ஐயப்பன் வண்ணம் 1
தந்ததம் தந்தத் தனதான
சங்கரன் சொந்தப் புதல்வோனே
சந்ததம் தம்பித் திடுநானும்
இங்கெதும் பந்தத் திடராமல்
இங்கிதம் புந்திக் கருள்வாயே
மங்கையன் றந்த த் திருமாலின்
மைந்தனென் றன்றைக் குருவானாய்
ஐங்கரன் தந்திக் கிளையோனே
அன்பர்தம் சிந்தைக் கினியோனே!
இலந்தை
பின்குறிப்பு.
பெரிய வண்ணப் பாடல்களை எழுதுவதை விட இந்தச் சிறி பாடல் என்னைப் புரட்டிப்போட்டுவிட்டது.. நன்றாகவே ட்ரில் வாங்கிவிட்டது. ஒழுங்காக வந்திருக்கிறதா? அன்பர்கள் சொல்லவும்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCOAq6kotGSZOrLNe4m%3DXe6D2iE%2BseA0j7mkQqocRuvr3Q%40mail.gmail.com.
மங்கையன் றந்த த் திருமாலின்
மைந்தனென் றன்றைக் குருவானாய்
விடியல் வண்ணம்
தனதன தானம் தனதன தானம்
தனதன தானம் தனதான
விடியல் வண்ணம்
தனதன தானம் தனதன தானம்
தனதன தானம் தனதான
. . . .
விடியல் வண்ணம்
தனதன தானம் தனதன தானம்
தினமொரு நாளும் திரிதரு கோளம்
தனதன தானம் தனதான
திகழ்குண வோரம் தெரிவேளை
திணிகரு காகம் கரைகிற கீதம்
செவியினில் வீழும் பகலாகும்
பனிதரு பாரம் புலில்நுனி ஈரம்
பகலவன் வீசும் கதிராலே
பருவுரு மாறும் புகையென ஏறும்
படர்கதிர் பாயும் களையேறும்
கனிவுள கானம் பறவைகள் பாடும்
கனவெழி லாகும் புலர்காலை
கதிரெழு தேகம் கனல்நிறம் மாறும்
கதிருடல் மேலும் கனலாகும்
புனைகிற கோலம் புதுவித மாகும்
புளகிதம் காணும் தெருவீதி
புதுவொரு நாளின் பொழுதிது வாகும்
புலர்கிற காலம் புகழ்வாயே!
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCPA9Hr37ZGOFQhELruG%3DV_WEESbCSYttCN4Yt4CWuh8FA%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBBYG8075cQ7dveT7SHMJRe6XpyQBh9UAFgobuzHjKROSw%40mail.gmail.com.
தினமொரு நாளும் திரிதரு கோளம்
திகழ்குண வோரம் தெரிவேளை
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/7EE06FED-5053-49D1-9FC1-1C40BD3C5AE6%40gmail.com.
அந்தி வண்ணம்
தந்த தானன தாந்தன தானன
தந்த தானன தாந்தன தானன
தந்த தானன தாந்தன தானன தனதானா
மஞ்செ லாமவன் சாய்ந்திடு வானென
நெஞ்சு ளேகவன் றோய்ந்திடு வேளையில்
விஞ்சை யாயவன் பூங்கதிர் வீசிட நிறமேறி
அந்த வானகம் பூண்டிடு கோலமும்
அந்தி மேவிடும் காண்டகு ஜாலமும்
அன்று போலவும் காண்பது மீளவும் அரிதாமே
பஞ்சு போலமென் பான்மைகொள்
ஓர்முகில்
பைம்பொன் மேல்விழும் பாங்குள ஓர்முகில்
செஞ்செ வேயெனும் தீந்திறல் ஓர்முகில் எழிலாமே
பந்து போல்விழும் தேன்பொழி ஆதவன்
விந்தையாய் வணம் சூழ்ந்திட வேவிழ
பந்த மோவெனும் தூண்டெழில் வீசிட ஒளிசேர
மஞ்சள் ஓர்புறம், காந்தளு மோர்புறம்
வந்து நீலமும் சேர்ந்திடு மோர்வழி
கஞ்ச மோர்புறம் போந்திட வானகம் நிறமாயம்
பந்த பாசமும் பாங்குட னேமுகில்
பந்தி யாயெழும் பான்மையும் ஓதிடும்
அந்தி வேளையும் தான்செயும் ஓவிய மொருவேள்வி
கொஞ்சு மோவியம் கோன்கதிர் கீழ்விரை
கொஞ்ச காலம ங் கோங்கிடு வானதில்
விஞ்சி ஏகிடும், காண்பன யாவையும் நிலைதானா?
மஞ்சு, சூரியன் சாய்ந்திடு
வானமும்
எஞ்சும் நேரமும் காண்கிற ஓவியம்
விஞ்சை யாகிடும் தேர்ந்திடல் காளியின் விதிதானே!
இலந்தை
பொருள்.
தமது தோழன் கீழே சென்று மறையப் போகிறானே என்ற ஏக்கத்தில் மனம் கவன்று மேகங்கள் மனமோய்ந்த நிலைகண்டு சூரியன் தனது வண்ணமயமான கிரணங்களை அவற்றின் மீது பாய்ச்சுகிறான். அவை பலவித நிறமேற்கின்றன. அந்தி வானகம் கொள்கின்ற அந்தக் கோலத்தையும் அந்திப்பொழுதில் மேவுகிற காணுதற்கு ஏற நிற ஜாலங்களையும் அன்றையப் பொழுதில் காண்பதைப் போல மீளவும் காண்டல் அரிது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அந்தி ஓவியம்.
வெள்ளிச்சரிகை ஓரம் கொண்ட வெண்மையான ஓர்முகில், தங்கச்சரிகை பூண்ட வேறொரு முகில், நீல நிறம் கொள் வானம் ஓர்புறம், செம்மை நிறம் செக்கச்செவேரென்றிருக்கும் வலிமைகொள் மேகம் ஒன்று. இவையெல்லாம் எழிலின் உச்சம்
சிவந்த பந்தாகத் திகழும் ஆதவன் மஞ்சளும் செம்மையும் கலந்து தேனைப் பொழிகிறான். பலவிதமான வண்ணங்களால் சூழப்பட்டிருக்கிறான். பந்தம் ஏந்தியதைப் போல வானம் காட்சி கொடுக்கிறது.
மஞ்சள், காந்தளஞ் செந்தீ, நீலம், தாமரை வண்ணம் எனப் பல வண்ணங்கள் குழைந்து காணப்படுகின்றன.
இவற்றைப் பார்க்கிறபோது மேகங்களுக்கும் சூரியனுக்கும் உள்ள பந்த பாசத்தை நமக்கு எடுத்துரைப்பது போலத் தெரிகிறது.
இப்படி அழகு கொஞ்சுகிற ஓவியம் சூரியன் வான் கோட்டின் கீழே செலும் நேரத்துக்குச் சற்று முன்பும் சென்ற பின் சிறிது நேரமும் தெரிகின்றது. இதெல்லாம் நிலையில்லை. நாளுக்குநாள் மாறக்கூடியவை. இந்த மாற்றங்களை நிகழ்த்தி ஒவ்வொரு நாளும் அழித்தழித்து அந்தி ஓவியம் வரைகிறாள் மாகாளி
தந்த தானன தாந்தன தானன
தந்த தானன தாந்தன தானன
தந்த தானன தாந்தன தானன தனதானா
தமது தோழன் கீழே சென்று மறையப் போகிறானே .....
