சக்திதாள் பற்றிவாழ்

127 vistas
Ir al primer mensaje no leído

sankara dass nagoji

no leída,
14 jul 2021, 11:47:22 p.m.14/7/2021
para சந்தவசந்தம்
என்னம்மையின் திருவுள்ளத்தாலும், பெரியவாளின் கருணையினாலும், பராசக்தியைப் பாடும் முயற்சியில் அடியேன் செலுத்தப்பட்டுள்ளேன். ஆதிசங்கர பகவத்பாதர், அருணகிரி நாதர், வள்ளலார், வண்ணச்சரபம் சுவாமிகள் போன்ற மஹான்கள் ஷண்மத முதற்கடவுளைப் பாடியுள்ளதைக் கண்டு, அவ்வழிச் சென்று பிள்ளைக்கவி செய்ய முற்பட்டுள்ளேன்.
சந்த வசந்த ஆசிரியர்களின் ஆசியுடன்.

தேர்தகையூர் அங்கயற்கண்ணி மாலை
கட்டளைக் கலித்துறை.

சக்தி பீடங்கள் 51. ஸம்ஸ்க்ருத மூல எழுத்துகள் 51. அதையொட்டி 51 பாடல்கள். 1, 11, 21, 31, 41, 51 பாடல்களில் தேர்தகையூர் (இன்றைய தேதியூர்) என்னும் பெயர் வரும்படி அமைப்பு.

பார்முழு தாளும் பராபரை ஆய பசுந்தமிழே 
கூர்நுதிச் சூலன் இடம்வளர் கின்ற குணநிதியே
தேர்தகை யூர்வாழ் திருவுரு வேதனித் தென்னவளே   
கார்பொலி தேகக் கணபதி தாயே கயற்கண்ணியே....(1) -- 15-July-2021

இத்தொடருக்குப் பெயர்சூட்டிய பெருமை சிவசிவா அவர்களையே சாரும். பல பெயர்களை உடனே சொன்னார் - அம்பிகை எம்புகல், உமையாளே எனையாளே, முக்திநெறி சக்தியறி, பார்வதி சீர்துதி, சக்திசரண் பக்தரரண், சத்தியடி முத்தியடி. அவற்றுள் சக்திதாள் பற்றிவாழ் என்பது மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்ததை உணர்ந்தேன். பிள்ளையார், சூரியன் பற்றிப் பதிகம் பாடும் அளவுக்கு அடியேனுக்குச் சக்தி இல்லை. அதனால், எல்லாத் தொடர்களிலும் ஒரு பாடலில் கணபதியும் சூரியனும் வருமாறு அமைக்க எண்ணம்.

ஆசீர்வதிக்கவும்.

- சங்கர தாஸ்

Nagoji

no leída,
14 jul 2021, 11:49:06 p.m.14/7/2021
para santhav...@googlegroups.com
இன்று ஆனித் திருமஞ்சன நன்னாள். அதனால் இன்று தொடங்குகிறோம்.

- சங்கர தாஸ்

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/IJIT1mj7o6A/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/d174f6e4-7608-4086-9e21-85de6fd6cb17n%40googlegroups.com.

Kaviyogi Vedham

no leída,
15 jul 2021, 1:32:46 a.m.15/7/2021
para santhavasantham
எம் வாழ்த்தும் ஆசியும் எப்போதும் நாகோஜிக்கு உண்டு. வாழ்க தொடர்க,
 யோகியார்

You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAE_cqFR4qCRcF8A3dLfyG%2BwumNi-i3QVmf9Ei4nsQpHLP%2B-7Ag%40mail.gmail.com.

Lalitha & Suryanarayanan

no leída,
15 jul 2021, 1:57:41 a.m.15/7/2021
para santhav...@googlegroups.com

ஆதிசீர் ஓர்பால் அவளருள் ஒர்பால் அருமறைகள்
ஓதுவோர் ஓர்பால் உலகொரு பாலாய் உவந்திடவே
தேதியூர் ஓர்பால் செழுந்தமிழ் ஓர்பால் திகழ்ந்திடவே
ஈதுநீர் எம்பால் இடுவது நெஞ்சினை ஈர்க்கின்றதே.

வாழ்த்துகள்!

சிவசூரி.

On Thu, Jul 15, 2021 at 9:17 AM sankara dass nagoji <nag...@gmail.com> wrote:
என்னம்மையின் திருவுள்ளத்தாலும், பெரியவாளின் கருணையினாலும், பராசக்தியைப் பாடும் முயற்சியில் அடியேன் செலுத்தப்பட்டுள்ளேன். ஆதிசங்கர பகவத்பாதர், அருணகிரி நாதர், வள்ளலார், வண்ணச்சரபம் சுவாமிகள் போன்ற மஹான்கள் ஷண்மத முதற்கடவுளைப் பாடியுள்ளதைக் கண்டு, அவ்வழிச் சென்று பிள்ளைக்கவி செய்ய 

Virus-free. www.avast.com

Rajja Rajagopalan

no leída,
15 jul 2021, 2:26:43 a.m.15/7/2021
para santhav...@googlegroups.com
பக்தியால் உற்றதாள் யுக்தியால் கற்றதால்
சக்திதாள் பற்றிவாழ் என்றோதி - முக்தியாம்
பாகோ டமிழ்திளகி ஓடோ டியும்பொழிய
நாகோஜிக் கின்றினிய நாள்

மீ. ரா

Sent from my iPhone

On 15 Jul 2021, at 06:57, Lalitha & Suryanarayanan <lall...@gmail.com> wrote:

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

no leída,
15 jul 2021, 8:57:52 a.m.15/7/2021
para santhavasantham
வாழ்க!

/சக்தி பீடங்கள் 51. ஸம்ஸ்க்ருத மூல எழுத்துகள் 51. அதையொட்டி 51 பாடல்கள். 1, 11, 21, 31, 41, 51 பாடல்களில் தேர்தகையூர் (இன்றைய தேதியூர்) என்னும் பெயர் வரும்படி அமைப்பு./
Nice.

/ கார்பொலி தேகக் கணபதி தாயே  /
தேகம் என்ற இடத்தில் மேனி என்ற சொல்லும் பொருந்தக்கூடும்.

வி. சுப்பிரமணியன்

Ramamoorthy Ramachandran

no leída,
15 jul 2021, 10:13:43 a.m.15/7/2021
para Santhavasantham
சக்தி தாள் பற்றி வாழும் நாகோஜிக்கு வாழ்த்துகள்! - புலவர் இராமமூர்த்தி 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Nagoji

no leída,
16 jul 2021, 1:29:38 a.m.16/7/2021
para santhav...@googlegroups.com
ஆம். தமிழில் பெரும்பாலும் மேனி என்பதே சொல்லப்படுகிறது. வடமொழியில் தேகம் நிறைய கையாளப் படுகிறது. காரமர் மேனிக் கணபதி ...என்பது போல் இன்றிக் கொஞ்சம் மாற்றியதால் இப்பதம்.

- சங்கர தாஸ்

/ கார்பொலி தேகக் கணபதி தாயே  /
தேகம் என்ற இடத்தில் மேனி என்ற சொல்லும் பொருந்தக்கூடும்.

Nagoji

no leída,
16 jul 2021, 4:01:35 a.m.16/7/2021
para santhav...@googlegroups.com
பலியிரக் கின்ற பரனை இயக்கும் பராசத்தியே
புலியிவர் கின்ற புனித வதியாய பொற்புடையோய்
எலியின் செயலுக் கிரங்கிய ஈசன் இடத்தமர்ந்து
கலியில் துயரறு காமாட்சி யாய கயற்கண்ணியே...(2) -- 16-July-2021

புலி - புலி, சிங்கம் இரண்டுக்கும் பொருந்தும்
பொற்பு - அழகு, தன்மை

- sankara dass

VETTAI ANANTHANARAYANAN

no leída,
16 jul 2021, 5:21:27 p.m.16/7/2021
para சந்தவசந்தம்
அன்புள்ள நாகோஜி,

உங்களுடைய பக்தியின் ஆழத்தையும் அதன் வெளிப்பாடாக நீங்கள் படைக்கும் துதிகளின் அருமையும் பிரமிக்கத்தக்கன. ஜகன்மாதாவின் சிறப்பை  இந்தப் புதிய பாடல் தொகுப்பு வழியாகப் பிறரும்  நுகர்ந்து பயனுறுவர். அறுகடவுளர்களின் ஆசியும் உங்களுக்குப் பரிபூரணமாகக் கிட்டும்..

அன்புடன்,

அனந்த்  

On Wed, Jul 14, 2021 at 11:47 PM sankara dass nagoji <nag...@gmail.com> wrote:

Subbaier Ramasami

no leída,
16 jul 2021, 6:23:57 p.m.16/7/2021
para santhav...@googlegroups.com
நாகோஜியின் தொடக்கமே மிக அழகாக அமைந்திருக்கிறது.  தொடர் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.

ஒரு புதிய தொடரைத் தொடங்குமுன் மட்டுறுத்துனரிடம்  முன்னர் அறிவித்துவிட்டுத் தொடங்குவது நல்லது.  

இலந்தை

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Nagoji

no leída,
17 jul 2021, 1:04:47 a.m.17/7/2021
para santhav...@googlegroups.com
ஆசிரியர்களின் ஆசி கிடைத்தது மிகுந்த ஊக்கம் அளிக்கிறது. 
இழை தொடங்குமுன் தலைவரிடம் அனுமதி கேட்காமல் தொடங்கியதற்கு மன்னிக்கவும். 

குற்றமே எனினும் நற்றமாக் கொள்ளல்
சந்த வசந்தத் தலைவர்கள் குணமே.

- சங்கர தாஸ்

Nagoji

no leída,
17 jul 2021, 1:07:09 a.m.17/7/2021
para santhav...@googlegroups.com
அற்றவர்க் கென்றும் அருந்துணை ஆகும் அரிமிசையோய்
பற்றிலர் பற்றும் பரம்பொரு ளேமீப் பழையவனாம்
ஒற்றியில் வாழும் படம்பக்க நாதற் கொருதுணையே
கற்றவர் போற்றும் விசாலாட்சி யாய கயற்கண்ணியே....(3) -- 17-July-2021

அரிமிசையோய் - சிங்க வாகனம் உடையவள்

- sankara dass

Kaviyogi Vedham

no leída,
17 jul 2021, 1:40:16 a.m.17/7/2021
para santhavasantham
ஆசிகள். நிச்சயம் நன்றாக வரும். தொடர்க
 யோகியார்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ramamoorthy Ramachandran

no leída,
17 jul 2021, 9:55:03 p.m.17/7/2021
para Santhavasantham
ஒவ்வொரு பீடத்துக்கும் எண் இட வேண்டுகிறேன். - புலவர் 

Ramamoorthy Ramachandran

no leída,
17 jul 2021, 9:57:30 p.m.17/7/2021
para Santhavasantham
எண் பாடலிறுதியில் உள்ளது. 

Nagoji

no leída,
18 jul 2021, 12:10:56 a.m.18/7/2021
para santhav...@googlegroups.com
அவிதரு அந்தணர் வேள்வி செழிக்க அருள்மறையே
சவிபெரு குங்குழைக் காதின ளேயிச் சகம்புரப்போய்
செவிபரு கச்செந் தமிழை வளர்த்த சிவத்துணையாம்
கவிதரு நீலாய தாட்சியு மாய கயற்கண்ணியே....(4) -- 18-July-2021

அவி - அவிஸ்
சவி - ஒளி

புலவர் சக்தி பீடங்களின் எண் இடுக என்றுள்ளார். சக்தி பீடங்கள் அனைத்தின் பெயர் வருமாறு அமைக்கவில்லை. நமக்குத் தெரிந்த பல அம்மன் பெயர்கள் வருமாறு அமைந்துள்ளது.

- sankara dass

Nagoji

no leída,
19 jul 2021, 2:49:58 a.m.19/7/2021
para santhav...@googlegroups.com
தொல்வினை யாலே துரிசே புரியத்  துணிவுகொண்டேன் 
அல்வழி காட்டி அலைக்கழிக் காமல் அருள்புரிவாய்
பல்வித மாகப் பனுவல் புனையப் பணித்தவளே
கல்வியும் செல்வமும் வீரமும் நல்கும் கயற்கண்ணியே...(5) -- 19-July-2021

துரிசு - குற்றம்

- sankara dass

Siva Siva

no leída,
19 jul 2021, 8:58:48 a.m.19/7/2021
para santhavasantham
/அல்வழி காட்டி அலைக்கழிக் காமல் அருள்புரிவாய்/
"நல்வழி காட்டியிந் நானிலந் தன்னில் நலமருளாய்"  may also fit.

Nagoji

no leída,
20 jul 2021, 12:35:32 a.m.20/7/2021
para santhav...@googlegroups.com
ஆம். அனால் அவளே மகாமாயை ஆவாள். அப்படி வந்து அலைக்கழிக்க வேண்டாம் என்பது வேண்டுதல்.

- சங்கர தாஸ்

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/IJIT1mj7o6A/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCN1g7hL1NoqVM_mN9zShdmY7ja9%2Btycyf2Jj%2BVtDq44-A%40mail.gmail.com.

Nagoji

no leída,
20 jul 2021, 12:35:47 a.m.20/7/2021
para santhav...@googlegroups.com
மாலவற் கோர்திருத் தங்கையே மாறா வரச்சுனையே
பாலன வண்ண மதியை நுதலில் பதித்தவளே
வேலனை ஈந்த விரிசுட ரேகொல் விடம்தடுத்தோய்
காலனை எத்திய காலனின் பங்கே கயற்கண்ணியே....(6) -- 20-July-2021

Siva Siva

no leída,
20 jul 2021, 8:16:53 a.m.20/7/2021
para santhavasantham
/ வேலனை ஈந்த  /
ஈந்த? ஈன்ற?

/காலனை எத்திய/
எற்றிய?

Nagoji

no leída,
20 jul 2021, 11:42:14 a.m.20/7/2021
para santhav...@googlegroups.com
ஈந்த - அளித்த என்ற பொருளில் வைத்தோம்.

காலனை எற்றிய காலனின் பங்கே கயற்கண்ணியே....(6)

நன்றி.

- சங்கர தாஸ்

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/IJIT1mj7o6A/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.

Nagoji

no leída,
20 jul 2021, 11:56:50 p.m.20/7/2021
para santhav...@googlegroups.com
தண்ணைச் சுமக்கும் சடையன் இடத்தமர் தாரகையே
விண்ணை அளந்த திருமாற் கிளையோய் வியக்கவைக்கும்
வண்ணச் சரபம் வடித்த தமிழில் வளர்முருகே
கண்ணின் மணியே கருணை மழையே கயற்கண்ணியே...(7) - 21-July-2021

சிலை - மலை

- sankara dass

Nagoji

no leída,
21 jul 2021, 9:22:57 p.m.21/7/2021
para santhav...@googlegroups.com
வல்லார் வலியா வதியும் மணியே மவுனமணி
கல்லால் நிழற்கீழ் இருப்பான் தனைச்சேர் கனிரசமே
செல்லா இடத்துச் சினத்தை அறுக்கும் திறமருள்வாய்
கல்லார்க் கருளா நிதியே கவினார் கயற்கண்ணியே...(8) -- 22-July-2021

வதிதல் - தங்குதல்

- sankara dass 

Nagoji

no leída,
23 jul 2021, 2:03:17 a.m.23/7/2021
para santhav...@googlegroups.com
நாமம் மிகப்பல கொண்ட வளேநான் மறைப்பொருளே
ஓமப் பிழம்பினில் ஊறும் அறமே ஒருபிறவி
ஊமை தனையும் உறுகவி யாக்கிய உத்தமியே
காமன் தனைவிழித் தாரின் இடமார் கயற்கண்ணியே....(9) -- 23-July-2021

- sankara dass

Siva Siva

no leída,
23 jul 2021, 8:56:47 a.m.23/7/2021
para santhavasantham
/கொண்ட வளேநான்/
கொண்டவ ளேநான் - என்றும் சீர் பிரிக்கல் ஆம்.

/ உறுகவி   /
உயர்கவி / ஒருகவி - இவையும் பொருந்தக்கூடும்.

Nagoji

no leída,
23 jul 2021, 12:14:19 p.m.23/7/2021
para santhav...@googlegroups.com
Thanks.  I will split the seer like that.

- சங்கர தாஸ்

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/IJIT1mj7o6A/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.

Vis Gop

no leída,
23 jul 2021, 1:05:24 p.m.23/7/2021
para santhav...@googlegroups.com
உங்கள் முயற்சிகள் யாவும் பெரியவர்களின் ஆசி வளத்தால் வெல்லும்!

காமன் தனைவிழித் தாரின் இடமார் கயற்கண்ணியே.

முந்தைய பாடல்களில் பரன், சடையன், காலன், .. என்று ஒருமையில் வருவதை ஒத்து, இங்கும் விழித்தான் என்றிருக்கலாமோ?

நல்வாழ்த்துகள்
கோபால். 

Sent from my iPhone

Nagoji

no leída,
24 jul 2021, 12:29:57 a.m.24/7/2021
para santhav...@googlegroups.com
அப்படியே கோபால்ஜி.
.....
காமன் தனைவிழித் தானின் இடமார் கயற்கண்ணியே....(9) -- 23-July-2021

வெற்பைச் சிலையென ஏந்திய வீரனை மேவிடுவோய்
உற்பவ மாகும் உயிர்களைக் காப்போய் உளம்நிறைந்த
அற்ப குணங்களை நீக்கி எனையுமா ளாக்குவையோ
கற்பின் வரையே கனியின் சுவையே கயற்கண்ணியே....(10) -- 24-July-2021

மேவுதல் - பொருந்துதல், விரும்புதல்

- சங்கர தாஸ்

Siva Siva

no leída,
24 jul 2021, 9:22:47 a.m.24/7/2021
para santhavasantham
/ எனையுமா   /
தேவாரத்தில் திருவிருத்தங்களில்  நெடிலில் முடியும் விளச்சீரோ மாங்காய்ச்சீரோ  உண்டென்றாலும், இக்காலத்தில் கட்டளைக் கலித்துறையில் இத்தகைய சீர்கள் வரக் கூடாது என்று சந்தவசந்தத்தில் பேசக் கண்ட நினைவு. இலக்கண நூல்களில் சொல்லப்பட்டுள்ளதா என்று அறியேன்.

Vis Gop

no leída,
24 jul 2021, 10:40:04 a.m.24/7/2021
para santhav...@googlegroups.com
அற்ப குணங்களை நீக்கி எனையுமா ளாக்குவையோ
அற்ப குணங்கள் அகற்றி எனைத்தூய்மை ஆக்குவையோ ?
கோபால். 

Sent from my iPhone

Nagoji

no leída,
25 jul 2021, 12:23:37 a.m.25/7/2021
para santhav...@googlegroups.com
ஓ, இந்த விதி தெரிந்து கொண்டேன். 

அற்ப குணங்கள் அகற்றி எனைத்தூய்மை ஆக்குவையோ - இது நன்றாக உள்ளது.

- சங்கர தாஸ்

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/IJIT1mj7o6A/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.

Nagoji

no leída,
25 jul 2021, 12:28:54 a.m.25/7/2021
para santhav...@googlegroups.com
மாதிற் சிறந்தவ ளேதிரு மாலுக் கிளையவளே
நீதி தழைத்திடச் செய்யும் நிருமல நேரிழையே
போதினை வீண்செய் எனக்கு  நலங்கள்  புரிந்திடுவாய்
காதிற் குழையணி வோய்தேர் தகையூர்க் கயற்கண்ணியே....(11) -- 25-July-2021

- sankara dass

Vis Gop

no leída,
25 jul 2021, 8:40:32 a.m.25/7/2021
para santhav...@googlegroups.com
மூன்றிலும் ஐந்திலும் மோனை அமைக்க முயன்றிடலாம். 
போதினை வீண்செய் எனக்கு  நலங்கள்  புரிந்திடுவாய்
போதினால் பூசித்துப் போற்றும் எனக்குப் புரிகநலம்?
கயற்கணியே என்று (விரும்பினால்) கனியைத் தவிர்க்கலாம். 
நல்வாழ்த்துகள்
கோபால். 

Sent from my iPhone

Nagoji

no leída,
25 jul 2021, 9:05:02 a.m.25/7/2021
para santhav...@googlegroups.com
On Sun, Jul 25, 2021 at 6:10 PM Vis Gop <vis...@gmail.com> wrote:
மூன்றிலும் ஐந்திலும் மோனை அமைக்க முயன்றிடலாம். 
போதினை வீண்செய் எனக்கு  நலங்கள்  புரிந்திடுவாய்
>>> 1-5 சீர்களில் மோனை என்பதையே வண்னச்சரபம் பாடல்களிலும் திருமுறைப் பாடல்களிலும் பெரிதும் காண்கிறோம். அதன் தாக்கமே.

கயற்கணியே என்று (விரும்பினால்) கனியைத் தவிர்க்கலாம். 
>>> இதில் ஒற்று நீக்கி அலகிடவேண்டும். சிறப்பு விதி. வடிவுடை மாணிக்கமே, சகல கலாவல்லியே, ஏகம்பனே  போல்.
 
நல்வாழ்த்துகள்
கோபால். 

Sent from my iPhone

On 25-Jul-2021, at 9:58 AM, Nagoji <nag...@gmail.com> wrote:

மாதிற் சிறந்தவ ளேதிரு மாலுக் கிளையவளே
நீதி தழைத்திடச் செய்யும் நிருமல நேரிழையே
போதினை வீண்செய் எனக்கு  நலங்கள்  புரிந்திடுவாய்
காதிற் குழையணி வோய்தேர் தகையூர்க் கயற்கண்ணியே....(11) -- 25-July-2021

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/IJIT1mj7o6A/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.

Nagoji

no leída,
25 jul 2021, 11:19:53 p.m.25/7/2021
para santhav...@googlegroups.com
கண்டங்கு டைந்திட வல்ல  வடிவேல் கரத்தமர்ந்தாள்
கண்டங்கு யில்போல் உடையாள் எமையாள் கலைநுதலாள்
கண்டங்கு நெற்றியன் கண்டத்தி  லேதன கைவைத்தாள்
கண்டங்கு ழைந்தா டரவணி வோன்சேர் கயற்கண்ணியே...(12) -- 26-July-2021

கண்டம் குடைந்திட வல்ல. கண்ட - பெரும் நிலப்பரப்பு.
கண்டம் குயில்போல் உடையாள் - கண்டம் - குரல் 
கண் தங்கு நெற்றியன் - நெற்றியில் கண்ணுடையவன் 
கண்டம் குழைந்தாடு அரவு - கழுத்தில் வளைந்து கிடக்கும் பாம்பு

- sankara dass

Siva Siva

no leída,
25 jul 2021, 11:23:04 p.m.25/7/2021
para santhavasantham
Nice effort at yamakam style first verse.

/கைவைத்தாள்/
check meter conformance.

Nagoji

no leída,
25 jul 2021, 11:39:46 p.m.25/7/2021
para santhav...@googlegroups.com
 நன்றி சிவசிவா. 

கண்டங்கு டைந்திட வல்ல  வடிவேல் கரத்தமர்ந்தாள்
கண்டங்கு யில்போல் உடையாள் எமையாள் கலைநுதலாள்
கண்டங்கு நெற்றியன் கண்டத்  தினில்செல் கறைஅமைத்தாள்
கண்டங்கு ழைந்தா டரவணி வோன்சேர் கயற்கண்ணியே...(12) -- 26-July-2021

கண்டம் குடைந்திட வல்ல. கண்ட - பெரும் நிலப்பரப்பு.
கண்டம் குயில்போல் உடையாள் - கண்டம் - குரல் 
கண் தங்கு நெற்றியன் - நெற்றியில் கண்ணுடையவன்; கறை - விஷம். அமைத்தல் - தடுத்தல்.
கண்டம் குழைந்தாடு அரவு - கழுத்தில் வளைந்து கிடக்கும் பாம்பு

- சங்கர தாஸ்

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/IJIT1mj7o6A/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.

Vis Gop

no leída,
26 jul 2021, 5:12:37 a.m.26/7/2021
para santhav...@googlegroups.com

நான் சில வருடங்களுக்கு முன் எழுதிய கருவாழக்கரை அம்மன் அந்தாதியில் இதுபோன்ற பிரயோகம் இருப்பது நினைவுக்கு வருகிறது.

கண்டத்தைத் தாண்டாமல் கருமணியாய் விடம்நிறுத்திக்  [கண்டம் = தொண்டை]

கண்டத்தைத் தாண்டஅரன் கழுத்தினிலுன் கைவைத்தாய் ! [கண்டம் = அபாயம்]

கண்டத்தில் மங்கலநாண் கட்டியவன் கண்ணொத்துக்  [கண்டம் = கழுத்து]

கண்(டு)அத்த னையுலகும் கருணையினால் படைத்தாயே!   (40)

நல்வாழ்த்துகள்
கோபால்.

Siva Siva

no leída,
26 jul 2021, 9:15:54 a.m.26/7/2021
para santhavasantham
மதிசூடி 2.10 பதிகம் இப்பொழுது என் நினைவிற்கு வந்தது!
மதிசூடி - 2.10.10
2011-01-23
ஏகபாதம் - 10
----------------
கண்டத்த னிடந்தான் பேரன்போ டுற்றான்
கண்டத்த னிடந்தான் பேரன்போ டுற்றான்
கண்டத்த னிடந்தான் பேரன்போ டுற்றான்
கண்டத்த னிடந்தான் பேரன்போ டுற்றான்.

Vis Gop

no leída,
26 jul 2021, 9:35:39 a.m.26/7/2021
para santhav...@googlegroups.com
அற்புதம். அப்பப்பா!
பொருள் விளக்கம் தந்தால் நலமாகும். 
கோபால். 

Sent from my iPhone

Surya Janakiraman

no leída,
26 jul 2021, 11:15:10 a.m.26/7/2021
para santhav...@googlegroups.com
சிவநேசக் கவிஞர் சிவவிவாவின் இணையத்தளத்திலிருந்து copy and paste: 

2011-01-23
ஏகபாதம் - 10
----------------
கண்டத்த னிடந்தான் பேரன்போ டுற்றான்
கண்டத்த னிடந்தான் பேரன்போ டுற்றான்
கண்டத்த னிடந்தான் பேரன்போ டுற்றான்
கண்டத்த னிடந்தான் பேரன்போ டுற்றான்.

பதம் பிரித்து:
கண்டத்தன் இடம் தான் பேரன்போடு உற்றான்;
கண் தத்தன் இடந்தான்பேர் அன்போடுஉற்றான்
கண்டத்தன்இடம் தான் பேர் அன்புஓடு உற்றான்
கண்டுஅத்தனிடம் தான் பேர் அன்போடு உற்றான்.

கண்டத்தன் நீலகண்டன்;
இடம் தானம் (Place, situation); இடப்பக்கம் (Left side); ஏழாம் வேற்றுமை உருபு (part. Sign of the locative, as in அவனிடம்);
தத்தம் கொடை; (தத்தன் கொடை கொடுப்பவன்);
பேர் பெரும்பெயர்புகழ்;
பேர்த்தல் பெயர்த்தல்;
அன்பு பக்தி;
ஓடு மூன்றாம் வேற்றுமை உருபுமண்டையோடு;
அத்தம் பாதி (அருத்தம்); பொருள்;
அத்தன் தந்தைபெரியோன்:
உறுதல் சார்ந்திருத்தல் (To be attached, devoted to); பொருந்துதல் (To join, associate with); சம்பவித்தல் (To happen, occur, befall, as good or evil); தங்குதல் (To dwell, reside);
அடைதல் (To approach, gain access to, reach); அனுபவித்தல் (To suffer, gather experience);

குறிப்பு: 4-ம் அடியில் 'கண்டுஎன்ற சொல்லை அடுத்து, 'அருளஎன்று ஒரு சொல் வருவித்துக்கொள்க.
இலக்கணக் குறிப்பு அவாய்நிலை ஒரு பதம் தன்னொடு பொருந்திப் பொருள் முடிதற்குரிய மற்றொரு பதத்தை வேண்டி நிற்கும் நிலை ((Gram.) Syntactical expectancy consisting in the need of one word for another such as பயனிலை for எழுவாய், ellipsis).
('ellipsis' - the omission from a sentence or other construction of one or more words that would complete or clarify the construction).

கண்டத்தன் இடம் தான் பேரன்போடு உற்றான் நீலகண்டனின் கோயிலை அவன் மிகுந்த காதலோடு அடைந்தான்;
கண் தத்தன் இடந்தான்பேர் அன்போடுஉற்றான் கண்டத்தன்; - கண்ணைக் கொடுப்பவன்பெயர்க்கும் அன்போடு தன் கண்ணைத் தோண்டினான்நீலகண்டன் (அக்கண்ணைப்பெற்றான்;
இடம் தான் பேர் அன்புஓடு உற்றான் கண்டு, - (பின்னர் ஈசனின் இடக்கண்ணிலும் குருதி வரக்கண்டு), தன் இடக்கண்ணையும் தோண்டச்செல்லும் பக்தியைப்பிரமனின் மண்டையோடு உடையவன் பார்த்து அருள,
அத்தனிடம் தான் பேர் அன்போடு உற்றான் ஈசனிடம் அவன் 'கண்ணப்பன்என்ற பெயரை அன்போடு பெற்றான்ஈசனின் இடத்தை (சிவலோகத்தைஅவன் மிகுந்த அன்போடு அடைந்தான்.

(பெரிய புராணம்:
செங்கண்வெள் விடையின் பாகர் திண்ணனார் தம்மை ஆண்ட
அங்கணர் திருக்கா ளத்தி அற்புதர் திருக்கை ன்பர்
தங்கண்முன் டக்கும் கையைத் தடுக்கமூன் றடுக்கு நாக
கங்கணர் அமுத வாக்குக் கண்ணப்ப நிற்க ன்றே.

பேறினி யிதன்மேல் உண்டோ பிரான்திருக் கண்ணில் வந்த
ஊறுகண் டஞ்சித் தங்கண் இடந்தப்ப உதவும் கையை
ஏறுயர்த் தவர்தம் கையால் பிடித்துக்கொண் டென்வ லத்தில்
மாறிலாய் நிற்க ன்று மன்னுபே ரருள்பு ரிந்தார். )

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/5638D687-3820-4073-B9BC-4B4B6FF00C34%40gmail.com.

--
Surya Janakiraman

Nagoji

no leída,
26 jul 2021, 11:44:40 a.m.26/7/2021
para santhav...@googlegroups.com
ஆஹா! கண்டம் என்பதற்கு வெல்லம் என்றும் பொருள் கண்டோம்.
கோபால், சிவசிவா பாடல்கள் சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி.

- சங்கர தாஸ்

You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/IJIT1mj7o6A/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAP%3DX2W6M5qwXfnnouHJj49JVB_shEUo1q-3aoGx47e6WMa4b8Q%40mail.gmail.com.

Nagoji

no leída,
26 jul 2021, 11:47:12 p.m.26/7/2021
para santhav...@googlegroups.com
திருண நுனிப்பனி தன்னில் குளிரைச் செறித்தவளே 
வருணச் சடையன் தனையாள் பவளே வனப்பிடியே
தருணம் வரும்வரை தாழ்த்தா தெனக்குத் தயைபுரிவாய்
கருணை பெருக்கும் கடைக்கண் உடைய கயற்கண்ணியே....(13) -- 27-July-2021

திருணம் - புல்
வருணம் - அழகு, நீர், ஒளி

- sankara dass

Nagoji

no leída,
28 jul 2021, 2:55:31 a.m.28/7/2021
para santhav...@googlegroups.com
அவலை விரும்பிக் கிளையவ ளாய அழிவிலியே
குவலய மெல்லாம் குடைக்கீழ் வரச்செயும் கொற்றவையே
சவலைக் குழந்தை எனக்குன் கழலிணை தந்திடுவாய்
கவலை அறுக்கும் கவினார் உருவே கயற்கண்ணியே...(14) -- 28-July-2021

- sankara dass

Siva Siva

no leída,
28 jul 2021, 10:39:11 a.m.28/7/2021
para santhavasantham
/அவலை விரும்பிக் கிளையவள்/
அவலை விரும்பிக்கு இளையவள் - 
திருமாலை "அவல் விரும்பி" என்று குசேலர் கதையைக் குறிப்பால் உணர்த்தியது நன்று.

Nagoji

no leída,
28 jul 2021, 10:15:49 p.m.28/7/2021
para santhav...@googlegroups.com
பரியை நரியாத் திரித்த பரமனின் பாகத்தளே
கிரியை அறிவு நசைமிகத் தந்தாளும் கேடிலியே 
திரியும் எனக்குன் திருவடி காட்டத் திணறுவதேன்?
கரிய திருமாற் கிளையவ ளேஅம் கயற்கண்ணியே....(15) -- 29-July-2021

இச்சை, ஞானம், கிரியை.

- sankara dass

Nagoji

no leída,
29 jul 2021, 11:17:24 p.m.29/7/2021
para santhav...@googlegroups.com
நெருப்பில் பிறந்த முருகனின் தாயே நிகரிலியே
சருப்பக் குடையோய் அனைத்தும் அறிந்த சருவக்கியே
விருப்பு வெறுப்பினில் சிக்கிய எற்கு விழிப்பருள்வாய்  
கருப்புச் சிலையமர் கையளே தா(வு)அம் கயற்கண்ணியே...(16) -- 30-July-2021

எற்கு - எனக்கு
சருவக்கி - ஸர்வக்ஞி

- sankara dass

Vis Gop

no leída,
29 jul 2021, 11:25:31 p.m.29/7/2021
para santhav...@googlegroups.com
அனைத்தும் அறிந்த சருவக்கியே
சருவக்கி = அனைத்தும் அறிந்தவள்
காரணமாகவே இரண்டும் தொடராக அமைந்தனவா?
கோபால். 

Sent from my iPhone

Nagoji

no leída,
29 jul 2021, 11:38:31 p.m.29/7/2021
para santhav...@googlegroups.com
ஆம் வாரி வழங்கும் வள்ளலே போல்.

- சங்கர தாஸ்

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/IJIT1mj7o6A/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.

Nagoji

no leída,
31 jul 2021, 8:55:35 a.m.31/7/2021
para santhav...@googlegroups.com
அலங்கல் அணிந்த அரிக்கும் அயற்கும் அருள்புரிந்தோய்
புலங்கள் அடிதொழும் பூவே பொருப்பரை யன்மகளே
விலங்கல் எடுத்தோன் தனையடர்த் தார்க்கு விசைதருவோய்
கலங்கிடு வேற்குக் கதிதரு வாயோ கயற்கண்ணியே...(17) -- 31-July-2021

அலங்கல் - துளசி, மாலை
புலங்கள் - வேதங்கள்
பொருப்பு - மலை
விலங்கல் - மலை

- sankara dass

Nagoji

no leída,
1 ago 2021, 9:20:09 a.m.1/8/2021
para santhav...@googlegroups.com
சுரும்பார் குழலினில் தூவா சனையார் சுயஞ்சுடரே
இரும்பார் இலைவேல் இறையைப் பிரியா இளம்பிடியே
விரும்பாய் எனினும் வெறும்பாப் புனைவேன் விலக்கிவிடேல்
கரும்பா இனிக்கும் கனியே கமையார் கயற்கண்ணியே...(18) -- 1-Aug-2021

சுரும்பு - வண்டு
கமை - பொறுமை

- sankara dass

Siva Siva

no leída,
1 ago 2021, 1:25:37 p.m.1/8/2021
para santhavasantham
/ விரும்பாய் எனினும்   /
அடியவர் பாடும் எதுவும் விரும்புவளே!

அரும்பாப் புனையா அடியேன் தனக்கும் அருள்புரியாய் ?

Nagoji

no leída,
3 ago 2021, 11:54:53 a.m.3/8/2021
para santhav...@googlegroups.com
ஆம். அப்படியே மாற்றி விட்டேன்.

அரும்பாப் புனையா அடியேன் தனக்கும் அருள்புரியாய் 

- சங்கர தாஸ்

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/IJIT1mj7o6A/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.

Nagoji

no leída,
3 ago 2021, 11:58:07 a.m.3/8/2021
para santhav...@googlegroups.com
மயலை அறுக்கும் மயிலே வடிவுடை மாணிக்கமே
பயனை விழையா அடியார் மனத்தார் பராபரையே
தயவில் நினைப்போல் எவருளர் இந்தச் சராசரத்தில்
கயமை பொறுத்துக் கதியைத் தருவாய் கயற்கண்ணியே....(19) -- 3-Aug-2021

- sankara dass

Nagoji

no leída,
4 ago 2021, 12:17:10 p.m.4/8/2021
para santhav...@googlegroups.com
முடிமேல் நதியை அணிவான் இடத்தமர் முத்தமிழே
விடையோர் முனிவர் விரும்பிப் பரவும் விரிபொருளே
அடியார்க் கருள அயர்வின் றியுழைக்கும் அம்பிகையே
கடிவேல் குமரனின் தாயே கணம்சூழ் கயற்கண்ணியே...(20) -- 4-ஆக-2021

- sankara dass

Nagoji

no leída,
5 ago 2021, 11:27:25 a.m.5/8/2021
para santhav...@googlegroups.com
எண்ணம் சிறந்த எளியோர்க் கருள்புரி ஏந்திழையே
உண்ணும் உயிர்களுக் கொவ்வொரு வேளையும் ஊட்டிடுவோய்
கண்ணைத் திறந்தெனைப் பாராய் சகல கலாவல்லியே
கண்ணற் கிளையவ ளேதேர் தகையூர்க் கயற்கண்ணியே....(21) -- 5-Aug-2021

- sankara dass

Nagoji

no leída,
6 ago 2021, 7:16:59 a.m.6/8/2021
para santhav...@googlegroups.com
சிந்தை மகிழச் சிவனைத் துதிக்கச் செயும்சிவையே
நிந்தை புரிந்த மகிடனைச் செற்ற நிருவமையே  
அந்தக னேனையும் ஆட்கொளும் அந்தத் தினம்வருமோ
கந்தக் கடவுட்குத் தாயே தயையார் கயற்கண்ணியே....(22) -- 6-Aug-2021

நிருவமை - நிருபமா

- sankara dass

Siva Siva

no leída,
6 ago 2021, 8:41:07 a.m.6/8/2021
para santhavasantham
/ நிருவமை - நிருபமா  /
Are there other such prior usage?
நிருபமன் (1.124.2)

Nagoji

no leída,
7 ago 2021, 12:43:39 a.m.7/8/2021
para santhav...@googlegroups.com
உபமா - உவமை. 

- சங்கர தாஸ்

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/IJIT1mj7o6A/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.

Nagoji

no leída,
7 ago 2021, 8:59:58 a.m.7/8/2021
para santhav...@googlegroups.com
சிங்கப் பரிமேல் அமர்ந்து பவனி செயும்சிவையே
எங்கும் நிறைந்த இறையே பணிவார்க் கெளிவருவோய்
சங்கை விலக்கித் தயைபுரி வாயோ தமிழ்மகளே
கங்கை அணிந்த பெருமான் வழுத்தும் கயற்கண்ணியே....(23) -- 7-Aug-2021

சங்கை - கவலை, துன்பம்
பரி - வாகனம்

- sankara dass

Vis Gop

no leída,
7 ago 2021, 9:39:58 a.m.7/8/2021
para santhav...@googlegroups.com
நிருபமா = நிகரிலி?
கோபால். 

Sent from my iPhone

Nagoji

no leída,
9 ago 2021, 6:28:27 a.m.9/8/2021
para santhav...@googlegroups.com
ஆஹா! அருமை!

நிந்தை புரிந்த மகிடனைச் செற்ற நிகரிலியே

- சங்கர தாஸ்

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/IJIT1mj7o6A/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.

Nagoji

no leída,
9 ago 2021, 6:32:38 a.m.9/8/2021
para santhav...@googlegroups.com
பிறைமலி நெற்றிப் பிறப்பிலி யேசீர்ப் பிடிநடையோய்
குறைமலி நெஞ்சன் எனையும் வளர்க்கும் குறையிலியே
அறைமலி தாரை அணிந்த அழகே அரவமரும்
கறைமலி கண்டனின் பங்கில் வளரும் கயற்கண்ணியே....(24) -- 9-Aug-2021

அறை - வண்டு

- sankara dass

Nagoji

no leída,
10 ago 2021, 7:33:38 a.m.10/8/2021
para santhav...@googlegroups.com
உழையினை ஏந்திக் கிடத்தில் அமர்ந்தருள் ஓரிணையே
முழையுறை சீயம் மிசையிவர் வீர முதற்பொருளே
பிழைபுரி வேனைப் பரிந்தெடுத் தாள விழைந்திலையோ
கழையெடுத் தோதும் கருமாற் கிளைய கயற்கண்ணியே...(25) -- 10-Aug-2021

உழை - மான்

- sankara dass

Siva Siva

no leída,
10 ago 2021, 9:32:32 a.m.10/8/2021
para santhavasantham
/உழையினை ஏந்திக் கிடத்தில் அமர்ந்தருள் ஓரிணையே/
உழையினை ஏந்தி ஒருபால் அமர்ந்தருள் ...?

3-ஆம் அடியில் மோனை வரும் இடத்தில் எதுகை அமைந்துள்ளதும் நன்றே.

Nagoji

no leída,
11 ago 2021, 12:00:28 a.m.11/8/2021
para santhav...@googlegroups.com
உழையினை ஏந்திக்(கு) இடத்தில் அமர்ந்தருள் ஓரிணையே.

இப்படிப் பிரித்து எழுதின் படிப்போருக்கு எளிதாக இருக்கும் என்று நினைக்கிறேன். சரியா?

- சங்கர தாஸ்

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/IJIT1mj7o6A/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.

Nagoji

no leída,
11 ago 2021, 8:14:28 a.m.11/8/2021
para santhav...@googlegroups.com
எள்ளிடு வாருக் கறியவொண் ணாத இயல்புடைய
வெள்ளி மலைமேல் உறையும்  வினைதீர் விமலையளே
பள்ளம தைச்சேர் புனல்போல் நினது பதமடைந்தேன்
கள்ளமி லாத உளமெனக் கீவாய் கயற்கண்ணியே...(26) -- 11-Aug-2021

- sankara dass

Nagoji

no leída,
12 ago 2021, 11:32:52 a.m.12/8/2021
para santhav...@googlegroups.com
வானில் வலம்வரு பான்மதி சூடி வருநிதியே
தேனின் இனிய மொழியுடை யாயுன் திருவடிக்கீழ்
ஈனன் எனக்கும் இடம்தரு வாயோ இரவுபகல்
கானில் நடமிடும் நாதனை மேவு கயற்கண்ணியே....(27) -- 12-Aug-2021

- sankara dass

Nagoji

no leída,
13 ago 2021, 3:13:21 a.m.13/8/2021
para santhav...@googlegroups.com
உணவும் தருவாய் உணர்வும் தருவாய் உரைக்கரிய
மணமும் தருவாய் மதியும் தருவாய் மயல்வறண்ட
குணமும் தருவாய் குடையும் தருவாய் குலம்தருவாய்
கணமும் சிவனைப் பிரியா திருக்கும் கயற்கண்ணியே....(28) -- 13-Aug-2021

மணம் - மதிப்பு, நல்ல நிலை

- sankara dass

Nagoji

no leída,
15 ago 2021, 7:20:57 a.m.15/8/2021
para santhav...@googlegroups.com
நம்பி வருவார்க் குறுதுணை யாகி நவைகளைவோய்
நிம்ப மரத்தின் அடிக்கீழ் நிலைகொண்ட நேரிழையே
அம்பெய் அருச்சுனற் கம்கணை ஈந்தார் அகத்துறைந்து
கம்பை நகரில் அறம்புரி தாயே கயற்கண்ணியே....(29) -- 15-Aug-2021

நவை - குற்றம்
நிம்பம் - வேம்பு

- sankara dass

Siva Siva

no leída,
15 ago 2021, 8:14:36 a.m.15/8/2021
para santhavasantham
/ அருச்சுனற் கம்கணை  /
அருச்சுனற் கத்திரம் - may be easier for the reader.

/அறம்புரி தாயே கயற்கண்ணியே/
அறம்புரி கின்ற கயற்கண்ணியே - may also fit.

Vis Gop

no leída,
15 ago 2021, 8:50:02 a.m.15/8/2021
para santhav...@googlegroups.com
நிம்ப மரத்தின் அடிக்கீழ்நி லைகொண்ட நேரிழையே
அடிக்கீழ்நி லைகொண்ட  —> அடியில் நிலைகொண்ட? 
கோபால். 

Sent from my iPhone

Nagoji

no leída,
16 ago 2021, 1:29:51 a.m.16/8/2021
para santhav...@googlegroups.com
நன்றி.

நிம்ப மரத்து  நிழற்கீழ் நிலைகொண்ட நேரிழையே

அரசமரம் வேப்பமரம் - இரண்டிலும் தேவதைகள் அடிமுதல் முடிவரை குடிகொண்டிருப்பதாக நம்பிக்கை. அடிக்கீழ் என்பதை மரத்தின் பாதம் என்றே வைத்தோம். இருப்பினும் கோபால் அவர்கள் சொன்ன பிறகு அது அவ்வளவு தெளிவாக இல்லை என்றே தோன்றியது. நன்றி.

- சங்கர தாஸ்

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/IJIT1mj7o6A/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.

Nagoji

no leída,
16 ago 2021, 1:33:40 a.m.16/8/2021
para santhav...@googlegroups.com
அது அம்பெய் - அம்கணை - அம்-அம் என்பதற்காக வைக்கப் பட்டது.

- சங்கர தாஸ்

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/IJIT1mj7o6A/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.

Nagoji

no leída,
16 ago 2021, 11:45:01 a.m.16/8/2021
para santhav...@googlegroups.com
குலைவளர் தெங்கும் கதலியின் தாறும் கொழிப்புடனே
துலைவளர் ஊரின் தலைவற்குப் பின்வரு  தூமணியே
இலைவளர் வேலற்(கு) இடத்தமர் மானே எழில்பொழியும்
கலைவளர் நெற்றிய ளேகனிச் சாறே கயற்கண்ணியே....(30) -- 16-Aug-2021

துப்பு - ப்ரகாசம்
துலை - தராசு - துலாபாரம் குறிப்பு (குருவாயூர்)

- sankara dass

Vis Gop

no leída,
16 ago 2021, 1:32:03 p.m.16/8/2021
para santhav...@googlegroups.com
Alternatives that could also be considered:

துலைவளர் ஊரின்
துலைவளர் வாயூர்?
வேலற்(கு) இடத்தமர்
சூலற்(கு) இடத்தமர்?
துப்பு - ப்ரகாசம் 
இப்பாடலில் துப்பு இடம்பெறவில்லை. 

கோபால். 

Sent from my iPhone

Nagoji

no leída,
17 ago 2021, 8:01:04 a.m.17/8/2021
para santhav...@googlegroups.com
இலையின்மலி வேல்நுனைய சூலம்வல னேந்தியெரி புன்சடையினுள் ... என்று உள்ளது.
இலமலிந்த வேல் நம்பி என்பதில் மழு என்பது குறிக்கப்படுகிறது என்று நினைக்கிறேன். சிவசிவா உதவி தேவை.

வாயூர் என்பதும் நன்றாக உள்ளது. குருவை விடவேண்டாம். ஊர் என்று பொதுவாகவே இருக்கட்டும் என்று எண்ணுகிறேன்.

- சங்கர தாஸ்
--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/IJIT1mj7o6A/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.

Nagoji

no leída,
17 ago 2021, 8:11:48 a.m.17/8/2021
para santhav...@googlegroups.com
மணக்கும் தமிழ்க்கவி கேட்டு மகிழ்வோய் மகிதலத்தில்
குணக்கும் குடக்கும் வடதென் திசையும் குடைபரப்பி
இணக்கத் துடனே புரக்கும் எழிலே எனக்கிரங்காய்
கணக்கில் உகங்கண்ட தேர்தகை யூர்வாழ் கயற்கண்ணியே....(31) -- 17-Aug-2021

மகிதலம் - பூவுலகம்
குடை - ஆட்சி
இணக்கம் - எல்லோருடனும் நட்பு

- sankara dass

Siva Siva

no leída,
17 ago 2021, 9:03:24 a.m.17/8/2021
para santhavasantham

இலைநுனை வேல் = இலை போன்ற நுனியையுடைய வேல் / சூலம்;

7.39.2 - "இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தற் கடியேன்"

குறிப்புரையில்: இலை - இலைத் தன்மை; கூர்மை. வேல் - படைக்கலப் பொது; இங்கு, மழுவைக் குறித்தது.

இலை - 9. Blade of a weapon or instrument; ஆயுதவலகு

(சுந்தரர் தேவாரம் - 7.30.11 - இலைமலிந்த மழுவானை)

குருவாயூர் என்ற பெயர் பாடலில் வரவேண்டும் என்றால்:

குலைமலி தெங்கும் கதலியின் தாறும் குலவுபொழில்

அலைமலி சீர்க்குரு வாயூர் அமர்மால் அவற்கிளையாய்

தலைமலி மாலை தனையணி சங்கரன் தன்னிடத்தாய்

கலைபொலி நெற்றிய ளேகனிச் சாறே கயற்கண்ணியே

Nagoji

no leída,
18 ago 2021, 1:10:15 a.m.18/8/2021
para santhav...@googlegroups.com

குலைமலி தெங்கும் கதலியின் தாறும் குலவுபொழில்

அலைமலி சீர்க்குரு வாயூர் அமர்மால் அவற்கிளையாய்

தலைமலி மாலை தனையணி சங்கரன் தன்னிடத்தாய்

கலைபொலி நெற்றிய ளேகனிச் சாறே கயற்கண்ணியே

>> arumai. Will keep it as additional song in the maalai.

- sdn 

Nagoji

no leída,
18 ago 2021, 1:10:29 a.m.18/8/2021
para santhav...@googlegroups.com
வளமிக வேண்டி வழிபடும் அன்பர் மனத்தமர்ந்த
குளகணி மானே குறையறு வீறுடைக் கொற்றவையே 
விளமணி தேவர் அருந்திய வேலை விடம்தடுத்தோய்
களம்பல கண்ட கடம்பனின் தாயே கயற்கண்ணியே....(32) -- 18-Aug-2021

குளகு - மலைவாழ் மக்களின் இலை ஆடை
விளம் - இங்கு கூவிளம் - வில்வம்

- sankara dass

Nagoji

no leída,
19 ago 2021, 3:53:03 a.m.19/8/2021
para santhav...@googlegroups.com
இருளறு பானுக் கொளிதரு வோளே இளைப்பறியாத்
திருமகள் வாணி இருவரை ஏவும் சிறப்புடையோய்
இருவினை நீக்கும் இமவான் மகளே இரும்புவியில்
கருவினைக் காக்கின்ற தாயாய் வரும்அங் கயற்கண்ணியே...(33) -- 19-Aug-2021

- sankara dass

Siva Siva

no leída,
19 ago 2021, 8:42:43 a.m.19/8/2021
para santhavasantham
/இருளறு பானுக் கொளிதரு வோளே /
பானுக்கு என்று வாராது.
பானு - வடமொழி - முற்றியலுகரம்.
பானுவை, பானுவிற்கு, இத்யாதி.

Nagoji

no leída,
19 ago 2021, 10:48:40 a.m.19/8/2021
para santhav...@googlegroups.com
உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்;
யவ்வரின் இய்யாம் முற்றும்அற் றொரோவழி. (நன்னூல் - 164)
(ஓடும் = நீங்கும்; உக்குறள், குறள் உ = குற்றியலுகரம்; மெய்விட்டோடும் - வல்லின மெய்யை விட்டு நீங்கும்; அற்று - குற்றியலுகரத்தைப்போல; முற்றும் - முற்றியலுகரமும்; ஒரோவழி = சிலவிடங்களில்.)

உறவு + உண்டு - உறவுண்டு. 
அரவு + ஆடி - அரவாடி.

இதன்படி, முற்றியலுகரம் சில இடங்களில் குற்றியலுகரம் போல் செயல்படுகிறது. 

வேந்துக்கு, கதவுக்கு.

பானு + ஐ = பானுவை என்பதி இயல்பாக உள்ளது.
பானுவுக்கு என்பதை விட பானுக்கு என்பது இயல்பாக வந்தது போல் தோன்றியது. இதில் ஏதாவது நுணுக்கமான உள்ளதா என்று சொல்லவும்.

- சங்கர தாஸ்

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/IJIT1mj7o6A/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

no leída,
19 ago 2021, 11:01:58 a.m.19/8/2021
para santhavasantham
I do not know the technical rules / nuances in this context.
But I know that in the context of Sanskrit names ending in "u", that 'u' sound is full. That does not get elided when the following particle or word starts with a vowel.

வாசு - வாசுக்கு?  வாசுவுக்கு/வாசுவிற்கு?

பானு - 1. பானால்? பானுவால்?   2. பானே? பானுவே?
பானு ஒளி வீசியது - பானொளி வீசியது? பானுவொளி வீசியது?
மேரு, விஷ்ணு, பிரபு, etc. nouns also follow the same rules / conventions.

Siva Siva

no leída,
19 ago 2021, 11:07:30 a.m.19/8/2021
para santhavasantham
Even when the word விஷ்ணு is tamilized as விண்டு, it seems to follow the Sanskrit nouns conventional treatment in Tamil declensions!
11.32.49
விளவைத் தளர்வித்த விண்டுவுந்
    தாமரை மேலயனும்

Note the use of விண்டுவும் (& not விண்டும்).
விண்டு - விட்டுணு; 

Nagoji

no leída,
19 ago 2021, 11:47:40 a.m.19/8/2021
para santhav...@googlegroups.com
ஆம். அருமையான விளக்கம். proper noun என்பதும் ஒரு சிறப்பு விதி.
பானுவை, பானுவால்..இவை இயல்பாக வரினும், கு என்பது பேச்சு வழக்கில் பானுக்கு, வாசுக்கு, சீனுக்கு, விஷ்ணுக்கு என்றே வருவதால் இந்தக் குழப்பம். 

இருளறுப் பானுக் கொளிதரு வோளே இளைப்பறியா - என்று திருத்தி விட்டேன்.

நன்றி.

- சங்கர தாஸ்

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/IJIT1mj7o6A/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.

Vis Gop

no leída,
19 ago 2021, 12:30:00 p.m.19/8/2021
para santhav...@googlegroups.com
திருத்திய வடிவம் அருமை! 
பானுவுக்கு என்று மாற்றாமலேயே சாதித்தது திறமை!

Sent from my iPhone

On 19-Aug-2021, at 9:17 PM, Nagoji <nag...@gmail.com> wrote

Nagoji

no leída,
20 ago 2021, 2:52:47 a.m.20/8/2021
para santhav...@googlegroups.com
முசலத் தொடுவில் அடுசரம் ஏந்தி  முறுக்குடனே
வசைபெய் அரக்கர் குலத்தை அழித்த வராகியளே
அசடன் எனையுன் அடியிணை பாட அருந்தமிழைக்
கசடறக் கற்க அருளைப் பொழிவாய் கயற்கண்ணியே....(34) -- 20-Aug-2021

முசலம் - உலக்கை ஆயுதம்

- sankara dass

Siva Siva

no leída,
20 ago 2021, 7:53:05 a.m.20/8/2021
para santhavasantham
/ வராகியளே  /
வராகியள் என்றும் வருவதுண்டா? அன்றேல்,  வராகியவளே என்பதன் விகாரமா?

Nagoji

no leída,
20 ago 2021, 11:37:21 a.m.20/8/2021
para santhav...@googlegroups.com
சான்று உள்ளதா என்று தெரியவில்லை.
ஆதியன், பாதியன் போல் ஆதியள், பாதியள் என்பதில் இலக்கணச் சிக்கல் இருப்பதுபோல் படவில்லை. அந்த வகையில்தான் எண்ணி எழுதியது.

நீங்கள் சொன்னபின் பார்க்கும் போது, வராகியாள், வராகியாளே என்பதின் விகாரமாகக் கொள்வது ஏற்புடையதாக எனக்குப் படுகிறது. சரியா என்று சொல்லவும்.

- சங்கர தாஸ்

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/IJIT1mj7o6A/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

no leída,
20 ago 2021, 11:56:26 a.m.20/8/2021
para santhavasantham
ஆதி, பாதி, விடை, சடை,  - முதலிய பண்புகளை / விஷயங்களை உடைமையால் - ஆதியன், பாதியன், விடையன், சடையன், என்று வருகின்றன என்று எண்ணுகின்றேன்.

உமை - உமையவள் (- உமையாள்) - அவள் என்பது பகுதிப்பொருள்விகுதி என்று படித்த நினைவு.
( பகுதிப்பொருள்விகுதி  - (Gram.) Expletive suffix; suffix added on to a word without changing its sense, as kaḷ in avaikaḷதனக்கு ஒரு பொருளின்றிப் பகுதியின் பொருளிலேயே வரும் விகுதி)

Nagoji

no leída,
21 ago 2021, 12:37:54 a.m.21/8/2021
para santhav...@googlegroups.com
அரிய நுணுக்கமான விஷயத்தைச் சொல்லிக் கொடுத்தமைக்கு நன்றி. பேச்சு வழக்கில் சரி என்பது போலவே ஊறி விட்டது எனக்கு என்று தோன்றுகிறது.

வசைபெய் அரக்கர் குலத்தை அழித்த மறக்கொழுந்தே - என்று திருத்தி விட்டோம்.

- சங்கர தாஸ்

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/IJIT1mj7o6A/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.

Nagoji

no leída,
21 ago 2021, 12:39:43 a.m.21/8/2021
para santhav...@googlegroups.com
குயிலை நிகர்த்த குரலோய் ஒளியார் குருவுருவே
துயிலைத் துறந்தோன் தமையன் புகழும் உடன்பிறப்பே
மயிலை நகர்வாழ் மணியே அடியேன் மயல்களைவாய்
கயிலை மலைவாழ் கணமார் உமையே கயற்கண்ணியே...(35) -- 21-Aug-2021

துயிலைத் துறந்தோன் - இலக்குமணன்

- sankara dass

Vis Gop

no leída,
21 ago 2021, 12:59:44 a.m.21/8/2021
para santhav...@googlegroups.com

துயிலைத் துறந்தோன் தமையன் புகழும் உடன்பிறப்பே
அருமை!
Sent from my iPhone

Siva Siva

no leída,
21 ago 2021, 7:55:59 a.m.21/8/2021
para santhavasantham
/ துயிலைத் துறந்தோன் தமையன் புகழும் உடன்பிறப்பே  /
5-ஆம் சீரில் மோனை வேண்டில்.

துயிலைத் துறந்தோன் தமையன் புகழ்கின்ற சோதரியே

/கணமார் உமையே/
கணம்சூழ் உமையே?

Nagoji

no leída,
21 ago 2021, 8:25:43 a.m.21/8/2021
para santhav...@googlegroups.com
கணம்சூழ் என்பதே மிகவும் பொருத்தமானது.
நன்றி.

- சங்கர தாஸ்

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/IJIT1mj7o6A/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.

Nagoji

no leída,
22 ago 2021, 3:16:50 a.m.22/8/2021
para santhav...@googlegroups.com
பாளை நிகர்த்த பணமுடைப் பாம்பார் பணிமுடியோய்
ஊளை ஒலிமிகு காடர் உடன்நீ உறைவதென்னே?
தாளைப் பணியும் தமியேன் மிசையும் தயைபொழிவாய்
காளை எனவரு மாலின தங்காய்! கயற்கண்ணியே...(36) -- 22-Aug-2021

பணிமுடி - ஆபரணம் அமைந்த முடி
காளை - விஷ்ணுவே இடபமாக வந்தார்

- sankara dass
Está cargando más mensajes.
0 mensajes nuevos