> இது தமிழ்தானா? இல்லை வேறேதேனும் மலைநாட்டு திராவிட மொழியா?
இது நல்ல கேள்வி. 'குரியன்' என்பது மலையாளத்தில் ஒருவிதமான நாரையைக் குறிக்கும் :) இது தான் இங்கு அர்த்தம் என்று கூறவில்லை. இது மலையாளத்தின் கிளை மொழியாக இருக்கலாம்.
சினிமாக்காரர்களின் வரிகளை புரிந்து கொள்ள வேண்டுமானால் பாடலின் (ஷூட்டிங்கின்) பின்புலம் அறிந்து கொண்டு துப்பறிய வேண்டும் :) 'அனுபவம் புதுமை' பாடலில் நடிகை ஒரு நைட்டி உடுத்திக்கொண்டு காலை ஆட்டி ஆட்டி அபிநயம் பிடிக்கிறார். மெட்டு மேல் நாட்டு சரக்கு என்று புரியாமலே பாட்டு மேல் நாட்டு சரக்கு என்று துணியலாம். 'besame mucho' (kiss me much) என்ற ஸ்பானிஷ் ஹிட் பாடலின் மெட்டைத் தழுவிய பாடல் இந்த 'காதலிக்க நேரமில்லை' பாடல்.
1957 ராஜ் கப்பூர் படம் 'Shree 420'-ல் 'ரம்மையா வஸ்தாவையா' என்ற சூப்பர் ஹிட் பாடல் ஒன்று. இந்தக் காட்சியில் தம் மக்களை விட்டு வழி தவறிய கதாநாயகன் மறுபடியும் தம் குழுவிற்கே திரும்புகிறான். அந்தக் குழு ரோடு செப்பனிடும் தொழிலாளிகளின் குழு. பம்பாயில் அன்றிலிருந்து இன்று வரை ரோடு தொழிலாளிகள் தெலுங்கு பேசும் மக்கள். அன்று தெலங்கானா வட்டாரத்திலிருந்து கொத்தடிமையாக தருவித்தவர்கள். இந்த சொற்றொடரை பாடலில் புகுத்தி பாடலாசிரியர்/ டைரெக்டர் இந்த தெலுங்கு பேசும் குழுவிற்கு ஒரு tribute கொடுத்திருக்கிறார். இன்றளவும் 'ரம்மையா வஸ்தாவையா' என்ற சொற்றொடரை இந்திக்காரர்கள் gibberish என்றே நினைக்கிறார்கள். தெலுங்கில் இதற்கு 'வாய்யா வாய்யா' என்றே பொருள். அவ்வளவு தான்.
இதே போல் 'முத்துக்குளிக்க வாறீயளா' என்ற தொடரும் இந்திப் பாடலொன்றில் வரும். இதை இந்திக்காரர்கள் பெரும்பாலும் gibberish என்றே நினைக்கிறார்கள்.
:)
Srini