அந்தி வண்ணம்
தந்த தானனந் தாந்தன தானன
தந்த தானனந் தாந்தன தானன
தந்த தானனந் தாந்தன தானன தனதானா
மஞ்செ லாமவன் சாய்ந்திடு வானென
நெஞ்சு ளேகவன் றோய்ந்திடு வேளையில்
விஞ்சை யாயவன் பூங்கதிர் வீசிட நிறமேறி
வந்த வானகம் பூண்டிடு கோலமும்
அந்தி மேவிடும் காண்டகு ஜாலமும்
அன்று போலவும் காண்பது மீளவும் அரிதாமே
பஞ்சு போலமென் பான்மைகொள்
ஓர்முகில்
பைம்பொன் மேல்விழும் பாங்குள ஓர்முகில்
செஞ்செ வேயெனும் தீந்திறல் ஓர்முகில் எழிலாமே
பந்து போல்விழும் தேன்பொழி ஆதவன்
விந்தையாய் வணம் சூழ்ந்திட வேவிழ
பந்த மோவெனும் தூண்டெழில் வீசிட ஒளிசேர
மஞ்சள் ஓர்புறம், காந்தளு மோர்புறம்
வந்து நீலமும் சேர்ந்திடு மோர்வழி
கஞ்ச மோர்புறம் போந்திட வானகம் நிறமாயம்
மந்தை போல்வரும் பாங்குட னேமுகில்
பந்த மாயெழும் பான்மையும் ஓதிடும்
அந்தி வேளையும் தான்செயும் ஓவிய மொருவேள்வி
கொஞ்சு மோவியம் கோன்கதிர் கீழ்விரை
கொஞ்ச காலம ங் கோங்கிடு வானதில்
விஞ்சி ஏகிடும், காண்பன யாவையும் நிலைதானா?
மஞ்சு, சூரியன் சாய்ந்திடு
வானமும்
எஞ்சும் நேரமும் காண்கிற ஓவியம்
விஞ்சை யாகிடும் தேர்ந்திடல் காளியின் விதிதானே!
இலந்தை
பொருள்.
தமது தோழன் கீழே சென்று மறையப் போகிறானே என்ற ஏக்கத்தில் மனம் கவன்று மேகங்கள் மனமோய்ந்த நிலைகண்டு சூரியன் தனது வண்ணமயமான கிரணங்களை அவற்றின் மீது பாய்ச்சுகிறான். அவை பலவித நிறமேற்கின்றன. அந்தி வானகம் கொள்கின்ற அந்தக் கோலத்தையும் அந்திப்பொழுதில் மேவுகிற காணுதற்கு ஏற நிற ஜாலங்களையும் அன்றையப் பொழுதில் காண்பதைப் போல மீளவும் காண்டல் அரிது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அந்தி ஓவியம்.
வெள்ளிச்சரிகை ஓரம் கொண்ட வெண்மையான ஓர்முகில், தங்கச்சரிகை பூண்ட வேறொரு முகில், நீல நிறம் கொள் வானம் ஓர்புறம், செம்மை நிறம் செக்கச்செவேரென்றிருக்கும் வலிமைகொள் மேகம் ஒன்று. இவையெல்லாம் எழிலின் உச்சம்
சிவந்த பந்தாகத் திகழும் ஆதவன் மஞ்சளும் செம்மையும் கலந்து தேனைப் பொழிகிறான். பலவிதமான வண்ணங்களால் சூழப்பட்டிருக்கிறான். பந்தம் ஏந்தியதைப் போல வானம் காட்சி கொடுக்கிறது.
மஞ்சள், காந்தளஞ் செந்தீ, நீலம், தாமரை வண்ணம் எனப் பல வண்ணங்கள் குழைந்து காணப்படுகின்றன.
மந்தையாக மேகங்கள் இணைந்து வருவதை பார்க்கிறபோது மேகங்களுக்கும் சூரியனுக்கும் உள்ள பந்த பாசத்தை நமக்கு எடுத்துரைப்பது போலத் தெரிகிறது.
வாராகி வண்ணம்-4
தான தான தானான தானத் தனதான
பாடு பாடல் வாராகி பாடிப் புகழ்வேனே
பாதை மீதில் வாராகி பாதித் திடலாமோ
ஏடு தோறும் வாராகி ஏகத் திருதாயே
ஏழை யேனை வாராகி வாழப் புரிவாயே
ஓடும் வாழ்வில் வாராகி ஓதித் திரிவேனே
ஓசை சேர வாராகி ஊறித் தொழுவேனே
தேடும் யாவும் வாராகி தேடத் தெரியாது
தேவி, போதும் வாராகி ஞானத் திடுதாயே!
