நாளொரு வண்ணம்

141 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
Mar 28, 2021, 5:19:07 PM3/28/21
to santhavasantham

   ஐயப்பன் வண்ணம் 1

தந்ததம்  தந்தத் தனதான

சங்கன் சொந்தப் புதல்வோனே
        சந்ததம் தம்பித் திடுநானும்
இங்கெதும் பந்தத்  திடராமல்
        இங்கிதம் புந்திக் கருள்வாயே
மங்கையன் றந்த த்   திருமாலின்
        மைந்தனென் றன்றைக் குருவானாய்
ஐங்கரன் தந்திக் கிளையோனே
         அன்பர்தம் சிந்தைக் கினியோனே!

இலந்தை


பின்குறிப்பு.

பெரிய வண்ணப் பாடல்களை எழுதுவதை விட இந்தச் சிறி பாடல் என்னைப் புரட்டிப்போட்டுவிட்டது..   நன்றாகவே ட்ரில் வாங்கிவிட்டது.   ஒழுங்காக வந்திருக்கிறதா? அன்பர்கள் சொல்லவும்

Siva Siva

unread,
Mar 28, 2021, 6:02:33 PM3/28/21
to santhavasantham
Pattern conformance looks fine.
When you are following a known thiruppugazh song pattern, it is good to mention that thiruppugazh song.
I presume you are following - "சந்ததம் பந்தத் தொடராலே" pattern.

V. Subramanian

Subbaier Ramasami

unread,
Mar 28, 2021, 6:20:07 PM3/28/21
to santhavasantham
ஆம்.  ஏதோவொரு திருப்புகழ் பாடலை ஒட்டித்தான் வண்ணப் பாடல்களை அமைத்துக் கொள்கிறேன்.  அது  பலவகையில் உதவியாக இருக்கிறது. நீங்கள் குறிப்பிடும் வண்ணம் திருப்புகழையும் இங்கே குறிக்கிறேன்.

இலந்தை

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCOAq6kotGSZOrLNe4m%3DXe6D2iE%2BseA0j7mkQqocRuvr3Q%40mail.gmail.com.

Siva Siva

unread,
Mar 28, 2021, 6:40:53 PM3/28/21
to santhavasantham
Just wrote a song on this pattern.
Will post in the other thread.

Vis Gop

unread,
Mar 28, 2021, 7:01:29 PM3/28/21
to santhav...@googlegroups.com
தங்கள் கைவண்ணம் அழகு. 

மங்கையன் றந்த த்   திருமாலின்
        மைந்தனென் றன்றைக் குருவானாய்

மங்கை அன்று அந்தத்  திருமாலின் மைந்தன் என்று அன்றைக்கு உருவானாய் - இதற்கு எப்படிப் பொருள் கொள்ள வேண்டும்?
கோபால். 

Sent from my iPhone

Subbaier Ramasami

unread,
Mar 28, 2021, 8:05:44 PM3/28/21
to santhavasantham
அன்று மங்கை அந்தத் திருமாலின் மைந்தன் என்று அன்றைக்கு உருவானாய்

பொதுவாக மங்கையாக இராமல் அன்று மங்கையாக இருந்த திருமாலின் மைந்தனாக திருமால் மங்கையாக இருந்த அன்று உருவானாய்.

கொண்டு கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும்.



Vis Gop

unread,
Mar 28, 2021, 10:51:21 PM3/28/21
to santhav...@googlegroups.com
விளக்கத்திற்கு நன்றி. 
கோபால். 

Sent from my iPhone

ramaNi

unread,
Mar 29, 2021, 12:40:55 AM3/29/21
to சந்தவசந்தம்
இலந்தையாரின் பாடல் இனிமை. இதே சந்தக் குழிப்பில் சிவசிவாவின் இன்னொரு இழைப் பாடலும் சிறப்பு. 

இந்தக் குழிப்பை என் திருப்புகழ் குழிப்புகள் அட்டவணையில் தேடிக் கிடைக்காது திகைத்தபோது, சிவசிவா பாட்டுக் குறிப்பால் அது திருப்புகழ் 13-ஆம் பாடல் என்றறிந்து பார்த்ததில், குழிப்பை மதுரைத் திட்டத் தொகுப்பில் தவறாகத் தந்தனந் தத்தத் ...... தனதான என்று குறித்திருப்பது கண்டேன்.

பார்ப்பதற்கு எளிதாகத் தெரியும் இந்த வண்ணக் குழிப்பின் சிக்கல் இரண்டாம் சீரில் தந்தத் என்று வல்லினவொற்றில் முடியும் சந்தமாகும். அவ்வொற்றில்லாமல் தந்த என்றிருந்தால் பாடல் எழுதுவது எளிதாகலாம்.

இலந்தையாரும் சிவசிவாவும் தெய்வத் துதியாக எழுதிய இக்குழிப்பில் அடியேன் ஒரு இயற்கைக் காட்சியை வருணிக்க முயன்றேன்.

ஒரு மாலைக் காட்சி
திருப்.0013. தந்தனந் தந்தத் —— தனதான

அந்தவங் குன்றைச் —— சிறுமேகம்
. அங்கியென் றந்தத் —— தலைமூடும்
விந்தைவெண் கொண்டைத் —— திரள்வீழும்
. விண்டுவின் கொண்டற் —— கிரையாகும்
அந்தியின் செம்பொற் —— கதிர்வீச
. அஞ்சுகம் சிஞ்சத் —— தருநாடும்
சந்திரன் பிஞ்சுக் —— கலையாகும்
. சந்தகம் சிந்தைக் —— களியாமே!

பதம் பிரித்து
அந்த-அம் குன்றைச் —— சிறுமேகம்
. அங்கியென்று அந்தத் —— தலைமூடும்
விந்தைவெண் கொண்டைத் —— திரள்வீழும்
. விண்டுவின் கொண்டற்கு —— இரையாகும்
அந்தியின் செம்பொன் —— கதிர்வீச
. அஞ்சுகம் சிஞ்சத் —— தருநாடும்
சந்திரன் பிஞ்சுக் —— கலையாகும்
. சந்தகம் சிந்தைக்கு —— அளியாமே!

பொருள்
அந்த அழகிய குன்றை ஒரு சிறு மேகம்
. அங்கியாக அதன் தலையை மூடும்.
விந்தையான வெள்ளைக் கொண்டைத் திரள் கலைந்துபடும்
. மலைமேல் வீசும் காற்றுக்கு (கொண்டல்) இரையாகி.
மாலைநேரச் செம்பொன் கதிர்வீசும் வேளையில்
. கிளிகள் புளியமரத்தை (மரப் பொந்துகளை) நாடும்.
வானில் தோன்றும் நிலவு பிஞ்சு கலையாய்த் தெரியும்.
. மகிழ்ச்சி ஒரு கொடுப்பினையாக மனம் நிறையும்.

—குருநாதன் ரமணி, 29/03/2021

★★★★★

Siva Siva

unread,
Mar 29, 2021, 9:16:23 AM3/29/21
to santhavasantham
Thanks for highlighting that data error in that file. (I have now corrected my copy).

Regarding your verse:
Good effort. Several words are new / not clear to me.

அங்கி - தீ என்றால் மேகத்திற்கு அது பொருந்துமா? ஆடை என்றால் அது தலையில் அணியும் ஆடையா?

/ விண்டுவின் கொண்டற்கு / = ?

Subbaier Ramasami

unread,
Mar 29, 2021, 11:00:14 AM3/29/21
to santhavasantham

விடியல் வண்ணம்

தனதன தானம் தனதன தானம்
தனதன தானம் தனதான

தினமொரு நாளும் திரிதரு கோளம்
   திகழ்குண வோரம் தெரிவேளை
    திணிகரு காகம் கரைகிற கீதம்
    செவியினில் வீழும் பகலாகும்
பனிதரு பாரம்  புலில்நுனி  ஈரம்
     பகலவன் வீசும் கதிராலே
      பருவுரு மாறும் புகையென ஏறும்
     படர்கதிர் பாயும் களையேறும்
கனிவுள கானம் பறவைகள் பாடும்
    கனவெழி லாகும் புலர்காலை
    கதிரெழு  தேகம் கனல்நிறம்  மாறும்
     கதிருடல்  மேலும்  கனலாகும்
புனைகிற கோலம்  புதுவித  மாகும்
     புளகிதம் காணும் தெருவீதி
     புதுவொரு நாளின் பொழுதிது வாகும்
     புலர்கிற காலம் புகழ்வாயே!

On Mon, Mar 29, 2021 at 8:16 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

Vis Gop

unread,
Mar 29, 2021, 12:13:57 PM3/29/21
to santhav...@googlegroups.com
மிக அருமை.

புளகிதம் காணும் தெருவீதி

கவனிக்க வேண்டுமோ?

கோபால்.


On Mon, Mar 29, 2021 at 8:30 PM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

விடியல் வண்ணம்

தனதன தானம் தனதன தானம்
தனதன தானம் தனதான

. . . .

Siva Siva

unread,
Mar 29, 2021, 12:40:33 PM3/29/21
to santhavasantham

தனதன தானந் தனதன தானந்
     தனதன தானந் ...... தனதான

நசையொடு தோலுந் தசைதுறு நீரும் - திருவல்லம் (http://www.kaumaram.com/thiru/nnt0665_u.html)

சில கருத்துகளைக் கீழ்க் காண்க.

வி. சுப்பிரமணியன்

On Mon, Mar 29, 2021 at 11:00 AM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

விடியல் வண்ணம்

தனதன தானம் தனதன தானம்
தனதன தானம் தனதான

தினமொரு நாளும் திரிதரு கோளம்
   திகழ்குண வோரம் தெரிவேளை
    திணிகரு காகம் கரைகிற கீதம்
    செவியினில் வீழும் பகலாகும்

--> /தினமொரு நாளும்/  = ?

-->  / கரு காகம் / = ? 
கருங்காகம் என்றுதானே வரும்?



பனிதரு பாரம்  புலில்நுனி  ஈரம்
     பகலவன் வீசும் கதிராலே
      பருவுரு மாறும் புகையென ஏறும்
     படர்கதிர் பாயும் களையேறும்
கனிவுள கானம் பறவைகள் பாடும்
    கனவெழி லாகும் புலர்காலை
    கதிரெழு  தேகம் கனல்நிறம்  மாறும்
     கதிருடல்  மேலும்  கனலாகும்
புனைகிற கோலம்  புதுவித  மாகும்
     புளகிதம் காணும் தெருவீதி
     புதுவொரு நாளின் பொழுதிது வாகும்
     புலர்கிற காலம் புகழ்வாயே!

--> / புளகிதம் காணும் / 
Already highlighted by Gopal.


Subbaier Ramasami

unread,
Mar 29, 2021, 12:41:18 PM3/29/21
to santhavasantham
சுட்டியதற்கு நன்றி
புளகித மாகும்   என மாற்றுகிறேன்.  எவ்வளவுதான் கவனித்தாலும் ஏதாவது ஒன்று கண்ணுக்குத் தப்பி விடுகிறது

கலைமடவார்தம் சிலையத னாலும்   எனும் திருப்புகழ் சந்தம்

இலந்தை

Subbaier Ramasami

unread,
Mar 29, 2021, 12:49:30 PM3/29/21
to santhavasantham
தினமொரு நாளும் வலிவுக்காகச் சொல்லப்படுவது(repetition for emphasis)

கருமையென்பதைக் காகத்தோடு சேர்க்கக் கூடாது. திணி என்பதோடு சேர்க்க வேண்டும். கருமை திணியப்பெற்ற காகம் அதாவது கருமையடர் காகம் என ஆகும்.

எனினும் தினமுறை காகம் என மாற்றுகிறேன்.  தினமும் காலையிலே கத்துகிற முறையுடைய காகம் எனக் கொள்க

இலந்தை

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Vis Gop

unread,
Mar 29, 2021, 1:39:45 PM3/29/21
to santhav...@googlegroups.com
முறையுடைய காகம் முறைக் காகம் என்று ஆகிவிடாதா?
முறை மாமன்; முறைப் பையன்
கறையுடைய கண்டன் கறைக் கண்டன். 
கோபால். 

Sent from my iPhone

Vis Gop

unread,
Mar 29, 2021, 2:00:33 PM3/29/21
to santhav...@googlegroups.com
கோளம் என்பது சூரியனைக் குறிப்பதால்

தினமொரு நாளும் திரிதரு கோளம்
   திகழ்குண வோரம் தெரிவேளை

என்பதை

தினமுரு வாகும் திரிஎரி கோளம்
      திகழ்குண வோரம் தெரிவேளை!

குணதிசையில் எரிகோளமாகிய கதிரவன் தெரிகையில் தினம்/நாள் உருவாகும். 

திரியொளிர் கோளம் என்பதும் பொருந்தலாம்.  


கோபால். 
Sent from my iPhone

Subbaier Ramasami

unread,
Mar 29, 2021, 8:52:26 PM3/29/21
to santhavasantham
அதைத் தினம் உறை காகம் என வினைத்தொகையாகக் கொள்ளலாம்

இலந்தை

Subbaier Ramasami

unread,
Mar 30, 2021, 12:52:49 PM3/30/21
to santhavasantham
அந்தி வண்ணம்

இதற்குத் திருப்புகழ் சந்தம் இருப்பதாகத் தெரியவில்லை

அந்தி வண்ணம் என்பதாலே  சிவசிவாவின் மஞ்சள் பட்டை அதிகம் விழுமென எதிர்பார்க்கிறேன்

அருணகிரிநாதர் பயன்படுத்திய  ஒருவகைப் பிறழ்வையும் இங்குப் பயன்படுத்தியிருக்கிறேன்

 

அந்தி வண்ணம்

தந்த தானன தாந்தன தானன
தந்த தானன தாந்தன தானன
தந்த தானன தாந்தன தானன தனதானா

 

மஞ்செ  லாமவன்  சாய்ந்திடு வானென
    நெஞ்சு ளேகவன் றோய்ந்திடு வேளையில்
    விஞ்சை யாயவன் பூங்கதிர் வீசிட நிறமேறி
அந்த வானகம் பூண்டிடு கோலமும்
     அந்தி மேவிடும் காண்டகு  ஜாலமும்
     அன்று போலவும் காண்பது  மீளவும்  அரிதாமே

பஞ்சு போலமென்  பான்மைகொள் ஓர்முகில்
     பைம்பொன்  மேல்விழும் பாங்குள ஓர்முகில்
செஞ்செ வேயெனும் தீந்திறல் ஓர்முகில்  எழிலாமே

பந்து போல்விழும் தேன்பொழி ஆதவன்
     விந்தையாய் வணம் சூழ்ந்திட வேவிழ
     பந்த மோவெனும் தூண்டெழில் வீசிட  ஒளிசேர

மஞ்சள் ஓர்புறம், காந்தளு மோர்புறம்
    வந்து நீலமும் சேர்ந்திடு மோர்வழி
கஞ்ச மோர்புறம் போந்திட வானகம் நிறமாயம்

பந்த பாசமும் பாங்குட னேமுகில்
     பந்தி யாயெழும் பான்மையும் ஓதிடும்
அந்தி வேளையும் தான்செயும் ஓவிய மொருவேள்வி
 

கொஞ்சு மோவியம் கோன்கதிர் கீழ்விரை
      கொஞ்ச காலம ங் கோங்கிடு  வானதில்
    விஞ்சி ஏகிடும், காண்பன யாவையும் நிலைதானா?

மஞ்சு,  சூரியன் சாய்ந்திடு வானமும்
எஞ்சும் நேரமும் காண்கிற ஓவியம்
விஞ்சை  யாகிடும் தேர்ந்திடல் காளியின் விதிதானே!

இலந்தை

 பொருள்.

தமது தோழன் கீழே சென்று மறையப் போகிறானே என்ற ஏக்கத்தில் மனம் கவன்று மேகங்கள் மனமோய்ந்த நிலைகண்டு சூரியன் தனது வண்ணமயமான கிரணங்களை அவற்றின் மீது பாய்ச்சுகிறான். அவை பலவித நிறமேற்கின்றன. அந்தி வானகம் கொள்கின்ற  அந்தக் கோலத்தையும் அந்திப்பொழுதில் மேவுகிற காணுதற்கு ஏற நிற ஜாலங்களையும் அன்றையப் பொழுதில் காண்பதைப் போல மீளவும் காண்டல் அரிது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அந்தி ஓவியம்.

வெள்ளிச்சரிகை ஓரம் கொண்ட வெண்மையான ஓர்முகில், தங்கச்சரிகை பூண்ட வேறொரு முகில், நீல நிறம் கொள் வானம் ஓர்புறம், செம்மை நிறம் செக்கச்செவேரென்றிருக்கும் வலிமைகொள் மேகம் ஒன்று. இவையெல்லாம் எழிலின் உச்சம்

சிவந்த பந்தாகத் திகழும்  ஆதவன் மஞ்சளும் செம்மையும் கலந்து தேனைப் பொழிகிறான். பலவிதமான வண்ணங்களால் சூழப்பட்டிருக்கிறான். பந்தம் ஏந்தியதைப் போல வானம் காட்சி கொடுக்கிறது.

மஞ்சள், காந்தளஞ் செந்தீ, நீலம், தாமரை வண்ணம் எனப் பல வண்ணங்கள் குழைந்து காணப்படுகின்றன.

இவற்றைப் பார்க்கிறபோது மேகங்களுக்கும் சூரியனுக்கும் உள்ள பந்த பாசத்தை நமக்கு எடுத்துரைப்பது போலத் தெரிகிறது.

இப்படி அழகு கொஞ்சுகிற ஓவியம் சூரியன்  வான் கோட்டின் கீழே செலும் நேரத்துக்குச் சற்று முன்பும் சென்ற பின் சிறிது நேரமும் தெரிகின்றது. இதெல்லாம் நிலையில்லை. நாளுக்குநாள் மாறக்கூடியவை. இந்த மாற்றங்களை நிகழ்த்தி ஒவ்வொரு நாளும் அழித்தழித்து அந்தி ஓவியம் வரைகிறாள் மாகாளி

Vis Gop

unread,
Mar 30, 2021, 1:05:47 PM3/30/21
to santhav...@googlegroups.com

தந்த தானன தாந்தன தானன
தந்த தானன தாந்தன தானன
தந்த தானன தாந்தன தானன தனதானா

தந்த தானனந் தாந்தன தானன
தந்த தானனந் தாந்தன தானன
தந்த தானனந் தாந்தன தானன தனதானா

என்று இருக்கவேண்டுமோ?

கோபால். 

Sent from my iPhone

தமது தோழன் கீழே சென்று மறையப் போகிறானே ..... 

Siva Siva

unread,
Mar 30, 2021, 1:07:51 PM3/30/21
to santhavasantham
/தந்த தானன தாந்தன தானன/

I think you wrote for this:
தந்த தானனந் தாந்தன தானன  

In lines 1, and 3 - not following mOnai for the second half?
In line 4 - you are using edhugai where mOnai normally comes. That is fine I think.

Subbaier Ramasami

unread,
Mar 30, 2021, 4:52:17 PM3/30/21
to santhavasantham
மிக்க நன்றி

திருத்தப் பட்ட பாடல்

 அந்தி வண்ணம்

தந்த தானனந் தாந்தன தானன


தந்த தானனந் தாந்தன தானன

தந்த தானனந் தாந்தன தானன தனதானா

 

மஞ்செ  லாமவன்  சாய்ந்திடு வானென
    நெஞ்சு ளேகவன் றோய்ந்திடு வேளையில்
    விஞ்சை யாயவன் பூங்கதிர் வீசிட நிறமேறி

வந்த வானகம் பூண்டிடு கோலமும்


     அந்தி மேவிடும் காண்டகு  ஜாலமும்
     அன்று போலவும் காண்பது  மீளவும்  அரிதாமே

பஞ்சு போலமென்  பான்மைகொள் ஓர்முகில்
     பைம்பொன்  மேல்விழும் பாங்குள ஓர்முகில்
செஞ்செ வேயெனும் தீந்திறல் ஓர்முகில்  எழிலாமே

பந்து போல்விழும் தேன்பொழி ஆதவன்
     விந்தையாய் வணம் சூழ்ந்திட வேவிழ
     பந்த மோவெனும் தூண்டெழில் வீசிட  ஒளிசேர

மஞ்சள் ஓர்புறம், காந்தளு மோர்புறம்
    வந்து நீலமும் சேர்ந்திடு மோர்வழி
கஞ்ச மோர்புறம் போந்திட வானகம் நிறமாயம்

மந்தை  போல்வரும்  பாங்குட னேமுகில்
     பந்த மாயெழும் பான்மையும் ஓதிடும்


அந்தி வேளையும் தான்செயும் ஓவிய மொருவேள்வி
 

கொஞ்சு மோவியம் கோன்கதிர் கீழ்விரை
      கொஞ்ச காலம ங் கோங்கிடு  வானதில்
    விஞ்சி ஏகிடும், காண்பன யாவையும் நிலைதானா?

மஞ்சு,  சூரியன் சாய்ந்திடு வானமும்
எஞ்சும் நேரமும் காண்கிற ஓவியம்
விஞ்சை  யாகிடும் தேர்ந்திடல் காளியின் விதிதானே!

இலந்தை

 பொருள்.

தமது தோழன் கீழே சென்று மறையப் போகிறானே என்ற ஏக்கத்தில் மனம் கவன்று மேகங்கள் மனமோய்ந்த நிலைகண்டு சூரியன் தனது வண்ணமயமான கிரணங்களை அவற்றின் மீது பாய்ச்சுகிறான். அவை பலவித நிறமேற்கின்றன. அந்தி வானகம் கொள்கின்ற  அந்தக் கோலத்தையும் அந்திப்பொழுதில் மேவுகிற காணுதற்கு ஏற நிற ஜாலங்களையும் அன்றையப் பொழுதில் காண்பதைப் போல மீளவும் காண்டல் அரிது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அந்தி ஓவியம்.

வெள்ளிச்சரிகை ஓரம் கொண்ட வெண்மையான ஓர்முகில், தங்கச்சரிகை பூண்ட வேறொரு முகில், நீல நிறம் கொள் வானம் ஓர்புறம், செம்மை நிறம் செக்கச்செவேரென்றிருக்கும் வலிமைகொள் மேகம் ஒன்று. இவையெல்லாம் எழிலின் உச்சம்

சிவந்த பந்தாகத் திகழும்  ஆதவன் மஞ்சளும் செம்மையும் கலந்து தேனைப் பொழிகிறான். பலவிதமான வண்ணங்களால் சூழப்பட்டிருக்கிறான். பந்தம் ஏந்தியதைப் போல வானம் காட்சி கொடுக்கிறது.

மஞ்சள், காந்தளஞ் செந்தீ, நீலம், தாமரை வண்ணம் எனப் பல வண்ணங்கள் குழைந்து காணப்படுகின்றன.

மந்தையாக மேகங்கள் இணைந்து வருவதை பார்க்கிறபோது மேகங்களுக்கும் சூரியனுக்கும் உள்ள பந்த பாசத்தை நமக்கு எடுத்துரைப்பது போலத் தெரிகிறது.

Subbaier Ramasami

unread,
Mar 30, 2021, 4:53:37 PM3/30/21
to santhavasantham
மிக்க நன்றி கோபால்.

இலந்தை

On Tue, Mar 30, 2021 at 12:05 PM Vis Gop <vis...@gmail.com> wrote:


Subbaier Ramasami

unread,
Mar 31, 2021, 10:49:52 AM3/31/21
to santhavasantham

வாராகி வண்ணம்-4

தான தான தானான தானத் தனதான


பாடு   பாடல் வாராகி பாடிப்   புகழ்வேனே
        பாதை மீதில் வாராகி பாதித் திடலாமோ
ஏடு தோறும் வாராகி ஏகத் திருதாயே
        ஏழை யேனை வாராகி வாழப் புரிவாயே
ஓடும் வாழ்வில் வாராகி ஓதித் திரிவேனே
        ஓசை சேர வாராகி ஊறித் தொழுவேனே
தேடும் யாவும் வாராகி தேடத் தெரியாது  
        தேவி, போதும் வாராகி ஞானத் திடுதாயே!

இலந்தை

28-3-2021

Vis Gop

unread,
Mar 31, 2021, 11:45:47 AM3/31/21
to santhav...@googlegroups.com
வாராகி எட்டும் வண்ணம்
சீராக வந்த வண்ணம்!

என் தாழ்மையான கருத்து. 
இடையின (சிலவிடங்களில் மெல்லின) ஒற்று அலகிடப் படுவதில்லை என்றாலும், அதைத் தவிர்க்க இயலுமானால் அழகு கூடும் தானே. 
உம். 
பாதை மீதில் —> பாதை மீது
ஓடும் வாழ்வில் —> ஓடு வாழ்வில்

கோபால். 

Sent from my iPhone

Siva Siva

unread,
Mar 31, 2021, 12:01:23 PM3/31/21
to santhavasantham
Nice.

"காதி மோதி" என்ற திருப்புகழ் அமைப்பு.

"வாராகி" என்று எல்லா அரையடிகளிலும் இட்டது நல்ல உத்தியும்!

/ ஞானத் திடுதாயே /
"ஞானத்தில் வை தாயே" என்ற பொருளா?

சுடச்சுட ஒரு பாடல் - "வண்ணப் பாடல் - 2" இழையில் இடுவேன்.

வி. சுப்பிரமணியன்

Subbaier Ramasami

unread,
Mar 31, 2021, 2:35:40 PM3/31/21
to santhav...@googlegroups.com
நல்ல யோசனை. நன்றி

Subbaier Ramasami

unread,
Mar 31, 2021, 2:36:49 PM3/31/21
to santhavasantham
ஆமாம்.  

On Wed, Mar 31, 2021 at 11:01 AM Siva Siva <naya...@gmail.com> wrote:
Nice.

Subbaier Ramasami

unread,
Apr 1, 2021, 11:33:00 AM4/1/21
to santhavasantham

தய்யதன தான தய்யதன தான
தய்யதன தானத் தனதான

ஐயனருள் கூட மெய்யுணர்வு  பாட 
     ஐயமிலை ஞானத்  தொளிதானே
     அள்ளுமுணர் வோடு கொள்ளுமறி வேற
     அள்ளிவரு போதத் தருள்தானே
வையமுள வாழ்வில் எய்துவன யாவும்
     வள்ளலிணை பாத த்  தருளாகும்
     வல்லமைகள் கூட நல்லவென யாவும்
     வல்வினைகள் தீரத் திடமாமே
செய்திறமை சேர உய்வகையி னோடு
     செய்கையொளி மேவப் புரிவானே
     செல்லுகிற பாதை வெல்லுகிற தாக
     நல்லபடி வாழப் பரிவோடே
பையகமுள் வேத மெய்தவழும் ஞானம்
     மைகரையு மேகப் பொழிவோடே
     பவ்வியம தாக  உள்ளுருகி  நாட
      ஐயனவன் வாரித் தருவானே!
      
இலந்தை

Vis Gop

unread,
Apr 1, 2021, 11:45:58 AM4/1/21
to santhav...@googlegroups.com
அட்டகாசம்!
நல்லவென —> நல்லவன?
பையகமுள் —> பையகமுள? typo. 
கோபால். 

Sent from my iPhone

Vis Gop

unread,
Apr 1, 2021, 11:54:58 AM4/1/21
to santhav...@googlegroups.com
என் முந்தைய இடுகையில் பையகமுள் குறித்த என் சுட்டல் தவறு. மன்னிக்கவும். 
கோபால். 

Sent from my iPhone

On 01-Apr-2021, at 9:02 PM, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

Siva Siva

unread,
Apr 1, 2021, 12:47:02 PM4/1/21
to santhavasantham
Nice.

I presume you were following the chandam of this vaLLimalai song.

வள்ளிமலை
அல்லிவிழி யாலு முல்லைநகை யாலு
     மல்லல்பட ஆசைக் ...... கடலீயும்

A couple of days ago I wrote a song - but that was in a slightly different chandam - 

தய்யதன தந்த தய்யதன தந்த

தய்யதன தந்த .. தனதான


Siva Siva

unread,
Apr 1, 2021, 4:11:46 PM4/1/21
to santhavasantham
இன்று இச்சந்தத்தில் ஒரு பாடல் எழுதினேன். அது "வண்ணப் பாடல் - 2" இழையில் இப்பொழுது.

Subbaier Ramasami

unread,
Apr 2, 2021, 12:38:13 PM4/2/21
to santhav...@googlegroups.com
கொஞ்சம் கடினமான சந்தம். இந்த அமைப்பில் வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள் எழுதியிருக்கிறார்

தய்ய தய்ய தய்ய தய்ய
தய்ய தய்ய தய்ய தய்ய
தய்ய தய்ய தய்ய தய்ய – தய்யான

ஐய மெய்யை உள்ள முள்ள
      ஐய மில்லை பொய்யர் செய்யும்
      ஐவ கைநை செய்கை தள்ளி எள்ளாதே
மைய லெல்லை ஒல்லை எய்தி
       விள்ள வுள்ளில்    எள்ள ளவ்வும்
       வைய யில்லில் அல்லல்  வௌவல் பொல்லாதே
கையொ டய்ய கொய்த செல்வம்
       வெய்ய பொய்யர் கௌவு மெல்லை
      கள்ள வுள்ளம் நொய்து வைது  தள்ளாதோ

 வைய முய்ய எய்து தெய்வம்
      நல்ல உள்ளம் வைகும் மெய்யை
     மைவ ரையில் எய்தி ஐய சொல்வாயே!

எள்ள ளவ்வும் - நீட்டல் விகாரம்

 ஐவகை நை  - பஞ்சமா பாதகம்    நை- வருந்தச் செய்யும் 

பொருள்

ஐயனே, உண்மைப் பொருளை ஆழமாய் மனத்தில் சிந்திக்க ஐயமெதுவும் விளையாது.
பொய்மை மனம் கொண்டவர் செய்யும் பஞ்சமா பாதகங்களை நீ கேலி செய்யாதே
காமத்தின் எல்லையை மிக விரைவாக எய்தி அதன் விளைவால் இவ்வையத்தில் நீ வாழும் இடத்தில் உன் இச்சையை மேலும் அடைய எவர்க்கும்  தீங்கு செய்ய விரும்புதல் பொல்லாது

ஐயனே, கைகவர்ந்து கொள்ளை கொண்ட செல்வத்தை க் கொடுமை மனத்தவர்  கவர்கிற போது பணத்தைத் தீய வழியில் சேர்த்துவைத்தனுடைய மனம் திருடியவனை வைது தள்ளுமல்லவா

இந்த வையகத்தைக் காப்பதற்காக எய்தியுள் தெய்வம் நல்ல உள்ளங்களில் வைகுவான் என்னும் உண்மையை, ஐயனே  மலையின் உச்சியில் எய்தி ஊருக்கெல்லாம் உரைப்பாயாக!


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Apr 2, 2021, 1:38:57 PM4/2/21
to சந்தவசந்தம்
மிக அருமை!

... அனந்த்

Siva Siva

unread,
Apr 2, 2021, 1:43:59 PM4/2/21
to santhavasantham
ஆம். தய்ய சந்தம் அதிகம் வரின் கஷ்டமே!

இவ்வமைப்பில் திருப்புகழ் இல்லையென்று எண்ணுகின்றேன்.

இன்று தய்ய சந்தம் அதிகம் வரும் திருப்புகழ் அமைப்பில் பாடல் ஒன்று எழுதினேன்.
சிறிது நேரம் கழித்து "வண்ணப் பாடல் -2" இழையில் இடுவேன்.

வி. சுப்பிரமணியன்

Swaminathan Sankaran

unread,
Apr 2, 2021, 5:18:49 PM4/2/21
to santhav...@googlegroups.com
'ஐவ கைநை செய்கை தள்ளி எள்ளாதே'
இந்த 'கைநை' யில் 'தய்ய' எப்படி வரும்?
'கை' என்பதை  சந்தம் கருதி 'கய்' என்று எடுத்துக் கொள்ள வேண்டுமா?  
புரியாமல் கேட்கிறேன்.

சங்கரன் 
 

On Fri, Apr 2, 2021 at 12:38 PM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
கொஞ்சம் கடினமான சந்தம். இந்த அமைப்பில் வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள் எழுதியிருக்கிறார்

தய்ய தய்ய தய்ய தய்ய
தய்ய தய்ய தய்ய தய்ய
தய்ய தய்ய தய்ய தய்ய – தய்யான

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Apr 2, 2021, 6:12:02 PM4/2/21
to சந்தவசந்தம்
ஆம் , அதுபோலவே, வைது, ஐய என்பனவும்.

... அனந்த்


On Fri, Apr 2, 2021 at 5:18 PM Swaminathan Sankaran <swamina...@gmail.com> wrote:
'ஐவ கைநை செய்கை தள்ளி எள்ளாதே'
இந்த 'கைநை' யில் 'தய்ய' எப்படி வரும்?
'கை' என்பதை  சந்தம் கருதி 'கய்' என்று எடுத்துக் கொள்ள வேண்டுமா?  
புரியாமல் கேட்கிறேன்.

சங்கரன் 
 

On Fri, Apr 2, 2021 at 12:38 PM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
கொஞ்சம் கடினமான சந்தம். இந்த அமைப்பில் வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள் எழுதியிருக்கிறார்

தய்ய தய்ய தய்ய தய்ய
தய்ய தய்ய தய்ய தய்ய
தய்ய தய்ய தய்ய தய்ய – தய்யான


--
 Swaminathan Sankaran

--

Subbaier Ramasami

unread,
Apr 2, 2021, 8:47:03 PM4/2/21
to santhav...@googlegroups.com
அனந்த் அவர்கள் விடைசொல்லிவிட்டார். நன்றி

வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள், அருணகிரிநாதர்  இருவருமே இத்தகைய பிரயோகங்களைச் செய்திருக்கிறார்கள்.
ஐ  அய்யாகும்  கை கய்யாகும்.  இதுவரை வண்ணப்பாவெழுதலிலிருந்து பெரும்பாலும் விலகியிருந்த  என்னை ஒரு நிகழ்ச்சி  எழுதத் தூண்டி விட்டது. வண்ணப்பாடல் தொகுதி ஒன்றுக்கு அதை எழுதிய கவிஞர் என்னிடம் வாழ்த்துரை கேட்டிருந்தார்.  வண்ணத்தைப்பற்றி முற்றும் தெளிவில்லாத நான்   வண்ண இலக்கணத்தைக் கற்ற பின்புதான் வாழ்த்துக் கொடுக்கும் தகுதி பெறுவேன் என நினைத்துப் படித்தேன். ஓரளவு தெளிவு பெற்று வண்ணம் எழுத முடியும் என நம்பிக்கை வந்தவுடன் வாழ்த்துரை வழங்கினேன். இன்னும் வண்ணத்தின் நுட்பங்கள் முற்றும் அறிந்து விட்டதாகக் கூற இயலாது. பல உத்த்திகள் உள்ளன.   கற்கக் கற்க எழுதுவேன்.  கடினங்களையும் கையாண்டு பார்ப்பேன். 
தெளியும் வரை கற்றுக் குட்டிதான்

இலந்தை

இலந்தை 



--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

ramaNi

unread,
Apr 3, 2021, 12:45:05 AM4/3/21
to சந்தவசந்தம்
அருமை.  வௌவல் பொல்லாதே  => வௌவற் பொல்லாதே என்றாகிச் சந்தம் பிறழுமோ?
ரமணி 

ramaNi

unread,
Apr 3, 2021, 1:07:06 AM4/3/21
to சந்தவசந்தம்
உய்வின் மெய்ய ருள்வீர்!
(வண்ணப் பாடல்)

தய்ய தய்ய தய்ய தய்ய
தய்ய தய்ய தய்ய தய்ய
தய்ய தய்ய தய்ய தய்ய – தய்யான

மெய்யு மில்லை பொய்யு மில்லை 
. வெல்வ தில்லை நள்ளு முய்வை
. மெல்லி யல்பில் மெல்வி னையில் — நல்காரோ?

செய்வ தில்லை தொய்வ தில்லை
. செல்வ தில்லை விள்கை யில்லை 
. தெள்ளி யர்கொள் ளுய்வின் மெய்யை — விள்ளாரோ?

வெய்ய தில்ந ளிர்த லில்லை
. மெல்கி யுள்ள மெய்த லில்லை
. வெவ்வி னையில் இம்மை செல்லும் — வெவ்வேறாய்!

தெய்வ மெல்லை எய்த லில்லை
. சில்லி கையின் எள்ள லில்லை
. தில்லை வள்ளல் எய்தல் உய்கை — சொல்வீரோ?

பொருள்:
வாழ்வில் உய்வு (பிறவிப் பெருங்கடலில் இருந்து ஈடேறுதல்) என்பதுதான் என்ன? அது
இந்த உடம்பாம் மெய்யும் இல்லை, இவ்வுலகாம் பொய்யும் இல்லை
. எதையோ வெல்வது இல்லை எனும்போது நான் விரும்பும் (நள்ளும்) உய்வை
. மென்மையான மனத்தியல்பில் செய்யும் சரியை, கிரியை (மெல்வினை) போன்று அருளாரோ?

ஆனால், உய்வென்பது ஏதேனும் செய்வதில்லை, ஏதும் செய்யாமல் தொய்வதில்லை, 
. எங்கேனும் செல்வதில்லை, இருக்கும் இடத்தை விட்டகல்தலும் (விள்கை) இல்லை, எனும்போது
. அது என்னவென்று தெளிந்த ஞானியர்கள் கொள்ளும் மெய்யுணவை எனக்கு விண்டுரைக்காரோ?

உய்வென்பது வெம்மையாகிக் குளிர்வதிலை (நளிர்தல்)
. உள்ளம் பக்தியின் அன்பில் மிருதுவாகி, இலேசாகி (மெல்கி) அடைவது இல்லை 
  என்றெல்லாம் ஐயுறும்போது, 
. தீராத கொடிய வினையில் (வெவ்வினை) இப்பிறப்பு செல்லுமே, நான் வேறாய் என்னுண்மை வேறாய்!

உய்வென்பது தெய்வத்தின் எல்லையை அடைவது (எய்தல்) இல்லை, 
. சில்வண்டு போல் (சில்லிகையின் எள்ள) மனம் ஒன்றாமல் ஒலிக்கும் மந்திரம் இல்லை, எனும்போது,
. தில்லையில் வாழும் வள்ளலாம் ஈசரே, நான் அடையத்தக்க உய்வை எனக்குச் சொல்லி அருள்வீரோ?

★★★★★


 

Siva Siva

unread,
Apr 3, 2021, 9:25:52 AM4/3/21
to santhavasantham
தன்ன என்ற சந்தமும் விரவிவர அமைந்ததா?

/ தில்ந /
/ இம்மை /

Subbaier Ramasami

unread,
Apr 3, 2021, 10:37:34 AM4/3/21
to santhav...@googlegroups.com
நீங்கள் சொல்வது சரிதான். பொல்லாதே  என்பது வெல்லாதே என மாறுகிறது.


ramaNi

unread,
Apr 3, 2021, 10:45:51 AM4/3/21
to சந்தவசந்தம்
நன்றி, சிவசிவா. யோசித்துத் திருத்துகிறேன்.
ரமணி

Subbaier Ramasami

unread,
Apr 3, 2021, 11:07:18 AM4/3/21
to santhav...@googlegroups.com

இரட்டைக் கட்டளைக் கலித்துறை   வண்ணம்

தந்த தனன  தனன  தனன தனதனனா

 

செந்தில் முருக, சிறுவ அழகு திகழ்பவனே
     செண்ட ணிபவ னரிய தமைய சிவன்மகனே
வந்துன் அடியர் மனமும் நெகிழும் வடிவழகே
     மண்டும் எழில்கொள் தணிகை உறையும் மணவழகே

கந்த, அரியின் மருக  தமிழ, கவியமுதே
     கண்டு மொழியர் கணவ, இறைவ கனிபவனே
சிந்தை அமரு மொருவ குறவர் மகிழுறவே
     தெண்ட னிடுவன் அருள்க உறவு திடமுறவே!

செந்தில் முருக, சிறுவ அழகு திகழ்பவனே
வந்துன் அடியர் மனமும் நெகிழும் வடிவழகே
கந்த, அரியின் மருக  தமிழ, கவியமுதே
சிந்தை அமரு மொருவ, குறவர் மகிழுறவே

செண்ட ணிபவ னரிய தமைய சிவன்மகனே
மண்டும் எழில்கொள் தணிகை உறையும் மணவழகே
கண்டு மொழியர் கணவ, இறைவ கனிபவனே
தெண்ட னிடுவன் அருள்க உறவு திடமுறவே

Subbaier Ramasami

unread,
Apr 3, 2021, 8:19:22 PM4/3/21
to santhav...@googlegroups.com
இந்தப் பாடலில் இரண்டடிகள்தான் உள்ளன. நான்கடிகள் வேண்டும் என்று ஒரு கருத்து வந்திருக்கிறது. இதை வண்ணவிருத்தமாகக் கொண்டு 13 சீர்  சந்த விருத்தமாக்குவதில் சிக்கலில்லை. ஆனால் கலைவண்ணம் என்றால் எட்டுக்கலைகள்  வரவேண்டும் என்பதையும் அறிகிறேன். இன்னும் நான்கு கலைகள் எழுதி எட்டுக்கலையாக்கிவிட்டேன். 
என்றாலும்  இப்பொழுதுள்ள மாதிரியே இருக்கலாமா கூடாதா என அன்பர்கள் சொல்ல வேண்டுகிறேன். ஏதாவது எடுத்துக்காடிருக்கிறதா?

அன்புடன் 
இலந்தை

Siva Siva

unread,
Apr 3, 2021, 8:44:41 PM4/3/21
to santhavasantham
It all depends on what your goal is!

Personally, I will say - go with whatever you like!
Making the song bigger for the sake of someone else's concept of conformance to some 'norm' in structure and in the process if the song becomes unwieldy and convoluted - I will avoid it.

V. Subramanian

Subbaier Ramasami

unread,
Apr 3, 2021, 9:46:43 PM4/3/21
to santhav...@googlegroups.com
அப்படியென்றால் அது கலைவண்ணமாக இருக்காது, திருப்புகழில் எல்லாமே எட்டுக் கலைகளாகத்தான் இருக்கின்றன. வகுப்புகள்  32 கலைகள் கொண்டியங்குவனவும் உண்டு.

இலந்தை



--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Apr 3, 2021, 9:48:18 PM4/3/21
to santhavasantham
/ வௌவல் பொல்லாதே  => வௌவற் பொல்லாதே என்றாகிச் சந்தம் பிறழுமோ? /

அவ்விடத்தில் திரியாமல் வரும் என்றே எண்ணுகின்றேன். இலக்கணம் வல்லோர் தெளிவுபடுத்தக்கூடும்.

ஆறுமுக நாவலர் சொல்வது:
===========

லகர ளகர வீற்றுப் புணர்ச்சி
149.
லகர ளகரங்களில் முன் வல்லினம் வரின், வேற்றுமையிலும் அல்வழியிலே பண்புத் தொகையிலும், உவமைத் தொகையிலும், இறுதி லகரம் றகரமாகவும் ளகரம் டகரமாகவுந் திரியும்

எழுவாய்த் தொடரினுலும் உம்மைத் தொகையிலுந் திரியாதியல்பாம்.
உதாரணம்.
பாற்குடம் அருட்பெருமை - வேற்றுமை
வேற்படை அருட்செல்வம் - பண்புத்தொகை
வேற்கண் வாட்கண் - உவமைத் தொகை
குயில்கரிது பொருள் பெரிது - எழுவாய்
கால்கை பொருள்புகழ் - உம்மைத்தொகை
பால் குடித்தான், அருள்பெற்றான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், கால்குதித்தோடினான், வால்போழ்ந்திட்டான் என மூன்றாம் வேற்றுமைத் தொகையினும், வருமொழி வினையாயவிடத்து திரியாவெனக்கொள்க.

===========

ramaNi

unread,
Apr 3, 2021, 10:14:28 PM4/3/21
to சந்தவசந்தம்

இயற்பா வகைகளில் துறை, தாழிசை என்று இனங்கள் இருப்பதுபோல் கலைவண்ணப் பாடல் வகையிலும் உருவாக்கலாம். இரண்டு கலைகள் கொண்டது கலைவண்ணத்துறை, நான்கு முதல் ஆறு கலைகள் கொண்டது கலைவண்ணத் தாழிசை என்பதுபோல்.

ரமணி

ramaNi

unread,
Apr 4, 2021, 12:20:40 AM4/4/21
to சந்தவசந்தம்

இவ்வண்ணம் அமைந்த  தண்டபாணி சுவாமிகள் பாடல் இணையத்தில் இருந்தால் சுட்டி தருகிறீர்களா?
ரமணி

Subbaier Ramasami

unread,
Apr 4, 2021, 1:00:07 AM4/4/21
to santhav...@googlegroups.com
இணையத்தில் இல்லை. ஆலந்தூர் மோகன ரங்கண் எழுதியுள்ள த்மிழ்க் கவிதைகளில் சந்த அமைப்பு என்னும் புத்தகத்தில் இருக்கிறது. உங்களிடம் அந்தப் புத்தகம் இருக்குமே

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

ramaNi

unread,
Apr 4, 2021, 1:11:35 AM4/4/21
to சந்தவசந்தம்
இல்லை. அவர் எட்டுக் கலைகளில் எழுதியிருக்கிறாரா என்றறியக் கேட்டேன். பாடலைத் தட்டெழுதியிட்டுச் சிரமப்பட வேண்டாம்.

எப்படி யாயினும், சிவசிவா சொல்வதுபோல் இந்த நீள்வண்ணக் குழைப்பில் எட்டுக் கலைகள் கொண்ட வண்ணப் பாடல் எழுதப் புகுந்தால் (எனக்கு)ப் பொருட்செறிவு மனத்துக்கு உகந்ததாக வருவதில்லை. எனவே என்பாடலை வண்ண விருத்தமாகவே கொள்ளத் தோன்றுகிறது.

ரமணி

Subbaier Ramasami

unread,
Apr 4, 2021, 1:15:39 AM4/4/21
to santhav...@googlegroups.com
பாடல் முழுவதும் கொடுக்கவில்லை. நான்கு வரிகள் மட்டுமே கொடுட்துள்ளார். 

வண்ண்ப்பெருந்திரட்டு என்னும் நூல் archive.org தளத்தில் கிடைக்கிறது. அதில் 25 வண்ணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன்.

saidevo

unread,
Apr 4, 2021, 2:41:38 AM4/4/21
to santhav...@googlegroups.com
என்னிடம் அந்நூலின் இரண்டு பாகங்கள் அச்சுப் பதிப்பாக உள்ளன. பார்க்கிறேன்.
ரமணி

Subbaier Ramasami

unread,
Apr 4, 2021, 10:07:35 AM4/4/21
to santhav...@googlegroups.com

தய்ய தய்ய தய்ய தய்ய
தய்ய தய்ய தய்ய தய்ய
தய்ய தய்ய தய்ய தய்ய – தய்யான

ஐய மெய்யை உள்ள முள்ள
      ஐய மில்லை பொய்யர் செய்யும்
      ஐவ கைநை செய்கை தள்ளி எள்ளாதே

ஐவர் செய்யும் அல்லல் ஐய
சொல்லி யுள்ளம் நைய ஒல்லை
ஐயன் வல்லன் நல்ல செய்கை செய்வானே

மைய லெல்லை ஒல்லை எய்தி
       விள்ள வுள்ளில்    எள்ள ளவ்வும்
       வைய யில்லில் அல்லல்  வௌவல் பொல்லாதே

மைய வெல்லை  தொல்லை எய்தி
        நையும் அல்ல ல்  ஐய உள்ளில்
        வைகும் ஐயன் உய்வு நல்கல் மெய்தானே

கையொ டய்ய கொய்த செல்வம்
       வெய்ய பொய்யர் கௌவு மெல்லை
      கள்ள வுள்ளம் நொய்து வைது  தள்ளாதோ

கைது செய்து வைது துள்ளி
     மைய றையில் தள்ள, நல்ல
கைவில் ஐயன் மெய்யன் உய்வு செய்தானே

வையம் மையை மெய்பெய் துள்ள
      அல்லும்   வெய்ய ஐயன்  நல்கும்
வைக றையின்  வெய்யில்  எய்த நில்லாதே

 வைய முய்ய எய்து தெய்வம்
      நல்ல உள்ளம் வைகும் மெய்யை
     மைவ ரையில் எய்தி ஐய சொல்வாயே!

 

பொருள்

ஐயனே, உண்மைப் பொருளை ஆழமாய் மனத்தில் சிந்திக்க ஐயமெதுவும் விளையாது.
பொய்மை மனம் கொண்டவர் செய்யும் பஞ்சமா பாதகங்களை நீ கேலி செய்யாதே

ஐம்பொறிகள் ஒன்று கூடித் தொல்லை செய்கிற போது வருந்தி குறையிரக்க ஐயன் உடனே வந்து நமக்கு நன்மை செய்வான்

காமத்தின் எல்லையை மிக விரைவாக எய்தி அதன் விளைவால் இவ்வையத்தில் நீ வாழும் இடத்தில் உன் இச்சையை மேலும் அடைய எவர்க்கும்  தீங்கு செய்ய விரும்புதல் பொல்லாது

எல்லைவரை மையங்கொண்டிருக்கும் அல்ல் இறைவனை மனத்தில் நினைக்க உள்ளத்தில் உறையும் ஐயன் உடனே வந்து உய்வு நல்குவான் இது உண்மை

ஐயனே, கைகவர்ந்து கொள்ளை கொண்ட செல்வத்தை க் கொடுமை மனத்தவர்  கவர்கிற போது பணத்தைத் தீய வழியில் சேர்த்துவைத்தனுடைய மனம் திருடியவனை வைது தள்ளுமல்லவா

அடுத்துச் சொல்லப்படுவது பக்த ராமதாசரின் கதை. அவரைக் கைது செய்து வைது எள்ளிக் காராக்கிரகத்தில்(மையறை) தள்ள மனமிரங்கி , கோதண்டம் தாங்கிய இராமபிரான் வந்து காப்பாற்றினான்

வையம் முழுதும் மைக்கருமையைப் பெய்திருக்கும் இருட்டைக்கிழித்து வெய்யவன் வைகறையில் வர இருட்டும் நிற்காமல் ஓடிவிடுமே! இருட்டிருந்தால் நிச்சயம் விடியல் உண்டு

இந்த வையகத்தைக் காப்பதற்காக எய்தியுள்ள தெய்வம் நல்ல உள்ளங்களில் வைகுவான் என்னும் உண்மையை, ஐயனே  மலையின் உச்சியில் எய்தி ஊருக்கெல்லாம் உரைப்பாயாக!

Siva Siva

unread,
Apr 4, 2021, 10:19:07 AM4/4/21
to santhavasantham
minor issue.
/ மைய றையில் தள்ள, நல்ல/
Due to puNarcci -  மைய றையிற்  றள்ள, நல்ல

Subbaier Ramasami

unread,
Apr 4, 2021, 10:55:10 AM4/4/21
to santhav...@googlegroups.com
நன்றி மையறையில்  வைக    என மாற்றுகிறேன். வைக - வாழும் நிலை வர 

Subbaier Ramasami

unread,
Apr 4, 2021, 11:09:47 AM4/4/21
to santhav...@googlegroups.com
இப்படி மாறுகிறது

கைது செய்து வைது தள்ள
     மைய றையில் வைக, நல்ல

Subbaier Ramasami

unread,
Apr 4, 2021, 11:19:56 AM4/4/21
to santhav...@googlegroups.com
தத்த சந்தத்திற்குக் கொடுக்கப்பட்டுள்ள இலக்கணத்தில்  குறில் வல்லின ஒற்று இடையின உயிர்மெய்க்குறில் வந்தால் என்னவாகும் எனக் கொடுக்கப்படவில்லை. ஆனால் அருணகிரி நாதர் 
கற்ப கப்பு னக்கு றத்தி கச்ச டர்த்த சித்ர முற்ற  என சித்ர எனும் சொல் வரத் தத்த சந்தத்தில் தொடுத்துள்ளார்

வீர பத்ர    என்பதற்கு என்ன சந்தம் என்று குழம்பியிருந்தேன் . தெளிவு கிடைத்து. இதோ ஒரு வண்ணப் பாடல்

வீர்பத்ரர் துதி

தான தத்த தத்த தான
   
தான தத்த தானனா

வீர பத்ர வெற்றி வீர
   
வேட மற்ற தேவனே
வேள்வி தட்டி எற்றி வீசி
   
வீறெ டுத்த வீரனே,

தீர முற்றெ திர்ப்ப தேது?
   
தேவ ரற்று வீழவே
சீறி நட்டெ டுத்த பாத
   
சீரு ரைக்க லாகுமோ?

நேரெ திர்த்து நிற்கொ ணாது
   
நீச முற்றி ஓடியே
   
நீத மற்ற எத்த ரோய
   
நீயெ திர்த்து வீசினாய்

வேர டுத்த பக்தி கூடி
     
மேவு சுத்த நேயர்கள்
     
வீறு பற்று வெற்றி கூட
     
வேணு முற்ற வீரனே!


இலந்தை

Subbaier Ramasami

unread,
Apr 4, 2021, 11:35:22 AM4/4/21
to santhav...@googlegroups.com
கௌமாரம் தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள கீழ்க்காணும் பாடலும் கரந்துரைச் செய்யுள் ஆகும் அந்தத்தளத்தில் இந்தப்பாடலுக்குச் சந்தக்குழிப்பு தவறாகக் கொடுக்கப்பட்டுள்ளது. தத்தத் தத்தத் தத்தத் தத்தத் தத்தத் தனதத் - தனதான
என இருக்க வேண்டும்

தத்தத் தத்தத் தத்தத் தத்தத்
     தத்தத் தத்தத் ...... தனதான

......... பாடல் .........

தத்தித் தத்திச் சட்டப் பட்டுச்
     சத்தப் படுமைக் ...... கடலாலே

சர்ப்பத் தத்திற் பட்டுக் கெட்டுத்
     தட்டுப் படுமப் ...... பிறையாலே

சித்தத் துக்குப் பித்துற் றுச்சச்
     சித்ரக் கொடியுற் ...... றழியாதே

செப்பக் கொற்றச் சிற்பப் பத்திச்
     செச்சைத் தொடையைத் ...... தரவேணும்

கொத்துத் திக்குப் பத்துட் புக்குக்
     குத்திக் கிரியைப் ...... பொரும்வேலா

கொச்சைப் பொச்சைப் பொற்பிற் பச்சைக்
     கொச்சைக் குறவிக் ...... கினியோனே

சுத்தப் பத்தத் தர்க்குச் சித்தத்
     துக்கத் தையொழித் ...... திடும்வீரா

சொர்க்கத் துக்கொப் புற்றக் கச்சிச்
     சொக்கப் பதியிற் ...... பெருமாளே.

கரந்துறையும் பாடல்

தத்தத் தனதத் தனதான

சத்தப் படுமைக் ...... கடலாலே

தட்டுப் படுமப் ...... பிறையாலே

சித்ரக் கொடியுற் ...... றழியாதே

செச்சைத் தொடையைத் ...... தரவேணும்

குத்திக் கிரியைப் ...... பொரும்வேலா

கொச்சைக் குறவிக் ...... கினியோனே

துக்கத் தையொழித் ...... திடும்வீரா

சொக்கப் பதியிற் ...... பெருமாளே.

Pas Pasupathy

unread,
Apr 4, 2021, 11:45:33 AM4/4/21
to Santhavasantham
ஆம். பிள்ளையவர்களின் மூலத்தில் 
  தத்தத் தத்தத் தத்தத் தத்தத் 
         தத்தத் தனனத் - தனதான  

என்று சரியாக இருக்கிறது. ( கௌமாரத்தில் இப்படிப் பல தட்டச்சுப் பிழைகள் உண்டு.)

Siva Siva

unread,
Apr 4, 2021, 12:18:24 PM4/4/21
to santhavasantham
They grammar books authors may have ignored such words - probably because in standard Tamil words, after a vallina mey only a vallina uyirmey will come.
But Arunagirinathar songs may have Sanskrit words in such patterns - such as உக்ர, ரத்ன, etc.

Subbaier Ramasami

unread,
Apr 4, 2021, 2:08:57 PM4/4/21
to santhav...@googlegroups.com
தமிழில் எழுதும் போது வீர பத்திர, இரத்தினம்  , சித்திர   ஒரு' தி' இடையில் வந்துவிடும் . அதனால்தான் கொடுக்கவில்லை போலும்.



On Sun, Apr 4, 2021 at 11:18 AM Siva Siva <naya...@gmail.com> wrote:
They grammar books authors may have ignored such words - probably because in standard Tamil words, after a vallina mey only a vallina um.

ramaNi

unread,
Apr 5, 2021, 1:38:13 AM4/5/21
to சந்தவசந்தம்
வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள் இயற்றிய அறுவகை இலக்கணம் நூலை இங்கே தரவிறக்கலாம்:
https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZpejZl3&tag=வண்ணச்சரபம்%20தவத்திரு%20தண்டபாணி%20சுவாமிகள்%20இயற்றிய%20அறுவகை%20இலக்கணம்#book1/

ரமணி


Siva Siva

unread,
Apr 5, 2021, 10:18:56 AM4/5/21
to santhavasantham

Subbaier Ramasami

unread,
Apr 12, 2021, 12:53:28 PM4/12/21
to santhavasantham

திருவாறை முருகன் வண்ணம்

 தனனா தத்தனதத் தனதான

முருகா ஒப்புயர்வற் றுளதேவா
      முகமா றற்புதமுற் றுயர்வோனே
ஒருமா துக்குறவுற் றிடவேதான்
      உயர்வே டப்புனைவுற்  றுளதேவா
கருகூ டற்குடமுற் றுழலாமல்
      கனிவே நற்பரிவுற் றருள்வாயே
திருமா லிற்குரிமைப் பெரியோனே
      திருவா றைப்பதியிற் பெருமாளே!

 

பிரித்து

முருகா  ஒப்புயர்வு அற்று உளதேவா
      முகம் ஆறு அற்புதம் உற்று உயர்வோனே
ஒரு மாதுக்கு உறவுற்றிடவே தான்
      உயர் வேடப் புனைவு உற்று உளதேவா
கரு கூடற்குடம் உற்று உழலாமல்
     கனிவே நற்பரிவுற்று அருள்வாயே
திருமாலிற்கு உரிமைப் பெரியோனே
     திருவாறைப் பதியிற் பெருமாளே

இலந்தை 12-4-2021


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Apr 12, 2021, 1:26:36 PM4/12/21
to santhavasantham
இதுபோல் அமைப்பில் திருப்புகழ் உள்ளதா?

/தனனா தத்தனதத் தனதான/
I think it is better to describe this pattern as 
தனதானத் தனனத் தனதான

/கரு கூடற்குடம்/
கரு - முற்றியலுகரம். வல்லொற்று மிகுமோ?

/திருமாலிற்கு உரிமைப் பெரியோனே/ = ?

திருவாறை = எங்குள்ளது?   

Subbaier Ramasami

unread,
Apr 12, 2021, 1:59:56 PM4/12/21
to santhav...@googlegroups.com
தனதானத் தனன தனதான  என்பதுதான்  பொருத்தம் எனத் தெரிகிறது. அப்படியே மாற்றிக்கொள்கிறேன்.
திருப்புகழ் இருப்பதாகத் தெரியவில்லை
கரு பெயர்ச்சொல் எனவே மிகாது.
திருவாறை என்பது  கயத்தாற்றுக்குப பழங்காலப் பெயர்.  ஸ்காந்த புராணத்தில் திருவாறைத் தல்புராணம் இருக்கிறது. அதில்தான் எங்கலூர்க் கோவிலில் இராமன் சிவனிடம் வில்பெற்ற செய்தி இருக்கிறது. அந்தக்கோவிலுக்குப் பக்கத்தில் எங்களூர்(இலந்தைக்குளம்)இருந்தாலும் சுவாமி புறப்பாடு எல்லாம் இப்பொழுது இல்லாத திருவாறை இருந்ததாகக் கருதப்பாடும் இடத்தில்தான் நடக்கிறது. அந்தப் பகுதி இன்னும் பொட்டலாகவே இருக்கிறது

இலந்தை

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Subbaier Ramasami

unread,
Apr 12, 2021, 2:01:44 PM4/12/21
to santhavasantham
திருமாலுக்கு மருகன் என்னும் உரிமையுடைய பெரியோன்

On Mon, Apr 12, 2021 at 12:59 PM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
தனதானத் தனன தனதான  என்பதுதான்  பொருத்தம் எனத் தெரிகிறது. அப்படியே மாற்றிக்கொள்கிறேன்.

Subbaier Ramasami

unread,
Apr 13, 2021, 10:11:13 PM4/13/21
to santhavasantham

                                                                                  

சரணகம லாலயத்தில்  சந்தம்

 

தனதனன தான தத்த தனதனன தான தத்த

தனதனன தான தத்த – தனதான

 

முதுவயது மேற மெத்த முதுகுவளை வாக நெற்றி
                  முடைவரிகள் ஓடி  வற்றி- விடமேலும்
           முகமொளியி லாதி ருக்க  முனகலுரு வாய்பி தற்ற
                 மொழிகுழறு மாறு பொக்கை- உருவாக
நிதமழகு கூடு கற்றை முடிகருமை யோவெ ளுத்து
                  நிறைநரையு மேயுதிர்க்கும் – நிலையாகி
           நிறையொளியு மேகுறைத்து விழிகள்தரு மேசிதைத்து
                நினைவுதடு மாறி வெட்கும் – மனம்நோகும்
உதவிபல வாய ளித்த உரமுடைய நீள்கரங்கள்
                  உலைவடைய வேத ளர்த்த -  உருமாறும்
            உலவுமழ கான நெட்டை உருவுடைய கால்கள் வற்றி
                   உலவமுடி யாது கெட்டு – முடமாக
எதுவரையி லேயி ருக்கும் இனியுமெமை யே  வருத்த
                   இனுமுயிரை யே விடுத்து -மடியாதோ
             எனவுறவெ லாம்வெ றுக்க இதயவொலி யோதுடிக்க
                    எழில்முருக னேபுரக்க வரவேணுமே!

 

இலந்தை
அருஞ்சொற்பதம்-   நீரிருந்த ஓடை வற்றி விட்டதைப் போல நெற்றியில் குறுக்கும் நெடுக்குமாக  வரிகள் ஓடிப் பின்னலிட

இன்னும் எவ்வளவு நாள்கள்  இது எம்மை வருத்திக்கொண்டு உயிரோடு இருக்கும். சீக்கிரம் செத்துத் தொலையக் கூடாதோ என்று உறவினர்கள் வெறுக்க அதையறிந்து இதயம் வேதனையால் துடிக்க முருகன்தான் வந்து காக்கவேண்டும் என்பது பொருள்.

எனக்கு ஏதாவது மனவருத்தமோ என நினைக்கவேண்டாம். இது பொதுவாக முதியோருக்கு வரக்கூடிய நிலை.

 

Siva Siva

unread,
Apr 13, 2021, 10:38:04 PM4/13/21
to santhavasantham
Nice.

/முனகலுரு வாய்பி தற்ற/ = ?

/உரமுடைய நீள்கரங்கள்/
Check pattern.

/எனவுறவெ லாம்வெ றுக்க இதயவொலி யோதுடிக்க
                    எழில்முருக னேபுரக்க வரவேணுமே!/
Last phrase length?

Does this sentence require additional words to be inferred to complete the meaning?

"எனவுறவெ லாம்வெ றுக்கும் நிலையையடை யாதி ருக்க
                    எழில்முருக னேபுரக்க வருவாயே"
may possibly fit.



Subbaier Ramasami

unread,
Apr 13, 2021, 11:06:34 PM4/13/21
to santhav...@googlegroups.com
நன்றி

எனவுறவெ லாம்வெ றுக்கும் நிலையையடை யாதி ருக்க
                    எழில்முருக னேபுரக்க வருவாயே"--அருமையான மாற்றம். அப்படியே மாற்றுகிறேன்
நீள்கரத்தை என மாற்றுகிறேன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Apr 13, 2021, 11:13:55 PM4/13/21
to santhavasantham
/சரணகம லாலயத்தில்  சந்தம்

 

தனதனன தான தத்த தனதனன தான தத்த

தனதனன தான தத்த – தனதான/

Here is one of my earlier songs in this syllabic pattern.

ramaNi

unread,
Apr 14, 2021, 9:16:14 AM4/14/21
to சந்தவசந்தம்
இந்த வண்ணக் குழிப்பில் அடியேன் இன்று செய்த பாடல் இங்கே:

ரமணி

Subbaier Ramasami

unread,
Apr 15, 2021, 7:14:17 PM4/15/21
to santhav...@googlegroups.com

சிவசிவா எழுதிய சந்தத்தை ஒட்டி ஒருபாடல்

தனா  தனன தான தனா  தனன தான

தனா  தனன தான -தனதான

 

பலே  உனது பாட லடா யென விடாது
     பரா வுபுகழ் வேணும் – உதவாயோ
      படா ரெனவு தாரம் முனே பெறவி டாது
       பலா னதையு நாடி- விழுவேனை

எலே இதுவ டாது சதா இதை வி டாமல்
       இதே எனது வேலை – எனவேதான்
        இரா  மலரு ஞான உலா வருமொர்  பாதை
        இதோ எனவு தார – மொழிவாயே

கலா பமயில் மீதி லுலா வுவடி வேல
      கனா வெனவென் னாசை- விழலாமோ
      கரூ ரிலினி மீள விழாவகையுன் னாசி
       கறார் ரெனவென்  நாத –தருவாயே

நிலா துவிரை காலம் நியாய மது தேவை
       நிதா னமினி யேது – நிறைவான
        நிலா வுபுகழ் ஞானம் வழா துசெலும் வாழ்வு
       நிலா வதன வேல – அருள்வாயே!

இலந்தை


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Apr 15, 2021, 8:19:31 PM4/15/21
to santhavasantham
Nice verse using some modern vocabulary too!
I see some effects of the recent folk song-style kaviyarangam.

/பலானதை/ = ?

/ கரூரிலினி / = ?
"கரு ஊர்" பொதுவாகக் கருவூர் என்று வரும். செய்யுள் விகாரம் ஏற்று வந்ததா?

/ நிலா வதன வேல /
ஆண்களின் முகத்தைத் திங்களோடு உவமிப்பதும் உண்டா?

Subbaier Ramasami

unread,
Apr 15, 2021, 8:30:31 PM4/15/21
to santhav...@googlegroups.com
பலானவெலாம் என்னவென்று உங்காளுக்குத் தெரிய வேண்டாம்
கரூரில் - கவிதைச் சலுகை
சந்திரன் ஆண் தானே!   ஆணின் முகத்தை ஆணுக்கு ஒப்பிடுவதில் தவறில்லையே!    

ஆணின் முகத்தில் தான் 'கருமை' உண்டு  . அது இயற்கை. பெண்ணின் முகத்தில் கரு  மையுண்டு. அது செயற்கை


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Subbaier Ramasami

unread,
Apr 15, 2021, 8:39:23 PM4/15/21
to santhav...@googlegroups.com
உங்காளுக்கென்றால் பலானவெல்லாம் உங்களுக்குத் தெரியும் என்று பொருளாகிவிடும். எனவே உங்களுக்கு எனக் கொள்க!

Siva Siva

unread,
Apr 15, 2021, 8:55:55 PM4/15/21
to santhavasantham
OK.

பலான் palāṉ , n. < U. fulān. Such a one; அப்பேர்ப்பட்டவன். (C. G.)

பலான palāṉa , adj. < id. Definitely known, as a person or thing; இன்னதென்றறியப் பட்ட. Loc.

பலானவன் palāṉavaṉ , n. < id. Certain or such and such a person; இன்னான். அவன் பலானவனென்று தெரியுமா? Madr.

Subbaier Ramasami

unread,
Apr 15, 2021, 9:30:30 PM4/15/21
to santhav...@googlegroups.com
திரைப்படங்களில் அடிக்கடி பயன்படுத்தப்படும்  வழக்குச் சொல்

Subbaier Ramasami

unread,
Apr 15, 2021, 9:45:32 PM4/15/21
to santhav...@googlegroups.com
/ நிலா வதன வேல /
ஆண்களின் முகத்தைத் திங்களோடு உவமிப்பதும் உண்டா?

ஸ்ரீசுப்ரமண்ய கவசம்

ஸ்ரீ சுப்ரமண்ய கவசம்
ஸிந்தூராருணம் இந்து காந்தி வதனம்
கேயூரஹாராதிபி:

திவ்யை ராபரணைர் விபூஷித தனும் ஸ்வர்காதி ஸௌக் யப்ரதம்மி
அம்போஜபய சக்தி குக்குட தரம் ரக்தாங்க ராகோத்வஜ்வலம்
ஸுப்ரமண்ய முபாஸ்மஹே ப்ரணமதாம் பீதி ப்ரணாசோத்பவம்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Subbaraman NV

unread,
Apr 15, 2021, 9:49:11 PM4/15/21
to santhav...@googlegroups.com

ENVIUS THOUGHTS crosses overall view score of 3,04,000

With the 17th view at 06.30 hrs. today Friday the Sixteenth April ( 16/04/2021) the Blog Envius Thoughts in https/nvsr.wordpress.com, has crossed over all view score of Three Lac and Four Thousand (3, 04, 000) on this day thanks to your views on the 2162nd day of the Blog with 2369 posts . Kindly continue to view and support. Thanks.




--
N V Subbaraman,
Editor, Young Poet,
12 / 1045 Jeevan Bhima Nagar,
Chennai - 600101


Visit my blog: http://nvsr.wordpress.com
Facebok:  http://facebook.com/subbaraman.nagapatnamviswanathan

Subbaier Ramasami

unread,
Apr 15, 2021, 9:53:03 PM4/15/21
to santhav...@googlegroups.com
நல்வாழ்த்துகள். தொடர்க, வெல்க!

இலந்தை

On Thu, Apr 15, 2021 at 8:49 PM Subbaraman NV <nvsubb...@gmail.com> wrote:

ENVIUS THOUGHTS crosses overall view score of 3,04,000


--
N V Subbaraman,
Editor, Young Poet,
12 / 1045 Jeevan Bhima Nagar,
Chennai - 600101


Visit my blog: http://nvsr.wordpress.com
Facebok:  http://facebook.com/subbaraman.nagapatnamviswanathan

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Apr 15, 2021, 11:04:55 PM4/15/21
to santhavasantham
Thanks.
Is it only a Sanskrit literary usage? Are there Tamil usages too? Just wondering, as I do not recall seeing or hearing such a description of a male face in Thevaram.
In the context of women, I have come across phrases such as மதிமுகம், பிறைநுதல், வாண்முகம் (வாள்முகம்), etc. in thevaram.

V. Subramanian

Ramamoorthy Ramachandran

unread,
Apr 15, 2021, 11:32:19 PM4/15/21
to Santhavasantham
பலான = obvious 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Subbaier Ramasami

unread,
Apr 15, 2021, 11:59:35 PM4/15/21
to santhav...@googlegroups.com
இலங்கையில் ஆண்களுக்கு மதிவதனன்  என்னும் பெயர் அதிக முள்ளது


தமிழ் இலக்கிய வரலாற்றுச் சுருக்கம்
35862.JPG
நூலக எண்35862
ஆசிரியர்மதிவதனன், தி.
நூல் வகைஇலக்கிய வரலாறு
மொழிதமிழ்
வெளியீட்டாளர்-
வெளியீட்டாண்டு1999
பக்கங்கள்106

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Vis Gop

unread,
Apr 16, 2021, 2:45:29 AM4/16/21
to santhav...@googlegroups.com
மதியழகன் தமிழ்நாட்டில் நிறைய உண்டு. 
கோபால். 

Sent from my iPhone

Vivek Bharathi

unread,
Apr 16, 2021, 7:37:43 AM4/16/21
to santhavasantham
அருமையான குழிப்பு ஐயா. என்னையும் எழுத வைத்தது. 

தனா தனன தான தனா தனன தான
தனா தனன தான தனதான

நிரா சையினி லோடி சதா வியர்வை மேவ
நிதா னமுமி லாது திரிவேனே
நிலா தரிய காம மயா லழகு தேடி
விடா துலக மீதி லலைவேனே

தரா துதவி யேது மிடா துடைமை பேசி
தரா தலமு லாவி வளர்வேனே
தகா முறையி லாய்வு டையா ரவரை யேசி
மகா பெரிய பாவி எனவானேன்

ஒரோ ரிடமு மோதி யையோ சருகு மாகி
எழா தடிமை ஆகி விழுவேனே
இதே நிலைமை யாகி விடா தெனையும் நேசி  
இதோ தருணம் நீய ருளுவாயே

அரா வணையில் மேவி யதோர் அழகு மாயன்
ஒரே இளைய ளான சிவன்பாதி
அடா துவிளை யாடி டுதீ தழிய சூலம்
அபா யமற வீசு முமையாளே!! 

Siva Siva

unread,
Apr 16, 2021, 9:01:56 AM4/16/21
to santhavasantham
/ மதியழகன் தமிழ்நாட்டில் நிறைய உண்டு.  /
I think here they are hoping to mean அறிவு and not moon..

Vis Gop

unread,
Apr 16, 2021, 9:22:55 AM4/16/21
to santhav...@googlegroups.com
May be so. But I thought மதிவாணன் kind of names indicate மதி=அறிவு. But மதி = moon goes better with அழகு. சிலர் ஸோமஸுந்தரன் என்கிற பெயரைத் தமிழில் மதியழகன் என்று மாற்றிக் கொண்டதாகவும் படித்திருக்கிறேன். [உண்மையில் அது உமையோடுறை அழகனைக் குறிக்கும்]. 
Gopal. 

Sent from my iPhone

Siva Siva

unread,
Apr 16, 2021, 9:35:22 AM4/16/21
to santhavasantham
Sanskrit dictionary says: 
https://dsal.uchicago.edu/cgi-bin/app/apte_query.py?qs=%E0%A4%9A%E0%A4%A8%E0%A5%8D%E0%A4%A6%E0%A5%8D%E0%A4%B0&searchhws=yes&matchtype=default 
चन्द्र candra a. [चन्द् णिच् रक्] Ved. 1 Glittering, bright, shining (as gold). -2 Lovely, beautiful. -न्द्रः 1 The moon; ......................

So, I wonder if - names like 'chandravadana' (மதிவதனன்) may mean - beautiful face - and not necessarily 'moon-like face'. Gopal or others may be able to explore further.
In Tamil, women are described as "வாண்முகம்" (வாள் முகம்) = bright-faced.



Pas Pasupathy

unread,
Apr 16, 2021, 9:45:08 AM4/16/21
to Santhavasantham
ராம சந்திரன் ?

On Fri, 16 Apr 2021 at 09:35, Siva Siva <naya...@gmail.com> wrote:
Sanskrit dictionary says: 
https://dsal.uchicago.edu/cgi-bin/app/apte_query.py?qs=%E0%A4%9A%E0%A4%A8%E0%A5%8D%E0%A4%A6%E0%A5%8D%E0%A4%B0&searchhws=yes&matchtype=default 
चन्द्र candra a. [चन्द् णिच् रक्] Ved. 1 Glittering, bright, shining (as gold). -2 Lovely, beautiful. -न्द्रः 1 The moon; ......................

So, I wonder if - names like 'chandravadana' (மதிவதனன்) may mean - beautiful face - and not necessarily 'moon-like face'. Gopal or others may be able to explore further.
In Tamil, women are described as "வாண்முகம்" (வாள் முகம்) = bright-faced.

Vis Gop

unread,
Apr 16, 2021, 9:48:27 AM4/16/21
to santhav...@googlegroups.com
But, I think, we can’t ignore moon in this context, because சந்த்ர, சசி, ஸோம, இந்து, - etc. occur as equivalents. 
Gopal. 

Sent from my iPhone

Subbaier Ramasami

unread,
Apr 16, 2021, 9:57:57 AM4/16/21
to santhav...@googlegroups.com
பாடல் அருமை

தகா முறையி லாய்வு டையா ரவரை யேசி--- தகாதமுறையில் ஆய்வு உடையாரை  ஏசுதல் தவறில்லையே!

On Fri, Apr 16, 2021 at 6:37 AM Vivek Bharathi <tamiludanvi...@gmail.com> wrote:
அருமையான குழிப்பு ஐயா. என்னையும் எழுத வைத்தது. 

Siva Siva

unread,
Apr 16, 2021, 10:01:53 AM4/16/21
to santhavasantham
Good effort in a short time!
You need to check some places for puNarcci - that can change the sound.

Subbaier Ramasami

unread,
Apr 16, 2021, 10:02:31 AM4/16/21
to santhav...@googlegroups.com
சந்திரவதனன் என்பது இலங்கையில் பொதுவான பெயர். சந்திரவதனன் என்பவன் தனது தந்தையைப் பீடித்த சனிபகவானை வேண்டித் தந்தையை விட்டுவிட்டுத் தன்னைப்பீடிக்குமாறு  சனிபவகவானுக்குத் தனிச்சிலைசெய்து வேண்ட சனி மகிழ்ந்து  தந்தையை விட்டுவிட்டு சந்திரவதனனை ஏழரை நாழிகை மட்டும் பிடித்தான். சந்திரவதனன் பூஜித்த சிலை கேரளக் கோவிலொன்றில் இருக்கிறது 

On Fri, Apr 16, 2021 at 8:45 AM Pas Pasupathy <pas.pa...@gmail.com> wrote:
ராம சந்திரன் ?

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Apr 16, 2021, 10:06:21 AM4/16/21
to santhavasantham
As they state in the 12th entry for the word 'chandra':
 -12 The number 'one' (used at the end of comp. चन्द्र means 'excellent', 'eminent' or 'illustrious'; as पुरुषचन्द्रः 'a moon of men', an excellent or illustrious man).

On Fri, Apr 16, 2021 at 9:45 AM Pas Pasupathy <pas.pa...@gmail.com> wrote:
ராம சந்திரன் ?

On Fri, 16 Apr 2021 at 09:35, Siva Siva <naya...@gmail.com> wrote:
Sanskrit dictionary says: 
https://dsal.uchicago.edu/cgi-bin/app/apte_query.py?qs=%E0%A4%9A%E0%A4%A8%E0%A5%8D%E0%A4%A6%E0%A5%8D%E0%A4%B0&searchhws=yes&matchtype=default 
चन्द्र candra a. [चन्द् णिच् रक्] Ved. 1 Glittering, bright, shining (as gold). -2 Lovely, beautiful. -न्द्रः 1 The moon; ......................

So, I wonder if - names like 'chandravadana' (மதிவதனன்) may mean - beautiful face - and not necessarily 'moon-like face'. Gopal or others may be able to explore further.
In Tamil, women are described as "வாண்முகம்" (வாள் முகம்) = bright-faced.


பசுபதி

Vivek Bharathi

unread,
Apr 16, 2021, 10:16:02 AM4/16/21
to santhavasantham
மிக்க நன்றி இலந்தை ஐயா. தகாத முறையில் ஆய்வு செய்பவர்களை ஏசுவதில் தவறில்லை ஐயா. அந்த அடி அப்படி ஒரு மயக்கம் தருவதை இப்போதுதான் உணர்ந்தேன். அவ்வடியை இப்படி மாற்றுகிறேன்.

//தகா முறைய னாய றிவோ ரவரை யேசி
மகா பெரிய பாவி எனவானேன்//

நன்றி சுப்பிரமணியன் ஐயா. கவனித்தேன். என் கண்ணில் பட்ட ஓரிடத்தைத் திருத்தியுள்ளேன். மற்ற இடங்களில் இருந்தால் சுட்டித் தருமாறு வேண்டுகிறேன்.

//அடா துவிளை யாடி டுதீ தழிய வேலை
அபா யமற வீசு முமையாளே!!//

குறிப்பு : பத்திரிகைப் பணி, என்னை மாசுபடுத்துகிறது. இங்கே ஒற்றுகளுக்கு வேலையில்லை. அவசியமும் இல்லை. அப்படியே பழக்கப்பட்டு கவிதையிலும் நிறைய ஒற்றுப்பிழைகள் வருகின்றன. நேரத்தை எல்லாம் ஒழுங்காக்கி, இங்கும் செலவிட எண்ணுகிறேன். நல்ல தமிழ் என்னை விட்டு மறைந்துவிடுமோ என்ற கவலையும் உள்ளது. பெரியவர்கள் என் பிழைகளைச் சுட்டி எனக்கு உதவியருள்க. 

Siva Siva

unread,
Apr 16, 2021, 10:30:32 AM4/16/21
to santhavasantham
பத்திரிகையில் எழுதுவதில் ஓற்றுப்பிழை இன்றி எழுதினால் குற்றம் என்கிறார்களா?!

But I agree with you. Constant exposure to writings with many errors leads us to internalize those errors - and then we no longer see those errors - in others writings as well as in our own writings.
Fortunately, I do not read much. So, I am lucky in a sense!

Provide the updated verse - then I can point out if there are any issues that catch my eye.

Vivek Bharathi

unread,
Apr 16, 2021, 10:35:58 AM4/16/21
to santhavasantham
ஆம், பல இடங்களில் இங்கே ஒற்று தேவையில்லை என்கிறார்கள். நாம் இட்டு எழுதினாலும் நீக்கச் சொல்கிறார்கள். அதுவே பழக்கமாகிறது. மாற்றிக்கொள்ள வேண்டும். விரைவில்...

இதோ, திருத்தப்பட்ட பாடல்.

நிரா சையினி லோடி சதா வியர்வை மேவ
நிதா னமுமி லாது திரிவேனே
நிலா தரிய காம மயா லழகு தேடி

விடா துலக மீதி லலைவேனே

தரா துதவி யேது மிடா துடைமை பேசி
தரா தலமு லாவி வளர்வேனே
தகா முறைய னாய றிவோ ரவரை யேசி
மகா பெரிய பாவி எனவானேன்

ஒரோ ரிடமு மோதி யையோ சருகு மாகி
எழா தடிமை ஆகி விழுவேனே
இதே நிலைமை யாகி விடா தெனையும் நேசி  
இதோ தருணம் நீய ருளுவாயே


அரா வணையில் மேவி யதோர் அழகு மாயன்
ஒரே இளைய ளான சிவன்பாதி
It is loading more messages.
0 new messages