அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் - தமிழாக்கம்

74 views
Skip to first unread message

Anand Ramanujam

unread,
Dec 17, 2023, 7:52:47 PM12/17/23
to santhavasantham
வடமொழியில் உள்ள அஷ்டலட்சுமி ஸ்தோத்திரத்தைத் தழுவித் தமிழில் நான் எழுதிய விருத்தங்கள்:

1. ஆதிலட்சுமி
(எழுசீர் ஆசிரிய விருத்தம்)

அற்புத வடிவே நற்றவர்க் குயிரே
… அச்சுதன் அகமகிழ் அமுதே 
கற்பகத் தருவே கனகமா நிதியே
… கனிவெழும் குணங்களின் நிறைவே 
வற்புறு வினைதீர்த் துய்யுமா றருள்வாய்
… மறையெலாம் வழுத்திடத் திகழ்வாய்   
பொற்புடை மலர்வாழ் ஆதியந் திருவே 
… புவிமிசை ஆள்கநின் னருளே!

- இமயவரம்பன்

Kaviyogi Vedham

unread,
Dec 17, 2023, 8:15:36 PM12/17/23
to santhav...@googlegroups.com
அட்டகாசம். நல்ல  ஃப்ளோ.  வாழ்க இமயவரம்பன்,
 யோகியார்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/F1C0602A-866C-4CA9-8C0C-DE14AD27A9A7%40gmail.com.

Anand Ramanujam

unread,
Dec 17, 2023, 9:05:32 PM12/17/23
to santhavasantham
மிக்க நன்றி, யோகியாரே!

Rajja Gopalan

unread,
Dec 18, 2023, 2:42:23 AM12/18/23
to santhav...@googlegroups.com
அருமை.  நல்வாழ்த்துகள். 

மீ. ரா
Sent from my iPhone

On 18 Dec 2023, at 02:05, Anand Ramanujam <anandbl...@gmail.com> wrote:

மிக்க நன்றி, யோகியாரே!

Anand Ramanujam

unread,
Dec 18, 2023, 5:17:52 AM12/18/23
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. மீ. ரா

Anand Ramanujam

unread,
Dec 18, 2023, 9:07:34 PM12/18/23
to santhavasantham
2. தானியலட்சுமி

கலிதரும் இடும்பை களைந்திட வருவாய்
… கருமுகில் உருவனுக் கினியாய்
ஒலிசெயும் மறைகள் யாவிலும் ஒளிர்வாய்
… ஓதுமந் திரங்களில் உறைவாய்
நலமிகும் அமுதோ டலைகடல் பிறந்தாய்
… நண்ணினர் நெஞ்சகத் தமர்ந்தாய்
பொலிவுடை நவதா னியம்பொழி திருவே
… பூமிசை ஆள்கநின் னருளே!

- இமயவரம்பன்

NATARAJAN RAMASESHAN

unread,
Dec 18, 2023, 9:39:30 PM12/18/23
to santhav...@googlegroups.com
மிகச் சிறந்த நடையில் மிளிர்கிறது

            —தில்லைவேந்தன்.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Anand Ramanujam

unread,
Dec 19, 2023, 7:42:35 AM12/19/23
to santhav...@googlegroups.com
அன்பான பராட்டுக்கு மிக்க நன்றி, திரு. தில்லைவேந்தன்!

Anand Ramanujam

unread,
Dec 19, 2023, 6:53:47 PM12/19/23
to santhavasantham
3. கஜலட்சுமி

அல்லவை அழிப்பாய் அருவரம் அளிப்பாய்
  அரவணை யானகத் திருப்பாய்
வெல்லரும் பெருந்தேர் கரியொடு புரவி
  மிகுபடை உடையவெந் திறலாய்
எல்லையில் கருணை ஏத்திநின் றிறைஞ்ச
  இருந்துயர் ஒழித்துயர் வருள்வாய்  
மல்லலம் வளமே தரும்கயத் திருவே
  மண்மிசை ஆள்கநின் அருளே!

- இமயவரம்பன்

NATARAJAN RAMASESHAN

unread,
Dec 19, 2023, 7:45:54 PM12/19/23
to santhav...@googlegroups.com
கயத் திரு—மிகச் சிறப்பு
very nice flow
        -தில்லைவேந்தன்.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Anand Ramanujam

unread,
Dec 19, 2023, 9:57:26 PM12/19/23
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. தில்லைவேந்தன்!

Anand Ramanujam

unread,
Dec 20, 2023, 5:55:24 PM12/20/23
to santhavasantham
4.தைரியலட்சுமி

வாரெழில் மடவாய் மாதவற் கினியாய்
  மந்திர வடிவெனப் பொலிவாய்
பூரண ஞானம் புந்தியில் அருள்வாய்
  புரையறு தெளிவினைப் பொழிவாய்
காரிருள் கடிந்தென் னுளந்தனில் ஒளிர்வாய்
  கடுவினை களைந்தருள் புரிவாய்
ஆருயிர்க் குயிரே வீரமெய்த் திருவே
  அவனிமேல் ஆள்கநின் அருளே!

- இமயவரம்பன்

NATARAJAN RAMASESHAN

unread,
Dec 20, 2023, 8:13:16 PM12/20/23
to santhav...@googlegroups.com
Very nice, as always 

….

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Anand Ramanujam

unread,
Dec 20, 2023, 9:22:31 PM12/20/23
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி 🙏, திரு. தில்லைவேந்தன்!

Anand Ramanujam

unread,
Dec 21, 2023, 8:43:11 PM12/21/23
to santhavasantham
5. சந்தானலட்சுமி

சிறையெழிற் பறவை மிசையமர்ந் துகந்தாய்
  செப்பரு மோகனம் மிகுந்தாய்
திறல்மிகு திகிரி திருக்கரத் தணிந்தாய்
  தெரிவரும் அறிவெனத் திகழ்ந்தாய்
மறைநிகர் சுரமேழ் பரவிடும் குணத்தாய்
  முனிக்கணம் வணங்கிடும் பதத்தாய்
மறுவில்சந் தான வரந்தரும் திருவே
  மகிதலத் தாள்கநின் அருளே!

- இமயவரம்பன்

Kaviyogi Vedham

unread,
Dec 21, 2023, 8:47:22 PM12/21/23
to santhav...@googlegroups.com
abaaram. vazga,
 yogiyar

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Anand Ramanujam

unread,
Dec 21, 2023, 9:14:04 PM12/21/23
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, யோகியாரே!

Siva Siva

unread,
Dec 21, 2023, 9:50:39 PM12/21/23
to santhav...@googlegroups.com
Nice.

திறல்மிகு திகிரி திருக்கரத் தணிந்தாய் /
Are there forms / descriptions of Lakshmi with Chakram in her hand?

/முனிக்கணம் /
I think both are Sanskrit words. So, முனிகணம் 

V. Subramanian

On Thu, Dec 21, 2023 at 8:43 PM Anand Ramanujam <anandbl...@gmail.com> wrote:

Subbaier Ramasami

unread,
Dec 21, 2023, 10:11:00 PM12/21/23
to santhav...@googlegroups.com
சிறப்பு

Anand Ramanujam

unread,
Dec 21, 2023, 10:15:00 PM12/21/23
to santhav...@googlegroups.com
Thank you!

In AshtaLakshmi Stotram, the following description is given for सन्तानलक्ष्मी:
अहिखग वाहिनि मोहिनि चक्रिणि

I used முனிக்கணம் based on this line in திருச்சந்தவிருத்தம் (திருமழிசை ஆழ்வார் அருளிச்செய்தது)
இருக்குவாய் முனிக்கணங்கள் ஏத்த யானும் ஏத்தினேன்
(May be ‘க்’ is used in the Azhwar's song for pattern conformance)

Will change it to முனிகணம்.

...

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Anand Ramanujam

unread,
Dec 21, 2023, 10:18:00 PM12/21/23
to santhavasantham
மிக்க நன்றி, இலந்தையாரே!

...

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

lns2...@gmail.com

unread,
Dec 22, 2023, 5:33:56 AM12/22/23
to சந்தவசந்தம்
நம்மாழ்வார் பாசுரத்தில் 'நிகரிலமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே' ( திருவாய்மொழி 6.10.10) என வருவதும் இங்கு நோக்கத்தக்கது.

Srini

Siva Siva

unread,
Dec 22, 2023, 6:23:28 AM12/22/23
to santhav...@googlegroups.com
What I stated is the standard convention followed in Tamil (so I believe) - when dealing with Sanskrit words.
When both are Sanskrit words, the whole phrase is taken from Sanskrit and then Tamilized.

Thirunavukkarasar Thevaram - 6.58.6
கறுத்ததொரு கண்டத்தர் காலன் வீழக்
    காலினாற் காய்ந்துகந்த காபா லியார்
முறித்ததொரு தோலுடுத்து முண்டஞ் சாத்தி
    முனிகணங்கள் புடைசூழ முற்றந் தோறுந்
தெறித்ததொரு வீணையராய்ச் செல்வார் தம்வாய்ச்
    சிறுமுறுவல் வந்தெனது சிந்தை வௌவ
மறித்தொருகால் நோக்காதே மாயம் பேசி
    வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே

6.91.5
பாரிடங்க ளுடன்பாடப் பயின்று நட்டம்
    பயில்வானை அயில்வாய சூல மேந்தி
நேரிடும்போர் மிகவல்ல நிமலன் தன்னை
    நின்மலனை அம்மலர்கொண் டயனும் மாலும்
பாரிடந்தும் மேலுயர்ந்துங் காணா வண்ணம்
    பரந்தானை நிமிர்ந்துமுனி கணங்க ளேத்துஞ்
சீரெறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச்
    செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே

V. Subramanian

Anand Ramanujam

unread,
Dec 22, 2023, 1:23:45 PM12/22/23
to santhav...@googlegroups.com
Thanks for explaining the standard convention. I have incorporated your suggestion in my poem.

….

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

lns2...@gmail.com

unread,
Dec 22, 2023, 1:29:49 PM12/22/23
to சந்தவசந்தம்
நன்றி, திரு சுப்பிரமணியன். நடைமுறையில் பழைய புலவர்களில் எல்லோரும் இந்த விதியை ஒரே மாதிரியாக அனுசரித்தது போல் தெரியவில்லை.

இதற்கு என்ன காரணமாக இருக்கக் கூடுமோ? பழைய இலக்கணங்களில் வல்லொற்று மிகுவது குறித்து ஏதும் சொல்லவில்லையா? புதிராக இருக்கிறது!!!

அன்புடன்,

Srini

Siva Siva

unread,
Dec 22, 2023, 2:56:08 PM12/22/23
to santhav...@googlegroups.com

சந்தப் பாடல்களில் விதிவிலக்குகள் அமையும். ஆனால் மற்றப் பாடல்களில் புணர்ச்சி இலக்கணம் சற்றிவர இருக்கும் / இருக்கவேண்டும்.

சில சமயம், ஏடு எழுதுவோர் பிழை செய்திருக்கக் கூடும்.

------

நல்ல தமிழ் எழுத வேண்டுமா?

வலி மிகுதல் / மிகாமை

(.கி.பரந்தாமனார்)

பக்க எண் : 207 - 248 ( https://www.tamilvu.org/slet/lA100/lA100pd3.jsp?bookid=171&pno=207 )

வலிமிகா விதிகளின் தொகுப்பு

வல்லெழுத்து மிகக் கூடாத இடங்களைக் கீழ்வரும் விதிகளால் மிகமிக எளிதாகத் தெரிந்து கொள்ளலாம்.

9. இரு வடமொழிச் சொற்கள் சேர்ந்து வருந்தொடர்களில் வரும் வலி மிகாது.

ஆதி + பகவன் = ஆதிபகவன்.

தேச + பக்தி = தேசபக்தி.

