சித்திரைச் சதயத்தன்று திருநாவுக்கரசர் குருபூஜை. (இந்த ஆண்டு
30-4-2008).
அப்பரைப்பற்றிய அருமையான பதிகம்.
"குமிழ்போல் கொடுவினை மாய - நீர்க்குமிழியைப் போல, ஓதுபவரது கொடிய வினைகள் எல்லாம் உடனே அழிய" என்ற கருத்தில் எழுதினேன்.
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
குமிழ் , குமிழி இரண்டும் ஒன்றா?
குமிழ் என்பது knob குமிழி என்பது bubble
குமிழ் என்பது நீர்க்குமிழி என்னும் பொருளில் எங்கேனும்
பயன்படுத்தப்பட்டுள்ளதா?
இலந்தை
சித்திரைச்
சதயத்தன்று திருநாவுக்கரசர்
குருபூஜை.
(இந்த ஆண்டு
20-4-2009).
திருநாவுக்கரசர்
வணக்கம்
----------------------------------
1)
--- (அறுசீர்
விருத்தம் -
காய்
காய் தேமா -
அரையடி
வாய்பாடு)
---
உமையவளை
ஓர்கூறு வைத்த
..
உத்தமனே
நாவரையர் என்ற,
நமதுதமிழ்
நலிவின்றி வாழ,
..
நானிலத்தில்
சைவநெறி ஓங்கக்,
குமரிமுதல்
கயிலைவரை எங்கும்
..
குறைவின்றித்
திருத்தொண்டு செய்த,
தமக்குநிகர்
இல்லாத அன்பர்
..
தாளிணையை
நாம்வாழ்த்து வோமே.
2)
--- (அறுசீர்
விருத்தம் -
காய்
மா தேமா -
அரையடி
வாய்பாடு)
---
திலகவதி
யாரின் தம்பி
..
திருவதிகை
தன்னில் அன்று
மலைமகள்கோன்
தாள்வ ணங்கி
..
வலிநீங்கி,
நாடும்
உய்யத்
தலம்பலவும்
சென்று போற்றித்
..
தமிழ்பாடித்
தொண்டு செய்த
நலமிகுநா
வரசர் தம்மை
..
நாம்பணிந்து
போற்று வோமே.
3)
--- (நாலடித்
தரவுகொச்சகக் கலிப்பா )
---
திண்ணார்நெஞ்
சமணரொளி பழையாறைத்
திருக்கோயில்
கண்ணாரக்
கண்டென்றன் கையாரத்
தொழும்வரைநான்
உண்ணேன்என்
றுள்ளத்தில் உறுதிகொண்டு
நோன்பிருந்த
பண்ணார்செந்
தமிழ்பன்னும் நாவரசர்
பதம்போற்றி.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
சாவுக் கரசனைக் காலால் உதைத்தன்று தள்ளியமா
தேவுக் கிரசநன் கேய்ந்த தமிழாரஞ் செய்தளித்த
பாவுக் கரசரம் மூவருள் ஓர்வரன் பத்திமலி
நாவுக் கரசரின் தாள்பணி வாமிந்நன் னாளினிலே.
********************
> 2008/4/26 Siva Siva <nayanm...@gmail.com>
> --http://www.geocities.com/nayanmars
திருநாவுக்கரசர்
குருபூஜை -
2010 (May 7/8)
(சித்திரைச்
சதயம்)
----------------------------------------------------------
1)
-- (வஞ்சி
விருத்தம்)
--
இருள்நீங்க,
இருளால்
விளையும்
மருள்நீங்க,
மதிசூ
டிறைவன்
அருள்ஓங்க,
மறவேல்
மனமே
திருநாவுக்
கரசர் கழலே.
2)
-- (நேரிசை
வெண்பா)
--
வினைக்கடலில்
மூழ்க விரைகிறகல் நெஞ்சே
தினைத்தனையும்
தேவாரம் செப்பு -
கனக்கிற
கல்லும்
மிதந்து கரையடையும் நாவரசர்
சொல்லும்
அடியும் துணை.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
அப்பர்
குருபூசை -
சித்திரைச்
சதயம் -
2011-04-27 (America) / 28 (India)
---------------------------------
1)
மூண்டபேர்
அன்பினால் முக்கட் பெருமானைத்
தாண்டவம்
ஆடும் தலைவனைத் -
தாண்டகத்
தண்டமிழால்
போற்றிய நாவரசர் தாளிணை
உண்டென்றும்
என்னுள்ளத் துள்.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
திருநாவுக்கரசர் குருபூஜை - 2010 (May 7/8)
அப்பர் குருபூசை - சித்திரைச் சதயம் - 2011-04-27 (America) / 28 (India)
---------------------------------
1)
மூண்டபேர் அன்பினால் முக்கட் பெருமானைத்
தாண்டவம் ஆடும் தலைவனைத் - தாண்டகத்
தண்டமிழால் போற்றிய நாவரசர் தாளிணை
உண்டென்றும் என்னுள்ளத் துள்.
2)
கல்லினைக்
கட்டிக் கடலினுள் ஆழ்த்தினும்
எல்லையில்
அன்போ டெழுத்தஞ்சைச் -
சொல்லிக்கார்க்
கண்டன்
அருளால் கரையேறி னார்கழல்
உண்டென்றும்
என்னுள்ளத் துள்.
3)
நறுந்தொடையாய்
நாடொறும் நம்பெரு
மாற்குக்
குறுந்தொகைநாம்
சூட்டிநம் குற்றம் -
அறுந்தினி
மண்டலத்தில்
வாரா வழிதந்த அப்பரடி
உண்டென்றும்
என்னுள்ளத் துள்.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/
2011/4/23 Siva Siva <naya...@gmail.com>அப்பர் குருபூசை - சித்திரைச் சதயம் - 2011-04-27 (America) / 28 (India)
---------------------------------
1)
மூண்டபேர் அன்பினால் முக்கட் பெருமானைத்
தாண்டவம் ஆடும் தலைவனைத் - தாண்டகத்
தண்டமிழால் போற்றிய நாவரசர் தாளிணை
உண்டென்றும் என்னுள்ளத் துள்.
2)
கல்லினைக் கட்டிக் கடலினுள் ஆழ்த்தினும்
எல்லையில் அன்போ டெழுத்தஞ்சைச் - சொல்லிக்கார்க்
கண்டன் அருளால் கரையேறி னார்கழல்3)
உண்டென்றும் என்னுள்ளத் துள்.
நறுந்தொடையாய் நாடொறும் நம்பெரு மாற்குக்
குறுந்தொகைநாம் சூட்டிநம் குற்றம் - அறுந்தினி
மண்டலத்தில் வாரா வழிதந்த அப்பரடி
உண்டென்றும் என்னுள்ளத் துள்.
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
2011/4/23 Siva Siva <naya...@gmail.com>2011/4/23 Siva Siva <naya...@gmail.com>அப்பர் குருபூசை - சித்திரைச் சதயம் - 2011-04-27 (America) / 28 (India)
---------------------------------
1)
மூண்டபேர் அன்பினால் முக்கட் பெருமானைத்
தாண்டவம் ஆடும் தலைவனைத் - தாண்டகத்
தண்டமிழால் போற்றிய நாவரசர் தாளிணை
உண்டென்றும் என்னுள்ளத் துள்.
2)
கல்லினைக் கட்டிக் கடலினுள் ஆழ்த்தினும்
எல்லையில் அன்போ டெழுத்தஞ்சைச் - சொல்லிக்கார்க்
கண்டன் அருளால் கரையேறி னார்கழல்3)
உண்டென்றும் என்னுள்ளத் துள்.
நறுந்தொடையாய் நாடொறும் நம்பெரு மாற்குக்
குறுந்தொகைநாம் சூட்டிநம் குற்றம் - அறுந்தினி
மண்டலத்தில் வாரா வழிதந்த அப்பரடி
உண்டென்றும் என்னுள்ளத் துள்.
4)
அப்பூதி மைந்தனுக் காருயிர் ஈந்தவர்
இப்பூமி உய்யவந்த எம்தலைவர் - எப்போதும்
தொண்டுபுரி நாவரசர் தூமலர்ப் பாதங்கள்
உண்டென்றும் என்னுள்ளத் துள்.
எப்போது மப்புமதிக் கீற்றுமணி போதுமணி
...இறையோன் மாண்பைத்
தப்பாது செப்பியவன் அருள்பெற்றக் கருணையலைத்
...தயையான் மாசில்
அப்பூதி பெற்றவிளம் பாலகனை உயிர்ப்பித்த
...அப்பர் சீரை
இப்பாட்டி லிட்டசிவ சிவாக்கவனல் லாசிகளுண்
...டென்று மன்னோ.
********************
On Apr 25, 4:11 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 2011/4/23 Siva Siva <nayanm...@gmail.com>
>
>
>
>
>
> > 2011/4/23 Siva Siva <nayanm...@gmail.com>
>
> >> அப்பர் குருபூசை - சித்திரைச் சதயம் - 2011-04-27 (America) / 28 (India)
> >> ---------------------------------
> >> 1)
> >> மூண்டபேர் அன்பினால் முக்கட் பெருமானைத்
> >> தாண்டவம் ஆடும் தலைவனைத் - தாண்டகத்
> >> தண்டமிழால் போற்றிய நாவரசர் தாளிணை
> >> உண்டென்றும் என்னுள்ளத் துள்.
>
> > 2)
> > கல்லினைக் கட்டிக் கடலினுள் ஆழ்த்தினும்
> > எல்லையில் அன்போ டெழுத்தஞ்சைச் - சொல்லிக்கார்க்
> > கண்டன் அருளால் கரையேறி னார்கழல்
>
> > உண்டென்றும் என்னுள்ளத் துள்.
>
> > 3)
> > நறுந்தொடையாய் நாடொறும் நம்பெரு மாற்குக்
> > குறுந்தொகைநாம் சூட்டிநம் குற்றம் - அறுந்தினி
> > மண்டலத்தில் வாரா வழிதந்த அப்பரடி
>
> > உண்டென்றும் என்னுள்ளத் துள்.
>
> 4)
> அப்பூதி மைந்தனுக் காருயிர் ஈந்தவர்
> இப்பூமி உய்யவந்த எம்தலைவர் - எப்போதும்
> தொண்டுபுரி நாவரசர் தூமலர்ப் பாதங்கள்
> உண்டென்றும் என்னுள்ளத் துள்.
>
> அன்புடன்,
>
> > வி. சுப்பிரமணியன்
>
> --http://nayanmars.netne.net/
அப்பர்
குருபூசை -
சித்திரைச்
சதயம் - 2011-04-27
(America) / 28 (India)
---------------------------------
1)
மூண்டபேர்
அன்பினால் முக்கட் பெருமானைத்
தாண்டவம்
ஆடும் தலைவனைத் -
தாண்டகத்
தண்டமிழால்
போற்றிய நாவரசர் தாளிணை
உண்டென்றும்
என்னுள்ளத் துள்.
தண்டமிழ் -
தண் தமிழ்;
2)
கல்லினைக்
கட்டிக் கடலினுள் ஆழ்த்தினும்
எல்லையில்
அன்போ டெழுத்தஞ்சைச் -
சொல்லிக்கார்க்
கண்டன்
அருளால் கரையேறி னார்கழல்
உண்டென்றும்
என்னுள்ளத் துள்.
கார்க்கண்டன்
- நீலகண்டன்;
3)
நறுந்தொடையாய்
நாடொறும் நம்பெரு
மாற்குக்
குறுந்தொகைநாம்
சூட்டிநம் குற்றம் -
அறுந்தினி
மண்டலத்தில்
வாரா வழிதந்த அப்பரடி
உண்டென்றும்
என்னுள்ளத் துள்.
மண்டலம் -
பலவகைப் புவனங்கள்;
('மண் தலம் =
பூமி'
என்றும்
கொள்ளலாம்);
மண்டலத்தில்
வாரா வழி -
பிறவித்தொடரை
அறுக்கும் வழி;
(அப்பர்
தேவாரம் - 6.81.1
-
கண்டலஞ்சேர்
நெற்றியிளங் காளை கண்டாய்
...
கல்மதில்சூழ்
கந்தமா தனத்தான் கண்டாய்
மண்டலஞ்சேர்
மயக்கறுக்கும் மருந்து கண்டாய்
... )
4)
அப்பூதி
மைந்தனுக் காருயிர் ஈந்தவர்
இப்பூமி
உய்யவந்த எம்தலைவர் -
எப்போதும்
தொண்டுபுரி
நாவரசர் தூமலர்ப் பாதங்கள்
உண்டென்றும்
என்னுள்ளத் துள்.
அப்பூதி
- 63 நாயன்மார்களுள்
ஒருவர்;
5)
காலையும்
மாலையும் கண்ணுதலான் சீர்பரவி
மாலை
அகற்றிடும் வண்டமிழ் -
மாலைகள்
விண்டதிரு
நாவுக் கரசரின் மென்மலர்த்தாள்
உண்டென்றும்
என்னுள்ளத் துள்.
மாலை
- 1) சாயங்காலம்;
2) அறியாமையை;
3) மலர்களால்
தொடுத்த மாலை;
வண்டமிழ்
- வண்
தமிழ் - வளமான
தமிழ் - தேவாரம்;
விண்ட -
சொன்ன;
(விள்ளுதல் -
சொல்லுதல்);
6)
வஞ்சத்தை
நெஞ்சத்தில் வைத்தவர்கள்
அன்புடைமை
கிஞ்சித்தும்
இல்லாத கேடரளி -
நஞ்சத்தை
உண்டு
சிவனருளால் உய்ந்தவப்பர்
தாளிணை
உண்டென்றும்
என்னுள்ளத் துள்.
அளி
நஞ்சத்தை - அளித்த
விஷத்தை; (அப்பர்க்கு
உணவில் விஷத்தைக் கலந்து
உண்பித்ததைச் சுட்டியது);
உய்ந்தவப்பர்
- உய்ந்த
அப்பர்;
7)
நெய்யாடும்
நின்மலனார் நீலகண்டர்
நீண்மலைமேல்
மையார்கண்
மாதொடுறை கோலத்தை -
ஐயாற்றில்
கண்டு
களித்ததிரு நாவுக்
கரசர்தாள்
உண்டென்றும்
என்னுள்ளத் துள்.
நெய்
ஆடுதல் - நெய்யால்
அபிஷேகம் செய்யப்பெறுதல்;
நீண்மலை
- நீள்
மலை - புகழால்
உயர்ந்த திருக்கயிலை மலை;
8)
வண்டுசேர்
மாமயி லாடுதுறை வள்ளலை
அண்டர்தம்
நாயகனை ஆலாலம் -
உண்டுதிகழ்
கண்டனைக்
காதலொடு கைதொழுத அப்பரடி
உண்டென்றும்
என்னுள்ளத் துள்.
வண்டு
சேர் மா மயிலாடுதுறை -
வண்டுகள் சேரும்
பொழில்சூழ்ந்த அழகிய மயிலாடுதுறை;
(அப்பர் தேவாரம்
- 5.39.3 -
"அண்டர்
வாழ்வும் அமரர் இருக்கையும்
கண்டு
வீற்றிருக் கும்கருத்
தொன்றிலோம்
வண்டு
சேர்மயி லாடு துறையரன்
தொண்டர்
பாதங்கள் சூடித் துதையிலே.")
9)
பண்டை
வினைகள் பறைய,
எமபடர்கள்
அண்டும்
அவலநிலை அற்றுய்யத் -
தொண்டர்க்குத்
தண்டமிழ்த்தேன்
தந்தஉழ வாரப் படையாளி
உண்டென்றும்
என்னுள்ளத் துள்.
பண்டைவினை
- பழவினை;
பறைதல்
- அழிதல்;
எமபடர்
- எமதூதர்;
தண்டமிழ்த்தேன்
- தண்
தமிழ்த் தேன் --
குளிர்ந்த தேன்
போன்ற தேவாரம்;
உழவாரப்
படையாளி - உழவாரப்
படையால் திருக்கோயில்களைத்
தூய்மை செய்து தொண்டுபுரிந்த
திருநாவுக்கரசர்;
(உழவாரப்படை -
உழவாரம் -
புல் செதுக்கும்
கருவி);
10)
உலகம்
இருள்நீங்கி உய்யவருஞ்
சைவம்
நிலவத்
தமிழும் நிலவ -
நிலவணிவான்
தொண்டிற்
சிறந்த திலகவதி தம்பியின்தாள்
உண்டென்றும்
என்னுள்ளத் துள்.
உய்யவருஞ்
சைவம் - உய்ய
அரும் சைவம்;
===================================
உண்டென்றும் என்னுள்ளத் துள்ளென்ற ஈற்றடியில்
கண்டோம் சிவசிவனார் காதலை - பண்(டு)உழ
வாரப் படையார் வளர்த்ததமிழ் சைவத்தின்
சாரத்தைத் தந்தார் பிழிந்து.
.. அனந்த்
சுப்பிர'மணி'க்கு எழுதிய பாட்டாயிற்றே!
On Apr 28, 6:32 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> மணியான பாடல்!
>
> 2011/4/27 veNbA virumbi <mvmsp1...@gmail.com>
(நேரிசை வெண்பா)
உண்டென்று மெய்யைநனி ஓம்பலிலன் றோபேரின்
புண்டென்று சொல்வார் உயர்மெய்யைக் - கண்டென்று
மாறுவ ரோவெனினா மன்னவன் காட்டியசீர்
ஆறுதொடர்ந் தேகுவரேல் ஆய்ந்து.
*****
பதம் பிரித்து:
உண்டு, என்றும் மெய்யை நனி ஓம்பலில் அன்றோ பேரின்பு
உண்டு என்று சொல்வார், உயர் மெய்யைக் கண்டு
என்று மாறுவரோ எனில், நா மன்னவன் காட்டிய
சீர் ஆறு தொடர்ந்து ஏகுவரேல் ஆய்ந்து.
ஆறு=வழி
**********
**********
> 2011/4/25 Siva Siva <nayanm...@gmail.com>
>
>
>
> --http://nayanmars.netne.net/
2012-04-15
திருநாவுக்கரசர்
குருபூஜை -
சித்திரைச்
சதயம் -
(2012-04-16)
---------------------------------------------
1)
--- (நாலடித்
தரவு கொச்சகக் கலிப்பா)
---
திருநீற்றைப்
புனையடியார் தூரத்தே
தென்படினும்
ஒருதீட்டென்
றலப்பமணர் உளம்கலங்க
அவரடைத்த
பெருநீற்ற
றைக்குள்ளும் பிறைசூடி
கழல்பாடி
உருமாற்றம்
இன்றியுய்ந்தார் உரைதமிழ்கள்
உறுதுணையே.
அலப்புதல்
-
பிதற்றுதல்;
பிறைசூடி
கழல்பாடி -
பிறைச்சந்திரனைச்
சூடும் ஈசன் திருவடியைப்
பாடி;
உரு
மாற்றம் இன்றி உய்ந்தார் -
ஏழு
நாள்களுக்குமுன் நீற்றறையில்
இட்டவாறே உடலில் எவ்வித
மாறுபாடும் (ஊனமும்)
இன்றி
உய்ந்தவர் -
திருநாவுக்கரசர்;
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
2)
--- (நாலடித்
தரவு கொச்சகக் கலிப்பா)
---
பதிதோறும்
தொழுதங்குப் பைஞ்ஞீலி
செல்லுங்கால்
மதியாறு
புனைகின்ற மணிகண்டன்
வழிநின்று
பொதிசோறு
தந்தருளப் பெற்றவர்சொல்
புகழ்மாலை
நிதிநாடி
நிதம்பாடில் வினையோடி
நிறைவாமே.
தலங்கள்
தோறும் ஈசனைப் போற்றி,
(வெயிலில்
பசியோடு)
திருநாவுக்கரசர்
அங்குத் திருப்பைஞ்ஞீலிக்குத்
போகும்பொழுது,
நிலவையும்
கங்கையையும் சூடும் நீலகண்டன்
அவ்வழியில் (சோலையும்
குளமும் அமைத்துக்கொண்டு)
காத்திருந்து
அவர்க்குப் பொதிசோறு தந்து
பசித்தீர்த்தருளினான்.
அந்நாயனார்
அருளிய தேவாரம் என்ற நிதியை
நாடித் தினமும் பாடினால்,
நம்
வினைகளெல்லாம் நீங்கி,
நாம்
நிறைவை அடையலாம்.
(
பெரிய
புராணம் -
திருநாவுக்கரசர்
புராணம் -
305
காவுங்
குளமும் முன்சமைத்துக் காட்டி
வழிபோங் கருத்தினால்
மேவுந்
திருநீற் றந்தணராய் விரும்பும்
பொதிசோ றுங்கொண்டு
நாவின்
தனிமன் னவர்க்கெதிரே நண்ணி
இருந்தார் விண்ணின்மேல்
தாவும்
புள்ளும் மண்கிழிக்குந்
தனிஏ னமுங்காண் பரியவர்தாம்.)
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
2012-04-15
திருநாவுக்கரசர் குருபூஜை - சித்திரைச் சதயம் - (2012-04-16)
---------------------------------------------
1) --- (நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) ---
3)
--- (அறுசீர்
விருத்தம் -
'மா மா
காய்'
அரையடி
வாய்பாடு)
---
தங்கள்
சமயம் தனைநீங்கிச்
..
சைவம்
தழைக்கச் சார்ந்தவர்க்குப்
பொங்கு
வஞ்ச நெஞ்சமணர்
..
புகட்டு
நச்சுச் சோறதனைப்
பங்கம்
இல்லா அமுதாக்கிப்
..
பாலித்
தானைப் பதியெங்கும்
துங்கத்
தமிழால் துதியப்பர்
..
துணைம
லர்த்தாள் துணைநமக்கே.
துணை
- இரண்டு;
காப்பு;
(திருநாவுக்கரசர்
தேவாரம் -
4.70.5
துஞ்சிருள்
காலை மாலை தொடர்ச்சியை மறந்தி
ராதே
அஞ்செழுத்
தோதின் நாளும் அரனடிக் கன்ப
தாகும்
வஞ்சனைப்
பாற்சோ றாக்கி வழக்கிலா அமணர்
தந்த
நஞ்சமு
தாக்கு வித்தார் நனிபள்ளி
அடிக ளாரே.)
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
2) --- (நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) ---
2014-04-19
(சித்திரைச்
சதயம் -
2014-04-24 North America)
திருநாவுக்கரசர்
குருபூஜை
-------------------------
"தனந்தன
தனந்தன தனந்தன தனந்தன தனந்தன
தனந்தன தனம்"
என்ற
சந்தக்குழிப்பு அமைந்த
வண்ணச்சந்த விருத்தம்.
(பதஞ்சலி
முனிவர் அருளிய நடராஜ ஸ்தோத்திரம்
-
सदञ्चित
मुदञ्चित निकुञ्चित पदं
झलझलञ्चलित मञ्जु कटकम्);
"ஸத₃ஞ்சித
முத₃ஞ்சித நிகுஞ்சித பத₃ம்ʼ
ஜ₂லஜ₂லஞ்சலித
மஞ்ஜு கடகம்
பதஞ்ஜலி த்₃ருʼக₃ஞ்ஜன மனஞ்ஜன மசஞ்சலபத₃ம்ʼ ஜனன ப₄ஞ்ஜன கரம் |
கத₃ம்ப₃ருசிமம்ப₃ரவஸம்ʼ பரமமம்பு₃த₃ கத₃ம்ப₃ கவிட₃ம்ப₃க கக₃லம்
சித₃ம்பு₃தி₄
மணிம்ʼ
பு₃த₄
ஹ்ருʼத₃ம்பு₃ஜ
ரவிம்ʼ
பர
சித₃ம்ப₃ர நடம்ʼ
ஹ்ருʼதி₃
ப₄ஜ"
1)
அணங்கவ
ரிரந்திட இரங்கிய அரன்தரு
கொடும்பிணி அகன்றிட அரும்
மணங்கம
ழுமின்தமி ழொடும்புய மடிந்தவ
ரெலும்பணி பவன்தன பதம்
வணங்கிய
வுடன்துய ரொடுஞ்செடி பவங்கெட
வரம்பெறு மருந்தவ ரமண்
கணங்கெட
நிலம்பெரு நலம்பெற அரும்பணி
புரிந்தவ ரிருங்கழ
றொழும்.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
3) --- (அறுசீர் விருத்தம் - 'மா மா காய்' அரையடி வாய்பாடு) ---
தங்கள் சமயம் தனைநீங்கிச்
.. சைவம் தழைக்கச் சார்ந்தவர்க்குப்
2014-04-19 (சித்திரைச் சதயம் - 2014-04-24 North America)
திருநாவுக்கரசர் குருபூஜை
-------------------------
"தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனம்" என்ற சந்தக்குழிப்பு அமைந்த வண்ணச்சந்த விருத்தம்.
(பதஞ்சலி முனிவர் அருளிய நடராஜ ஸ்தோத்திரம் -सदञ्चित मुदञ्चित निकुञ्चित पदं झलझलञ्चलित मञ्जु कटकम्);
"ஸத₃ஞ்சித முத₃ஞ்சித நிகுஞ்சித பத₃ம்ʼ ஜ₂லஜ₂லஞ்சலித மஞ்ஜு கடகம்
.....
1)
அணங்கவ ரிரந்திட இரங்கிய அரன்தரு கொடும்பிணி அகன்றிட அரும்
மணங்கம ழுமின்தமி ழொடும்புய மடிந்தவ ரெலும்பணி பவன்தன பதம்
வணங்கிய வுடன்துய ரொடுஞ்செடி பவங்கெட வரம்பெறு மருந்தவ ரமண்
கணங்கெட நிலம்பெரு நலம்பெற அரும்பணி புரிந்தவ ரிருங்கழ றொழும்.
பதம்
பிரித்து:
அணங்கு
அவர் இரந்திட இரங்கிய அரன்
தரு கொடும் பிணி அகன்றிட,
அரும்
மணம்
கமழும் இன்தமிழொடும்,
புய[ம்]
மடிந்தவர்
எலும்பு அணிபவன்தன பதம்
வணங்கியவுடன்
துயரொடும் செடி பவம் கெட வரம்
பெறும் அரும் தவர்;
அமண்
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
"தனந்தன
தனந்தன தனந்தன தனந்தன
தனந்தன
தனந்தன ......
தனதான"
("தலங்களில்
வருங்கன இலங்கொடு மடந்தையர்"
என்ற
திருப்புகழ் - for the thalam பெருங்குடி.)
2014-04-19
(சித்திரைச்
சதயம் -
2014-04-24 North America)
திருநாவுக்கரசர்
குருபூஜை
-------------------------
"தனந்தன
தனந்தன தனந்தன தனந்தன தனந்தன
தனந்தன தனம்"
என்ற
சந்தக்குழிப்பு அமைந்த
வண்ணச்சந்த விருத்தம்.
(பதஞ்சலி
முனிவர் அருளிய நடராஜ ஸ்தோத்திரம்
-
सदञ्चित मुदञ्चित निकुञ्चित पदं झलझलञ्चलित मञ्जु कटकम्
);
"ஸத₃ஞ்சித
முத₃ஞ்சித நிகுஞ்சித பத₃ம்ʼ
ஜ₂லஜ₂லஞ்சலித
மஞ்ஜு கடகம்)
2)
விலங்கலி
லமர்ந்தவ
னலந்தரு மிருங்கழ
னிதந்தொழு தெழுந்திடு
முளம்
இலங்கிய
வரன்றிய
சமண்கல
ரிடும்விட
மருந்தென உணும்படி
வரும்
கலங்கிய
வருந்திய பெருங்கரி கரங்கொடு
பணிந்தடி வணங்கிவி லகும்
கலுங்கல
மெனும்புக ழுறுந்தமி டரும்பெரி
யரின்பத நினைந்திடு
தினம்.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
2014-04-19 (சித்திரைச் சதயம் - 2014-04-24 North America)
திருநாவுக்கரசர் குருபூஜை
-------------------------
"தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனம்" என்ற சந்தக்குழிப்பு அமைந்த வண்ணச்சந்த விருத்தம்.
1)
2014-04-19 (சித்திரைச் சதயம் - 2014-04-24 North America)
திருநாவுக்கரசர் குருபூஜை
-------------------------
"தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனம்" என்ற சந்தக்குழிப்பு அமைந்த வண்ணச்சந்த விருத்தம்
.
(பதஞ்சலி முனிவர் அருளிய நடராஜ ஸ்தோத்திரம் -
सदञ्चित मुदञ्चित निकुञ्चित पदं झलझलञ्चलित मञ्जु कटकम्);
"ஸத₃ஞ்சித முத₃ஞ்சித நிகுஞ்சித பத₃ம்ʼ ஜ₂லஜ₂லஞ்சலித மஞ்ஜு கடகம்)
2)
விலங்கலி லமர்ந்தவ னலந்தரு மிருங்கழ னிதந்தொழு தெழுந்திடு முளம்
இலங்கிய வரன்றிய சமண்கல ரிடும்விட மருந்தென உணும்படி வரும்
கலங்கிய வருந்திய பெருங்கரி கரங்கொடு பணிந்தடி வணங்கிவி லகும்
கலுங்கல மெனும்புக ழுறுந்தமி டரும்பெரி யரின்பத நினைந்திடு தினம்.
பதம்
பிரித்து:
விலங்கலில்
அமர்ந்தவன் நலம்
தரும் இரும்
கழல்
நிதம்
தொழுது எழுந்திடும் உளம்
இலங்கியவர்;
அன்றிய
சமண் கலர்
இடும்
விட[ம்]
மருந்து
என
உணும்படி
வரும்;
கலங்கி
அவர் உந்திய பெரும் கரி கரங்கொடு
பணிந்து அடி வணங்கி விலகும்;
கலும்
கலம் எனும் புகழ் உறும் தமிழ்
தரும் பெரியரின் பத[ம்]
நினைந்திடு
தினம்.
விலங்கல்
-
மலை;
இங்கே
கயிலைமலை;
இருமை
-
பெருமை;
மேன்மை;
அன்றுதல்
-
பகைத்தல்;
கோபித்தல்;
கலர்
-
கீழோர்;
மருந்து
-
அமுதம்;
கலங்குதல்
-
மனம்
குழம்புதல்;
மயங்குதல்;
அஞ்சுதல்;
உந்துதல்
-
அனுப்புதல்;
செலுத்துதல்;
கலும்
-
கல்லும்
-
இடைக்குறையாக
வந்தது;
கலம்
-
மரக்கலம்;
படகு;
தமிடரும்
-
தமிழ்
+
தரும்;
(ழ்+த
-
புணர்ச்சியில்
டகரமாகத் திரியும்);
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்2014-04-21 21:32 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:
2014-04-19 (சித்திரைச் சதயம் - 2014-04-24 North America)
திருநாவுக்கரசர் குருபூஜை
-------------------------
"தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனம்" என்ற சந்தக்குழிப்பு அமைந்த வண்ணச்சந்த விருத்தம்.
1)
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
-
http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/
2. இத்துடன் notepad++ text editor என்னும் ஆற்றல் மிக்க மென்பொருளைப் பயன்படுத்தினேன்.
இந்த இலவச மென்பொருளை இங்குத் தரவிறக்கலாம்:
3. இப்போது நம் அகராதியில் இருந்து ’ணகரமெய்’ வரும் சொற்களைப் பிரித்துப் பயன்படுத்துவதாகக் கொள்வோம்.2015-05-07
திருநாவுக்கரசர் குருபூஜை - சித்திரைச் சதயம் - 2015-05-12
---------------------------------
1) ------ நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா -----
மழுவாளி மலரடியில் வண்டமிழ்கள் பலசாத்தித்
தொழுவாரம் மலிநெஞ்சர் தூநீற்று மேனியராய்
உழவாரப் படையேந்தி ஓயாமற் பணிசெய்து
வழுவாரா வழிகாட்டு வாகீசர் தாள்போற்றி.
அன்பொடு,
வி. சுப்பிரமணியன்
2014-04-19 (சித்திரைச் சதயம் - 2014-04-24 North America)
திருநாவுக்கரசர் குருபூஜை
-------------------------
"தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனம்" என்ற சந்தக்குழிப்பு அமைந்த வண்ணச்சந்த விருத்தம்.
(பதஞ்சலி முனிவர் அருளிய நடராஜ ஸ்தோத்திரம் -
सदञ्चित मुदञ्चित निकुञ्चित पदं झलझलञ्चलित मञ्जु कटकम्);
"ஸத₃ஞ்சித முத₃ஞ்சித நிகுஞ்சித பத₃ம்ʼ ஜ₂லஜ₂லஞ்சலித மஞ்ஜு கடகம்)
2)
விலங்கலி லமர்ந்தவ னலந்தரு மிருங்கழ னிதந்தொழு தெழுந்திடு முளம்
இலங்கிய வரன்றிய சமண்கல ரிடும்விட மருந்தென உணும்படி வரும்
கலங்கிய வருந்திய பெருங்கரி கரங்கொடு பணிந்தடி வணங்கிவி லகும்
கலுங்கல மெனும்புக ழுறுந்தமி டரும்பெரி யரின்பத நினைந்திடு தினம்.
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
2015-05-10
திருநாவுக்கரசர் குருபூஜை - சித்திரைச் சதயம் - 2015-05-12
---------------------------------
2) ------ அறுசீர் விருத்தம் - "மா மா காய்" - அரையடி வாய்பாடு -----
பண்ணார் தமிழால் பரமனையே .. பாடிப் பணிந்தார் அரன்பாதம்
நண்ணாச் சமணர் ஒளித்திட்ட .. நம்பன் தளியைக் கண்டுதொழா(து)
உண்ணேன் என்று பழையாறை .. ஊரில் தவம்செய் ததைமீட்டு
மண்ணோர் போற்றத் தந்தருள்செய் .. வாக்கின் மன்னர் பதம்போற்றி.
பதம் பிரித்து:
பண் ஆர் தமிழால் பரமனையே பாடிப் பணிந்தார்; அரன் பாதம் நண்ணாச் சமணர் ஒளித்திட்ட நம்பன் தளியைக் கண்டுதொழா(து) உண்ணேன் என்று பழையாறை ஊரில் தவம்செய்து அதை மீட்டு, மீட்டும் மண்ணோர் போற்றத் தந்து அருள்செய் வாக்கின் மன்னர் பதம் போற்றி.
(திருநாவுக்கரசர் தேவாரம் - 5.58.1
தலையெ லாம்பறிக் கும்சமண் கையருள்
நிலையி னால்மறைத் தால்மறைக் கொண்ணுமே
அலையி னார்பொழில் ஆறை வடதளி
நிலையி னானடி யேநினைந் துய்ம்மினே.)
அன்பொடு,
வி. சுப்பிரமணியன்
2015-05-07
திருநாவுக்கரசர் குருபூஜை - சித்திரைச் சதயம் - 2015-05-12
---------------------------------
1) ------ நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா -----
மழுவாளி மலரடியில் வண்டமிழ்கள் பலசாத்தித்
தொழுவாரம் மலிநெஞ்சர் தூநீற்று மேனியராய்
உழவாரப் படையேந்தி ஓயாமற் பணிசெய்து
வழுவாரா வழிகாட்டு வாகீசர் தாள்போற்றி.
2015-05-10
திருநாவுக்கரசர் குருபூஜை - சித்திரைச் சதயம் - 2015-05-12
---------------------------------
2) ------ அறுசீர் விருத்தம் - "மா மா காய்" - அரையடி வாய்பாடு -----
பண்ணார் தமிழால் பரமனையே .. பாடிப் பணிந்தார் அரன்பாதம்
நண்ணாச் சமணர் ஒளித்திட்ட .. நம்பன் தளியைக் கண்டுதொழா(து)
உண்ணேன் என்று பழையாறை .. ஊரில் தவம்செய் ததைமீட்டு
மண்ணோர் போற்றத் தந்தருள்செய் .. வாக்கின் மன்னர் பதம்போற்றி.
பதம் பிரித்து:
பண் ஆர் தமிழால் பரமனையே பாடிப் பணிந்தார்; அரன் பாதம் நண்ணாச் சமணர் ஒளித்திட்ட நம்பன் தளியைக் கண்டுதொழா(து) உண்ணேன் என்று பழையாறை ஊரில் தவம்செய்து அதை மீட்டு, மீட்டும் மண்ணோர் போற்றத் தந்து அருள்செய் வாக்கின் மன்னர் பதம் போற்றி.
(திருநாவுக்கரசர் தேவாரம் - 5.58.1
தலையெ லாம்பறிக் கும்சமண் கையருள்
நிலையி னால்மறைத் தால்மறைக் கொண்ணுமே
அலையி னார்பொழில் ஆறை வடதளி
நிலையி னானடி யேநினைந் துய்ம்மினே.)
அன்பொடு,
வி. சுப்பிரமணியன்
2016-04-27
திருநாவுக்கரசர் குருபூஜை - (சித்திரைச் சதயம் - 2016-05-01 USA / 2016-05-02 India)
-------------------------------
1)
தான தனதன தான தனதன
தான தனதன .. தனதான
(பாதி மதிநதி - திருப்புகழ் - சுவாமிமலை)
ஆனை இடறிட ஓடி வருபொழு
.. தீசன் அடிதொழு .. தருளாலே
ஊனம் இலரென ஆகி அமணெனும்
.. ஊறு தனையொழி .. திருநாவர்
வானம் அடியவர் ஏறு வழியென
.. வார மலிதமிழ் .. உரைநாவர்
ஞான வடிவவர் பாத மலர்களை
.. நாளு நினைவது .. நலமாமே.
அன்பொடு,
வி. சுப்பிரமணியன்
2015-05-10
திருநாவுக்கரசர் குருபூஜை - சித்திரைச் சதயம் - 2015-05-12
---------------------------------
2)
2)
2016-04-29
திருநாவுக்கரசர் குருபூஜை - (சித்திரைச் சதயம் - 2016-05-01 USA / 2016-05-02 India)
-------------------------------
தாத்த தனதன தாத்த தனதன
தாத்த தனதன .. தனதான
(பெரும்பாலும் இவ்வமைப்பை ஒத்த திருப்புகழ் -
பாட்டி லுருகிலை கேட்டு முருகிலை - திருப்புகழ் - தீர்த்தமலை)
மூர்க்க அமணர்கள் ஆட்டம் முடிவுற
.. மூழ்த்த வரிகலை .. ஒருநாவாய்
ஆக்க வலவனை வாழ்த்தி உயவல
.. ஆத்தர் பணிவதன் .. உருவான
வாக்கின் அரையரின் வார்த்தை இருவினை
.. மாற்று வழியென .. அறிவோமே
காக்கும் அரனெரி நாட்ட நுதலிறை
.. காட்டும் அவர்மொழி .. உரைநாவே.