இலந்தை
28-3-2021
தய்யதன தான தய்யதன தான
தய்யதன தானத் தனதான
நல்லவென —> நல்லவன?
கோபால்.பையகமுள் —> பையகமுள? typo.
தய்யதன தந்த தய்யதன தந்த
தய்யதன தந்த .. தனதான
தய்ய தய்ய தய்ய தய்ய
தய்ய தய்ய தய்ய தய்ய
தய்ய தய்ய தய்ய தய்ய – தய்யான
ஐய மெய்யை உள்ள முள்ள
ஐய மில்லை பொய்யர் செய்யும்
ஐவ கைநை செய்கை தள்ளி எள்ளாதே
மைய லெல்லை ஒல்லை எய்தி
விள்ள வுள்ளில் எள்ள ளவ்வும்
வைய யில்லில் அல்லல் வௌவல் பொல்லாதே
கையொ டய்ய கொய்த செல்வம்
வெய்ய பொய்யர் கௌவு மெல்லை
கள்ள வுள்ளம் நொய்து வைது தள்ளாதோ
வைய முய்ய எய்து தெய்வம்
நல்ல உள்ளம் வைகும் மெய்யை
மைவ ரையில் எய்தி ஐய சொல்வாயே!
எள்ள ளவ்வும் - நீட்டல் விகாரம்
ஐவகை நை - பஞ்சமா பாதகம் நை- வருந்தச் செய்யும்
பொருள்
ஐயனே, உண்மைப் பொருளை
ஆழமாய் மனத்தில் சிந்திக்க ஐயமெதுவும் விளையாது.
பொய்மை மனம் கொண்டவர் செய்யும் பஞ்சமா பாதகங்களை நீ கேலி செய்யாதே
காமத்தின் எல்லையை மிக விரைவாக எய்தி அதன் விளைவால் இவ்வையத்தில் நீ வாழும் இடத்தில்
உன் இச்சையை மேலும் அடைய எவர்க்கும் தீங்கு
செய்ய விரும்புதல் பொல்லாது
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCOws8sLAmdsmb%2BR1C_g_7pVccKg_X-L8Qivy0A2Qh9NhQ%40mail.gmail.com.
... அனந்த்
கொஞ்சம் கடினமான சந்தம். இந்த அமைப்பில் வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள் எழுதியிருக்கிறார்தய்ய தய்ய தய்ய தய்ய
தய்ய தய்ய தய்ய தய்ய
தய்ய தய்ய தய்ய தய்ய – தய்யான
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBCeZZqgim30zt9uaYBudTwH_bMrCYt-UoTs%2BTArHvpXxg%40mail.gmail.com.
... அனந்த்
'ஐவ கைநை செய்கை தள்ளி எள்ளாதே'இந்த 'கைநை' யில் 'தய்ய' எப்படி வரும்?'கை' என்பதை சந்தம் கருதி 'கய்' என்று எடுத்துக் கொள்ள வேண்டுமா?புரியாமல் கேட்கிறேன்.சங்கரன்On Fri, Apr 2, 2021 at 12:38 PM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:கொஞ்சம் கடினமான சந்தம். இந்த அமைப்பில் வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள் எழுதியிருக்கிறார்தய்ய தய்ய தய்ய தய்ய
தய்ய தய்ய தய்ய தய்ய
தய்ய தய்ய தய்ய தய்ய – தய்யான
----Swaminathan Sankaran
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAF%2Bqia3M8GFVRPu%2B_MTFavorLd1p5_-bT04rq2UBnRF9_a3Xtw%40mail.gmail.com.
இரட்டைக் கட்டளைக் கலித்துறை வண்ணம்
தந்த தனன தனன தனன தனதனனா
செந்தில்
முருக, சிறுவ அழகு திகழ்பவனே
செண்ட ணிபவ னரிய தமைய சிவன்மகனே
வந்துன் அடியர் மனமும் நெகிழும் வடிவழகே
மண்டும் எழில்கொள் தணிகை உறையும் மணவழகே
கந்த,
அரியின் மருக தமிழ, கவியமுதே
கண்டு மொழியர் கணவ, இறைவ கனிபவனே
சிந்தை அமரு மொருவ குறவர் மகிழுறவே
தெண்ட னிடுவன் அருள்க உறவு திடமுறவே!
