pl see virudhu to Hariki-our friend

23 views
Skip to first unread message

Kaviyogi Vedham

unread,
May 8, 2026, 5:21:09 PM (4 days ago) May 8
to santhavasantham, Ramanan Isaikkavi, RAVI K, Prabha Swaminathan, Rajalakshmi Balasubramanian
pl see  image  below
 yogiyar

hariki photo.jpg
harikku virudhu photo.jpeg

Subbaier Ramasami

unread,
May 8, 2026, 9:48:56 PM (4 days ago) May 8
to santhav...@googlegroups.com
விருதுக் கவிதை

இலக்கி யத்தின் வேர்வரையில்
       இறங்கி ஆய்வு பலசெய்தே
பலப்ப டுத்தும் வகையினிலே
       படைத்து நூல்கள் பலவாக
நிலைக்கும் வண்ணம் தந்திருக்கும்
       நேசர் ஹரிகி ருஷ்ணனுக்கு
இலக்கி யச்சித் தர் பட்டம்
        இனிதே தந்தோம் வாழியவே!

இலந்தை
08-05-2026

On Fri, May 8, 2026 at 5:21 PM Kaviyogi Vedham <kaviyog...@gmail.com> wrote:
pl see  image  below
 yogiyar

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAPxnw-J24xho3dacz88E8aT4DaBHVH8SFrUHHpOtTDjQUrfiGA%40mail.gmail.com.

Subbaier Ramasami

unread,
May 8, 2026, 9:56:51 PM (4 days ago) May 8
to santhav...@googlegroups.com
ஹரிகிருஷ்ணனுக்கு 2016ம் ஆண்டு கவிப்பெருஞ்சுடர் பட்டம் வழங்கினோ. அப்பொழுது பட்டமளித்து நான் வழங்கிய கவிதை.

கற்ற ஒன்றை மற்றவர்க்குக்
  கருத்தில் தைக்கச் சொல்கிறவர்
பெற்ற தெல்லாம் கரவாமல்
   பிறர்க்க ளிக்கும் பேராளர்
உற்ற கவிதை யாப்பதிலே
    உயரந் தொட்டே ஒதுங்கியவர்
நற்றி றம்சேர் ஹரிகிருஷ்ணன்
    நமக்குப் பிடித்த பாவாணர்

எளிதில் கோபம் கொள்கிறவர்
    எனினும் நியாயம் அதிலிருக்கும்
தெளிந்தே ஆய்வு செய்ததனைச்
    சிக்கல் நீக்கித் தருகிறவர்
வளைந்து கொடுக்க இயலாமல்
    வம்பில் மாட்டிக் கொள்கிறவர்
வளமாய் நலம்மாய் வாழ்கவென
     வாழ்த்திப் பட்டம் அளிக்கின்றோம்

இலந்தை

M. Viswanathan

unread,
May 9, 2026, 10:28:24 AM (3 days ago) May 9
to Santhavasantham
மிக்க மகிழ்ச்சி. நல்வாழ்த்துகள்.
அன்பன்,
மீ. விசுவநாதன்

Swaminathan Sankaran

unread,
May 9, 2026, 10:32:34 AM (3 days ago) May 9
to santhav...@googlegroups.com
அருமையான வாழ்த்துக் கவிதை.
ஹரிகிருஷ்ணன் என்ற பெரும் ஆளுமையை, கவிஞரை, அறிஞரை 
தத்ரூபமாகப் படம் பிடித்துக் காட்டுவது போல இருக்கிறது.
ஹரிகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள்! 

சங்கரன் 




--
 Swaminathan Sankaran

Kaviyogi Vedham

unread,
May 9, 2026, 10:33:47 AM (3 days ago) May 9
to santhav...@googlegroups.com

Ram Ramakrishnan

unread,
May 9, 2026, 10:41:39 PM (3 days ago) May 9
to santhav...@googlegroups.com
நல் வாழ்த்துகள், கவிப் பெருஞ்சுடர், இலக்கியச் சித்தர், திரு. ஹரிகி அவர்களே.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On May 9, 2026, at 19:58, M. Viswanathan <meev...@gmail.com> wrote:



veNbA virumbi

unread,
8:57 AM (3 hours ago) 8:57 AM
to சந்தவசந்தம்
********************
(நேரிசை வெண்பா)

பேராவல் உண்டு பெருங்கலை ஆயவிவர்
தேராத துண்டோ சிறிதுமதில் - சீரார்
இலக்கியச் சித்தரியற் றேற்றப் பணியே
இலக்கறிஞர் யாவர்க்கும் ஈண்டு.

********************
(கலிநிலைத்துறை)

அன்று ​வியத்தகு கவிப்பெருஞ் சுடரென அறிந்தோம்
இன்று தெரிந்ததோர் இலக்கியச் சித்த​ராம் இவரென் 
றென்றுந் தமிழ்க்குர மிடும்ஹரி கிருஷ்ணனிவ் விசையார் 
மன்று ​தருவிரு துடன்பெறற் களிப்பனல்  வாழ்த்தே.
********************
On Saturday, May 9, 2026 at 2:51:09 AM UTC+5:30 Kaviyogi Vedham wrote:

Siva Siva

unread,
9:32 AM (2 hours ago) 9:32 AM
to santhav...@googlegroups.com
Nice.
In addition to the seer-split sandhi-applied version, if you provide sandhi-split version as well, I think it may make it easier for some readers.

V. Subramanian

Kaviyogi Vedham

unread,
10:33 AM (1 hour ago) 10:33 AM
to santhav...@googlegroups.com
very  good
yogyar

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages