thiruppugazh patterns - full list

18 views
Skip to first unread message

Siva Siva

unread,
Aug 13, 2025, 2:09:29 PM8/13/25
to santhavasantham

thiruppugazh patterns - full list
திருப்புகழ்ச் சந்தங்கள் - தொகுப்பு

LibreOffice document (MS Word should be able to open it as well) - is attached.

There can be some occasional errors due to inaccuracies in the data source used (Kaumaram.com).

Someone else (I do not know who) created the initial list. IRamani had shared this in SV some years ago. I have further edited, formatted, and sorted it.

FYI

V. Subramanian
Thiruppugazh - all songs - chandam pattern - with Kaumaram numbers - v1.odt

Ram Ramakrishnan

unread,
Aug 13, 2025, 2:14:50 PM8/13/25
to santhav...@googlegroups.com
Thanks so much. This will be very helpful. 

The sorting is by Santham I believe.

I appreciate your help. Much obliged.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Aug 13, 2025, at 14:09, Siva Siva <naya...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCPdT7ObHY6Y%2Bw__9fEnz3Y7x0GUEMVjLB3HKaLVs6geng%40mail.gmail.com.
<Thiruppugazh - all songs - chandam pattern - with Kaumaram numbers - v1.odt>

Siva Siva

unread,
Aug 13, 2025, 2:25:51 PM8/13/25
to santhav...@googlegroups.com
Yes. It is sorted by the sandham pattern.

But occasionally there may be inconsistency in how the patterns are specified.

See some notes & Q&A below:

1)

Several songs fitting either of the following patterns:

0214 - குமர குருபர முருக சரவண - சுவாமிமலை = தனன தனதன | தனன தனதன | தனன தனதன —— தனதான

0493 - எழுகடல் மணலை - சிதம்பரம் = தனதன தனன | தனதன தனன | தனதன தனன —— தனதான

இவ்விரு பாடல்களின் அடிப்படை அமைப்பு ஒன்றே அன்றோ? ஆனால் இருவிதமாகவும் குறிக்கலாமா? இவ்விரு பாடல்களின் தாளங்களில் ஏதேனும் வித்தியாசம் உண்டா?

147 - குழல் அடவி - பழநி = தனன தனதன | தனன தனதன | தனன தனதன —— தனதான

(குழல டவிமுகில் பொழில்வி ரவில்நுதல்

.. குமுத வதரமு ...... றுவலாரம்

.. குழைம கரம்வளை மொழிகு யிலமுது

.. குயமு ளரிமுகை ...... கிரிசூது)


Sep 4, 2021 Pas Pasupathy wrote:

சீர்கள் பிரிவதைப் பொறுத்துத் தாளம் வேறுபடும். 3, 4, 3, 4..... எழுத்துச் சீர்கள் முதல் பாடலில்; 4, 3, 4, 3, .... என்று இரண்டில். சொற்களை வேறு விதமாய்ப் பிரித்தல் இனிமை தராது ,) . "குமர குருபர" என்ற பாடலை நாங்கள் "தகிட தகதிமி" ( 1.5, 2 என்ற அங்க தாளத்தில்) , "எழுகடல் மணலை" என்ற பாடலை நாங்கள் "தகதிமி, தகிட" ( முதலின் 'உல்டா') ( 2, 1.5) என்ற அங்க தாளத்தில் பாடுவோம்.

இரண்டும் மிஸ்ர சாபு என்ற தாளத்தில் ( 3.5) அடங்குமென்றாலும், சீர்களுக்கேற்பச், சந்தக் குழிப்புக்கேற்பத், தாளங்கள் வேறுபட்டு இசையை இனிமையாக்கும்.

"குழல டவிமுகில்" என்ற பாடலை நாங்கள் பாடுவதில்லை. பாடினால், "குமர குருபர"-வில் உள்ள தாளத்தின்படிதான் பாடுவோம்.



2)

Several songs fitting either of the following patterns:

0218 - செகமாயை உற்று - சுவாமிமலை = தனதான தத்த | தனதான தத்த | தனதான தத்த —— தனதான

0230 - மருவே செறித்த - சுவாமிமலை = தனனா தனத்த | தனனா தனத்த | தனனா தனத்த —— தனதான

இவ்விரு பாடல்களின் அடிப்படை அமைப்பு ஒன்றே அன்றோ? ஆனால் இருவிதமாகவும் குறிக்கலாமா? இவ்விரு பாடல்களின் தாளங்களில் ஏதேனும் வித்தியாசம் உண்டா?

https://www.kaumaram.com/thiru/nnt0230_u.html

0230 - "தனனா தனத்த" என்று குறித்தபொழுதும் இப்பாடலில் உள்ள சொற்கள் பல இடங்களில் "தனதான தத்த" போன்றே காண்கின்றேன்.

உதாரணமாக:

பெருகாத லுற்ற தமியேனை நித்தல்

.. பிரியாது பட்ச ...... மறவாதே

பிழையே பொறுத்து னிருதாளி லுற்ற

.. பெருவாழ்வு பற்ற ...... அருள்வாயே


https://www.kaumaram.com/thiru/nnt0218_u.html

0218 - "தனதான தத்த" என்று குறித்தபொழுதும் இப்பாடலில் உள்ள சொற்கள் பல இடங்களில் "தனனா தனத்த" போன்றே காண்கின்றேன்.

உதாரணமாக:

முகமாய மிட்ட குறமாதி னுக்கு

.. முலைமேல ணைக்க ...... வருநீதா

முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்

.. மொழியேயு ரைத்த ...... குருநாதா



3)

Open question:

What is the difference between the patterns of the folowing 2 songs?

Are there any guidelines as to how such longer seers are to be indicated in the chandam notation?

If not, what is a good consistent way to denote the seer of five kuRils ?

0824 - ஒருவழிபடாது - தனதனன தான தான | தனதனன தான தான | தனதனன தான தான —— தனதான

1165 - நகரம் இரு பாதமாகி - தனனதன தான தான | தனனதன தான தான | தனனதன தான தான —— தனதான


V. Subramanian

Siva Siva

unread,
Aug 13, 2025, 5:49:39 PM8/13/25
to santhav...@googlegroups.com
If you wish to try writing verses for short patterns, the songs in this file may be useful.


V. Subramanian

Ram Ramakrishnan

unread,
Aug 13, 2025, 6:13:46 PM8/13/25
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. சிவசிவா.

எழுதிப் பழகுவதற்கு உகந்த சந்தங்கள்.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Aug 13, 2025, at 17:49, Siva Siva <naya...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages