ஷஷ்டிப் பாடல் (கோபால்)

13 views
Skip to first unread message

GOPAL Vis

unread,
Aug 9, 2024, 11:17:57 PM8/9/24
to santhav...@googlegroups.com
சுக்ல ஷஷ்டிப் பாடல் [10 ஆகஸ்ட் 2024]

வேண்டாமலே ஈவாய்!
[எழுசீர் விருத்தம்: 5xகாய், மா, தேமா]

மால்கொண்டு மந்திரத்தில் மக்களொடும் மனைகளொடும்
……வாழுமுன்றன் மயில்வி ரித்த
வால்கண்டுன் வனப்பினிலே மயங்குமன்பர் மனத்தச்சம்
……மருளகற்றி மறம ழிக்கும்
வேல்கொண்டு வினைநீக்கும் விழிகொண்டு வித்தியையும்
……வெற்றிகளும் வேண்டா தீவாய்!
கால்கொண்டு காசினியைக் காத்தாளும் கருணைமிகு
……கடம்பணியும் கந்த வேளே!

[மால் = மலை; மந்திரம் = கோவில்; வால் = தோகை; மருள் = குழப்பம்; மறம் = பாவம்; கால் = திருவடிகள்; காசினி = உலகம்]
[மலையை உனதாகக் கொண்டு, கோவில் கொண்டு, உன் சுற்றங்களோடும் மனைவிகளோடும் வாழ்கின்ற உன்னுடைய மயில் விரித்த தோகையையும் உனது அழகையும் கண்டு சொக்கும் அன்பர்களின் அச்சத்தையும் மனக்குழப்பத்தையும் அகற்றி, பாவம் போக்கும் வேலையும், வினை நீக்கும் கண்களையும் கொண்டு ஞானத்தையும் வெற்றிகளையும் அன்பர்கள் வேண்டாமலேயே அருள்பவன் நீ! திருவடிகளாலே இந்த உலகைக் காத்து ஆட்சி செய்யும் கருணைமிக்கவனாகிய கடப்பமாலை அணிந்த கந்த வேள் முருகனே!]

நன்வாழ்த்துகள்
கோபால்.
[10/08/2024]VGK

இமயவரம்பன்

unread,
Aug 10, 2024, 5:34:24 AM8/10/24
to santhav...@googlegroups.com
அருமையான எதுகையுடன் அமைந்த பொருள் சிறந்த பாடல்!


On Aug 9, 2024, at 11:17 PM, GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CALjGCtu1NCjopVSbvG8ZzdkRUOoaM6c2nJF2Neev10LzqNjoRg%40mail.gmail.com.

GOPAL Vis

unread,
Aug 10, 2024, 7:27:21 AM8/10/24
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு இமயவரம்பன்.
கோபால்.

On Sat, Aug 10, 2024 at 3:04 PM இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:
அருமையான எதுகையுடன் அமைந்த பொருள் சிறந்த பாடல்!


On Aug 9, 2024, at 11:17 PM, GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:


சுக்ல ஷஷ்டிப் பாடல் [10 ஆகஸ்ட் 2024]

வேண்டாமலே ஈவாய்!
[எழுசீர் விருத்தம்: 5xகாய், மா, தேமா]

மால்கொண்டு மந்திரத்தில் மக்களொடும் மனைகளொடும்
……வாழுமுன்றன் மயில்வி ரித்த
வால்கண்டுன் வனப்பினிலே மயங்குமன்பர் மனத்தச்சம்
……மருளகற்றி மறம ழிக்கும்
வேல்கொண்டு வினைநீக்கும் விழிகொண்டு வித்தியையும்
……வெற்றிகளும் வேண்டா தீவாய்!
கால்கொண்டு காசினியைக் காத்தாளும் கருணைமிகு
……கடம்பணியும் கந்த வேளே!

[மால் = மலை; மந்திரம் = கோவில்; வால் = தோகை; மருள் = குழப்பம்; மறம் = பாவம்; கால் = திருவடிகள்; காசினி = உலகம்]
. . . . . . . .

Siva Siva

unread,
Aug 10, 2024, 8:24:56 AM8/10/24
to santhav...@googlegroups.com
Nice.

/ மயில்வி ரித்த வால் /

மயிலின் தோகையை வால் என்பதும் உண்டா/

V. Subramanian

GOPAL Vis

unread,
Aug 10, 2024, 12:27:19 PM8/10/24
to santhav...@googlegroups.com
மயிலின் தோகையை வால் என்பதும் உண்டா/

இலக்கியத்தில் அத்தகைய பயன்பாடுண்டா என்றறியேன். அப்பயன்பாடு தவறில்லை என்றும் எண்ணுகிறேன்.

The following seem to support me:
1) இந்திய மயில் Indian peafowl (peacock) – Tamil Deepam : ஆண் மயில் உருவில் பெரியவை. மயிலின் அலகின் முனையில் இருந்து வால் சிறகு வரை சுமார் 100-115 செ. மீ. நீளமும், நன்கு வளர்ந்த முதிர்ந்த பறவைகளில் முழுவதுமாக வளர்ந்த தோகையின் கடைசி முனை வரை கணக்கிட்டால் சுமார் 195-225 செ.மீ. நீளமும் கொண்டிருக்கும். இதன் எடை சுமார் 4-6 கிலோ இருக்கும். தோகையில் சுமார் 200க்கும் மேற்பட்ட சிறகுகள் இருக்கும். எனினும் வால் சிறகுகள் 20 மட்டுமே.


2) J.P.Fabricius Tamil and English Dictionary 

மயில் mayil   s. a peacock, a pea-hen.

மயிலாடுகிறது, the peacock struts; spreads its tail. மயிலிறகுமயிற் பீலி; peacock's feathers. 
மயிலெண்ணெய், medicinal oil from peacock's fat. மயில்வாகனன், Skanda, as borne by a peacock. மயில் விசிறிமயிற்பிச்சம், a fan of peacock's feathers. மயிற்றுத்தம், sulphate of copper, blue vitriol, துருசிமயிற்றோகை, a peacock's tail.
gopal

GOPAL Vis

unread,
Mar 4, 2025, 11:16:46 PMMar 4
to santhav...@googlegroups.com
சுக்ல ஷஷ்டி [05 மார்ச்சு 2025]
(கிருத்திகையும் கூடிய திருநாள்)

வண்ணச் சந்தம் (117)

[தானதன தான தானதன தான
தானதன தான தனதான]                           [inspired by a vaNNam in this pattern posted by Sivasiva two days ago]

குமரேச!

நாலுமறை மூல மோதஅறி யாது
……நாலுமுக னாண முனிநாடும்
……ஞானகுரு ஈசர் கூனவொரு சாமி
……நாதனென வான பெரியோனே!

வேலுமடர் நீல மாயமயி லோடும்
……வீரமிகு தேவர் படையோடும்
……வீறுசெறி தான வாதியரி வீழ
……வேதநெறி பேணி அருள்தீரா!

கோலுமொரு தோளில் நூலுமரை மேவு
……கோவணமு மேயுன் அணியாகக்
……கோடியடி யார்கள் சூழமலை மீது
……கோவிலுறை ஞான வடிவேலா!

ஏலுமிறை சேவை யோடணுகு வேனை
……ஏலுனரு ளூறு விழியாலே!
……ஈரழகு மாத ரோடுமயில் வாகம்
……ஏறுகும ரேச பெருமானே!
•~•~•~•~•~•~•~•~•~•~•~•
சொற்பிரிவு; பொருள்:

நாலு மறை மூலம் ஓத அறியாது
……நாலுமுகன் நாண, முனி நாடும்
……ஞானகுரு ஈசர் கூன, ஒரு சாமி
……நாதன் என ஆன பெரியோனே!

[நாலு மறை மூலம் = நான்கு வேதங்களுக்கும் மூல ஒலியான பிரணவம்; கூன = குனிய]

வேலும், அடர் நீலமாய மயிலோடும்,
……வீரம் மிகு தேவர் படையோடும்,
……வீறு செறி தானவாதி அரி வீழ
……வேத நெறி பேணி அருள் தீரா!

[வீறு = திறமை/செருக்கு; செறி = மிகுந்த; தானவாதி = அசுரர் முதலானோர்; அரி = எதிரி]

கோலும், ஒரு தோளில் நூலும், அரை மேவு
……கோவணமுமே உன் அணியாகக்
……கோடி அடியார்கள் சூழ, மலை மீது
……கோவில் உறை ஞான வடிவேலா!

