.com.
மிக மிக அருமை. தொகுத்துப் பாராயணம் செய்வோம்!ஓம்! ஸம்ஸ்க்ருதமும் தமிழும் இணைத்துப் பாராயணம் செய்தால்மூலத்தின் சாரம் புரியும்- புலவர் இராமமூர்த்தி
On Sat, 15 Jan 2022 at 19:46, Siva Siva <naya...@gmail.com> wrote:
5)
இரைக்கின்ற ஓதம் கரைப்பட்டொ டுங்கும்
6)
गिरौ मन्निवासे नरा येऽधिरूढाः
तदा पर्वते राजते तेऽधिरूढाः ।
इतीव ब्रुवन्गन्धशैलाधिरूढाः
स देवो मुदे मे सदा षण्मुखोऽस्तु ॥६॥
Girau Man-Nivaase Naraa Ye-Adhiruuddhaah
Tadaa Parvate Raajate Te-Adhiruuddhaah |
Iti-Iva Bruvan-Gandhashaila-Adhiruuddhaah
Sa Devo Mude Me Sadaa Ssannmukho-Astu ||6||
Meaning:
6.1: (Salutations to Sri Subramanya) Those Persons who Ascend the Hills of My Abode (and completely surrender to me), ...
6.2: ... they thereby Ascend the Great Silvery Mountain which leads to the path of Liberation (referring to Mount Kailash which appears Silvery due to snow),
6.3: Thus You seem to proclaim Abiding on the Sugandha Hill,
6.4: Let me always Rejoice in the contemplation of You, O my Lord Shanmukha.
பொருப்பேறி அன்பால் பதம்போற்று தொண்டர்
கருப்பாறி வெள்ளிச் சிலம்பேறி நீங்கா
திருப்பார்க ளென்றே மணக்குன்ற மர்ந்தாய்
விருப்பானி னைக்கும் சுகம்சண்மு காதா.
பதம் பிரித்து:
"பொருப்பு ஏறி அன்பால் பதம் போற்று தொண்டர்
கருப் பாறி வெள்ளிச் சிலம்பு ஏறி நீங்காது
இருப்பார்கள்" என்றே மணக்-குன்று அமர்ந்தாய்;
விருப்பால் நினைக்கும் சுகம், சண்முகா, தா.
பொருப்பு - மலை;
கரு - பிறவி;
பாறுதல் - அழிதல்;
சிலம்பு - மலை;
விருப்பால் நினைக்கும் சுகம் சண்முகா தா - 1. ஷண்முகனே, உன்னை விரும்பித் தியானிக்கும் இன்பத்தை அருள்வாயாக. 2. ஷண்முகனே, என் மனம் விரும்புகின்ற இன்பத்தை அருள்க;
(சம்பந்தர் தேவாரம் - 1.80.4 - "இறைவன் கழலேத்தும் இன்பம் இன்பமே");
வி. சுப்பிரமணியன்
5)
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCM8u-AbhxpKenzz0v_TMJy6VK4aiZpRavcP9uENFR7_4A%40mail.gmail.com.
7)
महाम्भोधितीरे महापापचोरे
मुनीन्द्रानुकूले सुगन्धाख्यशैले ।
गुहायां वसन्तं स्वभासा लसन्तं
जनार्ति हरन्तं श्रयामो गुहं तम् ॥७॥
Mahaa-[A]mbhodhi-Tiire Mahaa-Paapa-Core
Muni-Indra-Anukuule Sugandha-[A]akhya-Shaile |
Guhaayaam Vasantam Sva-Bhaasaa Lasantam
Jana-[A]arti Harantam Shrayaamo Guham Tam ||7||
Meaning:
7.1: (Salutations to Sri Subramanya) On the Shores of the Great Sea, the Place which Steals away the Great Sins of the People, ...
7.2: ... the Place which is very Favourable for Munis (Saints or Ascetics) to perform Sadhana, the Place which is known as the Sugandha Hill, ...
7.3: ... the Place where Guha Abides in His Own Splendour, ...
7.4: ... and Removes the Distress of the People; I Remember that Place and take Refuge in You, O Guha.
அகன்றார்க்கு மாழிக் கரைப்பாவ மைந்தும்
அகழ்ந்துய்தி நல்கும் தவத்தோர்க்கு நல்ல
சுகந்தப் பொருப்பிற் குகைக்கண் திகழ்ந்தாய்
புகழ்ந்தார் இடுக்கண் துடைப்பாய் அடைந்தேன்.
பதம் பிரித்து:
அகன்று ஆர்க்கும் ஆழிக்கரைப் பாவம் ஐந்தும்
அகழ்ந்து உய்தி நல்கும், தவத்தோர்க்கு நல்ல
சுகந்தப் பொருப்பில் குகைக்கண் திகழ்ந்தாய்;
புகழ்ந்தார் இடுக்கண் துடைப்பாய்; அடைந்தேன்.
அகழ்தல் - அடியோடு களைதல்;
நல்ல - நன்மையான;
திகழ்தல் - விளங்குதல்; ஒளிவீசுதல்;
துடைத்தல் - நீக்குதல்; அழித்தல்;
அடைதல் - சரண்புகுதல்;
வி. சுப்பிரமணியன்
6)
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCN0OSwJWk6scZv9Nk4zvsof%3DDiari_qa4TskUpke9kFgw%40mail.gmail.com.
சிந்திக்கவைக்கும் வினா.
அகன்றார் = அறிவுடையாரையும் குறிக்குமன்றோ? (ஆனால், இப்பாடலில் அப்பொருளில் இவ்விடத்தில் வந்திலது);
http://www.ulakaththamizh.in/uploads/book/pdf/Era_Elankumaranar_Tamilvalam_36.pdf
பக்கம் 35:

அகன்று
ஆர்க்கும் ஆழிக்கரைப் பாவம்
ஐந்தும் அகழ்ந்து உய்தி
நல்கும் - பரந்து,
ஒலிக்கின்ற
கடலின் கரையில் பஞ்சமாபாதகங்களை
அடியோடு அழித்து உய்வைத்
தருகின்ற;
(அகல்தல் - பரத்தல்); (ஆர்த்தல் - ஒலித்தல்); (பாவம் ஐந்து - பஞ்சமாபாதகம்); (அகழ்தல் - அடியோடு களைதல்);
கரைப் பாவம் - ஏழாம் வேற்றுமைத் தொகை - கரையின்கண்; கரையில்;
அ.கி. பரந்தாமனார் கூறுவது:
12. ஏழாம் வேற்றுமைத் தொகையில் வரும் வலி மிகும்.
காட்டிடை+ சென்றான் = காட்டிடைச்சென்றான்.
குடி + பிறந்தார் = குடிப்பிறந்தார்.
அகல்தல் = "நீங்குதல்" என்று பொருள் கொண்டால்
அகன்றார்க்கும் - "நன்னெறியிலிருந்து நீங்கிப் பல பாவங்கள் செய்தவர்களுக்கும்";
பஞ்சமாபாதகங்கள் செய்தவர்களும் தன் திருவடியை அடைந்து தொழுதால் அவர்களுக்கும் அவன் நலம் செய்வான்;
சம்பந்தர் தேவாரம் - 3.49.7
நரகம் ஏழ்புக நாடின ராயினும்
உரைசெய் வாயின ராயின் உருத்திரர்
விரவியே புகுவித்திடும் என்பரால்
வரதன் நாமம் நமச்சிவாயவே.
வி.
சுப்பிரமணியன்
அகன்றார்க்கு மாழிக் கரைப்பாவ மைந்தும்-அகன்றார்க்கும் என்றால் முருகன் மீது பக்தியின்றி விலகினோர் என்று பொருள் படும்கரைப் பாவமைந்தும் என்றால் கரையின் ஐந்து பாவங்களும் என்று பொருள் படும். கரைக்கு என்ன ஐந்து பாவங்கள் வந்தன.
இலந்தை
On Mon, Jan 17, 2022 at 7:11 AM Siva Siva <naya...@gmail.com> wrote:
7)
சிந்திக்கவைக்கும் வினா.
அகன்றார் = அறிவுடையாரையும் குறிக்குமன்றோ? (ஆனால், இப்பாடலில் அப்பொருளில் இவ்விடத்தில் வந்திலது);
http://www.ulakaththamizh.in/uploads/book/pdf/Era_Elankumaranar_Tamilvalam_36.pdf
பக்கம் 35:
அகன்று ஆர்க்கும் ஆழிக்கரைப் பாவம் ஐந்தும் அகழ்ந்து உய்தி நல்கும் - பரந்து, ஒலிக்கின்ற கடலின் கரையில் பஞ்சமாபாதகங்களை அடியோடு அழித்து உய்வைத் தருகின்ற;
(அகல்தல் - பரத்தல்); (ஆர்த்தல் - ஒலித்தல்); (பாவம் ஐந்து - பஞ்சமாபாதகம்); (அகழ்தல் - அடியோடு களைதல்);
8)
लसत्स्वर्णगेहे नृणां कामदोहे
सुमस्तोम सञ्छन्नमाणिक्यमञ्चे।
समुद्यत्सहस्रार्कतुल्य प्रकाशं
सदा भावये कार्तिकेयं सुरेशम्॥
லஸத் ஸ்வர்ணகேஹே ந்ருணாம் காமதோஹே
ஸுமஸ்தோம ஸஞ்சந்நமாணிக்ய மஞ்சே |
ஸமுத்யத் ஸஹஸ்ரார்க துல்ய ப்ரகாஶம்
ஸதா பாவயே கார்திகேயம் ஸுரேஶம் ||
"ஒளிமிக்க தங்கமாளிகையில், மக்களின் விருப்பங்களைப் பொழிவதும் பூக்களின் குவியலால் மறைந்துள்ளதுமான மாணிக்கப்பரல்களாலான கட்டிலின் மீதமர்ந்துள்ள வரும் உதிக்கின்ற ஆயிரக்கணக்கான சூரியர் ஒளி போன்ற பேரொளியால் விளங்குபவரும் கிருத்திகா தேவிகளின் தவப்புதல்வனும் தேவர்களின் ஈசனுமான பெருமானை எப்போதும் உள்ளத்தில் உணர்கிறேன்."
அருஞ்சொன்ன இல்லில் மலர்மின்னு கற்கள்
பொருந்தாச னத்தாய் கதிர்நூறு பத்தார்
பெருந்தேச தேவர் பிரான்வேண்ட எல்லாம்
தரும்கார்த்தி கேயா மறப்பின்றி ஓர்வேன்.
பதம் பிரித்து:
அரும் சொன்ன இல்லில் மலர் மின்னு கற்கள்
பொருந்து ஆசனத்தாய்; கதிர் நூறு பத்து ஆர்
பெரும் தேச; தேவர் பிரான்; வேண்ட எல்லாம்
தரும் கார்த்திகேயா; மறப்பு இன்றி ஓர்வேன்.
சொன்னம் - சுவர்ணம்; தங்கம்;
கல் - இரத்தினம்;
(मञ्चः mañcaḥ - 1 A couch, bedstead, sofa, bed. -2 A raised seat, dais, a platform resting on columns, a seat of honour or state, throne);
நூறு பத்து - ஆயிரம்;
ஆர்தல் - ஒத்தல்;
தேச - தேசனே; தேசு - ஒளி;
பிரான் - பிரானே என்ற விளி - தலைவனே;
மறப்பு - மறத்தல்;
ஓர்தல் - எண்ணுதல்;
V. Subramanian
7)
Yes."அருஞ்சொன்ன இல்லில் மலர்மின்னு கற்கள் பொருந்தாச னத்தாய்"
வீட்டுக்கு இடைக்கழிக்கே விடைகாட்டும் அம்மெய்விளக்கே
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCM6FSaU70hbwoVF2wfbRK%2BMMveVJ%3DXqZedrn-t_B0AVxQ%40mail.gmail.com.
--
ஆடுகாட்டி வேங்கையை அகப்படுத்து மாறுபோல்
மாடுகாட்டி என்னைநீ மதிமயக்கல் ஆகுமோ,
கோடுகாட்டி யானையைக் கொன்றுரித்த கொற்றவா,
வீடுகாட்டி என்னைநீ வெளிப்படுத்த வேணுமே.
--
9)
रणद्धंसके मञ्जुलेऽत्यन्त शोणे
मनोहारि लावण्यपीयूषपूर्णे।
मनष्षट्पदो मे भवक्लेशतप्तः
सदा मोदतां स्कन्द ते पादपद्मे ॥
ரணத்தம்ஸகே மஞ்ஜுலேத்யந்த ஶோணே
மநோஹாரி லாவண்ய பீயூஷபூர்ணே |
மநஷ்ஷட்பதோ மே பவக்லேஶதப்த:
ஸதா மோததாம் ஸ்கந்த தே பாதபத்மே ||
"கந்த பெருமானே ! ஒலியால் கொஞ்சுகிற சதங்கைள் பூண்டதும் மிகவும் சிவந்ததும் மனத்தைக் கவர்கிற அழகமுதம் நிரம்பியதுமான உன் திருவடியில், பிறவித்துயரால் வாடிய என் மனமாகிய வண்டு எப்போதும் (தேன் பருகிக்) களிப்படையட்டும்."
ஒலிக்கின்ற தண்டைத் தளிர்ச்செய்ய பாதம்
பிலிற்றும் பெருந்தேன் இழுக்கும் தொடக்கும்
வலிக்கத் தவித்தேன் மனத்தும்பி உன்றன்
மலர்த்தாள் இரண்டிற் களித்துய்ய நல்காய்.
பதம் பிரித்து:
ஒலிக்கின்ற தண்டைத் தளிர்ச் செய்ய பாதம்
பிலிற்றும் பெரும் தேன்; இழுக்கும், தொடக்கும்
வலிக்கத் தவித்தேன்; மனத்தும்பி உன்றன்
மலர்த்தாள் இரண்டில் களித்து உய்ய நல்காய்.
செய்ய - சிவந்த;
பிலிற்றுதல் - சொரிதல்; வெளிவிடுதல்;
இழுத்தல் - ஈர்த்தல்; கவர்தல்;
இழுக்கு - குற்றம்; தீமை;
தொடக்கு - கட்டு; பாசம்; பற்று;
வலித்தல் - இழுத்தல்; நோவுண்டாதல்;
தும்பி - வண்டு; (ஷட்பத: - षट्पदः - a bee);
V. Subramanian
8)
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCNwa-SUx-m8cAVxTt5BgJXVQCjXB9BqphvSXZ7e59gqkQ%40mail.gmail.com.
வடமொழி மூலப் பாடல்களுக்குத் தமிழில் உரை - ஸ்ரீ S.V. ராதாகிருஷ்ண சாஸ்திரி
http://svradhakrishnasastri.in/wp-content/uploads/2015/11/pdf/Subrahmanya%20Bujangam.pdf
In the Tamil verse I wrote - phrase மலர்த்தாள் covers that description as well. (So I think).
மனத்தும்பி உன்றன் மலர்த்தாள் இரண்டில் களித்து உய்ய நல்காய் - என் மனமாகிய வண்டு உன் மலர் போன்ற திருவடிகள் இரண்டில் இன்புற்று உய்யுமாறு அருள்வாயாக!
On Wed, Jan 19, 2022 at 8:22 AM Siva Siva <naya...@gmail.com> wrote:
>மநஷ்ஷட்பதோ மே பவக்லேஶதப்த:
>ஸதா மோததாம் ஸ்கந்த தே பாதபத்மே |
இப்பாடலில், மனத்தைப் பிறப்பிறப்பு தரும் வெப்பத்தால் (ஸம்ஸார தாபத்தால்) வருந்தும் வண்டாகவும் முருகன் திருவடியை அழகாகிய அமுதம் (லாவண்ய பீயூஷம்)
நிறைந்த தாமரையாகவும் (பாத பத்மே) சங்கரர் வருணிக்கிறார். உங்கள் பாடலில் தாமரை என்னும் உவமை விட்டுப்போனது.
பிரம்மஸ்ரீ அனந்தராம தீக்ஷிதர் உரை: ”சப்திக்கின்ற பாதஸரத்தை உடையதும், அழகுவாய்ந்ததும், மிகச்சிவந்ததும், மனத்தைக் கவரும் அழகாகிய அமிருதத்தினால்
நிரம்பியதுமான தங்களுடைய சரணகமலத்தில் ஸம்ஸார தாபத்தால் தபிக்கும் எனது மனமாகிய வண்டானது எப்பொழுதும் ரமிக்கட்டும்.”
அனந்த்

> மலர்த்தாள் இரண்டில் - இரண்டு என்ற அடைமொழி மூலத்திலும், நீங்கள் சுட்டிய உரையிலும் இன்று.மேலும், பாதபத்மே என்பது பாதத் தாமரையில் என்று பொருள் தரும். பெருமளவில் பயன்படுத்தப்படும் தாமரை-வண்டு உவமையைச் சங்கரர் இங்குக் கையாளுகிறார். பாதத் தாமரையில் உள்ள தேனை அமுதமாகக் குறிப்பிட்டு, அது (பிறப்பு-இறப்பு என்னும் வெப்பத்தைத் தணிப்பது மட்டுமன்றி, சாகாநிலையையையும் அளிக்கும் என்பதைக் காட்டுகிறார்.அனந்த்
ஒலிக்கின்ற தண்டைத் தளிர்ச் செய்ய பாதம் பிலிற்றும் பெரும் தேன் - ஒலிக்கின்ற தண்டையை அணிந்த, தளிர் போன்ற மென்மையான, சிவந்த பாதங்கள் சிறந்த தேனைச் சொரியும்;
இழுக்கும் - மனத்தைக் கவரும்; (இழுத்தல் - ஈர்த்தல்; கவர்தல்);
இழுக்கும் தொடக்கும் வலிக்கத் தவித்தேன் - குற்றங்களும் பந்தங்களும் என்னை இழுக்க வாடுகின்றேன்; குற்றங்களும் பந்தங்களும் என்னை இழுத்து எனக்குத் துன்பத்தைத் தர, வாடுகின்றேன்; ("இழுக்கும்" என்பதை இவ்வாறு இருமுறை இயைத்துப் பொருள்கொள்ளல் ஆம்; - தீவகம் என்ற அணி);
V. Subramanian
Subrahmanya Bhujangam - (Word-by-word translation and detailed explanation - in Tamil) - by Thedhiyur Subramania Sathrigal:
Subrahmanya Bhujangam Thethiyur Subramania Sastrigal: https://archive.org/details/subrahmanyabhujangamthethiyursubramaniasastrigal/mode/2up
சுப்ரஹ்மண்ய புஜங்கம் - தமிழ் உரை - S.V. ராதாகிருஷ்ண சாஸ்திரி: http://svradhakrishnasastri.in/wp-content/uploads/2015/11/pdf/Subrahmanya%20Bujangam.pdf
....மலர் என்பது பூவிற்கான பொதுச்சொல். ...3) மலர் malar (p. 3102)மலர்³ malar , n. < மலர்¹-. [K. malar.] 1. Full-blown flower, blossom; பூ. 2. Lotus; தாமரை. மலர்மிசை யேகினான் (குறள், 3). 3. A great number. See பதுமம், 8. ஆயிர மலருடை யாழி மாப்படை (கம்பரா. நிகும்ப. 57). 4. Nut or head, as of a spike; knob, as of a scimitar; ஆயுத முதலியவற்றின் மேற்குமிழ். குற்றுடைவாள் ஆசுங் கண்டமும் மலரும் பொன்கட்டிற்று (S. I. I. ii, 211). 5. (Pros.) A formula of a foot of one niraioccurring as the last cīr in the last line of a veṇpā; வெண்பாவின் இறுதிச் சீர் வாய்பாடு களுள் ஒன்று. (காரிகை, செய். 5, உரை.)1) மலரோன் malarōṉ (p. 3103)மலரோன் malarōṉ , n. < id. Brahmā, as seated on a lotus; [தாமரையிலிருப்பவன்] பிரமன். மலரோ னெடுமா லறியாமனின்ற வரும்பெருமான் (திருவாச. 24, 3)1) மலர்மகள் malarmakaḷ (p. 3103)மலர்மகள் malar-makaḷ , n. < id. +. Lakṣmī, as seated on a lotus; இலக்குமி. மலர் மகள் விரும்புநம் மரும்பெற லடிகள் (திவ். திருவாய். 1, 3, 1).
மலர் என்பது பூவிற்கான பொதுச்சொல். சைவசித்தாந்தக் கழக அகராதியிலும், கொலோன் அகராதியிலும் (https://www.sanskrit-lexicon.uni-koeln.de/cgi-bin/tamil/recherche) மலருக்குத் தாமரை என்ற பொருள் தரப்படவில்லை.சிவசிவா மேற்கொண்டிருக்கும் திருப்பணி யாப்பிலக்கணக் கண்ணோட்டத்தில் மிகவும் கடுமையானது. அவ்வகையில், யாப்புக்கேற்ற அவரது சொல் தேர்வு போற்றற்குரியது.மேலதிகமாக, மூலத்தில், முருகனின் பாதத்தாமரை, பவம் (பிறப்பு) என்னும் வெப்பத்தைத் தனது தண்மையாலும், அழகெனும் அமுதத்தாலும் போக்கும் என்று குறிப்பிடுகிறார். அமிர்தம் என்ற சொல்லுக்கு மரணமில்லாமை (அ+ம்ருத:) என்று பொருள். எனவே அது மீள்பிறப்பை அழிக்கும். இந்தக் கருத்தை உய்ய நல்காய் என்னும் சொல்லால் சிவசிவா தெளிவாக்குகிறார்.அனந்த்.On Wed, Jan 19, 2022 at 9:38 PM rathnam <irathin...@gmail.com> wrote:மலர் என்றாலும், பூ என்றாலும் தாமரை என்ற பொருள் தமிழில் உண்டே.. ஐயா.
நன்றி.மலர் என்பது எவ்வகைப் பூவையும் குறிப்பதனால் அது பொதுச்சொல் (காட்டாக, பூசைக்கு மலர் கொய்தல்.). அது சமய இலக்கியத்தில் தாமரையைக் குறிப்பதை context-dependent meaning ஆகும். அவ்வகையில் இங்கு மலர் என்பது தாமரை என்று எடுத்துக் கொள்வது சரியாகும்.அனந்த்
9)
இப்பாடலையும் இந்த உரையாடலையும் இன்னும் சிந்தித்தபின் இப்படி மாற்றினால் இன்னும் சிறக்கும் என்று தோன்றுகின்றது!
ஒலிக்கின்ற தண்டைத் தளிர்ச்செய்ய பாதம்
பிலிற்றும் பெருந்தேன் இழுக்கும் தொடக்கும்
வலிக்கத் தவித்தேன் மனத்தும்பி உன்றாள்
மலர்க்கண் விடாதின் னமிழ்துண்ண நல்காய்.
பதம் பிரித்து:
ஒலிக்கின்ற தண்டைத் தளிர்ச் செய்ய பாதம்
பிலிற்றும் பெரும் தேன்; இழுக்கும், தொடக்கும்
வலிக்கத் தவித்தேன்; மனத்தும்பி உன் தாள்
மலர்க்கண் விடாது இன் அமிழ்து உண்ண நல்காய்.
V. Subramanian
10)
सुवर्णाभ दिव्याम्बरैः भासमानां
क्वणत् किङ्किणी मेखलाशोभमानाम्।
लसद्धेमपट्टेन विद्योतमानां
कटिं भावये स्कन्द ते दीप्यमानाम्॥
ஸுவர்ணாப திவ்யாம்பரை: பாஸமாநாம்
க்வணத் கிங்கிணீ மேகலாஶோபமாநாம் |
லஸத்தேமபட்டேந வித்யோதமாநாம்
கடிம் பாவயே ஸ்கந்த தே தீப்யமாநாம் ||
"கந்த பெருமானே ! தங்கம் போன்று ஒளிர்கின்ற தெய்விக ஆடைகளால் துலங்குவதும், சதங்கைகளின் ஒலி கொண்ட சங்கிலியால் அழகியதும், ஒளிமிக்க தங்கப்பட்டியால் விளங்குவதுமான ஒளிர்கின்ற உன் இடுப்பை மனத்தினுள் கண்டு அனுபவிக்கிறேன்."
மிகத்தேசு டைத்துன் பொனம்பூந்து கில்தான்
நகைக்கிண்கி ணிப்பூண் மெலத்தான் ஒலிக்கும்
முகிற்றோன்று மின்னே உறும்கச்ச தென்றன்
அகத்துள்ள தேரார் அரைக்காட்சி கந்தா.
பதம் பிரித்து:
மிகத் தேசு உடைத்து உன் பொனம் பூந்துகில்தான்;
நகைக் கிண்கிணிப் பூண் மெலத்தான் ஒலிக்கும்;
முகில் தோன்று மின்னே உறும் கச்சு-அது; என்றன்
அகத்து உள்ளது ஏர் ஆர் அரைக்காட்சி கந்தா.
தேசு - ஒளி;
பொனம் - பொன்னம் - பொன் அம்; (அம் - அழகு; சாரியை);
நகை - ஒளி; சிரிப்பு;
கிண்கிணி - அரைச்சதங்கை;
மின் - மின்னல்;
உறுதல் - ஒத்தல்;
கச்சது - கச்சு; அது - பகுதிப்பொருள்விகுதி;
அகம் - மனம்;
ஏர் - அழகு
V. Subramanian
Updated version of song # 10:
10)
மிகத்தே சுடைத்தம் பொனாரும் துகில்தான்
நகைக்கிண் கிணிப்பூண் மெலத்தான் ஒலிக்கும்
நிகர்ப்பில் மினைக்கச் செறிக்கும் பொலிந்து
திகழ்கந்த நெஞ்சுன் அரைக்கோல முன்னும்.
பதம் பிரித்து:
மிகத் தேசு உடைத்து அம் பொன் ஆரும் துகில்தான்;
நகைக் கிண்கிணிப் பூண் மெலத்தான் ஒலிக்கும்;
நிகர்ப்பு-இல் மினைக் கச்சு எறிக்கும்; பொலிந்து
திகழ் கந்த; நெஞ்சு உன் அரைக்கோலம் உன்னும்.
தேசு - ஒளி;
அம்பொன் - சிறந்த பொன்;
ஆர்தல் - ஒத்தல்;
நகை - ஒளி; சிரிப்பு;
கிண்கிணி - அரைச்சதங்கை;
மினை - மின்னை; மின் - ஒளி;
எறித்தல் - ஒளிவீசுதல்;
பொலிந்து திகழ்தல் - ஒருபொருட்பன்மொழி;
உன்னுதல் - தியானித்தல்;
V. Subramanian
10)
11)
पुलिन्देशकन्या घनाभोग तुङ्ग -
स्तनालिङ्गनासक्त काश्मीर रागम्।
नमस्याम्यहं तारकारे तवोरः
स्वभक्तावने सर्वदा सानुरागम्॥
புலிந்தோகன்யா கநாபோக துங்க -
ஸ்தநாலிங்க நாஸக்த காஶ்மீர ராகம் |
நமஸ்யாம்யஹம் தாரகாரே தவோர:
ஸ்வபக்தாவநே ஸர்வதா ஸாநுராகம் ||
"தாரகனை மாய்த்தவரே / வேடத் தலைவனின் புதல்வியின் கனத்துப் பருத்து மேடிட்ட மார்பகத்தை அணைத்ததால் குங்குமப்பூக்குழம்பின் செம்மை படிந்ததும், தன் அடியார்களைக் காப்பதில் ஆர்வங்கொண்டதுமான உமது மார்பை எப்போதும் கண்டு வணங்குகிறேன்.''
மலர்க்கூந்த லாரும் குறப்பெண் வனப்பார்
முலைப்பூச்சி னாலே சிவப்பேறு மார்பா
வலத்தார கன்மேல் சுடர்வேல் எறிந்தாய்
கலந்தார்க் கலந்தீர் உரக்கந்த போற்றி.
பதம் பிரித்து:
மலர்க்கூந்தல் ஆரும் குறப்பெண் வனப்பு ஆர்
முலைப்பூச்சினாலே சிவப்பு ஏறு மார்பா;
வலத் தாரகன்மேல் சுடர்வேல் எறிந்தாய்;
கலந்தார்க்கு அலம் தீர் உரக்-கந்த போற்றி.
வலம் - வலிமை;
சுடர்தல் - ஒளிவிடுதல்;
கலத்தல் - கூடுதல்;
அலம் - துன்பம்;
உரம் - மார்பு; வலிமை;
V. Subramanian
There was a typo in the first phrase in line-1 in the transliterated Sanskrit verse. It should be: புலிந்தேஶகன்யா.
It has been corrected now.
11)
पुलिन्देशकन्या घनाभोग तुङ्ग -
स्तनालिङ्गनासक्त काश्मीर रागम्।
नमस्याम्यहं तारकारे तवोरः
स्वभक्तावने सर्वदा सानुरागम्॥
புலிந்தேஶகன்யா கநாபோக துங்க -
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAF%2Bqia2EQZ04Vm3AsHWUtCQKFPPig7Emr9%3D8b%2BCaotvP8ZjpHg%40mail.gmail.com.
கலந்தார் பயந்தீர் உரக்கந்த போற்றி.
== பயம் - அச்சம்
12)
विधौ कॢप्त दण्डान् स्वलीलोद्धृताण्डान्
निरस्तेभशुण्डान् द्विषत्कालदण्डान्।
हतेन्द्रारिषण्डान् जगत्त्राणशौण्डान्
सदा ते प्रचण्डान् श्रये बाहुदण्डान्॥
விதௌ க்லுப்த தண்டான் ஸ்வலீலாத்ருதாண்டான்
நிரஸ்தே பஶுண்டான் த்விஷத் கால தண்டான் |
ஹதேந்த்ராரிஷண்டான் ஜகத்த்ராணஶௌண்டான்
ஸதா தேப்ரசண்டான் ஶ்ரயே பாஹுதண்டான் ||
உமது தடித்த கைகள், பிரும்மாவிற்குத் தண்டனை விதித்தவை. விளையாட்டாக அனைத்துப் பிரும்மாண்டங்களையும் தாங்குபவை. யானையின் துதிக்கையைத் தோற்கச் செய்பவை, எதிரிகளுக்கு யமனின் கைத்தடிகளானவை, இந்திரனின் எதிரிக்கூட்டத்தை மாய்த்தவை. உலகின் பாதுகாப்பில் நிகரற்ற ஆற்றல் பெற்றவை. வீர்யம் மிக்கவை. அவற்றைச் சரணடைகிறேன்."
அயன்சென்னி குட்டும் படைப்பைச் சுமக்கும்
கயந்தன்கை வெல்லும் பகைத்தாரை வீட்டும்
வியன்பூமி காத்திந் திரன்வைரி மாய்க்கும்
புயம்பன்னி ரண்டைச் சரண்புக்கு நின்றேன்.
பதம் பிரித்து:
அயன் சென்னி குட்டும், படைப்பைச் சுமக்கும்,
கயம்தன் கை வெல்லும், பகைத்தாரை வீட்டும்,
வியன் பூமி காத்து இந்திரன் வைரி மாய்க்கும்,
புயம் பன்னிரண்டைச் சரண்புக்கு நின்றேன்.
கயம் - கஜம் - யானை;
வீட்டுதல் - அழித்தல்; கொல்லுதல்;
வியன் - பெரிய;
வைரி - பகைவன்;
புயம் - புஜம் - தோள்;
V. Subramanian
13)
सदा शारदाः षण्मृगाङ्का: यदि स्युः
समुद्यन्त एव स्थिताश्चेत् समन्तात्।
सदा पूर्ण बिम्बा: कलङ्कैश्च हीनाः
तदा त्वन्मुखानां ब्रुवे स्कन्द साम्यम्॥
ஸதா ஶாரதா: ஷண்ம்ருகாங்கா: யதி ஸ்யு:
ஸமுத்யந்த ஏவ ஸ்திதாஶ்சேத் ஸமந்தாத்
ஸதா பூர்ண பிம்பா: கலங்கைஶ்சஹீநா:
ததா த்வந்முகாநாம் ப்ருவே ஸ்கந்த ஸாம்யம்||
"கந்தபெருமானே / சரத்ருதுவில் தோன்றுகிற ஆறு பூர்ண சந்திரர்கள் உதிக்கின்ற நிலையிலேயே (மறையாதபடி) எங்கும் அவர்கள் காணப்பெறுபவராக, உருவ நிறைவுள்ளவர்களாக களங்கமற்றவர்களாக ஒருகால் இருப்பார்களேயானால் அவர்களை, உமது திருமுகங்களுடன் ஒப்பிட்டுச் சொல்வேன்.''
உளங்கொள்ளு முன்றன் திகழ்சண் முகங்கள்
விளம்பும்ப டித்தே விணில்திங்க ளாறு
களங்கங்க ளின்றிக் குளிர்கூதி ரன்று
விளங்கிச் சிறக்கக் கணிற்காணு மாயின்!
பதம் பிரித்து:
உளம் கொள்ளும் உன்றன் திகழ் சண்முகங்கள்
விளம்பும்படித்தே, விணில் திங்கள் ஆறு
களங்கங்கள் இன்றிக் குளிர் கூதிர் அன்று
விளங்கிச் சிறக்கக் கணில் காணுமாயின்!
விளம்புதல் - சொல்லுதல்;
படி - தன்மை; படித்து - தன்மைத்து;
ஏ - 1. தேற்ற ஏகாரம்; 2. வினா ஏகாரம்;
விணில் - விண்ணில்;
கூதிர் - சரத்ருது - autumn;
V. Subramanian
12)
14)
स्फुरन्मन्दहासैः सहंसानि चञ्चत्
कटाक्षावली भृङ्ग संघोज्ज्वलानि।
सुधास्यन्दि बिम्बाधराणीशसूनो
तवालोकये षण्मुखांभोरुहाणि॥
ஸ்புரன் மந்தஹாஸை: ஸஹம்ஸாநி சஞ்சத் -
கடாக்ஷாவலீப்ருங்க ஸங்கோஜ்ஜ்வலாநி
ஸுதாஸ்யந்தி பிம்பாதராணீஶ ஸூநோ
தவாலோகயே ஷண்முகாம்போருஹாணி
"ஈசனின் திருமகனாரே ! உமது ஆறு திருமுகத்தாமரைகளைக் காண்கிறேன். அவை இனிய புன்சிரிப்பாகிற அன்னப்பறவைகளால் சூழப்பெற்றவை. எப்போதும் இங்குமங்கும் அசைகின்ற கடைக்கண்களின் வரிசையாகிற வண்டுக் கூட்டத்தால் சிறப்பாக ஒளிர்பவை. அமுதம் கசிகின்ற கோவைப்பழம் போன்ற உதடுகளுடன் கூடியவை.''
சிரிப்பன்ன மின்புற் றிருக்கும் விளங்கும்
வரித்தும்பி யாகும் திருக்கண்ணி னோக்கம்
சுரக்கும் தனித்தேன் எழிற்கொவ்வை வாயில்
தரித்தேனு னாறம் முகப்போத கத்தே.
பதம் பிரித்து:
சிரிப்பு-அன்னம் இன்புற்று இருக்கும்; விளங்கும்
வரித்தும்பி ஆகும் திருக்கண்ணின் நோக்கம்;
சுரக்கும் தனித்-தேன் எழில்-கொவ்வை வாயில்;
தரித்தேன் உன் ஆறு அம் முகப்போது அகத்தே.
வரி - கோடு; அழகு;
தும்பி - வண்டு;
தனி - ஒப்பின்மை;
सुधा sudhā - 1. nectar, ambrosia; 2. The nectar or honey of flowers;
அம் - அழகு;
போது - பூ; இங்கே தாமரைப்பூ;
(An example of "போது = தாமரைப்பூ" -
சம்பந்தர் தேவாரம் - 3.49.9 - "போதன் போதன கண்ணனும்" - தாமரை மலரில் வீற்றிருக்கின்ற பிரமனும், தாமரை மலர் போன்ற கண்களையுடைய திருமாலும்);
V. Subramanian
13)
15)
विशालेषु कर्णान्तदीर्घेष्वजस्रं
दयास्यन्दिषु द्वादशस्वीक्षणेषु।
मयीषत्कटाक्षः सकृत्पातितश्चेत्
भवेत्ते दयाशील का नाम हानि: ?॥
விஶாலேஷு கர்ணாந்த தீர்க்கேஷ்வஜஸ்ரம்
தயாஸ்யந்திஷு த்வாதஶஸ்வீக்ஷணேஷு
மயீஷத்கடாக்ஷ: ஸக்ருத் பாதிதஶ் சேத்
பவேத் தே தயாஶீல கா நாம ஹாநி: ||
"பரிவை இயல்பாகக் கொண்டவரே ! தடையற்று விசாலமானவையும் காதுவரை நீண்டவையும் எப்போதும் பரிவுக்கசிவுள்ளவையுமான பன்னிரு கண்களிருக்கும் போது, ஒரு தடவை ஒரு கடைக்கண் பார்வை என் மீது பதிவதால் ஐயனே! உமக்கு என்ன குறை நேரும் "
தடங்கண்க ணீளும் குழைக்காது தீண்டத்
தொடர்ந்தாறி ரண்டில் தயாவாறு பாயும்
அடைந்தேத்தி னேன்சற் றெனைப்பார்த்தி ரங்கிற்
கடம்பா வுனக்கோர் இழப்பாவ துண்டோ?
பதம் பிரித்து:
தடம் கண்கள் நீளும் குழைக்காது தீண்டத்;
தொடர்ந்து ஆறிரண்டில் தயா ஆறு பாயும்;
அடைந்து ஏத்தினேன்; சற்று எனைப் பார்த்து இரங்கில்,
கடம்பா, உனக்கு ஓர் இழப்பு ஆவது உண்டோ?
தடம் - பெருமை; அகலம்;
தயா - கருணை;
அடைதல் - சரண்புகுதல்;
கடம்பா, உனக்கு ஓர் இழப்பு ஆவது உண்டோ? - கடம்பனே, உனக்கு ஒரு குறை உண்டோ?
V. Subramanian
14)
15)
16)
सुताङ्गोद्भवो मेऽसि जीवेति षड्धा
जपन्मन्त्रमीशो मुदा जिघ्रते यान्।
जगद्भारभृद्भ्यो जगन्नाथ ! तेभ्यः
किरीटोज्ज्वलेभ्यो नमो मस्तकेभ्यः॥
ஸுதாங்கோத்பவோ மேஸி ஜீவேதி ஷட்தா
ஜபந் மந்த்ரம் ஈஶோ முதா ஜிக்ரதே யான்
ஜகத்பாரப்ருத்ப்யோ ஜகந்நாத தேப்ய:
கிரீடோஜ்ஜ்வலேப்யோ நமோ மஸ்தகேப்ய: ||
உலகின் தலைவரே ! "என் புதல்வனே ! என் ஒவ்வொரு அவயவத்திலிருந்தும் நீ உருப்பெற்றிருக்கிறாய். நீ நீண்டநாள் வாழ்வாய்" என்ற மந்திரத்தை சிவபெருமான் ஆறுதடவை ஜபித்து எந்த ஆறு முகங்களை முகர்ந்தாரோ, உலகின் பாதுகாப்புச் சுமையைத் தாங்குகின்றவையும் கிரீடங்களால் ஒளி மிக்கவையுமான அந்த ஆறு தலைகளுக்கும் நமஸ்காரம்.
எனாகத்து தித்தாய் நிலைத்தே இருப்பாய்
எனாவுச்சி யாறும் கரம்தீண்டி மோந்தான்
முனான்ஈச னண்டம் புரந்தாளு முன்றன்
மினார்பொற் கிரீடத் திருச்சென்னி போற்றி.
பதம் பிரித்து:
"என் ஆகத்து உதித்தாய்! நிலைத்தே இருப்பாய்!"
எனா, உச்சி ஆறும் கரம் தீண்டி மோந்தான்,
முனான் ஈசன்; அண்டம் புரந்து ஆளும் உன்றன்
மின் ஆர் பொற்கிரீடத் திருச்சென்னி போற்றி.
எனாகத்து - என் ஆகத்து;
ஆகம் - உடல்;
எனா - என்னா - என்று;
முனான் - முன்னான்; (அப்பர் தேவாரம் - 6.79.7 - "முன்னானைப் பின்னானை ");
புரத்தல் - காத்தல்;
மினார் - மின்னார் - மின் ஆர்;
மின் - ஒளி;
V. Subramanian
15)
17)
स्फुरद्रत्न केयूरहाराभिराम:
चलत्कुण्डलश्री - लसद्गण्डभागः।
कटौ पीतवासा: करे चारुशक्तिः
पुरस्तान्ममास्तां पुरारेस्तनूजः॥
ஸ்புரத் ரத்ன கேயூர ஹாராபிராம:
சலத் குண்டலஸ்ரீலஸத்கண்டபாக:
கடௌ பீதவாஸா: கரே சாருஶக்தி:
புரஸ்தான் மமாஸ்தாம் புராரேஸ்தநூஜ: ||
"ஒளிமிக்க இரத்தினங்கள் பதித்த தோள்வளையணியாலும் ஹாரத்தாலும் அழகுடன் விளங்குகின்றவரும், அசைந்தாடுகின்ற குண்டலத்தின் ஒளியால் துலங்குகின்ற கன்னப் பகுதி உடையவரும், இடுப்பில் செம்மஞ்சளாடையுடுத்தியவரும் கைகளில் சக்தி ஆயுதம் ஏந்தியவருமான திரிபுரமெரித்தவரின் புதல்வர் என் முன் தோன்றட்டும்.''
வளைத்தோள்க ளேரார் அலங்கல் கதிர்வேல்
விளக்கம் திகழ்குண் டலஞ்சேர் முகங்கள்
வளைத்துத் துகில்சேர் அரைக்கோல நல்காய்
களத்திற் புரங்கள் பொடித்தார்க்கு மைந்தா.
பதம் பிரித்து:
வளைத்தோள்கள், ஏர் ஆர் அலங்கல், கதிர் வேல்,
விளக்கம் திகழ் குண்டலம் சேர் முகங்கள்,
வளைத்துத் துகில் சேர் அரைக் கோலம் நல்காய்,
களத்தில் புரங்கள் பொடித்தார்க்கு மைந்தா.
வளைத்தோள்கள் - தோள்வளை அணிந்த புஜங்கள்; (கேயூரம் - A bracelet worn on the upper arm, an armlet - தோள்வளை);
ஏர் - அழகு;
அலங்கல் - மாலை;
கதிர்த்தல் - பிரகாசித்தல்;
விளக்கம் - ஒளி;
V. Subramanian
16)
18)
इहायाहि वत्सेति हस्तान्प्रसार्या-
ह्वयत्यादरात् शंकरे मातुरङ्कात्।
समुत्पत्य तातं श्रयन्तं कुमारं
हराश्लिष्टगात्रं भजे बालमूर्तिम्॥
இஹாயாஹி வத்ஸேதி ஹஸ்தான் ப்ரஸார்யா -
ஹ்வயத்யாதராத் ஶங்கரே மாதுரங்காத்
ஸமுத்பத்ய தாதம் ஶ்ரயந்தம் குமாரம்
ஹராஶ்லிஷ்ட காத்ரம் பஜே பாலமூர்திம் ||
"குழந்தாய் இங்கே வா ! எனக் கைகளை விரித்துப் பரிவுடன் சங்கரர் கூப்பிடத் தாயின் மடியிலிருந்து குதித்துத் தந்தையை அடைந்து, தந்தையான சிவபெருமானால் உடல் முழுவதும் அடங்க அணைக்கப்பெற்றவருமான பால வடிவினரான குமரனை வழிபடுகிறேன்."
இவண்வா வெனச்சங் கரன்கூப் பிடத்தாய்
அவள்மெல் மடிக்கண் இராமற் குதிப்பாய்
அவன்பக்க மோடிப் பிரானன்ப ணைப்பால்
உவப்பாய் குமாரா சிவன்பால போற்றி.
பதம் பிரித்து:
"இவண் வா" எனச் சங்கரன் கூப்பிடத், தாய்
அவள் மெல் மடிக்கண் இராமல் குதிப்பாய்;
அவன் பக்கம் ஓடிப், பிரான் அன்பு அணைப்பால்
உவப்பாய்; குமாரா; சிவன் பால போற்றி.
இவண் - இவ்விடம்;
குதிப்பாய் - துள்ளி இறங்குபவனே;
உவப்பாய் - மகிழ்பவனே;
குமாரா - குமாரனே; குமரக் கடவுளே;
சிவன் பால - சிவன் பாலனே;
V. Subramanian
17)
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCOuWQ_kmqgXcwun8B4h2X3-%2BtHM8MQ_P7RCfnLJdoGuew%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCOuWQ_kmqgXcwun8B4h2X3-%2BtHM8MQ_P7RCfnLJdoGuew%40mail.gmail.com.
19)
कुमारेशसूनो ! गुह ! स्कन्द ! सेना-
पते ! शक्तिपाणे ! मयूराधिरूढ !।
पुलिन्दात्मजाकान्त ! भक्तार्तिहारिन् !
प्रभो ! तारकारे ! सदा रक्ष मां त्वम्॥
குமாரேஶஸூநோ ! குஹ! ஸ்கந்த ! ஸேநா -
பதே ! ஶக்திபாணே! மயூராதிரூட!
புலிந்தாத்மஜா காந்த ! பக்தார்திஹாரின்!
ப்ரபோ ! தாரகாரே ! ஸதா ரக்ஷ மாம் தவம் ||
"குமரா / ஈசனின் புதல்வரே ! குகனே ! ஸ்கந்தரே ! ஸேநாதிபதியே ! சக்தியைக் கையில் கொண்டவரே ! மயில் மீதமர்ந்தவரே ! வேடர் மகளின் மணாளரே ! அடியாரின் துயரகற்றியவரே! எல்லாம் வல்லவரே! தாரகாசுரனின் எதிரியே! என்னை எப்போதும் நீர் காப்பாற்றுவீர்.''
அரன்சேய் குமாரா குகாகந்த வேலா
சுரர்சேனை நாதா குறப்பெண் மணாளா
உரத்தார கற்கந் தனேதுன்ப றுப்பாய்
இரந்தார்க் கெனைக்கா எழில்மஞ்ஞை ஊர்தீ.
பதம் பிரித்து:
அரன் சேய் குமாரா; குகா; கந்த; வேலா;
சுரர் சேனை நாதா; குறப்பெண் மணாளா;
உரத் தாரகற்கு அந்தனே; துன்பு அறுப்பாய்
இரந்தார்க்கு; எனைக் கா, எழில் மஞ்ஞை ஊர்தீ.
சேய் - மகன்; இளமை;
குமாரன் - புதல்வன்; முருகன்;
உரம் - வலிமை;
அந்தன் - யமன்;
அறுத்தல் - தீர்த்தல்;
மஞ்ஞை - மயில்;
V. Subramanian
18)
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCPfv05x1w3Da-NoMwa-X%2Bii%3DTAWYbgPgZ9gZzamtdX_hQ%40mail.gmail.com.
20)
प्रशान्तेन्द्रिये नष्टसंज्ञे विचेष्टे
कफोद्गारिवक्त्रे भयोत्कंपिगात्रे।
प्रयाणोन्मुखे मय्यनाथे तदानीं
द्रुतं मे दयालो भवाग्रे गुह त्वम्॥
ப்ரஶாந்தேந்த்ரியே நஷ்டஸம்ஜ்ஞே விசேஷ்டே
கபோத்காரி வக்த்ரே பயோத்கம்பி காத்ரே
ப்ரயாணோந்முகே மய்யநாதே ததானீம்
த்ருதம் மே தயாளோ பவாக்ரே குஹ த்வம் ||
"தயைமிக்கவரே குகப்பெருமானே புலன்கள் வலிவிழந்து அடங்கி, உணர்வு நீங்கி, இயக்கம் குன்றி, வாயில் கபம் வெளிவர, மரணபயத்தால் உடல் நடுங்க, காப்பற்றவனாக உயிர் வெளியேறுகிற நிலையிலுள்ள போது எனது எதிரில் விரைவுடன் நீர் இருப்பீர்.''
உடல்வாடி எல்லாப் புலன்மூடி வாயைத்
தடம்போல ஆய்நான் நடுங்கிக் கிடப்பேன்
அடற்கூற்று வாரா முனிக்கட்ட னேன்முன்
உடன்தோன்றி நல்காய் குகாஅன்பு மூர்த்தீ.
பதம் பிரித்து:
உடல் வாடி, எல்லாப் புலன் மூடி, வாய் ஐத்
தடம் போல ஆய், நான் நடுங்கிக் கிடப்பேன்;
அடல் கூற்று வாரா முன், இக் கட்டனேன்முன்
உடன் தோன்றி நல்காய்; குகா; அன்பு மூர்த்தீ.
மூடுதல் - அடைத்தல்;
வாய் ஐத் தடம் போல ஆய் - (ஐ - கோழை; கபம்); (தடம் - நீர்நிலை; வழி); (ஆய் - ஆகி);
அடல் - வலிமை; கொல்லுதல்;
கட்டனேன் - துன்பத்தைத் தரும் வினையை உடையேனாகிய நான்; பந்தங்களையுடைய நான்;
V. Subramanian
19)
21)
कृतान्तस्य दूतेषु चण्डेषु कोपात्
दहच्छिन्धि भिन्धीति मां तर्जयत्सु।
मयूरं समारुह्य मा भैरिति त्वं
पुरश्शक्तिपाणिर्ममायाहि शीघ्रम्॥
க்ருதாந்தஸ்ய தூதேஷு சண்டேஷு கோபாத்
தஹச்சிந்தி பிந்தீதி மாம் தர்ஜயத்ஸு
மயூரம் ஸமாருஹ்ய மா பைரிதி த்வம்
புரஶ்ஶக்திபாணிர் மமாயாஹி ஶீக்ரம் |
"முடிவை நோக்கி என்னை இட்டுச்செல்கிற யமனின் அச்சம் ஊட்டுகிற தூதுவர்கள் கோபத்துடன் 'எரி! வெட்டு! பிளந்து போடு!' என்று என்னைப் பயமுறுத்தும் போது, மயில் மீதேறி சக்தியை ஏந்தி என் எதிரில் விரைவுடன் நீர் வருவீர்.''
நமன்தூத ரெல்லாம் கடுங்கோப ராகிச்
சமர்செய்து வெட்டிக் கொளுத்தென்று சொல்வார்
சமர்த்தா மயில்மேல் அயில்வேல தேந்தி
இமைப்போதி லுற்றென் பயந்தீர்க்க வேண்டும்.
பதம் பிரித்து:
நமன்தூதர் எல்லாம் கடுங்கோபர் ஆகிச்,
சமர் செய்து, "வெட்டிக் கொளுத்து" என்று சொல்வார்;
சமர்த்தா; மயில்மேல் அயில்வேல்-அது ஏந்தி
இமைப்போதில் உற்று என் பயம் தீர்க்க வேண்டும்.
சமர் - போர்;
சமர்த்தன் - வல்லவன்;
அயில் - கூர்மை;
உறுதல் - அடைதல்;
என் பயம் தீர்க்க வேண்டும் - ("அஞ்சேல்" என்று சொல்லி அருளவேண்டும்);
V. Subramanian
20)
22)
प्रणम्यासकृत् पादयोस्ते पतित्वा
प्रसाद्य प्रभो प्रार्थयेऽनेक वारम्।
न वक्तुं क्षमोऽहं तदानीं कृपाब्धे
न कार्याऽन्तकाले मनागप्युपेक्षा॥
ப்ரணம்யாஸக்ருத் பாதயோஸ்தே பதித்வா
ப்ரஸாத்ய ப்ரபோ ப்ரார்தயே நேகவாரம்
ந வக்தும் க்ஷமோஹம் ததாநீம் க்ருபாப்தே
ந கார்யாந்தகாலே மநாகப்யுபேக்ஷா ||
"கருணைக்கடலே ! உன் திருவடிகளில் பல தடவை விழுந்து வணங்கி மகிழ்வித்து வேண்டி நிற்கிறேன். அப்போது நான் பேச இயலாதவனாக இருப்பேன். அந்த இறுதி நேரத்தில் சிறிதும் பராமுகம் காட்டக்கூடாது."
கழல்போற்றி நாளும் கரங்கூப்பி வாழ்த்தித்
தொழல்செய்து வாழ்வேன் அருள்வாரி அண்ணா
தழல்சேரு மாறிவ் வுடல்வீழு நாள்நா
எழற்காகு மோகா குகாவிட் டிடாதே.
பதம் பிரித்து:
கழல் போற்றி நாளும் கரம் கூப்பி வாழ்த்தித்
தொழல் செய்து வாழ்வேன்; அருள்-வாரி அண்ணா;
தழல் சேருமாறு இவ் வுடல் வீழும் நாள் நா
எழற்கு ஆகுமோ? கா குகா விட்டிடாதே.
வாரி - கடல்;
அண்ணா - அண்ணல் என்பதன் விளியான அண்ணால் என்பது அண்ணா என்று மருவிற்று;
தழல் - தீ;
வீழ்தல் - விழுதல் - நோய்வாய்ப்பட்டுக் கிடத்தல்; கெடுதல்; சாதல்;
எழுதல் - To function; தொழிலுறுதல்;
கா - காத்து அருள்;
விடுதல் - கைவிடுதல்;
V. Subramanian
21)
நீரில்லாப் பாலை நிலம்போலே - முருகா
நீயின்றிக் காயுதய்யா இவ்வாழ்வு
வேரின்றி வாடும் மரமொன்றை - முருகா
வேலால் நிறுத்தியருள் நல்வாழ்வு
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAF%2Bqia2J3NfNj5g3%3DQDmPRt2zW2cunqqKTpUbKon0wcdihaJCA%40mail.gmail.com.
23)
सहस्राण्डभोक्ता त्वया शूरनामा
हतस्तारकस् सिंहवक्त्रश्च दैत्यः।
ममान्तर्हृदिस्थं मनःक्लेशमेकं
न हंसि प्रभो किं करोमि क्व यामि॥
ஸஹஸ்ராண்டபோக்தா த்வயா ஶூரநாமா
ஹதஸ்தாரகஸ் ஸிம்ஹவக்த்ரஶ்ச தைத்ய:
மமாந்தர் ஹ்ருதிஸ்தம் மந:க்லேஶமேகம்
ந ஹம்ஸி ப்ரபோ கிம் கரோமி க்வயாமி ||
"ஆயிரம் ப்ரும்மாண்டங்களையும் ஆண்டு அனுபவித்த சூரன் என்ற அசுரன், தாரகன், சிங்கமுகன் இவரெல்லாம் உம்மால் அழிக்கப்பட்டார்கள். என் இதயத்தினுள்ள மனக்கிலேசம் என்ற ஒன்றே ஒன்றை நீர் மாய்க்கவில்லையே! என் தலைவரே! நான் என்ன செய்வேன்? எங்குச் செல்வேன்?''
பெருங்கால மண்டங் களோராயி ரந்தான்
இருந்தாண்ட சூரன் தனைத்தம்பி மாரை
இரும்போரி லட்டாய் மனத்துன்ப மாற்றாய்
அருங்காவ லாரோ இனிச்செய்வ தென்நான்?
பதம் பிரித்து:
பெரும் காலம் அண்டங்கள் ஓர் ஆயிரந்தான்
இருந்து ஆண்ட சூரன்தனைத் தம்பிமாரை
இரும்-போரில் அட்டாய்; மனத்துன்பம் மாற்றாய்;
அரும் காவல் ஆரோ? இனிச் செய்வது என் நான்?
இருமை - பெருமை;
அடுதல் - கொல்லுதல்;
மனத்துன்பம் மாற்றாய் (/ஆற்றாய்) - (மாற்றுதல் - நீக்குதல்; அழித்தல்); (ஆற்றுதல் - துக்கம் முதலியவற்றைத் தணித்தல்);
என் - என்ன;
V. Subramanian
22)
24)
अहं सर्वदा दुःख भारावसन्नो
भवान् दीनबन्धुस् त्वदन्यं न याचे।
भवद्भक्तिरोधं सदा कॢप्तबाधं
ममाधिं द्रुतं नाशयोमासुत त्वम्॥
அஹம் ஸர்வதா து:க பாராவஸந்நோ
பவாந் தீநபந்துஸ் த்வதந்யம் ந யாசே
பவத்பக்திரோதம் ஸதா க்லுப்தபாதம்
மமாதிம் த்ருதம் நாஶயோமாஸுத த்வம் ||
"உமையின் மைந்தரே ! நான் பெருந்துயரச் சுமையில் அழுந்தி நிற்பவன். நீரோ துயருற்ற எளியவருக்கு உதவுகிற உற்றவர். நான் வேறெவரிடமும் வேண்டேன். உம்மிடம் பக்தி கொள்வதில் தடையாகி எப்போதும் வாட்டுகின்ற என் மனத்துயரை நீர் விரைவில் அழிப்பீர்!"
மிகுந்துன்ப மென்றும் சுமந்தெய்த்து நொந்தேன்
உகந்துன்னை யல்லால் தொழேனற்ற வர்க்கோர்
புகல்கந்த நீயே உனைப்போற்ற லொட்டா
இகல்சிந்தை தீராய் உமைக்கன்பு மைந்தா.
பதம் பிரித்து:
மிகும் துன்பம் என்றும் சுமந்து எய்த்து நொந்தேன்;
உகந்து உன்னை அல்லால் தொழேன்; அற்றவர்க்கு ஓர்
புகல் கந்த நீயே; உனைப் போற்றல் ஒட்டா,
இகல் சிந்தை தீராய்; உமைக்கு அன்பு மைந்தா.
உகத்தல் - விரும்புதல்;
தொழேனற்றவர்க்கு = 1. தொழேன் அற்றவர்க்கு; 2. தொழேன் நற்றவர்க்கு; (அற்றவர் - வறியோர்; கதியற்றவர்); (நற்றவர் - நல்ல தவத்தோர்);
புகல் - துணை; பற்றுக்கோடு; சரண்;
ஒட்டுதல் - சம்மதித்தல்;
இகல்தல் - மாறுபடுதல்; பகைத்தல்;
சிந்தை - எண்ணம்; கவலை - चिन्ता cintā - Sad or sorrowful thought, anxiety;
V. Subramanian
23)
Word separated version:
# 2247 - பெரியபுராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 349
நெடுங்களத்து ஆதியை "அன்பால் நின்பால்
.. நெஞ்சம் செலாவகை நேர் விலக்கும்
இடும்பைகள் தீர்த்து அருள் செய்வாய்" என்னும்
.. இன்னிசை மாலை-கொண்டு ஏத்தி ஏகி
அடும் பணிச் செஞ்சடையார் பதிகள்
.. அணைந்து பணிந்து, நியமம் போற்றிக்
கடுங்கை-வரை உரித்தார் மகிழ்ந்த
.. காட்டுப்பள்ளிப்-பதி கை-தொழுவார்.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCNXwdS4PnsiJrjBpwzv3%2B%3D5XFKYS89DiYfLJtp6gBHYLQ%40mail.gmail.com.
மிகும் துன்பம் என்றும் சுமந்து எய்த்து நொந்தேன் - நாளுக்கு நாள் கூடுகின்ற துன்பத்தை ஓயாமல் சுமந்து இளைத்து வருந்தினேன்;
எய்⁴-த்தல் ey- , 11 v. intr. To grow weary by exertion; to fail in strength, as in battle; to flag as from want of food; இளைத்தல். எய்த்த மெய் யெ னெய்யே னாகி (பொருந. 68). 2. To take pains, exert oneself; மெய்வருந்துதல். எய்யாமை யெல்லா வறமுந் தரும் (குறள், 296).
25)
अपस्मार कुष्ठक्षयार्शः प्रमेह-
ज्वरोन्मादगुल्मादिरोगा महान्तः।
पिशाचाश्च सर्वे भवत्पत्र भूतिं
विलोक्य क्षणात्तारकारे द्रवन्ते॥
அபஸ்மார குஷ்ட க்ஷயார்ஶ: ப்ரமேஹ -
ஜ்வரோந்மாதகுல்மாதிரோகா மஹாந்த:
பிஶாசாஶ்ச ஸர்வே பவத் பத்ர பூதிம்
விலோக்ய க்ஷணாத் தாரகாரே த்ரவந்தே!
"தாரகனின் எதிரியே! அபஸ்மாரம், குஷ்டம், க்ஷயம், மூலம், நீரிழிவு, ஜ்வரம், பயித்தியம், வயிற்றுக்கட்டி முதலிய பெரு நோய்களும் பிசாசுகளும் அனைத்தும் உமது இலை விபூதியைக் கண்டதும் நொடியில் ஓடி மறைகின்றனவே!"
சுரம்காச மூலம் வலிப்போடு மேகம்
அரும்குட்ட ரோகம் கொடும்பித்து சூலை
பெரும்பே யிலைச்சாம் பலைக்கண்ட போதே
பொருந்தாம லோடும் திருச்செந்தி னாதா.
பதம் பிரித்து:
சுரம், காசம், மூலம், வலிப்போடு, மேகம்,
அரும் குட்டரோகம், கொடும் பித்து, சூலை,
பெரும் பேய், இலைச்சாம்பலைக் கண்ட போதே
பொருந்தாமல் ஓடும், திருச்செந்தில் நாதா.
சுரம், காசம், மூலம், வலிப்போடு, மேகம், அரும் குட்டரோகம், கொடும் பித்து, சூலை - Fever, Tuberculosis, Piles (hemorrhoids), Epilepsy, Venereal or urinary disease, Leprosy, Insanity, Abdominal ailments - பலவகை வியாதிகளும்;
பெரும் பேய் - பெரிய பேய்களும்;
இலைச்சாம்பலைக் கண்ட போதே பொருந்தாமல் ஓடும், திருச்செந்தில் நாதா - திருச்செந்தூர் நாதனே, உன் இலைவிபூதியைக் கண்டதுமே எம்மைப் பீடித்தலை விட்டு ஓடிப்போய்விடும்;
V. Subramanian
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCMj39uekmQ3uqcv41VkFyDtwyqq_kja-Jc4G0LkVrnLTQ%40mail.gmail.com.
வேம்பினைப் பேசி விடக்கினை ஓம்பி வினைபெருக்கித்
தூம்பினைத் தூர்த்தங்கோர் சுற்றம் துணையென் றிருத்திர் தொண்டீர்
ஆம்பலம் பூம்பொய்கை ஆரூர் அமர்ந்தான் அடிநிழற்கீழ்ச்
சாம்பலைப் பூசிச் சலமின்றித் தொண்டுபட் டுய்ம்மின்களே.
6.5.1
சாம்பர் அகலத் தணிந்தாய் போற்றி
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CALCiuL47SxcnJrHSnyFKq3b%3DXm-mCco0jma6UiXbW93TxpqH%3DQ%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCMg6rzFnQPa%3DkvNfrDvXek%2BaKJrOER2doWRci%2BLX3n5kg%40mail.gmail.com.