வண்ண விருத்தம் முயற்சி – 10 (ராம்)

2 views
Skip to first unread message

Ram Ramakrishnan

unread,
Jul 23, 2026, 10:39:37 PM (2 days ago) Jul 23
to santhavasantham
 

வண்ண விருத்தம் முயற்சி – 10 (ராம்)

 

தனதந்தன  தந்தன தந்தன

தனதந்தனந்தன தந்தன

தனதந்தன தந்தன தந்தன ……. தனதான

(திருப்புகழ் – திருப்பரங்குன்றம் – கனகந்திரள் கின்றபெ ருங்கிரி)

மனதஞ்சிய சிந்தையில் வந்தருள்

மடமங்கையு மிந்துவு மிங்குற

வளமென்றது தங்கிட அன்புகொள் ….. இனியோனே!

 

மயல்வந்திட நொந்திடு மென்மனம்

வடிவும்உரு வும்நின தன்றியென்

வசமென்றது மொன்றில தென்றறி …… சிவனாரே!

 

புனலும்மதி யும்விட சங்கிலி

இதனில்வரும் மின்னொளிர் சங்கர!

பொலனென்கழல் இங்கென முந்திடும் ……. நிலைதாராய்!

 

புகலும்தவிர் மைந்தனும் வஞ்சினம்

மிகவும்கொள வந்தவர் புஞ்சுவர்

குகனென்றவன் குன்றுற நன்றென ……. அருள்வாயே!

 

சினமுந்திடு மந்தணர் இன்றுநம்

இனமென்றது என்னென உந்திட

சிவனுன்னருள் வென்றுடு நம்பியின் ……. கழல்வேணும்!

 

சிதறும்வகை வந்தது சொந்தமில்

செனனம்கெட அஞ்சன மொன்றளி

தினமும்வெகு சுந்தர னுன்னுரு ……. உளமாகும்!

 

தனமென்றது மைந்தனின் வந்தனை

சரணென்பது சிந்தையி லுன்துணை

தவமென்பது முண்மையில் வந்துற …… அணைவாயே!

 

சகமென்பது விந்தையில் வந்தது

தரமென்றது நன்றென நின்றது

தடையென்றது சென்றது வந்தருள் ……. இறையோனே!

 

பதம் பிரித்து:

 

மனது அஞ்சிய சிந்தையில் வந்தருள்

மடமங்கையும் ந்துவும் ங்குற

வளமென்றது தங்கிட அன்புகொள்  ….. இனியோனே!

 

(அறியாமையினாலும் பயத்தினாலும் கலங்கிய என் சிந்தனையில் எழுந்தருளி வந்தருள்வாயாக! இளமையும் மடப்பமும் பொருந்திய உமையம்மையும், குளிர்ந்த பிறைச்சந்திரனும் உனது திருச்சடையில் விளங்கி நிற்க, வாழ்வின் நன்மையெல்லாம் எம்மிடம் நிலைத்துத் தங்குமாறு என்மீது பேரன்பு கொள்ளும் இனிய பெருமானே!)

 

மயல்வந்திட நொந்திடும் ன்மனம்

வடிவும் உருவும் நினது ன்றி ன்

வசமென்றதும் ன்றிலது ன்று அறி…… சிவனாரே!

 

(உலக ஆசைகளும் மயக்கங்களும் வந்து மூடுவதால் என் மனம் மிகவும் நொந்து தவிக்கிறது. இவ்வுலகில் காணப்படும் அனைத்து வடிவங்களும் உருவங்களும் உன்னுடைய அருள் வடிவமே அன்றி, என்னுடைய சுயமாகவோ என் வசத்திலோ எதுவுமே இல்லை என்பதை நான் உணர்ந்து தெளிந்துகொள்ள அருள்புரிவாயாக, சிவபெருமானே!)

 

புனலும் மதியும்  விடசங்கிலி

இதனில் வரும் மின்னொளிர் சங்கர!

பொலனென்கழல் இங்கென முந்திடும் …. நிலைதாராய்!

 

(கங்கை நீரும், பிறைச்சந்திரனும், நஞ்சுடைப் பாம்பும் பொருந்திய திருச்சடையைக் கொண்ட சங்கரா! அழகில் ஒளிரும் உன்னுடைய திருவடிக் கழல்கள் என் முன்னே தோன்றி அருளும் நிலையைத் தந்தருள்வாயாக! - சங்கிலி - சங்கிலி விரியன் என்ற விடநாகம்)

 

புகலும்தவிர் மைந்தனும் வஞ்சினம்

மிகவும்கொள வந்தவர் புஞ்சுவர்

குகனென்றவன் குன்றுற நன்றென…. அருள்வாயே!

 

(மாங்கனியை விநாயருக்குக் கொடுத்த காரணத்தை ஏற்காது தவிர்த்துப்பின்

உன் மைந்தனான முருகன் சினம் கொள்ள, ஏனையோர் ஓரிடத்தில் கூடி நிற்க, முருகனோ குன்றேறி நிற்க, “அதுவும் நன்று, குன்றிருக்கும் இடமெல்லாம் குகனிருக்கும் இடம்” என்று அருளினாயே)

 

சினம் முந்திடும் ந்தணர் இன்றுநம்

இனமென்றது என்னென உந்திட

சிவனுன்னருள் வென்றுடு நம்பியின் ….கழல்வேணும்!

 

((திருவெண்ணெய்நல்லூரில்) கோபத்தோடு வந்த அந்தணர், "இவன் என் அடிமை" என்று ஓலை காட்டி வாதாடியபோது, "நம் இனத்தைச் சேர்ந்தவனா இவன்?" என்று உலகோர் வியக்கும்படி விளையாடி, தன் தோழமை உரிமையால் உனது திருவருளையே வென்றெடுத்த சுந்தரமூர்த்தி நாயனாரின் (நம்பி ஆரூராரின்) திருவடி நிழலை எனக்கு அளித்தருள்வாயாக!)

 

சிதறும்வகை வந்தது சொந்தமில்

செனனம்கெட அஞ்சன மொன்றளி

தினமும்வெகு சுந்தர னுன்னுரு …. உளமாகும்!

 

(மனம் சிதறும் படியாக வந்து பொருந்தியதும், உண்மையான சொந்தம் இல்லாததுமாகிய இந்தப் பிறவிப் பிணி அழியுமாறு, ஞானமாகிய மையினை (அஞ்சனத்தை) எனக்கு அளித்தருள்வாயாக! அதனால், மிகவும் சுந்தரமான உனது திருவுருவம் நாள்தோறும் என் உள்ளத்தில் நிலைத்து நிற்கும்!)

 

தனமென்றது மைந்தனின் வந்தனை

சரணென்பது சிந்தையில் ன்துணை

தவமென்பதும் ண்மையில் வந்துற ….. அணைவாயே!

 

(உனது மைந்தனாகிய நான் உனக்குச் செய்யும் வணக்கமே எனக்கு உண்மையான செல்வம் ஆகும்! என் சிந்தனையில் எப்போதும் நிலைத்திருக்கும் உன்னுடைய அருள்துணையே என்றன் அடைக்கலம் ஆகும்! நான் செய்யும் தவத்தின் பயன் உண்மையாகவே என் வாழ்வில் வந்து பொருந்தும்படி, என்னை உனது திருவருளில் ணைத்துக் கொள்வாயாக!)

 

 

 

 

சகமென்பது விந்தையில் வந்தது

தரமென்றது நன்றென நின்றது

தடையென்றது சென்றது வந்தருள் ….. இறையோனே!

 

(இவ்வுலக வாழ்வு விந்தையான மாயையினால் தோன்றியது; உன்னுடைய அருளின் உயர்வோ 'நன்று' என எக்காலத்தும் மாறாமல் நிலைத்து நிற்பது. உன்னை நோக்கி நான் வரும் வழியில் இருந்த த தடைகளும் பந்தங்களும் விலகிச் சென்றன. இனி எனக்காக எழுந்தருளி வந்து அருள்செய்வாயாக, பரம்பொருளாகிய இறைவனே!)

 

 


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

Sai Ganesan H

unread,
Jul 24, 2026, 12:30:42 AM (yesterday) Jul 24
to santhav...@googlegroups.com
மிகவும் அருமை, ஐயா! 

— சத்ய வேழன்H சாயி கணேசன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAENLqtj3kC0Hq8uWVJqNA6YS%2BFLfwzSmpY8FPt4MZHYvcZzSOw%40mail.gmail.com.

Ram Ramakrishnan

unread,
Jul 24, 2026, 8:08:07 AM (yesterday) Jul 24
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. சாய் கணேஷ்.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jul 24, 2026, at 00:30, Sai Ganesan H <saisree...@gmail.com> wrote:



Siva Siva

unread,
Jul 24, 2026, 9:31:46 AM (yesterday) Jul 24
to santhav...@googlegroups.com
/ விட சங்கிலி  /
ஓசை கருதி ச் விடப்பட்டதோ?

See highlighted places below for other conformance issues.

Madhisudi blog has a song in this pattern - but is a shorter song than the thiruppugazh.

V. Subramanian

Ram Ramakrishnan

unread,
Jul 24, 2026, 9:53:31 AM (yesterday) Jul 24
to santhav...@googlegroups.com
ஆம், திரு. சிவசிவா. ஓசை கருதியே வல்லின ஒற்று விடப்பட்ட்து. குறிப்பில் சொல்லியிருக்க வேண்டும்.
மீதமுள்ள இடங்களைப் பார்த்து வேண்டிய திருத்தங்களுடன் மீள் பதிவு செய்திடுவேன்.

மிக்க நன்றி, உங்கள் பின்னோட்டத்திற்கு.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
Jul 24, 2026, 11:35:51 AM (yesterday) Jul 24
to santhav...@googlegroups.com
வண்ண விருத்தம் முயற்சி – 10 (ராம்) (திருத்தத்துடன் மீள் பதிவு)

 

தனதந்தன  தந்தன தந்தன

தனதந்தனந்தன தந்தன

தனதந்தன தந்தன தந்தன ……. தனதான

 

(திருப்புகழ் – திருப்பரங்குன்றம் – கனகந்திரள் கின்றபெ ருங்கிரி)

 

மனதஞ்சிய சிந்தையில் வந்தருள்

மடமங்கையு மிந்துவு மிங்குற

வளமென்றது தங்கிட அன்புகொள் ….. இனியோனே!

 

மயல்வந்திட நொந்திடு மென்மனம்

வடிவந்தர வொன்றிடு சுந்தர

வசமென்றது வொன்றில தென்றறி …… சிவனாரே!

 

புனலிந்துவொ டங்குறு சங்கிலி

விரிஞ்சடை மின்னிடு சங்கர!

பொலனென்கழல் இங்கென முந்திடும் ……. நிலைதாராய்!

 

புகலுந்தவிர் மைந்தனும் வஞ்சினம்

மிகவும்கொள வந்தவர் புஞ்சுவர்

குகனன்றுவி ரும்பிய தொன்றினை ……. யருள்வாயே!

 

சினமுந்திடு மந்தணர் இன்றுநம்

இனமென்றது முன்னுற வந்தது

சிவனன்புற வென்றுடு நம்பியின் ……. கழல்வேணும்!

                                                                            

சிதறுந்தகை வந்தது சொந்தமில்

செனனம்கெட அஞ்சன மொன்றளி

தினமென்றருள் செஞ்சடை வண்ணனை……. உளமேவும்


தனமென்றது மைந்தனின் வந்தனை

சரணென்பது சிந்தையி லுன்துணை

தவமென்பது ண்மையில் வந்துற …… அணைவாயே!


சகமென்பது விந்தையில் வந்தது

தரமென்றது நன்றென நின்றது

தடையென்றது சென்றது வந்தருள் ……. இறையோனே!


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)


Siva Siva

unread,
Jul 24, 2026, 12:29:32 PM (yesterday) Jul 24
to santhav...@googlegroups.com
I missed to notice and you too did not catch it in your revision either - /  மென்மனம்  /

One needs to read the vaNNam songs once or twice aloud when reviewing - to help catch the pattern conformance issues.

/ விரிஞ்சடை மின்னிடு  /

/ வென்றுடு    / = ?

ண்மையில்  /

V. Subramanian

Ram Ramakrishnan

unread,
Jul 24, 2026, 2:48:29 PM (yesterday) Jul 24
to santhav...@googlegroups.com

வண்ண விருத்தம் முயற்சி – 10 (ராம்) முழுமையான திருத்தங்களுடன் மீள் பதிவு

 

தனதந்தன  தந்தன தந்தன

தனதந்தனந்தன தந்தன

தனதந்தன தந்தன தந்தன ……. தனதான

 

(திருப்புகழ் – திருப்பரங்குன்றம் – கனகந்திரள் கின்றபெ ருங்கிரி)



மனதஞ்சிய சிந்தையில் வந்தருள்

மடமங்கையு மிந்துவு மிங்குற

வளமென்றது தங்கிட அன்புகொள் ….. இனியோனே!

 

மயல்வந்திட நெஞ்சும யங்கிட

வடிவந்தர வொன்றிடு சுந்தர

வசமென்றது வொன்றில தென்றறி …… சிவனாரே!

 

புனலிந்துவொ டங்குறு சங்கிலி

விரியுஞ்சடை கொண்டுந டஞ்செய

உடனுங்கழ லிங்கென முந்துற ……. மகிழ்வேனே!

 

புகலுந்தவிர் மைந்தனும் வஞ்சினம்

மிகவும்கொள வந்தவர் புஞ்சுவர்

குகனன்றுவி ரும்பிய தொன்றினை ……. அருளீசா!

 

சினமுந்திடு மந்தணர் இன்றுநம்

இனமென்றது முன்னுற வந்தது

சிவனன்பிலு ழன்றிடு நம்பியின் ……. கழல்வேணும்!

                                                                            

சிதறுந்தகை வந்தது சொந்தமில்

செனனம்கெட அஞ்சன மொன்றளி

தினமென்றருள் செஞ்சடை வண்ணனை……. உளமேவும்


தனமென்றது மைந்தனின் வந்தனை

சரணென்பது சிந்தையி லுன்துணை

தவமென்பது நெஞ்சினி லொன்றுறல் …… டைவேனோ!

 

சகமென்பது விந்தையில் வந்தது

தரமென்றது நன்றென நின்றது

தடையென்றது சென்றது வந்தருள் ……. இறையோனே!


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages