கோடைக் காலம் கொடியதம்மா

8 views
Skip to first unread message

இமயவரம்பன்

unread,
Jul 19, 2026, 6:18:06 AM (2 days ago) Jul 19
to santhavasantham

கோடைக் காலம் கொடியதம்மா

(அறுசீர் ஆசிரிய விருத்தம் - மா மா காய்)


அலைநீர்க் கடலின் களியாட்டம்

… அலர்சேர் பொழிலின் அணித்தோற்றம்

ஒலிசேர் குயிலின் அரங்கேற்றம்

… உவப்பாய் இவைபோல் கொடுத்தாலும்

குலவும் காலம் குறைந்திடவும்

… குளிர்கா லம்தான் நெருங்கிடவும்

கொலைவாள் போல்நாள் அறுப்பதனால்

… கோடைக் காலம் கொடியதம்மா.


(குலவும் = உல்லாசமாகத் திரியும்)


- இமயவரம்பன் 

Arasi Palaniappan

unread,
Jul 19, 2026, 6:20:57 AM (2 days ago) Jul 19
to சந்தவசந்தம்
கோடைக் காலம் கொடியது 
      கூறும் பாட்டோ இனியது!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/26CE5272-D230-4B93-B478-B84E0B8CF003%40gmail.com.

இமயவரம்பன்

unread,
Jul 19, 2026, 6:23:17 AM (2 days ago) Jul 19
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
அரசியார்க்கு மிக்க நன்றி

Sai Ganesan H

unread,
Jul 19, 2026, 6:23:26 AM (2 days ago) Jul 19
to santhav...@googlegroups.com
அருமை! 

— சத்யவேழன் H சாயிகணேசன்

--

இமயவரம்பன்

unread,
Jul 19, 2026, 6:27:07 AM (2 days ago) Jul 19
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
சத்யவேழருக்கு நன்றி

> On Jul 19, 2026, at 6:23 AM, Sai Ganesan H <saisree...@gmail.com> wrote:
>
> அருமை!

Siva Siva

unread,
Jul 19, 2026, 8:20:16 AM (2 days ago) Jul 19
to santhav...@googlegroups.com
Nice.

/ அணித்தோற்றம்  /
I think த் does not come in this context.

V. Subramanian

Rajagopalan Soundararajan

unread,
Jul 19, 2026, 7:46:28 PM (2 days ago) Jul 19
to சந்தவசந்தம்

ஶ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் 417-வது திருநாமமான ருது: என்பது காலத்தைக் குறிக்கும்; இதன் பொருள்: பருவங்கள் வடிவிலான காலமாக இயற்கையில் இருப்பவன் ; பக்தர்களுக்கு உயர்ந்த ஆன்மிக நன்மைகளைத் தரும் பக்குவக் காலமாகவும் இருப்பவன். எனவே, கோடைக் காலத்தைக் கொடிது என்று எவ்வாறு கொள்வது? அவனே ‘பயக்ருத்’ (அச்சத்தைக் கொடுப்பவனாகவும்), ‘பயநாஶன:’ (அச்சத்தைத் தவிர்ப்பவனாகவும்) இருக்கிறான். கோடையாய் இருப்பவன், தொடர்ந்து உலகம் வாழப்பெய்யும் மழையாகவும் இருப்பான்.

ஸௌந்தர் 

இமயவரம்பன்

unread,
Jul 19, 2026, 8:08:17 PM (2 days ago) Jul 19
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
Thank you. I will note the correction

இமயவரம்பன்

unread,
Jul 19, 2026, 8:11:40 PM (2 days ago) Jul 19
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
தங்கள் அழகான குறிப்புக்கு மிக்க நன்றி, திரு. ஸௌந்தர். ‘ருது:’ என்னும் திருநாமத்தின் பொருளை உணர்த்திய விதம் மிகவும் அருமை.

என் கவிதையில் “கோடைக் காலம் கொடியதம்மா” என்று கூறியதன் காரணத்தைப் பின்வருமாறு காண்க:

அமெரிக்காவில் கோடைக்காலம் மிகக் குறுகிய காலமே நீடிக்கிறது. கடற்கரை, மலர்ச் சோலை, குயிலிசை போன்ற இயற்கை இன்பங்களை ரசிக்கத் தொடங்கும் நேரத்திலேயே, அந்த சுகங்களைக் குறைக்கும் விதமாக “வாள்களாகி நாள்கள் செல்ல”, குளிர்காலம் நெருங்கிவிடுகிறது.

எனவே “கொடியது” என்பது கோடையின் இயல்பைக் குறித்த கருத்து அன்று; இத்தகைய இனிய கோடைக் காலம் விரைவில் முடியும்படியாக நாள்களை வெட்டிக்கொண்டு விரைந்து செல்கிறதே! இன்னும் நிறைய மாதங்கள் இந்த இனிமை நீடிக்கவிடாமல் செல்லும் கோடை கொடியதே ! என்னும் ஏக்கத்தில் இந்தக் கவிதையை எழுதினேன்.

இந்தக் கருத்தைத் தெளிவாக எனது கவிதையில் உணர்த்த தவறியதற்கு வருந்துகிறேன்.

தங்கள் சிந்தனையைப் பகிர்ந்தமைக்கு மீண்டும் என் மனமார்ந்த நன்றி.

- இமயவரம்பன்

Kaviyogi Vedham

unread,
Jul 19, 2026, 9:53:53 PM (2 days ago) Jul 19
to santhav...@googlegroups.com
imayam  yur  poem  is  very nice,  tho' it may be controversial,
  yo

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Jul 19, 2026, 10:03:21 PM (2 days ago) Jul 19
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
யோகியாருக்கு மிக்க நன்றி 
Reply all
Reply to author
Forward
0 new messages