Fwd: மார்கழி முப்பது (21 - 30+1) (கோபால்)

3 views
Skip to first unread message

GOPAL Vis

unread,
Jan 13, 2026, 8:32:21 PM (4 days ago) Jan 13
to santhav...@googlegroups.com
மார்கழி முப்பது ( 21 - 30*1)

மார்கழி 21 [05/01/2026]

என்னிறைஞ்சல் உன்செவியை என்றடையும் யானறியேன்!
அன்னைநின நெஞ்சிலிருந்(து) அன்பாக எனைக்கண்டு
முன்னைவினை போக்கிடவும் முத்திதனை ஈந்திடவும்
உன்னைஅவள் பக்குவமாய் ஊக்கிடுவாள் என்பொருட்டே! ..(21)
[ஊக்குதல் = தூண்டுதல்]

மார்கழி 22 [06/01/2026]

சயனத்தின் கோலத்தில் சாய்ந்திருப்பாய் அரங்கத்தில்!
அயமுகனாய் அரிமுகனாய் ஆலயத்தில் அமர்ந்திருப்பாய்
உயரமலை வேங்கடத்தின் உச்சியிலே நின்றிருப்பாய்!
கயராசன் துயர்நீக்கக் ககனத்தில் பறந்திடுவாய்! ..(22)
[அயமுகன் = ஹயக்ரீவன்; அரிமுகன் = நரசிம்மன்; கயராசன் = கஜேந்திரன்; ககனம் = வானம்]

மார்கழி 23 [07/01/2026]

கயராச னைப்போலக் காத்திருக்கத் தோதில்லை!
பயணமினி தொடங்கிவிடும் பாதைதனைக் கூற்றறியும்!
தயவுக்கோர் அரசேநீ சரண்என்றார்க்(கு) அரணாமே!
இயமனின்நாண் தொடுமுன்னே இணையடியின் நிழலைத்தா! ..(23)

மார்கழி 24 [08/01/2026]

நீயருளும் தெய்வமென, நேருனக்(கு)ஒன்(று) இல்லையென,த்
தாயனையன் அன்பிலென,த் தந்தைநிகர் பரிவிலென,க்
காய-மன- வாக்(கு)உனையே கருதுகிற மெய்யடியார்
வாயருள யானுணர்ந்தேன் வந்தருள்வாய் திண்ணமென்றே! ..(24)

மார்கழி 25 [9/01/2026]

அனைஅனைய பெருமானே அகமுழுதும் நிறைவாயே!
உனஉனது திருநாமம் ஒப்பற்ற அமுதாகும்!
நினநினைவின் மேலாக நிலமிதனில் சொத்தேது?
கனகனகம் வேண்டாருன் கழலுறவு கண்டாரே! ..(25)
[அனை அனைய = தாயைப்போல; உன = உன்ன, தியானிக்க; நின = உன்னுடைய; கன = செறிந்த, அடர்ந்த, மிகுந்த]

மார்கழி 26 [10/01/2026]

பொருளருளின் இல்லாரைப் புரக்கின்ற நெஞ்(சு)ஈவாய்!
மருளிருளைப் போக்கிடுவாய்! மனத்தினிலும் புத்தியிலும்
தெருளருளி மெய்ஞ்ஞானத் தேசாக ஒளிர்ந்திடுவாய்!
ருளுருளைப் புவிப்பற்றில் உழலாது விடுவிப்பாய்!
[அருளின் = அருள்வாயெனில்; புரக்க = காக்க; மருள் = குழப்பம்; இருள் = அஞ்ஞானம்; தெருள் = தெளிவு; தேசு = பிரகாசம்; ருளுதல் = ழலுதல்; உருளை = உருண்டை]

மார்கழி 27 [11/01/2026]

கல்லைமெல்லிடைப் பெண்ணாக்கிக் கால்மகிமை காட்டியவ!
வில்லவல்லவ சிவதனுசை விரல்திறனால் ஒடித்தவனே!
அல்லிதுல்லிய நீள்கண்ணால் அகிலமீர்க்கும் அழகுடையோய்!
எல்லையில்லது நினதாற்றல் எண்ணுதலே பேரின்பம்! ..(27)
[மெல்லிடைப் பெண்= அகலியை; வில்ல = வில்லாளியே!; துல்லிய = நிகரான]

