வண்ண விருத்தம் - முயற்சி 6 (ராம்)

4 views
Skip to first unread message

Ram Ramakrishnan

unread,
Sep 22, 2025, 1:51:50 PM (4 days ago) Sep 22
to santhav...@googlegroups.com


வண்ண விருத்தம் - முயற்சி 6 (ராம்)

வண்ண விருத்தம் முயற்சி – 6 (ராம்)

தனனா தனத்த தந்த தனனா தனத்த தந்த
     தனனா தனத்த தந்த ...... தனதான

திருப்புகழ்: (சுவாமிமலை) – ராகம்: காமஸ்)
கடிமா மலர்க்கு ளின்ப முளவேரி கக்கு நண்பு
     தருமா கடப்ப மைந்த ...... தொடைமாலை


அயனா ரெழுச்சி தன்னில் முடிகா ணலற்ற துன்பம்

… அரியோ னுமுற்று நைந்த தொருநாளே

…. அடலே றிருக்கை கொண்டு சிவனா ருவத்த லொன்றி

…. அவசா னமற்று நிற்ப அவர்நாண

 

துயரோ டழற்சி விஞ்ச கரமே யரைத்த கல்லும்   

…. தொடரா தொழித்த வன்பின் குணநேயா

... தொகமே பெருக்கி வந்த களிறே யளித்த கொந்தும்

…. சுகமே நிலைத்த துன்றன் அருளாலே

 

வயதே மிகுத்தர் சொந்த வுடையே துவைத்து மங்கு

…. மயலால் திகைத்து நின்ற செயலோனை

... வருதீ யெனப்பு கன்று வழியே வகுத்த தந்த

…. வடபா லிருக்கு மெங்கள் மதிசூடீ

 

பெயலா யருட்பொ ழிந்து மடவா ளுடைத்த பங்கன்

…. பிறையே தரித்து வந்த மலையீசன்

….. பிறவா திருக்க வென்றன் பழியே துடைக்க வல்லன்

.... பிரமா புரத்த மர்ந்த பெருமானே.


பதம் பிரித்து:

அயனார் எழுச்சி தன்னில் முடிகாணல் அற்ற துன்பம்

… அரியோனும் உற்று நைந்தது ஒருநாளே

அடலேறு இருக்கை கொண்டு சிவனார் உவத்தல் ஒன்றி

… அவசானம் அற்று நிற்ப அவர்நாண

 

துயரோடு அழற்சி விஞ்ச கரமே உரைத்த கல்லும்

… தொடராது ஒழித்த அன்பின் குணநேயா

தொகமே பெருக்கி வந்த களிறே அளித்த கொந்தும்

… சுகமே நிலைத்தது உன்தன் அருளாலே

 

வயதே மிகுத்தர் சொந்த உடையே துவைத்தும் அங்கு

… மயலால் திகைத்து நின்ற செயலோனை

“வருதீ” எனப் புகன்று வழியே வகுத்தது அந்த

… வடபா லிருக்கும் எங்கள் மதிசூடீ

 

பெயலாய் அருள்பொழிந்து மடவாள் உடைத்த பங்கன்

… பிறையே தரித்து வந்த மலையீசன்

… பிறவாது இருக்க எந்தன் பழியே துடைக்க வல்லன்

… பிரமா புரத்து அமர்ந்த பெருமானே


அயனா ரெழுச்சி தன்னில் முடிகா ணலற்ற துன்பம்

… அரியோ னுமுற்று நைந்த தொருநாளே:

(பிரமன் மிகுந்த எழுச்சியால் உன்னுடைய முடியைக் காண முடியாமல் அடைந்த துன்பம், 

மாயோனும் உந்து அடியைக் காணாது வருத்தம் அடைந்ததும் அன்றோர் நாளாம்),


அடலேறு இருக்கை கொண்டு சிவனார் உவத்தல் ஒன்றி

… அவசானம் அற்று நிற்ப அவர்நாண:

(வலிமை வாய்ந்த காளை மீது அமர்ந்த சிவனார் அடிமுடிவற்றர் என்று

பிரமனும் மாயோனும் உணர்ந்து நாணம் கொள்ள)

 அவசானமற்று – முடிவில்லாத


துயரோடு அழற்சி விஞ்ச கரமே உரைத்த கல்லும்

… தொடராது ஒழித்த அன்பின் குணநேயா:

... தொகமே பெருக்கி வந்த களிறே அளித்த கொந்தும்

… சுகமே நிலைத்தது உன்தன் அருளாலே:


(சமண மதத்தைத் தழுவிய காரணத்தினால்) சிவனடியார் மூர்த்தி நாயனாருக்கு 

சந்தனம் குழைத்து இறைவனுக்குச் செய்யும் பணியைத் தடுக்க, சந்தனக் 

கட்டைகளைத் தடை செய்ய, அடியார் தன் கைகளாலும் முட்டிகளாளும் 

சந்தனக் கல்லில் தேய்த்து ரத்தம் பெருகி நிற்க, சிவபிரான் அந்த அரசனுக்கு 

மரணம் வருத்திப் பின் யானை மாலை போட்டு, மூர்த்தி அடியாரை 

அரசணையில் அமர வைத்த மூர்த்தி நாயன்மார் கதை)


வயதே மிகுத்தர் சொந்த வுடையே துவைத்து மங்கு

…. மயலால் திகைத்து நின்ற செயலோனை:

வருதீ யெனப்பு கன்று வழியே வகுத்த தந்த

…. வடபா லிருக்கு மெங்கள் மதிசூடீ:


(திருகுறிப்புத் தொண்டன் நாயன்மரின் கதை: வயது மிகுந்தவராகச் சிவபிரான். 

தொண்டரிடம் தனது ஒரே ஆடையைத் துவைத்துத் தருமாறு கூறி, அதை ஏற்ற 

அடியார் அதைச் செயலாற்ற முடியாது இயற்கை தடுத்ததனால் தன் உயிரை விட்டு 

விட விழைகையில், அவரைத் தடுத்து, பெருமான் தன்னுடன் ஏற்ற கதை)

மயல் – மதி மயக்கம்

வடபால் இருக்கும் – வடப்புறம் அமர்ந்து தெற்கு நோக்கி இருக்கும்


பெயலாய் அருள்பொழிந்து மடவாள் உடைத்த பங்கன்

… பிறையே தரித்து வந்த மலையீசன்:

(பெருமழைபோல் அருளைப் பொழிந்து மங்கையை ஒரு பாகத்தில் வைத்த 

பிறைசூடி வந்த மலைவாழ் ஈசன்)

மடவாள் – இளமையானவள், அழகிய பெண்

 

பிறவா திருக்க வென்றன் பழியே துடைக்க வல்லன்

…. பிரமா புரத்த மர்ந்த பெருமானே

(நான் மீண்டும் பிறவாது இருத்தலின் பொருட்டு என் பழவினைகளைத் 

துடைக்க வல்லவன் சீகாழி நகரில் உள்ள சிவபிரானே)

பிரமாபுரம் – சீகாழி

 


அன்பன்


ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

22/09/2025







Siva Siva

unread,
Sep 22, 2025, 2:02:46 PM (4 days ago) Sep 22
to santhav...@googlegroups.com
1. Some of the தந்த places need checking for pattern conformance.
2. Check some places across adjacent seers for presence ந்த sound effect between them - that violates the pattern you are using in this song.
3. Check some places for sandhi impact.

V. Subramanian

Ram Ramakrishnan

unread,
Sep 22, 2025, 2:24:33 PM (4 days ago) Sep 22
to santhav...@googlegroups.com
Thanks for the feedback. will look into the issues more closely.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Sep 22, 2025, at 23:32, Siva Siva <naya...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCOOYarvrFzLtLAMHgAynaA%2Bb%2Bd0pJcXb5br9oV36qeDdg%40mail.gmail.com.

Ram Ramakrishnan

unread,
Sep 23, 2025, 9:37:06 AM (3 days ago) Sep 23
to santhav...@googlegroups.com
திரு. சிவசிவா:

திருத்திய வடிவம் கீழே:


வண்ண விருத்தம் முயற்சி – 6 (ராம்)

தனனா தனத்த தந்த தனனா தனத்த தந்த
     தனனா தனத்த தந்த ...... தனதான

திருப்புகழ்: (சுவாமிமலை) – ராகம்: காமஸ்)
கடிமா மலர்க்கு ளின்ப முளவேரி கக்கு நண்பு
     தருமா கடப்ப மைந்த ...... தொடைமாலை

அயனா ரெழுச்சி கொண்டு முடிகா ணலற்ற துன்ப

… மரியோ னுமுற்று நைந்த தொருநாளே

…. அடலே றுமத்த  னந்த சிவனா ருவத்த லொன்றி

…. அவசா னமற்று நின்ற தவர்நாண

 

துயரோ டழற்சி விஞ்ச கரமே யரைத்த வன்பர்   

…. தொடரா தொழித்த நண்பில் முதலோனே

தொகமே பெருக்கி வந்த களிறே யளித்த கொந்து

…. சுகமே நிலைத்த யின்ப மருள்வாயே

 

வயதே மிகுத்தர் சொந்த வுடையே துவைத்து மங்கு

…. மயலால் திகைத்து நின்ற செயல்பேணி

வருதீ யெனப்பு கன்று வழியே வகுத்த தந்த

…. வடபா லிருக்கு மெங்கள் மதிசூடீ

 

பெயலா யருட்பொ ழிந்து மடவா ளுடைத்து நின்ற

…. பிறையே தரித்து வந்த மலையீசா

….. பிறவா திருத்த லென்ற அணியே யளிக்க முந்து

…. பிரமா புரத்த மர்ந்த பெருமானே.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)


Siva Siva

unread,
Sep 23, 2025, 9:47:15 AM (3 days ago) Sep 23
to santhav...@googlegroups.com
Nice.

அந்த சிவனார் /
விஞ்ச கரமே /

சந்தம் கருதி வலிமிகாது வந்தனபோல்.

மயலால் திகைத்து /

சந்தம் கருதி மயலாற்றிகைத்து என்ற புணர்ந்த வடிவம் பெறாது வந்ததுபோல்.

/ அருட்பொ ழிந்து /

சந்தம் கருதி அருள்பொழிந்து என்பது திரிதல்விகாரம் பெற்று வந்ததுபோல்.

மடவா ளுடைத்து நின்ற /

= ?

வி. சுப்பிரமணியன்

Ram Ramakrishnan

unread,
Sep 23, 2025, 10:23:39 AM (3 days ago) Sep 23
to santhav...@googlegroups.com
முதல் மூன்று கேள்விகளுக்கும் பதில் - ஆம். என்னுடைய கேள்வி - அப்படி வரலாம் தானே?

மடவாள் உடைத்து நின்ற - இளமைத்தான அழகிய பெண்ணை அருகில் கொண்டவரே என்ற கருத்தில். சரியில்லையா?



அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Sep 23, 2025, 10:28:02 AM (3 days ago) Sep 23
to santhav...@googlegroups.com
வரலாம். (தேவையான அளவு உப்பு என்பது போல).

உடைத்து - வினைமுற்றா வினையெச்சமா?
மடவாள் இடத்தமர்ந்த ?

வி. சுப்பிரமணியன்

Arasi Palaniappan

unread,
Sep 23, 2025, 10:29:48 AM (3 days ago) Sep 23
to சந்தவசந்தம்
அருமை அருமை. மின்னும் வண்ணம்!

Ram Ramakrishnan

unread,
Sep 23, 2025, 10:38:23 AM (3 days ago) Sep 23
to santhav...@googlegroups.com

வினை முற்று எனக் கொள்ளலாம்.

ம்டவாள் இடத்த மர்ந்த - அருமை. அப்படியே மாற்றுகிறேன்.

மற்ற வல்லினம் மிக வேண்டிய இடங்களையும், புணர்ச்சி மாற்றத்தையும் சரி செய்கிறேன்.