[கோல் = தண்டம்; நூல் = பூணூல்; மலை = பழநி மலை]

ஏலும் இறை சேவையோடு அணுகுவேனை
……ஏல் உன் அருள் ஊறு விழியாலே!
……ஈர் அழகு மாதரோடு, மயில் வாகம்
……ஏறு குமரேச பெருமானே!

[ஏலும் = இயன்ற வரை; இறை = சிறிது; ஏல் = ஏற்றுக் கொள்; ஈர் = இரண்டு; வாகம் = வாகனம்]

நல்வாழ்த்துகள்
கோபால்
[05/03/2025]VGK

सर्वे जना: सुखिनो भवन्तु ।

GOPAL Vis

unread,
Oct 26, 2025, 8:20:22 PM (10 days ago) Oct 26
to santhav...@googlegroups.com
கந்த ஷஷ்டிப் பாடல் [27 அக்டோபர் 2035]
வண்ணச் சந்தம் (138]
[தான தந்தன தான தந்தன தான தந்தன தான தந்தன
……தான தந்தன தான தந்தன தனதான]
[மூல மந்திர மோத லிங்கிலை - எனத் தொடங்கும் திருப்புகழ் சந்தம்]

நங்கைநல்லூர!

நான கன்றிலை நாவ டங்கிலை நாம மென்குர லார வந்திலை
……நாண மின்றிய றாத வங்களை நசையோடு
……நாடி இன்பென வேய லைந்தவென் நாளு ருண்டிட மூவ டர்ந்திட
……ஞான மென்றிசை காண வஞ்சிடு மரிபோலே!

தீன ரெங்குள ரோவ வண்பரி சேவ லுஞ்சொலி வேல்ம ருங்கமர்
……தேவி மங்கைய ரோடி தஞ்செய விரைவோனே!
……தீர வன்புய மாறி ரண்டொடு சீரி லங்கிடு பாத அன்பொடு
……தேயு மென்றனை மூலை கண்டருள் புரிவாயோ!

தேன ருந்தினை யோட ருந்தொளிர் தேக வஞ்சியர் கூட அங்கொரு
……சீர்மி குங்குற மாதி னங்கர மடைவேலா!
……தேச மெங்கிலு மேவு குன்றுறை தேவ குஞ்சரி நாத சண்முக
……சீல சுண்டெலி மீத மர்ந்தவ னிளையோனே!

வான ளந்தவி மால யந்தரு மாது மம்புலி சூடு மெந்தையு(ம்)
……வானி னும்பர்கள் வாழ வென்றரு ளியசேயே!
……மாய தந்திர சூர னின்படை மாள வென்றவ மாசி லன்பர்கள்
……வாழு நங்கைந லூர சுந்தர பெருமானே!

•~•~•~•~•~•~•~•~•~
சொற்பிரிவு; பொருள்:

‘நான்’ அகன்றிலை; நா அடங்கிலை; நாமம் என் குரல் ஆர வந்திலை;
……நாணம் இன்றி, அறாது அவங்களை நசையோடு
……நாடி, இன்பு எனவே அலைந்த என் நாள் உருண்டிட, மூவு அடர்ந்திட,
……ஞானம் என் திசை காண அஞ்சிடும் அரி போலே!

[‘நான்’ = அகந்தை; அவங்கள் = பாவச்செயல்கள்; அறாது = இடைவிடாது; நசை = ஆசை; இன்பு = இன்பம்; மூ/மூவு = மூப்பு; அடர்ந்திட = நெருங்கி வர; அரி = எதிரி]
[என் அகந்தை நீங்கவில்லை; என் நாக்கில் அடக்கம் இல்லை;; என் குரல் உயர்த்தி உன் திருநாமம் சொல்ல வருவதில்லை; ஆசையினால், நாணமின்றி, இன்பம் அவைதாம் என்று எண்ணிப் பாவச் செயல்களையே இடைவிடாமல் விரும்பிச் செய்து கொண்டிருப்பதிலேயே என் நாட்கள் உருண்டோடி விட, மூப்பு நெருங்கி வரும் போது, மெய்ஞ்ஞானம் என்னை எதிரியாய்க் கருதுவது போலும் என் திசையைக் காணவும் அஞ்சுகிறது!]

தீனர் எங்கு உளரோ அவண் பரி, சேவலும் சொலி வேல், மருங்கு அமர்
……தேவி மங்கையரோடு இதம் செய்ய விரைவோனே!
……தீர! வன்புயம் ஆறு இரண்டொடு, சீர் இலங்கிடு பாத! அன்பொடு
……தேயும் என்றனை மூலை கண்டு அருள் புரிவாயோ!

[தீனர் = ஏழை எளியவர்; அவண் = அங்கு; பரி = வாகனம்/மயில்; மருங்கு = பக்கத்தில்]
[எளியோர் எங்கு உள்ளாரோ, அங்கு உனது மயில், சேவல், சொலிக்கின்ற வேல், பக்கத்தில் மனைவிகள் சேர, உதவி செய்ய விரைந்து செல்லும் இயல்பு கொண்டவனே! தீரனே! வலிமையான பன்னிரண்டு புயங்களோடு அழகு விளங்கும் பாதங்களை உடையவனே! ஒரு மூலையில் தேய்ந்து கொண்டிருக்கும் என்னை அன்போடு கண்டு அருள் புரிய வருவாயோ?!]

தேன் அரும் தினை யோடு அருந்து ஒளிர் தேக வஞ்சியர் கூட, அங்கு ஒரு
……சீர் மிகும் குறமாதின் அங்கரம் அடை வேலா!
……தேசம் எங்கிலும் மேவு குன்று உறை தேவ! குஞ்சரி நாத! சண்முக!
……சீல! சுண்டெலி மீது அமர்ந்தவன் இளையோனே!

[வஞ்சியர் = இளம் பெண்கள்; குஞ்சரி = தேவயானை/தெய்வானை]
[தேனை அருமையான தினையோடு சேர்த்து உண்ணுகிற பிரகாசமான உடலை உடைய இளம்பெண்களின் கூட்டத்திலிருந்த அழகு மிகுந்த குறத்திப் பெண்ணின் (வள்ளியின்) கரம் பற்றி (மனைவியாய்) அடைந்த வேலவனே! தேசமெங்கும் காணும் குன்றுகளிலெல்லாம் விளங்கும் தெய்வமே! தெய்வானையின் கணவனே! சண்முகனே! உயர்ந்த குணமுடையவனே! சுண்டெலி மீது அமர்ந்தவனான கணபதிக்கு இளையவனே!]

வான் அளந்த இமாலயம் தரு மாதும், அம்புலி சூடும் எந்தையும்,
……வானின் உம்பர்கள் வாழ என்று அருளிய சேயே!
……மாய தந்திர சூரனின் படை மாள வென்றவ! மாசில் அன்பர்கள்
……வாழும் நங்கைநல்லூர! சுந்தர! பெருமானே!

[வான் அளந்த = வானளாவிய; இமாலயம் = இமயமலை; உம்பர்கள் = தேவர்கள்; சூரன் = சூரபத்ம அசுரன்; மாசில் = மாசு இல்லாத]
[வானளாவிடும் இமயமலை தந்த பெண்ணாகிய உமாதேவியும், சந்திரனைச் சூடிய தந்தையாகிய சிவபெருமானும் சேர்ந்து, தேவர்களின் நல்வாழ்வுக்காகப் படைத்தருளிய பிள்ளையே! மாயாஜால தந்திரங்களில் வல்லவனான சூரபத்மாசுரனின் படையைப் போரில் அழித்து வெற்றி பெற்றவனே! குற்றங்குறை இல்லாத அன்பர்கள் வாழும் நங்கைநல்லூருக்கு உரியவனே! அழகான திருமுருகப் பெருமானே!]


நல்வாழ்த்துகள்
கோபால்.
[27/10/2025]VGK

இமயவரம்பன்

unread,
Oct 26, 2025, 9:20:26 PM (10 days ago) Oct 26
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக அருமை! 

GOPAL Vis

unread,
Oct 28, 2025, 3:56:20 AM (8 days ago) Oct 28
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு இமயவரம்பன்.
கோபால்.

Reply all
Reply to author
Forward
0 new messages