சிந்தைக்கு விருந்து = வடை பாயசம் லட்டு சாங்கிரி முறுக்கு

36 views
Skip to first unread message

Siva Siva

unread,
Sep 11, 2025, 10:49:26 AM (9 days ago) Sep 11
to santhavasantham

சிந்தைக்கு விருந்து

வடை பாயசம் லட்டு சாங்கிரி முறுக்கு என்ற சொற்றொடர்கள் உண்ணும் பதார்த்தங்களைச் சுட்டாது வரும் வெண்பா.

இவற்றுள் எத்தனை முடியுமோ அத்தனை இடம்பெறுமாறும் எழுதலாம். எல்லாம் இருக்கவேண்டும் என்ற தேவை இல்லை.

V. Subramanian

Govindaraju Arunachalam

unread,
Sep 12, 2025, 1:54:45 AM (8 days ago) Sep 12
to santhav...@googlegroups.com

முறுக்குறு மீசை முனிசாமி நிற்பார்

வறுக்கும் வெயிலில் வடைவீதி ஈற்றில்

அதிகம் அருந்தி அலட்டும் மனிதர்

வதியும் இடமது வந்து.

         -கருவூர் இனியன்.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCPAPsKzP%2BmPo6p9CeaNNA%3DchX7s--jXC%2BD%2BXitPBQV_uw%40mail.gmail.com.

--
rgds,
 
Dr. A. GOVINDARAJU,
Retired Principal - National Awardee,

Arasi Palaniappan

unread,
Sep 12, 2025, 1:55:45 AM (8 days ago) Sep 12
to சந்தவசந்தம்

Arasi Palaniappan

unread,
Sep 12, 2025, 2:11:27 AM (8 days ago) Sep 12
to சந்தவசந்தம்
அறு *வடை* க்கு   முன்னாலே ஆடவர்கள் எல்லாம் 
 *முறுக்கு* த்துலங்க முறைப்பர் - பொறுப்புடையார் 
ஆவன செய்ய 
அ *லட்டு* தல் விட்(டு) உழைப்பர் 
ஜீவனத்தை எண்ணிஒன்று சேர்ந்து!

அரசி. பழனியப்பன்

Govindaraju Arunachalam

unread,
Sep 12, 2025, 2:24:09 AM (8 days ago) Sep 12
to santhav...@googlegroups.com
மிகச் சிறப்பு!

rgds,
 
Dr. A. GOVINDARAJU,
Retired Principal - National Awardee,

Siva Siva

unread,
Sep 12, 2025, 8:11:20 AM (8 days ago) Sep 12
to santhav...@googlegroups.com
Nice.

Does வடை mean the food item in line-2?

V. Subramanian

Siva Siva

unread,
Sep 12, 2025, 8:12:30 AM (8 days ago) Sep 12
to santhav...@googlegroups.com
Nice.

V,. Subramanian

Ram Ramakrishnan

unread,
Sep 12, 2025, 8:36:07 AM (8 days ago) Sep 12
to santhav...@googlegroups.com
ஆகா! அருமை. 

ஜாங்கிரியும் சேர்தால் தித்திப்பு அதிகமாகுமென விட்டதும் நன்றே.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Sep 12, 2025, at 02:11, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:

Govindaraju Arunachalam

unread,
Sep 12, 2025, 8:41:01 AM (8 days ago) Sep 12
to santhav...@googlegroups.com
வடைவீதி - வடக்கு வீதி

rgds,
 
Dr. A. GOVINDARAJU,
Retired Principal - National Awardee,

Arasi Palaniappan

unread,
Sep 12, 2025, 8:45:55 AM (8 days ago) Sep 12
to சந்தவசந்தம்
Thanks 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Sep 12, 2025, 8:58:00 AM (8 days ago) Sep 12
to santhav...@googlegroups.com
Thanks.
I have not come across that phrasing before.

V. Subramanian

Siva Siva

unread,
Sep 12, 2025, 9:03:28 AM (8 days ago) Sep 12
to santhavasantham

2025-09-11

சிந்தைக்கு விருந்து = வடை பாயசம் லட்டு சாங்கிரி முறுக்கு

----------------

(ெண்பா)

அடிசிலட்டும் என்றிரக்கும் அன்பாய சம்பு

முடிவடை யாவினைதீர் முத்தன் - படியில்

மதுரையர சாங்கிரிசை மன்முறுக்கு வேணிப்

பொதுவினட மாடிதாள் போற்று.

"அடிசில் அட்டும்" என்று இரக்கும் அன்பாய சம்பு -

முடிவடையா வினை தீர் முத்தன் -

படியில் மதுரை-சு ஆம் கிரிசை மன் -

முறுக்கு வேணிப் பொதுவில் நம் ஆடி -

தாள் போற்று -

வி. சுப்பிரமணியன்

Ram Ramakrishnan

unread,
Sep 12, 2025, 10:14:28 AM (8 days ago) Sep 12
to santhav...@googlegroups.com
அற்பதம்.

அனைத்தையும் சேர்த்த அதிரசமான விருந்து.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Sep 12, 2025, at 09:03, Siva Siva <naya...@gmail.com> wrote:

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Govindaraju Arunachalam

unread,
Sep 12, 2025, 10:50:53 AM (8 days ago) Sep 12
to santhav...@googlegroups.com
சிவசிவா வெண்பா மிக நன்று.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCNtCayQMSQDWEx55zoJZiEP-UAV3vd%3DMnXjF9whyj4u%3DA%40mail.gmail.com.

--

Arasi Palaniappan

unread,
Sep 12, 2025, 11:09:08 AM (8 days ago) Sep 12
to சந்தவசந்தம்
நன்றி திரு ராம்கிராம் அவர்களே! ஆம் நான் இனிப்பானவன் என்பதால் தவிர்த்தேன்!

Kaviyogi Vedham

unread,
Sep 12, 2025, 11:15:54 AM (8 days ago) Sep 12
to santhav...@googlegroups.com
மிக அழகு  அரசி.. ரசித்தேன்,
   யோகியார்

Kaviyogi Vedham

unread,
Sep 12, 2025, 11:16:35 AM (8 days ago) Sep 12
to santhav...@googlegroups.com
பேஷ் பேஷ்
 யோகியார்

Siva Siva

unread,
Sep 12, 2025, 11:21:52 AM (8 days ago) Sep 12
to santhav...@googlegroups.com
இதுவரை படித்து வாழ்த்திய அன்பர்களுக்கும்  & பின்னர்ப் படித்து வாழ்த்தவிருக்கும் அன்பர்களுக்கும் என் வணக்கம்.

வி. சுப்பிரமணியன்

Arasi Palaniappan

unread,
Sep 12, 2025, 11:23:26 AM (8 days ago) Sep 12
to சந்தவசந்தம்
மிக்க நன்றி யோகியார் 

Swaminathan Sankaran

unread,
Sep 12, 2025, 11:49:37 AM (8 days ago) Sep 12
to santhav...@googlegroups.com
எல்லாவற்றையும் சிவனுக்காக,
சிவனுடன் இணைத்துப் பாடும் 
சிவ சிவாவின் கவிதை 
சங்கரனுக்கும் சாங்கிரி போல இனிக்கிறது.

சங்கரன் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

--
 Swaminathan Sankaran

இமயவரம்பன்

unread,
Sep 13, 2025, 7:14:13 AM (7 days ago) Sep 13
to santhav...@googlegroups.com, santhavasantham
எல்லார் வெண்பாக்களும் மிக அருமை!

எனது முயற்சி:
 
விட்டுக் கொடுத்தால் வாழலாம் - கதை வெண்பா

இட்டமுடன் மற்றார்முன் னேறிச் செலட்டுமென 

விட்டுக் கொடாதவர் வீழ்வடைவார் - ஒற்றையடிப் 

பாலத்தின் மேலே முறுக்குற்றுப் பாயசங்கள்

மாளும் இருசாங் கிரிந்து.

(பாய் அசங்கள் = பாய்கின்ற ஆடுகள்; அசங்கள் = ஆடுகள்(சமஸ்கிருதம் - அஜம் ஆடு); இருசு = மூங்கில்; இரிந்து = முறிந்து)

குறிப்பு:

கதையும் சொற்களும் பொருந்துவதற்காக எதுகை மோனை விதிகள் சில இடங்களில் கடைபிடிக்கப் படவில்லை)

கதை:

ஒருசமயம் ஒருத்தர் மட்டுமே கடந்து மறுமுனைக்குச்  செல்ல இயலுமாறு குறுகிய அகலம் கொண்ட காட்டாற்றுப் பாலத்தைக் கடப்பதற்கு “நான் தான் முதலில் செல்வேன்” என்று எதிரெதிர் முனைகளில் நின்று போட்டியிடும் இரண்டு ஆடுகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டு பாலம் முறிய விழுந்து மாண்டன. நீதி: விட்டுக் கொடுத்தால் வீழ்வு இல்லை. 

Arasi Palaniappan

unread,
Sep 13, 2025, 7:17:30 AM (7 days ago) Sep 13
to சந்தவசந்தம்
அனைத்தும் கலந்த அரிய கலவை 
நினைக்க வழியும்உமிழ் நீர்!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Sep 13, 2025, 7:24:39 AM (7 days ago) Sep 13
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
அழகிய குறள் வெண்பாவால் கவிச்சுவையைக் கொண்டாடும் திரு. பழனியப்பன் அவர்களுக்கு மிக்க நன்றி!

Siva Siva

unread,
Sep 13, 2025, 8:24:46 AM (7 days ago) Sep 13
to santhav...@googlegroups.com
மிக அழகு. 
ஒரு பாயசம் கேட்கின் இருபாயசங்கள் தரும் ஆனந்த்!

வி. சுப்பிரமணியன்

இமயவரம்பன்

unread,
Sep 13, 2025, 8:40:14 AM (7 days ago) Sep 13
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
எழுதும்போது “இரு பாயசங்கள்” எனக் கருதி எழுதினேன் அல்லேன் ! நகைச்சுவையுடன் வாழ்த்திய திரு. சிவசிவா அவர்களுக்கு மிக்க நன்றி!

Ram Ramakrishnan

unread,
Sep 13, 2025, 8:53:17 AM (7 days ago) Sep 13
to santhav...@googlegroups.com
திரு. சிவசிவா சொன்னவிதம் அருமை.

நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றியதோ?

மிக அருமை நிலு. இமயவரம்பன் 

லட்டு இல்லையெனனும் உங்கள் கவிதையே லட்டுவாக மாறி வாய்ச்சுவை அளித்தது.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Sep 13, 2025, at 08:24, Siva Siva <naya...@gmail.com> wrote:

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Sep 13, 2025, 8:59:14 AM (7 days ago) Sep 13
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
சுவையான வாழ்த்துக்கு மிக்க நன்றி, திரு. ராம்கிராம்! 

லட்டும் இருக்கிறது - முதலடியில் “செலட்டும்” :-)

On Sep 13, 2025, at 8:53 AM, Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:

Subbaier Ramasami

unread,
Sep 13, 2025, 7:42:52 PM (7 days ago) Sep 13
to santhav...@googlegroups.com
வடை பாயசம் லட்டு சாங்கிரி முறுக்கு
லட்டுப்பெண் தன்னை அறுவடைப் பக்கம்
விலக்கி முறுக்கும் விமலி - கலங்கிநீர்
வாய்க்காலி லேபாய சம்பங்கிப் பூப்பூக்க
போய்ப்பார்த்தா ளாமந்தப் போது

On Thu, Sep 11, 2025 at 9:49 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

சிந்தைக்கு விருந்து

வடை பாயசம் லட்டு சாங்கிரி முறுக்கு என்ற சொற்றொடர்கள் உண்ணும் பதார்த்தங்களைச் சுட்டாது வரும் வெண்பா.

