வண்ணப் பாடல் - 4

16 views
Skip to first unread message

Siva Siva

unread,
Jan 31, 2026, 12:26:12 PMJan 31
to santhavasantham
As the earlier thread -  வண்ணப் பாடல் - 3  has almost 900 posts, I will continue in this new thread.

V. Subramanian

Siva Siva

unread,
Jan 31, 2026, 12:31:05 PMJan 31
to santhavasantham

Hot off the keyboard!


2026-01-31

நாகூர்

-------------

(வண்ணவிருத்தம்;

தானா தான தானா தான

தானா தான .. தனதான)


வீடா வாதை ஆர்பூ வாழ்வில்

.. .. வீணே நாள்கள் .. கழியாது

.. வேறோர் யோனி மீளா வாறு

.. .. வீறார் வீடும் .. அருளாயே

நேடா ஓடு பூமே லானு(ம்)

.. .. நீர்மே லானு(ம்) .. மிகவாட

.. நீள்மா தேவ நூலோ டாமை

.. .. நீறார் மார்பில் .. அணிவோனே

வாடா மாலை நாவார் மாணி

.. .. மாளா வாறு .. தருவோனே

.. வாலார் ஏற தேறீ கோல

.. .. மாதோர் பாக(ம்) .. மகிழ்வோனே

நாடா மூடர் சேரா ஈச

.. .. நாணா நாகம் .. உடையானே

.. நாதா ஓசை ஓவா வேலை

.. .. நாகூர் மேய .. பெருமானே.


பதம் பிரித்து:

வீடா வாதை ஆர்-பூ வாழ்வில்

.. .. வீணே நாள்கள் .. கழியாது,

.. வேறு ஓர் யோனி மீளாவாறு

.. .. வீறு ஆர் வீடும் .. அருளாயே;

நேடா ஓடு பூமேலானு(ம்)

.. .. நீர்மேலானு(ம்) .. மிக வாட

.. நீள்-மாதேவ; நூலோடு ஆமை

.. .. நீறு ஆர் மார்பில் .. அணிவோனே;

வாடா மாலை நாவார் மாணி

.. .. மாளாவாறு .. தருவோனே;

.. வால் ஆர் ஏறது ஏறீ; கோல

.. .. மாது ஓர் பாக(ம்) .. மகிழ்வோனே;

நாடா மூடர் சேரா ஈச;

.. .. நாணா நாகம் .. உடையானே;

.. நாதா; ஓசை ஓவா வேலை

.. .. நாகூர் மேய .. பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;

(வீடுதல் - ஒழிதல்; நீங்குதல்); (வாதை - துன்பம்); (ஆர்தல் - நிறைதல்); (பூ - பூமி);

(வீறு - தனிப்பட்ட சிறப்பு);

(நேடா - நேடி - தேடி; செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம் செய்து என்று பொருள்படும்);

(ஆமை - இங்கே, ஆமையோடு);

(மாணி - மார்க்கண்டேயர்);

(வால் - வெண்மை);

(நாணா - நாணாக);

(ஓவுதல் - ஒழிதல்); (வேலை - கடல்);


வி. சுப்பிரமணியன்

GOPAL Vis

unread,
Feb 1, 2026, 1:15:38 AMFeb 1
to santhav...@googlegroups.com
மிக நன்று. 
கோபால்

On Sat, Jan 31, 2026 at 11:01 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

Hot off the keyboard!


2026-01-31

நாகூர்

-------------

(வண்ணவிருத்தம்;

தானா தான தானா தான

தானா தான .. தனதான)


வீடா வாதை ஆர்பூ வாழ்வில்

.. .. வீணே நாள்கள் .. கழியாது

.. வேறோர் யோனி மீளா வாறு

.. .. வீறார் வீடும் .. அருளாயே

நேடா ஓடு பூமே லானு(ம்)

.. .. நீர்மே லானு(ம்) .. மிகவாட

.. நீள்மா தேவ நூலோ டாமை

.. .. நீறார் மார்பில் .. அணிவோனே

வாடா மாலை நாவார் மாணி

.. .. மாளா வாறு .. தருவோனே

.. வாலார் ஏற தேறீ கோல

.. .. மாதோர் பாக(ம்) .. மகிழ்வோனே

நாடா மூடர் சேரா ஈச

.. .. நாணா நாகம் .. உடையானே

.. நாதா ஓசை ஓவா வேலை

.. .. நாகூர் மேய .. பெருமானே.

. . . . . . .

Siva Siva

unread,
Feb 2, 2026, 11:31:58 AMFeb 2
to santhav...@googlegroups.com
Thanks.

Siva Siva

unread,
Feb 2, 2026, 11:33:21 AMFeb 2
to santhav...@googlegroups.com

Another fresh song.


2026-02-02

தருமபுரம்

-------------

(வண்ணவிருத்தம்;

தனதனன தான தனதனன தான

தனதனன தான .. தனதான)

(எழுகுநிறை நாபி - திருப்புகழ் - திருக்கழுக்குன்றம்)


குயிலின்நிற ஓதி மனைவிபெரு வீடு

.. .. குவிநிதிய(ம்) நாடி .. வினைமேவிக்

.. குழியில்விழ ஓடும் அவலமறு மாறு

.. .. குரைகழலில் வாச .. மலர்தூவி

எயில்களவை வேவ மலையைவளை வீர

.. .. எனமொழியின் மாலை .. இடுவேனே

.. இமையவர்கள் வாழ அரியமணி போல

.. .. எரிவிடம தாரு(ம்) .. மிடறானே

கயிலைமலை வீசு தசமுகனின் வாய்கள்

.. .. கதறியழு மாறு .. நெரிபாதா

.. கமலமலர் போல நயனமது தூவு

.. .. கரியன்விழை ஆழி .. அருள்வோனே

சயிலமட மாது முலையமுது வாயர்

.. .. தவமுதல்வர் யாழின் .. வலிதான

.. தமிழ்மறையை ஓது கவுணியர்ப ராவு

.. .. தருமபுர(ம்) மேய .. பெருமானே.


பதம் பிரித்து:

குயிலின்-நிற ஓதி மனைவி, பெருவீடு,

.. .. குவி-நிதிய(ம்) நாடி .. வினை மேவிக்,

.. குழியில் விழ ஓடும் அவலம் அறுமாறு

.. .. குரைகழலில் வாச .. மலர் தூவி,

"எயில்களவை வேவ மலையை வளை- வீர"

.. .. என மொழியின் மாலை .. இடுவேனே;

.. இமையவர்கள் வாழ அரிய மணி போல

.. .. எரி-விடமது ஆரு(ம்) .. மிடறானே;

கயிலைமலை வீசு தசமுகனின் வாய்கள்

.. .. கதறி அழுமாறு .. நெரி-பாதா;

.. கமலமலர் போல நயனமது தூவு

.. .. கரியன் விழை- ஆழி .. அருள்வோனே;

சயில-மடமாது முலை-அமுது வாயர்,

.. .. தவமுதல்வர், யாழின் .. வலிது ஆன

.. தமிழ்மறையை ஓது கவுணியர் பராவு

.. .. தருமபுர(ம்) மேய .. பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;

(ஓதி - கூந்தல்);

(எயில் - மதில்; அவை - பகுதிப்பொருள்விகுதி);

(ஆர்தல் - பொருந்துதல்; உண்தல்; அணிதல்); (மிடறு - கண்டம்);

(நெரித்தல் - நசுக்குதல்);

(கரியன் - கரியநிறம் உடையவன் - திருமால்; கரியான் என்பதன் குறுக்கல் விகாரம் என்றும் கொள்ளல் ஆம்); (ஆழி - சக்கரம்);

(சயிலம் - சைலம் - மலை); (மடம் - அழகு; மென்மை);

(யாழின் - யாழைவிட; இன் - ஐந்தாம்வேற்றுமை உருபு);


வி. சுப்பிரமணியன்


GOPAL Vis

unread,
Feb 2, 2026, 7:52:52 PMFeb 2
to santhav...@googlegroups.com
இனிய சந்தம், சொல்லாட்சி. 
கோபால். 

.. .. .. .. .. .. ..


வி. சுப்பிரமணியன்-

Siva Siva

unread,
Feb 2, 2026, 8:48:06 PMFeb 2
to santhav...@googlegroups.com
Thanks.

In case anyone needs info regarding the event mentioned in the 4th line of this song:
1.136.1 - 
மாதர்ம டப்பிடியும்
See the பதிக வரலாறு info on that page.

V. Subramanian

On Mon, Feb 2, 2026 at 7:52 PM GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
இனிய சந்தம், சொல்லாட்சி. 
கோபால். 

On Mon, Feb 2, 2026 at 10:03 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

Another fresh song.


2026-02-02

தருமபுரம்

-------------

(வண்ணவிருத்தம்;

தனதனன தான தனதனன தான

தனதனன தான .. தனதான)

(எழுகுநிறை நாபி - திருப்புகழ் - திருக்கழுக்குன்றம்)


...

இமயவரம்பன்

unread,
Feb 2, 2026, 8:49:06 PMFeb 2
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக அருமையான சந்தப் பாடல்!

Ram Ramakrishnan

unread,
Feb 2, 2026, 8:51:16 PMFeb 2
to santhav...@googlegroups.com
மிக அருமை, திரு. சிவசிவா.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Feb 2, 2026, at 19:52, GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CALjGCtuMLzAk7mUpcpQVQdqKjFvD0u_3a1x6EKSCLvkVuTL5OA%40mail.gmail.com.

இமயவரம்பன்

unread,
Feb 2, 2026, 8:57:12 PMFeb 2
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
“ யாழின் .. வலிது ஆன
.. தமிழ்மறையை ஓது”

யாழ்மூரிப் பதிகத்தைக் குறிக்கும் வார்த்தைகள் மிக அழகு! 

Siva Siva

unread,
Feb 2, 2026, 10:02:04 PMFeb 2
to santhav...@googlegroups.com
Thanks.

V. Subramanian

Siva Siva

unread,
Feb 3, 2026, 9:30:40 AMFeb 3
to santhav...@googlegroups.com

Latest!


2026-02-03

இராமனதீச்சரம்

-------------

(வண்ணவிருத்தம்;

தனாதன தாத்தன .. தனதான)


பராவிடு வோர்க்குயர் .. நலனீவாய்

.. பராபர பார்ப்பதி .. ஒருபாகா

அராவினை வீக்கிய .. அரையானே

.. அறாவினை தீர்த்தருள் .. புரியாயே

மராமரம் ஏக்கொடு .. தொளைதோளன்

.. வழாதற(ம்) மேற்கொள .. வலவீரன்

இராமன தீச்சரம் .. உறைவோனே

.. எலாவிமை யோர்க்கொரு .. பெருமானே.


பதம் பிரித்து:

பராவிடுவோர்க்கு உயர்- நலன் ஈவாய்;

.. பராபர; பார்ப்பதி ஒருபாகா;

அராவினை வீக்கிய அரையானே;

.. அறா-வினை தீர்த்தருள் புரியாயே;

மராமரம் ஏக்-கொடு தொளை-தோளன்,

.. வழாது அற(ம்) மேற்கொள-வல வீரன்,

இராமனதீச்சரம் உறைவோனே;

.. எலா-இமையோர்க்கு ஒரு பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;

(மராமரம் - ஆச்சாமரம்); (- அம்பு);


வி. சுப்பிரமணியன்

Ram Ramakrishnan

unread,
Feb 3, 2026, 9:47:02 AMFeb 3
to santhav...@googlegroups.com
மிக அருமை, திரு. சிவசிவா

நீங்கள் சொல்வதுபோல், 3x+ z type of வண்ணப்பாடல்களை விட, சிறிய வடிவச் வண்ணச் சந்தங்கள், குறிப்பாக மெய்யொற்றுடன் கூடிய சந்தங்கள் மிகக் கடினம் என்று உணர்கிறேன்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On 3 Feb 2026, at 9:30 AM, Siva Siva <naya...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Feb 3, 2026, 11:04:08 AMFeb 3
to santhav...@googlegroups.com

A slight variation of the earlier pattern - with one more strong consonant.

2026-02-03

இராமனதீச்சரம்

-------------

(வண்ணவிருத்தம்;

தனாதன தாத்தனத் .. தனதான)


பொலாவினை யாற்பிறப் .. பினில்மூழ்கிப்

.. பொறாவிடர் ஆர்த்திடத் .. தவியாமல்

சொலார்தமி ழாற்கழற் .. புணையோதித்

.. தொழாவுயு(ம்) நேர்த்தியைப் .. பெறுவேனோ

நிலாநதி தேக்குபொற் .. சடைமீது

.. நிலாமதி ஏற்றிவைத் .. தருள்வோனே

எலாமறை ஏத்துமெய்ப் .. பொருளானாய்

.. இராமன தீச்சரப் .. பெருமானே.


பதம் பிரித்து:

பொலா-வினையாற் பிறப்பினில் மூழ்கிப்,

.. பொறா-இடர் ஆர்த்திடத் தவியாமல்,

சொலார்-தமிழாற் கழற்புணை ஓதித்

.. தொழா உயு(ம்) நேர்த்தியைப் பெறுவேனோ?

நிலா-நதி தேக்கு-பொற்சடைமீது

.. நிலா-மதி ஏற்றிவைத்து அருள்வோனே;

எலாமறை ஏத்து-மெய்ப்பொருள் ஆனாய்;

.. இராமனதீச்சரப் பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;

(ஆர்த்தல் - பிணித்தல்);

(சொலார் - சொல் ஆர்; தொகுத்தல் விகாரம்); (கழற்புணை - திருவடித்தெப்பம்); (தொழா - தொழுது; செய்யா என்னும்வாய்பாட்டு வினையெச்சம் செய்து என்று பொருள்படும்); (உயும் - உய்யும்; இடைக்குறை விகாரம்);

(நிலா - 1. நில்லா (=பாய்ந்தோடும்); 2. சந்திரிகை; சந்திரனின் ஒளி);

(எலா - எல்லா); (மறை - வேதம்; உம் தொக்கது);


வி. சுப்பிரமணியன்

Siva Siva

unread,
Feb 6, 2026, 8:40:53 PMFeb 6
to santhav...@googlegroups.com

2026-02-06

கச்சி ஏகம்பம்

-------------

(வண்ணவிருத்தம்;

தத்தனா தந்தத் .. தனதான)


அச்ச(ம்)மா துன்பத் .. தளைமாய

.. அத்தனே வந்தித் .. திடுவேனே

கச்சதார் கொங்கைப் .. பரைபாகா

.. கைத்தவால் உண்பித் .. துடையானே

உச்சிமேல் இண்டைப் .. பிறைநாகம்

.. ஒட்டிவா ழும்பொற் .. சடையானே

கச்சியே கம்பத் .. துறைவோனே

.. கட்டிலா இன்பப் .. பெருமானே.


பதம் பிரித்து:

அச்ச(ம்) மா-துன்பத்-தளை மாய,

.. அத்தனே, வந்தித்திடுவேனே;

கச்சது ஆர் கொங்கைப்-பரை-பாகா;

.. கைத்த ஆல் உண்-பித்து உடையானே;

உச்சிமேல் இண்டைப்-பிறை நாகம்

.. ஒட்டி வாழும் பொற்சடையானே;

கச்சி-ஏகம்பத்து உறைவோனே;

.. கட்டு இலா இன்பப்-பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;

(தளை - பந்தம்); (அத்தன் - தந்தை); (வந்தித்தல் - வணங்குதல்);

(பரை - உமாதேவி);

(கைத்தல் - கசத்தல்); (ஆல் - ஆலகாலம்);

(இண்டை - தலையில் அணியும் மாலைவகை);

(கட்டு - மும்மலக்கட்டு);


வி. சுப்பிரமணியன்


On Tue, Feb 3, 2026 at 11:03 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

2026-02-03

Siva Siva

unread,
Feb 7, 2026, 10:11:14 AMFeb 7
to santhav...@googlegroups.com

Another song in the same pattern.

2026-02-07

கச்சி ஏகம்பம்

-------------

(வண்ணவிருத்தம்;

தத்தனா தந்தத் .. தனதான)


மட்டதார் கொன்றைச் .. சடைமீது

.. மத்தனே துன்பைக் .. களையாயே

சிட்டனே சண்பைப் .. பதிபாலர்

.. செப்புமா சந்தத் .. தமிழ்நேயா

நட்டனே எண்டிக் .. குடையாக

.. நச்சினாய் வெங்கட் .. படநாகம்

கட்டுமா குன்றச் .. சிலைவீரா

.. கச்சியே கம்பப் .. பெருமானே.


பதம் பிரித்து:

மட்டது ஆர் கொன்றைச் சடைமீது

.. மத்தனே; துன்பைக் களையாயே;

சிட்டனே; சண்பைப்- பதி பாலர்

.. செப்பு- மா சந்தத்- தமிழ் நேயா;

நட்டனே; எண்-திக்கு உடையாக

.. நச்சினாய்; வெங்கட்-படநாகம்

கட்டு- மா குன்றச்- சிலை வீரா;

.. கச்சி-ஏகம்பப் பெருமானே.


(மட்டு - தேன்; வாசனை); (ஆர்தல் - நிறைதல்); (மத்தம் - ஊமத்தமலர்);

(சிட்டன் - சிஷ்டாசாரமுடையவன்);

(சண்பை - சீகாழியின் 12 பெயர்களில் ஒன்று);

(நட்டம் - நடனம்);

(நச்சுதல் - விரும்புதல்);

(வெங்கட்படநாகம் = வெம் + கண் + படம் + நாகம்);


வி. சுப்பிரமணியன்

Siva Siva

unread,
Feb 11, 2026, 1:17:59 PMFeb 11
to santhav...@googlegroups.com

I do not think Sivarathri is mentioned in the available thirumuRai songs.


A special song for the upcoming Sivarathri - 15-Feb-2026.


2026-02-11

பொது (சிவராத்திரி)

----------------

(வண்ணவிருத்தம்;

தனதாத்தன தனதாத்தன தனதாத்தன .. தனதான)


புகழ்பாட்டுகள் அணிநாக்கொடு நினைவாழ்த்திடு(ம்) .. நினைவாகிப்

.. புவிமேற்சுழல் நிலைபோய்ப்பர சுகம்வாய்த்திட .. அருளாயே

இகழ்வார்த்தைகள் உரைதூர்த்தனை மலைபேர்த்தெறி .. மதியானை

.. இடராழ்த்திட மலர்போற்கழல் விரலாற்சிறி .. தடர்நாதா

அகழ்மாற்கணி மலராற்கடி முடிபார்த்திட .. இயலாத

.. அழலாய்ச்சுடர் பவஆர்த்திழி நதிதேக்கிய .. சடையானே

திகழ்பூக்கொடு சிவராத்திரி தனிலேத்திடும் .. அடியாரைச்

.. செடிதீர்த்துயர் உலகேற்றிடும் அதள்வீக்கிய .. பெருமானே.


பதம் பிரித்து:

புகழ்-பாட்டுகள் அணி-நாக்கொடு நினை வாழ்த்திடு(ம்) .. நினைவாகிப்,

.. புவிமேற் சுழல்- நிலை போய்ப் பர- சுகம் வாய்த்திட .. அருளாயே;

இகழ்-வார்த்தைகள் உரை-தூர்த்தனை, மலை பேர்த்து எறி .. மதியானை,

.. இடர் ஆழ்த்திட மலர்போற் கழல்- விரலாற் சிறிது .. அடர்-நாதா;

அகழ்-மாற்கு அணி மலராற்கு அடி முடி பார்த்திட .. இயலாத

.. அழலாய்ச் சுடர்- பவ; ஆர்த்து இழி- நதி தேக்கிய .. சடையானே;

திகழ்-பூக்கொடு சிவராத்திரிதனில் ஏத்திடும் .. அடியாரைச்

.. செடி தீர்த்து உயர்- உலகு ஏற்றிடும் அதள்-வீக்கிய .. பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;


V. Subramanian


On Sat, Feb 7, 2026 at 10:10 AM Siva Siva <naya...@gmail.com> wrote:


Siva Siva

unread,
Feb 12, 2026, 8:03:56 PMFeb 12
to santhav...@googlegroups.com

சிவராத்திரி என்ற சொல் இடம்பெறும் இன்னொரு பாடல்!

Sivarathri - 15-Feb-2026

2026-02-12

திருலோக்கி (திரைலோக்கி) - (சிவராத்திரி)

----------------

(வண்ணவிருத்தம்;

தனனாத் தனதன தனனாத் தனதன

தனனாத் தனதன .. தனதான)

(கடல்போற் கணைவிழி - திருப்புகழ் - வயலூர்)


இவணாக் கைகள்தரு வினைதீர்த் திடுநெறி

.. .. எனநாற் கவிவல .. மகனார்சொல்

.. இருதாட் புகழ்மணம் உலவாத் தமிழ்அடி

.. .. இடுவேற் கினிதருள் .. புரியாயே

நவனாய்ப் பழையனும் எனவாய்ச் செறியிருள்

.. .. நரியார்த் திடுவன(ம்) .. நடமாடீ

.. நளிராற் றினையடை சடைமேற் பிறையின

.. .. நரையேற் றினையமர் .. கயிலாயா

தவறாத் தவமுனி உயிர்காத் தணுகிய

.. .. சமன்மாய்த் தருளிய .. கழலானே

.. தளராத் தனவுமை ஒருகூற் றினமிகு

.. .. தயையாற் கறையணி .. மிடறானே

சிவராத் திரிதனில் அடிபோற் றிடின்நினை

.. .. திருவாய்த் திடவருள் .. தருவோனே

.. திரளாய்ச் சிறையளி ஒலிகாக் களையணி

.. .. திருலோக் கியிலுறை .. பெருமானே.


பதம் பிரித்து:

இவண் ஆக்கைகள் தரு- வினை தீர்த்திடு நெறி

.. .. என நாற்கவி வல .. மகனார் சொல்-

.. இருதாட்-புகழ்- மணம் உலவாத் தமிழ் அடி

.. .. இடுவேற்கு இனிது அருள் .. புரியாயே;

நவனாய்ப், பழையனும் எனவாய்ச், செறி-இருள்

.. .. நரி ஆர்த்திடு வன(ம்) .. நடமாடீ;

.. நளிர்-ஆற்றினை அடை- சடைமேற் பிறையின;

.. .. நரை-ஏற்றினை அமர்- .. கயிலாயா;

தவறாத் தவமுனி உயிர் காத்து, அணுகிய

.. .. சமன் மாய்த்து அருளிய .. கழலானே;

.. தளராத்-தன-உமை ஒரு கூற்றின; மிகு-

.. .. தயையாற் கறை அணி- .. மிடறானே;

சிவராத்திரிதனில் அடிபோற்றிடின் நினை-

.. .. திரு வாய்த்திட அருள் .. தருவோனே;

.. திரளாய்ச் சிறை-அளி ஒலி-காக்களை அணி-

.. .. திருலோக்கியில் உறை .. பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;


V. Subramanian

Siva Siva

unread,
Feb 14, 2026, 5:51:23 PMFeb 14
to santhav...@googlegroups.com

The two songs for Sivarathri 2026 - (with notes) -

https://drive.google.com/file/d/1IPw6dVYpg-6MTcwI-5-XdJ-iCQjACr1X/view

===

இமயவரம்பன்

unread,
Feb 14, 2026, 9:06:09 PMFeb 14
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக அருமையான சந்தம், சொல், பொருள் அமைந்த பாடல்! குறிப்புகளும் மிகச் சிறப்பு!

திருமங்கையாழ்வார் “நாற்கவி வல்லான்” என்று அழைக்கப்பட்டார் என்று அறிவேன். அவரது சமகாலத்தவரான திருஞானசம்பந்தரும் இவ்வாறு அழைக்கப்பட்டார் என்று இன்று அறிந்து மகிழ்ந்தேன்.

பாட்டுக்கும் குறிப்புகளுக்கும் மிக்க நன்றி!

(முதல் அடியில் : இவணாக் கைகள்தரு - இங்கே “கை” என்பது குறுகி ஒலிக்கின்றதா?)

Siva Siva

unread,
Feb 14, 2026, 10:04:08 PMFeb 14
to santhav...@googlegroups.com
ஆக்கைகள்தரு = தாத்தனதன

For a similar usage - see the phrase கைக்கொளாக் கையவ (= கைக்கொள் ஆக்கை அவ...) which comes for the pattern தத்தனாத் தனன

https://kaumaram.com/thiru/nnt0275_u.html
தொக்கறாக் குடில்  (திருத்தணிகை)

தத்தனாத் தனன தத்தனாத் தனன
     தத்தனாத் தனன ...... தனதான

கைக் கொளாக் கதறு கைக்கொளாக் கையவ
     லப்புலாற் றசைகு ...... ருதியாலே

கைக் கொளாக் கதறு கைக்கொள் ஆக்கை =  கைக்கொண்டு வீண் கூச்சலை மேற்கொண்டதுமான இந்த உடம்பை,

V. Subramanian

இமயவரம்பன்

unread,
Feb 14, 2026, 10:09:08 PMFeb 14
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
Thank you so much for the clarification and reference!

GOPAL Vis

unread,
Feb 14, 2026, 11:12:37 PMFeb 14
to santhav...@googlegroups.com
எளிதல்லாத சந்தம். மிக அருமை. 
மிகு தயையாற் கறையணி .. மிடறானே
அழகிய பிரயோகம். 
கோபால். 

.................

Siva Siva

unread,
Feb 14, 2026, 11:33:10 PMFeb 14
to santhav...@googlegroups.com
Thank you both.

The syllabic patterns for both these songs were driven by the word சிவராத்திரி.

