OTL: perumAL 1. person of eminence; 2. title of Ce1ra king; 3. Vis2n2u; 4. God
perumAn2 1. nobleman, great person; 2. king; 3. elder; elder brother; 4. God, as, Siva, Vis2n2u; 5. lady
கழக அகராதி: பெருமாள்= பெருமையில் சிறந்தோன்; சேர பட்டப்பெயர்; கடவுள்;
பெருமான்= அரசன், குரு, சிவன், தலைவன், திருமால், பெருமையில் சிறந்தோன், மூத்தோன்
ஆக, இரு சொற்களும் பெருமை வாய்ந்தவரைக் குறிப்பனவே. (பெருமம் = பெரியது; பெருமா = பெரும் மா - பெரிய விலங்கான ஆனை. இதை ஒட்டி, பெருமாள்= பெரும் ஆள் எனக் கொள்ளலாமோ? மான் என்பதற்குப் பெரியோன் என்ற ஒரு பொருள் உண்டு)
தாங்கள் துதிக்கும் கடவுள் வடிவங்களைத் தனிப்படக் குறிப்பதற்காக, பெருமான் என்ற சொல்லைச் சைவப் பெரியோரும், பெருமாளை வைணவப் பெரியோர்களும் எல்லா இடங்களிலும் கையாண்டிருக்கலாம். அருணகிரியார் காலத்தில் இவ்விரு குழுவினர்களுக்கும் இருந்த பூசல்களைக் கண்டு அவர்களுக்குக் கடவுளின் உண்மைத் தன்மையை உணர்த்தத் தமது திருப்புகழ் போன்ற படைப்புகளில் பெருமாளே என்று சிவன் மைந்தனான குகனை அழைத்திருக்க வாய்ப்புள்ளது. திருப்புகழில் அனைத்துத் தெய்வங்களின் பெருமையையும் அவர் அழகுற வெளிப்படுத்துவதும் இதே நோக்கத்தில் தான் என்று அறிஞர் கூறுவர்.
இதுபோக, சேர மன்னர்களைப் பெருமாள் என்று அழைக்கும் வழக்கம் இருந்தது பற்றி அறிவோம். அந்தப் பெருமாள்களில் ஒருவர் இசுலாமிய மதத்தைத் தழுவிய வரலாறைக் கீழ்க்கண்ட குறிப்புச் சொல்கிறது:
..அனந்த் 16-6-2008
Project Madurai-ல் உள்ள நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் நான் தேடிய அளவில், பெருமாள் என்ற சொல்லின் எந்த வடிவையும் (பெருமாளே, பெருமாளை,..) 12 ஆழ்வார் பாடல்களில் காண்கிலேன்.அன்புடன்,வி. சுப்பிரமணியன்
Project Madurai-ல் உள்ள நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் நான் தேடிய அளவில், பெருமாள் என்ற சொல்லின் எந்த வடிவையும் (பெருமாளே, பெருமாளை,..) 12 ஆழ்வார் பாடல்களில் காண்கிலேன்.
-இல் தேடியதில் 'பெரியபுராண'த்தில் 'பெருமாள்' வருவது தெரிகிறது.(கம்பர் பயன்படுத்தியதாகத் தெரியவில்லை)
விண்ணோரது கண்டார்வய வீரர்க்கினி மேன்மேல்
ஒண்ணாதன உளவோவென மனந்தேறின ருவந்தார்;
கண்ணார்நுதல் பெருமானிவர்க் கரிதோவெனக் கடைபார்த்
தெண்ணா திவை பகர்ந்தீர்பொருள் கேளீரென விசைத்தான்
என்று சிவனுக்கும் பெருமானைப் பயன்படுத்தியிருப்பதைக் காணலாம்.
ஆளுடையாய், அருளாய், அருளாய் என்று மாயா சீதை புலம்புவதையும், 'என்னை ஆளுடையான்' என்று மிகப் பல இடங்களிலும் காணலாம்.
ஆனால், ஒரேயொரு பெருமாளைக்கூட காணவில்லை. டிஜிடல் ஸர்ச் உறுதிசெய்கிறது.
இவருக்கும் முன்னிருந்த அரசர் 'குலசேகரப் பெருமாள்'.; ஓர் ஆழ்வார்;'பெருமாள் திருமொழி' என்றே இவருடைய பாசுரங்கள் அழைக்கப்படும்.இவர்களைப் 'பெருமாள்' வம்சம் என்றே ஒரு கட்டுரை குறிப்பிடுகிறது.அரசர்களைத் திருமாலின் பரம்பரை என்பது ஒரு பழைய மரபு.எல்லாச் சேர அரசர்களுக்கும் இந்தப் 'பெருமாள்' என்ற பெயர் இருந்திருப்பதாகத்தெரிகிறது.பசுபதி17-6-08
On Tuesday, June 17, 2008 at 5:05:26 PM UTC-5 பசுபதி wrote:இவருக்கும் முன்னிருந்த அரசர் 'குலசேகரப் பெருமாள்'.; ஓர் ஆழ்வார்;'பெருமாள் திருமொழி' என்றே இவருடைய பாசுரங்கள் அழைக்கப்படும்.இவர்களைப் 'பெருமாள்' வம்சம் என்றே ஒரு கட்டுரை குறிப்பிடுகிறது.அரசர்களைத் திருமாலின் பரம்பரை என்பது ஒரு பழைய மரபு.எல்லாச் சேர அரசர்களுக்கும் இந்தப் 'பெருமாள்' என்ற பெயர் இருந்திருப்பதாகத்தெரிகிறது.பசுபதி17-6-08
பெருமாள் - சொல்லாட்சி
------------------------
2008-ம் ஆண்டின் இழை இது.
பெருமாள் என்னும் சொல்லை முதலில் இலக்கியத்தில் பயனுறுத்தவர் அப்பர் அடிகள் ஆகலாம்.
(1) பதிகத்தில் ஒவ்வொரு பாடலும் பெருமான் அடிகள் என்று இருக்க,
7-ம் பாடல் மட்டும் பெருமாள் என்கிறது:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/47bcf8fb-1e53-44e2-a434-3f673a2b1673n%40googlegroups.com.
Good to see your interest in researching word histories.I do not know if I have mentioned this before in any other thread. When relying on digital versions of literature - one needs to be careful about potential digitization errors in the documents that are used as source for research, concordance, etc.Regarding the appar thevaram verse you quoted, you can see a more correct version of that song here:The Swami of Kadavur Mayanam is - பெருமான் அடிகள்V. Subramanian
On Fri, Jun 10, 2022 at 4:31 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
பெருமாள் - சொல்லாட்சி
------------------------
2008-ம் ஆண்டின் இழை இது.
பெருமாள் என்னும் சொல்லை முதலில் இலக்கியத்தில் பயனுறுத்தவர் அப்பர் அடிகள் ஆகலாம்.
(1) பதிகத்தில் ஒவ்வொரு பாடலும் பெருமான் அடிகள் என்று இருக்க,
7-ம் பாடல் மட்டும் பெருமாள் என்கிறது:
அணங்கு பாகத்தர், ஆரணநால்மறை
கணங்கள் கடவூரின் மயானத்தார்;
வணங்குவார் இடர் தீர்ப்பர், மயக்குஉறும்
பிணம் கொள் காடர்---பெருமாள்அடிகளே.
பிணங்கொள் - பெருமாள் :: இரண்டிலும் -ள் ஓசைநயம். பல தேவாரப் பதிப்புகளில் உள்ளபடி.
(2) http://tamilconcordance.in/TVRM-APPconc-1-pe1.html#பெருமாள்
பெருமாள் (1)
பிணம் கொள் காடர் பெருமாள் அடிகளே - தேவா-அப்:1454/4
.......
நா. கணேசன்
Looks like Google decided that my earlier message needs moderator's approval!Hope this reply gets to the group thread now!On Fri, Jun 10, 2022 at 4:43 PM Siva Siva <naya...@gmail.com> wrote:Good to see your interest in researching word histories.I do not know if I have mentioned this before in any other thread. When relying on digital versions of literature - one needs to be careful about potential digitization errors in the documents that are used as source for research, concordance, etc.
Regarding the appar thevaram verse you quoted, you can see a more correct version of that song here:The Swami of Kadavur Mayanam is - பெருமான் அடிகள்V. SubramanianOn Fri, Jun 10, 2022 at 4:31 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:பெருமாள் - சொல்லாட்சி
------------------------
2008-ம் ஆண்டின் இழை இது.
பெருமாள் என்னும் சொல்லை முதலில் இலக்கியத்தில் பயனுறுத்தவர் அப்பர் அடிகள் ஆகலாம்.
(1) பதிகத்தில் ஒவ்வொரு பாடலும் பெருமான் அடிகள் என்று இருக்க,
7-ம் பாடல் மட்டும் பெருமாள் என்கிறது:
அணங்கு பாகத்தர், ஆரணநால்மறை
கணங்கள் கடவூரின் மயானத்தார்;
வணங்குவார் இடர் தீர்ப்பர், மயக்குஉறும்
பிணம் கொள் காடர்---பெருமாள்அடிகளே.
பிணங்கொள் - பெருமாள் :: இரண்டிலும் -ள் ஓசைநயம். பல தேவாரப் பதிப்புகளில் உள்ளபடி.
(2) http://tamilconcordance.in/TVRM-APPconc-1-pe1.html#பெருமாள்
பெருமாள் (1)
பிணம் கொள் காடர் பெருமாள் அடிகளே - தேவா-அப்:1454/4
.......
நா. கணேசன்
--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/AGQH03ye3DA/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCMaQ68qXCxi2YG%2BGfPUU4pCbrJQkTVnkncCETFs13WL4Q%40mail.gmail.com.

IFP edition - Vol-2 - page 149:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCOYabKezO02OFTQ63ObZz2-fqc2o%2BjsSOCyBFUqGO3cTw%40mail.gmail.com.
.......
நா. கணேசன்
Please send the scanned copy of the page in the IFP books showing the other version of that verse that you had seen.Thanks.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCP-T%3D%3DzpaZ%2BGsbz_2bktysfgQ-3znTjkERDY-PviJwEnQ%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/ef0b3745-d654-46b3-b95b-cf07440162d5n%40googlegroups.com.