தில்லை வேந்தன் - ஆர். நடராஜன் - இறைவனடி சேர்ந்தார்

42 views
Skip to first unread message

Siva Siva

unread,
Dec 7, 2025, 1:58:51 AM (10 days ago) Dec 7
to santhavasantham
தில்லை வேந்தன் திரு ஆர் நடராஜன் இன்று காலை (இந்திய நேரம் - ஞாயிற்றுக்கிழமை - 7-டிசம்பர்-2025) இறைவனடி சேர்ந்தார்.

காலை உணவு உண்டபின் ஒய்வெடுக்கச் சென்றவர் மாரடைப்பால் (heart attack) காலமானார். அந்திமகிரியைகள் செவ்வாயன்று நிகழும்.

முகவரி 
38 நாகப்பா நகர், 
முதல் தெரு, 
குரோம்பேட்டை,
சென்னை.

=====

திரு நடராஜனார் ஆன்மா நற்கதி அடைக!

அன்னாரின் இழப்பால் வருந்தும் அவர் குடும்பத்தினருக்கு இதனைத் தாங்கும் சக்தியை ஈசன் அளிக்கட்டும்.

தினமும் பல்வேறு கருத்துகளில் அழகிய பாடல்கள் புனைந்து சந்தவசந்தத்தில் இட்ட அவர் மறைவு நம் குழுவிற்குப் பேரிழப்பே.

வி. சுப்பிரமணியன்
====

Siva Siva

unread,
Dec 7, 2025, 2:03:27 AM (10 days ago) Dec 7
to santhavasantham
முகவரி 
38 நாகப்பா நகர்,
First Main 
குரோம்பேட்டை.

Final rites will be on Tuesday. His body is likely to shifted to a mortuary by this evening (Sunday).
Call 91089 39305 - for timings.
===

Girija Varadharajan

unread,
Dec 7, 2025, 2:05:13 AM (10 days ago) Dec 7
to santhavasantham

ஐயோ இது மிக  மிகக்  கொடுமையான செய்தி. எவ்வளவு அற்புதமான கவிஞர். வானவர்களும் அவர்தம்  பா கேட்க விரும்பி அழைத்துச்சென்றார்களோ? ஆழந்த இரங்கல் அவர் குடும்பத்தார்க்கு. -  அ கி வ


From: santhav...@googlegroups.com <santhav...@googlegroups.com> on behalf of Siva Siva <naya...@gmail.com>
Sent: Sunday, December 7, 2025 12:33 PM
To: santhavasantham <santhav...@googlegroups.com>
Subject: Re: தில்லை வேந்தன் - ஆர். நடராஜன் - இறைவனடி சேர்ந்தார்
 
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCMPHF%2BmgJbxu3esNUFBnHoCwwCwxFj-Er7rCg2hUogzKw%40mail.gmail.com.

Ram Ramakrishnan

unread,
Dec 7, 2025, 2:08:11 AM (10 days ago) Dec 7
to santhav...@googlegroups.com
I am shocked to know this.

I spoke to him a couple of days ago and was planning to meet him on Dec 10.

My heartfelt condolences to his family.
அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On 7 Dec 2025, at 12:35 PM, Girija Varadharajan <girij...@hotmail.com> wrote:



Arasi Palaniappan

unread,
Dec 7, 2025, 2:18:40 AM (10 days ago) Dec 7
to சந்தவசந்தம்
அதிர்ச்சி தரும் செய்தி. அண்ணாவின் ஆன்மா இறைவன் திருவடியில் அமைதியடைக 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Lalitha & Suryanarayanan

unread,
Dec 7, 2025, 2:26:29 AM (10 days ago) Dec 7
to santhav...@googlegroups.com
மிகவும் அதிர்ச்சி தரும் செய்தி. அவரது பிரிவால் வருந்தும் குடும்பத்தினருக்கு என் இரங்கல்கள். அவரின் ஆன்மா நற்கதி அடைக.

சிவசூரி.

