பாரதி காவலர் K. ராமமூர்த்தி

15 views
Skip to first unread message

M. Viswanathan

unread,
Apr 7, 2026, 10:40:47 PM (4 days ago) Apr 7
to Santhavasantham, M. Viswanathan
பாரதி காவலர் இயற்கை எய்தினார் 
*******************************************

பாரதியின் மீது மிகுந்த பற்றும், பாரதி இலக்கியத்தில் ஆழ்ந்த புலமை பெற்றவரும் திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் பிறந்தவருமான பாரதி காவலர் டாக்டர் கே. ராமமூர்த்தி(வயது 90) நேற்று (07.04.2026) இறைவனடி சேர்ந்தார்.  

    "ஓம் சாந்தி சாந்தி சாந்தி:"

பாரதி இளைஞர் சங்கம், பாரதியார் சங்கம் போன்ற அமைப்புகளின் தலைவராகவும், பாரதி கலைக் கழக உறுப்பினராகவும் பணிசெய்த பாரதி அன்பர். 

வீட்டுக்கு வீடு பாரதி என்ற நிகழ்சியின் மூலம் மகாகவி பாரதியை இல்லம் தோறும் கொண்டு சென்றவர். ஆழ்ந்த தேச பக்தர். ஆன்மிகவாதி. நிறைய இளைஞர்களை பாரதியைப் படிக்க வைத்த பெருமகனார். கதை, கவிதை, கட்டுரை, சொற்பொழிவு என்று பலதுறைகளில் வலம் வந்தவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் பல நூல்களை எழுதியவர். பல விருதுகளும், பாராட்டுகளும் பெற்றவர்.

 புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களால் பாரதி காவலர் என்று அழைக்கப்பட்டவர்.

9-4-2026 அன்று காலை 9-30 மணிக்கு இறுதிச் சடங்குகள் கீழ்க்கண்ட முகவரியில் நடைபெறும்.

Ashiana Shubham Villa Viviana, 
Govindapuram, 
Melrosapuram Road, 
Maraimalainagar, 
Tamilnadu - 603204.

(கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் தந்த தகவலை அன்பர்களுக்காகப் பகிர்ந்துள்ளேன். -  மீ. விசுவநாதன்)

Ram Ramakrishnan

unread,
Apr 7, 2026, 10:55:28 PM (4 days ago) Apr 7
to santhav...@googlegroups.com
ஆழ்ந்த அனுதாபங்கள்.

அறிவும்் செறிவும் கவண்டு ஆன்மிகத் துணையோடு பாரதியாரின் புகழைப் பரப்புவது  ஒன்றையே  மூச்சாகக் கொண்ட அப் பெருமகனார்க்கு என் தலை தாழும்

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Apr 8, 2026, at 08:10, M. Viswanathan <meev...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CACXjW-t3S_gFHi5m3mtEaJae_izVxs5h%2Bt6Jyfg6x91cZ79tig%40mail.gmail.com.

Swaminathan Sankaran

unread,
Apr 8, 2026, 1:48:01 AM (4 days ago) Apr 8
to santhav...@googlegroups.com, M. Viswanathan
ஆழ்ந்த அனுதாபங்கள்!

சங்கரன் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CACXjW-t3S_gFHi5m3mtEaJae_izVxs5h%2Bt6Jyfg6x91cZ79tig%40mail.gmail.com.


--
 Swaminathan Sankaran

Niranjan Bharathi

unread,
Apr 8, 2026, 2:56:55 AM (4 days ago) Apr 8
to santhav...@googlegroups.com, M. Viswanathan
ஆழ்ந்த இரங்கல் 🙏🙏

Subbaier Ramasami

unread,
Apr 8, 2026, 9:25:30 AM (3 days ago) Apr 8
to santhav...@googlegroups.com
பாரதி காவலர் இராமமூர்த்தி, சிறந்த பாரதி பக்தர் என்பது மட்டுமன்று. அந்த ஈடுபாட்டைச் செயல்படுத்தியும் காட்டியவர். பாரதிக்காக அவர் நடத்திய விழாக்களும் அவர் செய்த செயற்பாடுகளும் அதிகம்.  இன்று பேச்சாளர்களாக அறியப்படு பலரும் அவர நடத்திய பாரதி இளைஞர் சங்கத்தால் வளர்த்துவிடப்பட்டவர்கள். அவர் நடத்திய நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றுப் பெருமை பெற்றிருக்கிறேன். அங்குத்தான் பட்டிமண்டபங்களில் பங்குபெறும் அறிமுகம் கிடைத்தது.  கவியரங்குகளில் பங்குபெற்றிருக்கிறேன். அவரும் அமரர் வி. எஸ் .மணியும் செய்துள்ள பாரதி தொண்டுகள் அநேகம். அவருடைய ஆன்மா இறையடி நீழலில் தங்குக!

இலந்தை

Kaviyogi Vedham

unread,
Apr 8, 2026, 10:59:50 AM (3 days ago) Apr 8
to santhav...@googlegroups.com
i  know  him very well.let  his soul rest now in   peace.
yogiyar

VETTAI ANANTHANARAYANAN

unread,
Apr 8, 2026, 5:42:54 PM (3 days ago) Apr 8
to santhav...@googlegroups.com
பல ஆண்டுகளுக்கு முன் பாரதி கலைக்கழக ஆண்டுவிழா நிகழ்ச்சிகளில் நானும் பேராசிரியர் பசுபதியும் கலந்து கொண்டிருக்கிறோம். அப்போது சிறந்த பேச்சாளர்க்குரிய கணீரென்ற குரலில் பாரதி காவலர் இராமமூர்த்தி உரையாற்றிக் கேட்டதுண்டு. அவரது ஆத்ம சாந்தி அடையட்டும்.

அனந்த் 

Reply all
Reply to author
Forward
0 new messages