இவற்றுள் எத்தனை முடியுமோ அத்தனை இடம்பெறுமாறும் எழுதலாம். எல்லாம் இருக்கவேண்டும் என்ற தேவை இல்லை.

V. Subramanian

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Subbaier Ramasami

unread,
Sep 13, 2025, 7:43:40 PM (7 days ago) Sep 13
to santhav...@googlegroups.com

மலட்டுப்பெண்  தன்னை  அறுவடை  நின்று

விலக்கி முறுக்கும் விமலி- கலங்கிநீர்

வாய்க்காலி லேபாய சம்பங்கிப் பூப்பூக்கப்
போய்ப்பார்த்தாளாம் அந்தப் போது

மாமுறுக்கு மோகினி வந்தாள் அறுவடைக்கு
ஓமலட்டுப் பெண்ணேயென் றோடிவந்து – சாமியப்பர்
சாங்கிரி வாய்க்காலில் பாய சம்பந்தன்
ஆங்குவந்தா ராமந்தப் போது  -               வாய்க்காலின் பெயர் சாங்கிரி

ஆயாசத்  தாலே அயர்சாங் கிரி கிடக்க                           சாங்கிரி  -    இறக்கும் தருவாயில் இருக்கும் கிரி பாயாசம் பத்துப்  படைத்திருந்த-  - மாயாநாத்
மாமுறுக்கோட லட்டும் மாண்பர் சொலவடை       - நெல்லைப்பகுதிய்ல் சொல்லும் பழமொழி
நேமமாய்ச் சொன்னார் நிமிர்ந்து

இலந்தை

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Subbaier Ramasami

unread,
Sep 13, 2025, 7:46:31 PM (7 days ago) Sep 13
to santhav...@googlegroups.com
ஆயாசத்  தாலே அயர்சாங் கிரி கிடக்க                           சாங்கிரி  -    இறக்கும் தருவாயில் இருக்கும் கிரி பாயாசம் பத்துப்  படைத்திருந்த-  - மாயாநாத்
மாமுறுக்கோட லட்டும் மாண்பர் சொலவடை       - நெல்லைப்பகுதிய்ல் சொல்லும் பழமொழி
நேமமாய்ச் சொன்னார் நிமிர்ந்து

Siva Siva

unread,
Sep 13, 2025, 9:18:14 PM (7 days ago) Sep 13
to santhav...@googlegroups.com

மாமுறுக்கு மோகினி வந்தாள் அறுவடைக்கு
ஓமலட்டுப் பெண்ணேயென் றோடிவந்து – சாமியப்பர்
சாங்கிரி வாய்க்காலில் பாய சம்பந்தன்
ஆங்குவந்தா ராமந்தப் போது  -               

வாய்க்காலின் பெயர் சாங்கிரி /

Nice.
Interesting name of the canal. Is there one with that name or was it made up for the purpose of the verse? Just curious.

V. Subramanian

Arasi Palaniappan

unread,
Sep 13, 2025, 10:52:56 PM (7 days ago) Sep 13
to சந்தவசந்தம்

Govindaraju Arunachalam

unread,
Sep 14, 2025, 1:45:31 AM (6 days ago) Sep 14
to santhav...@googlegroups.com

வடைகள் பல இருந்தும் எதையும் தின்ன முடியாது!

மரவடை மாவடை மக்கள் சொலவடை

ஆவடி யெங்கும் அறுவடைக் காலம்

முடிவடை யாது முகநூலின் மோகம்

கதவடைப் பார்கள் கவிழ்ந்து.

    -கருவூர் இனியன்.

Rajagopalan Soundararajan

unread,
Sep 14, 2025, 6:18:16 AM (6 days ago) Sep 14
to சந்தவசந்தம்
'சாங்கிரி' என்னும் சொல்லே ஆய்வுக்கு உரியது. இனிப்புகளை அந்தக் காலத்திலே தில்லி சுல்தான்களின் பெயரிட்டு மனிதர்களை  மகிழ்விக்கும் வண்ணம் 'பாதுஷா', 'ஜஹாங்கீரி' என்று அழைத்தனர் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். சாங்கிரியை விடுத்து, அப்பம், அதிரஸம், வெல்லச்சீடை முதலியவற்றை பாட்டுப் பொருளாக எடுத்துக் கொள்ளலாமே!

Arasi Palaniappan

unread,
Sep 14, 2025, 6:33:49 AM (6 days ago) Sep 14
to சந்தவசந்தம்
சிறப்பு 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Arasi Palaniappan

unread,
Sep 14, 2025, 6:39:08 AM (6 days ago) Sep 14
to சந்தவசந்தம்
மிகச்சரி!

On Sun, 14 Sept 2025, 3:48 pm Rajagopalan Soundararajan, <rsou...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Arasi Palaniappan

unread,
Sep 14, 2025, 6:45:12 AM (6 days ago) Sep 14
to சந்தவசந்தம்
தனித்தமிழில் இலங்கும் செட்டிநாட்டு நொறுக்குத்தீனி களான கைமுறுக்கு, மகிழம்பூ முறுக்கு,
தேன்குழல், மணகோலம், கந்தரப்பம், சீடை, சீப்புச்சீடை இவற்றையும் கொள்ளலாமே!

அரசி. பழனியப்பன் 
On Thu, 11 Sept 2025, 8:19 pm Siva Siva, <naya...@gmail.com> wrote:

சிந்தைக்கு விருந்து

வடை பாயசம் லட்டு சாங்கிரி முறுக்கு என்ற சொற்றொடர்கள் உண்ணும் பதார்த்தங்களைச் சுட்டாது வரும் வெண்பா.

இவற்றுள் எத்தனை முடியுமோ அத்தனை இடம்பெறுமாறும் எழுதலாம். எல்லாம் இருக்கவேண்டும் என்ற தேவை இல்லை.

V. Subramanian

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Govindaraju Arunachalam

unread,
Sep 14, 2025, 8:26:44 AM (6 days ago) Sep 14
to santhav...@googlegroups.com
தீனி-இதற்கு மாற்றுச்சொல் கிடைக்குமா?

rgds,
 
Dr. A. GOVINDARAJU,
Retired Principal - National Awardee,

Arasi Palaniappan

unread,
Sep 14, 2025, 8:27:43 AM (6 days ago) Sep 14
to சந்தவசந்தம்

Siva Siva

unread,
Sep 14, 2025, 8:33:40 AM (6 days ago) Sep 14
to santhav...@googlegroups.com
உண்டிவகைகளின் பெயர்களை ஆராய்வதும் சுவையே.
ஒருமுறை ஒரு மாத்வர் இல்லத்தில் ஒரு பூஜைக்குச் சென்றிருந்தேன். பகல் உணவில் சுவை மிகுந்த "ஹயக்ரீவ" இருந்தது.

வி. சுப்பிரமணியன்

Siva Siva

unread,
Sep 14, 2025, 8:44:42 AM (6 days ago) Sep 14
to santhav...@googlegroups.com
1) 
தீனி, திண்டி.

2)
சொற்கள் நீளம் குறைவாக இருந்தால் பாடல்களில் வருமாறு இயற்றுவது சுலபமாக இருக்கக்கூடும்.

வி. சுப்பிரமணியன்

Govindaraju Arunachalam

unread,
Sep 14, 2025, 10:25:43 AM (6 days ago) Sep 14
to santhav...@googlegroups.com
இடை உண்டி என AI சொல்கிறது!

rgds,
 
Dr. A. GOVINDARAJU,
Retired Principal - National Awardee,

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Subbaier Ramasami

unread,
Sep 14, 2025, 10:34:37 AM (6 days ago) Sep 14
to santhav...@googlegroups.com
சாங்கிரி வாய்க்கால் நான் தந்த பெயர்,. பீன்ஸ் போன்ற காய்கறி ஒன்றுக்குச் சாங்கிரி என்ற பெயர் இருக்கிறது

இலந்தை

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Subbaier Ramasami

unread,
Sep 14, 2025, 10:36:32 AM (6 days ago) Sep 14
to santhav...@googlegroups.com
பாயா சம்பத்து- பாய்ந்து விட்டு விலகாத சம்பத்து

Ram Ramakrishnan

unread,
Sep 14, 2025, 10:48:17 AM (6 days ago) Sep 14
to santhav...@googlegroups.com
ராஜஸதான் மாநிலத்தில் சாங்கிரி என்றொரு காய்கறி உண்டு. பீன்ஸ் போன்று நீளமாய் இருக்கும். நீரில்லாத வறுமைக் காலத்தில் மிகவும் உபயோகத்தில் இருந்ததாகக் கூறப்படும் இந்தக்காய் இப்போதும் அந்த மாநிலத்தில் உயர்ந்த தொன்றாக ரசித்துப் போற்றற் குரியதாக உள்ளது.

2023ல் நாங்கள் ராஜஸ்தானில் சுற்றுப் பயணம் செய்தபோது என்மனைவி சாங்கரி ஊறுகாய் வாங்கினாள். இப்போதும் ரசித்து மகிழ்கிறோம்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Sep 14, 2025, at 10:36, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

Siva Siva

unread,
Sep 14, 2025, 11:27:00 AM (6 days ago) Sep 14
to santhav...@googlegroups.com
பாயசம். 
பாயாசம் என்பது பிழையன்றோ?

Subbaier Ramasami

unread,
Sep 14, 2025, 1:35:54 PM (6 days ago) Sep 14
to santhav...@googlegroups.com
பாயாசம் என்று சொல்வதும் உண்டு. பாயாசம் சாப்பிட்டி ஆயாசம் வந்தது என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Sep 14, 2025, 1:46:06 PM (6 days ago) Sep 14
to santhav...@googlegroups.com
If so, it is a corrupted form.

V. Subramanian

Ramamoorthy Ramachandran

unread,
Sep 14, 2025, 6:48:21 PM (6 days ago) Sep 14
to Santhavasantham
கதவடைத் தலட்டும் பொருள்விளங்கா துள்ளே

விதவிதப்பா யாசங்கை கொண்டே - பதர்பேணிக் 

கைமுறுக்கு மக்கார வடிசிலிலா துக்காரை 

மைசூர்பாய் வேலால் மடி!

- புலவர் இராமமூர்த்தி 

வடை, லட்டு, பொருள்விளங்கா , பாயாசம், பதர்பேணி, கை முறுக்கு, அக்காரவடிசில், மைசூர்பா  சமைத்துள்ளேன்!

(கஞ்சர்களை முருகா அழி என்பது கருத்து)

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Sep 14, 2025, 8:45:44 PM (6 days ago) Sep 14
to santhav...@googlegroups.com
Impressive.

Please provide a word separated version also if feasible.

V. Subramanian

Ram Ramakrishnan

unread,
Sep 14, 2025, 11:23:19 PM (6 days ago) Sep 14
to santhav...@googlegroups.com
அருமை, புலவரே.

சிறு சந்தேகம். பொருவிளங்காயா அல்லது பொருள்விளங்காயா?

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Sep 14, 2025, at 18:48, Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com> wrote:

Reply all
Reply to author
Forward
0 new messages