On Sun, Dec 7, 2025 at 12:28 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

Girija Varadharajan

unread,
Dec 7, 2025, 3:07:30 AM (10 days ago) Dec 7
to சந்தவசந்தம்

முல்லைமணம் வீச, முழுநிலவுச் சோதியுடன் 

தில்லைவேந் தன்தந்தார் தேனாம்பா- ஒல்லையதை  

மாந்திக் களிக்க மனம்கொண்ட வானவரும்     

காந்தியிதைச் செய்தாரே காண் 



From: santhav...@googlegroups.com <santhav...@googlegroups.com> on behalf of Arasi Palaniappan <arasipala...@gmail.com>
Sent: Sunday, December 7, 2025 12:48 PM
To: சந்தவசந்தம் <santhav...@googlegroups.com>
Subject: Re: தில்லை வேந்தன் - ஆர். நடராஜன் - இறைவனடி சேர்ந்தார்

Govindaraju Arunachalam

unread,
Dec 7, 2025, 3:41:47 AM (10 days ago) Dec 7
to santhav...@googlegroups.com
It’s shocking. My heart felt condolences to his family. May his noble soul reach the heavenly abode. 

rgds,
 
Dr. A. GOVINDARAJU,
Retired Principal - National Awardee,



Ram Ramakrishnan

unread,
Dec 7, 2025, 4:07:27 AM (10 days ago) Dec 7
to santhav...@googlegroups.com
Dec 5 ம் தேதி அவருடன் சுமார் 45 நிமிடம் பேசிக்கொண்டிருந்தேன்.

கடந்த 2 மாதங்களாகவே தலைசுற்றல் பிரச்சனைக்காகவும் நீரிழிவுப் பிரச்சனைக்காகவும் பலவித மருத்துவப் பரிசோதனைகள் செய்த வண்ணம் இருத்தார். அவ்வப்போது உடல் நிலையைப்பற்றிக் கேட்பதற்காகத் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தோம்.

Dec 5 ம தேதி பேசுகையில் குருநாதன் ரமணி பற்றி நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். தில்லை வேந்தன் அவர்கள் ச. வ. குழுவில் சேருதற்குக் காரணமாயிருந்த ரமணி அவருடைய முக நூல் நண்பர் என்ற சேதியும், ரமணியின் உந்துதலால் முகநூலில் 200 க்கு மேற்பட்ட வெண்பாக்களை (ரமணி கொடுத்த தலைப்பில்) எழுதியதாக க் கூறினார். ரமணி மிகவும் ரசித்துப் பாராட்டிய விதத்தைப் புகழ்ந்து பேசிய அவர் எவ்வாறு ரமணியின் இறுதிக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியாமல் போனது என்பது பற்றியும் பேசினார். ஒருவர்க்கொருவர் நேரில் பாராமலே நட்பு கொண்டதைப பிசிராந்தையார் கோப்பெருஞ் சோழன் நட்புடன் இணைத்துப் பேசினார்.

அவருடைய வெண்பாக்களைப் புகழ்ந்து பேசிய என்னை முத்தொள்ளாயிரம் ரசித்துப் படிக்க வலியுறுத்தினார்.

அள்ளற் பழனத் தரக்காம்பல் வாய்அவிழ
வெள்ளந்தீப் பட்ட தெனவெரீஇப் – புள்ளினம்தங்
கைச்சிறகாற் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ
நச்சிலைவேற் கோக்கோதை நாடு

என்ற முத்தொள்ளாயிரப் பாடலுக்கு அருமையான விளக்கம் அளித்தார்.

உடல்நலன் வெகுவாக முன்னேறி விட்டதெனத் தெரிவித்தவர், திரு. சிவசிவா அவர்களின் மதிசூடி 4 புத்தக வெளியீட்டு விழாவில் சந்திப்போம் என உறுதி மொழி தந்தார்.

என்னிடம் அவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருந்தது மகிழ்ச்சி அளித்ததாகச் சொன்னார்.

இன்னுமும் அவர் இழப்பு நிஜமென மனம் ஏற்க மறுக்கினறது.

ஒரு அற்புதமான கவிஞரை இழந்துவிட்டோம் என்ற துடிப்பு மிகவாகின்றது.



அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

Arasi Palaniappan

unread,
Dec 7, 2025, 5:06:55 AM (9 days ago) Dec 7
to சந்தவசந்தம்
அண்ணா மறைவுக்கு அடியேனின் இரங்கற்பா!

அன்னையவள் மீனாட்சி அடிகள் சரண்புகவே 
இன்றெழுது வெண்பாவே இறுதிப்பா ஆனதுவோ?
யானிட்ட பின்னூட்டம் அவர்கண்டு மனமகிழ்ந்து 
தான்நன்றி சொன்னதுவே தன்கடைசிப் பதிவாமோ?
நாளும் ஒருபாடல் நம்குழுவில் இட்டவரும் 
ஆளும் அரனார் அடிகள் அடைந்தாரோ?
பார்த்தும் களித்தும் பழகி இருந்தோமே!
நேர்த்தித் தமிழாலே நெஞ்சமொன்று சேர்ந்தோமே!
மன்னி கையால் சாப்பாடு வயிறார உண்டோமே?
அந்நாளை நினைத்தாலே ஆற்றாமை வருகிறதே!
கண்ணீர் செலவாச்சே! கவிதை வரவாச்சே!
உண்ணவும் முடியலியே! ஓடி வந்து பார்க்கவொணா
என்னிலைமை யாலே இதயம் கனக்கிறதே!
மன்னி புலம்புவதை மக்கள் கதறுவதை
உன்னி எனதுநெஞ்சம் 
உருகிக்கண் வழிகிறதே!
பாயில் படுக்காமல், படுதுன்பம் தருகின்ற
நோயிலவர் வீழாமல் நொடியில் மறைந்தாரே!
கூத்தாடிப் பெம்மானும் கூற்றுவனை நிறுத்தலியே!
ஆத்தா சிவகாமி அருகிருந்து காக்கலியே!
"பாடல் எழுதிவிட்டோம், பரிசுகளும் பெற்றுவிட்டோம்
வாடல் இனிஎதற்கு? மறைவோம் எனநினைத்துக்
கண்மூடி விட்டாரோ?
தன்முடிவு கொண்டு தான்மறைந்து, எம்முடைய
மன்னியினைக் கைம்மையிலே வைத்ததுவும் முறைதானா?
தமிழ்நெஞ்சிற் பொங்குகையில் தடைவந்த(து) எவ்வாறோ?
உமிழ்நீரில் தமிழிருந்தும் உயிர்பிரிந்த(து) எவ்வாறோ?
கண்மூடி விட்டவரைக்
கடவுளர்கள் ஒருங்கிணைந்து
பண்பாட வேண்டிப் பரலோகம் கொண்டாரோ?
பூஸ்தானம் அவர்நல்கப் பூவுலகை நீத்தாரோ?
ஆஸ்தான கவியாகி அங்கே நிலைப்பாரோ?
இறைவன் தருகின்ற ஈற்றடிக்குப் பாடிநெஞ்சம்
நிறைவாரோ? கடவுளர்தம் 
நெஞ்சில் நிறைவாரோ?
இரமணிஅண்ணா 
வுடன்இணைந்து, எண்ணற்ற கவிபாடிப்
பரலோகம் எல்லாம் பாட்டால் நிறைப்பாரோ?
தட்டச்சுச் செய்து தமிழாண்ட கையெங்கே?
பொட்டுப் பொலிந்தமுகம் போன இடமெங்கே?
வேட்டியினில், ஜிப்பாவில் விழிகளுக்குக் கண்ணாடி
மாட்டி உலவுகிற மாமனிதர் போனதெங்கே?
அழுது புரண்டாலும் அண்ணா வருவாரா?
தொழுது புலம்பிடினும் துயரம் மறைந்திடுமா?
காலம் மருந்தாகும் ; கவிஞரவர் படைத்தகவி
காலம் கடந்தும் கருத்துக்கு விருந்தாகும்
பெற்ற மக்கள் தாயாரைப் பேணிநிதம் காப்பார்கள்
நற்றமிழும் தில்லை நடராஜர்
திருவருளும்
மென்மேலும் காக்கும்; விண்ணடைந்த வேந்தரவர்
ஆன்மா அமைதியுறு மாம்!

கண்ணீர் அஞ்சலி செலுத்தும்
அரசி. பழனியப்பன்



On Sun, 7 Dec 2025, 7:58 am Siva Siva, <naya...@gmail.com> wrote:

K.R. Kumar

unread,
Dec 7, 2025, 5:49:44 AM (9 days ago) Dec 7
to santhav...@googlegroups.com
மிகவும் அதிர்ச்சியான செய்தி.

தினமும் சந்த வசந்தத்தில் அவருடைய கவிதைகளைப் படித்து மிகவும் மகிழ்வேன். நம் குழுவில் அவர் ஓர் ஆசு கவி.

தில்லைவேந்தன் நடராஜன் , தில்லை ஆண்டவன் திருப்பாதங்களில் ஐக்கியமாக இருக்க எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டுகிறேன்.

குமார்(சிங்கை)



இமயவரம்பன்

unread,
Dec 7, 2025, 6:27:45 AM (9 days ago) Dec 7
to santhav...@googlegroups.com, santhavasantham
தில்லைவேந்தரின் மறைவு - மிகுந்த அதிர்ச்சி தரும் செய்தி.!

“ தமிழ்நெஞ்சிற் பொங்குகையில் தடைவந்த(து) எவ்வாறோ?
உமிழ்நீரில் தமிழிருந்தும் உயிர்பிரிந்த(து) எவ்வாறோ?”
என்னும் அரசியாரின் கேள்விகள் தாம் என் நெஞ்சில் மீண்டும் மீண்டும் ஒலிக்கின்றன.

மிக நல்ல மனிதர். சில வருடங்களுக்கு முன் அவரை முதன்முதலாகத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியபோது என் வெண்பாக்களின் செப்பலோசையைப் பாராட்டிய அவர், என்னை முத்தொள்ளாயிரம் கற்று வெண்பா வல்லமையை மேலும் வளர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார். அதைத் தொடர்ந்து நிகழ்ந்த ஒரூ சில உரையாடல்களின் போதும் பல நல்ல அறிவுரைகளை வழங்கி ஊக்கப்படுத்தினார்.

தில்லைவேந்தர் என்னும் சீரிய நண்பரின் மறைவு  அடியேனுக்குப் பேரிழப்பு.

அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

- இமயவரம்பன் 

sudha's creations

unread,
Dec 7, 2025, 6:48:42 AM (9 days ago) Dec 7
to santhavasantham
Very shocking news.
. சுதா வேதம் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

அஶோக்

unread,
Dec 7, 2025, 6:52:36 AM (9 days ago) Dec 7
to சந்தவசந்தம்
நண்பர் சிவசிவாவின் வாட்ஸப் குறுஞ்செய்தியால் கவிஞர் தில்லைவேந்தன் மறைவு குறித்தறிந்து மிகவும் வருந்தினேன்.. சென்ற வருடம்தான் அவரை சான்ஹோஸேயில் அவருடைய மகளுடன் ஒரு சாயிபாபா கோவில் நிகழ்ச்சியில் பார்த்து பேசிக்கொண்டிருந்தேன்..அதுதான் இறுதி சந்திப்பாக இருக்குமென்று சிறிதும் நினைக்கவில்லை.. அமைதியான ஆசு கவிஞர்! அவருடைய கவிதைகளில் அழகு நடையுண்டு, ஆழ்ந்த பொருளுண்டு! அன்னாரின் இழப்பு நம் குழுவுக்கு மட்டுமல்லாமல், தமிழன்னைக்கு பேரிழப்பே!

கல்லும் கனியக் கவிதை இசைத்த கவிப்பெருமான்

தில்லை இழப்பினால் தீராத் துயரில் திளைத்திடுவள்

முல்லைத் தமிழன்னை! மூகமாய் வாயும் முடங்கலுற்றுச்

சொல்லின் சுகத்தை தொலைத்துத் தவித்துளஞ் சோர்ந்தனளே

KKSR

unread,
Dec 7, 2025, 7:33:50 AM (9 days ago) Dec 7
to santhav...@googlegroups.com
*என்ன அவசரமோ எமனுக்கு? இறைவாகேள்!*
~~~~~~~~~~~~
அடடா இடியொன்று தலையில் விழுந்ததைப்போல்
விடையோன் பாதமதிற் சேர்ந்தார் தில்லையண்ணா
என்ற வச்செய்தி கண்டுமனம் வாடியதே!
தொன்று மரபெல்லாம் தொகையாக்கித் தந்தமனம்
சென்றதுகாண்! என்சொல்ல! செவிகுளிர சுரேஜமீ
என்றழைக்கும் குரல்தனை இனிக்கேளா தென்செவிகள்!
அருந்தமிழ் யாப்பெல்லாம் அழகாய் விளக்குகின்ற
பெருமை படைத்த அண்ணல் நடராஜன்
இவ்வளவு அவசரமாய்ப் போனதென்ன? இறைவா!
அவ்வியம் கொள்ளார்; அன்பு மிக்கார்
செந்தண்மை கொண்டு சிவனாரைப் போற்றிவந்தார்!
விந்தை உலகைவிட்டார்! விண்ணெழுந்தார்! விம்முகிறோம்!
எத்தனை பாடல்கள் எழுதிக் குவித்தோமே!
அத்தனையும் முத்தாக அணிவகுக்கக் காரணமாய்
இருந்த அண்ணல் தில்லைவேந்தர் இன்றில்லை!
நிரந்தர இடம்தேடி நிமலனைச் சென்றடைந்தார்!
என்ன சொல்ல மன்னிக்கு? வார்த்தையிலை!
மின்னலாய் மறைந்தகதை சொன்னாள்! வேறென்செய்?
என்ன அவசரமோ எமனுக்கு? இறைவாகேள்!

அண்ணா! மனம் குமுறுகிறது!

~ சுரேஜமீ
07.12 2025 மாலை 04:29


Sent from Mobile


Govindaraju Arunachalam

unread,
Dec 7, 2025, 8:05:01 AM (9 days ago) Dec 7
to santhav...@googlegroups.com

சரிந்து விழுந்தது ஏனம்மா

 

சந்த வசந்தத் தூணொன்று

   சரிந்து விழுந்த(து) ஏனம்மா

சொந்தம் எல்லாம் அழுதழுது

   சோர்ந்து போனோம் பாரம்மா

எந்த நாட்டை அடைந்தாரோ

   என்ன நினைத்துப் போனாரோ

அந்தம் வந்த அப்பொழுதில்

   அரனே அழைத்துச் சென்றானோ!

 

வெண்பா வேந்தர் எனும்படியாய்

   வெல்லுஞ் சொல்லைப் பெய்வதையே

பண்பா டாகக் கொண்டவரைப்

   பாரில் எங்கும் கண்டதில்லை

ஒண்பா என்றே உலகத்தார்

   ஓங்கி உரைப்பார் எந்நாளும்

விண்பா பாடச் சென்றாரோ

   வேந்தர் திரும்பி வாராரோ!

 

திருத்த மாக எண்ணியதைத்

   தேனில் குழைத்த சொல்லெடுத்து

விருத்தம் எழுதும் வித்தையினை

   வேந்தர் எங்கே கற்றாரோ

பொருத்த மாகக் கதைப்பாடல்

   போகும் போக்கில் எழுதியதை

வருத்தம் மேவ நினைக்கின்றோம்

   வழியும் கண்ணீர் மிகப்பெரிதே!

 

ஒன்றும் இல்லாக் கவிதையினை

   ஒன்றா வண்ணம் இட்டாலும்

நன்று நன்று நன்றென்று

   நல்ல சொல்லால் பாராட்டும்

குன்றின் அன்ன புகழுடையார்

   குய்யோ முறையோ என்றழவே

இன்று மறைந்தார் என்பதனை

   ஏற்க உள்ளம் மறுக்கிறதே!

 

என்று வருவான் எனவறியா

   எளியர் தம்மை ஓர்நொடியில்

கொன்று போடும் காலனைநாம்

   கொன்று போடும் நாள்வருமோ

சென்று வருக எனச்சொல்லி

   சேர்ந்து நின்று விடைநல்கி

என்றும் தில்லை புகழ்பாட

   ஏற்போம் உறுதி இப்போதே!

 

-கண்ணீரில் மிதக்கும் கருவூர் இனியன்




--

Easwar I

unread,
Dec 7, 2025, 8:12:59 AM (9 days ago) Dec 7
to santhav...@googlegroups.com
Shocking news. Heartfelt condolences. Prayers for திரு தில்லை வேந்தன்.

I enjoyed his poems immensely. I have written to him a few times, appreciating his poems and also cleared my doubts for better understanding. He would always respond back promptly with kind words.

Painful to realize we will not see his posts anymore here.

Saranya Gurumurthy

unread,
Dec 7, 2025, 8:46:33 AM (9 days ago) Dec 7
to சந்தவசந்தம்
. . அன்னை பதமே அரண்!

                (நேரிசை வெண்பா)

மீன்விழியாள்,மாமதுரை மேவி அரசாள்வாள்,
தேன்பொழி பேரருள் செய்திடுவாள்,- ஏன்கவலை?
முன்னை வினைகள் முழுதும் அழிப்பாளென்
அன்னை பதமே அரண்!

                            —தில்லைவேந்தன்.

இந்த வெண்பாவை நேற்றிரவு இட்டிருந்தார். இன்று அரணாய் இருக்கும் அன்னை பதத்தை அடைந்தார் என்ற‌ செய்தியைப் பார்க்கும் போது என்ன சொல்வதென்று தெரியவில்லை.

"மீனலோசனி பாச மோசனி" என்று‌ ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் பாடி அவளோடு கலந்தது நினைவுக்கு வருகிறது.

Regards,
Saranya

Rajagopalan Soundararajan

unread,
Dec 7, 2025, 8:55:09 AM (9 days ago) Dec 7
to சந்தவசந்தம்
Shocking news. During this time last year, I visited him at his daughter's place in Milpitas CA. He and his family welcomed me with affection and we spent more than an hour discussing on how we got introduced to Santhavasantham. 
May His soul rest at the Holy Feet of Thillai Nataraja peruman.
Soundar

VETTAI ANANTHANARAYANAN

unread,
Dec 7, 2025, 9:27:47 AM (9 days ago) Dec 7
to santhav...@googlegroups.com


On Sun, Dec 7, 2025 at 9:25 AM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
தில்லை வேந்தன் நடராஜன் தில்லை வேந்தன் நடராஜனுடன் ஐக்யமானார். கவிதை உலகிற்குப் பேரிழப்பு இது. 

அவர் நேற்று இட்ட பாடல்:

ஆடும் பெருமான்!


                      (நேரிசை வெண்பா)
.
ஆடும் பெருமான், அணிகொன்றை, ஆறு,மதி
சூடும் பெருமான்பேர் சொல்லடி! - நீடு
புகழ்மன்னும் பேருரைப்பேன்,பொன்மன்றில் என்றும்
திகழ்தில்லை வேந்தனெனத் தேர்!

                          (தேர் — அறி)

                                 — தில்லைவேந்தன். 
    ... அனந்த் 
--------------------------------------

May His soul rest at the Holy Feet of Thillai Nataraja peruman.
Soundar

On Sunday, 7 December 2025 at 12:28:51 UTC+5:30 Siva Siva wrote:
தில்லை வேந்தன் திரு ஆர் நடராஜன் இன்று காலை (இந்திய நேரம் - ஞாயிற்றுக்கிழமை - 7-டிசம்பர்-2025) இறைவனடி சேர்ந்தார்.


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Swaminathan Sankaran

unread,
Dec 7, 2025, 10:50:12 AM (9 days ago) Dec 7
to santhav...@googlegroups.com
தமிழ் உலகம் ஒரு மிக, மிக நல்ல கவிஞரை, அறிஞரை இழந்துவிட்டது.
பற்பல கருத்துக்களையும், விஷயங்களையும் பற்றி மிக அருமையான 
கவிதைகளை நமக்குத் தந்து அருளினார்.அவர் குடும்பத்தார்க்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் 

சங்கரன் 



--
 Swaminathan Sankaran

Kaviyogi Vedham

unread,
Dec 7, 2025, 11:23:56 AM (9 days ago) Dec 7
to santhav...@googlegroups.com
 மிகுந்த  வருத்தம் அளிக்கிறது இச்செய்தி. என் அஞ்சலிகள்..  வேறு  என்ன  செய்ய..
 யோகியார்

Subbaier Ramasami

unread,
Dec 7, 2025, 7:57:55 PM (9 days ago) Dec 7
to santhav...@googlegroups.com

தில்லை வேந்தன் மறைந்தாரா
தில்லை வேந்தன் மறைந்தாரா
      சிறிதும் நம்ப இயலவில்லை
நல்ல தமிழில் கவிதைகளின்
       நாநா வகையும் படைத்தாரே
அல்லும் பகலும் கவியெழுதி 
       அவற்றை இங்கே அளித்தாரே
சொல்லை ஆளும் வகையறிந்த
       தோன்றல் மறைந்து போனாரே!

 

இலக்கி யத்தில் புதுப்புதிதாய் 
        எழுதிக் குவித்தார் இத்தளத்தில்
நிலைத்தி ருந்து   படைத்தளித்து
       நித்தம் காப்பார் எனநினைத்தோம்
கலக லத்துப் போனோமே
        காண்ப தெப்போ இனிமேலே
விலைமதிக்க  ஒண்ணாத 
         வேந்தர் நாமம் வாழியவே!

விருது பலவும் அவர் கவிதை 
          விழைந்து தேடி வந்தனவே
அரிதோ எளிதோ எவ்வகையும்
        அவரின் கருத்தில் விளையாடும்
பரிவு மிக்கார், அன்புடயார்
         பண்பிற சிறந்த பாவாணர்
கருதிக் கருதி வியந்தோமே
         காணா தின்று போனாரே!

குண்ட லகேசிக் காவியத்தைக்
          கோதில் லாமல் படைத்தளித்தார்
தண்ட மிழ்க்குப் புதுவரவாய்
          தரமாய் புத்தம் புது நால்கள்
கொண்டு கொடுத்தார் அவரைப் போய்க்
          கொண்டு  போனா னேகாலன்
தொண்டு மனத்தர், என்செய்வோம்
           தொலைத்து விட்டோம் கவிவேந்தை!

இன்னும் கூட என்றன்மனம்
          ஏற்க மறுத்துப் பார்க்கிறது?
என்ன செய்ய?விதியின் கை
           எடுத்துப் போன தென்கின்றார்
உன்ன தங்கொள் அவர்கவிதை
           உயிரோ டிருந்து பெயர்சொல்லும்
என்றும் இறைவன் திருவடியில் 
            இருப்பார் நிலைப்பார், சிறப்பாரே!

ஆறு தல்கள் சொல முடியா
          அவதி யில்நான் தவிக்கின்றேன்
வீறு கொண்ட அவர்கவிதை
            விளைச்சல் காண அவர் மனைவி
கூறும்  உயிர்ப்பாய் இருந்துவந்தார்
             குடும்பம் இன்று தவிக்கிறதே
ஏறும் தெம்பை இறையளித்தே
             என்றும் காத்தே அருள்புரிக!
               

இலந்தை

 


M. Viswanathan

unread,
Dec 8, 2025, 3:51:57 AM (9 days ago) Dec 8
to Santhavasantham
அன்பு நண்பர், கவிஞர் தில்லைவேந்தன் அவர்களின் ஆத்மா சாந்தி பெற வேண்டுகிறேன்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி:

மீ.விசுவநாதன்
8.12.2025 14.21pm

N. Ganesan

unread,
Dec 8, 2025, 5:12:00 AM (8 days ago) Dec 8
to santhav...@googlegroups.com
அதிர்ச்சி தரும் செய்தி! அரிய நண்பர் கவிஞர் தில்லைவேந்தன்.

M. Viswanathan

unread,
Dec 8, 2025, 6:31:14 AM (8 days ago) Dec 8
to santhav...@googlegroups.com

"மரபினை நன்கறிந்து மானிடம் வாழ
இரவும் பகலும் கவிதைச் சரம்தொடுத்த
நல்லுயிர் ஒன்றினை நான்கண்டேன் அவ்வுயிரே
தில்லைவேந் தன்திருப் பேர்."

மீ. விசுவநாதன்
08.12.2025 17.00 pm 

 

Dr. Pushpa Christy Canada

unread,
Dec 8, 2025, 8:14:20 AM (8 days ago) Dec 8
to santhav...@googlegroups.com
அதிர்ச்சி தரும் செய்தி. அன்னாரின் ஆன்ம சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றேன். 
சோதரி புட்பா கிறிட்டி

Niranjan Bharathi

unread,
Dec 8, 2025, 9:44:23 AM (8 days ago) Dec 8
to santhav...@googlegroups.com
நம்ப முடியவில்லை .

ஆழ்ந்த இரங்கல் 🙏🙏

sankara dass nagoji

unread,
Dec 8, 2025, 10:24:25 AM (8 days ago) Dec 8
to சந்தவசந்தம்
மிகவும் அதிர்ச்சியான செய்தி. அருமையான கவிஞர். நல்ல ரசிகர். 
அவர் தில்லைக் கூத்தனின் திருவடிக்கீழ் என்றும் நிலைத்துள்ளார்.

- சங்கர தாஸ்

Siva Siva

unread,
Dec 9, 2025, 4:55:59 AM (7 days ago) Dec 9
to santhav...@googlegroups.com
இதுவரை இவ்விழையில் இடப்பெற்றவற்றைத் தொகுத்து, எனக்குச் செய்தி சொன்ன அவர் நண்பரிடம் அனுப்பிவிட்டேன்.
அவர் தில்லைவேந்தன் - நடராஜன் - குடும்பத்தினருக்கு அனுப்பிவைப்பார். 

வி. சுப்பிரமணியன்

 

RNachi

unread,
Dec 9, 2025, 9:20:31 AM (7 days ago) Dec 9
to சந்தவசந்தம்
தில்லை ஐயாவின் மறைவு இன்னும் நம்ப இயலவில்லை. அவர் நம்முள் நற்றமிழாய், இயற்கை எழிலாய் எங்கும் அழியாது நிலைத்திருப்பார்.
ஐயாவின் ஆத்மா இறைவனடி சேர்ந்து முக்தி அடைய தில்லை வேந்தனே அருள் புரியட்டும் ஓம் சாந்தி ஓம்.

எல்லை கடந்தே எழிலானார்
     இயற்கை எய்தி இறையானார்
தில்லை சென்று சிவமானார்
      தில்லை வேந்தர் உயர்வானார்
நல்ல பாக்கள் மரபிழையில்
      நாளும் இட்ட நற்கவிஞர் 
இல்லை இனிமேல் இவ்வுலகில்
      என்றே எண்ண வேதனையே

இராம நாச்சியப்பன்

N. Ganesan

unread,
Dec 12, 2025, 11:01:30 PM (4 days ago) Dec 12
to santhav...@googlegroups.com
இனிய நண்பர் தில்லைவேந்தன் ஒளிப்படம் (photo) இருப்போர் பகிரவும்.
அவரைப்பற்றி எழுத உதவும்.

நனிநன்றி,
நா. கணேசன்


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Kaviyogi Vedham

unread,
Dec 13, 2025, 11:59:10 AM (3 days ago) Dec 13
to santhav...@googlegroups.com
thillaivendhan photo.jpg

KKSR

unread,
Dec 13, 2025, 11:00:03 PM (3 days ago) Dec 13
to santhav...@googlegroups.com
அண்ணா, 

வணக்கம்!

தங்களின் வேண்டுகோளுக்கு இணங்க!


அன்புடன்
சுரேஜமீ

Sent from Mobile


N. Ganesan

unread,
Dec 14, 2025, 3:19:22 AM (3 days ago) Dec 14
to santhav...@googlegroups.com
Reply all
Reply to author
Forward
0 new messages