சிவவாக்கியர் பாடலில் ஓர் ஐயம்

3 views
Skip to first unread message

Niranjan Bharathi

unread,
2:37 AM (9 hours ago) 2:37 AM
to Santhavasantham
அனைவருக்கும் வணக்கம் ,

சிவவாக்கியர் எழுதிய ஓடி ஓடி ஓடி பாட்டில் ஓர் ஐயம்

அஞ்செழுத்திலோர் எழுத்து அறிந்து கூற வல்லரேல்*

அஞ்செழுத்திலோர் எழுத்து அறிந்து கூற வல்லிரேல்*

இவ்விரண்டில் எது சரி?

அறிஞர்கள் தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.

நன்றி,
நிரஞ்சன் பாரதி 


இமயவரம்பன்

unread,
3:57 AM (8 hours ago) 3:57 AM
to santhav...@googlegroups.com, Santhavasantham
வணக்கம்,

நீங்கள் குறிப்பிடும் பாடலின் முழுவடிவம் இது என்று நினைக்கிறேன்:

“அஞ்செழுத்தி லேபிறந்து அஞ்செழுத்தி லேவளர்ந்து 
அஞ்செழுத்தை யோதுகின்ற பஞ்சபூத பாவிகாள்‌ 
அஞ்செழுத்தி லோரெழுத்‌ தறிந்துகூற வல்லிரேல்‌ 
அஞ்சலஞ்ச லென்றுநாத னம்பலத்தி லாடுமே.”

இங்கே “பாவிகாள்” என்று முன்னிலையில் விளிப்பதால் “வல்லவர்களாக நீங்கள் இருந்தால்” என்று பொருள் தருகின்ற “வல்லிரேல் “ என்னும் சொல்லே இங்குப் பொருந்தும் என்று எனக்குத் தோன்றுகிறது. வல்லிர் = வல்லீர்- குறுகல் விகாரம்.

(வல்லர் என்பது படர்க்கைச் சொல்லாதலின் “பாவிகாள்” என்னும் முன்னிலைச் சொல்லுக்கு, “அவர்கள் வல்லவர்கள்  ஆக இருந்தால்” என்று பொருள் தருகின்ற “வல்லரேல்” என்னும் சொல் பொருந்தாது என்பது என் கருத்து)

- இமயவரம்பன் 

On Oct 4, 2025, at 2:37 AM, Niranjan Bharathi <niranjan...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAL0k%2BGLdFbZicqCv59-z%2B26VHVzTApo9yaTXncg8YOM-2B%3DtJg%40mail.gmail.com.

Niranjan Bharathi

unread,
7:07 AM (4 hours ago) 7:07 AM
to Santhavasantham
நன்றி ஐயா 😊🙏 

நமச்சிவாய / நமசிவாய - தமிழ் மரபுப்படி எது சரி?

Rajagopalan Soundararajan

unread,
7:27 AM (4 hours ago) 7:27 AM
to சந்தவசந்தம்
நமஶிவாய என்று எழுதிப் பழகிவிட்டால் இந்த ஐயம் வராது. 

Siva Siva

unread,
9:07 AM (2 hours ago) 9:07 AM
to santhav...@googlegroups.com
திருவாசகத்தில் முதற்பதிகமான சிவபுராணத்தின் முதலடியைக் காண்க.

வி. சுப்பிரமணியன்
Reply all
Reply to author
Forward
0 new messages