V. Subramanian

Anand Ramanujam

unread,
Dec 22, 2023, 9:01:50 PM12/22/23
to santhavasantham
6. விஜயலட்சுமி

பங்கயத் திருப்பாய் பன்னலம் விளைப்பாய்
  பகரரும் பரகதி அளிப்பாய்
திங்கணன் னுதலில் குங்குமம் தரிப்பாய்
  தெள்ளிசை ஒலித்திடக் களிப்பாய்
மங்கல மொழியால் சங்கரர் துதிக்க
  மன்னுபொன் மணிமழை பொழிவாய்  
பொங்குவண் புகழ்சேர் விசயமாத் திருவே
  பூதலத் தாள்கநின் அருளே!

(திங்கணன்னுதல் = திங்கள் + நன் + நுதல்; சங்கரர் = சங்கர பகவத்பாதர்)

- இமயவரம்பன்

Anand Ramanujam

unread,
Dec 23, 2023, 8:28:54 PM12/23/23
to santhavasantham
7. வித்யாலட்சுமி

வாணியோ டுமையாள் வாழ்த்துமாண் புடையாய் 
  மணிவளர் உருவினில் ஒளிர்வாய்
வாணிலா முறுவல் மலர்தரு முகத்தாய்
  வயங்கொளி இலங்குகுண் டலத்தாய்
பேணுமா தவத்தார் வேண்டுவாழ் வளிப்பாய்
  நவநிதிப் பெருங்குவை நிறைப்பாய் 
மாணுமா விச்சை தான்தரும் திருவே
  மாநிலத் தாள்கநின் அருளே!

(வாணிலா = வாள் + நிலா = ஒளிபொருந்திய நிலா)

- இமயவரம்பன்

Anand Ramanujam

unread,
Dec 24, 2023, 12:18:28 PM12/24/23
to santhavasantham
8. தனலட்சுமி

திமிதிமி எனவே துந்துபி முழங்கத்
  திரண்டெழும் இசையிடைத் திகழ்வாய்
குமகும குமவென் றார்த்துசங் கெழுப்பும்
  குரைகட லொலியினில் மகிழ்வாய்
கமலமா மகளே களைகணீ எனவே
  கழறுநான் மறைதொழும் புகழாய்
தமர்நலம் பெருகத் தனம்தரும் திருவே
  தரணியில் ஆள்கநின் அருளே!

(களைகணீ = களைகண் + நீ)

- இமயவரம்பன்

Anand Ramanujam

unread,
Dec 25, 2023, 2:49:53 PM12/25/23
to santhavasantham
இத்துடன் அஷ்டலட்சுமி விருத்தம் முடிவுற்றது.

இவ்விருத்தப் பாடல்கள் அனைத்தையும் ஒரே பதிவாக என் வலைப்பக்கத்தில் காணலாம்:

நன்றி,
இமயவரம்பன்

Imayavaramban

unread,
May 18, 2026, 9:51:29 AM (5 days ago) May 18
to சந்தவசந்தம்
 இரண்டு ஆண்டுகளுக்கு முன் பதிவிட்ட இந்த அஷ்டலட்சுமி விருத்தத்தில் சில மாற்றங்கள் செய்து மீண்டும் பகிர்கிறேன்.

அஷ்டலட்சுமி விருத்தம்
(எழுசீர் ஆசிரிய விருத்தம் -
விளம் மா விளம் மா
விளம் விளம் மா)

அற்புத வடிவே அடியவர் கதியே
… அச்சுதன் அகமகிழ் அமுதே
கற்பகத் தருவே கனகமா நிதியே
… கடல்நிகர் கருணையின் நிறைவே
வற்புறு வினைகள் அற்றிட வருவாய்
… வருந்துயர் மறைந்திட அருள்வாய்
சற்குணர் வணங்கும் ஆதிலட் சுமியே!
… தரணியில் ஆள்கவுன் அருளே! (1)

கலியுகம் இதிலே கதிரெனச் சுடர்வாய்
… காரிருட் கவலைகள் களைவாய்
நலமிகு மறையின் உருவெனத் திகழ்வாய்
… நவின்றிடும் கலைகளில் நிறைவாய்
அலைகடல் அதிலே அமுதெனப் பிறந்தாய்
… அரியவன் அகத்தினில் நிறைந்தாய்
உலைவினைத் தடுக்கும் தான்யலட் சுமியே
… உலகினில் ஆள்கவுன் னருளே! (2)

மயக்கமும் இருளும் ஒழித்திட வருவாய்

… மந்திர வடிவெனப் பொலிவாய்
ஜெயத்தினை விளைக்கும் செயல்திறன் அளிப்பாய்
… ஜெகத்தினில் செழும்புகழ் வளர்ப்பாய்
துயர்ப்பகை மறைய அருள்மழை பொழிவாய்
… சுகத்தினை அகத்தினில் நிறைப்பாய்
பயத்தினை அகற்றும் தைர்யலட் சுமியே
… பார்மிசை ஆள்கவுன் அருளே! (3)

அல்லவை அழிப்பாய் அறத்தினை வளர்ப்பாய்
… அருவரம் குறைவற அளிப்பாய்
வல்லமை உடைய புரவிகள் மிகுத்தாய்
… வாரணப் படையுடன் சிறப்பாய்
மல்லிகை மணக்கும் மாலைகள் தரிப்பாய்
… மாயவன் மனத்தினில் இனிப்பாய்
நல்வளம் நல்கும் கஜலட் சுமியே
… ஞாலத்தில் ஆள்கவுன் அருளே! (4)

சிறகுகள் சிறக்கும் கருடனி லமர்ந்தாய்
… சீதரன் மார்பினில் உறைந்தாய்
திறல்மிகு கரத்தில் சக்கரம் அணிந்தாய்
… செவியுறும் அறிவெனப் பொலிந்தாய்
மறையவர் முழங்கும் ஒலிதனில் இருப்பாய்
… மதியினில் தெளிவினை அளிப்பாய்
நிறைநலம் வழங்கும் சந்தானத் திருவே
… நிலமெங்கும் ஆள்கவுன் அருளே! (5)

பங்கய மலர்மேல் பொலிவுடன் ஒளிர்வாய்
… பழிகளும் பாவமும் கடிவாய்
குங்குமம் திகழும் அணிமுகம் உடையாய்
… குண்டலம் குலவிடும் செவியாய்
சங்கர முனிவன் உன்புகழ் மொழியத்
… தங்கமும் மணிகளும் பொழிந்தாய்
மங்கலம் நிறையும் விஜயலட் சுமியே
… வையத்தில் ஆள்கவுன் அருளே! (6)

உமையவள் புகழக் கலைமகள் பரவ
… உயர்நலம் உடையபொன் மகளே
இமிழ்கடல் உலகம் இறைஞ்சிடும் ஒளியே
… எதனிலும் நிறைந்திடும் எழிலே
தமிழெனும் அமுதாய்த் தழைத்திடும் சுவையே
… தளிர்மலர்த் தாமரைத் திருவே
அமரர்கள் பணியும் வித்யாலட் சுமியே
… அவனியில் ஆள்கவுன் அருளே. (7)

திமிதிமி எனவே துந்துபி முழங்க
… திரண்டெழும் இசையினில் நிறைவாய்
குமகும குமவென் றொலித்திடும் சங்கில்
… குலவிடும் சுரங்களில் மகிழ்வாய்
கமழ்மலர்க் கமலம் அதன்மிசை அமர்வாய்
… கவின்மிகும் உருவினில் திகழ்வாய்
எமதிடர் விலக்கும் தனலட் சுமியே
… எங்கணும் ஆள்கவுன் அருளே! (8)

- இமயவரம்பன்

Kaviyogi Vedham

unread,
May 18, 2026, 10:48:00 AM (5 days ago) May 18
to santhav...@googlegroups.com
attagasam panrreenga.  bale. vazga,
 yogiyar

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
May 18, 2026, 11:57:13 AM (5 days ago) May 18
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
யோகியாருக்கு மிக்க நன்றி 

இமயவரம்பன்

unread,
6:55 AM (12 hours ago) 6:55 AM
to santhav...@googlegroups.com

Arasi Palaniappan

unread,
8:07 AM (11 hours ago) 8:07 AM
to சந்தவசந்தம்
அருமை இளவலே!

On Mon, 18 Dec 2023, 1:52 am Anand Ramanujam, <anandbl...@gmail.com> wrote:
வடமொழியில் உள்ள அஷ்டலட்சுமி ஸ்தோத்திரத்தைத் தழுவித் தமிழில் நான் எழுதிய விருத்தங்கள்:

1. ஆதிலட்சுமி
(எழுசீர் ஆசிரிய விருத்தம்)

அற்புத வடிவே நற்றவர்க் குயிரே
… அச்சுதன் அகமகிழ் அமுதே 
கற்பகத் தருவே கனகமா நிதியே
… கனிவெழும் குணங்களின் நிறைவே 
வற்புறு வினைதீர்த் துய்யுமா றருள்வாய்
… மறையெலாம் வழுத்திடத் திகழ்வாய்   
பொற்புடை மலர்வாழ் ஆதியந் திருவே 
… புவிமிசை ஆள்கநின் னருளே!

- இமயவரம்பன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
8:18 AM (11 hours ago) 8:18 AM
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி அண்ணலே

On May 23, 2026, at 8:07 AM, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
8:29 AM (10 hours ago) 8:29 AM
to சந்தவசந்தம்
அஷ்டலட்சுமி கடாட்சம் அனைவரும் கிடைக்கட்டும்.
அற்புதமான பாடல் 

On Monday, May 18, 2026 at 7:21:29 PM UTC+5:30 Imayavaramban wrote:
 இரண்டு ஆண்டுகளுக்கு முன் பதிவிட்ட இந்த அஷ்டலட்சுமி விருத்தத்தில் சில மாற்றங்கள் செய்து மீண்டும் பகிர்கிறேன்.

அஷ்டலட்சுமி விருத்தம்
(எழுசீர் ஆசிரிய விருத்தம் -
விளம் மா விளம் மா
விளம் விளம் மா)

திமிதிமி எனவே துந்துபி முழங்க

இமயவரம்பன்

unread,
8:32 AM (10 hours ago) 8:32 AM
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி கச்சிக் கவிஞரே

Ram Ramakrishnan

unread,
8:56 AM (10 hours ago) 8:56 AM
to santhav...@googlegroups.com
அற்புதமான எழுசீர் விருத்தப் பாடல்கள், திரு. இமயவரம்பன்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On May 23, 2026, at 08:32, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:

மிக்க நன்றி கச்சிக் கவிஞரே

On May 23, 2026, at 8:29 AM, தங்கவேல் காஞ்சிபுரம் <k.thanga...@gmail.com> wrote:

அஷ்டலட்சுமி கடாட்சம் அனைவரும் கிடைக்கட்டும்.
அற்புதமான பாடல்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Subbaier Ramasami

unread,
9:14 AM (10 hours ago) 9:14 AM
to santhav...@googlegroups.com
நல்ல தெளிவான மொழியக்காம். சீரான நடை. வாழ்க!

இலந்தை

On Mon, May 18, 2026 at 9:51 AM Imayavaramban <anandbl...@gmail.com> wrote:

இமயவரம்பன்

unread,
9:31 AM (9 hours ago) 9:31 AM
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
அண்ணல் திரு ராம்கிராம் அவர்களுக்கும் தலைவர் இலந்தையாருக்கும் மிக்க நன்றி 🙏

Kaviyogi Vedham

unread,
10:39 AM (8 hours ago) 10:39 AM
to santhav...@googlegroups.com
yes. very good  sweet.   vazga imayam
  yo

Kaviyogi Vedham

unread,
10:43 AM (8 hours ago) 10:43 AM
to santhav...@googlegroups.com
aha    kachchiikkavi njar..
  arumai,
  yo

இமயவரம்பன்

unread,
11:00 AM (8 hours ago) 11:00 AM
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
யோகியாருக்கு மிக்க நன்றி 🙏 
Reply all
Reply to author
Forward
0 new messages