செந்தில்
முருக, சிறுவ அழகு திகழ்பவனே
வந்துன் அடியர் மனமும் நெகிழும் வடிவழகே
கந்த, அரியின் மருக தமிழ, கவியமுதே
சிந்தை அமரு மொருவ, குறவர் மகிழுறவே
செண்ட
ணிபவ னரிய தமைய சிவன்மகனே
மண்டும் எழில்கொள் தணிகை உறையும் மணவழகே
கண்டு மொழியர் கணவ, இறைவ கனிபவனே
தெண்ட னிடுவன் அருள்க உறவு திடமுறவே
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCMszP50FV-AHwTa5ErbNBqu%3DT%2BwzctMz1G-vjkd%3DAmQtQ%40mail.gmail.com.
லகர
ளகர வீற்றுப் புணர்ச்சி
149.
லகர
ளகரங்களில் முன் வல்லினம்
வரின்,
வேற்றுமையிலும்
அல்வழியிலே பண்புத் தொகையிலும்,
உவமைத்
தொகையிலும்,
இறுதி
லகரம் றகரமாகவும் ளகரம்
டகரமாகவுந் திரியும்.
எழுவாய்த்
தொடரினுலும் உம்மைத் தொகையிலுந்
திரியாதியல்பாம்.
உதாரணம்.
பாற்குடம்
அருட்பெருமை -
வேற்றுமை
வேற்படை
அருட்செல்வம் -
பண்புத்தொகை
வேற்கண்
வாட்கண் -
உவமைத்
தொகை
குயில்கரிது
பொருள் பெரிது -
எழுவாய்
கால்கை
பொருள்புகழ் -
உம்மைத்தொகை
பால்
குடித்தான்,
அருள்பெற்றான்
என இரண்டாம் வேற்றுமைத்
தொகையினும்,
கால்குதித்தோடினான்,
வால்போழ்ந்திட்டான்
என மூன்றாம் வேற்றுமைத்
தொகையினும்,
வருமொழி
வினையாயவிடத்து திரியாவெனக்கொள்க.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/8e500cb8-af42-4859-98a1-7adf06d002d9n%40googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/1b9d02ba-0bf4-40b0-a1ff-ee5136fdf86fn%40googlegroups.com.
தய்ய தய்ய தய்ய தய்ய
தய்ய தய்ய தய்ய தய்ய
தய்ய தய்ய தய்ய தய்ய – தய்யான
ஐய மெய்யை உள்ள முள்ள
ஐய மில்லை பொய்யர் செய்யும்
ஐவ கைநை செய்கை தள்ளி எள்ளாதே
ஐவர் செய்யும் அல்லல்
ஐய
சொல்லி யுள்ளம் நைய ஒல்லை
ஐயன் வல்லன் நல்ல செய்கை செய்வானே
மைய லெல்லை ஒல்லை எய்தி
விள்ள வுள்ளில் எள்ள ளவ்வும்
வைய யில்லில் அல்லல் வௌவல் பொல்லாதே
மைய வெல்லை தொல்லை எய்தி
நையும் அல்ல ல் ஐய உள்ளில்
வைகும் ஐயன் உய்வு நல்கல் மெய்தானே
கையொ டய்ய கொய்த செல்வம்
வெய்ய பொய்யர் கௌவு மெல்லை
கள்ள வுள்ளம் நொய்து வைது தள்ளாதோ
கைது செய்து வைது துள்ளி
மைய றையில் தள்ள, நல்ல
கைவில் ஐயன் மெய்யன் உய்வு செய்தானே
வையம் மையை மெய்பெய்
துள்ள
அல்லும் வெய்ய ஐயன் நல்கும்
வைக றையின் வெய்யில் எய்த நில்லாதே
வைய முய்ய எய்து தெய்வம்
நல்ல உள்ளம் வைகும் மெய்யை
மைவ ரையில் எய்தி ஐய சொல்வாயே!
பொருள்
ஐயனே, உண்மைப் பொருளை
ஆழமாய் மனத்தில் சிந்திக்க ஐயமெதுவும் விளையாது.
பொய்மை மனம் கொண்டவர் செய்யும் பஞ்சமா பாதகங்களை நீ கேலி செய்யாதே
ஐம்பொறிகள் ஒன்று கூடித் தொல்லை செய்கிற போது வருந்தி குறையிரக்க ஐயன் உடனே வந்து நமக்கு நன்மை செய்வான்
காமத்தின் எல்லையை மிக விரைவாக எய்தி அதன் விளைவால் இவ்வையத்தில் நீ வாழும் இடத்தில் உன் இச்சையை மேலும் அடைய எவர்க்கும் தீங்கு செய்ய விரும்புதல் பொல்லாது
எல்லைவரை மையங்கொண்டிருக்கும் அல்ல் இறைவனை மனத்தில் நினைக்க உள்ளத்தில் உறையும் ஐயன் உடனே வந்து உய்வு நல்குவான் இது உண்மை
ஐயனே, கைகவர்ந்து கொள்ளை கொண்ட செல்வத்தை க் கொடுமை மனத்தவர் கவர்கிற போது பணத்தைத் தீய வழியில் சேர்த்துவைத்தனுடைய மனம் திருடியவனை வைது தள்ளுமல்லவா
அடுத்துச் சொல்லப்படுவது
பக்த ராமதாசரின் கதை. அவரைக் கைது செய்து வைது எள்ளிக் காராக்கிரகத்தில்(மையறை) தள்ள
மனமிரங்கி , கோதண்டம் தாங்கிய இராமபிரான் வந்து காப்பாற்றினான்
வையம் முழுதும் மைக்கருமையைப் பெய்திருக்கும் இருட்டைக்கிழித்து வெய்யவன் வைகறையில்
வர இருட்டும் நிற்காமல் ஓடிவிடுமே! இருட்டிருந்தால் நிச்சயம் விடியல் உண்டு
இந்த வையகத்தைக் காப்பதற்காக
எய்தியுள்ள தெய்வம் நல்ல உள்ளங்களில் வைகுவான் என்னும் உண்மையை, ஐயனே மலையின் உச்சியில் எய்தி ஊருக்கெல்லாம் உரைப்பாயாக!
வீர்பத்ரர் துதி
தான தத்த தத்த தான
தான தத்த தானனா
வீர பத்ர வெற்றி வீர
வேட மற்ற தேவனே
வேள்வி தட்டி எற்றி வீசி
வீறெ டுத்த வீரனே,
தீர முற்றெ திர்ப்ப தேது?
தேவ ரற்று வீழவே
சீறி நட்டெ டுத்த பாத
சீரு ரைக்க லாகுமோ?
நேரெ திர்த்து நிற்கொ ணாது
நீச முற்றி ஓடியே
நீத மற்ற எத்த ரோய
நீயெ திர்த்து
வீசினாய்
வேர டுத்த பக்தி கூடி
மேவு சுத்த நேயர்கள்
வீறு பற்று வெற்றி கூட
வேணு முற்ற வீரனே!
They grammar books authors may have ignored such words - probably because in standard Tamil words, after a vallina mey only a vallina um.
திருவாறை முருகன் வண்ணம்
தனனா தத்தனதத் தனதான
முருகா ஒப்புயர்வற் றுளதேவா
முகமா றற்புதமுற் றுயர்வோனே
ஒருமா துக்குறவுற் றிடவேதான்
உயர்வே டப்புனைவுற் றுளதேவா
கருகூ டற்குடமுற் றுழலாமல்
கனிவே நற்பரிவுற் றருள்வாயே
திருமா லிற்குரிமைப் பெரியோனே
திருவா றைப்பதியிற் பெருமாளே!
பிரித்து
முருகா ஒப்புயர்வு அற்று உளதேவா
முகம் ஆறு அற்புதம் உற்று உயர்வோனே
ஒரு மாதுக்கு உறவுற்றிடவே தான்
உயர் வேடப் புனைவு உற்று உளதேவா
கரு கூடற்குடம் உற்று உழலாமல்
கனிவே நற்பரிவுற்று அருள்வாயே
திருமாலிற்கு உரிமைப் பெரியோனே
திருவாறைப் பதியிற் பெருமாளே
இலந்தை 12-4-2021
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCOEhV%3Dy%2BBE%3DMnLu8-bEfszd-Mxabg%3DXw1EOVGj-XyVGpw%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCOrMEm-wBkb6qc%3DjhAsuAWnDeZ-g%2BHWLKPV9ywLfyGMow%40mail.gmail.com.
தனதானத் தனன தனதான என்பதுதான் பொருத்தம் எனத் தெரிகிறது. அப்படியே மாற்றிக்கொள்கிறேன்.
உ
சரணகம லாலயத்தில் சந்தம்
தனதனன தான தத்த தனதனன தான தத்த
தனதனன தான தத்த – தனதான
முதுவயது மேற மெத்த முதுகுவளை
வாக நெற்றி
முடைவரிகள்
ஓடி வற்றி- விடமேலும்
முகமொளியி லாதி ருக்க முனகலுரு வாய்பி தற்ற
மொழிகுழறு மாறு பொக்கை- உருவாக
நிதமழகு கூடு கற்றை முடிகருமை யோவெ ளுத்து
நிறைநரையு மேயுதிர்க்கும் – நிலையாகி
நிறையொளியு மேகுறைத்து விழிகள்தரு
மேசிதைத்து
நினைவுதடு மாறி வெட்கும் –
மனம்நோகும்
உதவிபல வாய ளித்த உரமுடைய நீள்கரங்கள்
உலைவடைய வேத ளர்த்த
- உருமாறும்
உலவுமழ கான நெட்டை உருவுடைய கால்கள்
வற்றி
உலவமுடி யாது கெட்டு – முடமாக
எதுவரையி லேயி ருக்கும் இனியுமெமை யே வருத்த
இனுமுயிரை யே விடுத்து
-மடியாதோ
எனவுறவெ லாம்வெ றுக்க இதயவொலி
யோதுடிக்க
எழில்முருக னேபுரக்க வரவேணுமே!
இலந்தை
அருஞ்சொற்பதம்- நீரிருந்த ஓடை வற்றி விட்டதைப்
போல நெற்றியில் குறுக்கும் நெடுக்குமாக வரிகள்
ஓடிப் பின்னலிட
இன்னும் எவ்வளவு நாள்கள் இது எம்மை வருத்திக்கொண்டு உயிரோடு இருக்கும். சீக்கிரம் செத்துத் தொலையக் கூடாதோ என்று உறவினர்கள் வெறுக்க அதையறிந்து இதயம் வேதனையால் துடிக்க முருகன்தான் வந்து காக்கவேண்டும் என்பது பொருள்.
எனக்கு ஏதாவது மனவருத்தமோ என நினைக்கவேண்டாம். இது பொதுவாக முதியோருக்கு வரக்கூடிய நிலை.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCNUaUVXfbPb1CwgNu1c1xzYoo_PLLFnGApmUnuTwJVnnA%40mail.gmail.com.
தனதனன தான தத்த தனதனன தான தத்த
சிவசிவா எழுதிய சந்தத்தை ஒட்டி ஒருபாடல்
தனா தனன தான தனா தனன தான
தனா தனன தான -தனதான
பலே உனது பாட லடா யென விடாது
பரா வுபுகழ் வேணும் – உதவாயோ
படா ரெனவு தாரம் முனே பெறவி டாது
பலா னதையு நாடி- விழுவேனை
எலே இதுவ டாது சதா இதை
வி டாமல்
இதே எனது வேலை – எனவேதான்
இரா மலரு ஞான உலா வருமொர் பாதை
இதோ எனவு தார – மொழிவாயே
கலா பமயில் மீதி லுலா
வுவடி வேல
கனா வெனவென் னாசை- விழலாமோ
கரூ ரிலினி மீள விழாவகையுன் னாசி
கறார் ரெனவென் நாத –தருவாயே
நிலா துவிரை காலம் நியாய மது தேவை
நிதா னமினி யேது – நிறைவான
நிலா வுபுகழ் ஞானம் வழா துசெலும் வாழ்வு
நிலா வதன வேல – அருள்வாயே!
