வண்ண விருத்தம் முயற்சி 12 (ராம்)

12 views
Skip to first unread message

Ram Ramakrishnan

unread,
Jul 31, 2026, 11:45:26 AMJul 31
to santhavasantham
வண்ண விருத்தம் முயற்சி 12 (ராம்)


சந்தக்குழிப்பு:

தானதன தானதன தானதன தானதன

தானதன தானதன தந்ததான

(திருப்புகழ் - பழனி

ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்

ஆறுமுகம் ஆறுமுகம் என்றுபூதி)

------------------------------------------------------------------------------------

ஆடுநட ராசனுடன் வாமியிட மேயமர

ஆதியயன் மாலவனும்         ஒன்றுகூடி

ஆதபனி னாய்வதனி லாதுரமு மேவிடுமவ்

வாசலமு மோடிவிட           லுந்தனாசி!

 

காடடவி மீதில்வரு வேடனுள மேநினது

காருணிய மானதொரு         விந்தைதானே!

காழிநகர் வாவியதில் ஞானமுறு மாளுடையர்

காடகமும் மூடுமுமை         தந்தபேறே!

 

தேடரிய நாவரசர் ஊறுபிணி யேயுறுவர்

சீலனவ னாதரவில்            வென்றுசேர்வார்!

தேசுமவி நாசியதில் வாயுமிழும் வாரிடங்கர்

தேவனுனை ஓதிடிவ          ரன்பினாலே!

 

நாடிமறை ஓதிடுநல் வாசகரின் நேசமதில்

நாடதனில் மாறுமொரி                யெந்தையாலே!

நாசமில தாகிமன வாசைமுழு தாயழிய

நானுறவம் மோனவளர்        மன்றுளோனே!

 

பதம் பிரித்துப் பொருளுரை:

 

ஆடும் நடராசனுடன் வாமி டமே மர

ஆதி யன் மாலவனும்               ஒன்றுகூடி

ஆதபனின் ய்வதனில் ஆதுரமும் மேவிடும் அவ்

சலமும் ஓடிவிடல்                   உந்தனாசி!

(சிவபெருமானின் அடியையும் முடியையும் காண்பதற்காக பிரம்மனும் திருமாலும் மேலேயும் கீழேயும் தேடி அலைந்த ஆய்வினில் (முயற்சியில்), அவர்களுக்கு ஏற்பட்ட பரபரப்பும், அஞ்ஞானத்தின் விளைவான துன்பமும்/அகந்தையும் ஓடி மறைந்து அவர்க்குத் தெளிவு ஏற்பட்டது இறைவனாகிய உன்னுடைய பேரருளால்தான்!

வாமி - சிவகாமியாம் உமாதேவி

ஆதபன் – இறைவன் (இங்குச் சிவபெருமானைக் குறித்தது). ஆய்வதனில் (ஆடியும் முடியும் காணும் ஆய்வில், ஆதுரம் – பரபரப்பு., ஆசலம் – துன்பம் ஓடிவிடல் – அத்துன்பமும் அவர்தமக்கு நீங்குதன், உந்தனாசி – உந்தன் அருளேயாம்).

 

காடு அடவி மீதில் வரும் வேடன் உளமே நினது

காருணியம் ஆது ஒரு               விந்தைதானே!

காழிநகர் வாவி தில் ஞானமுறும் ஆளுடையர்

காடகமும் மூடும் உமை               தந்தபேறே!

(காட்டில் திரியும் வேடனாகிய திண்ணனின் (கண்ணப்பரின்) கரடுமுரடான நெஞ்சில் ஈசனின் பேரருள் புகுந்து ஆட்கொண்டது ஒரு பேரதிசயமாகும்! அதுபோல, சீகாழிக் குளக்கரையில் அழுத குழந்தை சம்பந்தருக்கு, ஆடை மூடிமறைத்து உமாதேவியார் ஞானப் பாலமுது ஊட்டி அருளுமாறு செய்ததும் உன்னுடைய பெருங்கருணையினால் கிடைத்த பேறேயாகும்!

அடவி – காடு., காடடவி – ஒருபொருட் பன்மொழி., காருணியம் – கருணை
காழிநகர் – சீகாழி என்ற நகர், வாவி – குளம், ஆளுடையர்திருஞனசம்பந்தர்
காடகம் – ஆடை, சேலை., காடகமும் மூடும் உமை – இங்கு, உமாதேவி குழ்ந்தைக்குப் பாலமுது ஊட்டியதைக் குறித்தது)

 

தேடரிய நாவரசர் ஊறுபிணியே றுவர்

சீலந் அன் ஆதரவில்         வென்றுசேர்வார்!

தேசும் அவிநாசி அதில் வாய் உமிழும் வார் இடங்கர்

தேவன் உனை ஓதிடிவர்               ன்பினாலே!

(தேடற்கரிய நாவன்மை கொண்டஅப்பர் பெருமான் தம்மை வருத்திய சூலை நோயை, நற்குணப் பெருமானாகிய ஈசனின் அருளால் வென்று அவனடி சேர்ந்தார்! ஒளிமிக்க அவிநாசித் தலத்தில், பெரிய முதலை விழுங்கிய சிறுவனை மீண்டும் உயிருடன் உமிழுமாறு சுந்தரமூர்த்தி நாயனார் செய்தது என, நாயன்மார்கள் நிகழ்த்திய அற்புதங்கள் அனைத்தும் இறைவனாகிய உன்மீது அவர்கள் கொண்ட தூய அன்பின் மிகுதியால் உன்னைப் போற்றித் துதித்ததனால் விளைந்தவையே ஆகும்!

தேடரிய – தேடர்கரிய நாவரசர் – நாவன்மை கொண்ட திருநாவுக்கரசர் ஊறுபிணிசூலை என்னும் கொடு நோயால். சீலன் சிவபிரான். தேசும் – ஒளிபொருந்திய வாய் உமிழும் – இளம் பிள்ளையை விழுங்கிப் பின் உமிழும் வார் இடங்கர்- பெரிய முதலை. உனை ஓதிடுவர் அன்பினாலே – உன்னைப் போற்றுபவர் உன்னிடம் கொண்ட அன்பின் மிகுதியாலே).

 

நாடிமறை ஓதிடுநல் வாசகரின் நேசம் அதில்

நாடு அதனில் மாறும் ஒரி             யெந்தையாலே!

நாசம் இலதுகிமன சை முழுதாய் அழிய

நானுற அம் மோனம் வளர்               மன்றுளோனே!

(வேதங்களின் பொருளுணர்ந்து பாடிய மாணிக்கவாசகரின் அன்பினாலே, நாட்டில் திரியும் நரிகளைக் குதிரைகளாக்கி அருளியது எம் தந்தையாகிய சிவபெருமானின் பேரருளாகும்! அழியாத சிவபேற்றினை அளித்து, என் மனத்தின் ஆசைகளை எல்லாம் முற்றிலும் போக்கி, அடியேன் மன அமைதி பெற்று உய்யும் வண்ணம் மௌன ஞானத்தை வளர்க்கும் பொன்னம்பல மன்றின் இறைவனே!

வாசகர் – மாணிக்க வாசகப்பெருமான் ஒரி – நரி. மாறும் ஒரி – நரி பரியாக(குதிரையாக) மாறியதைக் குறித்தது. மோனம்உள்ளத்து அமைதி)

 

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

Siva Siva

unread,
Jul 31, 2026, 7:45:57 PM (14 days ago) Jul 31
to santhav...@googlegroups.com
1. Some phrase seems to be in 3rd person while the rest of the song is in 2nd person.

2. / உந்தனாசி /
Should be உன்றன் (singular) or உந்தம் (plural)

3/ / காடடவி / 
ஒருபொருட்பன்மொழி?

4. /  ஒரி – நரி /
Is that a seyyuL vikAram?

V. Subramanian



Ram Ramakrishnan

unread,
Jul 31, 2026, 8:03:38 PM (14 days ago) Jul 31
to santhav...@googlegroups.com
Thanks, Sri. Sivasivaa.

1. This point I shall look into.
.2. Will change to உன்றன்
3. Yes. I have explained that in the notes below.
4. ஓர், means Nari. I have checked this in several dictionaries.




அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCPL%3DAjPPABa5VoNT5sDwyRPFVDXh882R4XaG-OuAVzjrw%40mail.gmail.com.

Ram Ramakrishnan

unread,
Jul 31, 2026, 8:18:49 PM (14 days ago) Jul 31
to santhav...@googlegroups.com
Read as ஒரி 


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jul 31, 2026, at 20:03, Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:



Ram Ramakrishnan

unread,
Jul 31, 2026, 11:33:07 PM (14 days ago) Jul 31
to santhav...@googlegroups.com
வண்ண விருத்தம் முயற்சி 12 (ராம்)  திரு. சிவசிவா அவைகள் சுட்டிய பிழைத் திருத்தங்களுடன் முழுப்பாடலின் மீள் பதிவு.

 

சந்தக்குழிப்பு:

தானதன தானதன தானதன தானதன

தானதன தானதன தந்ததான

(திருப்புகழ் - பழனி

ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்

ஆறுமுகம் ஆறுமுகம் என்றுபூதி)

------------------------------------------------------------------------------------

ஆடுநட ராசனுடன் வாமியிட மேயமர

ஆதியயன் மாலவனும்         ஒன்றுகூடி

ஆதபனி னாய்வதனி லாதுரமு மேவிடுமவ்

வாசலமு மோடிவிட           லுன்றனாசி!

 

காடடவி மீதில்வரு வேடனுள மேநினது

காருணிய மானதொரு         விந்தைதானே!

காழிநகர் வாவியதில் ஞானமுறு மாளுடையர்

காடகமும் மூடுமுமை         தந்தபேறே!

 

தேடரிய நாவரசர் ஊறுபிணி யேயுறுவர்

சீலனுன தாதரவில்            வென்றுசேர்வார்!

தேசுமவி நாசியதில் வாயுமிழும் வாரிடங்கர்

தேவனுனை ஓதிடிவ          ரன்பினாலே!

 

நாடிமறை ஓதிடுநல் வாசகரின் நேசமதில்

நாடதனில் மாறுமொரி                தந்தவேளே

நாசமில தாகிமன வாசைமுழு தாயழிய

நானுறவம் மோனவளர்        மன்றுளோனே!!


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)


Siva Siva

unread,
Aug 1, 2026, 8:31:03 AM (13 days ago) Aug 1
to santhav...@googlegroups.com
1.
/ நாடதனில் மாறுமொரி                தந்தவேளே  /

It is good to look for prior usage - instead of only relying on a dictionary entry - to ensure we get a better understanding of a word and its usage.

2.
Here, வேள் = ?

V. Subramanian


Ram Ramakrishnan

unread,
Aug 1, 2026, 8:32:40 AM (13 days ago) Aug 1
to santhav...@googlegroups.com
வேள் பாட்டுடைத் தலைவனே - சிவபெருமான்


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Aug 1, 2026, 8:34:33 AM (13 days ago) Aug 1
to santhav...@googlegroups.com
வேள் - usually comes for Kaman or Murugan.
I have not seen it used to mean Siva.
If there is any prior usage, please share.

V. Subramanian

Ram Ramakrishnan

unread,
Aug 1, 2026, 9:23:15 AM (13 days ago) Aug 1
to santhav...@googlegroups.com
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. சட்டியதற்கு மிக்க நன்றி.

திருவேள்விக்குடி என்று சம்பந்தர் பெருமானும் நாவுக்கரசரும் பாடிய தலமுண்டு என்று அறிந்தேன் அதனாலேயே சிவபிரானை வேள் என்று அழைப்பது தவறுதான்.

அதேபோல் புள்ளிருக்குவேளூர் (வைத்தீஸ்வரன் கோவில்) முருகப்பெருமானும் (வேள்), ஜடாயுவும் (புள்) வழிபட்டதால் அத்தலத்திற்குப் பெயர் வந்தது எனத் தல புராணம் கூறுகிறது. இதை வைத்து சிவபிரானை வேள் எனச் சொல்லக் கூடாது என்று உண்ர்த்தியமைக்கும் நன்றி.


தந்தவீசா (வகர உடம்படுமெய்யுடன்) என்று மாற்றுகிறேன்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Aug 1, 2026, at 08:34, Siva Siva <naya...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Aug 1, 2026, 9:35:34 AM (13 days ago) Aug 1
to santhav...@googlegroups.com
Thanks.
My comment covered ஒரி as well.
ஓரி - நரி. 

7.41.1
முதுவாய் ஓரி கதற முதுகாட்
    டெரிகொண் டாடல் முயல்வானே
மதுவார் கொன்றைப் புதுவீ சூடும்
    மலையான் மகள்தன் மணவாளா
கதுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக்
    கண்டால் அடியார் கவலாரே
அதுவே யாமா றிதுவோ கச்சூர்
    ஆலக் கோயில் அம்மானே

V. Subramanian

Ram Ramakrishnan

unread,
Aug 1, 2026, 9:42:57 AM (13 days ago) Aug 1
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. சிவா.
ஆம் ஓரி யென்பதுதான் செய்யுட்காக ஒரி யென்லாயிற்று. உங்கள் கேள்வி இப்போதுதான் புரிந்து கொண்டேன்.



அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Aug 1, 2026, at 09:35, Siva Siva <naya...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

GOPAL Vis

unread,
Aug 1, 2026, 9:52:36 AM (13 days ago) Aug 1
to santhav...@googlegroups.com
அருமை.
வாரிடங்கர் ---> சந்தம் (தானதன)
கோபால்.

Ram Ramakrishnan

unread,
Aug 1, 2026, 11:43:58 AM (13 days ago) Aug 1
to santhav...@googlegroups.com
மிக்கநன்றி, திரு கோபால். வாரிடங்கர் - தாந்தன சந்தம் சரியில்லயா?
சரியில்லை யெனில்  சுட்டுக.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
Aug 1, 2026, 2:26:28 PM (13 days ago) Aug 1
to santhav...@googlegroups.com
திரு. சிவசிவா அவர்களுடன் பேசிய போது அறிந்து கொண்டது, வாரிடங்கை - தானதந்த என்ற சந்தம். இதைத் தான் திரு. கோபால் அவர்க்ளும் குறிப்பிடார் என்று நினைக்கிறேன்.

எனவே, வாரிடங்கர் என்பதனை வார்கரவு என்று மாற்றியமைத்தேன்.  வார் கரவு - பெரிய முதலை

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)


Reply all
Reply to author
Forward
0 new messages