மதிசூடி துதிபாடி - 18

10 views
Skip to first unread message

Siva Siva

unread,
Apr 25, 2026, 11:15:13 AM (5 days ago) Apr 25
to santhavasantham

As the - "மதிசூடி துதிபாடி - 17" - thread has more than 900 posts, (https://groups.google.com/g/santhavasantham/c/8op3k3Boy8g?hl=en  )
I am starting this new thread - மதிசூடி துதிபாடி - 18

After completing any ongoing set in the #17 thread, new songs can be posted in this thread.

V. Subramanian

Siva Siva

unread,
Apr 26, 2026, 5:52:36 PM (3 days ago) Apr 26
to santhavasantham

2020-05-11

வழுவூர்

-----------------

(எழுசீர்ச் சந்த விருத்தம் - தனதான தான தனதான தான தனதான தான தனனா)

(சம்பந்தர் தேவாரம் - 2.88.1 - "துளிமண்டி யுண்டு")

* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;


1)

வானோர்க்கி ரங்கி மலைவில்லை ஏந்தி மதில்மூன்றெ ரித்த ஒருவன்

தேனார்க்கும் வாச மலரோடு பாம்பு திரையாரும் ஆறு புனைவான்

தானோக்கும் அன்பர் வினைதீரு மாறு தயைசெய்யு(ம்) நல்ல தலைவன்

மானோக்கி அஞ்ச மதமாவு ரித்து வழுவூரில் நின்ற பரனே.


(தேன் - வண்டு); (ஆர்த்தல் - ஒலித்தல்); (ஆர்தல் - நிறைதல்; பொருந்துதல்);


2)

மதனாகம் வேவ நுதலால்வி ழித்த மணிகண்டன் ஆறு முகமார்

சுதனாரை நல்கி இமையோர்கள் உற்ற துயர்தீர்த்த நல்ல துணைவன்

கதநாகம் ஆறு தரிசென்னி மீது கடிநாறு கொன்றை புனைவான்

மதவார ணத்தை உரிசெய்து போர்த்து வழுவூரில் நின்ற பரனே.


(சுதன் - மகன்);

(கதம் - கோபம்); (கடி - வாசனை);

(வாரணம் - யானை);


V. Subramanian


On Sat, Apr 25, 2026 at 11:14 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

Saranya Gurumurthy

unread,
Apr 27, 2026, 7:45:01 PM (2 days ago) Apr 27
to சந்தவசந்தம்
தொண்டை நாட்டுத் தலங்கள்

237. (1). திருக்கச்சி ஏகம்பம்

சோகம் படராது தொண்டரைக் காத்தருள்வான்
ஏகம்பம் மேவும் இறை


238. (2). திருக்கச்சி மேற்றளி (பிள்ளைப்பாளையம்)

சேற்றினில் வீழ்ந்து சிதையாதே திருக்கச்சி
மேற்றளி மேயானை மெச்சு

சேறு - சம்சாரம் 


239. (3). திருவோணகாந்தன் தளி

வீணனாய் வாழ்ந்து வெதும்பாதே திருக்கச்சி
ஓணகாந் தன்தளியை ஓர்

ஓர்தல் - தொழுதல் / நினைத்தல்


240. (4). திருக்கச்சி அனேகதங்காவதம்

கனாவொத்த வாழ்வைக் கருதாதே கச்சி
அனேகதங் காவதத்தை அண்டு

அண்டுதல் - அடைதைல்


241. (5). திருக்கச்சிநெறிக்காரைக்காடு

குறிக்கோளில் லாமல் குலாவுதல் கேடு;
நெறிக்காரைக் காடனை நேடு


Regards,
Saranya

Siva Siva

unread,
Apr 27, 2026, 9:57:53 PM (2 days ago) Apr 27
to santhav...@googlegroups.com
/ குறிக்கோளில் லாமல் குலாவுதல் கேடு;
  நெறிக்காரைக் காடனை நேடு /

Did you not try to use கச்சி in the verse?

V. Subramanian

Saranya Gurumurthy

unread,
Apr 28, 2026, 2:52:10 AM (2 days ago) Apr 28
to santhav...@googlegroups.com
Actually I didn't try sir. Thank you for the suggestion. 

குறிக்கோளில் லாமல் குலவாதே; கச்சி
நெறிக்காரைக் காடனை நேடு

Have changed like this.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCMvLQrf1F_fS2oLCxkMFqTZRpoLezYbPzFWyrnmiO4Bxw%40mail.gmail.com.


--
Regards,
Saranya

Siva Siva

unread,
Apr 29, 2026, 9:06:51 AM (20 hours ago) Apr 29
to santhavasantham

3)

நலியாத வண்ணம் அடியார்க்கு நாளு(ம்) நல(ம்)நல்கு கின்ற பெருமான்

பொலியார மாக அரவம்பு னைந்த புரிநூலன் இண்டை மதியம்

ஒலியார்த ரங்கம் உடையாறு சூடி ஒளிநீறு பூசும் ஒருவன்

வலியார்க ளிற்றை உரிசெய்து போர்த்து வழுவூரில் நின்ற பரனே.


(ஆரம் - மாலை);

(இண்டை - முடிமாலை); (தரங்கம் - அலை);


4)

பாதங்கள் ஏத்தி வழிபாடு செய்து பலதேவர் வேண்ட அவர்தம்

ஏதங்கள் தீர வடிவேலை ஏந்தும் இளையோனை நல்கும் இறைவன்

வாதங்கள் செய்த அமண்மாய வைகை நதியேடு நீந்த வருவான்

மாதங்கம் ஒன்றை உரிசெய்து போர்த்து வழுவூரில் நின்ற பரனே.


(ஏதம் - துன்பம்);

(மாதங்கம் - யானை);


5)

கல்லானை முன்பு பலர்முன்க ரும்பு களியோடு தின்ன வருவான்

கொல்லானை முன்னர் உழவார அன்பர் தமைநீங்கி ஓட அருள்வான்

நல்லானை ஏத்து விசயற்கு நாடு படையீந்த நாதன் உமைகோன்

வல்லானை தன்னை உரிசெய்து போர்த்து வழுவூரில் நின்ற பரனே.


(படை - ஆயுதம்);


6)

இனவீயெ டுத்து மணமாலை கட்டி இருதாளில் இட்டு மகிழ்வார்

இன(ம்)மாநி லத்தில் இடரார்பி றப்பில் இளையாத வண்ணம் அருள்வான்

முனமோர்பொ ருப்பை வளைவித்து மூன்று புரம்வேவ நக்க முதல்வன்

வனவார ணத்தை உரிசெய்து போர்த்து வழுவூரில் நின்ற பரனே.


(வீ - பூ);

(இனம் - இன்னம் - இன்னும் - மறுபடியும்; மேலும்);

(பொருப்பு - மலை);


V. Subramanian


On Sun, Apr 26, 2026 at 5:52 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

2)

Reply all
Reply to author
Forward
0 new messages