இலந்தை
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/570b76cc-4f71-4e6f-a768-3b71dfc19ac8n%40googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCOpE%3Dk7cWQf%3DpuP-KyMSXAsj8RSvo8h%2BmgzSLbH%3Dhzx7A%40mail.gmail.com.

ENVIUS THOUGHTS crosses overall view score of 3,04,000
With the 17th view at 06.30 hrs. today Friday the Sixteenth April ( 16/04/2021) the Blog Envius Thoughts in https/nvsr.wordpress.com, has crossed over all view score of Three Lac and Four Thousand (3, 04, 000) on this day thanks to your views on the 2162nd day of the Blog with 2369 posts . Kindly continue to view and support. Thanks.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBCdCbdafwksYtzNHxXWOsKO8ZJ8_Njd37yO%3DVVkG1qLXA%40mail.gmail.com.
ENVIUS THOUGHTS crosses overall view score of 3,04,000
--N V Subbaraman,
Editor, Young Poet,
12 / 1045 Jeevan Bhima Nagar,
Chennai - 600101
Visit my blog: http://nvsr.wordpress.com
Facebok: http://facebook.com/subbaraman.nagapatnamviswanathan
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAHW_U06Ow%3D4-5HuS4jC-tMwfkLD8HpjP%2BKW%3DcTYGckgD%2BtCfrw%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCN%2BPSMFKYX0FG-_CwTaXF8rz2vYHYVqM3z9xSYS%3Dkcm4g%40mail.gmail.com.
| தமிழ் இலக்கிய வரலாற்றுச் சுருக்கம் | |
|---|---|
| நூலக எண் | 35862 |
| ஆசிரியர் | மதிவதனன், தி. |
| நூல் வகை | இலக்கிய வரலாறு |
| மொழி | தமிழ் |
| வெளியீட்டாளர் | - |
| வெளியீட்டாண்டு | 1999 |
| பக்கங்கள் | 106 |
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCN%2BPSMFKYX0FG-_CwTaXF8rz2vYHYVqM3z9xSYS%3Dkcm4g%40mail.gmail.com.
Sanskrit dictionary says:
https://dsal.uchicago.edu/cgi-bin/app/apte_query.py?qs=%E0%A4%9A%E0%A4%A8%E0%A5%8D%E0%A4%A6%E0%A5%8D%E0%A4%B0&searchhws=yes&matchtype=defaultचन्द्र candra a. [चन्द् णिच् रक्] Ved. 1 Glittering, bright, shining (as gold). -2 Lovely, beautiful. -न्द्रः 1 The moon; ......................So, I wonder if - names like 'chandravadana' (மதிவதனன்) may mean - beautiful face - and not necessarily 'moon-like face'. Gopal or others may be able to explore further.In Tamil, women are described as "வாண்முகம்" (வாள் முகம்) = bright-faced.
அருமையான குழிப்பு ஐயா. என்னையும் எழுத வைத்தது.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAH9BvAJP8a631xi4jTJXBMa04ywh7spbqOJ02DXK_uysxS_Lmw%40mail.gmail.com.
ராம சந்திரன் ?On Fri, 16 Apr 2021 at 09:35, Siva Siva <naya...@gmail.com> wrote:Sanskrit dictionary says:https://dsal.uchicago.edu/cgi-bin/app/apte_query.py?qs=%E0%A4%9A%E0%A4%A8%E0%A5%8D%E0%A4%A6%E0%A5%8D%E0%A4%B0&searchhws=yes&matchtype=defaultचन्द्र candra a. [चन्द् णिच् रक्] Ved. 1 Glittering, bright, shining (as gold). -2 Lovely, beautiful. -न्द्रः 1 The moon; ......................So, I wonder if - names like 'chandravadana' (மதிவதனன்) may mean - beautiful face - and not necessarily 'moon-like face'. Gopal or others may be able to explore further.In Tamil, women are described as "வாண்முகம்" (வாள் முகம்) = bright-faced.
பசுபதி