V. Subramanian

Siva Siva

unread,
Feb 19, 2026, 9:04:58 PMFeb 19
to santhav...@googlegroups.com

A fresh song.

2026-02-19

பொது

----------------

(வண்ணவிருத்தம்;

தனதன தனதன தனதன தனதன

தத்தத் .. தனதான )

(Very similar to the pattern of the following thiruppugazh - but with த் instead of ந் in the pattern -

கொலைமத கரியன - திருப்புகழ் - திருச்செந்தூர்)


பொருளினை அடைதர அனுதினம் இடர்தரு

.. .. பொக்கத் .. துழலாமல்

.. புகழ்தமிழ் கொடுமலர் அடியிணை பரவிடு

.. .. பொற்பைப் .. பெறுவேனோ

பருமலை நிகர்புய(ம்) நினைகரு மலையன

.. .. பத்துத் .. தலையானைப்

.. பலதினம் அழநெரி விரலின புரமெரி

.. .. பற்றப் .. பொருவீரா

அருவரை கொடுகடை கடலிடை விடமெழ

.. .. அச்சுற் .. றடைவானோர்

.. அவரமு துணவொரு கறையணி மிடறின

.. .. அக்கைப் .. புனைமார்பா

முருகனை அருளிய இறையவ உடல்மிசை

.. .. முற்றப் .. பொடிபூசீ

.. முன(ம்)மரு மலிகணை தொடுமத னனைமுனி

.. .. முக்கட் .. பெருமானே.


பதம் பிரித்து:

பொருளினை அடைதர அனுதினம் இடர் தரு

.. .. பொக்கத்து உழலாமல்,

.. புகழ்-தமிழ்கொடு மலர்அடியிணை பரவிடு

.. .. பொற்பைப் பெறுவேனோ?

பருமலை நிகர் புய(ம்) நினை கருமலை அன

.. .. பத்துத் தலையானைப்

.. பலதினம் அழ நெரி விரலின; புரம் எரி

.. .. பற்றப் பொரு-வீரா;

அருவரைகொடு கடை கடலிடை விடம் எழ

.. .. அச்சுற்று அடை வானோர்

.. அவர் அமுது உண ஒரு கறை அணி மிடறின;

.. .. அக்கைப் புனை மார்பா;

முருகனை அருளிய இறையவ; உடல்மிசை

.. .. முற்றப் பொடி பூசீ;

.. முன(ம்) மரு மலி கணை தொடு மதனனை முனி

.. .. முக்கட் பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;

(இடர் - துன்பம்); (பொக்கம் - பொய்; வஞ்சகம்);

(பரவுதல் - துதித்தல்); (பொற்பு - அழகு; தன்மை);

(பருமை - பெருமை); (நெரித்தல் - நசுக்குதல்);

(பொருதல் - போர்செய்தல்);

(வரை - மலை); (மிடறு - கண்டம்);

(அக்கு - எலும்பு);

(முற்ற - முழுதும்);

(முனம் - முன்னம்); (மரு - வாசனை); (மதனன் - மன்மதன்); (முனிதல் - கோபித்தல்);


V. Subramanian


Sai Ganesan H

unread,
Feb 19, 2026, 10:28:28 PMFeb 19
to santhav...@googlegroups.com
அருமையான சந்தப் பாடல்! 
- சத்ய வேழன் H சாயிகணேசன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Feb 20, 2026, 11:48:43 AMFeb 20
to santhav...@googlegroups.com
Thanks Sai Ganesan.

Siva Siva

unread,
Feb 20, 2026, 8:00:42 PMFeb 20
to santhav...@googlegroups.com

A fresh song.

2026-02-20

கச்சி ஏகம்பம்

----------------

(வண்ணவிருத்தம்;

தய்ய தனதன தனதத்தத்.. தனதான )


உய்ய மண(ம்)மலி மலரிட்டுப் .. புகழ்நாமம்

.. உள்கி உயர்தமிழ் அவைசெப்பிப் .. பணிவேனே

மையை அணிதட நயனத்துக் .. கனிவாயாள்

.. வைகும் உடலின அரவக்கச் .. சுடையானே

வெய்ய விடமமு தெனநச்சிப் .. பருகீசா

.. வெல்லும் ஒருபடை விசயற்குத் .. தருவேடா

கையில் அயனது தலைபற்றிப் .. பலிதேர்வாய்

.. கல்லை மலரென மகிழ்கச்சிப் .. பெருமானே.


பதம் பிரித்து:

உய்ய மண(ம்)மலி மலர் இட்டுப்புகழ் நாமம்

.. உள்கிஉயர்-தமிழ் அவை செப்பிப் பணிவேனே;

மையை அணி-தடநயனத்துக் கனி-வாயாள்

.. வைகும் உடலினஅரவக்கச்சு உடையானே;

வெய்ய விடம் அமுதென நச்சிப் பருகு-ஈசா;

.. வெல்லும் ஒரு படை விசயற்குத் தரு-வேடா;

கையில் அயனது தலை பற்றிப் பலிதேர்வாய்;

.. கல்லை மலரென மகிழ்-கச்சிப் பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;

(உள்குதல் நினைதல்);

(தடம் பெருமைஅகலம்); (கனி கொவ்வைக்கனி); (வைகுதல் தங்குதல்);

(வெய்ய கொடிய); (நச்சுதல் விரும்புதல்);

(படை ஆயுதம்); (விசயற்கு விஜயனுக்கு);


V. Subramanian

இமயவரம்பன்

unread,
Feb 20, 2026, 8:11:11 PMFeb 20
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக அருமை!

“கல்லை மலரென மகிழ்.” - இதன் பொருள் என்ன?  

Siva Siva

unread,
Feb 20, 2026, 8:36:50 PMFeb 20
to santhav...@googlegroups.com
Thanks.
It refers to sAkkiya nAyanAr story.
திருத்தொண்டர் திருவந்தாதி - 11.33.42 - "சாக்கியன் .. .. கம்பர் செம்பொன் திகழ்தரு மேனியில் செங்கலெறிந்து"

V. Subramanian

இமயவரம்பன்

unread,
Feb 20, 2026, 8:38:35 PMFeb 20
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
Thank you for the clarification and reference. 

Ram Ramakrishnan

unread,
Feb 20, 2026, 8:49:11 PMFeb 20
to santhav...@googlegroups.com
தந்தை தாயிருந்தால் உனக்கிந்தத்
தாழ்வெல்லாம் வருமோ ஐயா

பாடலில் வரும் வரிகள்:


கல்லால் ஒருவன் அடிக்க - உடல் சிலிர்க்கக்
காலில் செருப்பால் ஒருவேடன் அங்கே உதைக்க
வில்லால் ஒருவன் அடிக்க - காண்டீபம் என்னும்
வில்லால் ஒருவன் அடிக்கக்
கூசாமல் ஒருவன் கைக்கோடாரியால் வெட்டக்
கூட்டத்தில் ஒருவன் பித்தா பேயா எனத்திட்ட
வீசி மதுரைமாறன் பிரம்பால் அடிக்க - அந்த
வேளை யாரை நினைந்தீரோ, ஐயா! - 


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Feb 20, 2026, at 20:38, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Feb 20, 2026, 8:52:06 PMFeb 20
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
அருமையான மேற்கோள் பாட்டிற்கு மிக்க நன்றி திரு ராம்கிராம் 

Siva Siva

unread,
Feb 22, 2026, 8:00:21 PMFeb 22
to santhav...@googlegroups.com

Another fresh song.

2026-02-22

நள்ளாறு

----------------

(வண்ணவிருத்தம்;

தனதன தனதன தனதன தனதன

தய்யான தான .. தனதான )


கரையில தெனவரு பழவினை அலையது

.. .. கவ்வாத வாறு .. மலராரும்

.. கழலிணை தனில்நறு மண(ம்)மலி தமிழ்மலர்

.. .. கள்ளூறு போது .. புனைவேனே

வரைகொடு கடலது கடைசுரர் அமுதுண

.. .. மையேறு கோல .. மிடறானே

.. மதியிலி மலையெறி தசமுகன் ஒருபது

.. .. வைவாயன் வாட .. நெரிபாதா

திரைநதி இளமதி குரவணி சடையின

.. .. செவ்வான மேனி .. தனிலேரார்

.. சிலைநுதல் மலைமகள் தனையிட(ம்) மகிழ்தரு

.. .. செல்வாபி னாகம் .. உடையானே

நரைவிடை தனையணி கொடியின நகைகொடு

.. .. நள்ளார்கள் ஊர்கள் .. எரிவீரா

.. நலிவற நலமுற அனுதின(ம்) நரர்திரள்

.. .. நள்ளாறு மேய .. பெருமானே.