திரிதல் விகாரம் அப்படியே இருக்கலாம் எனத் தோன்றுகிறது.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
Sep 23, 2025, 10:44:52 AM (3 days ago) Sep 23
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி திரு. பழனியப்பன்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)


Ram Ramakrishnan

unread,
Sep 23, 2025, 12:02:53 PM (3 days ago) Sep 23
to santhav...@googlegroups.com
முழுமாயாகத் திருத்திய வடிவம் கீழ்க் காண்க:

வண்ண விருத்தம் முயற்சி – 6 (ராம்)

தனனா தனத்த தந்த தனனா தனத்த தந்த
     தனனா தனத்த தந்த ...... தனதான

திருப்புகழ்: (சுவாமிமலை) – ராகம்: காமஸ்)
கடிமா மலர்க்கு ளின்ப முளவேரி கக்கு நண்பு
     தருமா கடப்ப மைந்த ...... தொடைமாலை

அயனா ரெழுச்சி கொண்டு முடிகா ணலற்ற துன்ப

… மரியோ னுமுற்று நைந்த தொருநாளே

…. அடலே றுமத்த  னென்ற சிவனா ருவத்த லொன்றி

…. அவசா னமற்று நின்ற தவர்நாண

 

துயரோடு அழற்சி யின்றி உரமோ டரைத்த அன்பர்   

…. தொடரா தொழித்த நண்பில் முதலோனே

தொகமே பெருக்கி வந்த களிறே அளித்த கொந்து

…. சுகமே நிலைத்த இன்பம் அருள்வாயே

 

வயதே மிகுத்தர் சொந்த வுடையே துவைத்து மங்கு

…. மயலால் நடத்தல் நின்ற செயல்பேணி

வருதீ யெனப்பு கன்று வழியே வகுத்த தந்த

…. வடபா லிருக்கு மெங்கள் மதிசூடீ

 

பெயலா யருட்பொ ழிந்து மடவா ளிடத்த மர்ந்த

…. பிறையே தரித்து வந்த மலையீசா

….. பிறவா திருத்த லென்ற அணியே யளிக்க முந்து

…. பிரமா புரத்த மர்ந்த பெருமானே.


பதம் பிரித்து:

அயனார் எழுச்சி தன்னில் முடிகாணல் அற்ற துன்பம்

… அரியோனும் உற்று நைந்தது ஒருநாளே

… அடலேறும் அத்தன் என்ற சிவனார் உவத்தல் ஒன்றி

…. அவசானம் அற்று நின்றது அவர்நாண

 

துயரோடு அழற்சி யின்றி உரமோ டரைத்த அன்பர்   

…. தொடரா தொழித்த நண்பில் முதலோனே

… தொகமே பெருக்கி வந்த களிறே அளித்த கொந்து

…. சுகமே நிலைத்த இன்பம் அருள்வாயே

 

வயதே மிகுத்தர் சொந்த உடையே துவைத்து மங்கு

…. மயலால் நடத்தல் நின்ற செயல்பேணி

… வருதீ எனப் புகன்று வழியே வகுத்தது அந்த

…. வடபால் இருக்கும் எங்கள் மதிசூடீ

 

பெயலாய் அருள் பொழிந்து மடவாள் இடத்து அமர்ந்த

…. பிறையே தரித்து வந்த மலையீசா

…. பிறவாது இருத்தல் என்ற அணியே அளிக்க முந்து

…. பிரமாபுரத்து அமர்ந்த பெருமானே.



அயனா ரெழுச்சி தன்னில் முடிகா ணலற்ற துன்பம்

… அரியோ னுமுற்று நைந்த தொருநாளே:


(பிரமன் மிகுந்த எழுச்சியால் உன்னுடைய முடியைக் காண 

முடியாமல் அடைந்த துன்பம், மாயோனும் உந்து அடியைக் 

காணாது வருத்தம் அடைந்ததும் அன்றோர் நாளாம்),

 

அடலேறும் அத்தன்  என்ற சிவனார் உவத்தல் ஒன்றி

…. அவசானம் அற்று நின்றது அவர்நாண:


(வலிமை வாய்ந்த காளை மீது அமர்ந்த சிவனார் 

அடிமுடிவற்றர் என்று பிரமனும் மாயோனும் உணர்ந்து

நாணம் கொள்ள)

அவசானமற்று – முடிவில்லாத

 

துயரோடு அழற்சி யின்றி உரமோ டரைத்த அன்பர்   

…. தொடரா தொழித்த நண்பில் முதலோனே

... தொகமே பெருக்கி வந்த களிறே அளித்த கொந்து

…. சுகமே நிலைத்த இன்பம் அருள்வாயே


(சமண மதத்தைத் தழுவிய காரணத்தினால்) சிவனடியார் மூர்த்தி 

நாயனாருக்கு சந்தனம் குழைத்து இறைவனுக்குச் செய்யும் பணியைத்

தடுக்க, சந்தனக் கட்டைகளைத் தடை செய்ய, அடியார் தன் 

கைகளாலும் முட்டிகளாளும் சந்தனக் கல்லில் தேய்த்து ரத்தம் 

பெருகி நிற்க, சிவபிரான் அந்த அரசனுக்கு மரணம் வருத்திப்பின் 

யானை மாலை போட்டு, மூர்த்தி அடியாரை அரசணையில் அமர 

வைத்த மூர்த்தி நாயன்மார் கதை)

தொகம் – மதிப்பு., கொந்து – மலர் மாலை

 

வயதே மிகுத்தர் சொந்த உடையே துவைத்து மங்கு

…. மயலால் நடத்தல் நின்ற செயல்பேணி

... வருதீ எனப் புகன்று வழியே வகுத்தது அந்த

…. வடபால் இருக்கும் எங்கள் மதிசூடீ


(திருகுறிப்புத் தொண்டன் நாயன்மரின் கதை: வயது மிகுந்தவராகச் 

சிவபிரான். தொண்டரிடம் தனது ஒரே ஆடையைத் துவைத்துத் 

தருமாறு கூறி, அதை ஏற்ற அடியார் அதைச் செயலாற்ற முடியாது 

இயற்கை தடுத்ததனால் தன் உயிரை விட்டு விட விழைகையில், 

அவரைத் தடுத்து, பெருமான் தன்னுடன் ஏற்ற கதை)

மயல் – மதி மயக்கம்

வடபால் இருக்கும் – வடப்புறம் அமர்ந்து தெற்கு நோக்கி இருக்கும்

 

பெயலாய் அருள் பொழிந்து மடவாள் இடத்து அமர்ந்த

…. பிறையே தரித்து வந்த மலையீசா:


(பெருமழைபோல் அருளைப் பொழிந்து மங்கையை ஒரு பாகத்தில் 

அமர வைத்த பிறைசூடி வந்த மலைவாழ் ஈசன்)

மடவாள் – இளமையானவள், அழகிய பெண்

 

பிறவாது இருத்தல் என்ற அணியே அளிக்க முந்து

…. பிரமாபுரத்து அமர்ந்த பெருமானே


(நான் மீண்டும் பிறவாது இருத்தல் என்ற அணிகலனை எனக்குத் 

தர முன்வருவாயாக, சீகாழி நகரில் உள்ள சிவபிரானே)

பிரமாபுரம் – சீகாழி

 

ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

22/09/2025





Siva Siva

unread,
Sep 23, 2025, 3:55:44 PM (3 days ago) Sep 23
to santhav...@googlegroups.com
உங்கள் விடாமுயற்சி மெச்சத்தக்க ஒன்று.

துயரோடு அழற்சி   /

புணர்ச்சியோடு நோக்கின் சந்தம் சரியே.

வி. சுப்பிரமணியன்.

Ram Ramakrishnan

unread,
Sep 23, 2025, 10:35:03 PM (3 days ago) Sep 23
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. சிவசிவா.

பதம் பிரித்த வரியைக் copy paste செய்ததன் விளைவு. முதலில் இட்டது புணர்ச்சியோடு எழுதியது தான்


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Sep 24, 2025, at 01:25, Siva Siva <naya...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages