Fwd: தருமபுரம் ப. சுவாமிநாதன்

256 views
Skip to first unread message

Girija Varadharajan

unread,
Oct 15, 2009, 1:12:03 AM10/15/09
to santhav...@googlegroups.com
For Information of SV members

---------- Forwarded message ----------
From: Maravanpulavu K. Sachithananthan <tami...@gmail.com>
Date: 2009/10/15
Subject: தருமபுரம் ப. சுவாமிநாதன்
To: Sasirekha <tami...@tamilnool.com>


தருமபுரம் ப. சுவாமிநாதன் காலமானார். 2040 கன்னி (புரட்டாதி) 28 பின்னிரவு 49 நாழிகை (15.10.2009, அதிகாலை 0200 மணி) யளவில் அவரது உயிர் பிரிந்தது.

நீண்ட நாள்களாகவே நோய்வாய்ப்பட்டிருந்தார். மருத்துவ மனையில் சில காலம் இருந்தார். பின்னர் போரூர், குன்றத்தூரில் அவர் வாழ்ந்த இல்லத்துக்கே வந்தார். அவரது துணைவியார் கூடவே இருந்தார். பொற்றாளம் துரை. ஆறுமுகம் அவர்கள் வழிகாட்டலில் அவரது அன்பர்கள் பலர் அவரது நலன் பேணி வந்தனர்.

யாழ்ப்பாணத்தில், 1960களில் சைவ பரிபாலன சபை ஆதரவில் ஏறத்தாழ ஐந்து ஆண்டுகள் தங்கியிருந்து பண்ணிசை மாணவர் பலரை உருவாக்கினார். அக்காலத்திலிருந்து அவரை நான் அறிவேன்.

சென்னைக்கு வந்தபின்னரும் பேரா. அ. ச. ஞானசம்பந்தன் இல்லம், தமிழிசைச் சங்கம், சென்னையில் உள்ள திருக்கோயில்கள் என அவர் எங்கிருந்தாலும் சென்று சந்திப்பேன். அவர் இசையில் ஒன்றிவிடுவேன்.

1993இல் என் தந்தையார் சென்னையில் காலமான பொழுது என்னிடம் வந்து ஆறுதல் கூறி, நீத்தார் வழிபாடுகளில் பண்ணிசைத்தார்.

பண்ணிசை உலகில் நம் தலைமுறையில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர். திருமுறைகளைப் பொருள் விளங்குமாறு இசைத்தவர். பண்ணிசைக்குப் பல்கலைக்கழகமாகவே திகழ்ந்தவர்.

உலகெங்கும் இன்று பரந்து வாழும் தமிழர் ஒவ்வொருவரது இல்லத்திலும் அவரது குரலொலித்துக் கொண்டிருக்கிறது.

பொற்றாளம் துரை. ஆறுமுகம் அவர்களது முயற்சியால் , திருவான்மியூர், கனால் வீதியிலுள்ள வாணி பதிவகத்தாரின் திரு. விசயராகவன் அவர்கள், தருமபுரம் ப. சுவாமிநாதன் அவர்களின் குரலிசையைப் பன்னிருதிருமுறையில் உள்ள 18,246 பாடல்களுள்  10,325 பாடல்களுக்குப் பதிவு செய்து விற்பனைக்குத் தருகிறார்கள். இவற்றுள் 11ஆம் திருமுறையின் 393 பாடல்களைத் தருமபுரம் ஆதீனம் நடத்திவரும் www.thevaaram.org மின்னம்பல தளத்தில் சேர்க்கும் உரிமையை வாணி பதிவகத்தார் என் வேண்டுகோளை ஏற்றுத் தந்தனர்.

உலகம் முழுவதும் வாழும் தமிழர் துயறுற்றுக் கதற, கண்ணீர் விடத் தருமபுரம் ப. சுவாமிநாதன் அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து இறைவனடி சேர்ந்துள்ளார்கள்.

 


--
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
Maravanpulavu K. Sachithananthan



Varadharajan
Email:  girijavar...@gmail.com

srinivasan s

unread,
Oct 15, 2009, 1:26:02 AM10/15/09
to santhav...@googlegroups.com
திடுக்கிடும் செய்தி, இரண்டு நாட்களுக்கு முன் தான் பொதிகையில் அவரது இசையைக் கேட்டேன். மிகவும் வருத்தமாக இருக்கிறது.
தாஸன்

 

N. Ganesan

unread,
Oct 15, 2009, 6:54:00 AM10/15/09
to மின்தமிழ், tamil...@googlegroups.com, Santhavasantham, tamil_...@googlegroups.com
On Oct 14, 11:12 pm, "Maravanpulavu K. Sachithananthan"

<tamiln...@gmail.com> wrote:
> தருமபுரம் ப. சுவாமிநாதன் காலமானார். 2040 கன்னி (புரட்டாதி) 28
> பின்னிரவு 49நாழிகை (15.10.2009,

> அதிகாலை 0200 மணி) யளவில் அவரது உயிர் பிரிந்தது.
>

ஓதுவார் ஐயாவின் அண்மைக் காலத்துப் போட்டோக்கள்:
http://kavithima.blogspot.com/2009/10/demise-of-dharmapuram-swaminathan.html

தருமபுரம் பாடிய ஒரு திருப்புகழ்:
http://ww.smashits.com/music/tamil/play/songs/7338/kandaralangaram-navaratna-thiruppukazh/68218/nilayaapporulae.html

நிலையாப் பொருளை யுடலாக் கருதி
நெடுநாட் பொழுது ...... மவமேபோய்

நிறைபோய்ச் செவிடு குருடாய்ப் பிணிகள்
நிறைவாய்ப் பொறிகள் ...... தடுமாறி

மலநீர்ச் சயன மிசையாப் பெருகி
மடிவேற் குரிய ...... நெறியாக

மறைபோற் றரிய வொளியாய்ப் பரவு
மலர்தாட் கமல ...... மருள்வாயே

ஓதுவார் சுவாமிகளுக்கு நினைவஞ்சலி!
நா. கணேசன்

Kaviyogi Vedham

unread,
Oct 15, 2009, 11:42:45 AM10/15/09
to tamil...@googlegroups.com, santhavasantham, mutht...@googlegroups.com
ரொம்பவும் அதிர்ச்சியடைந்தேன்...எவ்வளோ அருமையான தேவார,பாஆரக்குரல்!.இன்னிசைப்பரல்..
 ம்ம்ம் கடந்த சில நாட்களாக ஒவ்வொரு அறிஞராக மறைந்துவருகிறார்கள்.புகழுடம்பை மட்டும் இவண் விட்டுவிட்டு சூட்சுமமாய் இறையுடன் இணைகிறார்கள்..அன்னார்க்கு என் அஞ்சலி!,
 யோகியார்

2009/10/15 N. Ganesan <naa.g...@gmail.com>



--
yogiyaar
அனைவரும் வாழ்க வளமுடன் நம் குரு சித்தர் பாபாஜி அருளால்!

SUBBAIER RAMASAMI

unread,
Oct 15, 2009, 12:46:49 PM10/15/09
to santhav...@googlegroups.com

சுண்டிப் பிடிக்கும் தருமபுரம்

      சுவாமி நாதன் குரல்வழியே

கண்டுப்  பண்ணில் தேவாரம்

      காது நிறைய நாம்கேட்டோம்

மொண்டு வந்தே  இறையுணர்வு

      மூள வைத்தார் நெஞ்சத்தில்

 எண்டி சையும்  புகழ் சிறக்க

      இவர்தம் நாமம் வாழியவே!

 

இலந்தை



2009/10/15 Girija Varadharajan <girijavar...@gmail.com>

Pas Pasupathy

unread,
Oct 15, 2009, 1:11:55 PM10/15/09
to santhav...@googlegroups.com

கடைசியாக அவரைப் பார்த்தது, சில ஆண்டுகளுக்கு முன் சென்னையில் வைத்தியர் ராமதாஸ் நடத்திய
'பொங்குதமிழ்' விழாவில் அவர் கௌரவிக்கப் பட்டபோது. அப்போதுதான் முனைவர் இரா.திருமுருகனையும்
பார்த்துப் பேசினேன்.

இன்று இருவரும் நம்மிடையே இல்லை.

சுவாமிநாதன் அவர்களைப் பலமுறை ... தி.நகர் தர்மபுரம் ஆதீனக் கிளையில், அண்ணாமலை தமிழிசை மன்றத்தில், வானொலியில் ....நேரில் பார்த்தும், கேட்டிருந்தாலும் , ஒரு காட்சிதான் இப்போது பசுமையாக மனத்திரையில் ஓடுகிறது.

60-களில் ஒரு மார்கழி காலை. சென்னை தி.நகரில் எங்கள் வீட்டில் எல்லோரும் பரபரப்பாக எழுந்து தயாராக இருக்கிறார்கள். தூரத்தில் கேட்டுக் கொண்டிருந்த பஜனைக் கோஷ்டியின் கூட்டிசை மெதுவாகப் பலத்துக் கொண்டே வந்தது. எங்கள் தெருவிற்குள் பண்ணிசைக் குழுவினர் வரத் தொடங்கினர்.

ஆகா! காந்தம் போல் கவர்ச்சி மிக்க ஒரு குரல்!. எங்கள் வீட்டின் எதிரில் நின்று குழுவினர் பாடத் தொடங்கினர். 'சில்'லென்ற அந்த காலைக் குளிரைக் கிழித்துக் கொண்டு ஓதுவாரின் குரல்  ஒலித்தது.

வா வா அழகா! முருகையா!
வடிவேல் அழகா! முருகையா!

கந்த கோட்டத்துக் கந்தையா! -- உன்
கழலடி காண அருளையா!

நாமாவளியின் ஒவ்வோரு வரிக்கும் பிறகு எல்லாரும் சேர்ந்து பாட, தெருவே பக்தி வெள்ளத்தில் ஆழ்ந்தது.

என் சோதரர் அவர்களை முதல் நாள் வீட்டிற்கு அழைத்திருந்தார் என்பதை அறிந்தேன். இசை முடிந்ததும், யாவரும் எங்கள் வீட்டில் சிறிது இளைப்பாறி, சுடச்சுடச் சிறிது வெண்பொங்கல் உண்டு, பிறகு தங்கள் பஜனைப் பயணத்தைத் தொடர்ந்தனர்.  

இன்னொரு காட்சி.
 
1967-70 களில் நான் யேல் பல்கலைக் கழகத்தில் படித்த சமயம், கிருஸ்மஸ் சமயம். என்னைப் போன்ற பல மாணவர்கள் வசித்து வந்த 'இண்டர்னேஷனல் ஹவுஸ்' முன்னர்  'கிருஸ்மஸ்' கீதங்கள் ( carols) பாடியபடி ஒரு கோஷ்டி வந்தது. எங்கள் வீட்டில் இருந்த பல தேச மாணவர்களும் அவரவர்கள் அறிந்த கிருஸ்மஸ் நாள் கொண்டாட்டம் பற்றி அவர்கள் நினைவுகளைப் பரிமாறிக் கொண்டனர்.
நான் மார்கழி மாத பஜனை பற்றிச் சொல்லி, சுவாமிநாதன் அவர்கள் பாடின அந்த நாமாவளியை
... நாங்கள் பாடும் 'carols' என்று அறிமுகப் படுத்தி...அவர்களுக்குப் பாடிக் காட்டினேன். அதுவே அன்று நான் தர்மபுரம் சுவாமிநாதனின் அருமையான
பண்ணிசை நினைவைக்கு நான் செலுத்திய அஞ்சலி.

இன்றும் அந்த நினைவில் எழுந்த இந்த மடலே அவருக்கு நான் செலுத்தும்  அஞ்சலி .

   

2009/10/15 Girija Varadharajan <girijavar...@gmail.com>



--

பசுபதி
http://groups.google.ca/group/yAppulagam

Kaviyogi Vedham

unread,
Oct 15, 2009, 1:41:33 PM10/15/09
to santhav...@googlegroups.com, kaviyog...@gmail.com
அத்தாழை வரது சொல்கிறார்;-> த்ருமபுரம் ஸுவாமிநாதன் காலமானார்;;
அச்சேதி முடியும் முன் இலந்தை சொல்கிறார்;->.>மதிவண்ணன் மனைவி காலமானார் நேற்று;-
 ஐயகோ.. என்ன கொடுமை!!
 
..
.நெஞ்சை நெகிழ்த்தும் செய்தி;இது!
...நீவி விட்டுத்   தளர்த்தாமல்
பிஞ்சாய்ப் பறித்தே இந்த ‘யமன்’
..பெருமை கொண்டான் படுபாவி!
கொஞ்சம் அழுதே மூச்(சு)இழுத்தேன்;
..குனிந்தேன்;நண்பர் மதித்-- ‘துணையும்”
வஞ்ச யமன் கொண்டானே!
.. ‘வையக்’ காள மேகமெங்கே??
யோகியார்..--

2009/10/15 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

Siva Siva

unread,
Oct 15, 2009, 6:05:26 PM10/15/09
to santhav...@googlegroups.com
சிவனைப் பற்றிய சிந்தை ஏதும் இல்லாது இருந்தேனை அவன்பால் ஈர்த்தது சுவாமிநாதனாரின் உள்ளம் உருக்கும் தேவாரப் பாடல்களே! 2006 டிசம்பரில் சென்னைக்குச் சென்றிருந்தபொழுது தமிழிசைச் சங்கத்தில் அவரைச் சந்திதித்தேன். அவரது பாடலைக் கேட்டு மகிழ்ந்தேன். இச்சிறியேனின் உள்ளத்தில் என்றும் நீங்காமல் இருப்பவர் அவர். 

"பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்" - திருத்தொண்டத் தொகை

2009/10/15 srinivasan s <vasan...@gmail.com>
திடுக்கிடும் செய்தி, இரண்டு நாட்களுக்கு முன் தான் பொதிகையில் அவரது இசையைக் கேட்டேன். மிகவும் வருத்தமாக இருக்கிறது.
தாஸன்

 
On 10/15/09, Girija Varadharajan <girijavar...@gmail.com> wrote:
For Information of SV members

---------- Forwarded message ----------
From: Maravanpulavu K. Sachithananthan <tami...@gmail.com>
Date: 2009/10/15
Subject: தருமபுரம் ப. சுவாமிநாதன்
To: Sasirekha <tami...@tamilnool.com>

தருமபுரம் ப. சுவாமிநாதன் காலமானார். 2040 கன்னி (புரட்டாதி) 28 பின்னிரவு 49 நாழிகை (15.10.2009, அதிகாலை 0200 மணி) யளவில் அவரது உயிர் பிரிந்தது.
 
நீண்ட நாள்களாகவே நோய்வாய்ப்பட்டிருந்தார். மருத்துவ மனையில் சில காலம் இருந்தார். பின்னர் போரூர், குன்றத்தூரில் அவர் வாழ்ந்த இல்லத்துக்கே வந்தார். அவரது துணைவியார் கூடவே இருந்தார். பொற்றாளம் துரை. ஆறுமுகம் அவர்கள் வழிகாட்டலில் அவரது அன்பர்கள் பலர் அவரது நலன் பேணி வந்தனர்.
யாழ்ப்பாணத்தில், 1960களில் சைவ பரிபாலன சபை ஆதரவில் ஏறத்தாழ ஐந்து ஆண்டுகள் தங்கியிருந்து பண்ணிசை மாணவர் பலரை உருவாக்கினார். அக்காலத்திலிருந்து அவரை நான் அறிவேன்.
சென்னைக்கு வந்தபின்னரும் பேரா. அ. ச. ஞானசம்பந்தன் இல்லம், தமிழிசைச் சங்கம், சென்னையில் உள்ள திருக்கோயில்கள் என அவர் எங்கிருந்தாலும் சென்று சந்திப்பேன். அவர் இசையில் ஒன்றிவிடுவேன்.
1993இல் என் தந்தையார் சென்னையில் காலமான பொழுது என்னிடம் வந்து ஆறுதல் கூறி, நீத்தார் வழிபாடுகளில் பண்ணிசைத்தார்.
 
பண்ணிசை உலகில் நம் தலைமுறையில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர். திருமுறைகளைப் பொருள் விளங்குமாறு இசைத்தவர். பண்ணிசைக்குப் பல்கலைக்கழகமாகவே திகழ்ந்தவர்.
 
உலகெங்கும் இன்று பரந்து வாழும் தமிழர் ஒவ்வொருவரது இல்லத்திலும் அவரது குரலொலித்துக் கொண்டிருக்கிறது.
பொற்றாளம் துரை. ஆறுமுகம் அவர்களது முயற்சியால் , திருவான்மியூர், கனால் வீதியிலுள்ள வாணி பதிவகத்தாரின் திரு. விசயராகவன் அவர்கள், தருமபுரம் ப. சுவாமிநாதன் அவர்களின் குரலிசையைப் பன்னிருதிருமுறையில் உள்ள 18,246 பாடல்களுள்  10,325 பாடல்களுக்குப் பதிவு செய்து விற்பனைக்குத் தருகிறார்கள். இவற்றுள் 11ஆம் திருமுறையின் 393 பாடல்களைத் தருமபுரம் ஆதீனம் நடத்திவரும் ந்ந்ந்.தெவாரம்.ஒர்க் மின்னம்பல தளத்தில் சேர்க்கும் உரிமையை வாணி பதிவகத்தார் என் வேண்டுகோளை ஏற்றுத் தந்தனர்.
 
உலகம் முழுவதும் வாழும் தமிழர் துயறுற்றுக் கதற, கண்ணீர் விடத் தருமபுரம் ப. சுவாமிநாதன் அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து இறைவனடி சேர்ந்துள்ளார்கள்.

 


--
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
Maravanpulavu K. Sachithananthan

 



--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

செல்வா

unread,
Oct 15, 2009, 6:40:45 PM10/15/09
to சந்தவசந்தம்
எத்தனை அழகாகக் கூறியுள்ளீர்கள்!!

இறைபதம் எய்தினார் ஓதுவார் சுவாமினாதன் அவர்கள்
என்றறிந்தவுடன் இவ்வுலகின் இழப்பை உணர்ந்தேன்.
பேரா. பசுபதி அவர்களைப்போலவும் வி.சு (சிவ சிவ)
அவர்களைப் போலவும்
அவர் புகழ் வாழ்க்கையைக் கொண்டாடுவது அவருக்கு
நாம் செலுத்தும் அன்பின் அடையாளமாகும்.
நான் அவரை நேரில் கண்டதில்லை. ஆனால் உங்கள்
அனுபவங்களைப் பகிர்வதால் நானும்
என்னைப்போல் நேரில் அறியாத
பிறரும் அவரைப் பற்றியும் அவர் ஏற்படுத்திய
எழுச்சிகள் பற்றியும் அறிந்துகொள்ள உதவும்.
அவருக்கு செலுத்தும் பெருமையாகவும் இருக்கும்.

என் இரங்கலைத் தெரிவித்துக்கொண்டு அவர்
நற்கதி அடைய வேண்டிக்கொள்கிறேன்.

அன்புடன்
செல்வா

On Oct 15, 1:11 pm, Pas Pasupathy <pas.pasupa...@gmail.com> wrote:
> கடைசியாக அவரைப் பார்த்தது, சில ஆண்டுகளுக்கு முன் சென்னையில் வைத்தியர்
> ராமதாஸ் நடத்திய
> 'பொங்குதமிழ்' விழாவில் அவர் கௌரவிக்கப் பட்டபோது. அப்போதுதான் முனைவர்
> இரா.திருமுருகனையும்

> பார்த்துப் பேசினேன்....
>
> read more »

> 2009/10/15 Girija Varadharajan <girijavaradhara...@gmail.com>


>
>
>
> > For Information of SV members
>
> > ---------- Forwarded message ----------
> > From: Maravanpulavu K. Sachithananthan <tamiln...@gmail.com>
> > Date: 2009/10/15
> > Subject: தருமபுரம் ப. சுவாமிநாதன்

> > To: Sasirekha <tamiln...@tamilnool.com>
>
> > தருமபுரம் ப. சுவாமிநாதன் காலமானார். 2040 கன்னி (புரட்டாதி) 28 பின்னிரவு 49நாழிகை (15.10.2009,


> > அதிகாலை 0200 மணி) யளவில் அவரது உயிர் பிரிந்தது.
>
> > நீண்ட நாள்களாகவே நோய்வாய்ப்பட்டிருந்தார். மருத்துவ மனையில் சில காலம்
> > இருந்தார். பின்னர் போரூர், குன்றத்தூரில் அவர் வாழ்ந்த இல்லத்துக்கே
> > வந்தார். அவரது துணைவியார் கூடவே இருந்தார். பொற்றாளம் துரை. ஆறுமுகம் அவர்கள்
> > வழிகாட்டலில் அவரது அன்பர்கள் பலர் அவரது நலன் பேணி வந்தனர்.
>
> > யாழ்ப்பாணத்தில், 1960களில் சைவ பரிபாலன சபை ஆதரவில் ஏறத்தாழ ஐந்து ஆண்டுகள்
> > தங்கியிருந்து பண்ணிசை மாணவர் பலரை உருவாக்கினார். அக்காலத்திலிருந்து அவரை
> > நான் அறிவேன்.
>
> > சென்னைக்கு வந்தபின்னரும் பேரா. அ. ச. ஞானசம்பந்தன் இல்லம், தமிழிசைச் சங்கம்,
> > சென்னையில் உள்ள திருக்கோயில்கள் என அவர் எங்கிருந்தாலும் சென்று சந்திப்பேன்.
> > அவர் இசையில் ஒன்றிவிடுவேன்.
>
> > 1993இல் என் தந்தையார் சென்னையில் காலமான பொழுது என்னிடம் வந்து ஆறுதல் கூறி,
> > நீத்தார் வழிபாடுகளில் பண்ணிசைத்தார்.
>
> > பண்ணிசை உலகில் நம் தலைமுறையில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர்.
> > திருமுறைகளைப் பொருள் விளங்குமாறு இசைத்தவர். பண்ணிசைக்குப் பல்கலைக்கழகமாகவே
> > திகழ்ந்தவர்.
>
> > உலகெங்கும் இன்று பரந்து வாழும் தமிழர் ஒவ்வொருவரது இல்லத்திலும் அவரது
> > குரலொலித்துக் கொண்டிருக்கிறது.
>
> > பொற்றாளம் துரை. ஆறுமுகம் அவர்களது முயற்சியால் , திருவான்மியூர், கனால்
> > வீதியிலுள்ள வாணி பதிவகத்தாரின் திரு. விசயராகவன் அவர்கள், தருமபுரம் ப.
> > சுவாமிநாதன் அவர்களின் குரலிசையைப் பன்னிருதிருமுறையில் உள்ள 18,246 பாடல்களுள்
> >  10,325 பாடல்களுக்குப் பதிவு செய்து விற்பனைக்குத் தருகிறார்கள். இவற்றுள்
> > 11ஆம் திருமுறையின் 393 பாடல்களைத் தருமபுரம் ஆதீனம் நடத்திவரும்

> >www.thevaaram.orgமின்னம்பல தளத்தில் சேர்க்கும் உரிமையை வாணி பதிவகத்தார்


> > என் வேண்டுகோளை ஏற்றுத் தந்தனர்.
>

> > உலகம் முழுவதும் வாழும் தமிழர் துயறுற்றுக் கதற, கண்ணீர் விடத்- Hide quoted text -
>
> - Show quoted text -

VETTAI ANANTHANARAYANAN

unread,
Oct 15, 2009, 7:55:18 PM10/15/09
to santhav...@googlegroups.com

செல்வா,

பசுபதியின் இடுகை பற்றி நான் கூற நினைத்ததை மிக அழகாகச் சொல்லியுள்ளீர்கள். உங்களைப்போல நானும் அந்த ஓதுவார் பெருந்தகையை நேரில் கண்டதில்லை எனினும் ஆண்டாண்டு காலமாக மயிலாப்பூர் கபாலீச்சுவரர் கோயில் பிரகாரத்தில் மாலை வேளையில் ஒலிபரப்பி வழியே தேன்கலந்த தெய்வீகக் குரலில் அவர் பாடும் திருமுறைப் பாடல்கள் மிதந்து வந்து உள்ளம் உருக்கியதை என்றும் நினைவில் இருத்துவேன். நம் சிவசிவாவின் தயவால் அவரது பாடல்கள் நிறைந்த குறுந்தகடுகள் கிட்டியன. அவற்றைப் பொக்கிஷம் போலப் போற்றி வருவேன்.    

அனந்த்

2009/10/15 செல்வா <c.r.sel...@gmail.com>

naa.g...@gmail.com

unread,
Oct 15, 2009, 11:48:29 PM10/15/09
to சந்தவசந்தம்

http://nganesan.blogspot.com/2009/10/dharmapuram-swaminathan.html

இலந்தை, கவியோகி பாடிய இரங்கற்கவி சேர்த்தாயிற்று.

-------

சென்னை, அக். 15: தமிழிசைத் தேவாரப் பேரறிஞரும், சைவ சித்தாந்த உலகின்
இசைஞானி என்று போற்றப்படும் கலைமாமணி தருமபுரம் ப.சுவாமிநாதன் (86)
வியாழக்கிழமை அதிகாலை 2 மணி அளவில் காலமானார். சென்னை பல்லாவரத்தை
அடுத்துள்ள குன்றத்தூர் தச்சர் தெருவில் வசித்து வந்த அவருக்கு 3
மாதங்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அவருக்கு மனைவி சுலோச்சனா அம்மாள் உள்ளார்.வாழ்க்கை குறிப்பு:
நாகப்பட்டினம் மாவட்டம், நன்னிலம் வட்டம், வீராக்கண் கிராமத்தில்
29-5-1923-ம் ஆண்டு, மு.பஞ்சநாத முதலியார் -பார்வதி அண்ணி அம்மாள்
தம்பதிக்கு மூன்றாவது மகனாகப் பிறந்த ராஜகோபால் என்ற ப.சுவாமிநாதன், தனது
12-வது வயதில் தருமபுர ஆதீன மடத்தில் சேர்ந்தார். அங்கு 24-வது மகா
சன்னிதானம் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் தொண்டராகப்
பணிபுரிந்துகொண்டே, தேவார பாடசாலையில் சேர்ந்து தேவாரம் பாடும் பயிற்சியை
மேற்கொண்டார். ஆறு ஆண்டுகள் பயிற்சிக்குப் பின், முதல் மாணவராகத்
தேர்ச்சி பெற்று, தேவார இசைமணி பட்டம் பெற்றார். பின்னர் சிதம்பரம்
அண்ணாமலை இசைக் கல்லூரியில் 4 ஆண்டுகள் பயின்று, முதல் மாணவராகத் தேறிய
அவர், சங்கீத பூஷணம் பட்டம் பெற்றார். 1968-ல் தருமபுர ஆதீன தேவாரப்
பாடசாலை ஆசிரியப் பணியில் இருந்து வெளியேறிய அவர், தமிழகமெங்கும் தேவாரப்
பாடல்களைப் பாடும் திருமுறைப் பணிகளில் ஈடுபட்டார். இவர் முன்னாள் ஆளுநர்
கே.கே.ஷாவிடம் கலைமாமணி விருதையும், ஜி.கே.மூப்பனாரிடம் தமிழிசைச் சங்கம்
சார்பில் இசைப்பேரறிஞர் விருதையும் பெற்றுள்ளார். முன்னாள் முதல்வர்
எம்.ஜி.ஆர். சார்பில் தமிழக அரசவைக் கலைஞராகத் தேர்வு செய்யப்பட்டு,
அப்போது நிதி அமைச்சராக இருந்த இரா.நெடுஞ்செழியனால் சிறப்பிக்கப்பட்டார்.
குன்றத்தூரில் உள்ள சேக்கிழார் கோயிலில் மும்முறை குடமுழுக்கு நடத்திய
பெருமையும் இவரையே சாரும். 100க்கும் மேற்பட்ட கேசட்டுகளில் இவர் பாடிய
11 திருமுறைகளும் உலகெங்கும் உள்ள தமிழர்கள் கட்டி இருக்கும்
கோவில்களிலும், தமிழர்களின் இல்லங்களிலும் இன்றும் ஒலித்துக்
கொண்டிருக்கின்றன.


http://www.thehindu.com/thehindu/fr/2002/12/13/stories/2002121301420800.htm

Listening to a Thevaram or the devotional hymns sung at the specific
Kaala, and Sandhi or Saayarakashai worship, be it at a Siva temple or
that of the other Parivara Devatas, especially in the enchanting
stillness in the interior of the south is a divine experience. Such is
the glorious service of the Oduvar Murtis in the South-Indian temple
tradition. The mere mention of the Tirumurai-rendering or Tamizhisai,
will remind one of the veteran singer Dharmapuram P. Swaminathan, a
devout soul dedicated to the saintly compositions.

Dharmapuram P. Swaminathan, was born in Thanjavur district in 1923.
His early training in Thevara Isai began at the Dharmapuram Thevara
Tamizhisai Palli, under Tirumurai Kalanidhi R. Velayudha Oduvar, for a
period of five years. Swaminathan continued his training in Carnatic
vocal further at the Annamalai University under the guidance of
Chittoor Subramania Pillai and secured the Sangita Bhooshanam title
from this august institution, with a First class. With Madurai
Subramania Mudaliar, Swaminathan continued his lessons in music for
some more years.

His musical career, which spans over nearly six decades, is full of
devotional pursuits and propagation of Tevara Isai. His association
with several temple renovation projects and his voluntary contribution
through his music towards such noble endeavours form an endless list.
He has been an A Grade artist of AIR since 1952. The number of discs
to his credit is 12 discs and 700 audiocassettes.

Awards and Honours have been showered on him for his unique
contribution to this sphere of devotional music. Isai Perarignar from
Tamizhisai Sangam, Kalaimamani from the Tamil Nadu Government, State
Artist, Tamilnadu Government, the President's Award, titles and
honours from Dharmapuram, Kundrakkudi, Madurai, and Thanjai Adheenams.
He has established a Charitable Trust in his name, at Kundrathur,
Chennai.

N. Ganesan

unread,
Oct 16, 2009, 12:14:02 AM10/16/09
to Santhavasantham, tamil_...@googlegroups.com

விக்கியில் தருமபுரம் சுவாமிநாதன் பற்றிய கட்டுரை:

http://tinyurl.com/yzlph7f

அல்லது

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA._%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D

அன்புடன்
சிறீதரன்http://ta.wikipedia.orghttp://ta.wikinews.org

----- Original Message -----
From: "Sankaran M" <sankarasharma2...@gmail.com>
To: <mint...@googlegroups.com>
Sent: Friday, October 16, 2009 12:26 AM
Subject: [MinTamil] Re: தருமபுரம் ப. சுவாமிநாதன்

| *தேவார இசைத்திலகம் தருமபுரம்.ப . சுவாமிநாதன் மறைவு
கலங்கடித்துவிட்டது. தேவார
| இசை உலகில் தனக்கென்று ஒரு தனி இடத்தை தனது கணீரென்ற கம்பீர குரலால்
மனதைத்
| தொட்ட அவரின் மறைவு ஒரு வெற்றிடத்தை பெற்று இருக்கிறது என்று சொன்னால்
| மிகையாகாது. இனி நேரில் கேட்க முடியாவிட்டாலும் அவரின் இசை ஒலிப்பதிவு
| ஒன்றுதான் நமக்கெல்லாம் ஒரு ஆறுதல். அன்னாரது இசைப்பயணம் என்றென்றும்
அனைவரின்
| உள்ளத்திலும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.**
| *
| *மீனாக்ஷி. சங்கர சர்மா. சிதம்பரம்,.
| *
| 2009/10/15 Venkatachalam Subramanian <v.dotth...@gmail.com>
|
| > ஓம்
| > இசைப் பேரறிஞர் மாமேதை தருமபுரம் ப. சுவாமிநாதன் அவர்கள் ஆன்மா
சாந்தி
| > யடையவும் அன்னாரது தமிழ் இசைத் தொண்டின் பாதந்தொட்டு வணங்கி
நிற்கிறேன்.
| > வெ.சுப்பிரமணியன் ஓம்.
| >

naa.g...@gmail.com

unread,
Oct 16, 2009, 6:33:32 AM10/16/09
to சந்தவசந்தம், மின்தமிழ்

On Oct 15, 5:05 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> சிவனைப் பற்றிய சிந்தை ஏதும் இல்லாது இருந்தேனை அவன்பால் ஈர்த்தது
> சுவாமிநாதனாரின் உள்ளம் உருக்கும் தேவாரப் பாடல்களே! 2006 டிசம்பரில்
> சென்னைக்குச் சென்றிருந்தபொழுது தமிழிசைச் சங்கத்தில் அவரைச் சந்திதித்தேன்.
> அவரது பாடலைக் கேட்டு மகிழ்ந்தேன். இச்சிறியேனின் உள்ளத்தில் என்றும் நீங்காமல்
> இருப்பவர் அவர்.
>
> "பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்" - திருத்தொண்டத் தொகை


தருமபுரத்தின் 165 பாடல்களைக் கேட்கலாம்:
http://www.raaga.com/channels/tamil/singers/Dharmapuram_P._Swaminathan/Popular/1

9 பக்கங்கள் - முதல் 8 பக்கங்கள் ஒவ்வொன்றிலும் 20 பாடல்கள்!

கணேசன்

naa.g...@gmail.com

unread,
Oct 16, 2009, 6:41:57 AM10/16/09
to சந்தவசந்தம்

முருகா முருகா முருகையா
http://www.raaga.com/player4/?id=58863&mode=100&rand=0.014515264873618205

வள்ளலார் பாட்டு!

Siva Siva

unread,
Oct 16, 2009, 4:13:39 PM10/16/09
to santhav...@googlegroups.com
தருமபுரம் சுவாமிநாதனின் பக்தி தோய்ந்த குரலில் திருமுறைப் பாடல்களைக் கேட்பது ஒரு தனி அனுபவம். வாழ்வு முழுதும் சிவனைப் பாடிய நாவுடையவர் அவர். எளிமையின் உருவாகத் திகழ்ந்தவர்.
 
அவர் திருவடிகளுக்கு வணக்கம்.
 

மூளுமன் போடுநால் வர்தமிழ்ப் பாடலால்
நாளுமா தேவனார் நற்புகழ் பாடுவார்;
மாளுமோ இன்குரற் சாமிநா தன்புகழ்?
ஆளுமன் னார்கழல் பத்தரெந் தம்மையே.



 

2009/10/15 Siva Siva <naya...@gmail.com>
Dharmapuram_Swaminathan.pdf

செல்வா

unread,
Oct 16, 2009, 5:17:57 PM10/16/09
to சந்தவசந்தம்
அன்புள்ள வி.சு அவர்களே,

மிக அருமை உங்கள் பாட்டு!
நல்ல புகழஞ்சலி!

உங்கள் பாட்டை இசையோடு பாடினால்
மிக அழகாக இசைந்து வரும் எனத் தோன்றியது.

பி.டி.எவ்' இணைப்புக்கும் நன்றி!

அன்புடன்
செல்வா

On Oct 16, 4:13 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> தருமபுரம் சுவாமிநாதனின் பக்தி தோய்ந்த குரலில் திருமுறைப் பாடல்களைக் கேட்பது
> ஒரு தனி அனுபவம். வாழ்வு முழுதும் சிவனைப் பாடிய நாவுடையவர் அவர். எளிமையின்
> உருவாகத் திகழ்ந்தவர்.
>

>  Dharmapuram_Swaminathan.pdf
> 93KViewDownload


>
> அவர் திருவடிகளுக்கு வணக்கம்.
>
> மூளுமன் போடுநால் வர்தமிழ்ப் பாடலால்
> நாளுமா தேவனார் நற்புகழ் பாடுவார்;
> மாளுமோ இன்குரற் சாமிநா தன்புகழ்?
> ஆளுமன் னார்கழல் பத்தரெந் தம்மையே.
>

> 2009/10/15 Siva Siva <nayanm...@gmail.com>


>
>
>
>
>
> > சிவனைப் பற்றிய சிந்தை ஏதும் இல்லாது இருந்தேனை அவன்பால் ஈர்த்தது
> > சுவாமிநாதனாரின் உள்ளம் உருக்கும் தேவாரப் பாடல்களே! 2006 டிசம்பரில்
> > சென்னைக்குச் சென்றிருந்தபொழுது தமிழிசைச் சங்கத்தில் அவரைச் சந்திதித்தேன்.
> > அவரது பாடலைக் கேட்டு மகிழ்ந்தேன். இச்சிறியேனின் உள்ளத்தில் என்றும் நீங்காமல்
> > இருப்பவர் அவர்.
>
> > "பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்" - திருத்தொண்டத் தொகை
>

> > 2009/10/15 srinivasan s <vasans2...@gmail.com>


>
> >> திடுக்கிடும் செய்தி, இரண்டு நாட்களுக்கு முன் தான் பொதிகையில் அவரது இசையைக்
> >> கேட்டேன். மிகவும் வருத்தமாக இருக்கிறது.
> >> தாஸன்
>

> --http://nayanmars.netne.net/
> 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/- Hide quoted text -

செல்வா

unread,
Oct 16, 2009, 5:25:28 PM10/16/09
to சந்தவசந்தம்
அன்புள்ள பேரா அனந்த்,

தங்கள் கருத்தைக் கனிவுடன் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

சிவசிவா அவர்கள் அன்போடு கூறுவதுபோல,

"மூளும் அன்போடு நால்வர்தமிழ்ப் பாடலால்
நாளு(ம்) மாதேவனார் நற்புகழ் பாடுவார்"- ஆயிற்றே ஓதுவார்!

அன்புடன்
செல்வா


On Oct 15, 7:55 pm, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
> செல்வா,...
>
> read more »


>
> பசுபதியின் இடுகை பற்றி நான் கூற நினைத்ததை மிக அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.
> உங்களைப்போல நானும் அந்த ஓதுவார் பெருந்தகையை நேரில் கண்டதில்லை எனினும்
> ஆண்டாண்டு காலமாக மயிலாப்பூர் கபாலீச்சுவரர் கோயில் பிரகாரத்தில் மாலை வேளையில்
> ஒலிபரப்பி வழியே தேன்கலந்த தெய்வீகக் குரலில் அவர் பாடும் திருமுறைப் பாடல்கள்
> மிதந்து வந்து உள்ளம் உருக்கியதை என்றும் நினைவில் இருத்துவேன். நம்
> சிவசிவாவின் தயவால் அவரது பாடல்கள் நிறைந்த குறுந்தகடுகள் கிட்டியன. அவற்றைப்
> பொக்கிஷம் போலப் போற்றி வருவேன்.
>
> அனந்த்

> 2009/10/15 செல்வா <c.r.selvaku...@gmail.com>

> > > > வழிகாட்டலில் அவரது அன்பர்கள் பலர்- Hide quoted text -

Siva Siva

unread,
Oct 17, 2009, 6:47:29 PM10/17/09
to santhav...@googlegroups.com

2009-10-17
2) --- '
விளம் விளம் விளம் விளம்' அரையடி ---
அப்பரும் காழியூர் ஞானசம் பந்தரும்
..
அண்ணலார் தோழரும் வாதவூர் அடிகளும்
செப்பரும் தமிழெனும் தேனினில் திளைத்தவர்;
..
சிவனையே நாள்தொறும் சிந்தனை செய்தவர்;
ஒப்பரும் பண்ணுடன் பக்தியும் இழையநல்
..
உச்சரிப்(பு) ஒளிரவே பாடிய நல்லவர்;
அப்பெரும் மாண்பினர் தருமைசா மிநாதனார்;
..
அவர்புகழ் நிலவுமிவ் வுலகினில் என்றுமே.

செப்பு அரும் தமிழ் - செப்பிய திருமுறைப் பாடல்கள்;

3) --- (
மா மா மா மா விளம்) ---
ஆனை உகந்த கோனை ஏத்தும் அமுதினை
ஊனை உருக்கும் வானை அளிக்கும் திருமுறைத்
தேனை ஓது சாமி நாதன் சிவபெரு
மானைப் பாடி அவன்தாள் நிழலில் மகிழ்வரே.

ஆன் - எருது; (ஆனை உகந்த கோன் - நந்திவாகனன்0;

4) --- ('
காய் மா தேமா' அரையடி வாய்பாடு) ---
இருவினையை வேர றுக்கும்
..
இனியதமிழ் மாலை யான
திருமுறையைத் தெவிட்டாத் தேனைத்
..
தினந்தோறும் பாடி வாழ்ந்த
தருமபுரம் சாமி நாதன்
..
சங்கரனார் தாளைச் சேர்ந்தார்
அரும்பணிகள் செய்து விட்டார்
..
அவர்க்கிங்கே இல்லை ஈடே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/10/16 Siva Siva <naya...@gmail.com>

Kaviyogi Vedham

unread,
Oct 17, 2009, 7:37:03 PM10/17/09
to santhav...@googlegroups.com
ரொம்ப நன்றி கணேசன் அவர்களே. நெஞ்சம் நெகிழ்ந்தது..
யோகியார்

Siva Siva

unread,
Oct 18, 2009, 12:28:51 PM10/18/09
to santhav...@googlegroups.com
A few pages from a book "Dealing with deities" - that has some interview excerpts of Dharmapuram Swaminathan.


Dharmapuram Swaminathan interview - Dealing with deities - chapter 9.pdf

naa.g...@gmail.com

unread,
Oct 18, 2009, 12:32:29 PM10/18/09
to சந்தவசந்தம்

On Oct 16, 3:13 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> தருமபுரம் சுவாமிநாதனின் பக்தி தோய்ந்த குரலில் திருமுறைப் பாடல்களைக் கேட்பது
> ஒரு தனி அனுபவம். வாழ்வு முழுதும் சிவனைப் பாடிய நாவுடையவர் அவர். எளிமையின்
> உருவாகத் திகழ்ந்தவர்.
>
> அவர் திருவடிகளுக்கு வணக்கம்.
>
> மூளுமன் போடுநால் வர்தமிழ்ப் பாடலால்
> நாளுமா தேவனார் நற்புகழ் பாடுவார்;
> மாளுமோ இன்குரற் சாமிநா தன்புகழ்?
> ஆளுமன் னார்கழல் பத்தரெந் தம்மையே.
>

சிவசிவா ஐயா,

குறிப்புரை தரமுடியுமா? முக்கியமாய்,
ஈற்றடியை எங்கே கூட்டுவது?

உங்கள் 3 செய்யுளையும் ஓதுவார் அஞ்சலிப் பதிவில் சேர்த்துவேன்.

நா. கணேசன்

> 2009/10/15 Siva Siva <nayanm...@gmail.com>


>
>
>
> > சிவனைப் பற்றிய சிந்தை ஏதும் இல்லாது இருந்தேனை அவன்பால் ஈர்த்தது
> > சுவாமிநாதனாரின் உள்ளம் உருக்கும் தேவாரப் பாடல்களே! 2006 டிசம்பரில்
> > சென்னைக்குச் சென்றிருந்தபொழுது தமிழிசைச் சங்கத்தில் அவரைச் சந்திதித்தேன்.
> > அவரது பாடலைக் கேட்டு மகிழ்ந்தேன். இச்சிறியேனின் உள்ளத்தில் என்றும் நீங்காமல்
> > இருப்பவர் அவர்.
>
> > "பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்" - திருத்தொண்டத் தொகை
>

> > 2009/10/15 srinivasan s <vasans2...@gmail.com>


>
> >> திடுக்கிடும் செய்தி, இரண்டு நாட்களுக்கு முன் தான் பொதிகையில் அவரது இசையைக்
> >> கேட்டேன். மிகவும் வருத்தமாக இருக்கிறது.
> >> தாஸன்
>

> --http://nayanmars.netne.net/


> 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/
>

>  Dharmapuram_Swaminathan.pdf
> 93KViewDownload

naa.g...@gmail.com

unread,
Oct 18, 2009, 12:33:03 PM10/18/09
to சந்தவசந்தம்

ஓ, கேரனின் பேப்பரா?

On Oct 18, 11:28 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> A few pages from a book "Dealing with deities" - that has some interview
> excerpts of Dharmapuram Swaminathan.
>
>  Dharmapuram Swaminathan interview - Dealing with deities - chapter 9.pdf
> 446KViewDownload

naa.g...@gmail.com

unread,
Oct 18, 2009, 12:37:42 PM10/18/09
to சந்தவசந்தம்

On Oct 16, 3:13 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:

> தருமபுரம் சுவாமிநாதனின் பக்தி தோய்ந்த குரலில் திருமுறைப் பாடல்களைக் கேட்பது
> ஒரு தனி அனுபவம். வாழ்வு முழுதும் சிவனைப் பாடிய நாவுடையவர் அவர். எளிமையின்
> உருவாகத் திகழ்ந்தவர்.
>
> அவர் திருவடிகளுக்கு வணக்கம்.
>
> மூளுமன் போடுநால் வர்தமிழ்ப் பாடலால்
> நாளுமா தேவனார் நற்புகழ் பாடுவார்;
> மாளுமோ இன்குரற் சாமிநா தன்புகழ்?
> ஆளுமன் னார்கழல் பத்தரெந் தம்மையே.
>

உள்ளம் தெளிந்தது!

அன்னார் கழல் பத்தர் எம்தம்மை ஆளும்.

> 2009/10/15 Siva Siva <nayanm...@gmail.com>
>
>
>


> > சிவனைப் பற்றிய சிந்தை ஏதும் இல்லாது இருந்தேனை அவன்பால் ஈர்த்தது
> > சுவாமிநாதனாரின் உள்ளம் உருக்கும் தேவாரப் பாடல்களே! 2006 டிசம்பரில்
> > சென்னைக்குச் சென்றிருந்தபொழுது தமிழிசைச் சங்கத்தில் அவரைச் சந்திதித்தேன்.
> > அவரது பாடலைக் கேட்டு மகிழ்ந்தேன். இச்சிறியேனின் உள்ளத்தில் என்றும் நீங்காமல்
> > இருப்பவர் அவர்.
>
> > "பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்" - திருத்தொண்டத் தொகை
>

> > 2009/10/15 srinivasan s <vasans2...@gmail.com>


>
> >> திடுக்கிடும் செய்தி, இரண்டு நாட்களுக்கு முன் தான் பொதிகையில் அவரது இசையைக்
> >> கேட்டேன். மிகவும் வருத்தமாக இருக்கிறது.
> >> தாஸன்
>

> --http://nayanmars.netne.net/


> 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/
>

>  Dharmapuram_Swaminathan.pdf
> 93KViewDownload

Siva Siva

unread,
Oct 18, 2009, 12:52:18 PM10/18/09
to santhav...@googlegroups.com





ஓ, கேரனின் பேப்பரா?

இந்நூல் பல்கலைக்கழக நூலகங்களில் இருக்கலாம்.

http://www.amazon.com/Dealing-Deities-Ritual-South-Asia/dp/0791467082/ref=sr_1_1?ie=UTF8&s=books&qid=1255884593&sr=8-1

 

Siva Siva

unread,
Oct 19, 2009, 8:26:20 AM10/19/09
to santhav...@googlegroups.com

இசை பாடும் அடியார்க்கு இறைவன் அருள்வதைச் சொல்லும் இரு தேவாரப் பாடல்கள்


சம்பந்தர் தேவாரம் - திருமுறை 2.43.8

பண்ணொன்ற இசைபாடும் அடியார்கள் குடியாக
மண்ணின்றி விண்கொடுக்கும் மணிகண்டன் மருவுமிடம்
எண்ணின்றி முக்கோடி வாணாள(து) உடையானைப்
புண்ணொன்றப் பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே.

பண்பொருந்த இசைபாடும் அடியவர்கள் குடியாக இருந்து வழிபட உலகியல் இன்பங்களை மட்டுமல்லாமல் விண்ணுலக இன்பங்களையும் அருளும் நீலமணி மிடற்றோனும், கணக்கில் அடங்காத மூன்று கோடி ஆண்டுகளை வாழ்நாளாகப் பெற்ற இராவணனொடு போரிட்டுப் புண்படும்படி செய்து அவன் வலிமையை அழித்த சடாயுவால் பூசிக்கப்பட்டவனுமாகிய சிவபிரான் மருவும் இடம் புள்ளிருக்கு வேளூர்.

------

திருநாவுக்கரசர் தேவாரம் - திருமுறை 4.77.3

விளக்கினாற் பெற்ற இன்ப[ம்] மெழுக்கினால் பதிற்றி ஆகும்
துளக்கினன் மலர்தொ டுத்தால் தூயவிண் ஏறல் ஆகும்
விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ஞ்ஞெறி ஞானம் ஆகும்
அளப்பில கீதம் சொன்னார்க்(கு) அடிகள்தாம் அருளு மாறே.

திருக்கோயிலைப் பெருக்குவதனால் பெறும் இன்பத்தைப் போல அதனை மெழுகுவதனால் பத்து மடங்கு இன்பம் ஏற்படும். ஒளியை உடைய நல்ல மலர்களைப் பறித்து அவற்றை மாலையாகத் தொடுத்து இறைவனுக்கு ஒப்படைத்தால், தூய வீட்டுலகத்துக்கு இவ்வான்மா மேல் நோக்கிச் செல்லும். கோயிலில் விளக்கு ஏற்றுபவர்கள் உண்மை வழியில் செலுத்தும் ஞானமாகிய பேறு பெறுவர். எல்லையில்லாத பாடல்களைப் பாடுபவர்களுக்கு இறைவன் அருளும் வகைகள் எல்லை இல்லாதன.



2009/10/17 Siva Siva <naya...@gmail.com>

2009-10-17


செல்வா

unread,
Oct 19, 2009, 9:30:33 AM10/19/09
to சந்தவசந்தம்
ஆகா அருமை!

இறைவனைத் தமிழில் பண்ணவன் என்றே போற்றும் முறைமை
உண்டல்லவா. இசை வடிவானவன், இசையின் உட்பொருளே
இறைவன், பண்ணவன்.

அன்புடன்
செல்வா

> 2009/10/17 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 2009-10-17
>
> --http://nayanmars.netne.net/

Pas Pasupathy

unread,
Oct 30, 2009, 11:42:32 AM10/30/09
to santhav...@googlegroups.com
தர்மபுரம் சுவாமிநாதனைப் பற்றி
 

Kaviyogi Vedham

unread,
Oct 30, 2009, 2:00:05 PM10/30/09
to santhav...@googlegroups.com
ரொம்ப அருமையான கட்டுரை. படித்து நெகிழ்ந்தேன்,
 யோகியார்

2009/10/30 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

K.R. Kumar

unread,
Oct 30, 2009, 2:06:49 PM10/30/09
to santhav...@googlegroups.com
அன்புள்ள பசுபதி சார்,

நமஸ்காரங்கள்.

தருமபுரம் சாமிநாதனைப் பற்றி சுருக்கமாகத் தெரிந்துகொள்ள மிகச் சிறந்த சுட்டி அளித்தமைக்கு நன்றி.

அன்புடன்
குமார்(சிங்கை)
2009/10/30 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

Siva Siva

unread,
Oct 30, 2009, 8:26:52 PM10/30/09
to santhav...@googlegroups.com
தகவலுக்கு நன்றி.

அவர் வாழ்க்கைக் குறிப்புகள் அடங்கிய ஒரு நூலும் வெளிவந்துள்ளது என்பது நான் அறிந்திராத செய்தி.


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2009/10/30 Pas Pasupathy <pas.pa...@gmail.com>



--

thangamani

unread,
Oct 31, 2009, 3:29:06 AM10/31/09
to சந்தவசந்தம்
தருமபுரம் சுவாமிநாதன் அவர்களைப் பற்றிய,
அருமையான நிகழ்வுகளை அறியும்படியானச் சுட்டி அளித்த
திரு.பசுபதி அவர்களுக்கு மிகவும் நன்றி!

அன்புடன்,
தங்கமணி.

Siva Siva

unread,
Oct 31, 2009, 9:58:17 PM10/31/09
to santhav...@googlegroups.com
Audio of these songs attached.

2009/10/17 Siva Siva <naya...@gmail.com>
Dharmapuram-Tribute-04.mp3
Dharmapuram-Tribute-01.mp3
Dharmapuram-Tribute-02.mp3
Dharmapuram-Tribute-03.mp3

K.R. Kumar

unread,
Oct 31, 2009, 10:11:32 PM10/31/09
to santhav...@googlegroups.com
அன்புள்ள சிவா சிவா,
 
அழகாகப் பாடியிருப்பது யார்?
 
அன்புடன்,
குமார்(சிங்கை)

2009/11/1 Siva Siva <naya...@gmail.com>

Pas Pasupathy

unread,
Oct 31, 2009, 10:11:45 PM10/31/09
to santhav...@googlegroups.com
Very nice. The 2nd song ( அப்பரும்... ) is very moving.
 
Pasupathy

2009/10/31 Siva Siva <naya...@gmail.com>

Siva Siva

unread,
Oct 31, 2009, 10:16:38 PM10/31/09
to santhav...@googlegroups.com
பாடியவர் வசந்தி.

2009/10/31 K.R. Kumar <krish...@gmail.com>

அன்புள்ள சிவா சிவா,
 
அழகாகப் பாடியிருப்பது யார்?
 
அன்புடன்,
குமார்(சிங்கை)

2009/11/1 Siva Siva <naya...@gmail.com>
Audio of these songs attached.


K.R. Kumar

unread,
Nov 1, 2009, 12:22:32 AM11/1/09
to santhav...@googlegroups.com
வசந்திக்கு வாழ்த்துகள்.

thangamani

unread,
Nov 1, 2009, 7:37:14 AM11/1/09
to சந்தவசந்தம்
திருமதி.வசந்திக்கு எங்கள் பாராட்டுகள்!
இனிமையானகுரலில் பாடி நெகிழ்ச்சியடையச் செய்துவிட்டார்!
வாழ்த்துகள்!

அன்புடன்,
தங்கமணி.

On Oct 31, 8:22 pm, "K.R. Kumar" <krishra...@gmail.com> wrote:
> வசந்திக்கு வாழ்த்துகள்.
>
> அன்புடன்,
> குமார்(சிங்கை)
>

> 2009/11/1 Siva Siva <nayanm...@gmail.com>


>
>
>
> > பாடியவர் வசந்தி.
>

> >  2009/10/31 K.R. Kumar <krishra...@gmail.com>


>
> >> அன்புள்ள சிவா சிவா,
>
> >> அழகாகப் பாடியிருப்பது யார்?
>
> >> அன்புடன்,
> >>  குமார்(சிங்கை)
>

> >> 2009/11/1 Siva Siva <nayanm...@gmail.com>


>
> >>>  Audio of these songs attached.
>
> > --
> >http://nayanmars.netne.net/

> > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/- Hide quoted text -

thangamani

unread,
Nov 1, 2009, 7:57:55 AM11/1/09
to சந்தவசந்தம்
தருமபுரம் சுவாமிநாதன் அவர்கள் இறையடி அடைந்தபோது
சிவசிவா உணர்ந்து இயற்றிய தண்டமிழ்ச் சொற்கவிதைகளுக்கு,
என் பாராட்டுகள்!அப்பாடல்களை இன்குரலில் இசைத்த
திருமதி.வசந்திசிவாவுக்கும் என் ஆசிகள்!

அன்புடன்,
தங்கமணி.


On Oct 31, 5:58 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> Audio of these songs attached.
>

>  Dharmapuram-Tribute-04.mp3
> 1149KViewDownload
>
>  Dharmapuram-Tribute-01.mp3
> 536KViewDownload
>
>  Dharmapuram-Tribute-02.mp3
> 2362KViewDownload
>
>  Dharmapuram-Tribute-03.mp3
> 1003KViewDownload
>
> 2009/10/17 Siva Siva <nayanm...@gmail.com>

> > 2009/10/16 Siva Siva <nayanm...@gmail.com>


>
> >> தருமபுரம் சுவாமிநாதனின் பக்தி தோய்ந்த குரலில் திருமுறைப் பாடல்களைக்
> >> கேட்பது ஒரு தனி அனுபவம். வாழ்வு முழுதும் சிவனைப் பாடிய நாவுடையவர் அவர்.
> >> எளிமையின் உருவாகத் திகழ்ந்தவர்.
>
> >> அவர் திருவடிகளுக்கு வணக்கம்.
>
> >> மூளுமன் போடுநால் வர்தமிழ்ப் பாடலால்
> >> நாளுமா தேவனார் நற்புகழ் பாடுவார்;
> >> மாளுமோ இன்குரற் சாமிநா தன்புகழ்?
> >> ஆளுமன் னார்கழல் பத்தரெந் தம்மையே.
>

> --http://nayanmars.netne.net/

VETTAI ANANTHANARAYANAN

unread,
Nov 1, 2009, 2:45:08 PM11/1/09
to santhav...@googlegroups.com

பண்பாடிப் பரமனை அடைந்த பெரியவரைப் பற்றி எழுதிய பாக்களுக்கேற்ற இசை அமைப்பும் குரலும் அருமையாக அமைந்துள்ளன.

அனந்த்

பி.கு. மணி,

இன்னொரு குழுவில், ‘நீலகண்டனை ஏத்து மனமே’ பாடல்களுக்கு ஆன வசந்தியின் இசையை நீங்கள் இட்டுள்ள ஒலிப்பதிவையும் இங்கும் இட்டால் நன்று.

2009/11/1 thangamani <tvthan...@gmail.com>

Siva Siva

unread,
Oct 20, 2011, 9:12:18 PM10/20/11
to santhav...@googlegroups.com

2011-10-20
தர்மபுரம் சுவாமிநாதன் அஞ்சலி (அன்னாரின் மறைவு - 2009-10-15)
---------------------------------------
(
அறுசீர் விருத்தம் - 'மா மா காய்' வாய்பாடு)

அசையாப் பத்தி அதனோடே
..
ஆர்க்கும் புரியும் விதமாக
இசையால் ஈசன் புகழ்பாடி
..
எளிமை மாறா இயல்பினராய்த்
திசையார் புகழும் சீர்பெற்ற
..
செல்வர் சாமி நாதனார்
தசையார் உடல்விட் டேகிடினும்
..
தங்கி னாரெம் உள்ளத்தே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/10/17 Siva Siva <naya...@gmail.com>


2009/10/16 Siva Siva <naya...@gmail.com>
2009/10/15 Siva Siva <naya...@gmail.com>

சிவனைப் பற்றிய சிந்தை ஏதும் இல்லாது இருந்தேனை அவன்பால் ஈர்த்தது சுவாமிநாதனாரின் உள்ளம் உருக்கும் தேவாரப் பாடல்களே! 2006 டிசம்பரில் சென்னைக்குச் சென்றிருந்தபொழுது தமிழிசைச் சங்கத்தில் அவரைச் சந்தித்தேன். அவரது பாடலைக் கேட்டு மகிழ்ந்தேன். இச்சிறியேனின் உள்ளத்தில் என்றும் நீங்காமல் இருப்பவர் அவர். 

"பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்" - திருத்தொண்டத் தொகை

kumaraswamy k

unread,
Oct 21, 2011, 9:37:49 AM10/21/11
to santhav...@googlegroups.com
மறக்காமல் இப்படி அவரை நினைந்ததே உங்கள் உண்மையான பிடிப்பிற்கு அடையாளம்.

2011/10/21 Siva Siva <naya...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Siva Siva

unread,
Oct 14, 2019, 7:57:51 PM10/14/19
to santhavasantham

2019-10-14

தர்மபுரம் சுவாமிநாதன் அஞ்சலி (அவர் சிவனடி சேர்ந்த நாள்: 15-Oct-2009)

----------

(அறுசீர் விருத்தம் - "காய் காய் காய் காய் மா தேமா" என்ற வாய்பாடு);


சேவாரும் கொடியுடைய சிவனெம்மான் திருப்புகழைத் தினமும் அன்பால்

நாவாரப் பாடியிந்த நானிலத்தோர் செவிகளிலே நன்மை மிக்க

தேவாரத் தேன்பாயச் செய்ததர்ம புரம்சாமி நாத னார்சீர்

ஓவாது நிலவுமென்றும் உமைபங்கன் அடியார்கள் உள்ளத் துள்ளே.


பதம் பிரித்து:

சே ஆரும் கொடி உடைய சிவன் எம்மான் திருப்புகழைத் தினமும் அன்பால்

நா ஆரப் பாடி இந்த நானிலத்தோர் செவிகளிலே நன்மை மிக்க

தேவாரத்தேன் பாயச் செய்த தர்மபுரம் சாமிநாதனார் சீர்

ஓவாது நிலவும் என்றும் உமைபங்கன் அடியார்கள் உள்ளத்துள்ளே.


அன்பொடு,

வி. சுப்பிரமணியன்

"மதிசூடி துதிபாடி" blog: http://madhisudi.blogspot.com/

Subbaier Ramasami

unread,
Oct 14, 2019, 8:17:55 PM10/14/19
to santhavasantham
ஈர்த்த  புகழ்ச் சாமி   நாதன்  இசைவெள்ளம்
வார்த்தளிக்கப் பட்ட வரம்

On Mon, Oct 14, 2019 at 6:57 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

Siva Siva

unread,
Oct 16, 2020, 8:24:58 AM10/16/20
to santhavasantham
Dharmapuram Swamninathan - Remebering his service.

Siva Siva

unread,
Oct 14, 2021, 10:34:10 PM10/14/21
to santhavasantham

Dharmapuram Swaminathan reached Siva's lotus feet on 15-Oct-2009.

Great voice and wonderful moving delivery!


V. Subramanian

Siva Siva

unread,
Oct 25, 2022, 10:46:29 PM10/25/22
to santhavasantham

Here is a song I wrote in 2009 - a tribute to Dharmapuram Swaminathan.

https://youtu.be/J1kSt9lrCDU


V. Subramanian

Anand Ramanujam

unread,
Oct 26, 2022, 5:12:13 AM10/26/22
to santhav...@googlegroups.com
Melodious song with moving words.
Very nice!

- Anand

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCPFQu%3DcYcbNz_5_oKZ_Zjwr8OtR5eBY3%2BBd31Uu1SUWFw%40mail.gmail.com.

Siva Siva

unread,
Oct 26, 2022, 9:29:09 AM10/26/22
to santhav...@googlegroups.com
Thanks.

Siva Siva

unread,
Oct 14, 2025, 9:01:26 PM10/14/25
to santhavasantham

2025-10-11

தர்மபுரம் சுவாமிநாதன்

(அவர் சிவனடி அடைந்த நாள்: 15-Oct-2009)

----------

(கலித்துறை - மா மா மா மா விளங்காய் - வாய்பாடு)


காம கோபன் கயிலைக் கிறைவன் கதிர்மதியன்

வாம தேவன் மணியார் கண்டன் மழவிடையன்

நாமம் நாளும் நாவில் அணிந்த தருமபுரம்

சாமி நாதன் தன்சீர் மன்னும் தரணியிலே.


காமகோபன் -

கயிலைக்கு இறைவன் -

கதிர்மதியன் - (கதிர் - கிரணம்); (கதிர்த்தல் - பிரகாசித்தல்);

வாமதேவன் - (வாமதேவம் - சிவனது ஐம்முகங்களில் ஒன்று);

மணி ஆர் கண்டன் -

மழவிடைன் -

நாமம் நாளும் நாவில் அணிந்த தருமபுரம் சாமிநாதன்தன் சீர் மன்னும் தரணியிலே -


விசுப்பிரமணியன்

***

https://tamildigitallibrary.in/Articles/நூல்-24562-ஓதுவார்%20மரபினர்-ஓர்%20ஆய்வு

ஓதுவார் மரபினர் - ஓர் ஆய்வு (published 1998)


ஓதுவார்கள் பற்றிய இந்நூலில் - Dharmapuram P. Swaminathan - தர்மபுரம் ப. சுவாமிநாதன் - சில குறிப்புகளை 22-ஆம் பக்கத்தில் காணலாம்.

***

=====

Arasi Palaniappan

unread,
Oct 15, 2025, 4:54:32 AM10/15/25
to சந்தவசந்தம்
அருமை. தக்கார்க்குத் தக்க பாராட்டு!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Oct 15, 2025, 8:12:13 AM10/15/25
to santhav...@googlegroups.com
Thanks.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Oct 15, 2025, 10:46:23 AM10/15/25
to santhav...@googlegroups.com
🙏 He was a legend in his own time Unforgettable devotional voice 
Ananth

--

Siva Siva

unread,
Oct 15, 2025, 10:57:29 AM10/15/25
to santhav...@googlegroups.com
Yes, very true!

V. Subramanian

Swaminathan Sankaran

unread,
Oct 15, 2025, 12:11:50 PM10/15/25
to santhav...@googlegroups.com
தருமபுரம் சுவாமிநாதனுக்கு முன்னோடியாக மைலை கபாலி கோவிலில் ஒரு ஓதுவார் இருந்தார்.
அவர் பெயர் சுப்பிரமணிய ஓதுவாரா அல்லது சுவாமிநாத ஓதுவாரா என்று ஞாபகம் இல்லை. 1950 - 60 களில்  விடிகாலை சூரிய உ உதயோகத்திற்கு 
சில வினாடிகள் முன்னால் பிரகாரத்தைச் சுற்றி வலம் வந்து கொண்டே திருமுறைகளை ஓதிக் கொண்டே செல்வார். அவர் பின்னால் சில 
hard core பக்தர்களும் பக்தைகளும் தினமும் அவற்றையே ஓதிக் கொண்டு போவார்கள். எல்லாம் சுமார் 15 அல்லது 20 நிமிடங்களுக்கு மட்டுமே! ஓதுபவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் அது ஒரு சுகமான, ஆழ்ந்த நிம்மதியான அனுபவத்தைக் கொடுக்கும்.

சங்கரன் 



--
 Swaminathan Sankaran

Siva Siva

unread,
Oct 15, 2025, 12:19:09 PM10/15/25
to santhav...@googlegroups.com
Thanks. It must have been a great experience.

Here is an autobiography of Dharmapuram Swaminathan - from his 80th birthday souvenir:

V. Subramanian

இமயவரம்பன்

unread,
Oct 16, 2025, 5:57:42 AM10/16/25
to santhav...@googlegroups.com, santhavasantham
மிக இனிமையான வாழ்த்துக் கவிதை! 

Rajagopalan Soundararajan

unread,
May 27, 2026, 6:35:37 AM (10 days ago) May 27
to சந்தவசந்தம்
அண்மையில் பாரதத்தில் 'பத்ம' விருதுகள் வழங்கப்பட்டன. 2026 ஆண்டுக்கான 'பத்மஶ்ரீ' விருது பெற்றவர்களில் ஒருவர் திரு. தருமபுரம் ஸ்வாமிநாதன். இவருக்கு வாழ்த்து கூறும் விதம் இங்கு ஒருவரும் கவிதை இடவில்லையே! 
ஸௌந்தர் 

Rajagopalan Soundararajan

unread,
May 27, 2026, 6:39:44 AM (10 days ago) May 27
to சந்தவசந்தம்
ஓதுவார் திருத்தணி ஸ்வாமிநாதன் என்று (அரசு பதிவில்) பதிவாகி உள்ளது. கூகிள் தேடலில் தருமபுரம் என்று அறியக் கிடைக்கிறது. தெளிவு தேவை.

Siva Siva

unread,
May 27, 2026, 8:58:39 AM (10 days ago) May 27
to santhav...@googlegroups.com
Odhuvar Thiruthani Swaminathan received Padmasri this year.

V. Subramanian

Reply all
Reply to author
Forward
0 new messages