மார்கழி 28 [12/01/2026]

அரிநாமம் பழகியவாய்க்(கு) அமுதமும்ஓர் ஆலம்தான்!
தெரிவுடையார் அதுவிட்டுத் தேவுலகம் வேண்டாரே!
திரிபறவே அதிலாழ்ந்தார் தேராரே வீடுபெறக்
கரிவரதா அன்னார்க்குக் கலியுகமும் கற்கண்டே! ..(28)
[ஆலம் = விடம்; தெரிவு = ஞானம், விவேகம்; தேவுலகம் = தேவலோகம்; திரிபு = மாற்றம்]

மார்கழி 29 [13/01/2026]

நாரணனே மார்கழியாய் நானுன்னைப் பாவித்தேன்!
மாரணிந்த அன்னையுடன் மன்பதையைக் காக்குமடர்
காரனைய வள்ளலுனைக் கால்பிடித்து வேண்டுவ(து)உன்
பேரதனை என்னுடலம் பிரிந்தபினும் சொலவேண்டும்! ..(29)
[மார் = மார்பு; கார் = மழைமேகம்]

மார்கழி 30 [14/01/2026]

ஆழியுனைத் தாங்கிட,ஓர் ஆழிதனைத் தாங்கியவா!
ஊழிதனில் எஞ்சுகிற ஓருயிரே உன்னடிமண்
பூழிபடத் தவமியற்றிப் பொற்புடையோர் காத்திருக்கக்
காழியுடன் நம்புமிந்தக் கடையனையும் கண்டருளே! ..(30)
[ஆழி = கடல்; ஆழி = சக்கரம்; ஊழி = பிரளய காலம்; பூழி = தூள்; காழி = உறுதி]

ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம் [14/01/2026]
 
மார்கழியின் முப்பதிலும் மனம்நிறைய உனைஎண்ணிச்
சீரெதுகை மோனையுடன் செய்தகவி மலர்களினால்
தார்தொடுத்துன் மேனியிலே சாத்திடவுன் அன்பர்களின் 
பார்வையிலே அர்ப்பணித்தேன் பரந்தாமா ஏற்றருளே! ..(+1)

சுபம். 

நல்வாழ்த்துகள்
கோபால்
[14/01/2026]

सर्वे जना: सुखिनो भवन्तु ।

Ram Ramakrishnan

unread,
Jan 13, 2026, 9:04:23 PM (4 days ago) Jan 13
to santhav...@googlegroups.com
அருமை, திரு. கோபால்

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jan 13, 2026, at 20:32, GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CALjGCts6BhS-O1rCjD_sqcBafkcnJ2qQdR6F36O38AZHcQsKew%40mail.gmail.com.

இமயவரம்பன்

unread,
Jan 13, 2026, 11:10:40 PM (4 days ago) Jan 13
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிகச் சிறப்பு!

சீர்கெழு செந்தமிழில் செவ்வே தொடுத்தளித்த
மார்கழிப்பா மாலை வனப்பு.

GOPAL Vis

unread,
Jan 14, 2026, 12:51:23 AM (4 days ago) Jan 14
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு ராம்கிராம். 
கோபால். 
[Usual practice in SV is to trim the mail being replied to, to just the necessary length.] 

On Wed, Jan 14, 2026 at 7:34 AM Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:
அருமை, திரு. கோபால்

அன்பன
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jan 13, 2026, at 20:32, GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:


மார்கழி முப்பது ( 21 - 30*1)
மார்கழி 21 [05/01/2026]

என்னிறைஞ்சல் உன்செவியை என்றடையும் யானறியேன்!
அன்னைநின நெஞ்சிலிருந்(து) அன்பாக எனைக்கண்டு
முன்னைவினை போக்கிடவும் முத்திதனை ஈந்திடவும்
உன்னைஅவள் பக்குவமாய் ஊக்கிடுவாள் என்பொருட்டே! ..(21)
[ஊக்குதல் = தூண்டுதல்]

..........

GOPAL Vis

unread,
Jan 14, 2026, 12:53:22 AM (4 days ago) Jan 14
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு இமயவரம்பன். 
உங்கள் குறட்பா. 
கோபால்

--

Reply all
Reply to author
Forward
0 new messages