பதம் பிரித்து:

கரையிலது என வரு பழவினை அலையது

.. .. கவ்வாதவாறு .. மலர் ஆரும்

.. கழலிணைதனில் நறுமண(ம்) மலி தமிழ்மலர்

.. .. கள்-ஊறு போது .. புனைவேனே;

வரைகொடு கடலது கடை-சுரர் அமுது உண,

.. .. மை ஏறு கோல .. மிடறானே;

.. மதியிலி மலை எறி தசமுகன் ஒருபது

.. .. வை-வாயன் வாட .. நெரி-பாதா;

திரை-நதி இளமதி குரவு அணி சடையின;

.. .. செவ்வான மேனி .. தனில் ஏர் ஆர்

.. சிலை-நுதல் மலைமகள்தனை இட(ம்) மகிழ்தரு

.. .. செல்வா; பினாகம் .. உடையானே;

நரை-விடைதனை அணி கொடியின; நகைகொடு

.. .. நள்ளார்கள் ஊர்கள் .. எரி-வீரா;

.. நலிவு அற, நலம் உற, அனுதின(ம்) நரர் திரள்

.. .. நள்ளாறு மேய .. பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;

(ஆர்தல் - ஒத்தல்); (போது - பூ); (புனைதல் - சூட்டுதல்);

(வரை - மலை);

(நெரித்தல் - நசுக்குதல்);

(திரைதல் / திரைத்தல் - அலைமோதுதல்);

(சிலை - வில்); (நுதல் - நெற்றி);

(நள்ளார் - பகைவர்);

(நலிவு - துன்பம்);


V. Subramanian


On Fri, Feb 20, 2026 at 8:52 PM இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:

Siva Siva

unread,
Feb 25, 2026, 11:57:00 PMFeb 25
to santhav...@googlegroups.com

Hot off the keyboard.

2026-02-25

பூந்துருத்தி

----------------

(வண்ணவிருத்தம்;

தனதன தாந்த தத்த .. தனதான)


கழலிணை தாங்கு சித்தம் .. உடையேனாய்க்

.. கடுவினை நீங்கி முத்தி .. பெறுவேனோ

அழலினை ஏந்தி நட்டம் .. இடுவோனே

.. அணிமதி பாம்பு வைத்த .. சடையானே

எழிலுமை சேர்ந்தி ருக்கு(ம்) .. மணிமார்பா

.. இருளது பூண்க ளத்த .. மண(ம்)நாறும்

பொழிலணி பூந்து ருத்தி .. உறைவோனே

.. புரமொரு மூன்றெ ரித்த .. பெருமானே.


பதம் பிரித்து:

கழலிணை தாங்கு சித்தம் .. உடையேனாய்க்,

.. கடுவினை நீங்கி, முத்தி .. பெறுவேனோ?

அழலினை ஏந்தி நட்டம் .. இடுவோனே;

.. அணிமதி பாம்பு வைத்த .. சடையானே;

எழிலுமை சேர்ந்து இருக்கு(ம்) .. மணிமார்பா;

.. இருளது பூண்-களத்த; .. மண(ம்) நாறும்

பொழில் அணி பூந்துருத்தி .. உறைவோனே;

.. புரம் ஒரு மூன்று எரித்த .. பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;


V. Subramanian


On Sun, Feb 22, 2026 at 8:00 PM Siva Siva <naya...@gmail.com> wrote:


Siva Siva

unread,
Feb 27, 2026, 6:21:42 PMFeb 27
to santhav...@googlegroups.com

This short pattern can be a difficult one.


2026-02-27

பொது

----------------

(வண்ணவிருத்தம்;

தாத்தாத்தாத் .. தனதான)


மூத்தாற்றாப் .. பிணிசூழ்முன்

.. மூத்தாய்க்காட் .. படுவேனோ

பூத்தூய்ப்போற் .. றிடுவார்பால்

.. போய்க்காப்பாற் .. றிடுவோனே

நீர்த்தீப்போற் .. சடையானே

.. நீற்றாற்பூச் .. சுடையானே

வேய்த்தோட்பார்ப் .. பதிபாகா

.. வீப்போற்றாட் .. பெருமானே.


பதம் பிரித்து:

மூத்து ஆற்றாப் பிணி சூழ்முன்,

.. மூத்தாய்க்கு ஆட்படுவேனோ?

பூத்-தூய்ப் போற்றிடுவார்பால்

.. போய்க் காப்பாற்றிடுவோனே;

நீர்த்-தீப்-போற் சடையானே;

.. நீற்றாற் பூச்சு உடையானே;

வேய்த்-தோட்-பார்ப்பதி பாகா;

.. வீப்-போற்-றாட் பெருமானே.


(தூய் - தூவி);

(வேய் - மூங்கில்); (தோள் - புஜம்); (பார்ப்பதி - பார்வதி);

(வீ - பூ); (வீ + போல் + தாள் + பெருமான் = வீப்-போற்-றாட்-பெருமான்);


V. Subramanian


On Wed, Feb 25, 2026 at 11:56 PM Siva Siva <naya...@gmail.com> wrote:


Saranya Gurumurthy

unread,
Feb 27, 2026, 11:35:08 PMFeb 27
to சந்தவசந்தம்
மிகவும் கடினமான சந்தம். ஆனால் உங்கள் பாடலைப் படிக்கும் போது அந்தக் கடினத்தை நீங்கள் கடிதேகச் செய்தது தெரிகிறது.

Regards,
Saranya

Siva Siva

unread,
Feb 28, 2026, 10:03:50 AMFeb 28
to santhav...@googlegroups.com
Thanks.

Siva Siva

unread,
Mar 1, 2026, 8:53:16 PMMar 1
to santhav...@googlegroups.com

2026-03-01

தருமபுரம்

----------------

(வண்ணவிருத்தம்;

தனன தனன தந்த

தனன தனன தந்த

தனன தனன தந்த .. தனதான)


கரிய பெரிய குன்றம் .. அனைய எருமை ஒன்று

.. .. கடவு நமனும் வந்து .. மிகுவாதைக்

.. கயிறு தனையெ றிந்து .. கொடுமை புரியு(ம்) முன்பு

.. .. கழலை நினையும் அன்பை .. உடையேனாய்

விரியு(ம்) மலர்சொ ரிந்து .. நினது புகழ்மொ ழிந்து

.. .. விரவும் அடியர் தங்கள் .. உறவாகி

.. வினைகள் அழியும் இன்பம் .. அதனை அடைய வென்றி

.. .. விடையை மகிழ்வி டங்க .. அருளாயே

பெரிய விடம துண்ட .. கறைய திலகு கண்ட

.. .. பிரமன் அரிவ ணங்க .. உயர்சோதீ

.. பிடியின் நடையை வென்ற .. மலையின் மகளொர் பங்க

.. .. பிணையல் அரவு திங்கள் .. அணிவோனே

சரியை கிரியை என்ற .. வழியில் இருவர் நின்று

.. .. தமிழின் மலர்பு னைந்த .. ஒருநாதா

.. தடமு(ம்) முகில டைந்த .. பொழிலும் அணிவி ளங்கு

.. .. தரும புரம மர்ந்த .. பெருமானே.


பதம் பிரித்து:

கரிய பெரிய குன்றம் .. அனைய எருமை ஒன்று

.. .. கடவு நமனும் வந்து, .. மிகு-வாதைக்

.. கயிறுதனை எறிந்து .. கொடுமை புரியு(ம்) முன்பு,

.. .. கழலை நினையும் அன்பை .. உடையேனாய்,

விரியு(ம்) மலர் சொரிந்து .. நினது புகழ் மொழிந்து

.. .. விரவும் அடியர் தங்கள் .. உறவாகி,

.. வினைகள் அழியும் இன்பம் .. அதனை அடைய, வென்றி

.. .. விடையை மகிழ்-விடங்க .. அருளாயே;

பெரிய விடமது உண்ட .. கறையது இலகு கண்ட;

.. .. பிரமன் அரி வணங்க .. உயர்-சோதீ;

.. பிடியின் நடையை வென்ற .. மலையின்மகள் ஒர் பங்க;

.. .. பிணையல் அரவு திங்கள் .. அணிவோனே;

சரியை கிரியை என்ற .. வழியில் இருவர் நின்று

.. .. தமிழ்-இன்-மலர் புனைந்த .. ஒரு நாதா;

.. தடமு(ம்) முகில் அடைந்த .. பொழிலும் அணி விளங்கு

.. .. தருமபுரம் அமர்ந்த .. பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;

(கடவுதல் - ஏறிச்செலுத்துதல்);

(வாதை - துன்பம்);

(வென்றி - வெற்றி); (விடங்கன் - அழகன்);

(இலகுதல் - ஒளிவீசுதல்);

(பிடி - பெண்யானை); (வெல்தல் - ஒத்தல்);

(பிணையல் - மலர்மாலை);

(தடம் - குளம்); (அணி - பக்கத்தில்; சமீபத்தில்); (அணிதல் - பூண்தல்); (அமர்தல் - விரும்புதல்; இருத்தல்);


V. Subramanian


Ram Ramakrishnan

unread,
Mar 2, 2026, 8:02:18 AMMar 2
to santhav...@googlegroups.com
மிக அருமை, திரு. சிவசிவா.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Mar 1, 2026, at 20:53, Siva Siva <naya...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Mar 2, 2026, 10:55:53 AMMar 2
to santhav...@googlegroups.com
Thanks.

Siva Siva

unread,
Mar 3, 2026, 9:47:46 PMMar 3
to santhav...@googlegroups.com

2026-03-02

ஆரூர் அரனெறி (அசலேஸ்வரர் கோயில்)

----------------

(வண்ணவிருத்தம்;

தானா தனதனத் .. தனதான)


சேறார் பவமறத் .. தமிழ்பாடிச்

.. சேடா உனைவழுத் .. திடுவேனே

நீறாய் எயில்விழப் .. பொருதோனே

.. நேயா அயனரிக் .. கரியானே

ஈறாய் முதலெனத் .. திகழ்வோனே

.. ஏறே றியமழுப் .. படையானே

ஆறார் சடைமிசைப் .. பிறைசூடீ

.. ஆரூர் அரனெறிப் .. பெருமானே.


பதம் பிரித்து:

சேறு ஆர் பவம் அறத் தமிழ் பாடிச்,

.. சேடா, உனை வழுத்திடுவேனே;

நீறாய் எயில் விழப் பொருதோனே;

.. நேயா; அயன் அரிக்கு அரியானே;

ஈறாய் முதல் எனத் திகழ்வோனே;

.. ஏறு ஏறிய மழுப்படையானே;

ஆறு ஆர் சடைமிசைப் பிறைசூடீ;

.. ஆரூர் அரனெறிப் பெருமானே.


(ஆர்தல் - ஒத்தல்); (பவம் - பிறவி); (சேடன் - பெரியோன்; கடவுள்);

(எயில் - மதில்); (பொருதல் - போர்செய்தல்);

(ஆர்தல் - பொருந்துதல்; அணிதல்);


V. Subramanian


இமயவரம்பன்

unread,
Mar 4, 2026, 11:02:04 AMMar 4
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக அருமை!

“சரியை கிரியை என்ற .. வழியில் இருவர் நின்று
.. .. தமிழின் மலர்பு னைந்த .. ஒருநாதா”

- இந்த வரிகளின் பின் உள்ள கதை என்ன? 

Siva Siva

unread,
Mar 4, 2026, 11:55:18 AMMar 4
to santhav...@googlegroups.com

Thanks.

சரியை கிரியை என்ற வழியில் இருவர் நின்று தமிழ்-இன்-மலர் புனைந்த ஒரு நாதா சரியை கிரியை மார்க்கங்களைக் காட்டிய திருநாவுக்கரசரும் திருஞான சம்பந்தரும் இனிய தமிழ்ப்பாமாலைகள் பாடிப் போற்றிய ஒப்பற்ற தலைவனே; (சரியை கிரியை சைவசமயம் கூறும் நால்வகை வழிகளில் இரண்டுஅப்பர் காட்டிய வழி சரியை என்றும் சம்பந்தர் காட்டிய வழி கிரியை என்றும் சொல்வர்); (தமிழ்-இன்-மலர் இன்-தமிழ்-மலர் இனிய பாமாலை);

V. Subramanian

இமயவரம்பன்

unread,
Mar 4, 2026, 12:14:26 PMMar 4
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
Thank you for the explanation.

Siva Siva

unread,
Mar 4, 2026, 8:01:22 PMMar 4
to santhav...@googlegroups.com

2026-03-04

நள்ளாறு

----------------

(வண்ணவிருத்தம்;

தய்யான தான தய்யான தான

தய்யான தான .. தனதான)


இல்லாசை யோடு பல்லாசை கூடி

.. .. இவ்வாறு நாளும் .. உழலாமல்

.. எள்காது நேயம் உள்ளூறி ஓதி

.. .. எய்யாத வாழ்வு .. பெறுவேனோ

அல்லாரு(ம்) மேனி மெய்பேசி டானை

.. .. ஐயோவெ னாத .. எனுமாறே

.. அல்காத வாதை செய்பாத ஆறும்

.. .. ஐவாய ராவும் .. அணிவோனே

மெல்லோதி மீது செவ்வீயு(ம்) நாறு

.. .. வெள்வீயும் ஆரும் .. உமையோடும்

.. வில்வேட னாகி வல்லேன(ம்) மாய

.. .. வெல்பாணம் ஈய .. வருவோனே

நல்லோசை மாலை சொல்வாயர் நாளு(ம்)

.. .. நையாத வாறு .. தருவோனே

.. நள்ளார்தம் ஊர்கள் எய்வீர ஏர்கொள்

.. .. நள்ளாறு மேய .. பெருமானே.


பதம் பிரித்து:

இல்-ஆசையோடு பல்லாசை கூடி

.. .. இவ்வாறு நாளும் .. உழலாமல்,

.. எள்காது, நேயம் உள்-ஊறி, ஓதி,

.. .. எய்யாத வாழ்வு .. பெறுவேனோ?

அல்-ஆரு(ம்) மேனி மெய் பேசிடானை,

.. .. "ஐயோ! என் நாத" .. எனுமாறே

.. அல்காத வாதை செய்-பாத; ஆறும்

.. .. ஐவாய்-அராவும் .. அணிவோனே;

மெல்-ஓதி மீது செவ்-வீயு(ம்) நாறு

.. .. வெள்-வீயும் ஆரும் உமையோடும்

.. வில்-வேடன் ஆகி, வல்-ஏன(ம்) மாய,

.. .. வெல்-பாணம் ஈய .. வருவோனே;

நல்-ஓசை மாலை சொல்-வாயர் நாளு(ம்)

.. .. நையாதவாறு .. தருவோனே;

.. நள்ளார்தம் ஊர்கள் எய்-வீர; ஏர்கொள்

.. .. நள்ளாறு மேய .. பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;

(இல் - வீடு; மனைவி);

(எள்குதல் - இகழ்தல்; மறத்தல்); (எய்த்தல் - வருந்துதல்);

(அல் - இருள்); (அல்குதல் - குறைதல்; அழிதல்); (வாதை - துன்பம்);

(ஓதி - கூந்தல்); (வீ - பூ);

(ஏனம் - பன்றி);

(நைதல் - தளர்தல்; வாடுதல்; மனம்வருந்துதல்); (தருதல் - அருள்செய்தல்);

(நள்ளார் - பகைவர்); (எய்தல் - பாணம் பிரயோகித்தல்);

(ஏர் - அழகு);


V. Subramanian


On Wed, Mar 4, 2026 at 12:14 PM இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:

M. Viswanathan

unread,
Mar 5, 2026, 9:41:11 PMMar 5
to Santhavasantham
அருமை அருமை

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
Mar 6, 2026, 8:37:23 AMMar 6
to santhav...@googlegroups.com
மிகக் கடினமான சந்தக் குழிப்பு.

உங்கள் கைவண்ணத்தில் அழகிய வண்ணச் சித்திரமாய் மிளிர்கின்றது.

வார்த்தைகள் எப்படித்தான் வந்து விழுகின்றதோ? அதிசயப் படுவது வழக்கமாகி விட்டது.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Mar 5, 2026, at 21:41, M. Viswanathan <meev...@gmail.com> wrote:



Siva Siva

unread,
Mar 6, 2026, 8:50:56 AMMar 6
to santhav...@googlegroups.com
Thanks மீவி & ராம்.

V. Subramanian

M. Viswanathan

unread,
Mar 6, 2026, 10:10:44 AMMar 6
to Santhavasantham
அருமை அருமை

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Mar 6, 2026, 9:36:21 PMMar 6
to santhav...@googlegroups.com
Thanks.

2026-03-06

பயற்றூர் (திருப்பயத்தங்குடி)

----------------

(வண்ணவிருத்தம்;

தனத்தா தனதன .. தனதான)


மடத்தால் உழல்வது .. கெடநாளும்

.. மணப்பா மலரடி .. இடுவேனே

விடத்தால் மணியணி .. மிடறானே

.. விசைத்தேர் இழிதர .. மலைவீச

எடுத்தான் முடிபுய(ம்) .. அடர்பாதா

.. இடப்பால் அரிவையை .. அமர்நாதா

படத்தார் தனையணி .. மணிமார்பா

.. பயற்றூர் தனிலுறை .. பெருமானே.


பதம் பிரித்து:

மடத்தால் உழல்வது .. கெட, நாளும்

.. மணப்பா மலரடி .. இடுவேனே;

விடத்தால் மணி அணி .. மிடறானே;

.. விசைத்தேர் இழிதர .. மலை வீச

எடுத்தான் முடி புய(ம்) .. அடர்-பாதா;

.. இடப்பால் அரிவையை .. அமர்-நாதா;

படத்-தார்தனை அணி .. மணிமார்பா;

.. பயற்றூர்தனில் உறை .. பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;

(மடம் - அறியாமை); (கெடுதல் - அழிதல்; தீர்தல்); (பா - பாடல்; பாமலர் - சொல்மலர்); (மலர் - இடைநிலைத்தீவகமாக இருபக்கமும் இயைக்க நின்றது. பாமலரடி = பாமலர் & மலரடி);

(மிடறு - கண்டம்);

(விசை - எந்திரம்; பொறி); (புயம் - புஜம் - தோள்); (அடர்த்தல் - நசுக்குதல்);

(பால் - பக்கம்); (அரிவை - பெண்); (அமர்தல் - விரும்புதல்);

படத்-தார்தனை அணி மணிமார்பா - படமுடைய மாலையை (= பாம்பையே மாலையாக) அணிந்த (படம் - பாம்பின் படம்; ஆகுபெயராகப் பாம்பு என்றும் கொள்ளல் ஆம்); (தார் - மாலை); (மணி - அழகு; பவளம்);

V. Subramanian

Siva Siva

unread,
Mar 9, 2026, 5:20:15 PM (13 days ago) Mar 9
to santhav...@googlegroups.com

2026-03-09

கோளிலி

----------------

(வண்ணவிருத்தம்;

தானன தனதன தானன தனதன

தானன தனதன .. தனதான)


வேதனை தருவினை யாலலை கடலணி

.. .. மேதினி மிசைவரு .. பவ(ம்)மாய

.. மேதகு தமிழ்மறை நாவணி நலமருள்

.. .. வேயன புயவுமை .. ஒருபாகா

நீதயை புரியென நான்மறை கொடுபணி

.. .. நேயரின் உயிர்கொல .. வருகாலன்

.. நீணிலம் விழவுதை தாளின சடைமிசை

.. .. நீர்பட அரவிள .. மதிசூடீ

சீதரன் மலர்மிசை யானிவர் தொழவுயர்

.. .. தீயெனும் வடிவினில் .. வருநாதா

.. சீறிய தசமுகன் ஆவென அழநெரி

.. .. சேவடி விரலின .. திரிசூலா

கோதறு தமிழுரை நாவலர் இறையவர்

.. .. கோரிய வண(ம்)நெலை .. அருள்வோனே

.. கோகிலம் இசைபயில் ஏர்மலி பொழிலணி

.. .. கோளிலி தனிலுறை .. பெருமானே.


பதம் பிரித்து:

வேதனை தரு-வினையால் அலைகடல் அணி

.. .. மேதினிமிசை வரு- .. பவ(ம்) மாய,

.. மேதகு தமிழ்மறை நா அணி நலம் அருள்,

.. .. வேய் அன புய-உமை .. ஒரு பாகா;

"நீ தயை புரி" என நான்மறைகொடு பணி

.. .. நேயரின் உயிர் கொல .. வரு-காலன்

.. நீள்நிலம் விழ உதை தாளின; சடைமிசை

.. .. நீர் பட-அரவு இள- .. மதி சூடீ;

சீதரன் மலர்மிசையான் இவர் தொழ உயர்-

.. .. தீ எனும் வடிவினில் .. வரு-நாதா;

.. சீறிய தசமுகன் "" என அழ நெரி

.. .. சேவடி விரலின; .. திரிசூலா;

கோது-அறு தமிழ் உரை நாவலர்-இறையவர்

.. .. கோரிய வண(ம்) நெலை .. அருள்வோனே;

.. கோகிலம் இசை பயில் ஏர் மலி பொழில் அணி

.. .. கோளிலிதனில் உறை .. பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;

(மேதினி - பூமி); (பவம் - பிறவி);

(மேதகுதல் - மேன்மையாதல்; சிறத்தல்);

(வேய் - மூங்கில்); (புயம் - புஜம் - தோள்);

(தயை - அருள்); (நீள்நிலம் - நீண்ட இவ்வுலகம் - தரை);

(நீர் - கங்கை); (படம் - பாம்பின் படம்);

(சீதரன் - ஸ்ரீதரன் - திருமால்);

(தசமுகன் - இராவணன்); (நெரித்தல் - நசுக்குதல்);

(கோது - குற்றம்); (நாவலர்இறை - நாவலர்கோன் - சுந்தரமூர்த்தி நாயனார்; அவர் - பகுதிப்பொருள்விகுதி); (வணம் - வண்ணம்); (நெலை - நெல்லை);

(கோகிலம் - குயில்); (பயில்தல் - ஒலித்தல்); (ஏர் - அழகு);


V. Subramanian


On Fri, Mar 6, 2026 at 9:36 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

Siva Siva

unread,
Mar 10, 2026, 8:32:36 PM (12 days ago) Mar 10
to santhav...@googlegroups.com
Hot off the keyboard!

This short can pattern can be a bit challenging.

2026-03-10

திருத்துறைப்பூண்டி

----------------

(வண்ணவிருத்தம்;

தனத்தனத் தாந்தத் .. தனதான)


குரைப்புடைப் பூம்பொற் .. கழல்பேணிக்

.. குளிர்த்தமிழ்ப் பூங்கொத் .. திடுவேனே

சிரக்கலத் தூண்பெற் .. றுழல்வோனே

.. சிவைக்குவப் போங்கத் .. தருபாகா

அரைத்தநற் சாந்தொத் .. தொளிநீறார்

.. அருத்தவெற் பேந்திப் .. பொருவீரா

திரைச்சடைப் பாம்பைப் .. புனைவோனே

.. திருத்துறைப் பூண்டிப் .. பெருமானே.


பதம் பிரித்து:

குரைப்பு-உடைப் பூம்பொற் கழல் பேணிக்

.. குளிர்த்-தமிழ்ப் பூங்கொத்து இடுவேனே;

சிரக்-கலத்து ஊண் பெற்று உழல்வோனே;

.. சிவைக்கு உவப்பு ஓங்கத் தரு-பாகா;

அரைத்த நற்- சாந்து ஒத்து ஒளி-நீறு ஆர்

.. அருத்த; வெற்பு ஏந்திப் பொரு-வீரா;

திரைச்-சடைப் பாம்பைப் புனைவோனே;

.. திருத்துறைப்பூண்டிப் பெருமானே.


(குரைப்பு - ஓசை; ஒலி); (பூ - மென்மை; அழகு; மலர்);

(சிரம் - மண்டையோடு); (கலம் - உண்கலன்); (ஊண் - உணவு; பிச்சை);

(சிவை - பார்வதி);

(சாந்து - சந்தனம்); (அருத்தன் - மெய்ப்பொருளானவன்);

(வெற்பு - மலை); (பொருதல் - போர்செய்தல்);

(திரை - அலை; நதி);


V. Subramanian



On Mon, Mar 9, 2026 at 5:20 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

2026-03-09

Siva Siva

unread,
Mar 11, 2026, 6:48:52 PM (11 days ago) Mar 11
to santhav...@googlegroups.com

2026-03-11

கன்றாப்பூர்

----------------

(வண்ணவிருத்தம்;

தந்தாத் தானன தனதனத் .. தனதான)


பண்டேத் தேனையு(ம்) நினையவைத் .. தொலிமாலை

.. பண்பாற் பாடிட அருள்தனைத் .. தருவோனே

திண்டோட் கோனழ விரலைவைத் .. தடர்பாதா

.. செந்தீப் போலொளிர் சடைமிசைப் .. பிறைசூடீ

விண்டாட் பூவினை வழிபடச் .. சுதையீவாய்

.. மென்றோட் பாவையை உடலிடத் .. துடையானே

கண்டேத் தூவிய மதனனைச் .. சுடுதீரா

.. கன்றாப் பூருறை நடுதறிப் .. பெருமானே.


பதம் பிரித்து:

பண்டு ஏத்தேனையு(ம்) நினையவைத்து ஒலிமாலை

.. பண்பாற் பாடிட அருள்தனைத் தருவோனே;

திண்-தோட்-கோன் அழ விரலை வைத்து அடர்-பாதா;

.. செந்தீப் போல் ஒளிர் சடைமிசைப் பிறைசூடீ;

விண்-தாட்பூவினை வழிபடச் சுதை ஈவாய்;

.. மென்-தோட்-பாவையை உடல்-இடத்து உடையானே;

கண்டு ஏத் தூவிய மதனனைச் சுடு-தீரா;

.. கன்றாப்பூர் உறை நடுதறிப் பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;

(பண்டு - முன்பு); (ஒலிமாலை - பாமாலை; ஒலி - சொல்); (பண்பு - அழகு; நற்குணம்);

(திண்டோட்கோன் - திண் + தோள் + கோன்); (அடர்த்தல் - நசுக்குதல்);

(விண்டாட்பூ - விண் + தாள் + பூ); (தாட்பூ - தாள்மலர் - திருவடித்தாமரை); (சுதை - அமுதம்);

(மென்றோட்பாவை - மென் + தோள் + பாவை);

(- அம்பு); (மதனன் - காமன்);

(* நடுதறியப்பர் - இத்தலத்து ஈசன் திருநாமம்);


வி. சுப்பிரமணியன்


On Tue, Mar 10, 2026 at 8:32 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

Siva Siva

unread,
Mar 12, 2026, 8:04:59 PM (10 days ago) Mar 12
to santhav...@googlegroups.com

2026-03-12

கோட்டூர்

----------------

(வண்ணவிருத்தம்;

தாத்தாத் தனந்தா .. தனதான)


மூத்தீற் றெழுந்தீ .. முழுகாமுன்

.. மூத்தாய்க் கரும்பா .. இடுவேனே

ஏத்தார்க் கிரங்கா .. தவர்கூறும்

.. ஏச்சேற் றிரந்தாய் .. மடவார்பால்

வீத்தூய்ப் பணிந்தார் .. துணையானாய்

.. வேட்டாட் கிடங்கூ .. றுடையானே

கூத்தாட் டுகந்தாய் .. வயலாரும்

.. கோட்டூர்க் கொழுந்தே .. பெருமானே.


பதம் பிரித்து:

மூத்து ஈற்று எழுந்-தீ முழுகாமுன்,

.. மூத்தாய்க்கு அரும்-பா இடுவேனே;

ஏத்தார்க்கு இரங்காது அவர் கூறும்

.. ஏச்சு ஏற்று, இரந்தாய் மடவார்பால்;

வீத் தூய்ப் பணிந்தார் துணை ஆனாய்;

.. வேட்டாட்கு இடங்-கூறு உடையானே;

கூத்தாட்டு உகந்தாய்; வயல் ஆரும்

.. கோட்டூர்க் கொழுந்தே; பெருமானே.


(ஈற்று - ஈற்றில் - கடைசியில்);

(ஏத்துதல் - துதித்தல்); (ஏச்சு - பழிப்பு; நிந்தை); (இரத்தல் - பிச்சையெடுத்தல்); (மடவார் - பெண்கள்);

(வீ - பூ); (தூய் - தூவி);

(வேட்டாள் - மனைவி);

(* கொழுந்தீசர் - இத்தலத்து இறைவன் திருநாமம்);


வி. சுப்பிரமணியன்


On Wed, Mar 11, 2026 at 6:48 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

2026-03-11

Siva Siva

unread,
Mar 16, 2026, 12:42:28 PM (6 days ago) Mar 16
to santhav...@googlegroups.com

2026-03-16

ஓமாம்புலியூர்

----------------

(வண்ணவிருத்தம்;

தானாந் தனனா .. தனதான)


தீமாந் திடவூன் .. அழியாமுன்

.. சீரோங் கியதாள் .. தொழுவேனோ

பூமாங் கழல்ஓர் .. அடியார்வான்

.. போய்வாழ்ந் திடுமா .. றருள்வோனே

ஓர்மான் புரைமா .. திடமானாய்

.. ஊர்பாம் பிளமா .. மதிசூடீ

ஓமாம் புலியூர் .. உறைவோனே

.. ஓடேந் தியவோர் .. பெருமானே.


பதம் பிரித்து:

தீ மாந்திட ஊன் அழியாமுன்,

.. சீர் ஓங்கிய தாள் தொழுவேனோ?

பூ-மாங்-கழல் ஓர் அடியார் வான்

.. போய் வாழ்ந்திடுமாறு அருள்வோனே;

ஓர் மான் புரை-மாது இடம் ஆனாய்;

.. ஊர்-பாம்பு இள-மா- மதி சூடீ;

ஓமாம்புலியூர் உறைவோனே;

.. ஓடு ஏந்திய ஓர் பெருமானே.


V. Subramanian

On Thu, Mar 12, 2026 at 8:04 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

2026-03-12

Siva Siva

unread,
Mar 18, 2026, 9:31:13 PM (4 days ago) Mar 18
to santhav...@googlegroups.com

2026-03-18

காளத்தி

----------------

(வண்ணவிருத்தம்;

தானத்த தான தந்த

தானத்த தான தந்த

தானத்த தான தந்த .. தனதான)

(வாசித்த நூல்ம தங்கள் - திருப்புகழ் - கோடைநகர்)


யானத்தை வான டைந்த .. மாடத்தை மாம டந்தை

.. .. ஆகத்தை நாடி நொந்து .. மடியாமுன்

.. ஆர்வத்தி னாலி ரண்டு .. பாதத்தை நான்வ ணங்கி

.. .. ஆர்கட்டி லாத இன்பம் .. அடைவேனோ

வானத்து ளோரெ ழுந்த .. ஆலத்தி னால்வெ ருண்டு

.. .. வாடிப்ப ராவ உண்ட .. மிடறானே

.. வாதிட்ட மால்வி ரிஞ்சி .. கீழுச்சி தேடி அஞ்சி

.. .. மாணுற்ற தாளி றைஞ்ச .. உயர்சோதீ

ஈனத்தை யேநி னைந்த .. மாதுட்ட னார்பு யங்கள்

.. .. ஈரெட்டும் ஈரி ரண்டு(ம்) .. நெரிபாதா

.. ஏர்மிக்க பூவில் ஐந்தை .. ஏவைத்த வேளை வென்றும்

.. .. ஏழைக்கு(ம்) நாடு பங்கு .. தருவோனே

கானத்து வேடர் தங்க .. ணேயப்பு வீரம் அன்று

.. .. காணப்பொ றாமல் அங்கை .. பிடிநாதா

.. காலத்தின் நீளும் அந்த .. நாமத்தை யேவ ழங்கு

.. .. காளத்தி மேய எந்தை .. பெருமானே.


பதம் பிரித்து:

யானத்தை, வான் அடைந்த .. மாடத்தை, மா-மடந்தை

.. .. ஆகத்தை, நாடி நொந்து .. மடியாமுன்,

.. ஆர்வத்தினால் இரண்டு .. பாதத்தை நான் வணங்கி,

.. .. ஆர்-கட்டு இலாத இன்பம் .. அடைவேனோ?

வானத்துளோர், எழுந்த .. ஆலத்தினால் வெருண்டு,

.. .. வாடிப் பராவ உண்ட .. மிடறானே;

.. வாதிட்ட மால் விரிஞ்சி .. கீழ் உச்சி தேடி, அஞ்சி,

.. .. மாண்-உற்ற தாள் இறைஞ்ச .. உயர்-சோதீ;

ஈனத்தையே நினைந்த .. மா-துட்டனார் புயங்கள்

.. .. ஈரெட்டும் ஈரிரண்டு(ம்) .. நெரி-பாதா;

.. ஏர் மிக்க பூவில் ஐந்தை .. -வைத்த வேளை வென்றும்,

.. .. ஏழைக்கு(ம்) நாடு பங்கு .. தருவோனே;

கானத்து வேடர் தங்கணே அப்பு வீரம் அன்று

.. .. காணப்-பொறாமல் அங்கை .. பிடி-நாதா;

.. காலத்தின் நீளும் அந்த .. நாமத்தையே வழங்கு

.. .. காளத்தி மேய எந்தை .. பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;


V. Subramanian


On Mon, Mar 16, 2026 at 12:42 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

2026-03-16

Ram Ramakrishnan

unread,
Mar 18, 2026, 10:52:29 PM (4 days ago) Mar 18
to santhav...@googlegroups.com
மிக அருமை, திரு. சிவசிவா.

எப்படித்தான் வார்த்தைகள் இந்தக் கடினமான சந்தத்திற்கு வந்து விழுகின்றனவோ, எனக்குப் புரியாத புதிர்்என்று சொல்லி வியப்பதைத்்தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை.

வாழ்க, வளர்க நுந்தம் தமிழ்ப் பணி.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Mar 19, 2026, at 07:01, Siva Siva <naya...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Mar 19, 2026, 8:49:17 AM (3 days ago) Mar 19
to santhav...@googlegroups.com
Thanks.

V. Subramanian
Reply all
Reply to author
Forward
0 new messages