முதல்முறையாக ஒரு வண்ணப்பா எழுத முனைந்துள்ளேன். பிழைகளைச் சுட்டிக் காட்ட வேண்டுகிறேன்.
வண்ணப்பா
தனந்தன தந்தன தானன தானன
தனந்தன தந்தன தானன தானன
தனந்தன தந்தன தானன தானன –தனதான.
இலங்கிடு தண்டமி ழேஉயி ராகுக
உவந்திட நெஞ்சினி லேகுடி யேறுக
இருந்திட வந்தினி தேநல மேதர – வருவாயே!
இயங்கிட செந்தமி ழேயினி மீளுக
வரந்தர நின்றினி தேயெமை ஆளுக
இதந்தர இன்புற வேயென நீவர – விழைவாயே!
துலங்கிடு சந்தன நன்மணி யேயென ஆகினை
விரைந்திடு வெம்பகை போவென நீஉரை
தொடர்ந்திடு வென்றியே ஆமென ஆகுவை – இனிதாக
துணிந்திடு நன்றென வேயுள தோபகை
கடிந்திடு வம்பென வேமொழி மாசினை
துடைந்திடு இன்றுள தேபழி தீயென – விரைவாக!
நலங்கெழு பொன்னென வேயொளி வீசுக
விரைந்தெழு கன்றென வேநடை போடுக
நலந்தரு மொன்றினை யேயினி நாடுக – துணிவோடு!
நிலந்தரு சொத்தென வேநனி ஆயினை
இளந்தளி ரென்றிட மேவன ஆகுவை
நடந்திடு நல்லெரு தாயினி தாகிட – வருங்காலம்!
சிலம்பிடை முத்தென வேயொளி வீசிட
உளங்கொள நல்லவை யாவுமே ஆகுவை
சிறந்தவை சொத்தென வேயுள ஓதிட – சிறப்பாகும்
திகழ்ந்திடு வித்தென வேயொரு தூமொழி
நலந்தரு சத்தென வாகிடு மீமொழி
தடந்தனை இத்தரை மீதினி லேயமை – உலகாள!
-கருவூர் இனியன்.
(2nd stanza)
வென்றியே - சந்தம் சரிபார்க்கவும்
மாசினை துடைந்திடு = சந்தத்திற்காக மாசினைத் என்று வரவில்லை போலும்
துடைந்திடு = சந்தத்திற்காகத் துடைத்திடு என்பது துடைந்திடு என்று மருவியுள்ளதுபோல் தோன்றுகிறது
துடைந்திடு இன்றுள = புணர்ச்சி சரிபார்க்கவும்
(3nd stanza)
இவ்விடங்களில் சந்தம் சரிபார்க்கவும்:
சொத்தென
நல்லெரு
வருங்காலம்
(4nd stanza)
இவ்விடங்களில் சந்தம் சரிபார்க்கவும்:
முத்தென
நல்லவை
சொத்தென
சிறப்பாகும்
வித்தென
சத்தென
இத்தரை
- இமயவரம்பன்
இமயவரம்பன் அவர்கள் பின்னூட்டத்தைத் தொடர்ந்து அடியேன் திருத்தி அமைத்த வண்ணப்பா. இதிலும் பிழைகள் இருக்கலாம். திருத்தியருளுக.
வண்ணப்பா
தனந்தன தந்தன தானன தானன
தனந்தன தந்தன தானன தானன
தனந்தன தந்தன தானன தானன –தனதான.
இலங்கிடு தண்டமி ழேஉயி ராகுக
உவந்திட நெஞ்சினி லேகுடி யேறுக
இருந்திட வந்தினி தேநல மேதர – வருவாயே!
இயங்கிட செந்தமி ழேயினி மீளுக
வரந்தர நின்றினி தேயெமை ஆளுக
இதந்தர இன்புற வேயென நீவர – விழைவாயே!
துலங்கிடு சந்தன நன்மணி யேயென ஆகினை
விரைந்திடு வெம்பகை போவென நீஉரை
தொடர்ந்திடு வென்றிக ளாமென ஆகுவை – இனிதாக!
துணிந்திடு நன்றென வேயுள தோபகை
கடிந்திடு வம்பென வேமொழி மாசினை
துடைந்திடு பண்டுள தேபழி தீயென – விரைவாக!
நலங்கெழு பொன்னென வேயொளி வீசுக
விரைந்தெழு கன்றென வேநடை போடுக
நலந்தரு மொன்றினை யேயினி நாடுக – துணிவோடு!
நயந்தரு சிந்ததென வேநனி ஆயினை
இளந்தளி ரென்றிட மேவன ஆகுவை
நடந்திடு நண்பொடு தாயென வாகிட– கனிவோடு!
சிலம்பிடை உண்டென வேயொளி வீசிட
உளங்கொள சிந்தனை யாவுமே ஆகுவை
சிறந்தவை வந்தன வேயவை ஓதிட – சிறப்பாமே!
திகழ்ந்திடு விந்தென வேயொரு தூமொழி
நலந்தரு சந்தமு மாகிடு மீமொழி
தடந்தனை இங்கினி தாயினி மேலமை – உலகாள!
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/78A103F0-ADB5-40F4-8184-763AFCF24554%40gmail.com.
அடியேன் எழுதிய வண்ணப்பா குறித்துப் பின்னூட்டம் தந்து நெறிப்படுத்திய, வாழ்த்திய பெருமக்கள் இமயவரம்பன், சிவசிவா, தில்லைவேந்தன் ஆகியோர்க்கு நன்றி.
மிகச் சிறப்பு இனியனாரே—தில்லைவேந்தன்.
--
இயங்கிட செந்தமி ழேயினி மீளுக [ஒற்று]
நயந்தரு சிந்ததென வேநனி ஆயினை [டைப்போ?]
நடந்திடு நண்பொடு தாயென வாகிட– கனிவோடு! [ஒற்று]
உளங்கொள சிந்தனை யாவுமே ஆகுவை [ஒற்று]
சிறந்தவை வந்தன வேயவை ஓதிட – சிறப்பாமே! [ஒற்று]
கோபால்.
திரு.கோபால் அவர்கள் பின்னூட்டத்தைத் தொடர்ந்து அடியேன் திருத்தி அமைத்த இறுதி வடிவம்.
வண்ணப்பா
தனந்தன தந்தன தானன தானன
தனந்தன தந்தன தானன தானன
தனந்தன தந்தன தானன தானன –தனதான.
இலங்கிடு தண்டமி ழேஉயி ராகுக
உவந்திட நெஞ்சினி லேகுடி யேறுக
இருந்திட வந்தினி தேநல மேதர – வருவாயே!
இயங்கிடு செந்தமி ழேயினி மீளுக
வரந்தர நின்றினி தேயெமை ஆளுக
இதந்தர இன்புற வேயென நீவர – விழைவாயே!
துலங்கிடு சந்தன மேயென ஆகினை
விரைந்திடு வெம்பகை போவென நீஉரை
தொடர்ந்திடு வென்றிக ளாமென ஆகுவை – இனிதாக!
துணிந்திடு நன்றென வேயுள தோபகை
கடிந்திடு வம்பென வேமொழி மாசினை
துடைந்திடு பண்டுள தேபழி தீயென – விரைவாக!
நலங்கெழு பொன்னென வேயொளி வீசுக
விரைந்தெழு கன்றென வேநடை போடுக
நலந்தரு மொன்றினை யேயினி நாடுக – துணிவோடு!
நயந்தரு சிந்தென வேநனி ஆயினை
இளந்தளி ரென்றிட மேவன ஆகுவை
நடந்திடு நண்பொடு தாயென வாகிட– அளியோடு!
சிலம்பிடை உண்டென வேயொளி வீசிட
உளங்கொள நின்றனை யாவுமே ஆகுவை
சிறந்தவை வந்தன வேயவை ஓதிட – நலமாமே!
திகழ்ந்திடு விந்தென வேயொரு தூமொழி
நலந்தரு சந்தமு மாகிடு மீமொழி
தடந்தனை இங்கினி தாயினி மேலமை – வலமாமே!
தனந்தன தந்தன தானன தானன
உளங்கொள நின்றனை ஒருயி ராகுவை
என மாற்றுகிறேன்.
மீண்டும் கூர்ந்து பார்த்தமைக்கு நன்றி. அடுத்துவரும் என் கவிதை நூலில் இதை முதற் பாடலாக வைக்க எண்ணியுள்ளேன்.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CALjGCttDbQsg%3DpGZqTtVAgwwPPTWmiMYiwvLvbov2A7Giqp_hg%40mail.gmail.com.