அன்பொடு,
வி. சுப்பிரமணியன்
2016-04-27
திருநாவுக்கரசர் குருபூஜை - (சித்திரைச் சதயம் - 2016-05-01 USA / 2016-05-02 India)
-------------------------------
1)
தான தனதன தான தனதன
தான தனதன .. தனதான
(பாதி மதிநதி - திருப்புகழ் - சுவாமிமலை)
ஆனை இடறிட ஓடி வருபொழு
.. தீசன் அடிதொழு .. தருளாலே
ஊனம் இலரென ஆகி அமணெனும்
.. ஊறு தனையொழி .. திருநாவர்
வானம் அடியவர் ஏறு வழியென
.. வார மலிதமிழ் .. உரைநாவர்
ஞான வடிவவர் பாத மலர்களை
.. நாளு நினைவது .. நலமாமே.
அன்பொடு,
வி. சுப்பிரமணியன்
2)
2016-04-29
திருநாவுக்கரசர் குருபூஜை - (சித்திரைச் சதயம் - 2016-05-01 USA / 2016-05-02 India)
-------------------------------
தாத்த தனதன தாத்த தனதன
தாத்த தனதன .. தனதான
(பெரும்பாலும் இவ்வமைப்பை ஒத்த திருப்புகழ் -
பாட்டி லுருகிலை கேட்டு முருகிலை - திருப்புகழ் - தீர்த்தமலை)
மூர்க்க அமணர்கள் ஆட்டம் முடிவுற
.. மூழ்த்த வரிகலை .. ஒருநாவாய்
ஆக்க வலவனை வாழ்த்தி உயவல
.. ஆத்தர் பணிவதன் .. உருவான
வாக்கின் அரையரின் வார்த்தை இருவினை
.. மாற்று வழியென .. அறிவோமே
காக்கும் அரனெரி நாட்ட நுதலிறை
.. காட்டும் அவர்மொழி .. உரைநாவே.
மூர்க்க அமணர்கள் ஆட்டம் முடிவுற மூழ்த்த வரிகலை - மூர்க்கர்களான சமணர்களுடைய அதிகாரம் முடிவடையும்படி, அவர்கள் திருநாவுக்கரசரைக் கொல்லவேண்டிக் கடலில் ஆழ்த்துவதற்காகக் கட்டிய கல்லையே; (மூர்க்கம் - கடுஞ்சினம்; மூடத்தனம்; பகை); (மூழ்த்துதல் - ஆழ்த்துதல்); (வரித்தல் - கட்டுதல்); (கலை - கல்லை - இடைக்குறையாக வந்தது);
ஒரு நாவாய் ஆக்க வலவனை வாழ்த்தி உய வல ஆத்தர் - ஒரு படகு ஆக்க வல்லவனை வாழ்த்தி உய்யவல்ல அன்பர்; (நாவாய் - படகு; கப்பல்); (வலவனை - வல்லவனை); (வல - வல்ல); (ஆத்தர் - ஆப்தர் - இஷ்டமானவர்கள்; आप्तः - A relative, friend);
பணிவு அதன் உரு ஆன வாக்கின் அரையரின் வார்த்தை இருவினை மாற்று வழி என அறிவோமே - பணிவே உருவமான திருநாவுக்கரசரின் தேவாரம் நம் வினைகளைத் தீர்க்கும் உபாயம் என்று நாம் அறிவோம்; (வாக்கின் அரையர் - வாக்கின் மன்னர் - திருநாவுக்கரசர்); (மாற்றுதல் - நீக்குதல்; அழித்தல்);
அன்பொடு,
வி. சுப்பிரமணியன்
2016-04-30 9:49 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:2016-04-27
திருநாவுக்கரசர் குருபூஜை - (சித்திரைச் சதயம் - 2016-05-01 USA / 2016-05-02 India)
-------------------------------
1)
தான தனதன தான தனதன
தான தனதன .. தனதான
(பாதி மதிநதி - திருப்புகழ் - சுவாமிமலை)
ஆனை இடறிட ஓடி வருபொழு
.. தீசன் அடிதொழு .. தருளாலே
ஊனம் இலரென ஆகி அமணெனும்
.. ஊறு தனையொழி .. திருநாவர்
வானம் அடியவர் ஏறு வழியென
.. வார மலிதமிழ் .. உரைநாவர்
ஞான வடிவவர் பாத மலர்களை
.. நாளு நினைவது .. நலமாமே.
அன்பொடு,
வி. சுப்பிரமணியன்
2017-06-03
திருநாவுக்கரசர் குருபூஜை - 2017 (சித்திரைச் சதயம் - 2017-04-22)
--------
(ஷட்பதி அமைப்பில் -
விளம் மா விளம் மா
விளம் மா விளம் மா
விளம் மா விளம் மா விளம் மாங்காய்)
கடலிடை ஆழ்த்தக் கட்டிய கல்லும்
படகென ஆகப் பரிவொடு பதிகத்
தொடைதனில் வெள்ளை விடையினன் நாமம் சொல்லிடு துணிவுள்ளார்
உடலது தேய்ந்தும் உடையவன் வெற்பை
அடையமு யன்ற திடமனத் தொண்டர்
மடலவிழ் மலரின் மணமிகு வாக்கின் மன்னவர் கழல்போற்றி.
கடலிடை ஆழ்த்தக் கட்டிய கல்லும் படகு என ஆகப் - கடலில் ஆழ்த்துவதற்காகப் பிணித்த அந்தக் கல்லே படகு போல ஆகும்படி;
பரிவொடு பதிகத்தொடைதனில் வெள்ளை விடையினன் நாமம் சொல்லிடு துணிவு உள்ளார் - வெண்ணிற இடபத்தை வாகனமாக உடைய சிவபெருமானது திருநாமத்தைப் பக்தியோடு பதிகப் பாமாலையில் சொன்ன துணிவு உடையவர்; (பரிவு - அன்பு; பக்தி); (திருநாவுக்கரசர் தேவாரம் - 6.98.1 - "நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்"); (திருநாவுக்கரசர் தேவாரம் - 4.11.1 - "கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச்சி வாயவே");
உடல்அது தேய்ந்தும் உடையவன் வெற்பை அடைய முயன்ற திட மனத் தொண்டர் - தமது உடல் தேய்ந்தாலும் ஈசன் உறையும் கயிலைமலையைச் சென்றடைய முயன்ற மன உறுதி மிக்க தொண்டர் அவர்; (பெரியபுராணம் - "ஆளும் நாயகன் கயிலையில் இருக்கைகண் டல்லால் மாளும் இவ்வுடல் கொண்டுமீ ளேன்என மறுத்தார் ");
மடல் அவிழ் மலரின் மணம் மிகு வாக்கின் மன்னவர் கழல் போற்றி - இதழ்கள் விரியும் பூவினும் மணம் மிக்கவான, திருநாவுக்கரசரது திருவடிகளுக்கு வணக்கம். (மடல் - பூவின் இதழ்); (வாக்கின் மன்னவர் - திருநாவுக்கரசர்);
2018-05-07
திருநாவுக்கரசர் குருபூஜை - (சித்திரைச் சதயம் - 2018-05-09 USA)
--------------------
(வஞ்சி விருத்தம் - "தனனா தனனா தனதானா" என்ற சந்தம்);
(சம்பந்தர் தேவாரம் - 1.37.1 - "அரவச் சடைமேல் மதிமத்தம்");
1)
குணமில் சமணர் பழிசொல்லிப்
பிணைகல் அலையார் கடல்மீது
புணையாய்க் கரைசேர் புகழாளர்
மணமார் மலர்மென் கழல்போற்றி.
நற்குணம் இல்லாத சமணர்கள் பொய்யாகப் பழிசுமத்தித் திருநாவுக்கரசரைக் கல்லோடு கட்டிக் கடலில் தள்ளியபோது, அரன் அருளால் அக்கல்லே ஒரு தெப்பமாகி மிதந்து கரையை அடைந்த புகழை உடையவர்; அவரது வாசமிக்க மென்மலர்ப் பாதங்களுக்கு வணக்கம்.
அன்பொடு,
வி. சுப்பிரமணியன்
2)
விடையான் அடியார் உழவாரப்
படையார் தமிழின் தொடைநாவர்
உடையார் பரிவே எவருக்கும்
இடையார் அவர்தாள் இணைபோற்றி.
3)
துணிவின் சிகரம் மெனநின்றார்
பணிவின் வடிவாம் மொழிவேந்தர்
பணிமா லையினான் திருநாமம்
அணிநா வுடையார் அடிபோற்றி.
அன்பொடு,
வி. சுப்பிரமணியன்
2018-05-07
திருநாவுக்கரசர் குருபூஜை - (சித்திரைச் சதயம் - 2018-05-09 USA)
--------------------
(வஞ்சி விருத்தம் - "தனனா தனனா தனதானா" என்ற சந்தம்);
(சம்பந்தர் தேவாரம் - 1.37.1 - "அரவச் சடைமேல் மதிமத்தம்");
1)--
4)
நதியைச் சடையிற் சிறைசெய்த
அதிகைப் பெருமான் அருளாலே
பதிகத் தமிழால் அமணாதர்
சதிவென் றவர்தாள் மலர்போற்றி.
அன்பொடு,
வி. சுப்பிரமணியன்
5)
மடமென் முலையாள் உமைபங்கா
உடையாய் இடபம் திரிசூலம்
உடல்மேற் பொறியாய் எனவேண்டி
அடைநற் றவர்தாள் மலர்போற்றி.
மட மென் முலையாள் உமைபங்கா - அழகிய இள மென் முலைகளையுடைய உமையைப் பங்கில் உடையவனே;
உடையாய் - சுவாமியே; ("உமை பங்கா உடையாய்" என்று ஒரு சொற்றொடராகவே கொள்ளலும் கூடும்);
இடபம் திரிசூலம் உடல்மேற் பொறியாய் என வேண்டி அடை - "இடபச் சின்னத்தையும் சூலச் சின்னத்தையும் என் உடம்பின்மேல் பொறித்து அருள்வாயாக" என்று வேண்டி அவ்வாறே அவை பொறிக்கப்பெற்ற;
நற்றவர் தாள்மலர் போற்றி - நல்ல தவவடிவினரன திருநாவுக்கரசரது திருவடித்தாமரைக்கு வணக்கம்;
* திருநாவுக்கரசர் தம் உடம்பின்மேல் விடை இலச்சினையையும் சூல இலச்சினையையும் வேண்டிப் பெற்றார். இது பெண்ணாகடத்தில் நடந்த நிகழ்ச்சி. பெரியபுராணத்தில் திருநாவுக்கரசர் வரலாற்றிற் காண்க;
(அப்பர் தேவாரம் - 4.109.1 - “பொன்னார் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம் . . . மூவிலைச் சூலமென் மேற்பொறி . . . ”);
(அப்பர் தேவாரம் - 4.109.10 - “. . . இடவம் பொறித்தென்னை யேன்றுகொள் ளாய் . . . ”);
அன்பொடு,
வி. சுப்பிரமணியன்
6)
துடியார் கரனின் னருளாலே
அடியார் உணவிற் குயர்காசைப்
படியா மிழலைப் பெறவல்லார்
கடியார் மலர்மென் கழல்போற்றி.
அன்பொடு,
வி. சுப்பிரமணியன்
7)
மறைகாப் பிடுமாக் கதவத்தை
இறைவா அருளென் றுளம்நெக்கு
நறையார் தமிழால் பிரியச்செய்
மறையாப் புகழார் அடிபோற்றி.
அன்பொடு,
வி. சுப்பிரமணியன்
8)
கயிலைக் கிறைவன் திருவெற்பில்
மயிலாள் அவளோ டுறைகாட்சி
புயலார் பொழில்சூ ழுமையாற்றில்
இயல்மா தவர்தாள் இணைபோற்றி.
அன்பொடு,
வி. சுப்பிரமணியன்
9)
உமையாள் தருபால் தனையுண்ட
தமிழா கரர்தம் சிவிகைக்கீழ்த்
தமரோ டதுதாங் கியஅப்பர்
கமழ்செங் கமலக் கழல்போற்றி.
அன்பொடு,
வி. சுப்பிரமணியன்
இப்பதிகத்தின் நிறைவுப் பாடல்:
10)
மலைபேர்த் தவன்வாய் ஒருபத்தும்
அலறச் சிறிதே விரலிட்ட
தலைவன் புகலூர் இறைதாட்கீழ்
நிலைபெற் றவர்தாள் மலர்போற்றி.
அன்பொடு,
வி. சுப்பிரமணியன்
2019-04-28
திருநாவுக்கரசர் குருபூஜை (சித்திரைச் சதயம் - 2019-04-29)
--------------------------
("கந்த பத்யம்" - அமைப்பில்)
கேடில் வாழ்வது கிட்டும்
வாடிச் சுழலிந் நிலையறு வழிநினை நெஞ்சே
பாடிக் கல்புணை செய்தவ
ரீடில் வாக்கின் மனரடி யிணைதனை மறவேல்.
கேடு இல் வாழ்வு-அது கிட்டும்
வாடிச் சுழல் இந்நிலை அறு வழி நினை நெஞ்சே;
பாடிக் கல் புணை செய்தவர்
ஈடு இல் வாக்கின் மனர் அடியிணைதனை மறவேல்.
வாடிச் சுழல் இந்நிலை அறு வழி நினை நெஞ்சே - நெஞ்சமே, வாடிக் கலங்குகின்ற இந்த நிலை தீர்வதற்கு வழியை எண்ணுவாயாக;
கேடு இல் வாழ்வு-அது கிட்டும் வழி நினை நெஞ்சே - நெஞ்சமே, உயர்கதி அடையும் வழியை எண்ணுவாயாக;
பாடிக் கல் புணை செய்தவர் - பதிகம் பாடிக் கல்லையே ஒரு தெப்பம் ஆக்கியவர்;
ஈடு இல் வாக்கின் மனர் அடியிணைதனை மறவேல் - ஒப்பற்ற திருநாவுக்கரசரது இரு திருவடிகளை மறவாதே! (மனர் - மன்னர் என்பதன் தொகுத்தல் விகாரம்) (சம்பந்தர் தேவாரம் - "இலங்கைமனன் முடிதோளிற வெழிலார்திரு விரலால்");
அன்பொடு,
வி. சுப்பிரமணியன்
2018-05-07
திருநாவுக்கரசர் குருபூஜை - (சித்திரைச் சதயம் - 2018-05-09 USA)
--------------------
--
2020-04-17
திருநாவுக்கரசர் குருபூஜை - (சித்திரைச் சதயம் - 2020-04-18)
-------------------------
(சந்தக் கலிவிருத்தம் - “தானா தனனா தனனா தனனா" என்ற சந்தம்);
கல்லே கடலிற் புணையாய்க் கரைசேர்
நல்லார் நமையாள் திருநா வரசர்
பொல்லா நமனே வரினும் வெருவொன்
றில்லார் அவர்தாள் இணைவா ழியவே.
கல்லே கடலிற் புணையாய்க் கரைசேர் நல்லார் - பிணித்த கல்லே தெப்பம் ஆகிக் கடலில் மிதக்கக் கரைசேர்ந்து உய்ந்த நல்லவர்;
நமை ஆள் திருநாவரசர் - நம்மை ஆளும் திருநாவுக்கரசர்;
பொல்லா நமனே வரினும் வெரு ஒன்று இல்லார் - கொடிய கூற்றுவனே வந்தாலும் சிறிதும் அச்சம் இல்லாதவர்; (வெரு / வெருவு - அச்சம்); (அப்பர் தேவாரம் - 6.98.1 - “நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்”);
அவர் தாள்இணை வாழியவே - அவரது இருதிருவடிகள் வாழ்க.
அன்பொடு,
வி. சுப்பிரமணியன்
2019-04-28
திருநாவுக்கரசர் குருபூஜை (சித்திரைச் சதயம் - 2019-04-29)
--------------------------
2020-04-18
திருநாவுக்கரசர் குருபூஜை - (சித்திரைச் சதயம் - 2020-04-18)
-------------------------
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
செப்பரிய செயல்செய்த திருவுடைய இருவரைக்கண்
டப்பொழுதே அப்பூதி அடிகள்மகன் உயிர்பெறவே
ஒப்பரிய தமிழ்சொன்ன உயர்வாக்கின் மன்னரடி
எப்பொழுதும் நிலையாக எம்மனத்தில் இருப்பனவே.
செப்பரிய செயல் செய்த திரு உடைய இருவரைக் கண்டு - சொல்வதற்கு அரிய செயலைச் செய்த திரு மிக்க அப்பூதி அடிகளின் மனைவியையும் அவரையும் பார்த்து மனம் நெகிழ்ந்து;
அப்பொழுதே அப்பூதி அடிகள்மகன் உயிர் பெறவே - (பாம்பின் விடத்தால மாண்ட) அப்பூதி அடிகள் மகன் உடனே மீண்டும் உயிர்பெற்று எழும்படி;
ஒப்பு அரிய தமிழ் சொன்ன உயர் வாக்கின்மன்னர் அடி - ஒப்பற்ற அரிய தமிழ்ப் பாமாலை பாடியருளிய உயர்ந்த திருநாவுக்கரசரது திருவடிகள்;
எப்பொழுதும் நிலையாக எம்மனத்தில் இருப்பனவே - எங்கள் மனத்தில் நீங்காமல் எப்பொழுதும் இருக்கின்றன;
அன்பொடு,
வி. சுப்பிரமணியன்
2020-04-17
திருநாவுக்கரசர் குருபூஜை - (சித்திரைச் சதயம் - 2020-04-18)
-------------------------
(சந்தக் கலிவிருத்தம் - “தானா தனனா தனனா தனனா" என்ற சந்தம்);
கல்லே கடலிற் புணையாய்க் கரைசேர்
நல்லார் நமையாள் திருநா வரசர்
பொல்லா நமனே வரினும் வெருவொன்
றில்லார் அவர்தாள் இணைவா ழியவே.
கல்லே கடலிற் புணையாய்க் கரைசேர் நல்லார் - பிணித்த கல்லே தெப்பம் ஆகிக் கடலில் மிதக்கக் கரைசேர்ந்து உய்ந்த நல்லவர்;
நமை ஆள் திருநாவரசர் - நம்மை ஆளும் திருநாவுக்கரசர்;
பொல்லா நமனே வரினும் வெரு ஒன்று இல்லார் - கொடிய கூற்றுவனே வந்தாலும் சிறிதும் அச்சம் இல்லாதவர்; (வெரு / வெருவு - அச்சம்); (அப்பர் தேவாரம் - 6.98.1 - “நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்”);
அவர் தாள்இணை வாழியவே - அவரது இருதிருவடிகள் வாழ்க.
அன்பொடு,
வி. சுப்பிரமணியன்
2020-04-18
திருநாவுக்கரசர் குருபூஜை - (சித்திரைச் சதயம் - 2020-04-18)
-------------------------
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
செப்பரிய செயல்செய்த திருவுடைய இருவரைக்கண்
டப்பொழுதே அப்பூதி அடிகள்மகன் உயிர்பெறவே
ஒப்பரிய தமிழ்சொன்ன உயர்வாக்கின் மன்னரடி
எப்பொழுதும் நிலையாக எம்மனத்தில் இருப்பனவே.
2020-04-17
திருநாவுக்கரசர் குருபூஜை - (சித்திரைச் சதயம் - 2020-04-18)
-------------------------
(சந்தக் கலிவிருத்தம் - “தானா தனனா தனனா தனனா" என்ற சந்தம்);
கல்லே கடலிற் புணையாய்க் கரைசேர்
நல்லார் நமையாள் திருநா வரசர்
பொல்லா நமனே வரினும் வெருவொன்
றில்லார் அவர்தாள் இணைவா ழியவே.
கல்லே கடலிற் புணையாய்க் கரைசேர் நல்லார் - பிணித்த கல்லே தெப்பம் ஆகிக் கடலில் மிதக்கக் கரைசேர்ந்து உய்ந்த நல்லவர்;
நமை ஆள் திருநாவரசர் - நம்மை ஆளும் திருநாவுக்கரசர்;
பொல்லா நமனே வரினும் வெரு ஒன்று இல்லார் - கொடிய கூற்றுவனே வந்தாலும் சிறிதும் அச்சம் இல்லாதவர்; (வெரு / வெருவு - அச்சம்); (அப்பர் தேவாரம் - 6.98.1 - “நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்”);
அவர் தாள்இணை வாழியவே - அவரது இருதிருவடிகள் வாழ்க.
அன்பொடு,
வி. சுப்பிரமணியன்
--On Sun, Apr 28, 2019 at 12:54 PM Siva Siva <naya...@gmail.com> wrote:2019-04-28
திருநாவுக்கரசர் குருபூஜை (சித்திரைச் சதயம் - 2019-04-29)
--------------------------
"மதிசூடி துதிபாடி" blog: http://madhisudi.blogspot.com/
--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCOsiNB-GExqpbxCb%3DMoLRd10gRsJOWZWStEaX-JDGi-hg%40mail.gmail.com.
2021-05-03
திருநாவுக்கரசர் குருபூஜை - (சித்திரைச் சதயம் - 2021-05-05 USA / 2021-05-06 India )
-----------------
(வண்ணவிருத்தம்;
தானதன தான தந்த .. தனதான )
(காரணம தாக வந்து - திருப்புகழ் - பழமுதிர்சோலை)
சூலையெனும் நோய டைந்து .. மிகவாடித்
.. தூயதிரு நீற ணிந்து .. அடிபாடச்
சூலமுடை யான்ம கிழ்ந்து .. தருநாமம்
.. சூடியலை சூழும் இந்த .. உலகோர்கள்
மேலைவினை தீர இன்ப .. உலகேற
.. வீறுமலி வாரம் என்ற .. தமிழாலே
சீலநெறி யேப கர்ந்த .. உழவாரச்
.. சேவகரின் ஏர்மி குந்த .. கழல்வாழ்க!
பதம் பிரித்து:
சூலை எனும் நோய் அடைந்து மிக வாடித்,
.. தூய திருநீறு அணிந்து அடி பாடச்,
சூலம் உடையான் மகிழ்ந்து தரு நாமம்
.. சூடி, அலை சூழும் இந்த உலகோர்கள்
மேலைவினை தீர இன்ப உலகு ஏற,
.. வீறு மலி வாரம் என்ற தமிழாலே
சீலநெறியே பகர்ந்த, உழவாரச்
.. சேவகரின் ஏர் மிகுந்த கழல் வாழ்க!
வி. சுப்பிரமணியன்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCP84je6%2B_u3XVyMgArfpyW2X7W8D3um21peOFiWUcChmA%40mail.gmail.com.
2021-05-03
திருநாவுக்கரசர் குருபூஜை - (சித்திரைச் சதயம் - 2021-05-05 USA / 2021-05-06 India )
-----------------
(வண்ணவிருத்தம்;
தானான .. தனதாத்த )
(இந்த அமைப்பில் திருப்புகழ் உள்ளதா என்று அறியேன்)
போரானை .. உரிபோர்த்துப்
.. பூணாக .. அரவார்க்கும்
சீரானை .. நினையார்க்குச்
.. சேயானை .. நினைவார்க்குத்
தீராத .. வினைதீர்க்கும்
.. தேவார .. மொழிகாட்டி
வாராத .. வழிகாட்டும்
.. வாகீசர் .. அடிபோற்றி.
&
நேற்று இட்ட பாடலில் முதலடியில் ஒரு சிறு மாற்றத்தோடு:
2021-05-03
திருநாவுக்கரசர் குருபூஜை - (சித்திரைச் சதயம் - 2021-05-05 USA / 2021-05-06 India )
-----------------
(வண்ணவிருத்தம்;
தானதன தான தந்த .. தனதான )
(காரணம தாக வந்து - திருப்புகழ் - பழமுதிர்சோலை)
சூலையெனும் நோய டைந்து .. மிகவாடித்
.. தூயதிரு நீற ணிந்து .. துதிபாடச்
சூலமுடை யான்ம கிழ்ந்து .. தருநாமம்
.. சூடியலை சூழும் இந்த .. உலகோர்கள்
மேலைவினை தீர இன்ப .. உலகேற
.. வீறுமலி வாரம் என்ற .. தமிழாலே
சீலநெறி யேப கர்ந்த .. உழவாரச்
.. சேவகரின் ஏர்மி குந்த .. கழல்வாழ்க!
வி. சுப்பிரமணியன்
2021-05-03
திருநாவுக்கரசர் குருபூஜை - (சித்திரைச் சதயம் - 2021-05-05 USA / 2021-05-06 India )
-----------------
(வண்ணவிருத்தம்;
தனத்த தய்யா .. தனதான )
(இந்த அமைப்பில் திருப்புகழ் உள்ளதா என்று அறியேன்)
பிணித்த கல்லே .. புணையாகிப்
.. பிழைக்க வல்லார் .. உழவாரப்
பணிக்கு நல்லூர் .. பலசேர்வார்
.. பழுத்த சொல்லார் .. தமிழ்பாடித்
தணிக்க வல்லார் .. விடவேகம்
.. தவித்தல் விள்ளா .. நிலையேசேர்
பிணிக்கு மெய்யே .. பிதிகாரம்
.. பிடித்தல் நல்லார் .. அவர்தாளே.
பதம் பிரித்து:
பிணித்த கல்லே புணை ஆகிப்
.. பிழைக்க வல்லார்; உழவாரப்
பணிக்கு நல்லூர் பல சேர்வார்;
.. பழுத்த சொல் ஆர் தமிழ் பாடித்
தணிக்க வல்லார் விடவேகம்;
.. தவித்தல் விள்ளா நிலையே சேர்
பிணிக்கு மெய்யே பிதிகாரம்,
.. பிடித்தல் நல்லார் அவர் தாளே.
வி. சுப்பிரமணியன்
2021-05-03
திருநாவுக்கரசர் குருபூஜை - (சித்திரைச் சதயம் - 2021-05-05 USA / 2021-05-06 India )
-----------------
(வண்ணவிருத்தம்;
தானான .. தனதாத்த )
(இந்த அமைப்பில் திருப்புகழ் உள்ளதா என்று அறியேன்)
போரானை .. உரிபோர்த்துப்
.. பூணாக .. அரவார்க்கும்
சீரானை .. நினையார்க்குச்
.. சேயானை .. நினைவார்க்குத்
தீராத .. வினைதீர்க்கும்
.. தேவார .. மொழிகாட்டி
வாராத .. வழிகாட்டும்
.. வாகீசர் .. அடிபோற்றி.
2022-04-20
திருநாவுக்கரசர் குருபூஜை - (சித்திரைச் சதயம் - 2022-04-25 USA / 2022-04-26 India )
----------------
(வண்ணவிருத்தம்;
தனதனதனத் .. தனதான )
(பகலிரவினில் - திருப்புகழ் - சென்னிமலை)
எருதணிகொடிப் .. பெருமானை
.. எழுதிடுமறைத் .. தமிழ்பாடி
ஒருபெரியகற் .. புணைமேலே
.. உலகினர்தொழக் .. கரைசேர்வார்
கருவிடமிடற் .. றணியீசன்
.. கழலைமுடிவைத் .. தருள்நேயர்
அருவினையறத் .. திருநாவுக்
.. கரசரடியைப் .. பணிவோமே.
பதம் பிரித்து:
எருது அணி கொடிப் பெருமானை
.. எழுதிடு மறைத் தமிழ் பாடி,
ஒரு பெரிய கற்புணைமேலே
.. உலகினர் தொழக் கரை சேர்வார்;
கருவிடம் மிடற்று அணி ஈசன்
.. கழலை முடி வைத்து அருள் நேயர்;
அருவினை அறத் திருநாவுக்கு
.. அரசர் அடியைப் பணிவோமே.
வி. சுப்பிரமணியன்
2023-03-01
திருநாவுக்கரசர் குருபூஜை - (சித்திரைச் சதயம் - 2023-05-13 USA)
------------------------
(ருபாயி அமைப்பில்)
(சந்தக் கலிவிருத்தம் - தானா தனனா தானதனா தானதனா )
(1,2,4-ஆம் அடிகளின் ஈற்றில் இயைபு)
பாயிற் கிடவா முன்பணிவாய் பன்னவரே
மாயச் சமணைத் தீர்த்தருளும் கொற்றவரே
கோயிற் கதவம் தாழ்விலகப் பாடியவர்
வாயில் மணமார் மாலையறா மன்னவரே.
பாயில் கிடவாமுன் பணிவாய், பன்னு அவரே - பாயில் கிடக்கும் காலம் வருவதன்முன்னமே அவரை வணங்கு, துதி;
மாயச் சமணைத் தீர்த்தருளும் கொற்றவரே - மாயப் புறச்சமயமான சமணத்தை நாட்டிலிருந்து நீக்கிய வெற்றியுடையவர்;
கோயில் கதவம் தாழ் விலகப் பாடியவர் - (திருமறைக்காட்டில்) கோயிலின் கதவு திறக்கப் பாடியவர்;
வாயில் மணம் ஆர் மாலை அறா மன்னவரே - தம் வாயில் மணம் மிக்க தேவாரம் என்றும் திகழ்ந்த வாக்கின் மன்னவர் (திருநாவுக்கரசர்);
V. Subramanian
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCM0bFLBrxZa1c_uBgETt7mT0AEn0eKHqjKNDg%3DbmrcCgg%40mail.gmail.com.
‘வாயில் மணம் ஆர் மாலை அறா மன்னவர்’திருநாவுக்கரசர் என்னும் திருப்பெயரை அழகுற விரித்துரைத்த விதம் அருமை!On Fri, May 12, 2023 at 8:01 AM Siva Siva <naya...@gmail.com> wrote:
2023-03-01
திருநாவுக்கரசர் குருபூஜை - (சித்திரைச் சதயம் - 2023-05-13 USA)
------------------------
பாயிற் கிடவா முன்பணிவாய் பன்னவரே
2024-05-02
திருநாவுக்கரசர் துதி - சித்திரைச் சதயம் - 2024 (May 2/3)
----------------
(வஞ்சித்துறை - தானா தனதான - சந்தம்)
நல்லான் அருளாலே
கல்லே புணையாக
வல்லார் வாகீசர்
சொல்லே துணையாமே.
நல்லான் - நன்மையே வடிவானவன்; மங்கலவடிவன்; - சிவன்; (சம்பந்தர் தேவாரம் - 2.13.7 - "கோழம்ப மேவிய நல்லானை ஏத்துமின் நும்மிடர் நையவே");
புணை - தெப்பம்;
வாகீசர் - நாவுக்கரசர்;
V. Subramanian
2025-04-18
திருநாவுக்கரசர் துதி - திருநாவுக்கரசர் குருபூஜை - சித்திரைச் சதயம் - 2025 (Apr 23)
----------------
(ஈரடிமேல் வைப்பு ;
தானான தானான தானா - தான
.. தானான தானான தானான தானா - என்ற சந்தம்)
(அப்பய்ய தீக்ஷிதரின் மார்கபந்து ஸ்தோத்திர அமைப்பில்)
(mārgabandhu stotram - https://sanskritdocuments.org/doc_shiva/maargabandhu.html?lang=iast
A clip on YouTube: https://www.youtube.com/watch?v=1n1BxKU2cJg )
முற்குறிப்பு: இப்பாடலில், ஓர் அடியில் தானா என்ற சந்தம் அமையும் இடங்களில் நிறுத்திப் பாடப்பெறும். ஒவ்வோர் அடியிலும் அந்த இடங்களிடையே இயைபுத்தொடை அமைந்த பாடல்கள்.
* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்.
அக்காவின் அன்பால டைந்தார் - வெள்ளை
.. ஆனேற தூர்ந்தானை நாவால்மொ ழிந்தார்
அக்கால னார்ச்செற்ற பாதம் - கந்த
.. அம்மாலை கொண்டேத்து வார்க்கில்லை ஏதம்
வாகீசர் இன்னாமம் ஒன்றே - உன்ன
.. வல்லார்க்கு வையத்தில் எந்நாளு(ம்) நன்றே.
அக்காவின் அன்பால் அடைந்தார் - திலகவதியாரின் அன்பால் நற்கதி அடைந்தவர்; திலகவதியாரின் அன்பால் ஈசனைச் சரணடையப்பெற்றவர்;
வெள்ளை ஆனேறது ஊர்ந்தானை - வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவனை; (இந்தச் சொற்றொடர் இடைநிலைத் தீவகமாக இருபக்கமும் இயைத்துப் பொருள்கொள்ள நின்றது; "அடைந்தார் ... இடபவாகனனை & இடபவாகனனை ... மொழிந்தார்);
நாவால் மொழிந்தார் - தம் நாவினால் போற்றிப் பாடினார்;
அக்-காலனார்ச் செற்ற பாதம் - அந்தக் காலனை உதைத்து அழித்த திருவடியை; (இந்தச் சொற்றொடர் இடைநிலைத் தீவகமாக இருபக்கமும் இயைத்துப் பொருள்கொள்ள நின்றது); (காலனார்ச் செற்ற = காலனாரைச் செற்ற; இரண்டாம்-வேற்றுமைத்தொகையில் உயர்திணையில் பொருளின் தெளிவு கருதி முதற்சொல்லின் ஈற்றில் வல்லொற்று மிகும்);
கந்த அம்-மாலை கொண்டு ஏத்துவார்க்கு இல்லை ஏதம் - மணம் மிகுந்த அழகிய அப்பாமாலைகளால் துதிப்பவர்களுக்குத் துன்பம் இல்லை; (அம் - 1. அழகிய; 2. அந்த); (ஏதம் - துன்பம்; கேடு);
வாகீசர் இன்னாமம் ஒன்றே - வாகீசரது இனிய நாமம் ஒப்பற்றது; (ஒன்று - ஒப்பற்றது);
உன்ன வல்லார்க்கு வையத்தில் எந்நாளு(ம்) நன்றே - அந்தப் பெயரை எண்ண-வல்லவர்களுக்கு உலகில் என்றும் நன்மையே கிட்டும்; (உன்னுதல் - எண்ணுதல்); (வையம் - பூமி); (நன்று - நல்லது); (* அப்பூதி அடிகள் வரலாற்றைக் காண்க);
V. Subramanian
On Apr 22, 2025, at 21:01, Siva Siva <naya...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCP%2BZw-Ya3c%3Dy_rrGQ%3DOVumWRN3xtSEqXVdt6TkPGh5odw%40mail.gmail.com.
2026-05-10
திருநாவுக்கரசர் துதி - திருநாவுக்கரசர் குருபூஜை - சித்திரைச் சதயம் - 2026
-------------
(வண்ணவிருத்தம்;
தனதானத் தனன .. தனதான)
தவமாகக் குளியல் .. தவிர்கோலச்
.. சமண்வீழக் கருணை .. புரிவீரர்
உவர்நீலக் கடலில் .. உயு(ம்)நேயர்
.. உழவாரப் படையை .. அணிதோளர்
பவவாழிப் புணையை .. மொழிநாவர்
.. படிவாழத் தமிழை .. வளர்நாவர்
சிவனேவைத் தருளும் .. ஒருநாமத்
.. திருநாவுக் கரசர் .. அடிவாழ்க.
பதம் பிரித்து:
தவமாகக் குளியல் தவிர்-கோலச்
.. சமண் வீழக் கருணை புரி-வீரர்
உவர்-நீலக்-கடலில் உயு(ம்) நேயர்;
.. உழவாரப் படையை அணி-தோளர்;
பவ-ஆழிப் புணையை மொழி-நாவர்;
.. படி வாழத் தமிழை வளர்-நாவர்;
சிவனே வைத்தருளும் ஒரு நாமத்
.. திருநாவுக்கரசர் அடி வாழ்க.
* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;
தவமாகக் குளியல் தவிர்-கோலச் சமண் வீழக் கருணை புரி-வீரர் - தவம் என்று எண்ணிக் குளிப்பதைக் கைவிட்ட கோலம் உடைய சமணமதம் குன்றும்படி கருணைசெய்த வீரர்; (குளியல் - குளித்தல்); (சமண் - சமணமதம்);
உவர்-நீலக்-கடலில் உயு(ம்) நேயர் - உவர்க்கின்ற கரிய கடலில் (ஆழ்த்தச் சமணர்கள் கட்டிய கல்லே தெப்பமாகித்) தப்பிய அன்பர்; (உவர்த்தல் - உப்புக்கரித்தல்); (உயும் - உய்யும்; உய்தல் - தப்புதல்);
உழவாரப் படையை அணி-தோளர் - உழவாரப்படையைக் கையில் ஏந்தியவர்; (தோள் - புஜம்);
பவ-ஆழிப் புணையை மொழி-நாவர் - பிறவிக்கடலைக் கடப்பிக்கும் தெப்பத்தை (= சிவபெருமானைப் போற்றி) உரைத்த நாவுடையவர்; (பவம் - பிறவி); (ஆழி - கடல்); (புணை - தெப்பம்);
படி வாழத் தமிழை வளர்-நாவர் - உலகம் உய்யும்படி தமிழை வளர்த்த (= தேவாரத்தைப் பாடியருளிய) நாவுடையவர்; (படி - பூமி);
சிவனே வைத்தருளும் ஒரு நாமத் திருநாவுக்கரசர் அடி வாழ்க - சிவபெருமானே சூட்டியருளிய ஒப்பற்ற நாமத்தையுடைய திருநாவுக்கரசரது திருவடிகள் வாழ்க! ( ஒரு - ஒப்பற்ற);
V. Subramanian
On May 10, 2026, at 22:26, Siva Siva <naya...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCMyigfZRMaEZ%2BDx1zEWV1XgGr%3DC2Hmxw0BzDtqWW_AbBg%40mail.gmail.com.