வெண்பா உத்திகள்: கடையிணை மோனை வெண்பா

128 views
Skip to first unread message

sai...@gmail.com

unread,
Dec 22, 2021, 7:36:23 AM12/22/21
to சந்தவசந்தம்
#ரமணி_வெண்பாவுத்திகள்
வெஉ.05.28. கடையிணை மோனை வெண்பா
மோனை விகற்பங்கள் என்று அழைக்கப்படும்
• அடிமோனை (அடிகளின் முதற்சீர்)
• இணைமோனை (ஓரடியில் சீர்கள் 1-2)
• பொழிப்பு மோனை (சீர்கள் 1-3)
• ஒரூஉ மோனை (சீர்கள் 1-4)
• கூழை மோனை (சீர்கள் 1-2-3)
• மேற்கதுவாய் மோனை (சீர்கள் 1-3-4)
• கீழ்க்கதுவாய் மோனை (சீர்கள் 1-2-4)
• முற்று மோனை (சீர்கள் 1-2-3-4)
.
ஆகிய எட்டு விகற்பங்களும்
• செய்யுளின் நாற்சீர் அடியில்
• முதற் சீரிலிருந்து கணக்கிட்டுப் பெயரிடப் பட்டுள்ளன.
.
மோனைக்குப் புறனடையாகச்
• செய்யுளின் நாற்சீர் அடியில்
• இறுதிச் சீரிலிருந்து கணக்கிட்டுக் கீழ்க்காணும்
• நான்கு மோனை விகற்பங்கள் உள்ளன.
• கடையிணை மோனை (சீர்கள் 4-3)
• பின்மோனை (சீர்கள் 4-2)
• கடைக்கூழை மோனை (சீர்கள் 4-3-2)
• இடைப்புணர் மோனை (சீர்கள் 3-2).
.
இவ்வுத்தியில்
• புறனடை மோனை விகற்பங்களுள்
• கடையிணை மோனை (சீர்கள் 4-3) வைத்தோர்
• அளவியல் வெண்பா புனையலாம்.
• கடையிணை மோனை வரும் அடியில்
• பிறவிகற்ப மோனை யாதும் வரலாகாது என்று கொள்வோம்.
.
வெஉ.05.28. கடையிணை மோனை வெண்பா
அன்பர் வெண்பாக்கள்
01. குருநாதன் ரமணி
(இன்னிசை வெண்பா: கடையிணை மோனை)
தென்னைமரம் மேலே குயில்தன் குரல்விரிக்கும்
புன்னைமரம் மேலொரு தேன்சிட்டு தேடும்
பொழிலில் மலரைச் சுரும்பர் துளைக்கும்
எழில்மலி மாலை வளம். ... 1
.
விமானம்கீழ் மூர்த்தியைக் கண்ணாரக் கண்டு
பெமானே எனவுருகிப் போற்றிப் புகழ்ந்தே
அழுந்தி மனத்தில் ஒருமித்(து) உணர்ந்தே
விழுந்து வணங்க வரம். ... 2
[பெமானே: பெம்மானே என்பதன் இடைக்குறை விகாரம்]
.
★★★★★

sai...@gmail.com

unread,
Dec 24, 2021, 8:00:39 AM12/24/21
to சந்தவசந்தம்
#ரமணி_வெண்பாவுத்திகள்
வெஉ.05.29. கடைக்கூழை மோனை வெண்பா
இவ்வுத்தியில்
• புறனடை மோனை விகற்பங்களுள்
• கடைக்கூழை மோனை (சீர்கள் 4-3-2) வைத்தோர்
• அளவியல் வெண்பா புனையலாம்.
• கடைக்கூழை மோனை வரும் அடியில்
• பிறவிகற்ப மோனை யாதும் வரலாகாது என்று கொள்வோம்.
.
வெஉ.05.29. கடைக்கூழை மோனை வெண்பா
அன்பர் வெண்பாக்கள்
01. குருநாதன் ரமணி
(இன்னிசை வெண்பா: கடைக்கூழை மோனை)
என்மனத்தில் கந்தா கடம்பா கதிர்வேலா
உன்னொளியைத் தந்தே தடைகள் தகர்ப்பாயா
உண்மை குகனே குமரா குருபரனே
மண்ணில் மலர வருள். ... 1
.
குளத்தினில் வான்முகில் வண்ணம் விழுந்த
வளத்தினில் மீன்கள் மிரண்டே விரைந்தன
கோவில் மணியொலி மாலையின் மாருதம்
பாவில் பரவும் பரம். ... 2
.
★★★★★
 

Govindaraju Arunachalam

unread,
Dec 24, 2021, 3:50:10 PM12/24/21
to சந்தவசந்தம்

அடியேன் இயற்றிய

கடைக் கூழை மோனை அமைந்த வெண்பா

 

நினைக்கின் அறிஞர் அறிவினார் அல்லர்

முனைந்தே அடுத்தவர் அல்லல் அகற்றின்

அறிவால் இதனை இனிதே இயற்றின்

அறிஞர் அறிவர் அறி.

 

-கவிஞர் இனியன், கரூர்.

 

பி.கு: எனக்கோர் ஐயம். இந்த மோனை அமைப்புகள் நாற்சீர் கொண்ட அடிகளுக்கு மட்டுமே பொருந்தும். அப்படியிருக்க ஈற்றடியில் மூன்று சீர்களிலும் மோனை அமைய வேண்டுமா? அப்படி அமைந்தாலும் அது கூழை மோனையாகாதே. முற்று மோனை ஆகும்.

தெளிவுறுத்த வேண்டுகிறேன்.


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/e8ef54bc-941b-4587-a1c6-281c1912c1cbn%40googlegroups.com.


--
rgds,
 
Dr. A. GOVINDARAJU,
Retired Principal - National Awardee,

saidevo

unread,
Dec 24, 2021, 9:15:13 PM12/24/21
to santhav...@googlegroups.com
வெண்பா அருமை, ஐயா. 
உங்கள் ஐயம் பொறுத்தவரை, ஓர் அளவடியில், முற்று மோனை என்பது முதல் நான்கு சீர்களிலும் அமைவது, கூழை முதல் மூன்று சீர்களில் என்பதாலும், ஈற்றடியில் மூன்று சீர்களே என்பதாலும் அங்கு அமைவது கூழை மோனையே என்று கருதுகிறேன். அப்படிப் பார்த்தால், சிந்தடி வஞ்சிப்பாவில் முதல்-மூன்றாம் சீர்களில் மோனை அமைந்தால் அதைப் பொழிப்பு என்றுதானே சொல்கிறோம்?

அன்புடன்,
ரமணி

Govindaraju Arunachalam

unread,
Dec 25, 2021, 2:54:32 PM12/25/21
to சந்தவசந்தம்
விளக்கம் நன்று.
நன்றி.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages