முடியும் அடியும்
இடம்சென்றேன் காரில், எதிர்ப்பக்கம் பார்த்தால்
எனக்குத் தெரியா இடம்.
கண்டு பிடித்தேனென் கட்டிலுக்குக் கீழே
கறுப்பு நிறத்தில்நூற் கண்டு.
உடைந்துள்ள கண்ணாடி உட்கதவின் பின்னாடி
உள்ளதே என்றன் உடை
அடிவீழ்ந் தழுகின்றேன் ஆண்டவனே தாராயோ
ஆற்றல் கவிதை அடி!
படியென்றான் பேரன், படிப்படியாய் ஏறிவந்தேன்
பத்திரமாய் நல்ல படி.
கடைசியில் தேடிநான் கண்டு பிடித்துவிட்டேன்
கண்ணாடி விற்கும் கடை.
காட்டு வெளிகளிலே காணும் மலர்களையுன்
கண்ணின் விருந்தாகக் காட்டு.
ஓட்டுக்கள் போட்டும் உதவாத பேர்வழியை
ஊருக்குள் வாராமல் ஓட்டு.
பாடு படும்போது பாங்காய்க் களைப்பொழிய
பண்ணோடு நீபாட்டுப் பாடு.
ஓடும் கனகமும் ஒன்றாக எண்ணுபவர்
உத்தமர், அன்னார்பின் ஓடு.
Below are some songs not included in Madhisudi Thudhipadi Vol-3.
2009-01-01 to 2009-07-01
அடியும் முடியும் - (வேறு பாடல்கள்)
=============
(குறள்வெண்பாவில் முதலிலும் முடிவிலும் ஒரே சொல் வேறு பொருள்பட வருமாறு மடக்கு அமைந்தது)
முற்குறிப்பு: மதிசூடி துதிபாடி தொகுதி-3 நூலில் தொகுப்பில் இடம்பெறாத சில பாடல்கள் இவை. இச்சொற்களால் அமைந்த வேறு பாடல்கள் அத்தொகுப்பில் உள்ளன.
25-1) மதி
-----------
மதியில் தசமுகனை ஓர்விர லாலே
மிதித்தான் அணிவான் மதி.
மதி - 1. அறிவு; 2. சந்திரன்;
36-1) அசை
-----------------
அசைத்தஅர(வு) ஐயன் அரையிருக்கச் சென்னி
மிசையாடும் ஓர்பாம்(பு) அசைந்து.
அசைத்தல் - கட்டுதல்;
அசைதல் - இயங்குதல் (To move, stir);
60-1) குடி
-----------
குடிவிடம்சேர் கண்டனுக்குக் குற்றேவல் செய்யும்
அடியார் மனமே குடி.
விடம் குடித்தல் என்பது இங்கே நஞ்சு உண்டலைச் சுட்டியது;
குடி - உறைவிடம்;
63-1) படை
--------------
படையெனத் தாக்கும் பழவினைதீர் ஈசன்
உடையானோர் சூலப் படை.
படை - 1. சேனை; 2. ஆயுதம்;
******
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCOz72dW%3D_7rE%3DtQGSPEGV-ivLNeVB1swgFFXGHRAGFPug%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
--
அணிபல பூண்டே அழகாய் இருப்பாள்
மணிக்குரல் வாய்த்த மலர்ஆ சிரியை
அறியா எனக்கும் அழகாய் விளக்கும்
பிறிது மொழிதல் அணி
பால்நினைந் தூட்டிப் பசியினை நீக்கிடும்
சால்புடைத் தாயெனத் தாங்குவாள் என்னை
விரிசடை யானின் விளங்குமை போல
பரிவுடையள் என்றுமென் பால்.
-கருவூர் இனியன்.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCO0-HmNYxMWe25_TrBWS4du3TxZaMoQOO610E4Nmuszyw%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCMZWFTWujiyc%2BfyGYrHaVjXoxdXGTGpu4CUrT5o1n2zWA%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAKHh4Gu%2BQVPNdQCuaUP1YT63HnV0k-3ZanKWSniZFX%3DL3v1LvQ%40mail.gmail.com.
திருவாளர்கள்.இராம்நாத் பகவத், அரசி.பழனியப்பன்,இனியன் ஆகியோரின் பாடல்கள் யாவும் அருமை—தில்லைவேந்தன்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0himZa_vVW8ugAtY7b0WneNEt%3DUjVTOWyPwXTLw2FpEADw%40mail.gmail.com.
2009-01-01 to 2009-07-01
அடியும் முடியும் - (பொதுப்-பாடல்கள்)
=============
(குறள்வெண்பாவில் முதலிலும் முடிவிலும் ஒரே சொல் வேறு பொருள்பட வருமாறு மடக்கு அமைந்தது)
1-b) முடி
--------------
முடிமுடி என்று முறைத்தார்; சமைத்து
முடித்தபின் பார்த்தேன் முடி!
முடி - 1. உச்சி; 2. கூந்தலை முடிதல்; 3. செய்து முடித்தல்; 4. இக்காலத் தமிழில் மயிர் என்ற பொருள்;
3-b) கொல்
--------
கொல்வெட்(டு) எனச்சிலர் கற்றுக் கொடுக்கிறார்
நல்வழி யென்(று)இஃதென் கொல்.
4-b) கல்
------------
கல்லென்றும் கல்லார் சிலர்அவர் வாழ்வினில்
செல்லும் வழியெங்கும் கல்.
6-b) படு
--------
படுபடு என்றார். கொசுவலை இன்றி
நடுநடுத்தேன். சொன்னார் படு!
8-b) காட்டு
---------
காட்டுவிலங் கின்கடையோர் கையில் விலங்கிட்டுப்
பூட்டு; திருந்தவழி காட்டு.
17-b) அறை
--------------
அறைவண்டு தேனுண் டுறங்கிவிட்டால் பூவே
நறைஆர் படுக்கை அறை.
18-b) சிறை
-------------
சிறைஆர் கிளிக்குச் சிலமக்கள் வைத்தார்
அறையிலே கூண்டுச் சிறை.
36-b) அசை
------------
அசைவிளக்கும் ஆசிரியர் அங்(கு)ஓர் குறட்டை
இசைகேட்டுச் சொன்னார், "அசை"!
45-b) ஈறு
------------
ஈ(று)இன்றி என்றுமினிப்(பு) உண்டிருந்தால் உண்டாமே
பே(று)இவர்க்குப் பல்லின்றி ஈறு.
52-b) தொக்கு
-----------------
தொக்கிருந்த(து) அத்தயிர்ச் சோற்றின் நடுவினில்
மிக்கிருந்த(து) ஆமலகத் தொக்கு.
தொக்கு - 1. சேர்ந்து; மறைந்து; 2. ஊறுகாய் வகை;
ஆமலகம் - நெல்லி;
68-b) நகர்
------------
நகர வொணாவண்ணம் நல்ல நெரிசல்;
பகர்வார் பெயர்தான் நகர்!
x-1) சொல்வதை
---------------
சொல்வதை நற்றமிழில் சொல்ல அறிகிலர்;
செல்லிடம்எல் லாம்சொல் வதை.
சொல் வதை - தமிழ்க்கொலை;
x-2) கடன்
--------
கடன்என்று வாங்கியதைக் காலம் தவறா(து)
அடைத்தல் ஒருவர் கடன்.
V. Subramanian
முடித்தபின் பார்த்தேன் முடி!/
முடியை வைத்து நல்ல வார்த்தைச் சிலம்பம் ஆடியுள்ளீர்! அடியை மட்டும் ஏன் விட்டு விட்டீர்? 😃
/கொல்வெட்(டு) எனச்சிலர் கற்றுக் கொடுக்கிறார்
நல்வழி யென்(று)இஃதென் கொல்./
சில (தமிழ்நாட்டு) அரசியல்வியாதிகளுக்கும் (உள்நாட்டு/வெளிநாட்டு) மதவாதிகளுக்கும் தேவையான அறிவுரை
/நகர வொணாவண்ணம் நல்ல நெரிசல்;
பகர்வார் பெயர்தான் நகர்!/
தி.நகர் ரங்கநாதன் தெரு தீபாவளிக் கும்பலை நினைவுக்குக் கொண்டு வருகின்றது. சும்மா நின்று கொண்டிருந்தாலே போதும். Escalator போல் நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு நம்மை நகர்த்திக் கொண்டு சென்று விடும் கும்பல்.
பி.கு: 1b, 2b, 68b, X1, X2,... இத்யாதி நம்பர்களுக்கு என்ன அர்த்தம்? உங்கள் internal ரெஃபெரன்ஸா? அது ஏன் இங்கே இருக்கின்றது? படிக்கிறவர்கள் மண்டை காயட்டுமே என்ற நல்ல எண்ணமோ?😃
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCOKtM0K6%3DQjEHV2H89p5%3DCsezWSTFWBgj4-1y0cRYOs%3Dw%40mail.gmail.com.
எண்ணுதற்குப் பற்பலவாய் இன்சுவைப் பாட்டிருக்க
எண்ணத்தில் எண்வந்த தெண்ணு.
On Oct 21, 2025, at 20:16, Surya Janakiraman <surya.ja...@gmail.com> wrote:
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAP%3DX2W6xCsLNXZr7FSjfgS-RcP3QvrHX0Keyr8iTdO-xRhAFdg%40mail.gmail.com.
--Surya Janakiraman