தினமொரு பாரதி சிந்தனை

843 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
Sep 12, 2021, 5:30:00 AM9/12/21
to santhavasantham

தினமொரு பாரதி சிந்தனை

பாரதியின் வாழ்க்கை வரலாற்றை நான் புத்தகமாக எழுதியிருக்கிறேன்.  வோர்ட் டாகுமெண்ட்டில் 600 பக்கங்களுக்கு மேல் அமைந்த நூல் அது. பாரதி நினைவு நூற்றாண்டில் அதிலிருந்து சில  சிந்தனைகளை இங்கே கொடுக்கலாமென்றிருக்கிறேன்

இன்றையச் சிந்தனை

பாரதியும் சூரத்தும்

பாரதி வாழ்க்கையிலே பல ஊர்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. அவற்றுள் மிக முக்கியமானவை சில. அச்சிலவற்றுள் மிக முக்கியமானது சூரத்.

சூரத்தில் 1907ம் ஆண்டு டிசம்பர் மாதம் காங்கிரஸ் மாநாடு நடந்தது.  அந்த மாநாட்டுக்குப் பாரதி சென்றிருந்தான். அந்த மாநாடு பாரதியின் வாழ்க்கையில் தீவிரவாதம் என்ற ஒரு புதிய திருப்பத்தைக் கொணர்ந்தது.

புத்தகத்திலிருந்து  ஒரு பகுதி

பாரதி திலகர் பெருமானின் பேச்சைக்கேட்டார். அவர் பக்கத்தில் இருந்த நியாயத்தால் முற்றிலும் அவர் பக்கம் சாய்ந்துவிட்டார். புதிய கட்சி முறைப்படி உருவாகியது. பத்திரிகை மூலமும் மிகவும் தீவிரமாக மக்களிடையெ பிரச்சாரம் செய்யும் படி திலகர் வேண்டினார். அன்று அவர் செய்த பிரசங்கம் பாரதியார் உள்ளத்திலே ஒரு புதிய எழுச்சியை ஊட்டியது. திலகரைத் தெய்வமாகவே போற்றினார். சூரத்தில் திலகரைச் சந்தித்தபோது அவர் கண்களில் கண்ட காந்த சக்தியைக் கண்டு மயங்கி அப்படியே திலகரின் காலில் நெடுன்சாண்கிடையாக விழுந்து வணங்கியதாகப் பாரதியே கூறியிருக்கிறார். சைவர்கள் ஐந்தெழுத்து மந்திரத்தை எவ்வளவு பயபக்தியோடு ஓதுவார்களோ அவ்வளவு பயபக்தியோடு தேசபக்தர்கள் திலகர் நாமத்தைப் போற்ற வேண்டும் என்று பாரதி எழுதினார். சென்னைக்குத் திரும்பி வந்த பிறகுஎனது காங்கிரஸ் யாத்திரைஎன்று இரண்டணா விலையில் ஒரு புத்தகம் எழுதினார். சூரத்துக்குப் போய்வந்த  பின் பாரதியின் எழுத்தில் மேலும் வலு ஏறியது. தீப்பொறி பறந்தது. அச்சம் அஞ்சத் தொடங்கிவிட்டது.

1980ம் ஆண்டு நான் சூரத்தில் நடந்த பாரதிவிழாவில் சிறப்புரையாற்றினேன். அப்பொழுது சூரத்தைப்பற்றி நான் எழுதிய வெண்பா

பாரதி பாதம் பதித்த மண் புத்தொளியை
ஆரப் புகுத்திய அற்புதமண் -  வீரத்தை

ஊற்றி எழுச்சியினை ஊட்டியமண், பாதையினை
மாற்றியமண் சூரத்தின் மண்

நேற்று பாரதி அகண்ட தீபத்தைப் பாரதியோடு தொடர்புடைய ஊர்களில் ஏற்ற வானவில் அமைப்பு ஏற்பாடு செய்திருந்ததை அறிந்து மகிழ்கிறேன். சூரத்திலும் ஏற்றியிருப்பார்கள் என நினைக்கிறேன்.

 

இலந்தை
12-11-2021

Lalitha & Suryanarayanan

unread,
Sep 12, 2021, 5:37:01 AM9/12/21
to santhav...@googlegroups.com
சூரத் வெண்பா நன்று.

சிவசூரி.

Govindaraju Arunachalam

unread,
Sep 12, 2021, 10:26:59 AM9/12/21
to சந்தவசந்தம்
அருமை. ஆண்டு முழுவதும் பாரதி விருந்தா! என்னே என் நல்லூழ்! தொடரட்டும். 
     -இனியன்.
   

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAE7KeNPFLzN-T36GnRGrB8%3Ds2%3DoBQOsxJ5%3D-8-v77s7KRWnnsQ%40mail.gmail.com.

Kaviyogi Vedham

unread,
Sep 12, 2021, 10:49:39 AM9/12/21
to santhavasantham
பலே பலே தொடரட்டும் உம் பணி
 யோகியார்

Subbaier Ramasami

unread,
Sep 12, 2021, 10:58:22 PM9/12/21
to santhavasantham
சிந்தனை 2

பாரதி

 

எட்டையபுரத்தில் எழுந்த எரிமலை.

செந்தமிழ்ப் பா நெருப்பு.

மின்னல் கவிவாளை வீறுகொள ஏந்தியவன்

மந்திரம் போல் சொல்பெற்ற மகாகவி

இற்றைநாள் பாட்டின் அதிசயம்

கூரதிகம்கொண்ட சொல் கோமான்

நெஞ்சத்துச் சாரம் எடுத்துச் தமிழாய் வடித்தவன்

யாரும் விடமுடியா அற்புதம்

சக்தியின் சூலம்

சங்கரனின் கைத்துடி

பரம்பரைக்குப் பாட்டெழுதிப் பட்டயமாய்த் தந்தவன்

சீட்டுக் கவிக்கு ஜீவன் உயிர்த்தவன்

சுவைபுதிது சொல்புதிது தந்தவன்

வளம் புதிது பொருள் புதிது கொணர்ந்தவன்

சோர்வுற்றுக் கிடந்த மக்கள் எழுச்சி பெறப்

போர்ப்பரணி பாடிய புது யுகக் கவிஞன்

 

ஆணெல்லாம்பெண்ணாய் அரிவையரெலாம் விலங்காய்

மாணெல்லாம் பாழாகி மங்கிவிட்ட நாட்டாரின்

மானத்தைக் காத்த மகாகவி

வேட உபநிடத மெய்நூல்கள் எல்லாம் போய்ப்

பேதைக் கதைகள் பிதற்றிய நம் மக்களுக்கு

சுதந்திரப் பாட்டெடுத்துத் தூண்டியவன்

பொன்னும் மணியும் மிகப் பொங்கி நின்ற இந்நாட்டில்

அன்னமின்றி நாளும் அழிந்துவந்த மக்களிடம்

பாரதத்துச் செல்வத்தைப் பாரென்றான்

அடிமைப்பட்டுக்கிடந்த நாட்டு மக்கள்,  நெஞ்சத்திலும்

அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில் தோன்றிய

விடிவெள்ளி பாரதி

“இந்த நாடு என்நாடு” என்ற உணர்வுகூட இன்றி

அன்னியன் நாடோ என்று அயர்ந்திருந்த மக்களிடம்,

“நாமிருக்கும் நாடு நமதென்ப தறிந்தோம்- இது

நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம்”

என்றான் பாரதி.

“பாரத நாடு பழம்பெரும் நாடு

நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்”

என்று நம் பரம்பரைப் பாத்தியதையைப் பதிவு செய்தவன் பாரதிவ்

Ramamoorthy Ramachandran

unread,
Sep 12, 2021, 11:09:07 PM9/12/21
to Santhavasantham
அருமை இலந்தையாரே! பாரதியைப் பட்டை தீட்டுகிறீர்கள்! 
இனி நாள் தோறும்  பாரதியின் பன்முக ஒளி  பரவும்!
காத்திருந்து கண்டு  களி கொள்வோம்!  -  புலவர் இராமமூர்த்தி   

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Subbaier Ramasami

unread,
Sep 13, 2021, 12:46:47 AM9/13/21
to santhav...@googlegroups.com
நன்றி புலவரே!

Subbaier Ramasami

unread,
Sep 13, 2021, 9:59:54 AM9/13/21
to santhavasantham

. - 13-9-2021

 

புதிய மகாகவி தோன்றினால் அந்நாடு பாக்கியமுடைத்து” என்றான் பாரதி. அப்பாக்யத்தைத் தமிழ்நாட்டுக்குத் தந்த மகாகவியாக அவனே அமைந்தான்.

 

தன் தகுதியை அளவுகு மீறி மதிப்பவர்கள் உண்டு. தனது தகுதி என்னவெனத் தெரியாதுழல்பவர்கள் உண்டு. ஆனால் தன் திறமையைச் சரிவரத் தெளிந்துகொண்ட மாமேதை பாரதி.

 

நமக்குத் தொழில் கவிதை நாட்டுக்குழைத்தல்

இமைப்பொழுதும் சோராதிருத்தல்” என்றான். இந்நிலையை அவன் எடுத்தால் உமைக்கினிய மைந்தன் கணநாதந்தன் குடியை வாழ்விப்பான் என்று நம்பினான்.

கவிதை அவனைத் தொழில்செய்ய ஆட்கொண்டது. காலத்தால் அவன் வேகத்துக்கு ஈடுகொடுக்க இயலவில்லை. பாரதி கணங்களை யுகங்களாக மாற்றினான். தாளைக் கருப்பாக்கி அதை ஒரு சரித்திரமாக்கினான்.அவனுள் பொங்கி வந்த கவிதை ஊற்று அவன் நாவின் வழிப்பாய்ந்தது. அவன் கைநரம்புகளின் துடிப்பு எழுதுகோலை நடனமாடச் செய்தது.

 

தேசத்திலே புகைந்துகொண்டிருந்த தேச பக்தி நெருப்பை ஊதி ஊதிப் பற்றவைத்தான்.  அவன் ஊதிய காற்று உள்ளங்களை இயக்கியது.

அவன் கவிதையாக வாழ்ந்தான். அவன் வாழ்க்கை கவிதையாகியது.

 

காலைச் சூரியன், வீசும் தென்றல் விரிந்த வானம், அக்கினிக்குஞ்சு, இன்னறும் நீர்க்கங்கை இவையெல்லாம் அவன் எழுதுகோலுக்கு மை கொடுத்தன.

 

அழகை மாந்தி வெறிபடைத்த மனம் அமுதத்தைத் தந்தது அவனே சொல்கிறான்

நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும்

நேர்பட வைத்தாங்கே

குலாவும் அமுதக் குழம்பைக் குடித்தொரு

கோல வெறிபடைத்தோம்

என அழகை ஆராதித்தான். ஆர்த்திடும் காற்றைக் கரகமாக்கினான்

அப்படிப்பட்ட மனம் படைத்த காரணத்தால்தான் பாரதி உலகத்து நிகழ்ச்சிகளை ஊடுருவிப் பார்க்க முடிந்தது. கொடுமைகளைக் கண்டு கொதிக்க முடிந்தது. பெல்ஜியமும் பிஜித்தீவும், ருஷ்யாவும், அவன் கவிதையில் தம்மை இனம்காட்டிக் கொள்ள முடிந்தது. செம்மையும் தண்மையும், உயிர்ப்பும், துடிப்பும் அங்கே இழைந்து தீமையை அறுத்தன.

அவன் கற்பனை காற்றையே குதிரையாக்கியது. ஆம் காற்றுப்புரவி, ககன விரிவு, மண்ணின் அழகு, மாந்தர் வாழ்க்கை, சக்திக்கூத்து, ரௌத்திரப்பாய்ச்சல் இன்னும் எத்தனை எத்தனையோ அவன் கவிதையை உசுப்பிவிட்டன, எழுச்சிகொள்ள வைத்தன.


ILANTHAI

13-9-2021

Subbaier Ramasami

unread,
Sep 14, 2021, 12:01:20 AM9/14/21
to santhavasantham
சுப்பையாவுக்கு ஏழுவயது. எட்டைய புரத்தில் உள்ள பள்ளியில் படித்துவந்தான். அவனது தாய்வழித் தாத்தா இராமசாமி அய்யர் அவனுக்குத் தமிழ் கற்றுக்கொடுத்தார். அவர் கற்றுக்கொடுத்ததைக் கப்பென்று பிடித்துக்கொண்டான் .அதுமட்டுமல்ல. புத்தகங்களைப் படிக்கவும் கற்றுக்கொண்டான். தாத்தா கற்றுக் கொடுத்ததற்கும் மேல் தானாகப் படித்துத் தெரிந்து கொண்டான்.
. பிறவியிலேயே மேதாவியோ என்று அவர் வியக்கும் வண்ணம் கற்றுத் தேர்ந்தான் சுப்பையா. சின்னச்சின்னக் கவிதைகளை சொந்தமாக இயற்றிப் பாடிக்காட்டினான். அவன் கூறிய சில சொற்றொடர்களைக் கேட்ட இராமசாமி அய்யர் அந்தக்குழந்தை முற்பிறப்பில் ஒரு கவிஞனாகத்தான் பிறந்திருக்க வேண்டும் என்று நம்பினார். காளிதாசன் , குமரகுருபரர், காளமேகம் ஆகியோர் தெய்வங்களின் அருளாலே பாடல்பாடினார்கள். இந்த சின்னக்குழந்தை நாக்கிலே எந்தத்தெய்வம் தேனைத் தடவியதோ தெரியலையே என்று வியந்தார் இராமசாமி அய்யர்.
இலந்தை
14-3-2021

Subbaier Ramasami

unread,
Sep 14, 2021, 9:10:32 PM9/14/21
to santhavasantham
தினமொரு பாரதி சிந்தனை 5

பதினாறு கலைகள் நிரம்பிய பூரணச் சந்திரன் பாரதி. ஓரிரு கலைகளே நமக்கு வெளிச்சமாயிருக்கின்றன,. இதை மங்கியதோர் நிலவினிலே கண்ட கனவாகக் கொள்ளலாமேயன்றி, பொங்கிவரும் பெருநிலவின் ஒளித்தோற்றம் என்று கொள்ளலாகாது.- என்று  பாரதி அறிஞர் தி.நா. இராமச்சந்திரன் எழுதியுள்ளார். உண்மைதான் .

பட்டை தீட்டப்பட்ட வைரம் திரும்பிய திசையெல்லாம் பளிச் பளிச்சென்று ஒளிவிடுவதைப் போல பன்முகப்பிரகாசம் காட்டியவன் பாரதி

பாரதி

1 கவிஞனாகக் கவிதையின் உச்சத்தைத் தொட்டவன்

2- பத்திரிகையாளனாகப்பல சாதனைகள் படைத்தவன். பல புதிய உத்திகளைப் பத்திரிகைத் துறைக்கு அறிமுகப்படுத்தியவன்

   1   கேலிச்சித்திரங்களை அறிமுகப்படுத்தினான்

   2   செய்தி கொடுக்கப் பொதுமக்களுக்குச் சன்மானம் கொடுத்தான்

\  3   ஒரேசமயத்தில் மூன்று பத்திரிகைகளுக்கு ஆசிரியன் (தினசரி, வாராந்தரி, மாதப் பத்திரிகை) ஆங்கிலப்பத்திரிகைக்கும் தமிழ்ப்பத்திரிகைக்கும் ஒரே சமயத்தில் ஆசிரியனாக இருந்தான்.

   4 மூன்று பத்திரிகைகளுக்கு ஆசிரியப்பொறுப்பில் இருந்து கொண்டே ஐந்து பத்திரிகைகளில் எழுதினான். சித்திரங்களைக்கொண்டு சித்திராவளி என்ற பத்திரிகை நடத்த விரும்பினான்.

   6- பத்திரிகைச் சந்தா விகிதத்தில் புதுமை புகுத்தினான்.

   7 பத்திரிகையின்  அளவு அதிகமான போது கூட சந்தாவை உயர்த்தவில்லை.

   9 பத்திரிகைகளில் விவாதங்களைத் தொடங்கி பலரும் ஈடுபடவைத்தான்

   10 பெண்களுக்கென்றே நடத்தப்பட்ட ஒரு பத்திரிகையின் ஆசிரியனாக     இருந்தான்

  11 பத்திரிக்கை உலகில் ஆண்டு, மாதம், நாள் முதலியவற்றைத் தமிழில் குறித்தான்.

   12 இந்தியா, விஜயா போன்ற இதழ்களில் பக்க எண்களையும் தமிழ்     எண்களில் குறித்தான். 

 13 பத்திரிகைகளில் ஞானரதம் போன்ற  அற்புதமான தொடர்களை எழுதினான்

  3 இன்றையக் கணினி யுகத்துக்கு ஏற்றாற்போல தமிழிலுள்ள எழுத்துக்குறைகளைச் சீர் செய்து புதிய குறியீடுகளை வடிவமைத்தான்.

பாரதி எழுதிய துளசிபாய் என்ற கதைதான் தமிழிலக்கியத்தில் முதல் சிறுகதை என்று

சொல்கிறவர்கள் உண்டு

5    அறிவியலையும் அறிவியல் தமிழையும் தமிழுக்கு அறிமுகப்படுத்தினான்

6    சுதந்திர இந்தியாவில் என்னென்ன செய்யவேண்டும் என்பதைத் தீர்க்க தரிசனமாகக் கவிதையிலும் உரை நடையிலும் எழுதிவைத்தான்

இவ்வளவு சாதனைகள் செய்த அந்த மேதை இங்கிலாந்தில் பிறந்திருந்தால்  அரண்மனைக் கவியாக அவர் கொண்டாடப்பட்டிருப்பார். சுயேட்சை அடைந்த எந்த நாட்டிலாவது அவர் ஜனித்திருப்பாராகில் இவ்வளவு பால்யத்தில் மாண்டிருக்கமாட்டார் என்றார் சுதந்திரப் போராட்ட வீரர் சத்தியமூர்த்தி

இலந்தை

15-9-2021

Pas Pasupathy

unread,
Sep 15, 2021, 8:19:13 AM9/15/21
to Santhavasantham
அருமையான தொகுப்பு.

பாரதி குடும்பத்தின்  குலதெய்வம் எது? 


On Tue, 14 Sept 2021 at 21:10, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
தினமொரு பாரதி சிந்தனை 5

பதினாறு கலைகள் நிரம்பிய பூரணச் சந்திரன் பாரதி. ஓரிரு கலைகளே நமக்கு வெளிச்சமாயிருக்கின்றன,. இதை மங்கியதோர் நிலவினிலே கண்ட கனவாகக் கொள்ளலாமேயன்றி, பொங்கிவரும் பெருநிலவின் ஒளித்தோற்றம் என்று கொள்ளலாகாது.- என்று  பாரதி அறிஞர் தி.நா. இராமச்சந்திரன் எழுதியுள்ளார். உண்மைதான் .

பட்டை தீட்டப்பட்ட வைரம் திரும்பிய திசையெல்லாம் பளிச் பளிச்சென்று ஒளிவிடுவதைப் போல பன்முகப்பிரகாசம் காட்டியவன் பாரதி

பாரதி

1 கவிஞனாகக் கவிதையின் உச்சத்தைத் தொட்டவன்


saidevo

unread,
Sep 15, 2021, 8:57:47 AM9/15/21
to santhav...@googlegroups.com
சுடலைமாடன் என்றிங்கே செய்தி.

Virus-free. www.avast.com

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Pas Pasupathy

unread,
Sep 15, 2021, 9:14:12 AM9/15/21
to Santhavasantham
நன்றி.

On Wed, 15 Sept 2021 at 08:57, saidevo <sai...@gmail.com> wrote:
சுடலைமாடன் என்றிங்கே செய்தி.

Virus-free. www.avast.com

Subbaier Ramasami

unread,
Sep 15, 2021, 9:45:01 AM9/15/21
to santhavasantham
அமரன்கதையை எழுதியவர் தங்கம்மாள் பாரதியின் பெண் விஜயலக்‌ஷ்மி பாரதி
நான் எழுதியுள்ள பாரதி வரலாற்றின் ஆரம்பத்திலேயே சுடலைமாடனைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன்

சீவலப்பேரி சுடலைமாடன் கோவில் பாரதியின் தாத்தா கடுவாய்ச் சுப்பையர் வீட்டிலிருந்து 2 கி மீ தொலைவில் இருக்கிறது. மிகவும் உக்கிரமன தெய்வம். சத்தியத் தெய்வம். நெல்லை மாவட்டதில் உள்ளவர்கள்  யாராவது பொய்சாட்சி சொன்னால் அதைச் சீவலப்பேரிச் சுடலைமாடன் முன் சொல்லச் சொல்லுவார்கள்.அப்படி அவர் சொல்லி விட்டால் அதை அப்படியே  ஏற்றுக்கொள்வார்கள்.   ஆனால் பொய்சாட்சி சொன்னவர் தொலைந்தார். 

சில நூற்றாண்டு களுக்கு முன்  எங்களூரில வாழ்ந்த ஒருவர் சீவலப்பேரிச் சுடலை மாடனிடம் பொய்ச் சாட்சி சொல்லிவிட்டு ஊர் வந்து விட்டார். அவரைத்தொடர்ந்து சுடலைமாடன் வந்துவிட்டார். அவருக்குப் பூஜை செய்து அவருக்குக் கோவில் கட்டி  வழிபாடு செய்தார். அவர் குடும்பத்தில் ஒருவருக்குக் கால் ஊனமாகிவிட்டது. இன்றும் அந்தக்கோவில்   எங்கள் ஊரில் கழுகுமலைச் சாலையில் இருக்கிறது. வருடாவருடம் கொடை நடக்கும்.  பன்றியூட்டுக் கொடுப்பார்கள். பன்றியின் வயிற்றைக் கீறி அதற்குள் உணவுப்பொருட்கள் வைத்துச் சுடலை மாடன்  சாமவேட்டாஇயாடி வரும் போது கொடுப்பார்கள். மருளாடி அதை உண்பார். இப்பொழுதும் அந்த வழக்கம் உண்டு. நான் பார்த்திருக்கிறேன். சீவலப்பேரி சுடலைமாடன் கோவிலுக்குச் சென்றிருக்கிறேன். அந்தக்காலத்தில் எருமைமாடு பலிகொடுப்பார்கள் என்று கேவிப்பட்டிருக்கிறேன். சுடலை மாடன் வில்லுப்பாட்டு மிகவும் பிரசித்தம்

இலந்தை

Subbaier Ramasami

unread,
Sep 15, 2021, 10:15:19 AM9/15/21
to santhavasantham
சீவலப்பேரிச் சுடலைமாடன்

image.pngவ்

Niranjan Bharathi

unread,
Sep 15, 2021, 10:36:35 AM9/15/21
to santhav...@googlegroups.com
இதயத்திற்கினிய இலந்தை ஐயா,

நீங்கள் எழுதும் "தினமொரு பாரதி சிந்தனை" பகுதியைத் தவறாமல் படித்து வருகிறேன்.   நீங்கள் எழுதிய பாரதியார் வரலாற்றையும் முழுவதுமாகப் படிக்க விழைகிறேன். என் இதயத்தோடு இழையோடும் "இழை" இந்த அஞ்சல்கள் எல்லாம் :) :)  அதற்காகத் தங்களுக்கு நன்றி நவில்கிறேன்.

நினைவு நாள் நூற்றாண்டில் இவற்றையெல்லாம் படித்து உள்வாங்கிக் கொள்ள என் எள்ளுத்தாத்தா சித்தம் கொண்டு என் ஆன்மாவை பக்குவம் செய்திருக்கிறார். அவருக்கு என் அகமார்ந்த வந்தனங்கள்.

 பத்திரிகைச் சந்தா விகிதத்தில் புதுமை புகுத்தினான் - இது என்ன புதுமை என்று கோடிட்டுக் காட்ட முடியுமா ஐயா?

 இன்றையக் கணினி யுகத்துக்கு ஏற்றாற்போல தமிழிலுள்ள எழுத்துக்குறைகளைச் சீர் செய்து புதிய குறியீடுகளை வடிவமைத்தான் - "தமிழில் எழுத்துக் குறை", "தமிழ் பாஷைக்கு உள்ள குறைகள்" எனப் பாரதியார் இரண்டு கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இதில் தமிழில் இல்லாத ,ஆனால் பிறமொழிச் சொற்களுக்கிருக்கிற ஓசையைத் தமிழில் குறிக்கச் சிறப்பு குறியீடுகளை வடிவமைத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.  ஆனால், அவை கிடைக்காமற் போனது நமது அல்லூழ். இவற்றை எந்தப் பத்திரிகையில் அறிமுகப்படுத்தினார் என்பது பற்றித் தகவல் உண்டா? 

பாரதி எழுதிய துளசிபாய் என்ற கதைதான் தமிழிலக்கியத்தில் முதல் சிறுகதை என்று

சொல்கிறவர்கள் உண்டு - இக்கதை ஓர் ஆங்கிலக் கதையின் மொழிபெயர்ப்பு என்று அண்மையில் பேராசிரியர் ய. மணிகண்டன் சொன்னதாக நினைவு


நன்றி,
நிரஞ்சன் 

Pas Pasupathy

unread,
Sep 15, 2021, 10:40:02 AM9/15/21
to Santhavasantham
நன்றி, இலந்தை. 

Niranjan Bharathi

unread,
Sep 15, 2021, 10:44:43 AM9/15/21
to santhav...@googlegroups.com
இலந்தை ஐயா,

நீண்ட நாட்களாக மனதில் எம்பிக் குதித்திக் கொண்டிருக்கும் கேள்விகள் இரண்டு.

  1. அரவிந்தர் எங்கேனும் பாரதியைப் பற்றி எழுதியிருக்கிறாரா அல்லது பேசியிருக்கிறாரா? அன்றி அரவிந்தரின் நண்பர்கள் அல்லது ஆய்வாளர்கள் யாரேனும் பாரதியைப் பற்றி அரவிந்தர் சொன்னவை இவை என எங்காவது பதிவு செய்திருக்கிறார்களா?
  2. பாரதியாரை எந்தச் சம்பவம் ஒரு தீவிர சாக்தராக மாற்றியது ?  கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி பாடல்கள் நூலில் 1908 ஆம் ஆண்டில்  தான் அவர் எழுதிய பராசக்தி பற்றிய ஒரு பாடல் முதன்முறை பிரசுரமானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.   1906 ஆம் ஆண்டு வரை பெரும்பாலும் தேசபக்தி பாடல்கள், தனிப்பாடல்கள், அங்கொன்றும் இங்கொன்றுமாக சில வேதாந்தப் பாடல்கள் ஆகியவை தான் பிரசுரம் ஆகியிருக்கின்றன. அப்படியெனில், நிவேதிதா தேவியைச் சந்தித்த பிறகு அவர் ஒரு சக்தி உபாசகராக மாறினார் என யூகித்தல் சரிவருமா? கல்கத்தா காளி கோவிலுக்கு அவர் போயிருக்கலாமோ ?

நன்றி,
நிரஞ்சன்

Kaviyogi Vedham

unread,
Sep 15, 2021, 11:11:44 AM9/15/21
to santhavasantham
இலந்தை சாரே. நல்ல புதிய சிந்தனையும் இதுவரை பிறர் அறியாத
  ஆய்வும் உங்கள் கட்டுரைகளில் தொடர்கின்றன. ருசிகரமாகவும்
 உள்ளன. தொடர்க. வருங்கால மக்கட்கு  உபயோகமாய் இருக்கும். நிச்சயம். வாழ்க உங்க பணி.
 யோகியார்

Subbaier Ramasami

unread,
Sep 15, 2021, 3:44:19 PM9/15/21
to santhavasantham

அன்புள்ள நிரஞ்சன்,
தினமொரு பாரதி சிந்தனையில் நான் பின்னால் எழுத நினைத்திருப்பதையெல்லாம் நீ இப்பொழுதே கேட்டு வாங்கிக்கொள்கிறாய். 

நல்லது

சந்தாவில் புதுமை

இந்தியா  பத்திரிகையின் ஆண்டுச் சந்தா  சந்தா விவரம்
                                                                              ரூ          அ               பை

எல்லா கவர்மெண்டாருக்கும்                      50           0                  0

ஜமீந்தார்கள்  ராஜாக்கள் 
முதலியவர்களுக்கு                                        30            0                  0

மாத வருமானம் ரூ 200க்கு 
மேலுள்ளவர்களுக்கு                                      15            0                   0

மற்றவர்களுக்கு                                                 3           0                    0

பாரதியைப் பற்றி அரவிந்தர்

 சந்திர நாகூர் மோதிலால் ராய் எனும் நண்பருக்கு  அரவிந்தர் 13 ஜுலை 1912 ல் எழுதிய கடிதத்தின் பின்வரும் பகுதியில் பாரதியாரைப் பற்றிக் குறிப்பு உள்ளது.

 

இப்பொழுது நிலைமை என்னவென்றால் எங்களிடத்தில் 11/2 ரூ (ஒண்ணரை)இருக்கின்து. ஸ்ரீநிவாசாவிடம் பணம் இல்லை. நிலையான வருமானமில்லாமல் பாரதியார் வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். கடவுள் கை கொடுப்பார் என்பதில் சந்தேகமில்லை. னால், இப்பொழுதெல்லாம் கடைசி நிமிடம் வரை உதவக் காத்துக்கொண்டிருக்கும் கெட்ட பழக்கம் அவருக்கு வந்திருக்கிது. பாரதியைப் போல எங்களையும் வறுமையுடன் வாழக் கற்றுக் கொள்க் கடவுள் விரும்ப மாட்டார் என்று நம்புகிறேன்”  299


எழுத்துக்குறை


1915ம் ஆண்டு ஜூலை ஞானபாநு இதழில் தமிழில் எழுத்துக்குறை என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில்  சில அயல் மொழிப் பெயர்களை எழுதி உச்சரிக்கத் தமிழில் இயல்வதில்லை என்று சொல்லி அதற்கு எடுத்துக்காட்டாக ஒரு நிகழ்ச்சியைச் சொன்னார்.

 

கல்கத்தாவிலிருக்கும் போது ஸ்ரீமான் அரவிந்த கோஷ் (இவர் பெயரையும் தமிழில் சரியாக எழுத இடமில்லை.”Ghosh’ என்பதை ‘Kosh’ என்று எழுத நேரிடுகிறது. ) ஸ்ரீமான் அரவிந்தர் தமிழ் கற்றுக்கொள்ள விரும்பினாராம்அங்குத் தென்னாட்டு மனிதர் ஒருவர் இவருக்கு நமது அரிச்சுவடி முழுவதும் கற்றுக் கொடுத்தார்.

 

முதல் பாடப் புஸ்தகமும் நடந்தது. அப்படியிருக்கும் போது ஒருநாள் ஒரு தமிழ்நாட்டுப் பத்திரிகை அகப்பட்டது. அதில்பீரேந்திரநாத் தத்த குப்தர் வழக்குஎன்று மகுடமிட்டு ஒரு வியாஸம் எழுதப்பட்டிருந்தது. அதைப் பார்த்துவிட்டு அரவிந்தர் தமது தமிழ் வாத்தியாரிடம்இதென்ன?’ என்று கேட்டார்.

 

வாத்தியார்இது ஒரு பெங்காளிப் பெயர்என்று சொன்னாராம்.

அரவிந்தர்எப்படி?” என்று கேட்டார்வாத்தியார் “Birendranath datta guptha” என்று அந்தச் சொல்லைப் பெங்காளி ரூபத்தில் சொன்னார்

இங்கிலீஷ் தெரியாத கிராமத்துத்தமிழர் இச்சொல்லை எப்படி வாசிப்பார்கள்?என்று அரவிந்தர் கேட்டார்.

நீர் வாசித்ததுபோலவே pireenthranath tattaa kuptar (t=)என்று வாத்தியார் சொன்னாராம். இன்னும் அரவிந்தர் அந்தக் கதையைச் சொல்லிச் சொல்லிச் சிரிக்கிறார்,. நமது பத்திரிகைகளில் ஐரோப்பாவிலுள்ள நகரங்கள் . நதிகள், மலைகள் முதலியவற்றின் பெயர்களைபார்க்கும் போது கண் கூசுகிறது. அதைத் தமிழ் மாத்திரமறிந்த தமிழர் எப்படி வாசிப்பார்கள் என்பதை நினைக்கும் போதே காது கூசுகிறது.

. ..

ஏற்கனவே நான் இக்குறையை நீக்கும் பொருட்டாக மிகவும் சுலபமாக ஐந்து நிமிஷங்களில் யாரும் கற்றுக்கொள்ளக் கூடிய சில குறிகள் தயார் செய்து  வைத்திருக்கிறேன்.

 

ஆனால் இப்புதிய வழியைத் தமிழ் நாட்டுப் பத்திராதிபர்களும் பிறரும் அறியும்படி துண்டுப் பத்திரிகைகள் போட்டு வேலை செய்வதற்கு வேண்டிய வசதி செய்வதற்கு வேண்டிய சௌகர்யங்கள் எனக்கு இன்னும் சில மாதங்கள் கழிந்த பிறகுதான் ஏற்படும்.

 

இப்புதிய உபாயத்தை அனுஸரிப்பதால் இப்போது நாமெல்லோரும் எழுதிவரும் முறைமைக்கு யாதொரு ஸங்கடமும் உண்டாகாது. புதிய குறிகள் தெரியாதவர்கள் கூட வழக்கம்போலவே படித்துக்கொண்டு போவார்கள். யாருக்கும் எந்தவிதமான சிரமும் ஏற்படாது..நமது பாஷைக்கு நமது அரிச்சுவடி போதும்,. அந்நிய தேசப் பெயர்கள் முதலியவற்றுக்காக மாத்திரமே இப்புதிய முறை ஏற்பட்டது.

 

எனது புதிய முறையை இப்போதே அறிந்துகொள்ள விரும்புவோர் கீழே கண்ட என் விலாஸத்துக்கு இரண்டணா தபால் முத்திரை வைத்து அனுப்பினால் அவர்களுக்கு இம்முறை நல்ல கையெழுத்தில் தெளிவாக எழுதுவித்து அனுப்புகிறேன்

சி.சுப்பிரமணிய பாரதி

தர்மராஜா தெரு, புதுச்சேரி

பாரதியின் இக்கட்டுரையைப் படித்துவிட்டு இதற்கு மறுப்பாக . . சிதம்பரம் பிள்ளை அவர்கள். கட்டுரை எழுதினார்அவருடைய மறுப்பும் மிக அற்புதமான முறையில் ஆணித்தரமாக இருந்தது. . ..சி அவர்கள் கூற்றை மறுத்துப் பாரதி மீண்டும் எழுதினார்.

 

 பாரதி ஆராய்ந்து வைத்திருந்த குறியீடுகள் என்ன என்று தெரிந்து கொண்டு அதற்குப் பின் மறுப்புரை வேளியிட்டிருந்தால் பாரதியின் குறியீடுகள் எத்தன்மையன என்று தமிழ் மக்கள் அறிந்துகொண்டிருக்கக் கூடும். பாரதியும் அதை வெளியிடவில்லையாராவது இரண்டணா தபால்தலை அனுப்பி பாரதியிடமிருந்து அதைப் பெற்றாரா என்றும் தெரியவில்லை. அவரது குறியீடுகள் என்னவென்று தெரிந்திருந்தால் ஒருவேளை இந்தக் கணிணியுகத்தில் அவை பயன்பட்டிருக்கலாம்.


நான் எழுதியுள்ள பாரதி வரலாறு புத்தகம் உனக்கு ஏற்கனவே அனுப்பியுள்ளதாக நினைவு.


1982ல் பாரதி நூற்றாண்டு சமயத்தில் நான் எழுதிய புத்தகம் பாரதி  வாழ்வும் வாக்கும் archives.org ல் கிடைக்கிறது. அதை இத்துடன் இணைத்திருக்கிறேன்

 

 

 


bharathi vazvum vakkum.pdf

Niranjan Bharathi

unread,
Sep 15, 2021, 9:26:27 PM9/15/21
to santhav...@googlegroups.com
இதயத்திற்கினிய இலந்தை ஐயா,

தங்கள் பதில்களுக்கு மெத்த நன்றி. அவை என் அறிவை விரிவடையச் செய்து மேலும் தேடலைத் தூண்டுகின்றன.

மன்னிக்கவும் ஐயா. நீங்கள் எழுதிய பாரதி வரலாறு நூலை மீண்டும் அனுப்ப இயலுமா ? 

பாரதி வாழ்வும் வாக்கும் நூல் நிச்சயம் பல "திறப்பு" களை எனக்குள் ஏற்படுத்தும் :) :) 

பாரதி, சக்தி உபாசகராக எப்போது மாறினார் என்று கேட்டிருந்தேன். அதைப் பற்றி ஏதேனும் தரவுகள் உண்டா ?

நன்றி,
நிரஞ்சன்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Subbaier Ramasami

unread,
Sep 15, 2021, 10:08:07 PM9/15/21
to santhav...@googlegroups.com
இப்பொழுது நான் சொல்லப்போவது எவ்வளவு தூரம் உண்மை என்பது எனக்குத் தெரியாது. இதைப்பற்ரி எனது புத்தகத்திலும் எழுதியிருக்கிறேன்.

ஸ்ரீ வித்யா குரு புகழ்பெற்ற சிதானந்தர்  அப்பொழுது சென்னை ஜார்ஜ் டவுணில் இருந்தார்.  அவருக்கும் பாரதியாருக்கும் பழக்கம் உண்டு.  சிதானந்தர் 1882 ம் ஆண்டு ஐப்பசி மாதம் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்.பாரதி அதே ஆண்டு ஒரு மாதம் கழித்து அதே மூல நட்சத்திரத்தில் பிறந்தவர். இரகாயமாக இருந்த ஸ்ரீவித்யா உபாசனை  வழிமுறைகளை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்   சிதானந்தர்தான்.  அவர்தான்  பாரதியைக் காளியின் மீது பாடல் எழுதச் சொன்னார் என்று ஒரு புத்தகத்தில் படித்தேன்.  அவர் பாரதிக்கு ஸ்ரீவித்யா உபாசனை எடுத்து வைத்தாரா என்பது தெரியாது. சிதானந்தர் எழுதச் சொல்லிக் கேட்டு எழுதிய பாடல்தான் யாதுமாகி நின்றாய் என்ற பாடல் என்று சொல்லப்படுகிறது

Subbaier Ramasami

unread,
Sep 15, 2021, 10:09:54 PM9/15/21
to santhavasantham
தினமொரு பாரதி சிந்தனை 

ஒரு முறை சின்னச்சாமி அய்யரிடம் பாரதியின் தாத்தா இராமசாமி அய்யர் பாரதியின் கவி ஆர்வத்தை எடுத்துச் சொன்னார். அவன் பாடிய சிறு சிறு கவிதைகளைப் பாடிக்காட்டினார்.

அதைக்கேட்ட சின்னச்சாமி அய்யர் உள்ளுக்குள் மகிழ்ந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் ,

மாமா , இதெல்லாம் ஏரல் எழுத்துப்போலஎன்றார்.

அதென்ன ஏரல் எழுத்து?”

 

நத்தை தான் செல்கின்ற வழியெல்லாம் வரியெழுதிச் செல்லும். அதில் ஒரு அமைப்புபோல அமைந்துவிட்டால் அதற்காக அந்த நத்தையைத் தமிழறிந்த நத்தை என்று சொல்லிவிட முடியுமா? அதைத்தான் ஏரல் எழுத்து என்பார்கள்என்றார்

 

 

வேண்டுமானால் பாரேன், நம்ம சுப்பையா ஒர் குழந்தை ஞானிதான். பின்னாலே பெரிய கவிஞனாக வருவான்என்றார் இராமசாமி அய்யர்.

 

வேண்டாம் மாமா, அவன் கவிஞனாக வரவேண்டாம். நானும் தான் எழுதுகிறேன். என்ன பயன்? ஜமீந்தாருக்கு மனசு குளிரும் பாடலெழுதியே திறமை வீணாகிறது. சுப்பையாவும் அப்படி அல்லல் பட வேண்டுமா ? சேர சோழ பாண்டியர் காலத்திலே புலவர்களைக் காவியங்கள் எழுத வைச்சா. இந்த எட்டையாபுரம் சமஸ்தானத்திலே இத்தனை புலவர்கள் இருக்காளே உருப்படியா யாராவது ஒரு கவிதை நூல் எழுதியிருக்காளா? அப்படியே எழுதினாலும் கோவைஉலா , காதல்னு  பெண்கள் இராஜா மேலே காதல் கொண்டு விரகதாபத்தில் உழல்வதை எழுதினால்தான் மதிப்பு. சுப்பையாவுக்கு இந்த நிலைமை வேண்டாம். அவன் கணக்குப் படிக்கவேண்டும் . இன்கிலீஷ் படிக்க  வேண்டும். பெரிய படிப்புப்படித்து அவன் கலெக்டராக வரவேண்டும் என்பதுதான் என் ஆசைஎன்றார் சின்னச்சாமி அய்யர்.

 

உன் ஆசை தவறென்று சொல்ல மாட்டேன். ஆனால் அவனுக்குள் இயற்கையாகப் பொங்கியெழும் தமிழார்வத்தைப் பொசுக்கி விடவேண்டாம். கவிதை அவனுக்குத் தானாக வந்த வரப்ரச்சாதம். அவன் இரத்தத்திலேயே அது ஊறிப்போயிருக்கிறது. அதைச் சரியான வகையிலே திசை திருப்புவது நமது கடமைஅவனை அப்பப்போ அரண்மனைக்குக் கூட்டிக்கொண்டு போஎன்றார் இராமசாமி அய்யர்.

 இலந்தை

16-9-2021

Subbaier Ramasami

unread,
Sep 17, 2021, 12:04:30 AM9/17/21
to santhavasantham
தினமொரு பாரதி சிந்தனை

அச்சமில்லை,அச்சமில்லை

 

பாரதி வாழ்ந்த காலத்திலே அடிமைப்பட்ட மக்கள் எதைக் கண்டாலும் அஞ்சினார்கள். அச்சத்தை விளைவித்த வெள்ளையனுக்கு எதிராகப் போர்க்குரல் கொடுப்பதைவிட அச்சம் என்னும் எதிரிக்கு எதிராகப் போர்க்குரல் கொடுப்பதே அவனது தலையாய பணியாக ஆனது. அஞ்சிய மக்களின் அவலநிலையைக் கண்டு அவனது நெஞ்சு கொதித்தது. எங்கு நோக்கினும் அச்சம். அச்சம் அச்சம். தெய்வ பக்தி கூட அச்சத்தின் அடிப்படையிலே விளைந்த பக்தியாகவே இருந்தது.

“எதற்கும் அஞ்சாத தைரியமே உண்மையான தெய்வபக்திக்கு லக்ஷணம். அஃதில்லாத பக்தி தேங்காய்க்கும் சர்க்கரைப் பொங்கலுக்கும் வீண் செலவு. ‘என்று சாடினான் பாரதி.

அச்சத்தைப் பற்றிப் பெரியவர்களுக்குச் சொல்லிச் சொல்லி அலுத்துப்போய்குழந்தைகளுக்குச் சொல்லுகிறான்.

 

“அச்சம் தவிர்”

 

“சாவதற்கு அஞ்சேல், கீழோர்க்கஞ்சேல்”தொன்மைக்கஞ்சேல்’, தீயோர்க்கஞ்சேல்’, ‘பேய்களுக்கஞ்சேல்”

 

அதுமட்டுமல்ல

பாதகம் செய்பவரைக் கண்டால்

பயங்கொள்ளல் ஆகாது பாப்பா” என்கிறான்

Subbaier Ramasami

unread,
Sep 18, 2021, 7:46:47 AM9/18/21
to santhavasantham
தினமொரு பாரதி சிந்தனை-8

பாரதியும் ஹார்மோனியமும்

காசியில் சிவமடத்தில் காலினால் இயக்கக்கூடிய ஓர் ஆர்மோனியப்பெட்டி இருந்தது. அதை வாசிக்கக் கற்றுக்கொண்டான்.(இந்தப்பெட்டி இன்றும் சிவ மடத்தில் இருக்கிறது) ஆனால் அது சங்கீதத்திற்கு ஏற்றதில்லை என அறிந்தான். பஜனைப்பாடல்கள்பாடுவதற்கு ஆர்மோனியம் பயன்பட்டாலும் அது சாஸ்த்ர்ரியமான சங்கீதத்திற்கு எதிரி என்ற எண்ணம் அவன் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது. பின்னாளில் அதைப்பற்றி விரிவாக எழுதினான்

இந்தப் பெட்டி நமது நாட்டிலே பழகுவதினால் சங்கீதத்திற்குப் பலவிதமான தீங்கு உண்டாவதாக வித்வான்களில் பெரும்பாலோர் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் அதை நிறுத்துவதற்கு யாரும் வழி தேடவில்லை. நமது சங்கீதத்தில் உள்ள சுருள்கள் ,வீழ்ச்சிகள் முதலியவற்றை ஹார்மோனியம் காட்ட முடியாது, ஆதலால் , அந்த வாத்தியத்தில் அதிகம் பழக்கமுடையோரிடம் நமது சங்கீதத்திலுள்ள நயங்கள் மங்கிப் போகின்றன. இதையெல்லாம் காட்டிலும்  அந்தப் பெட்டி போடுகிற பெருங்கூச்ல் தான் என் காதுக்குப் பெரிய கஷ்டமாகத் தோன்றுகிறது” 

Subbaier Ramasami

unread,
Sep 19, 2021, 8:40:20 AM9/19/21
to santhavasantham

திருநெல்வேலி மாவட்டத்தில் இரவுப்போதில் தெருக்கூத்து நடைபெறுவதுண்டு. பொதுவாக கட்டப்பொம்மன் கதையை ஒருவாரம் தெருக்கூத்தாகப் போடுவார்கள்.   இரவு வெகுநேரம் நடக்கும். இரண்டு மூன்று பேர் ஆடிக்கொண்டே பாடுவார்கள்எட்டப்பனுக்கும் கட்டப்பொம்மனுக்கும் ஆகாதாகையால் எட்டய்யபுரத்தில் கட்டப்பொம்மன் கூத்துப் போடுவதில்லை. அதற்குப் பதிலாக வள்ளிthதிருமணம் போன்ற தெருக்கூத்துக்கள் நடக்கும். அத்தெருக்கூத்துகளுக்குச் சென்று அவர்கள் பாடும் பாடல்களைக் கேட்பதில் சுப்பய்யாவுக்கு அலாதிப் பிரியம். அவர்கள் நாட்டுப்புற மெட்டுக்களில் பாடுவார்கள்.

அதிலே நாட்டு வர்ணனை , நகர்வர்ணனை எல்லாம் வரும்.

இரண்டு பேர் மாற்றி மாற்றிப் பாடுவதும் உண்டு.

நாடான நாடதிலே   என்று ஒருவன் பாட இன்னொருவன் பின்பகுதிச் சொல்லை மட்டும்நாடதிலே  என்று இழுத்துப்பாடுவான்

 

நாடான நாடதிலே   நாடதிலே

 தர்ம ராஜா பிறந்த நாடாம்  பிறந்த நாடாம்

இஞ்சி மஞ்சள் விளையும் நாடாம்   விளையும் நாடாம்

இருவாட்சி பூக்கும் நாடாம்   பூக்கும் நாடாம்

மாதம் மூன்று மழை பொழியும்  மழைபொழியும்

மறுகாலும் வழிந்தோடும் வழிந்தோடும்

மூன்று போகம் கதிர்விளையும் கதிர்விளையும்

 

என்று நாட்டு வர்ணனையில் தொடங்கிப் பாடிக்கொண்டே செல்வார்கள். சுப்பய்யாவின் அடிமனத்தில் அம்மெட்டுகள் ஆழமாகப் பதிந்தனஉரலில் நெல்  குத்திக்கொண்டே பெண்கள் பாடும் வள்ளைப்பாட்டு, கீரைத்தோட்டத்திற்கு துலாவில் தண்ணீர் இறைப்பவன் பாடும் ஏற்றப்பாட்டு, வண்டியோட்டிக்கொண்டு செல்வோன் பாடும் தெம்மாங்குகாவடி எடுத்துக்கொண்டு பாடுவோர் பாடும் காவடிச்சிந்து, நடந்து கோயில்களுக்குச் செல்லுவோர் பாடும் வழிநடைச்சிந்து, கப்பரை ஏந்தி வருகிற பண்டாரங்கள் பாடும் பண்டாரப் பாட்டு  எனப்பல நாட்டுப்புறப்பாடல்களைக் கேட்டான் சுப்பய்யா. தானும் அப்படிப் பாடவேண்டும் என்று ஆசைப்பட்டான்.

கோயில் கொடைகள் நடக்கும் போது  வில்லுப்பாட்டு, கணியான் கூத்து , உடுக்கைப் பாட்டு, வரவுப் பாட்டு(மருளாடிகளின் பேரில் சாமிகளின் ஆவேசம் இறங்குவதற்காகப் பாடுகிற வரவுப்பாடல்கள்) பெண்கள் கைகொட்டி அடிக்கின்ற கும்மிப்பாட்டு, கோலாட்டப்பாட்டு, ஒப்பாரி, இறந்தவர்களின் வீட்டு வாசலில் பெண்கள் குழுமி மாரடித்துக்கொண்டு பாடும் மாரடிப்பாட்டு என்று கிராமப்புறங்களுக்கே உரிய பாடல்களைச் சுப்பய்யா ஆர்வத்தோடு செவிமடுத்தான்தானும் அப்பாடல்களை ஒட்டி நாட்டுப்புறப்பாடல்கள் எழுத விரும்பினான்.

 

ஆனால் அந்தக்காலதில் சிந்துப்பாடல்கள் இலக்கியத்தரத்தில் அடிமட்டத்தில் இருப்பவை என்று புலவர்கள் கருதினார்கள். வீரமா முனிவர்  “ கற்றறிந்தோர் சிந்துப்பாடல்களைத் தாழ்ந்த இடத்தில் வைத்திருந்தனர்என்று எழுதிவைத்திருக்கின்றார். எனவே மன்னரவையில் அத்தகைய பாடல்களை எழுதிப்படிக்க அவன் விரும்பவில்லை. எனவே வெண்பாவிலும், அகவலிலும் , விருத்தத்திலும் பாடல் எழுதினான். பின்னர் சிந்துப்பாடல்களுக்குப் புட்துயிர் தந்து தனது ஆசையைத் தீர்த்துக்கொண்டான்

Subbaier Ramasami

unread,
Sep 20, 2021, 2:32:26 PM9/20/21
to santhavasantham

தினமொரு பாரதி சிந்தனை

 10

பாஞ்சாலி சபதத்தில் பாரதியின் மாலை நேர  வர்ணன உலகின் மிகச்சிறந்த இலக்கியங்களில் ஒன்றாக் கருத்தக்கது. அதில் சில வரிகள்

 

பார், சுடர் பரிதியை சூழவே படர்முகில்

எத்தனை தீப்பட்டெரிவன! ஓகோ!

என்னடி! இந்த வன்னத்தியல்புகள்!

 

அந்திச் செம்மை தீப்பட்டெரியும் காட்சியை 18ந்தேதி  கலீனா நகரில் பார்த்தேன்.


image.png


Subbaier Ramasami

unread,
Sep 21, 2021, 3:11:15 PM9/21/21
to santhavasantham
11

பாரதிக்கு   அவனது 10 வயதில் ஒன்பது வயதுப் பெண்ணொருத்தி மேல் கனிவு பிறந்து அது காதலாக மலர்ந்ததுகவிதைக் காதலைத்தான் அவர் அவ்வாறு குறிப்பிட்டார் என்ற வாதத்தை ஏற்க முடியவில்லை. தனது சுயசரிதையில் பாரதி அதைப்பற்றி விரிவாகப் பாடியிருக்கிறார். மறைமுகமாக அவரது சுயசரிதையாகவே அமைந்த சின்னச் சங்கரன் கதையிலும் அதைப்பற்றிப் பேசியிருக்கிறார்பத்து வயதில் காதல் வருமா என்று கேட்கலாம். ஏழு வயதில் கவிதை எழுதக்கூடுமென்றால் பத்துவயதில் காதலிக்கக் கூடாதாஅந்தப்பெண்ணும் அவரை விரும்பிக் காதலித்தாள். அவளது உறவினர்களுக்குக்கூட அரசல் புரசலாக அது தெரியும். அவள் மேல் தனது காதலை வெளிப்படுத்திச் சுப்பய்யா பல பாடல்கள் பாடியிருக்கிறான்

அவன் சொல்லுகிறான்

கானகத்தில் இரண்டு பறவைகள்

காதலுற்றது போலவும் ஆங்ஙனே

வானகத்தில் இயக்கர் இயக்கியர்

மையல் கொண்டு மயங்குதல் போலவும்

தேனகத்த மணிமொழியாளொடு

       தெய்வ நாட்கள் சில கழித்தேனரோ

 

சுப்பய்யாவின் தாத்தா வீர சைவர். சிவ பூஜை விஸ்தாரமாகச் செய்வார். அவர் பூஜை செய்த பிறகு களைந்த பூக்களை எடுத்து வந்து சுப்பய்யா அப்பெண்னுக்குக் கொடுப்பது வழக்கம். ஒரு நாள் சிவன் கோயில் திருவாதிரைத் திருநாள் அன்று  சுப்பய்யா அமர்ந்திருந்த பொழுது அவள் வந்தாள். இருவரும் மகிழ்ச்சியோடு பேசிக்கொண்டிருந்தார்கள்திடீரென்று அவள் எங்கோ சென்று விட்டுச் சிறிது நேரத்தில் திரும்பிவந்தாள்.கையில் ஒரு மை டப்பா. அதிலிருந்து சிறிது மையை எடுத்துஉன் நெற்றியில் பொட்டு வைக்கட்டுமா?” என்று கேட்டாள்

சுப்பய்யா தனது முகத்தை  வளைத்து முன்னே நீட்டினான்அவள் அவன் நெற்றியில் பொட்டுவைத்தாள். அவன் உடல் சிலிர்த்ததுஅன்றிலிருந்து நெற்றியில் பொட்டுவைக்கும் போதெல்லாம் அவள் நினைவு அவனுள் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியதுஅவன் தாத்தா பூஜை செய்து களைந்து வைத்திருந்த மலர்களைக் கொணர்ந்து அவளுக்குக் கொடுத்தான்

 

அந்தக் காதல் கிளிகள் பின்னர் பிரியநேர்ந்தது

 

(நீண்ட நாட்கள் வாழ்ந்த அந்தப்பெண்ணைப் பேட்டி கண்டு தூத்துக்குடியைச் சேர்ந்த பேராசிரியர் முருகேசன் அவர்கள் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். பாரதியின்  காதலை அடிப்படையாக வைத்து வேறொருவர் ஒரு புதினம் எழுதியிருப்பதாக அறிகிறேன்)

Subbaier Ramasami

unread,
Sep 22, 2021, 9:42:46 AM9/22/21
to santhavasantham

தினமொரு பாரதி சிந்தனை 12

பாரதி நெல்லையில் படித்துவந்த போது தந்தையிடமிருந்து ஒழுங்காக வந்துகொண்டிருந்த பணம்  வருவதில் தடையேற்பட்ட து. தந்தையின் மில் பல இடைஞ்சல்களுக்கு உட்பட்டதும் அவனுக்குத் தெரியும். எனவே தந்தைக்கு எழுதி அவரைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை.

தான் எட்டய்யபுரம் மஹாராஜாவிடம் விடைபெற்றுக் கொண்டு கொண்டு வந்தபோது அவர் ஏதாவது உதவி வேண்டுமென்றால் தனக்கு எழுதச் சொன்னது நினைவுக்கு வந்தது. அதைக் கவிதை மூலம் கேட்க எண்ணினான். பாரதி ஒரு சீட்டுக்கவிதை எழுதினான். பாரதி எழுதி நமது கைக்குக்கிடைத்துள்ள கவிதைகளில் இதுதான் முதல் கவிதையாகக் கருதப்படுகிறது . பொதுவாக மங்கலச் சொல்லால் தொடங்குகிற மரபுப்படி திருவளர் என்னும் சொல்லொடு தொடங்குகிறது பாடல்.

அதன் தலைப்பில் தென்னிளசை நன்னகரிற் சிங்கம் வெங்கடேசுரெட்ட கன்னன் சுமுக சமூகம் என்று  மிகவும் பவ்வியமாக எழுதப்பட்டுள்ளது

சீட்டுக்கவியின் வழக்கப்படி அரசனை வெகுவாகப் புகழ்ந்துவிட்டுத்  தன்னை அதிகமாக வெளிக்காட்டிக்கொள்ளாமல்இன்னணம் எளியேன் எழுதிய விண்ணப்பம்என்று எழுதித் தன் கருத்தைச் சொல்லத்தொடங்குகிறது கவிதை.. வேண்டா வெறுப்பாகத் தான் ஆங்கிலம் கற்க நேர்ந்ததைப்பற்றியும் குறிப்பிடுகிறான்

“’ஐய நின் அருளே அருங்கதியென்ன

உய்ய இவண் வந்துற்ற வென் தந்தையார்

என்னையும் பிறமொழி கற்கவென்றியம்புவர்

என்னையான் செய்குவ தின்றமிழ் கற்பினோ

பின்னை ஒருவரும் பேணார் ஆதலின்

கன்ன, அம்மொழி கற்கத் துணிந்தனன்.” எனத்தெளிவாகக் குறிப்பிடுகிறான்.

கற்பதற்குப் பொருள் எவ்வளவு அவசியம் என்பதை எவ்வளவு அழகாக அந்தக்கவிதை குறிப்பிடுகிறது பாருங்கள்

 

கைப்பொருள் அற்றான் கற்ப தெவ்வகை?

பொருளான் அன்றிக்கல்வியும் வரவில

கல்வியான் அன்றிப் பொருளும் வரவில

முதற்கண் கல்வியே பயிறல் முறைமையாம்

அதற்குப் பொருளிலை ஆதலின் அடியேன்

வருந்தியே நின்பால் வந்தடைந்தனன்.” என்று வேண்டி

உன்னைவந்தடைந்தவர் உழல்வரோ துயர்க்கடல்?” என்று மன்னனைத் தூக்கிவைத்துப்பேசுகிறான்.

 

உன்னைப்போற்றிய இந்நா மற்ற மன்னர்களிடம் சென்று இரக்காது என்றும் சொல்லிவிடுகிறான். கடிதத்தைன் இறுதியில்

 

இங்ஙனம் ஊழியன்

இளசைச் சுப்பிரமணியன் என்று ஒப்பமிட்டுள்ளான்ஏகப்பட்ட அளபெடை போட்டு எழுதினால்தான் பெருமையாக அந்தக்காலத்தில் கருதப்பட்டது. எனவே இந்தக்கவிதையில் அளவுக்கதிமாக 6 இடங்களிலளபெடை பெய்துள்ளான்.

பாரதியின் இந்தக்கவிதைக்குப் பலன் இருந்ததா, இந்தக் கவிதை மன்னனுக்கு அனுப்பப்பட்டதா என்பதைப் பற்றியெல்லாம் செய்திகள் எதுவும் கிட்டவில்லை.

 

இந்தக்கடிதம் 24-1-1897 அன்று எழுதப்பட்டது அப்பொழுதுதான் பதினான்கு வயது முடிந்திருந்தது

Subbaier Ramasami

unread,
Sep 22, 2021, 10:54:19 PM9/22/21
to santhavasantham
13

திடீர் திடீர் என்று எண்ணங்கள், புதிய புதிய கொள்கைகள், புதிய புதிய பாட்டுக்கள், அப் பாட்டுக்களுக்குப் புதிய புதிய மெட்டுக்கள் - எனது இரு காதுகளும், மனமும், ஹிருதயமும் நிரம்பித் ததும்பும் இந்த ஒரு பாக்கியம் நான் பெற்றேன்.இம்மாதிரி பாக்கியம் பெற எத்தனை கோடி ஜென்மம் வேண்டுமானாலும் திரும்பத் திரும்பப் பெறத் தயாராக இருக்கிறேன்.”  என்று எழுதியுள்ளார் பாரதியின் மனைவி செல்லம்மா

Subbaier Ramasami

unread,
Sep 23, 2021, 10:19:19 PM9/23/21
to santhavasantham

. 14-  24-9-2021

ஏழு வயதிலேயே சுப்பையா கவிதை எழுதினான். அதெப்படி ஏழுவயதில் கவிதை எழுத முடியுமா எனப் பலர் வினவினர்.

ஏழு வயதில் கவிதை எழுதினான் என்பது சற்று மிகையோ என்று எண்ணத்தோன்றும். ஏழு வயதில் சுப்பையா கவிதை எழுதியதற்கு ஆதாரத்தை டாக்டர் சோமசுந்தர பாரதியார் அளிக்கிறார் சோமசுந்தர பாரதியார் என்று புகழ்பெற்ற சோமசுந்தரம் சுப்பையாவின் பள்ளித்தோழர். சோமு என்று சுப்பையாவால் செல்லமாக அழைக்கப்பட்டவர். அவர் சுப்பையாவின் குழந்தைப் பருவத்தைப்பற்றி 1922ல் வெளிவந்த சுதேசிய கீதங்கள் முதற்பாகத்தில் எழுதியுள்ல கட்டுரையைப் படித்தால் உண்மை விளங்கும். அவர் சொல்கிறார்:

 

பாரதியார் தமது ஏழாவது பிராயம் முதலே அருமையான தமிழ்க்கவிகளை விளையாட்டாக விரைந்து கவனம் செய்வதைக் கண்ட வித்வான்கள் நமது கவியின் தந்தையாரைப் புகழ்ந்திருப்பதை நான் நேரில் அறிவேன்.

 

எட்டு , ஒன்பதாவது ஆண்டுகளில் சர்வ சாதாரணமாய் கொடுத்த சமஸ்துகளை வைத்து அற்புதமான கவிகளைப் பூர்த்திசெய்து பெரிய புலவர் கூட்டங்களைப் பிரமிக்கச்செய்த பல காலங்களிலும் நான் கூட இருந்திருக்கிறேன்.

 

காளிதாசன் கம்பன் முதலிய வரகவிகளுக்கு காளி வாக்கில் எழுதிய கால முதல் அநாயசமாய்க் கவி சொல்ல வாய்ந்தது என்று நாம் கேட்கும் கதைகளையும் குமரகுருபரர் ஐந்தாவது ஆண்டில் அரும்பாக்கள் இயற்றினர் என்ற கதையினையும் அபூர்வ கற்பனைகள் என்று புறக்கணித்த நான் பாரதியார் ஏழாவது வயது முதல் எளிதில் பாடல் இயற்றித் தமிழ்வாணர்கள் மெச்சும்படி காட்டிய திறமையை நேரில்கண்ட பொழுதுதான் கேவலம் படிப்பினால் பாவன்மை வராது. கவிகள் பிறப்பிலேயே அமைய வேண்டும் என்று அறிந்தேன்

 

Subbaier Ramasami

unread,
Sep 24, 2021, 7:46:52 PM9/24/21
to santhavasantham
#தினமொருபாரதிசிந்தனை 15 25-9-2021

சுப்பையா எட்டையபுரம் சமஸ்தானத்தில் பாடிய பாடல்களைக் கேட்டு மகிழ்ந்த அவையினரும் ஜமீந்தாரும் அவனது பதினோராம் வயதில் ‘பாரதி’ என்ற பட்டத்தைச் சூட்டினார்கள். ஆனால் ‘பாரதி ‘ என்ற பட்டம் விருதை சிவஞான யோகியாரால் சுப்பையாவுக்கு அளிக்கப்பட்டது என்ற இன்னொரு கருத்தும் உண்டு. (‘மகாகவி பாரதி வரலாறு’- பாரதி அறிஞர் சீனி. விஸ்வநாதன் - பக்கம்78)
எது எப்படியிருந்தாலும் சுப்பையா ‘பாரதி’ ஆனான். அதையறிந்த சின்னச்சாமி அய்யர் பெரிதும் மகிழ்ந்தார்.

இலந்தை

VETTAI ANANTHANARAYANAN

unread,
Sep 24, 2021, 9:47:40 PM9/24/21
to சந்தவசந்தம்
படிக்கப் படிக்க வியப்பையும் இன்பத்தையும் தரும் பாரதிச் செய்திகளை அருமையாகத் தொகுத்துத் தருகிறீர்கள், வாழ்க.

அனந்த் 

M. Viswanathan

unread,
Sep 25, 2021, 1:46:09 AM9/25/21
to Santhavasantham
அன்புக் கவிவேழம் அவர்களுக்கு,
வணக்கம்.
ஒவ்வொரு நாளும் பாரதி சிந்தனையைப் படித்து மனம் மகிழ்ந்து வருகிறேன். 
அனைத்தும் முடிந்த பிறகு ஒரு நூலாகத் தொகுத்து வெளியிட வேண்டும் என்பது அடியேனின் வேண்டுகோள். நன்றி.
அன்பன்,
மீ.விசுவநாதன் 

Subbaier Ramasami

unread,
Sep 25, 2021, 2:00:22 PM9/25/21
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி.

On Fri, Sep 24, 2021 at 8:47 PM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
படிக்கப் படிக்க வியப்பையும் இன்பத்தையும் தரும் பாரதிச் செய்திகளை அருமையாகத் தொகுத்துத் தருகிறீர்கள், வாழ்க.
னால் ‘பாரதி ‘ என்ற பட்டம் விருதை சிவஞான யோகியாரால் சுப்பையாவுக்கு அளிக்கப்பட்டது என்ற இன்னொரு கருத்தும் உண்டு. (‘மகாகவி பாரதி வரலாறு’- பாரதி அறிஞர் சீனி. விஸ்வநாதன் - பக்கம்78)
எது எப்படியிருந்தாலும் சுப்பையா ‘பாரதி’ ஆனான். அதையறிந்த சின்னச்சாமி அய்யர் பெரிதும் மகிழ்ந்தார்.

இலந்தை

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Subbaier Ramasami

unread,
Sep 25, 2021, 2:01:49 PM9/25/21
to santhav...@googlegroups.com
மிகுந்த நன்றி 365  நிறைவு பெற்றபின் நூலாகத் தொகுக்க எண்ணியிருக்கிறேன்.

இலந்தை

On Sat, Sep 25, 2021 at 12:46 AM M. Viswanathan <meev...@gmail.com> wrote:

Subbaier Ramasami

unread,
Sep 25, 2021, 8:02:17 PM9/25/21
to santhavasantham

 16/-26-9-2021

பாரதியை திருநெல்வேலிக்கு மேற்படிப்புக்கு அனுப்புவ்தென்று சின்னச்சாமி அய்யர் தீமானம் செய்தார். பாரதிக்குத் திருநெல்வேலி செல்லப் பைடிக்கவில்லை.

சின்னச்சாமி அய்யர்  ஒருநாள் சுப்பையாவைத் தனியாகத் தன் தொழிற்சாலைக்கு அழைத்துச் சென்றார்

சுப்பையா இந்த ஜின்னிங் ஃபாக்டரி எனது கனவு சாம்ராஜ்யம்சீக்கில் விழுந்து திண்டாடுகிறது. இதை எப்படியும் எழுப்பிவிடுவேன்வெள்ளைக்காரர்களின் கெடுபிடியும் சதியும் தான் இயந்திரங்களைக் கொணர இடைஞ்சலாக இருக்கிறது.. அவர்களை எதிர்க்கிற சக்தி என்னிடமில்லைஜமீந்தார் நல்லவர்தான். ஆனால் அவர் எந்த நேரத்தில் தன் பங்குப்பணத்தைத் திருப்பிக் கேட்டுவிடுவாரோ என்று பயமாக இருக்கிறதுஎன் கனவு பலிக்க வேண்டுமென்றால் நீ படிக்க வேண்டும். எவ்வளவு செலவானாலும் உன்னைப் படிக்கவைப்பேன்உன்னை லண்டனுக்கு அனுப்புவேன். கலெக்டராக்குவேன். யாரிடமெல்லாம் நான் கைகட்டி நிற்கிறேனோ அவர்கள் உன்னிடம் கைகட்டி நிற்பார்கள்என்றார்

 

“  பஞ்சாலை சரியாக இயங்காத நேரத்தில் நான் நெல்லைக்குப் போகத்தான் வேண்டுமா அப்பாஎன்று கேட்டான் சுப்பையா?

 

போகத்தான் வேண்டும்என் கனவு.. என் கனவு.. அதை நீ எப்பொழுதும் மறக்கக்கூடாதுஇதோ இந்தக் கட்டடத்தை நீ மீண்டும் பார்க்க இயலுமோ இல்லையோ எனக்குத் தெரியாது. இப்பொழுதே நன்றாகப் பார்த்துக்கொள். நான் எப்படியும் இதை உயிர்ப்பித்துவிடுவேன். வெள்ளைப்பறங்கிதான் என்னைப் படுத்துகிறான். ஒரு இந்தியன் இயந்திரசாலை நடத்துவது அவனுக்குப் பிடிக்கவில்லை.”

 

அப்பா இந்த நிலையில் நான் தமிழ் படித்து அரசவையில் உத்தியோகம் பார்க்கிறேனே

 

நீ இப்படிச் சொல்லுவாய் என்று எதிர்பார்த்தேன். தமிழால் உன் வயிற்றை வேண்டுமானால் கழுவிக்கொள்ளலாம். அது இங்கே உன்னை மானத்தோடு வாழவைக்காதுஜமீந்தாரின்முன் கைட்டி நின்று அவருக்குச் சேவகம் செய்யவேண்டும்.  “

 

அப்பா, செலவு அதிகமாகுமே!”

 

அதைப்பற்றி நீ ஏன் கவலைப் படுகிறாய்இப்படியே நிலைகுலைந்து போய்விடமாட்டேன். எழுவேன். நீ தைரியமாகப் போய் நான் சொன்னபடி படிக்கவேண்டும்என்றார் சின்னச்சாமி அய்யர்.

Subbaier Ramasami

unread,
Sep 26, 2021, 11:43:59 PM9/26/21
to santhavasantham

தினமொரு பாரதி சிந்தனை

17

சின்னச்சாமி ஐயர் பாரதியை நெல்லைக்கு அனுப்ப முடிவெடுத்துவிட்டார் அப்பாவின் இன்னலைக் கண்டு கலங்கினாலும் அவரது பாசத்தைக் கண்டு நெகிழ்ந்தான். அவரை அந்த நிலையில் விட்டுவிட்டுச் செல்லவும் மனமில்லை.. ஜமீந்தாரிடம் சொல்லி முயற்சி செய்து பார்க்கலாம் என எண்ணினான்அவரிடம் தன் தந்தையின் பணத்தட்டுப்பாட்டைப் பற்றிப் பேசக்கூடாது. அப்படிச் செய்தால் அது அவருக்கு அவமரியாதை. அதை வேறொரு மாதிரித்தான் அணுகவேண்டும் என்று முடிவெடுத்தான்.

 

மறுநாள் அரசவையில் ஜமீந்தார் தனியாக இருந்த நேரம்அவரைச் சந்தித்தான்.

மஹாராஜவுக்கு நமஸ்காரம்

வா, சுப்பையா. உன்னைத் திருநெல்வேலிக்கு அனுப்பப்போவதாக அப்பா சொன்னார்.

உன்னை இங்கிருந்து அனுப்புவதில் எனக்கு இஷ்டமில்லை. என்றாலும் உன் நன்மையைக் கருதி ஒத்துக்கொண்டேன்.” என்றார் ஜமீந்தார்.

 

மஹாராஜா, தடுத்திருக்கலாம். எனக்குப் போவதில் இஷ்டமில்லை.”

 

இல்லை சுப்பையா, நீ படிக்க வேண்டும். நம் அரண்மனைக்கு நிறைய வெள்ளைக்காரர்கள் வருகிறார்கள். அவர்களோடு பேச நம்மிடம் இங்கிலீஷ் தெரிந்தவர் நிறையப்பேர் இல்லை. நீ படித்தால் தைரியமாகப் பேசுவாய்

அப்பொழுதும் அரண்மனைச் சேவகம்தானா என நினைத்துக்கொண்டான் சுப்பையா!

மஹாராஜா, சமூகத்துக்குத் தெரியாது ஒன்றும் இல்லை. இங்கேயே படிப்பதற்கு நெறைய இருக்கிறது. நம்மிடம் வானசாஸ்த்திரம் இல்லையா? காவியம் இல்லையா? இதிகாசம் இல்லையா?” என்று அடுக்கிக்கொண்டே போனான் சுப்பையா.

 

இவற்றை எப்பொழுது வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். சந்தோஷமாய்ப் போய்வா. ஏதாவது உதவி வேண்டுமென்றால் எனக்கு எழுதுஎன்றார் ஜமீந்தார்.

ஜமீந்தாரும் கைவிட்ட நிலையில் வேறுவழியில்லாமல் நெல்லை செல்ல இசைந்தான்.

 

Subbaier Ramasami

unread,
Sep 27, 2021, 11:09:01 PM9/27/21
to santhavasantham
தினமொருபாரதிசிந்தனை

18

நெல்லை செல்லுவதற்குரிய ஏற்பாடுகள் மும்முரமாக நடந்துகொண்டிருந்தன. அவன் எங்கோ தொலைதூரமுள்ள காசிக்குப்போவது போல் எண்ணிக்கொண்டு அவனுக்குப் பட்சணங்கள், ஊறுகாய் வகைகள் தயார் செய்துகொண்டிருந்தாள் அவனது சிற்றன்னை வள்ளியம்மாள். பேரனைப் பிரியப்போகிறோம் என்பதில் தாத்தா இராமசாமி அய்யருக்கு வருத்தம் அதிகம். சிவ பூஜை செய்கிறபோது பக்கத்தில் அமர்ந்து கொண்டு அவனும் சுலோகங்கள் சொல்லுவான். குழந்தை என்ன அருமையாப் பாடுவான்அவன் ஊருக்குப்போய்விட்டால் பூஜையில் யார் பாடுவார்கள் என்று அவருக்கு வருத்தம்.

 

சுப்பையாவுக்கு மாமா முறையென்றாலும் தோழன் போலப் பழகிய சாம்பசிவம் கண்கலங்கினான். மூன்று இடத்திலே பாட்லாக் போட்ட ஒரு ட்ரங்க் பெட்டி அவனுக்காகப் புதிதாக வாங்கியிருந்தார் சின்னச் சாமி அய்யர்அதில் தனக்கு வேண்டிய உடைகளையும் புத்தகங்களையும் வைத்துக்கொண்டான் சுப்பையா. இராமசுப்பம்மா பாட்டி, சின்னம்மா, செல்லம்  மாமா, சாம்பசிவம், இராமசாமி அய்யர் , பாகீரதிப்பாட்டி, வள்ளியம்மா என்று  ஒரு கூட்டமே சுப்பையாவைச் சுற்றி நின்று கொண்டது. எல்லோருமே கோவில்பட்டி இரயில்வே ஸ்டேஷன் வரை தாங்களும் வருவதாகச் சொன்னார்கள். இரண்டு இரட்டை மாட்டு வில்வண்டி தயாரானது. எட்டையபுரத்தை விட்டு  இரட்டைமாட்டு வில்வண்டி ஜல் ஜல் என்று மாடுகளின் கழுத்து மணியோசையோடு பயணப்பட்டது

 

கோவில்பட்டி இரயில்வே ஸ்டேஷனில் இறங்கியதும் எல்லோரும் கண்கலங்கினார்கள். கைக்குழந்தை லக்ஷ்மி மட்டும் சிரித்தது. சின்னச்சாமி அய்யர் பையனைத் திருநெல்வேலியில் விட்டு வருவதற்காக உடன் சென்றார்இரயில் வந்தது. தெளிவாயிருந்த வானத்தில் கருமேகம் சூழ்ந்தது போல அந்தக் கரிவண்டியில் வெளிப்போந்த கரும்புகை ஒருவித நெடியுடன் அந்தப் பகுதியைக் கருமையாக்கியது. கல்வி என்ற வெளிச்சம் தேடிப் போகின்ற சுப்பையாவின் வாழ்க்கையிலே வெளிச்சம் வரப்போகிறதா அல்லது கரும்புகை சூழப்போகிறதா? தெரியவில்லை. இரயில் கூ வென்ற ஓசையுடன் புறப்பட்டது. .

Subbaier Ramasami

unread,
Sep 29, 2021, 12:48:24 AM9/29/21
to santhavasantham

தினமொருபாரதி சிந்தனை

19

அப்பாவை இக்கட்டான நிலையில் விட்டுவிட்டுச் செல்லபாரதிக்குப் பிடிக்கவில்லை. வலுக்கட்டாயமாக அவனைக்கூட்டிக்கொண்டு இரயிலில் சென்றுகொண்டிருந்தார்.

இரயில் தாழையூத்தை நெருங்கியது.

சுப்பையா, தாழையூத்துத் தாண்டிட்டோம். இன்னும் கொஞ்ச நேரத்திலே திருநெல்வேலி ஜங்ஷன் வந்துடும். எழுந்து ரெடியாகிக்கோ.” என்றார் சின்னச்சாமி அய்யர்.

சரியப்பா.. “ என்றவன் தயங்கிக்கொண்டே

அப்பா..” என்று இழுத்தான்

என்னப்பா?”

ஒண்ணுமில்லே

தயங்காமச் சொல்லு

திரும்பிப்போயிடலாமாப்பா

அதுக்காடா இவ்வளவு செலவு பண்ணி ஏற்பாடு செய்திருக்கேன்.”

பயம்மா இருக்கப்பா

எதுக்குப் பயப்படணும். எதுக்கும் பயப்படக் கூடாது. நீ தங்கப்போற இடத்திலே இருக்கறவா நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவா? உன்னை நன்னா கவனிச்சுப்பா. அவாளைத் தொந்தரவு பண்ணக்கூடாது என்ன?”

சரியப்பா

அப்பா சொன்னதை நெனைவு வெச்சுக்கோ. கவனமாப் படிக்கணும்

சரிப்பா

அடுத்த தடவை நீ எட்டையபுரம் வரும்போது நீ பேசற இங்கிலீஷைப் பார்த்து எல்லோரும் அசந்துபோகணும், சரியா?”

சரிப்பா

இப்போ நம்ம இறங்கப்போவது திருநெல்வேலி ஜங்க்ஷன்இங்கேருந்து நீ படிக்கப்போகிற பள்ளிக்கூடம், கைலாச புரம் எல்லாம் பக்கம். நடந்தே போயிடலாம். ஆனால் சாமான் இருக்கு. ஒரு குதிரைவண்டியிலே போயிடலாம்என்றார் சின்னச்சாமி அய்யர்.

தாமிரபரணி நீ தங்கப்போகிற வீட்டுக்குப் பக்கம் தான். கைலாசநாதர் கோவிலுக்குப் போயிட்டு அப்படியே நதிக்குப் போகலாம். நதிக்குள்ளே ரொம்ப தூரம்போய்க் குளிக்காதே”  என்றார் அய்யர்.

இங்கே ஒன்று சொல்லவேண்டும்.  வாரா தனது புத்தகத்தில் பாரதிக்கு நீச்சல் தெரியாதென்றும் ஐயரும் மற்றவரும் கடலில் குளிப்பதை வெளியே இருந்து வேடிக்கை பார்ப்பார் என்றும் எழுதியிருக்கிறார்.  பாரதியார் பொதுவாக தன் மேனியைத் திறந்து காட்டுவதில்லை. ஏதோ ஒரு மேலங்கி இருக்கும். அதனாலே அவர் கடலில் இறங்காதிருந்திருக்கலாம். அவரது பெண் தங்கம்மாள் பாரதி எழுதியுள்ள கட்டுரையிலும்  பாரதி அவர்களைக் கடலில் கூட்டிக்கொண்டு போய்க் குளிப்பாட்டுவார் எனச் சொல்லியிருக்கிறார். பாரதியின் உறவினர் திரு கிருஷ்ணன் பாரதியும் அவரது அத்தை பையன் கேதாரமும் கங்கையில் வெகு தூரம் நீந்திச் செல்வதைப் பற்றிக் கூறியிருக்கிறார். எனவே பாரதிக்கு நீந்தத் தெரியாது என்று வாரா கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. வாரா ஒரு பெருமைக்காகச் சில செய்திகளை மாற்றிச் சொல்வதுவும் உண்டு. அதனாலேயே எனது பேராசிரியர் அ.சீ.ராவுக்கும் வாராவுக்கும் பிணக்கு ஏற்பட்டுப் பின்னர் சரியானது. சுயசரிதையிலே பாரதி அவர் தந்தை நீச்சலுக்கு பிறபிள்ளைகளுடன் செல்ல அனுமதிக்காததற்குக் காரணம் நீச்சல் தெரியாததால் அல்ல.. பொழுதை வீணாய்க் கழிக்கக் கூடாதென்பதற்குத்தான். என் முடிவு பாரதிக்கு நீச்சல் தெரியும் என்பதுதான்.

 

இலந்தை


On Mon, Sep 27, 2021 at 10:14 PM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
அந்தப்பத்திரிகை ஆசிரியர் பெயர்  முத்தையா மருதவாணன்.

On Mon, Sep 27, 2021 at 10:07 PM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
எந்தக் கட்டுரை?  தூத்துக்குடிக்காரர் பேராசிரியர் முருகேசன் பாரதியின் காதலி பற்றி எழுதியதென்றால் அது எனக்கும் கிடைக்கவில்லை. அது தான் நடத்திய பத்திரிகையில் பாரதி நூற்றாண்டு சமயத்தில் 

Subbaier Ramasami

unread,
Sep 30, 2021, 10:04:07 PM9/30/21
to santhavasantham

அவனுடைய பள்ளிப்படிப்பில் அவன் மனம் அவ்வளவாக ஈடுபடவில்லை. தமிழ் வகுப்பில் மிகுந்த ஆர்வம் காட்டினான். கணக்கு மற்றும் ஆங்கில வகுப்புகளில் அவன் அதிக ஆர்வம் காட்டவில்லை. என்றாலும் அப்பாடங்களில் நடத்தப்படும் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்றான்., 

 

அவனுடைய தமிழாசிரியருக்கு அவன் கவிதை எழுதும் ஆற்றல் உள்ளவன் என்ற உண்மை தெரியும்தன்னிடம்பயிலும் மாணவன் ஆற்றல் பெற்றவனாக இருக்கிறான் என்பதில் மகிழ்வடையாமல் அவர் உள்ளத்திலே இலேசாகப் பொறாமை தட்டியது. அவனை எப்படியாவது மட்டம் தட்டவேண்டும் என்று சமயம் பார்த்திருந்தார். ஒரு நாள் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது பாரதியின் மனம் வேறெங்கோ இலயித்திருந்தது. ஆசிரியர் கேட்ட கேள்விக்கு அவனால் சரியாகப் பதில் சொல்லக் கூடவில்லை. அவனைப் பெஞ்சின் மேல் ஏறி நிற்கச் சொன்னார். பிறகு அவனைப் பார்த்துநீ காளமேகம் போல் கவிதை பாடுவாயாமே? எங்கே இப்பொழுது ஒரு கவிதை சொல் பார்க்கலாம்என்றார். பாரதி ஆசுகவி. நினைத்திருந்தால் அப்பொழுதே கவிதை சொல்லியிருக்க முடியும். ஆனால் ஆசிரியரின் உள்நோக்கத்தை அறிந்த  காரணத்தாலே பாரதி கவிதை சொல்ல வில்லை. மெலிதாக நகைத்தான்.

ஏன் சிரிக்கிறாய்?” என அதட்டினார் ஆசிரியர்.

 

ஐயா, கார்மேகம் எவர் கேட்டும் பெய்வதில்லை. அது தானாகப் பெய்யும். இந்த உண்மை தங்களுக்குத் தெரியாததா? “ என்று சொன்னான். ஆசிரியர் வெட்கத்தால் தலை குனிந்தார். அவரது அசூயை அகன்றதுஅன்றுமுதல் அவனிடம் மிகவும் அன்பாக நடந்துகொண்டார்.

Govindaraju Arunachalam

unread,
Oct 1, 2021, 2:44:39 PM10/1/21
to சந்தவசந்தம்
தொடர் விறுவிறுப்பாகச் செல்கிறது. தொடரட்டும். -இனியன்.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.


--
rgds,
 
Dr. A. GOVINDARAJU,
Retired Principal - National Awardee,

Subbaier Ramasami

unread,
Oct 1, 2021, 8:30:20 PM10/1/21
to santhav...@googlegroups.com

 தினமொரு பாரதி சிந்தனை

22

வாங்க முதலாளி, சௌக்கியமா? என்று கிண்டலாகக் கேட்டார் ஜமீந்தார்

புத்தி, புத்தி, மஹாராஜா நான் உங்க அடிமை. நீங்க இப்படிப் பேசலாமா? “ என்று பதட்டத்தோடு பதில் சொன்னார் சின்னச்சாமி அய்யர்.

பஞ்சாலை முதலாளி நீங்கதானே , அதனாலேதான் சொன்னேன்

மன்னிக்கணும் மஹாராஜா. சமூகத்துக்கு யாரோ ப்பான சேதி சொல்லியிருக்காப்போல. சமூகம்தான் என்னைக்கும் முதலாளி. ஏதோ ஜனங்க விஷயம் தெரியாம முதலாளின்னு கூப்பிட்டுட்டாங்க!. அப்படிக் கூப்பிடக்கூடாதுன்னு நானும் பல முறை சொல்லிட்டேன். மஹாராஜா ஆதரவு இல்லேன்னா பஞ்சாலை இல்லேஎன்றார் சின்னச்சாமி அய்யர்.

 

நான் சும்மா விளையாட்டுக்குத்தான் கேட்டேன். உம்மைப்பத்தி எனக்குத் தெரியாதா? வெள்ளைக்காரங்க நடத்தற பஞ்சாலைக்குப் பிறகு உம்ம பஞ்சாலைக்குத் தானே ரொம்பப்பேரு

கிட்டத்தட்ட ஒரு வருஷம் இழுபறிக்குப்பிறகு இப்பொழுதான் ஓட ஆரம்பிச்சிருக்கு.. இன்னும் லாபத்தைப் பாக்கலேசீக்கிரம் லாபம் கிடைக்க ஆரம்பிச்சிடும்

நம்ம சமஸ்தானத்துக்கே அதுனாலே பெருமை அய்யரே!, “

எல்லாம் மஹாராஜா ஆசீர்வாதம்.”

நல்லா நடந்தா நமக்கும் லாபந்தானே! “

சரி மஹாராஜா. நான் வரேன்

 

சின்னச் சாமி அய்யர் அவ்வளவு பணிவாகப் பேசியதில் ஜமீந்தாருக்கு மகிழ்ச்சி..

சின்னச்சாமி அய்யருக்கு மக்களிடம் நிறையச் செல்வாக்கு வந்ததிலே அவருக்கு உள்ளத்திலே கொஞ்சம் பொறாமை தலை தூக்கியிருந்ததென்னவோ உண்மை. ஆனாலும் அய்யரின் பிடி தம் கைக்குள் இருப்பதால் அவர் தகுதிக்கு மீறி நடந்துகொள்ள மாட்டார் என்று ஜமீந்தார் நினைத்தார்

 

ஜமீந்தார் இப்படி சின்னச்சாமி அய்யரிடம் பொறாமைகொள்ளக் காரணமென்ன?

 

அந்தக்காலத்தில் பஞ்சாலை , நூற்பாலை போன்ற தொழிற்சாலைகள் ஆங்கிலேய முதலாளிகளால் நடத்தப்பட்டு வந்தனஇந்தியர்கள் மிகச்சிறிய தொழிற்சாலைகளும் கைத்தொழில் நிறுவனங்களும் நடத்தி வந்தனர். தமக்குப் போட்டியாக அவை அமையாத வரை ஆங்கிலேயர் அவற்றைக் கண்டுகொள்ளவில்லை. ஆங்கிலேயரின் தொழிலகங்கள் பல பெரிய நகரங்களில் இயங்கிவந்தன. இந்த நிலையில் தான் வாழ்கின்ற பகுதியில் ஒரு பஞ்சாலையை நிறுவ வேண்டும் என்று சின்னச்சாமி அய்யர் ஆசைப்பட்டார். அதற்கு வேண்டிய அனுபவ ஞானம் இல்லாவிட்டாலும் அறிவு இருந்தது. அதைப்பற்றி அறிந்தவர்களிடன் சென்று கற்று அறிந்தார். தனிப்பட்ட வகையில் முதலீடு செய்து தொழிற்சாலை தொடங்கப் போதிய வசதியில்லை. எனவே பங்குதாரர்களைச் சேர்த்துக்கொண்டு தொடங்கத் திட்டமிட்டார். சின்னச்சாமி அய்யரின் திறமையை அறிந்த எட்டையபுரம் ஜமீந்தார் அவருடைய முயற்சிக்கு ஆதரவு தருவதாக வாக்களித்தார். முதல் ஆளாக ஐம்பது பங்குகளை வாங்கினார். 198 பங்குகள் வாங்கப்பட்டன. சின்னச்சாமி அய்யர் தம் சொந்தப்பொறுப்பில் பெரியதொகை கடன் வாங்கினார். பஞ்சாலைக்கு வேண்டிய இடம்  பித்தாபுரம்  என்னும் ஊரில் வாங்கப்பட்டது. கட்டடங்கள் எழுப்பப்பட்டன. பஞ்சாலைக்கு வேண்டிய எந்திரங்கள்; பம்பாயிலிருந்து தருவிக்கப்பட்டன. அவ்வாலையை இயக்குவதற்குப் பொறியாளர்கள் பம்பாயிலிருந்து வரவழைக்கப்படவேண்டியிருந்தது. அதில் தாமதமாயிற்று. வேறு சில காரணங்களாலும் பஞ்சாலை இரண்டு ஆண்டுகட்கு மேலாக இயக்கப்படாமல் இருந்தது. அதன் பிறகு ஒருவழியாக இயக்கப்பட்டது. எனினும் எதிர்பார்த்த அளவு வருவாய் கிட்டவில்லை. ஆனாலும் பருத்தி ஆலை முதலாளி என்ற வகையில் சின்னச்சாமி அய்யரின் புகழ் எங்கும் பரவியது. மக்கள் அவரை முதலாளி என்று அழைத்தனர்சின்னச்சாமி அய்யரின் புகழில் அசூயை கொண்டவர்கள் ஜமீந்தாரிடம் அவரைப்பற்றிப் புகார் கூறினர். எனவே ஜமீந்தார் சற்று அசூயையோடு பேச நேர்ந்தது


Subbaier Ramasami

unread,
Oct 4, 2021, 3:44:41 PM10/4/21
to santhav...@googlegroups.com


பாரதிக்குப் பதினான்கரை வயது. அவனுக்குத் திருமணம் செய்ய முடிவெடுக்கப்பட்டது.. அந்த இளவயதில் திருமணம் செய்து கொள்ள பாரதிக்குச் சிறிதும் விருப்பம் கிடையாது. என்னசெய்வது. தந்தையாரை எதிர்த்துப்பேச இயலவில்லை. படிக்கும் காலத்திலேயே திருமணம் செய்வதா? மணப்பெண்ணுக்கு ஏழுவயதாம்? திருமணம் என்றால் அந்தப்பெண்ணுக்கு என்ன தெரியும்? அதுமட்டுமா? ஒரே பந்தலில் பல திருமணங்களை நடத்தி விட்டால் செலவு குறைவு என்பதற்காக பாரதியின் திருமணத்தோடு பாரதியின் தங்கை மூன்று வயது லஷ்மிக்கும் மணப்பெண் செல்லம்மாவின் தமக்கை பார்வதிக்கும் அதே பந்தலில் திருமணம் நடத்துவதென்று முடிவாயிற்று. காசியில் வாழ்ந்து வந்த பாரதியின் அத்தை குப்பம்மாளின் மூத்த மகன் விஸ்வநாதனுக்குப் பார்வதியையும் இளைய மகன் கேதாரத்திற்கு லக்ஷ்மியையும் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.குப்பம்மாளுக்கு மிகுந்த மகிழ்ச்சி. தனது இரண்டு மகன்களுக்கும் தனது அண்ணனின் மகனுக்கும் குட்டி மகளுக்கும் ஒரே நாளில் திருமணம் நடக்கிறதென்றால் மகிழ்ச்சியிருக்காதா?  பாரதிக்குப் பார்த்த மணப்பெண் செல்லம்மாவின் தந்தை செல்லப்பா அய்யர் விமரிசையாகத் திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். அந்த நாள் வழக்கப்படி நாலு  நாட்கள் கல்யாணம். 15-6-1897ல் திருமணம்

 

கடையத்திலுள்ள பழைய கிராமம் அடைக்கப் பந்தல் போடப்பட்டிருந்ததுகாசியிலிருந்து  கிருஷ்ணசிவன் குடும்பம், எட்டய்யபுரத்திலிருந்து சின்னச்சாமி அய்யர் குடும்பம், பாரதியின் தாத்தா குடும்பம் எனப்பலரும் வந்து அங்கே இருந்த ஒரு பெரிய வீட்டில் தங்கினர். சின்னப்பெண் செல்லம்மள் என்ன நடக்கிறது என்று அறியாமலே அங்குமிங்கும் அலங்காரம் செய்யப்பட்ட நீண்ட சடையுடன் ஓடியாடிக்கொண்டிருந்தாள். கல்யாணத்தில் பிரபல வித்துவான்களின் கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுபல ஜமீந்தார்களோடு கிருஷ்ண சிவனுக்குப் பரிச்சய முண்டுஎனவே அவர்களிடமிருந்து வெகுமதிகளும் அணிமணிகளும் பொருட்களும் வந்து குவிந்திருந்தன. புதுக்கோட்டை மன்னர் அந்தக்காலத்தில் மிகப்பிரபலமாக இருந்த தங்க நாதஸ்வர வித்வான் இரத்னசாமியை அவரது குழுவோடு அனுப்பியிருந்தார்.

 

மூன்று திருமணங்களும் மிக விமரிசையாக நடைபெற்றன. பாரதி தனது குறும்புப் பேச்சாலும் சுவையான பாட்டாலும் , இனிமையான கவிதையாலும் எல்லோரையும் கவர்ந்துவிட்டான்.

 

திருமணத்தின் நாலாம்நாள். ஊர்வலம் முடிந்து மப்பிள்ளைகள் அழைத்து வரப்பட்டு ஊஞ்சல் 

 மஹா மேதாவி ஒருவன் தனக்கு மாப்பிள்ளையாகக் கிடைத்ததில் செல்லப்பா அய்யர் பெரிதும் மகிழ்ந்தார். . பாரதி செல்லம்மாளைச் சுற்றிவந்து பாட்டுப்பாடினான். நலுங்கின் போது  மாப்பிள்ளை பாட்டுக் கோதாவில் தீவிரமாக இறங்கிவிட்டான்.   மற்ற மாப்பிள்ளைகள் வாய்மூடி மௌனிகளாக இருக்கப் பாரதி அட்டகாசமாகப் பாடல் பாடினான். செல்லம்மாளைப் பார்த்து அவன் பாடியதாகச் சொல்லப்படும் பாடல் மிகப் பிரசித்தம்

தேடக் கிடையாத அன்னமே- உயிர்ச்

சித்திரமே மட அன்னமே-எனைக்

கட்டியணைத்தொரு முத்தமே - தந்தால்

கைதொழுவேன் உனை நித்தமே

 

மொத்தத்தில் அந்த ஊரே மாப்பிள்ளையைச் சுற்றிவந்தது. அவன் வீதியில் இறங்கி நடந்தால்அதோ பாட்டுபாடற மாப்பிள்ளை போறார்என்று அவனைச் சுட்டிக்காட்டிப் பெண்கள் பேசுமளவுக்கு அவன் புகழ் பெற்று.விட்டான். பொதிகைமலைக்கு அருகில் இருந்த ஊரின் இயற்கைக் காட்சிகளின் அழகும் கல்யாணத்தின் குதூகலமும் அவன் பழைய காதலை ஒரு புறம் தள்ளின.

 

 

பாரதி சொல்லுகிறான்

மற்ற பெண்ணை மணம் செய்த போழ்துமுன்

மாதராளிடைக் கொண்டதொர் காதல்தான்

நிற்றல் வேண்டும் எனவுளத் தெண்ணிலேன்

நினைவையே இம்மணத்திடைப் போக்கினேன்

 

Niranjan Bharathi

unread,
Oct 4, 2021, 8:27:26 PM10/4/21
to santhav...@googlegroups.com
ஐயா, திருமணம் நடைபெற்ற நாள் 27-06-1897 அல்லவா ??

Subbaier Ramasami

unread,
Oct 4, 2021, 9:12:08 PM10/4/21
to santhav...@googlegroups.com
நான் ஆதாரம் இல்லாமல் எழுதுவதில்லை. புத்தகங்கள் எல்லாம் இந்தியாவில் உள்ளன. யாருடைய குறிப்பைப்பார்த்து எழுதினேன் எனத் தெரியவில்லை. கடையத்தில் சமீபத்தில் ஜுன் 27ந்தேதி  திருமணநாள். கொண்டாடப்பட்டதாக அறிகிறேன். பாரதியின் வாழ்க்கைக்குறிப்புகளைக் கொடுத்துள்ள புத்தகங்கள் எல்லாம்  ஜூனெ 1897 என்று  தேதியைக் குறிப்பிடாமல் கொடுத்துள்ளார்கள்.   நீ சொல்வதால் 27ந்தேதியென மாற்றிக்கொள்கிறேன்

இலந்தை

Swaminathan Sankaran

unread,
Oct 4, 2021, 9:16:11 PM10/4/21
to santhav...@googlegroups.com
பாரதியாரின் மூதாதையர் பற்றி என்ன விவரங்கள் உள்ளன?
அவர்கள் நெல்லை மாவட்டத்திற்குக் குடிபெயர்ந்தவர்கள் என்று சிலர் சொல்லுவார்கள்..
அப்படியானால் எப்போது? 
அவர் கண்டரமாணிக்கம் பிரஹசரணம் என்ற பிரிவைச் சேர்ந்தவர் என்பதாக ஒரு இடுகை 
சில மாதங்களுக்கு முன்னால் இங்கே கண்டேன். புலவர் ராமமூர்த்தி இட்டதாக ஞாபகம். 
இரண்டு கண்டரமாணிக்கம் என்ற ஊர்கள் உள்ளன. ஒன்று, சிவகங்கை தாலுக்காவில் காரைக்குடிக்கு 
அருகே உள்ள ஒரு குக்கிராமம். இன்னொன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில், செல்லூர் அருகே இருக்கிறது 
என்று நினைக்கிறேன். மன்னார்குடிக்கும்  நீடாமங்கலத்திற்கும் இடையில்? அந்தப் பரப்பில் பல 
பிரஹசரண  உட்பிரிவுகள் வாழ்ந்த அக்ராஹாரங்கள் இருந்திருக்கின்றன. பாரதியாரின் மூதாதையர்கள் 
அங்கிருந்து குடியேறியிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அப்படியானால் அங்கிருந்து எப்போது 
குடியேறினார்கள்? நாயக்கர் ஆட்சிக் காலத்திலா? ஏன்? பாரதியாரின் குடும்பத்தவர்கள், நிரஞ்சன் பாரதி,
அவர் உறவினர்கள், எவருக்கேனும் ஒருவேளை தெரிந்திருக்கலாம். 
பாரதியாரின் தம்பி, சி. விஸ்வநாதன் மானாமதுரையில் வாழ்ந்து மறைந்தார். அங்கே மிளகனூர் 
உட்பிரிவைச் சேர்ந்த பிரஹசரண அக்கிரஹாரம் ஒன்று சோமநாதர்-ஆனந்தவல்லி கோவிலின் பின்புறம் 
இருக்கிறது. 

சங்கரன் 
    


On Mon, Oct 4, 2021 at 3:44 PM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:


பாரதிக்குப் பதினான்கரை வயது. அவனுக்குத் திருமணம் செய்ய முடிவெடுக்கப்பட்டது.. 

[...] 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Oct 4, 2021, 9:38:03 PM10/4/21
to santhavasantham
Many in India are used to having multiple dates for an event - even for their date of birth! :)

This page states 1897 June 17 for his marriage date.

This page states -- 1897 ஜுன் 15 திருமணம். 

Welcome to the real world! :)
Or, should I say, Welcome to the internet world! :)


Niranjan Bharathi

unread,
Oct 4, 2021, 9:38:17 PM10/4/21
to santhav...@googlegroups.com
பாரதி - செல்லம்மாள் திருமணம் 1897, ஜுன் 27ல் நடந்தது என்று தனது "மகாகவி பாரதியார் வரலாறு" என்னும் நூலில் சீனி விசுவநாதன் எழுதியுள்ளார்.

முன்னோர்கள் எந்த ஊரிலிருந்து சீவலப்பேரிக்குக் குடிபெயர்ந்தார்கள் எனத் தெரியவில்லை. வீட்டில் பேசுகிறேன். 



Subbaier Ramasami

unread,
Oct 4, 2021, 9:46:46 PM10/4/21
to santhav...@googlegroups.com
பாரதியின் தாத்தாவுக்குச் சத்திரம் சுப்பைய்யர் என்றொரு பெயர் உண்டு. சீவலப்பேரிச் சத்திரத்தில் பொறுப்பாளராக இருந்திருக்கிறார். அச்சத்திரம் நாயக்கர் அரசில் அமைச்சராக இருந்த அரியநாத முதலியாரால் அமைக்கப்பட்டதாக அறிகறேன்.    சீவலப்பேரியில் மாட்டுத்தாவணி ஒரு மாத காலம் நடைபெறும்.  மிகப்பெரிய மாட்டுத்தாவணி. நான் சிறுவனாக  என் தந்தையுடன் மாட்டுத்தாவணிக்குப் போய் அச்சத்திரத்தில் சாப்பிட்டிருக்கிறேன்.  . சத்திரம் பெருமாள் கோவிலை ஒட்டியிருந்தது. பாரதியின் தாத்தா வீடு    அதற்குச் சமீபத்திலிருந்தது. அதற்கு நேர் எதிர் வீடு என் அத்தையின் மாமனார் வீடு.   
இலந்தை


Subbaier Ramasami

unread,
Oct 4, 2021, 9:49:27 PM10/4/21
to santhavasantham
பாரதியின் திருமண்ம் 1897 ஆனிமாதம் 15ந்தேதி நடைபெற்றதாக நாவலர் சோமசுந்தர பாரதியார் தனது கட்டுரையில் எழுதியிருக்கிறார்.  அது 27 ஜூனாக இருக்கலாம்.  

இலந்தை

Subbaier Ramasami

unread,
Oct 4, 2021, 10:07:28 PM10/4/21
to santhavasantham
june 27 1897 was SUNDAY 

image.png

Subbaier Ramasami

unread,
Oct 4, 2021, 10:21:26 PM10/4/21
to santhavasantham
image.png

Subbaier Ramasami

unread,
Oct 4, 2021, 10:22:56 PM10/4/21
to santhavasantham
1897 ஆனி 15ந்தேதிக்கு நேரான ஆங்கிலட்தேதியைக் கண்டுபிடிக்க வேண்டும்

இலந்தை

Subbaier Ramasami

unread,
Oct 4, 2021, 10:43:09 PM10/4/21
to santhavasantham
1897  ஜுன் மாதம் 12 ம் தேதி  க்குச்சமமான 32, வைகாசி   அன்று வைகாசி விசாகம் சனிக்கிழமை. 15 நாட்களைக் கூட்டினால் ஜுன் 27 ஞாயிற்றுக்கிழமைக்குச் சரியான ஆனி மாதம் 15ம் நாள்.

எனவே 27-6-1897 தான் சரியான நாள்

Subbaier Ramasami

unread,
Oct 5, 2021, 9:11:26 AM10/5/21
to santhavasantham

 தினமொரு பாரதி சிந்தனை

25

எது சரி எது தவறு என்று பகுத்தாய்கின்ற அறிவு முதிருமுன்னர்  தன்வாழ்வில்

காதல் ஒன்று கடமையொன் றாயின!” என வெதும்பினான்

  திருமணம் முடிந்த பிறகு நடந்த நிகழ்ச்சிகளை நிதானமாகச் சிந்தித்துப்பார்த்தான். எல்லாம் ஒரு பொம்மை விளையாட்டுப்போலத் தோன்றியது. அவன் தந்தையின் மேல் சினம் பொங்கியது. ஒன்றும் அறியாத வயதில் . திருமணம் செய்வதை  வெறுத்தான் . இளைஞர்கள் திருமணம் செய்துகொள்ளாதீர்கள் என்று சொல்லுமளவுக்கு அவன் வெறுப்பு ஓங்கியது. பாதகங்களிலே பெரிய பாதகமாகக் குழந்தைத் திருமணத்தைக் கருதினான். இதோ இந்தப்பாடலில் அவனது கோபம் எப்படிக் கொப்புளித்து வருகிறது பாருங்கள்!

பாலருந்து மதலையர் தம்மையே

     பாதகக் கொடும் பாதகப் பாதகர்

மூலத்தோடு குலங்கெடல் நாடிய

மூட மூட நிர்மூடப் புலையர்தாம்

கோலமாக மணத்திடைக் கூட்டுமிக்

     கொலையெனும் செயல் ஒன்றினை யுள்ளவும்

சாலவின்னுமோர் ஆயிர மாண்டிவர்

     தாதராகி அழிகெனத் தோன்றுமே!’

 

தர்மம் இதுவெனச் சுட்டிக் காட்டவேண்டிய பெரியவர்கள், சாத்திரங்களும் சரியைகளும் கிரியைககளுந்தான் தருமம் என்பது போல நிகழ்ச்சிகளில் நெறிகள் கண்டுகொண்டிருக்கும் நிலையில் சிறுவர்கள் எது தர்மம் என்று எப்படித்தேர்வது?.

 

மூத்தவர்கள் வெறும் வேடத்தில் நிற்கும் கால்

மூடப்பிள்ளை அறமெவன் ஓர்வதேஎனக்கேட்கிறான் பாரதி. திருமணமான பின் செல்லம்மா அவள் வீட்டில் தங்கிவிட்டாள். பாரதி பள்ளிக்குச் சென்றுவிட்டான்.

 

திருமணம் ஒருவகையான மன உளைச்சலைக் கொடுத்ததென்றால் பள்ளிப்படிப்பு வேறு வகையான மன உளைச்சலைக் கொடுத்தது.


இலந்தை

N. Ganesan

unread,
Oct 5, 2021, 9:55:19 AM10/5/21
to சந்தவசந்தம்
On Monday, October 4, 2021 at 9:43:09 PM UTC-5 கவிமாமணி wrote:
1897  ஜுன் மாதம் 12 ம் தேதி  க்குச்சமமான 32, வைகாசி   அன்று வைகாசி விசாகம் சனிக்கிழமை. 15 நாட்களைக் கூட்டினால் ஜுன் 27 ஞாயிற்றுக்கிழமைக்குச் சரியான ஆனி மாதம் 15ம் நாள்.

எனவே 27-6-1897 தான் சரியான நாள்

15, Aani
Krishna Paksha, Thirayodasi
1819 Shaka, Kaliyugam 4998
27 June 1897
Sunday

Sunrise05:17 AM

Sunset07:37 PM

Moonrise03:45 AM, Jun 28

Moonset05:58 PM

Shaka Samvat1819 Hevilambi

Lunar MonthJyeshtha

WeekdayGnayiru

PakshaKrishna Paksha

TithiThirayodasi upto 05:20 PM

NakshathramRohini upto 11:54 PM

YogaShula upto 09:44 AM

KaranaVanija upto 05:20 PM

KaranaVishti upto Full Night

SunsignMithuna

MoonsignVrishabha

Rahu Kalam05:50 PM to 07:37 PM

Gulikai Kalam04:02 PM to 05:50 PM

Yamaganda12:27 PM to 02:15 PM

Abhijit11:59 AM to 12:56 PM

Dur Muhurtam05:43 PM to 06:40 PM

Amrit Kalam08:20 PM to 10:07 PM

Varjyam02:59 PM to 04:46 PM

Tamil YogaSiddha upto 11:54 PM

Tamil YogaSiddha

Anandadi YogaPrajapathi upto 11:54 PM

Anandadi YogaSoumya

Subbaier Ramasami

unread,
Oct 5, 2021, 3:52:28 PM10/5/21
to santhav...@googlegroups.com
நன்றி

On Tue, Oct 5, 2021 at 8:55 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:





Subbaier Ramasami

unread,
Oct 7, 2021, 12:04:42 PM10/7/21
to santhavasantham

தினமொருபாரதிசிந்தனை


26

திருமணம் ஒருவகையான மன உளைச்சலைக் கொடுத்ததென்றால் பள்ளிப்படிப்பு வேறு வகையான மன உளைச்சலைக் கொடுத்தது.

 

அவனைப்படிக்கச் சொல்லி வற்புறுத்திய ஆங்கிலக்கல்வியால் என்ன பயன்?

 

அந்தக்காலத்தில் ஆங்கிலக்கல்வி ஏன் பயின்றார்கள். பாரதி மிகத் தெளிவாகச் சொல்லுகிறான்

ஆங்கிலேயருக்குக் கைகட்டிக்குற்றேவல் புரிகின்ற சேவகர்கள், அடிமைகள், இந்தியர்களை ஆங்கிலத்துரைகளுக்காக வேவு பார்க்கிற ஒற்றர்கள், வயிற்ற மட்டுமே பெரித்தகக் கருதி தம்முயிரை விர்ரிடும் பேடிகள், வஞ்சகம் புரிவோர் ஆகியோர் படிக்கின்ற ஆங்கிலக் கல்வியை மானமுள்ள தன்னையும் தன் தந்தை படிக்க வைத்துவிட்டாரே என்பதில் பாரதிக்கு மிகவும் வருத்தம். சிங்கத்துக்கு புல்லை உண்ணச் சொல்லிக் கொடுத்ததுபோல தன்னை ஆங்கிலக்கல்வி படிக்க வைத்துவிட்டார்களே என வெதும்பினான்.

 

. நம்  நாட்டிலேயே படிக்க வேண்டிய சாத்திரங்கள் கொஞ்சமா? அவற்றையெல்லாம் கருதுவாரில்லையே!

 

பன்னிரண்டாண்டுகள் கணிதம் படித்தவர்கூட நம்முன்னோர்கள் எந்தக்கருவியும் இன்றி ஆய்ந்து அற்புதமாக விரித்துரைத்திருக்கும் வான சாஸ்திரத்தை அறியமாட்டார்கள். அதையும் ஒரு ஆங்கிலேயன் சொன்னால்தான் படிப்பார்கள். பொருளாதாரத்தில் நிபுணர்கள் என்பார்கள். ஆனால் நாட்டுச் செல்வம் கொள்ளை போவதை அறிய மாட்டார்கள். காவியங்களை ஆயிரம் முறை கற்பார்கள். ஆனால் அதன் உண்மைப்பொருளைத் தேறமாட்டார்கள். அப்படி ஒரு நிலையை உருவாக்கும் ஆங்கிலக்கல்வி தேவையா என நொந்தான்.

 

கையில் பணமில்லாமல் தான் உயிரினும் மேலாக மதித்த பஞ்சாலையைக் கைவிட வேண்டி வந்த தந்தை தனது ஆங்கிலப் படிப்புக்காக எவ்வளவு பணம் செலவு செய்கிறார் என்பதை எண்ணிக் கண்ணீர் வடித்தான்

 

ஆங்கிலக் கல்வி பயில்பவர்களைக்குறிப்பிடும் போது

முன்னர் நாடு திகழ்ந்த பெருமையும்

மூண்டிருக்கும் இந் நாளின் இகழ்ச்சியும்

பின்னர் நாடுறு பெற்றியும் தேர்கிலார்

பேடிக்கல்வி பயின்றுழல் பித்தர்கள்என்று சாடுகிறான்.

ஆங்கிலேயர் இந்திய மக்களை தமது பணிக்காகக்கல்வி என்னும் படுகுழுயில்- ---அதுவும் எப்படிப்பட்ட படுகுழி,பொய்மையும் வஞ்சமும் மயக்கம், ஐயம் என்ற விலங்கினங்கள் வாழ்கின்ற வெங்குகை- அதில் தள்ளிவிட்டாரே தந்தை என்று வேதனைப்பட்டான். அப்படித் தனக்குப் பயனில்லாக் கல்விக்காகத் தந்தை செலவு செய்தது கொஞ்சமா?

 

செலவு தந்தைக்கோர் ஆயிரம் சென்றது

தீதெனக்குப் பல்லாயிரஞ் சேர்ந்தன.

நலமொ ரெட்டுணயும் கண்டிலேன் இதை

நாற்பதாயிரம் கோயிலில் சொல்லுவேன்என நோவதைத் தவிர அவன் என்ன செய்துவிடமுடியும்?

 

அந்த நிலைமையில்தான்  அவனது கல்வி இந்து உயர்நிலைப் பள்ளியில் தொடர்ந்தது.

 

Subbaier Ramasami

unread,
Oct 7, 2021, 12:05:46 PM10/7/21
to santhavasantham
தினமொரு பாரதிசிந்தனை

27

திருநெல்வேலி மாவட்டம் இலக்கியத்திற்குப் பெயர்பெற்றது. ஒவ்வொரு ஊரிலும் அறிஞர்கள் கூடிச் சொற்பொழிவாற்றிக் கலந்துரையாடும் இலக்கியக் கழகங்கள் இயங்கிவந்தன. சில பெரியவர்கள் வீடுகளில் குறிப்பிட்ட நாள்களில் தமிழறிஞர்கள் கூடுவதுண்டு. அங்கெல்லாம் வித்துவான்கள் தமது புலமையை வெளிப்படுத்துவதுண்டு. இவைதவிர புலமைக்காய்ச்சலில் ஒருவருக்கொருவர் சவால் விடுவதும் ஆதரித்தும் மறுத்தும் எழுதுவதும் பேசுவதும் வழக்கம்,. அதற்காகவே இலக்கணமும் இலக்கியமும் ஊன்றிப்படிட்தார்கள். அந்தக்காலத்திலே அது ஒரு பொழுதுபோக்கு. அடுத்தவனை விடத்தான் திறமைசாலி என்று காட்டிக்கொள்வதற்காகத் தன் திறமையைப் பெருக்கிக்கொண்டார்கள்.

 

பாரதியின் பெயர் ஏற்கனவே பிரபலமாக இருந்ததால் அவனும் அப்படிப்பட்ட கூட்டங்களில் கலந்துகொள்வதுண்டு. திருநெல்வேலியிலே சோணாசலம் பிள்ளை என்ற தமிழறிஞர் இருந்தார். அவரது வீட்டில் அடிக்கடி தமிழறிஞர்களின் கூட்டம் நடக்கும்அவர் வீட்டில்  தமிழரங்கோடு சுவையரங்கமும்  உண்டு. அவ்வரங்குகளில் சமுசை கொடுத்து வெண்பாப்பாடுவதும், கட்டளைக்கலித்துறை பாடுவதும், சிலேடை பாடுவதும் எனப் பல நிகழ்வுகள் நடைபெறும் சமுசை என்றால் ஈற்றடி கொடுத்துப் பாடச்சொல்வதோ அல்லது சில புதிரான கேள்விகளைக் கொடுத்தோ விடையிறுக்கச் செய்வதாகும்

 

சோணாசலம் பிள்ளையின் மகன் காந்திமதிநாதபிள்ளை.பாரதியைவிட வயதில் மூத்தவர். இந்துக்கல்லூரியில் எஃப் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தார். அவரும் சிறந்த தமிழ்ப்புலவர். தன்னை விடப் பாரதியை எல்லோரும் அதிகம் போற்றுகிறார்களே என்று அவருக்குள் பொறாமை உணர்வு பொங்கி நின்றது. பலர் முன்னிலையில் பாரதியை எப்படியாவது மட்டம் தட்டிவிட வேண்டும் என்று நினைத்திருந்தார். அதற்கு ஒருநாள் சந்தர்ப்பம் வாய்த்தது. சோணாசலம் பிள்ளை வீட்டிலொருநாள் மாலைப்பொழுதில் நடந்த இலக்கியக் கூட்டத்தில் சமுசை கொடுத்துப் பாடல் இயற்றும் நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்ததுஈற்றடி கொடுத்து பாடல்கள் இயற்றும் நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டு இருந்தது. காந்திமதி நாதபிள்ளை பாரதியைப் பார்த்துபாரதி சின்னப் பயல்என ஈற்றடிகொடுத்து வெண்பா இயற்றச் சொன்னார். எல்லோரும் ஒரு எதிர்பார்ப்போடு பாரதியைப் பார்த்தார்கள். காந்திமதிநாதன் நமட்டுப்புன்னகையுடன் தான் ஏதோ பெரிதாக சாதித்துவிட்டதாக எண்ணி எல்லோரையும் பார்த்தார். பாரதி சிறிதும் சஞ்சலைப்படவில்லை.. அந்தச் சின்னப்பையனை இப்படி மடக்குகிறானே என்று ஒரு சில நல்லவர்கள் வேதனைப் பட்டனர்.

 

என் வெண்பா தயார்என்றான் பாரதி

சொல், கேட்கலாம்என்றார் சோணாசலம் பிள்ளை.

பாரதி மிகவும் தைர்யமாகவும்  சமத்காரமாகவும் தன் வெண்பாவைச் சொன்னான்.

ஆண்டில் இளையவனென் றந்தோ அகந்தையினால்

 ஈண்டிங் கிகழ்ந்தென்னை ஏளனஞ்செய்- மாண்பற்ற

 காரிருள்போல் உள்ளத்தான் காந்திமதி நாதனைப்

 பாரதி சின்னப் பயல்என்றான்.

உடனே அதன் உட்பொருளை அறிந்து கொண்டுபேஷ், சபாஷ்எனப் பாராட்டினர் சிலர். இன்னும் சிலருக்குப் பொருளைத் தெளிந்து கொள்ளச் சிறிது நேரமாயிற்று.

 

பாரதி தான் சொல்ல வந்த கருத்தைத் தெளிவாக்க வேண்டி,

 

காந்திமதி நாதனைப் பார் அதி சின்னப் பயல்என்று பிரித்துக்கூறினான்

பாரதியின் நண்பன் சோமசுந்தரம் அவன் கையைப்பிடித்துக் குலுக்கினான்.

புலவர் ஓரிருவர் பாரதியை கட்டியணைத்துக் கொண்டனர்.

நல்ல சமத்காரம். அந்தோ என்ற சொல்என்னையா பர்தாபப்படுபடி செய்ய நினைத்தாய், அந்தோ நீ பரிதாபப்பட்டு நிற்கிறாயே என்பதை மிக அழகாக உணர்த்துகிறது”  என்றார் ஒருவர்

காந்திமதி நாதனின் தந்தை சோணாசலம் பிள்ளைத் தன் மகன மட்டந்தட்டிப் பாடிய பாடல் என்பதையும் மறந்து பாரதியைப் பாராட்டினார். காந்திமதிநாதனின் தலை தாழ்ந்தது..

 

காந்திமதி நாதன் அசூயை கொண்டவனாக இருந்தாலும் நல்ல தமிழ்ப்புலவர் என்பதைப் பாரதி அறிந்திருந்ததால் அவனை மகிழ்விக்க விரும்பினான். எனவே தான் எழுதிய வெண்பாவைச் சற்றே மாற்றி.

 

ஆண்டில் இளையவனென் றைய அருமையினால்

ஈண்டின்றென்   றன்னை நீ  ஏந்தினையால்- மாண்புற்ற

காரதுபோல் உள்ளத்தான் கந்திமதி நாதற்குப்

பாரதி சின்னப் பயல்”  என்று பாடினான்.

 சற்றே இறுக்கமாக இருந்த நிலை மாறி மகிழ்ச்சியான சூழல் உருவாகியது. எல்லோரும் பாரதியின் சாமர்த்தியத். வியந்து பாராட்டினர். காந்திமதி நாதன் தன் பொறைமையைக் கைவிட்டுத் தன்னை வியந்து படிய பாரதியை மகிழ்வோடு கட்டிக்கொண்டார். அதன் பிறகு அவர்கள் இருவரும் மிகச் சிறந்த நண்பர்கள் ஆனார்கள்.

 

இந்நிகழ்ச்சி நடந்து சிறிது காலத்திற்குப் பிறகு  எட்டய்யபுரத்தில் கோயில் கொண்டிலங்கும் அத்திமுத்தீஸ்வரர் மீது இளசை ஒரு பா ஒரு பஃது என்ற ஒரு பாடலைப் பாரதி எழுதினான். . ஒரே வகையான பாவில் அந்தாதியாகப் பத்துப்பாடல்கள் எழுதுவதற்குஒருபா ஒரு பஃதுஎன்று பெயர்.. அந்தப் பாடலைப் படித்துப்பார்த்து வியந்த காந்திமதிநாத பிள்ளை அதற்கு ஒரு சாற்றுக்கவி எழுதிக்கொடுத்தார்.

 

பாலா கற்கண்டா பழம்பொருந்தும் இன்னமு

தாலா கும் பாகா  தமிழுருவா? - ஏலாதி

இட்ட சருக்கரையா ஏரிளசைப் பாரதியார்

தொட்ட ஒருபா ஒரு பஃது

 

பாரதியின் பாடலை ஓகோ என்று புகழ்ந்து எழுதிய இப்பாடல் காந்திமதிநாதன் முன்பு பாரதியை இக்கட்டில் தள்ளியதற்குக் கழுவாயாக அமைந்ததுவ்


On Tue, Oct 5, 2021 at 8:12 AM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

N. Ganesan

unread,
Oct 7, 2021, 1:46:36 PM10/7/21
to Santhavasantham
இளசை ஒரு பா ஒரு பஃது 

இந்த வெண்பாக்கள் கிடைத்துள்ளனவா?

நா. கணேசன்

Subbaier Ramasami

unread,
Oct 7, 2021, 7:34:54 PM10/7/21
to santhavasantham
கிடைத்துள்ளன. பல பாரதி பாடல் புத்தகங்களில் காணலாம்

On Thu, Oct 7, 2021 at 12:46 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
இளசை ஒரு பா ஒரு பஃது 

இந்த வெண்பாக்கள் கிடைத்துள்ளனவா?

நா. கணேசன்

On Thu, Oct 7, 2021 at 11:05 AM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
தினமொரு பாரதிசிந்தனை

Subbaier Ramasami

unread,
Oct 8, 2021, 7:23:29 PM10/8/21
to santhavasantham
தினமொரு பாரதி சிந்தனை

28

தினமொருபாரதிசிந்தனை
ஒரு நாள் மாலைப்பொழுது. பள்லிவிட்டு வந்ததும் பாரதி தாமிர பரணி ஆற்றங்கரையில் இருந்த, தனக்கு மிகவும் பிடித்தமான மண்டபத்திற்குச் சென்றான். இதமாகக் காற்று வீசிக்கொண்டிருந்தது. இடதுகைப் புறத்தே சுலோச்சனா முதலியார் பாலத்திலே சிலர் நடந்து சென்றுகொண்டிருந்தனர். அவ்வப்போது சில குதிரைவண்டிகளும் சென்றன. . எதிரே படித்துறை. அதை ஒட்டி குமிழியிட்டுக்கொண்டு தாமிரபரணி நதி ஓடிக்கொண்டிருந்தது.
நதியில் சிலர் குளித்துக்கொண்துக்கொண்டிருந்தனர். குளித்து முடித்த சில பெண்கள் மார்புக்கு மேல்வரை ஈரப்புடவையை இழுத்துக்கட்டிக்கொண்டு தோய்த்த ஈரத்துணிகளை வலப்புறத்தோளில் போட்டுக்கொண்டு , தாமிரபரணித் தண்ணீர் நிரப்பிய குடத்தை இடுப்பிலே வைத்துக்கொண்டு நடந்து சென்றனர். தாமிரபர்ணித் தண்ணீரின் தெளிவுக்கும் சுவைக்கும் மருத்துவ குணத்துக்கும் ஈடே கிடையாது.
மண்டபத்திலிருந்து இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த பாரதியின் மனத்தில் ஒரு கவிதை வெறி பொங்கியெழுந்தது. கண்ணை மூடி தியானத்தில் இருப்பதுபோல் அமர்ந்தான். ஏதோ ஒரு உருவெளித்தோற்றம். . வெள்ளை மலரணமேல் அமர்ந்து வீணை சுமந்திருக்கும் வாணியா அவள்! கையில் ஏடு தரித்திருந்தாள். இந்தா இதை வைத்துக்கொள் என்று எதையோ அவள் கையில் கொடுத்துவிட்டுச் சென்றாள்.. காட்சி மறைந்தது. கண்டது கனவா? தூங்கிவிட்டானா? ஏதோ ஒரு உற்சாகம் அவன் மனத்திலே பொங்கி நாடி நரம்பெல்லாம் பரவியது. கை எழுது எழுது என்று பரபரத்தது. ஏதோ ஒரு மயக்கம்! அதுதான் கவிதை மயக்கமா? பட்டப்பகலிலே பாவலர்க்குத் தோன்றுவதாம் நெட்டைக் கனவா அது? மீளவிழியில் மிதந்த கவிதையா?
கவிதைத் தேவி கண்முன்பு வந்தாளா? அந்தப்பரவசத்திலிருந்து மீள நெடு நேரமானது. அந்த
அருமையான
அனுபவத்தை பின்னாளில் அற்புதக் கவிதையாக்கினான் பாரதி
“பிள்ளைப்பிராயத்திலே - அவள்
பெண்மையைக் கண்டு மயங்கிவிட்டேனங்கு
பள்ளிப்படிப்பினிலே =மதி
பற்றிடவில்லை எனிலும் தனிப்பட
வெள்லை மலரணைமேல்-அவள்
வீணையும் கையும் விரிந்த முகமலர்
விள்ளும் பொருளமுதும்- கண்டென்
வெள்ளை மனது பரிகொடுத்தேனம்மா!”
பிள்ளைப்பிராயத்திலே வந்தாள்.. சரி- ஆனால் எந்த இடத்தில் வந்தாள்?
“ஆற்றங்கரைதனிலே- தனி
ஆனதோர் மண்டப மீதினிலே- தென்றற்
காற்றை நுகர்ந்திடுந்தேன் - அங்குக்
கன்னிக் கவிதை கொணர்ந்து தந்தாள்”
அவள் கொடுத்த கன்னிக்கவிதையின் விகசிப்பால் பாரதி பின்னாளில்பல’கனி’க் கவிதைகள் படைத்தார்.
Like
Comment
Share

Subbaier Ramasami

unread,
Oct 9, 2021, 8:54:32 PM10/9/21
to santhavasantham

பாரதியின் தந்தை சின்னச்சாமி அய்யர் இறந்த செய்தியை ஏற்கனவே பார்த்திருக்கிறோம். செய்தி கேள்விப்பட்டுப் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டுச் சுப்பையா எட்டய்யபுரம் வந்தான். ஈமக் காரியங்கள் செய்ய வேண்டுமே! சுப்பையாவோ மைனர்ப் பையன்.  எட்டைய்யபுரம் மஹாராஜா உதவினாரா எனத்தெரியவில்லை.  நான் படித்த அளவில் சின்னச்சாமி அய்யரின் தாய்தான் முன்னின்று ஈமக்காரியங்களுக்கு ஏற்பாடு செய்ததாக அறிகிறேன்.

விஸ்வநாதா, நீ ஏற்கனவே சின்னச்சாமி சீக்குச் செலவுக்கும் சுப்பைய்யா படிப்புச் செலவுக்கும் நூறு ரூபாய் கொடுத்திருக்கே. இப்போ என் மகன் செத்துக்கிடக்கான். அவன் வாழ்ந்து கெட்டவன். காரியங்களெல்லாம் ஒரு குறையுமில்லாம நடக்கணும். உன் ஷட்டகர் பணத்திலே இன்னொரு நூறு ரூபாய் கொடு. என் வீட்டை அவன் பேருக்கு அடமானம் எழுதிக்கொடுக்கிறேன்.” என்றாள் பாகீரதிப் பாட்டி. .

 

நிச்சயமாத் தரேன் பாட்டி. காரியங்களெல்லாம் முடிஞ்ச உடனே கோவில்பட்டி சப் ரிஜிஸ்ட்ரார் ஆபீஸிலே பத்திரம் பதிஞ்சிக்கலாம்என்றார் விஸ்வநாதன். மகனைப் பறிகொடுத்த துக்கத்தோடு கூட அவரது அந்திமக்காரியங்களுக்குப் பணம் திரட்டும் பொறுப்பும் பாகீரதிப் பாட்டி தலையில் விழுந்தது.

.

பாவம் வள்ளியம்மாள். அவர்கள் வீட்டிலும் அவ்வளவு வசதியானவார்கள் என்று சொல்ல முடியாது.

ஒரு கைக் குழந்தையை வச்சுண்டு அவ எப்படிக்காலந்தள்ளப்போறாளோ என்று கவலைப்பட்டள் பாகீரதி அம்மாள்.

கடையத்திலிருந்து செல்லம்மாள் வந்தாள்.

சின்னச் சாமி அய்யரின் காரியங்கள் ஒரு வாறு நடந்து முடிந்ததுகாசியிலிருந்து சின்னச்சாமி அய்யரின் தமக்கை குப்பம்மாள் வந்தாள்.

சின்னச்சாமி ரொம்பக் கெட்டிக்காரன். அவன் எவ்வளவு பெரிய ஆளா வரப்போறான் பாருஎன்று எல்லோரிடமும் தம்பியைப் பற்றிப் பெருமையாகச் சொல்லிக் கொண்டிருந்தவளுக்குத் தம்பியின் அகால மரணச்செய்தி பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

அனாதரவாக நிற்கும் தம்பியின் குடும்பத்திற்கு ஏதாவது வழிசெய்தாகவேண்டும் . வள்ளியம்மாளையும் அவளது பையன் விஸ்வநாதனையும் வள்ளியின் தந்தை தன்னுடன் அழைத்துப்போவதாகச் சொன்னார். சுப்பைய்யாவிற்கும் தனது தாயாருக்கும் ஏதாவது ஏற்பாடு செய்தாகவேண்டும் என்று எண்ணினாள் குப்பம்மாள் செல்லம்மாள் இன்னும் சின்னப்பெண். அவள் பெரியவளாகிச் சுப்பையாவுடன் குடும்பம் நடத்தத் தயாராகும் வரை சுப்பையாவையும் அம்மாவையும் தான் தன்னுடன் காசிக்கு அழைத்துச் செல்வதாகச் சொன்னாள். அந்த ஏற்பாடு எல்லோருக்கும் ஏற்புடையதாக இருந்தது

Subbaier Ramasami

unread,
Oct 11, 2021, 7:29:20 PM10/11/21
to santhavasantham

தினமொரு பாரதி சிந்தனை

30


குப்பம்மாளின் கணவர் கிருஷ்ண சிவன் சற்றுக் கண்டிப்பானவர் என்றாலும் கருணையுள்ளம் கொண்டவர். மற்றவர்களுக்குத் தராளமாக உதவி செய்யும் மனப்பாங்குடையவர். எனவே சுப்பையாவை காசியில் படிக்க வைப்பதற்கு அவர் சம்மதம் தெரிவித்திருந்தார்.

 

சுப்பையா திருநெல்வேலியில் படித்துக்கொண்டிருந்த போது பிரிய நேர்ந்தாலும் அவன் அடிக்கடி எட்டையபுரம் வந்ததால் சாம்பசிவத்தால் அவனைக் காண முடிந்தது. வருடக்கணக்கில் அவன் காசியில் தங்கிவிட்டால் அவனை எப்பொழுது பார்ப்பது எனப்பிரிவாற்றாமையினால் மாமா சாம்பசிவம் அழுதான். திருநெல்வேலி மாவட்டத்துக்குள்ளேயே சுற்றிவந்த சுப்பையா முதன்முதல் நீண்ட தூரம் பயணப்பட வேண்டியிருந்தது. எட்டைய புரத்தை விட்டுச் செல்வதில் அவனுக்கு விருப்பமில்லை. இருந்தாலும் என்ன செய்வது?. அத்தையை விட்டால் அவனுக்கு ஆதரவு தருபவர்கள் யாரிருக்கிறார்கள்?. எனவே வேறு வழியின்றி சுப்பையா அத்தையுடன் காசிக்குச் செல்லச் சம்மதித்தான்.

பாரதியின் தாய் லஷ்மியின் தங்கை சின்னம்மா அவனிடம் அதிகம் பாசம் கொண்டவள்அத்தை அத்திம்பேரிடம் நல்ல பேரெடுத்து நன்றாகப் படித்துப் பெரிய ஆளாகத் திரும்பவேண்டும் என்று புத்திமதி சொன்னாள்.

 

கிளம்புவதற்கு முதல்நாள் குப்பம்மாள் அத்தை பாரதியிடம் காசியைப் பற்றியும் அங்கு அவன் அங்கு எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பதைப்பற்றியும் விரிவாக எடுத்துச் சொன்னாள். அத்திம்பேருக்குப் பல பெரிய மனிதர்களைத் தெரியும் என்றும் அவன் மட்டும் அத்திம்பேரிடம் நல்ல பேரெடுத்தால் அவன் எவ்வளவு விரும்புகிறானோ அந்த அளவுக்குப் படிக்கவைத்து அவனுக்கு நல்ல உத்தியோகமும் வாங்கிக் கொடுத்துவிடுவார் என்றும் சொன்னாள்..

 

கனவுகளைக் கண்களில் சுமந்து கொண்டு சுப்பையா காசிக்குப் புறபட்டான். வில்வண்டிகளில் கோயில்பட்டி ரயில்வே ஸ்டேஷன் சென்றனர். கடையத்திலிருந்து செல்லம்மாளின் தமையன் அப்பாத்துரை வந்திருந்தான்.  தான் வரும்வரை செல்லம்மாளை நன்கு கவனித்துக்கொள்ளும் படியும் அவளுக்கு எழுதப் படிக்கக் கற்றுக்கொடுக்கும் படியும் பாரதி சொன்னான்.

 

கோயில்பட்டியிலிருந்து இரயில் மூலம் சென்னை சென்றனர். அங்கிருந்து கல்கத்தா சென்று கல்கத்தாவிலிருந்து காசிக்கு சென்றனர்.

Subbaier Ramasami

unread,
Oct 12, 2021, 7:16:57 PM10/12/21
to santhavasantham

31

இன்று காசிக்குச் செல்வது மிக எளிது. ஆனால் வெகு காலத்திற்கு முன்பு காசிப்பயணமே கடைசிப்பயணமாகக்  கருதப்பட்டுவந்தது. காசியில் மரிக்க முக்தி கிட்டும் என்பது ஐதீகம். அதற்காகவே வயதானவர்கள் சாகும் வரை காசியில் வந்து தங்கிவிடுவது வழக்கம். காசியை மஹாஸ்மசானம் என்றும் அழைப்பதுண்டு. வருணை , அஸி என இரண்டு நதிகளுக்கிடையே கங்கைக் கரையில் அமைந்த நகரம் காசி. எண்ணற்கரிய புண்ணிய நகரம். இறப்பவர்கள் காதிலே சிவபெருமான் முக்தி மந்திரத்தை ஓதுகிறார் என்கிறார்கள். காசி விஸ்வநாதரும் விசாலாக்ஷியும் அன்னபூரணியும் கால பைரவரும் டுண்டி கணபதியும் அங்கே அருள்பாலிக்கிறார்கள். அங்குள்ள துர்க்கா மந்திரும் பிரசித்தம். அங்கேதான் துளசி இராமாயணம் உருவானது. பலமகான்கள் அங்கே வாழ்ந்திருக்கின்றனர்ஒரு காலத்தில் மிகச் சிறந்த கல்வித்தலமாகத் திகழ்ந்திருக்கிறது. ஆதி சங்கரர் , கபீர் தாஸர் , துளசிதாஸர், போன்ற மஹான்கள்; வாழ்ந்த நகரம். அங்கே  புண்ணிய நதி கங்கை அதில் குளிப்பவர்கள் பண்ணிய பாவங்களைக் கரைத்த படி ஓடுகிறதுஇரண்டரைமைல் தொலைவுள்ள கங்கைக்கரையில் 64 தீர்த்தக்கட்டங்கள் இருக்கின்றன.. அக்கட்டங்களில் அனுமன் கட்டம் என்பது ஒன்று . அதில் சிவ மடம் தமிழ் நாட்டிலிருந்து வரும் யாத்திரிகர்கள் வசதியாகத் தங்கிச் செல்வதற்காக ஸ்தாபிக்கப்பட்டதுஅந்தச் சிவமடத்தின் நடுநாயகமாக ஒரு சிவன் கோயில் . அந்த மடத்தை நிர்வகித்து வந்தவர் பாரதியின் அத்தை கணவர் கிருஷ்ண சிவன்..  அவருடைய பிள்ளைகளில் மூத்தவனான விஸ்வநாதன் பாரதியின் மனைவி செல்லம்மாளின் தமக்கையை மணந்திருந்தான். இளையவன் கேதாரம் பாரதியின் தங்கை லக்ஷ்மியை மணந்திருந்தான்.

 

காசி மாநகர் பாரதியை மிகவும் கவர்ந்ததுதான் தங்கியிருந்த அனுமன் கட்டத்து வீட்டைப் பற்றி பாரதி ஆறில் ஒரு பங்கு என்ற கதையில் எழுதியிருக்கிறார்

காசியில் ஹனுமந்த கட்டத்தில் எனக்குத் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். இதைப்படிக்கும் தமிழர்கள் காசிக்குப் போயிருப்பதுண்டானால், நான் சொல்லப்போகிற இடம் அவர்களுக்குத் தெளிவாகத் தெரியும். தமிழர்களெல்லாரும் பெரும்பாலும் ஹனுமந்த கட்டத்துக்குப் போயிருப்பார்கள் கீழ்மேற்சந்து ஒன்றிருக்கிறதல்லவா ? அதில் கீழ்மேற்கு மூலையிலிருந்து மூன்றாம் வீடு. அந்த வீட்டிற்குச் சிவ மடம் என்று பெயர். யாத்திரைக்காரர்கள் போய்  இறங்கக் கூடிய வீடுகளை மடம் என்கிறார்கள்

 

   வேறு உலகத்திற்கு வந்ததுபோல் உணர்ந்தான் பாரதி. கங்கைக்கரை ஒரு புண்ணியத்தலமாக மட்டுமன்றி அவனுடைய எண்ணங்களைப் புதுக்கிய தலமாகவும் விளங்கியது

Ramamoorthy Ramachandran

unread,
Oct 12, 2021, 7:29:07 PM10/12/21
to Santhavasantham
அருமையான வரலாற்றுப் பதிவு! வளரட்டும்...- புலவர் இராமமூர்த்தி 

Subbaier Ramasami

unread,
Oct 13, 2021, 8:24:08 PM10/13/21
to santhavasantham
தினமொரு பாரதி சிந்தனை 32 13-10-2021
அந்தக் காலத்தில் குழந்தை பிறக்கத் தாமதமானால் முதலில் பிறக்கும் குழந்தை ஆணானால் பிச்சை என்றும் பெண்ணானால் குப்பம்மாள் என்றும் அழைப்பதுண்டு. ஆனால் உண்மைப்பெயர் வேறாக இருக்கும். பாரதியின் அத்தையின் உண்மைப்பெயர் ருக்மணி எனத் தெரிகிறது. ஆனால் குப்பம்மாள் என்று அழைத்தார்கள்.
நெல்லை மாவட்டத்துப் பிராமணர்களில் சிவன் கூட்டம் என்று ஒரு வகுப்பினர் உண்டு. பாரதியின் அத்தை கணவரின் மூதாதையர் எட்டையாபுரத்திலிருந்து தூத்துக்குடி செல்லும் வழியில் உள்ள மாகுளம் என்ற ஊரைச் சேர்ந்தவர்கள். சிப்பாய்ப் புரட்சியை ஒட்டி (1857) எழுந்த வறுமையின் காரணமாக வெங்கடேச சிவன் எனப்படுபவர் அங்கிருந்து காசிக்குச் சென்றார். அங்கே அனுமன் கட்டத்தில் வீடுட்டினார். அந்தவீட்டில் சிவன் கோவிலும் கட்டினார். அந்தச்சிவனுக்குச் சித்தேஸ்வர் என்று அம்பாளுக்கு சித்தேஸ்வரி என்றும் பெயர். அந்தக் கோவிலிலுள்ள ந்தி சற்று விசித்திரமானது. அதன் முதுகில் ஒரு சர்ப்பச்சிலை வளைந்து சிவனைப் பார்ப்பதுபோல் காணப்படுகிறது. வீடு நல்ல விசாலமான வீடு மாடியில் பல அறைகள் உண்டு. அங்கேதான் ஒரு அறையில் பாரதி தங்கினான்.(அந்தப்பகுதிய இணைக்கப்பட்டுள்ள படத்தில் காணலாம்)
அனுமன் கட்டத்திலிருந்து சற்றுத் தொலைவில் இருந்த ஜயநாராயண் ஈண்டர்மீடியட் கல்லூரியில் பாரதி சேர்க்கப்பட்டான். . அங்கே மற்றப்பாடல்களுடன் ஹிந்துஸ்தானியும் சமஸ்கிருதமும் கற்றான். (இப்பொழுதும் ஜயநாராயணன் கல்லூரி இயங்கிவருகிறது. நான் 1978ல் காசிக்குச் சென்றிருந்த போது ஜயநாராயணன் கல்லூரிக்குச் சென்றிருந்தேன். அப்பொழுது கல்லூரியில் ஸ்ட்ரைக். எனவே உள்ளே சென்று விசாரிக்க முடியவில்லை)
காசிக்கு வந்த புதிதில் அந்நகர மக்களின் பழக்கவழக்கங்களும் பேச்சு முறைகளும் ,மொழியும் புதுமையாக இருந்தன. போகப்போக அவை பழகிவிட்டன. அவர்களோடு சரளமாக ஹிந்துஸ்தானியில் பேசும் திறமை பெற்றான். மாலை நேரங்களில் கங்கைக் கரைக்கு உலவச் சென்றுவிடுவான். அங்கே பல சமயக் கூட்டங்களும் அரசியல் கூட்டங்களும் நடைபெறும். பல ஞானிகளும் அறிஞர்களும் அங்கே சொற்பொழிவாற்றினார்கள். அவன் எட்டய்ய புரத்தில் இருந்த போது நாடு அடிமைப்பட்டிருந்த நிலை பற்றிப் படித்தும் அறிந்துமிருந்தான். ஆனால் மக்கள் படும் அவஸ்தைகளை அதிகம் அறியவில்லை. ஆனால் காசி மா நகரில் அரசியல் சொற்பொழிவுகளைக்கேட்டவனுக்குப் பல உண்மைகள் தெரிய வந்தன. நாட்டை எந்த அளவுக்கு அன்னியன் சுரண்டினான் என்ற உண்மையை அறிந்தான். அரசின் கடுமையான சட்டங்களினால் மக்கள் படும் அவதிகளைக் கண்டான். அவன் எண்ணங்களில் புதிய திருப்பம் ஏற்பட்டது

image.png

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
பாரதி வீட்டில் கோவில்.jpg
பாரதி வாழ்ந்த வீடு காசி.jpg
நந்தி முதுகில் பாம்பு.jpg
காசி இல்லம் மாடி.jpg

Subbaier Ramasami

unread,
Oct 15, 2021, 1:18:35 AM10/15/21
to santhavasantham
33   14-10-2021

33
.
எட்டையபுரம் அரண்மனைக்கு வெள்ளையர்கள் வந்து போவதை அவன் பார்த்திருக்கிறான். அப்பொழுது அவர்களைப் பார்த்து வியந்திருக்கிறான். தன் தந்தைக்கு அவர்கள் விளைத்த தீங்கை அறிந்த பின் அவர்கள்மேல் சற்று வெறுப்பு எழுந்தது .ஆனால் காசியில் வெள்ளையர்கள் ஆட்சியின் கொடூரங்களையெல்லாம் சொற்பொழிவுகளில் கேட்ட பிறகும் பத்திரிகைகளில் படித்த பிறகும் வெள்ளையர்களின் அடக்குமுறை அவனைச் சினம் கொள்ள வைத்தது. நாட்டின் விடுதலைக்குத் தான் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தான். அதை எப்படிச் செய்வது என்று தெரியவில்லை.
அங்கு வாழ்ந்த மக்களின் நடையுடை பாவனைகள் அவனை வெகுவாகக் கவர்ந்தன. வட நாட்டில் உள்ளவர்களில் பலர் தமது தலையில் பெரிய முண்டாசு கட்டியிருப்பார்கள். அவன் வாழ்ந்த திருநெல்வேலிப் பகுதியிலும் தலைப்பாகை கட்டுவது வழக்கம். அந்த வழக்கம் பாரதியையும் தொற்றிக்கொண்டது. குடுமியை மறைத்துத் தலைப்பாகை கட்டிக்கொள்ளத் தொடங்கினான். .
செல்லம்மாளின் தமக்கை பார்வதி நன்றாகப் பாடுவாள். பாரதியும் நன்றாகப் பாடுவான். எனவே மாலைப் பொழுதுகளில் பாரதியையும் பார்வதியையும் பாடச்சொல்லிக் கேட்டு மகிழ்ந்தாள் குப்பம்மாள். பூஜா காலங்களில், சில சமயம் கோயிலில் பாடுவதும் உண்டு. அவன் மிகப் பக்தியோடு உணர்ந்து பாடுவதைச் செவிமடுத்த கிருஷ்ண சிவன் மிக மகிழ்ந்தார். சிவ மடத்தில் கீழ்த்தளத்தில் சிவன் கோவிலும் தங்குமிடங்களும் இருந்தன. மேல் தளத்தில் சில அறைகள் இருந்தன. பாரதி பெரும்பாலும் மேல்தளத்தில்தான் இருப்பான். அவனது தந்தை அவனுக்கு வாங்கிக் கொடுத்திருந்த மூன்று பாட்லாக்குகள் கொண்ட ட்ரங்க் பெட்டியைப் பாரதி காசிக்குக் கொண்டு வந்திருந்தான். அதில்தான் தனது துணிமணிகளை வைத்திருந்தான். பாரதி பயன்படுத்தியதாகச் செஒல்லப்படும் டிரங்க் அவன் தங்கியதாகச் சொல்லப்படும் அறையில் வைக்கப்பட்டிருந்தது. 1978 அந்த அறைக்குச் சென்று பார்த்தேன்.

image.png

image.png

இலந்தை
14-10-2021

Subbaier Ramasami

unread,
Oct 15, 2021, 9:05:08 AM10/15/21
to santhavasantham
34

.

பாரதி கட்டுக் குடுமியும் சௌளமுமாக சிவ பூஜையின் போது பக்திப் பரவசத்தோடு பாடும் போது கேட்டவர்கள் நெகிழ்ந்தனர். கிருஷ்ண சிவனுக்குப் பெரிதும்  மகிழ்ச்சி..  ஆனால் அந்த மகிழ்ச்சி வெகுநாள் நீடிக்கப்போவதில்லை என்பதை அப்பொழுது அவர் அறியவில்லை.

பாரதியின் உடன் படித்த மாணவர்கள் பாரதி முகத்தில் மீசை யில்லாமல் இருப்பதைப்பார்த்துக் கேலி செய்தார்கள்.

அதைப்பற்றிப் பாரதி பின்னாளில் எழுதியிருக்கிறார்:

பல வருஷங்களுக்கு முன்பு நான் காசியில் ஜயநாராயணன் கலாசாலை என்ற இங்கிலீஷ் பள்ளிக்கூடத்தில் வாசிக்கப் போனேன். நான் தமிழ்நாட்டிலிருந்து சென்றவனாதலால் , தமிழ் நாட்டில் பிராமணரின் வழக்கப்படி அடிக்கடி முக ஷவரம் செய்துகொண்டிருந்தேன். அப்போது என்னுடன் படித்துக்கொண்டிருந்த பிள்ளைகள் என்னை நோக்கி மிகவும் ஆச்சரியப்பட்டனர். எப்போது பார்த்தாலும் இவன் மீசையைச் சிறைத்து விட்டு வருவதன் காரணம் யாதென்று அவர்களுக்குள்ளே பலநாள் ஆலோசனை செய்து பார்த்தார்கள். அவர்களுக்கெல்லாம் புலப்படவில்லை. கடைசியாக என்னையே ஒருவன் கேட்டுத்தீர்த்தான். ‘உங்கள் குடும்பத்தில் யாரேனும் வாரந்தோறும் செத்துப் போய்க்கொண்டிருக்கிறார்களா?” என்று  என்னிடம் வினவினான். அவன் இங்ஙனம் கேட்டதன் காரணத்தை அறிந்து கொண்டுஅப்படியில்லையப்பா, தமிழ் நாட்டில் பிராமணர் மீசை வைத்துக்கொள்ளும் வழக்கமில்லை என்று சொன்னேன்

 

மற்ற மாணவர்கள் மீசை வைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தான். விஸ்வநாதர் கோயிலிலே பூஜை செய்யும் குருக்கள் மீசை வைத்திருப்பதைப் பார்த்தான். கங்கைக்கரைக் கூட்டங்களில் பேச வரும் தலைவர்கள் மீசை வைத்திருப்பதைப் பார்த்தான்,. அவன் வணங்குகிற சிவனுக்கும் மீசை போட்டுத்தான் கடைகளில் படமாக வைத்திருந்தனர். எனவே மீசை வைத்துக்கொள்வது அனாச்சாரமில்லை என்ற எண்ணம் அவன் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டதுஆண்மகன் என்றால் மீசை வைத்துக்கொள்வது அவசியம் என நினைத்தான்.

 

கங்கைக்கரைக் கூட்டமொன்றில் பேசிய தலைவர் ஒருவர் நாட்டுச் சுதந்திரத்தைப் பற்றி வீராவேசமாகப் பேசினார். நாட்டு விடுதலை பெற வேண்டுமானால் முதலில் தனிமனித சுதந்திரம் அவசியம் என்றார். மூட வழக்கங்களிலும் , வீண் சம்ப்ரதாயங்களிலும் கட்டுண்டு தான் சுயமாக முடிவெடுக்க இயலாதிருக்கிறவன் எப்படி தேச விடுதலையைப்பற்றிப் பேச இயலும் என்ற கேள்வியை எழுப்பினார். பாரதியின் சுய கவுரவத்தை இது உசுப்பிவிட்டதுஅந்த முடிவுக்கு அவன் முதலில் காவு கொடுத்தது அவனது குடுமியைமீசைவைத்துக்கொண்டான். தன்னை யார் என்ன சொன்னாலும் தன் முடிவினின்றும் மாறப்போவதில்லை என்று முடிவெடுத்தான்

 


On Fri, Oct 15, 2021 at 12:19 AM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
33   14-10-2021

33
.

Subbaier Ramasami

unread,
Oct 16, 2021, 6:04:11 PM10/16/21
to santhavasantham

35

மாறிய தோற்றத்துடன் சிவமடத்திற்குச் சென்றான். அவன் தோற்றத்தைப் பார்த்த அத்திம்பேர் கிருஷ்ண சிவன் அதிர்ச்சிக்குள்ளானர். சம்ப்ரதாயத்துக்கு மாறுபட்டு நடக்கும் அவன் முகத்தில் விழிப்பதற்குக் கூட அவர் விரும்பவில்லை. அத்தை குப்பம்மாள்தான் சமாதானப்படுத்தி அவனை வீட்டிற்குள் கூட்டிச் சென்றாள். அன்று முழுதும் ஒருவர் மாற்றி ஒருவர் அவனுக்குப் போதனை செய்தார்கள். ஆனால் சுப்பையா தன் முடிவிலிருந்து மாறப்போவதில்லை என்று தெரிவித்துவிட்டான்அத்திம்பேர் அவன் முகத்தில் விழிக்க விரும்பாததால் அவர் வீட்டில் இல்லாத சமயம் மாடியிலிருந்து கீழே வந்தான். அவனது சாப்பாடு பெரும்பாலும் மாடியிலேயே கழிந்தது

கங்கைக்கரையில் சுற்றினான் . ஒத்த கருத்துடைய நண்பர்களுடன் தேச விடுதலையைப்

பற்றிப் பேசினான்.  

 

வீட்டிற்குச் சரியான சமயத்தில் வராமல் ஊர் சுற்றிக்கொண்டிருக்கும் பேரனைக்கண்டு பாகீரதிப் பாட்டி பெரிதும் வருந்தினாள். அத்திம்பேரின் கோபத்திற்கு ஆளாகிவிட்டானே என்று குப்பம்மாள் அத்தை வருந்தினாள். அவன் ஒழுங்காக அவர் நினைத்த படி இருந்தால் அவனை மேல்படிப்புப் படிக்கவைத்து அவர் வேலை வாங்கிக்கொடுப்பார்ஆனால் சுப்பையா நேர் மாறாக நடந்துகொள்கிறானே என்று வேதனைப்பட்டாள்.

அவனுடைய அப்பனைப்போலவே இருக்கிறான். பஞ்சாலை வேண்டாமென்று சொன்னேன். கேட்டானா. தான் நினைத்ததை நடத்தணும். பிள்ளையும் அப்படியே இருக்கான். விரை ஒண்ணு போட்டா சொரை ஒண்ணா முளைக்கும்?” என்றால் பாகீரதிப்பாட்டி

பிடிவாதம் இருக்கட்டும்மா. பரவாயில்லை. ஆனால் இவன் இராஜத் துவேஷம்னா பண்றான்இது தெரிய வந்தா வெள்ளைக்காரா சும்மா இருப்பாளா? அவன் இங்கே இருக்கிறதனாலே நமக்கும் ஆபத்து வந்திடுமே?” என்று கவலைப்பட்டாள் குப்பம்மாள்.

 

இந்த நிலையிலும் பாரதி அலகாபாத் பல்கலைக்கழகத்தின் நுழைவுத்தேர்வில் முதல் வகுப்பில் தேறினான்வ்

Subbaier Ramasami

unread,
Oct 17, 2021, 8:12:12 PM10/17/21
to santhavasantham
36      17-10-2021

பாரதியின் நடையுடையும் மாறியது. தட்டு வேட்டி பஞ்சகச்சம் ஆகியது. தலையிலே தலைப்பாகை ஏறியது. அசல் வடநாட்டானாக மாறிவிட்டான்.

 

பார்வதியின் கணவன் விஸ்வநாதனுக்குப் பாரதியின் போக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. சிவமடத்திற்கு வந்திருந்த ஊர்க்காரர்கள் மூலம் கடையத்துக்குச் செய்தி சொல்லி அனுப்பினான். அவன் சிறிது காலத்திற்குப் பிறகு கடையம் செல்ல நேர்ந்த போது  செல்லம்மாளைத் தனியாக அழைத்து பாரதியின் தேசத்துரோக நடவடிக்கைகள் பற்றிச் சொன்னான். அதைப்பற்றிபாரதியார் சரித்திரம்என்ற தனது நூலில் பாரதியின் மனைவி செல்லம்மா விரிவாக எழுதியிருக்கிறாள்.

பாரதியார் காசியில் படித்துக்கொண்டிருந்தபோது ஒரு சமயம் ஸ்ரீ விஸ்வநாத சிவன் (எனது தமக்கை புருஷர்) கடையம் வந்தார். . ஒருநாள் என்னைத் தனியே அழைத்து உன் புருஷன் மகாபுத்திசாலியாயினும் அவன் செய்யும் காரியங்கள் மூலமாக நீ கஷ்டந்தான் அனுபவிக்க வேண்டுமென்று எனக்குத் தோன்றுகிறது. அவனுக்கிருக்கும் தாய்நாட்டு அபிமானமும் சுதந்திர ஆவலும் கட்டுக்கடங்காதவை. அவை வெளியில் தெரிந்தால் அவன் சர்க்காரின் கோபத்திற்கு ஆளாகக் கூடும் என்று விஷயமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.தேசத்தை முன்னுக்குக் கொண்டுவர வேண்டும், அதற்கு எந்தத் தியாகமும் செய்ய ஒவ்வொரு வாலிபனும் தயாராயிருக்கவேண்டும் என்பதுதான் அவனுடைய நினைப்புஎன்றார். இவ்விஷயம் என்னைத் தூக்கிவாரிப் போட்டது(பாரதியார்சரித்திரம்- செல்லம்மா பாரதி- அத்-8)

 

அவர்கள் அங்குச் சென்று சொன்ன செய்தியைக்கேட்ட செல்லம்மாளின் அண்ணன் அப்பாத்துரை  பதறிப்போனார். தந்தை செல்லப்பா அய்யர் செல்லம்மாளை பாரதிக்குக் கடிதம் எழுதச் சொன்னார்அப்பாத்துரையும்செல்லம்மாளும் நன்கு ஆலோசித்துக் கடிதத்தில் என்ன எழுதுவது என்று தீர்மானித்தார்கள். .செல்லம்மா கடிதம் எழுதி அனுப்பினாள்.

 

  . பார்வதி அந்தக் கடிதத்தை பாரதியிடம் கொடுத்துஉங்க ஆத்துக்காரி முதல் முதல்லே கடுதாசி எழுதியிருக்கா. படியுங்கோஎன்று சொல்லிக் கொடுத்தாள்.. அதை வாங்கிப்படித்த பாரதி குலுங்கக் குலுங்கச் சிரித்தான். முதன் முதல் கணவனுக்கு மனைவி எழுதிகிற கடிதத்தில் ஆசையாக எதாவது எழுதியிருப்பாள் என்று பார்த்தால்  அப்படி எதையும் காணோம். அவன் தேசத்துரோகச் செயல்களில் ஈடுபடுவதாகவும் அது அவளுக்குக் கவலையைக் கொடுப்பதாகவும் அவனைத் தீவாந்திர சிக்ஷைக்கு ஆளாக்கிவிடுவார்களோ என்று பயப்படுவதாகவும் ஜாக்கிரதையாக இருக்கும் படியும் எழுதியிருந்தாள் அதுவும் அவளாக எழுதியிருக்க மாட்டாள். யாரிடமோ கொடுத்து எழுதச் சொல்லியிருக்கிறாள் என்று நினைத்தான்  

 

பாரதி அவளுக்குப் பதில் எழுதினான்.

 

எனதருமைக் காதலி செல்லம்மாளுக்கு

ஆசீர்வாதம்.

உன் அன்பான கடிதம் கிடைத்தது. நீ எனது காரியங்களில் இத்தனை பயப்படும் படியாக நான் ஒன்றும் செய்யவில்லைவிஸ்வநாதன் அநாவசியமாக உனக்குப் பயத்தை விளைவித்திருக்கிறான். நான் எப்போதுமே தவறான வழியில் நடப்பவனல்லன்.. இதைப் பற்றி உன்னைச் சந்திக்கும் சமயங்களில் கூறுகிறேன். நீ இந்த மாதிரி கவலைப்படும் நேரங்களில் தமிழை நன்றாகப் படித்து வருவாயானால் நான் ரொம்பவும் சந்தோஷமடைவேன்.

                                                                                    உனதன்பன்

                                                                                    சி. சுப்ரமணிய பாரதி.

Subbaier Ramasami

unread,
Oct 19, 2021, 9:17:20 PM10/19/21
to santhavasantham

ஒரே வீட்டில் இருந்தாலும் கிருஷ்ணசிவன் அவனைப் பார்ப்பதைத் தவிர்த்தார்அவரோடு ஒரே பந்தியில் சாப்பிடுவதற்கு அவனுக்கு அனுமதியில்லை.

 

அந்தச் சமயத்தில் ஆருத்ரா தரிசனம் வந்தது. சிவ மடத்தில் ஆருத்ரா தரிசனம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும்.   காலை 4 மணிக்கெல்லாம் பூஜை தொடங்கிவிட்டது . உதயத்துக்குள் பூஜை முடிந்தாகவேண்டும். சிவ மடத்தில் உள்ளவர்களும் , சிவ மடத்திற்கு வந்தவர்களும் அங்கே குழுமியிருந்தனர். முறைப்படி பூஜைகள் முடிந்த பிறகு ஆடல்வல்லானுக்குப் ப்ரீதியான நான்கு வேதங்கள் சொல்ல வேண்டும் . கிருஷ்ண சிவன்ரிக்வேதம் அவதாரயாஎன்றார். அருகில் நின்ற சாஸ்த்ரிஉடனேஅக்னிமேளே புரோகிதம்..” என்று தொடங்கி ரிக்வேத ஸ்லோகம் ஒன்றைச் சொன்னார். இப்படியே நான்கு வேத சுலோகங்ளின் அவதாரிகைகளும்  சொல்லப்பட்டன. பிறகுதிராவிட வேதம் அவதாரயாஎன்றார். திராவிட வேதம் என்றால் தேவாரம் முதலிய தமிழ்ப்பாடல் பாட வேண்டும். வழக்கம் போல் ஓதுவார் வந்திருப்பார் என்ற நினைவில் சொல்லிவிட்டார்ஆனால் என்ன காரணத்தாலோ ஓதுவார் வரவில்லை. திராவிட வேதம் அவதாரயா என்று சொல்லி விட்ட பிறகு தமிழ்ப்பாடல் பாடாமல் இருக்கக்கூடாது. பொழுது விடியும் நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது வந்திருந்த எவருக்கும் திருவெம்பாவையோ தேவாரமோ பாடத் தெரியவில்லை. இவற்றையெல்லாம் மாடியிலிருந்து சுப்பையா பார்த்துக்கொண்டிருந்தான். காலையிலேயே அவனும் குளித்துவிட்டுப் பூஜையைக் கவனித்துக் கொண்டிருந்தான். அவனுக்குத் திருவெம்பாவை, தேவாரம் தெரியும். ஆனால் அவன் கீழே போனால் அத்திம்பேர் சினம்கொள்வார். மேலே இருந்தே பாடலாமா என்று தெரியவில்லை. நிலைமையைச் சமாளிப்பதற்காக அத்தை மேலே வந்தாள்

சுப்பையா, நோக்குத் திருவெம்பாவை தெரியுமோன்னோ? வா, கீழே வந்து பாடு . “ என்றாள்.

அத்திம்பேருக்குப் பிடிக்காதுஎன்றான் சுப்பையா

இந்தச் தர்மசங்கடத்திலிருந்து நீ தான் காப்பாற்றவேண்டும். இந்தா விபூதியைக் குழைத்துப் பூசிக்கொள். பஞ்சகச்சம் கட்டிக்கொண்டு மேலே அங்கவஸ்த்திரம் போட்டுக்கொண்டு கீழே வாஎன்றாள்.

 

அத்தை சொன்னது போலச்செய்து சுப்பையா கீழே வந்தான்குப்பம்மாள் சைகை செய்தாள். கம்பீரமான  குரலில் சுப்பையா திருவெம்பாவை பாடினான். கிருஷ்ண சிவன் நிமிர்ந்து பார்த்தார். நாத்திகனாக மாறிக்கொண்டிருக்கிறான் என்று தான் நினைத்த சுப்பையாவா அப்படிப் பாடுகிறான்!. கிருஷ்ண சிவன் கண்களை மூடிக்கொண்டார். அந்த ஆடல்வல்லான் சுப்பையாவின் பாடலைக்கேட்டு நடனம்,ஆடுவதாகக் கிருஷ்ண சிவன் மனக்கண்ணில் தோன்றியது. திருவெம்பாவையில் இரண்டு பாடல்கள் பாடி முடிந்ததுசுப்பையா, தேவாரம் பாடுஎன்றாள் குப்பம்மாள். அன்று ஆருத்ரா தரிசனமல்லவா? அதற்கு ஏற்றாற்போல்

குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்என்ற பாடலைப்

பாடினான்.

 

நேயர் விருப்பம் அதிகமாகியது.இன்னும் பாடச் சொன்னார்கள்.

நேரமாகிறதுபூஜையெல்லாம் முடிந்த பிறகு சுப்பையா பாடுவான்என்றாள் குப்பம்மாள்.

 

அற்புதமாகப் பாடிய சுப்பையா கேட்டவர்களையெல்லாம்  மயக்கிவிட்டான். அவன் தன் மருமான் என்பதில் பெருமைப்பட்டாள் குப்பம்மாள். பூஜை முடிந்த பிறகு கிருஷ்ண சிவன் கோவிலுக்குள்ளிருந்து வெளியே வந்து சுப்பையாவைக் கட்டிக்கொண்டார்.

சுப்பையா நீ ஞானிநாங்களெல்லாம் அஞ்ஞானிகள். எங்களுக்குத்தான் வேஷங்கள் தேவைஇனி நீ எங்களோடேயே சாப்பிடலாம்என்றார்.

 

அந்தக் குழந்தையைத் தேவையில்லாமல் அதுவரை கஷ்டப்படுத்திவிட்டோமே என்று கண்கலங்கினார்..

 

அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சிவ மடத்தில் ஒரு சுமுகமான சூழ்நிலை நிலவியது.

நாளைய இடுகையில் பார்ஹியைக் கவர்ந்த ஒரு ஹிந்திக் கவிஞனைப் பற்றிப் பார்க்கப்போகிறோம். பாரைக்கும் அவருக்கும் உள்ள ஒற்றுமையையும்  எப்படி இருவரும் அந்தந்த மொழிய்காளில் கவிதை மறுமலர்ச்சியைக் கொணர்ந்தார்கள் என்பதையும் அந்தக்கவிஞரின் கவிதைத்தாக்கம் எப்படிப் பாரதி கவிதைகளில் உணரப்படுகிறது என்பதைப் பற்றியும் பார்க்கப்போகிறோம்

Lalitha & Suryanarayanan

unread,
Oct 19, 2021, 9:48:59 PM10/19/21
to santhav...@googlegroups.com
சிந்தனை அருமையாகச் செல்கிறது.

சிவசூரி.

Subbaier Ramasami

unread,
Oct 20, 2021, 11:51:52 AM10/20/21
to santhavasantham
தினமொவ்ரு பாரதி சிந்தனை
38 20-10-2021
பாரதி காசியில் அவரது அத்தை வீட்டில் வாழ்ந்த சமயத்தில் காசியில் வாழ்ந்து மறைந்த ஒரு இளங்கவிஞரின் ஹிந்திக் கவிதைகள் மக்களால் எங்கும் பரவலாகப் பேசப்பட்டன. அவர் எழுதிய நாடகங்கள் சிறுவரிலிருந்து பெரியவர்கள் வரை மேடையில் நடிக்கப்பட்டன. பாரதி அவற்றைப் பார்க்க நேர்ந்தது. கவிதைகளைப் படிக்க நேர்ந்தது. சமுதாய எழுச்சி மிக்க எழுத்துகள். ஏழைமக்களின் வாழ்க்கையைப் பிரதிபலித்த எழுத்துகள். பண்டித ஹிந்தியை விடுத்துப்
பாமரமக்களின் மொழியில் எழுதப்பட்டவை. ஹிந்தி மொழிக்கு மறுமலர்ச்சியைக் கொடுத்தவை அவரது எழுத்துகள் பாரதியைக் கவர்ந்தன அவர் எழுதியுள்ள அந்தேர் நகரி என்னும் நாடகம் ஒரு அரசியல் அங்கத நாடகம். அந்த நாடகத்தில் பாரதி அரசனாகவும் பாரதியின் அத்தைமகன் கேதாரம்(அவரது தங்கை லக்ஷ்மியின் கணவன்) மந்திரியாகவும் நடித்திருந்தார்கள் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வீட்டில் வெகு காலம் இருந்ததாக அவர் உறவினர் எழுதியிருக்கிறார்
“பாரதியார் நாடகத்துல கூட நடிச்சிருக்கார் தெரியுமா? பாரதேந்து ஹரிஷ்சந்த்ரர் - அப்படீன்னு ஒரு கவி. நாடகக் கலைஞர் - அவரும் தேசத்துக்காகப் பாடுபட வேண்டுங்கிற சிந்தை உள்ளவர். அவர் எழுதின நாடகத்திலெல்லாம் நடிச்சிருக்கார். அதெல்லாம் ஹிந்தி நாடகங்கள். அதுலயும் சாதாரண ரோல்லலாம் நடிக்கல. ராஜா வேஷம்தான் கட்டியிருக்கார் - என்னோட தகப்பனார் அவருக்கு மந்திரியாக நடிச்சிருக்கார். அதோட போட்டோ கூட எங்காத்துல ரொம்ப நாள் இருந்தது.~
சரி, இனி பாரதேந்துவைப் பற்றியும் அவருடைய எழுத்தின் தாக்கம் பாரதியில் அங்கங்கே காணப்படுவதையும் பற்றிப் பார்க்கலாம்
ஹரிச்சந்த்ரா 9-11-1850ல் பிறந்து 6-1-1885 ல் மறைந்த கவிஞர் அவர். காசியை சேர்ந்தவர். அவரது தந்தையும் ஒரு கவிஞர். ஹரிசந்த்ரா 5 வயதிலேயே ஹிந்தியில் கவிதை எழுதியதாகச் சொல்லப்படுகிது. அவரது கவிதையைக் கேட்ட அவரது தந்தை நீ பின்னாளில் மகாகவியாக விளங்குவாய் என்று வாழ்த்தியிருக்கிறார். அவரது தந்தை அவரது 10 வயதில் மைந்துவிட்டார். அவர் எப்பொழுதும் கவிதை எழுதுவதைப்பார்த்த அவரது தாய் அவரைத் திட்ட அவர்~எனக்குத் தொழில் கவிதை~ என்று சொல்லியிருக்கிறார். 13 வயதிலேயே திருமணம் நடந்திருக்கிறது. அதற்கு முன் அவர் காதலித்த பெண் மல்லிகாவை மறக்கமுடியாமல் அவளைத் திருமணம் செய்துகொண்டுள்ளார். அவள் மீது பல காதல் கவிதைகள் எழுதியிருக்கிறார். 15வயதில் பூரி சென்ற அவர் வங்காளிகளின் சமுதாய எழுச்சியால் கவரப்பட்டு அவ்வழியில் எழுதத்தொடங்கினார். 18வயதில் முதல் நாடகம் எழுதினார். அவரது கவிதைகள் ஹிந்தி இலக்கியத்தின் மறுமலர்ச்சி எனப் போற்றப்படுகின்ற்ன. அவர் எழுதியிருக்காவிட்டால் ஹிந்தி இலக்கியம் என்னவாகியிருக்குமோ என அறிஞர்கள் சொல்கிறார்கள். 1870-1885 காலத்தை பாரதேந்து யுகம் என்று சொல்கிறார்கள். தாய்மொழிப்பற்றே அனைத்திலும் உயர்ந்தது என்றார் அவர்
~நிஜ பாஷா உன்னதி அஹை சப் உன்னதி கோ மூல்~ என்ற அவரது கவிதை பல மேடைகளில் மேற்கோளாகச் சொல்லப்படுகிறது
தாய்மொழியின் முன்னேற்றமே மற்ற முன்னேற்றங்களுக்கு மூலம்
தாய்மொழி ஞானம் இல்லையென்றால் அது இதயத்தின் அலங்கோலம்
என்றார் அவர்.
விவித கலா சிக்ஷா அமித் ஞான் அனேக் ப்ரகார்
சப் தேசன்ஸே லை க்ரஹு பாஷா மாஹி ப்ரச்சார்
Many arts and education infinite, knowledge of various kinds.
Should be taken from all countries, but be propagated in one's mother tongue.
இது அப்படியே பாரதியின்
சென்றீடுவீர் எட்டுத்திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்பதில் இறங்கியிருப்பதைக் காணலாம்
30 வயதில் ஹரிச்சந்த்ராவுக்கு பாரதேந்து( பாரதத்தின் சந்திரன்)என்னும் பட்டத்தைக் காசிப்புலவர்கள் கொடுத்தனர்.
பாரதேந்து சமுதாயத்தில் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தக்கூடிய பல நாடகங்கள் எழுதியிருக்கிறார். 4 பத்திரிகளுக்கு ஆசிரியாராகத் திகழ்ந்தார். குழந்தைகளுக்காகப் பள்ளி நடத்தி அவர்களுக்காக எழுதியிருக்கிறார். பாடத்திட்டம் வகுத்துக் கொடுத்திருக்கிறார்.
அவருடைய நாடகங்களில் சில
பாரத் துர்தஷா, சத்ய ஹரிசந்த்ரா, நீல்தேவி(பெண்ணுரிமைக்கான நாடகம்) அந்தேர் நகரி
அந்தேர் நகரி சௌபட் ராஜா ஒரு முட்டாள் ராஜா. அவன் எப்படி ஆணையிடுகிறான் என்பதை நகைச்சுவையோடு காட்டும் நாடகம். இது ஒரு அங்கத நாடகம்.ஆங்கில அரசின் அடக்குமுறையை மறைமுகமாகச் சாடும் நாடகம் இதைப் பார்க்கிறபோது சின்னச்சங்கரன் கதையின் மஹாராஜா நினைவுக்கு வரும்
கீழ்க்காணும் இணைப்பில் அந்த நாடகத்தைப் பார்க்கலாம்.
ஆங்கிலேயெரைப் புகழ்வதுபோலப் புகழ்ந்து அடுத்த அடியிலேயே தூக்கிக் கீழே போடுவது அவரது எழுத்து
அங்கரேஜ் ராஜ் ஸுக ஸாஜ ஸஜே ஸப் பாரீ
ஆங்கில ஆட்சியில் நாம் சகலவித சுகங்களும் பெற்று வாழ்கிறோம் என்று கூறி அடுத்த அடியிலே வேதனை தொனிக்கப் பாடுகிறார் -
பை தன் விதேஷ் சலி ஜாத் இஹை அதி க்வாரீ
ஆனால் நம் செல்வமெல்லாம் அயல்நாடு செல்கிறதே இதுவே பெரும் கவலை என்கிறார்.
பாரதேந்துவைப் பற்றி பாரதி எங்கேயாவது எழுதியிருக்கவேண்டும். என் கண்ணில் படாதிருக்கலாம். அல்லது கிடைக்காமல் போயிருக்கலாம்
பாரதேந்து தான் வாழ்ந்த 34 வயதுக்குள் , ஒரு மனிதன் இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவு எழுதியிருக்க முடியுமா என்று சொல்லுமளவுக்கு எழுதியிருக்கிறார். பாரதியும் அப்படியே! பாரதிக்கு இருந்த அளவு தேசபக்தி அவருக்கு இருந்ததா எனச்சொல்லமுடியாது. ஆனால் இலக்கிய மறுமலர்ச்சியைக் கொணர்ந்ததிலும் எளியவர் மொழியில் எழுதியதிலும் உரைநடையில் புதுமை புகுத்தியதிலும் பெண்ணுரிமைக்குக் குரல் கொடுத்திலும் குழந்தைகளின் கல்வியில் அக்கறை காட்டியதிலும் தாய்மொழியைப் போற்றியதிலும் நல்ல ஒற்றுமையைக் காண்கிறோம். இவரும் மீசை வைத்திருந்தார். பாரதி தலைப்பாகை அணிந்திருந்தார். ஆனால் பாரதேந்து குல்லாப் போட்டிருந்தார்.
image.png

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Swaminathan Sankaran

unread,
Oct 20, 2021, 1:49:28 PM10/20/21
to santhav...@googlegroups.com
பாரதேந்து ஹரீஸ்ச்சந்திராவைப் பற்றி அருமையான தகவல். நன்றி.

சங்கரன்  

Niranjan Bharathi

unread,
Oct 20, 2021, 9:42:29 PM10/20/21
to santhav...@googlegroups.com

மதிப்பிற்குரிய இலந்தை ஐயா,

தங்களுடைய "தினமொரு பாரதி சிந்தனை" பதிவு  மேலும் மேலும்  ஆர்வத்தைத் தூண்டி  அன்போடு நம் கைபிடித்து அழைத்துச் செல்லும் தன்மையைக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு பதிவின் முடிவிலும் அடுத்த பதிவு எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பையும் எகிற செய்கிறது. இயல்பான நடையில் நீங்கள் நிகழ்வுகளைச் சொல்லிச் செல்வது மிக அருமை 👌👌👌

பாரதியார் காசியில் இருக்கும் போது, ஒரு சமயம் ஆதிரைத் திருநாளன்று சிவன் கோவிலில் ஓதுவார் இல்லாமல் போனதால் தானே "திருவெம்பாவை" பாடிய நிகழ்வை எழுதியிருந்தீர்கள்.

திருவெம்பாவையைப் பாடி முடித்த கையோடு "பாரதியாரும் சுப்பு பாட்டி என்ற மூதாட்டியும் சேர்ந்து 'பார்க்கப் பார்க்கத் திகட்டுமோ உன்றன் பாத தரிசனம்' என்ற நந்தன் சரித்திரக் கீர்த்தனையை உருக்கமாகப் பாடினார்கள்" என்ற தகவலைச் செல்லம்மா பாரதி தனது "பாரதியார் சரித்திரம்" நூலில் பதிவு செய்திருக்கிறார்.

பாரதியார் "பாரதேந்து ஹரிஸ்சந்திரா" எழுதிய இந்தி நாடகத்தில் நடித்திருக்கிறார் என்ற தகவல் புதிது.  அதை அறியச் செய்ததற்கு நன்றி ஐயா. இதன் ஊடே இந்தி மறுமலர்ச்சிக் கவிஞர் பாரதேந்து ஹரிஸ்சந்திரா பற்றியும் அவர் பாரதி மீது செலுத்திய தாக்கத்தையும் தங்களால் அறிந்துகொள்ள முடிந்தது.  இந்த நாடகத்தில் பாரதி அரசனாகவும் பாரதியின் தங்கை லட்சுமியின் கணவர் கேதாரம் அமைச்சராகவும் நடித்தனர் என்பதைப் பற்றி கேதாரத்தின் மகன் எழுதியிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தீர்கள்.  அவர் எந்த நூலில் அல்லது கட்டுரையில் அவ்வாறு எழுதியிருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளும் ஆவலைத் தாள முடியவில்லை 😊😊  ஆதலால் தான் கேட்கிறேன் 😊😊 அதை அறியத் தாருங்கள் 🙏🙏🙏🙏

அன்புடன்,

Subbaier Ramasami

unread,
Oct 20, 2021, 10:15:17 PM10/20/21
to santhav...@googlegroups.com
கட்டுரையை எவரும் படிக்கவில்லை என்று நினைத்து இந்தக்கட்டுரையோடு இங்கே நிறுத்திவிடலாம் என்று நினைத்திருந்தேன். நீ படிப்பது தெரிந்து மகிழ்ச்சி. தொடர்கிறேன். முக நூலில் நல்ல வரவேர்பிருக்கிறது.

அவர் ஏதோ பத்திரிகையில் எழுதியது . இதை மட்டும் குறித்து வைத்திருந்தேன். அவர் நாடகத்தில் நடித்ததாக மட்டும்தான் குறித்திருந்தார். எந்த நாடகம் என்று குறிப்பிடவில்லை. அந்தக்காலத்தில் இராஜா மந்திரி பிரபலமாக இருந்தது  இந்த அந்தேர் நகரி நாடகத்தில் தான். காசியில் இந்த நாடகம் இளைஞர்களால் அடிகடி நடத்தப்பட்டது என்று படித்தேன். அதனால் இந்த நாடகத்தில்தான் அவர் நடித்திருக்க வேண்டுமென்பது என் அனுமானம். அந்தக் கட்டுரையில் இது என் ஊகம் என்று கொடுத்திருக்கவேண்டும்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Girija Varadharajan

unread,
Oct 20, 2021, 10:21:51 PM10/20/21
to santhav...@googlegroups.com
அன்புள்ள இலந்தை,

விடாமல் தொடர்ந்து,  ஒரு வித எதிர்பார்ப்புடன் படித்து வரும் பலரில்  அடியேனும் ஒருவன்.
பின்னூட்டம்  இடாமல் இருந்ததற்கு வருந்துகிறேன்

அகிவ


From: santhav...@googlegroups.com <santhav...@googlegroups.com> on behalf of Subbaier Ramasami <kavim...@gmail.com>
Sent: Thursday, October 21, 2021 10:16:50 AM
To: santhav...@googlegroups.com <santhav...@googlegroups.com>
Subject: Re: தினமொரு பாரதி சிந்தனை
 

Niranjan Bharathi

unread,
Oct 20, 2021, 10:36:30 PM10/20/21
to santhav...@googlegroups.com
நன்றி இலந்தை ஐயா ☺️☺️☺️☺️
அடுத்த பதிவுக்காகக் காத்திருக்கிறேன் 🙏🙏🙏

Lalitha & Suryanarayanan

unread,
Oct 20, 2021, 11:13:10 PM10/20/21
to santhav...@googlegroups.com
20 ஆம் தேதி நானும் எழுதியிருந்தேன்.
 
சிவசூரி.

Subbaier Ramasami

unread,
Oct 21, 2021, 12:12:23 AM10/21/21
to santhav...@googlegroups.com

.39- 21-10-2021


சுதந்திரப் போராட்டத்தில் காசியின் பங்கு அதிகம். 1781ல் ராஜ ஜைட் சிங்  கவர்னர் ஜெனெரல் வாரன் ஹேஸ்டிங்ஸ் படையைத் தோற்கடித்தார். அதற்காகப் பழிவாங்கப்பட்டார். மறைந்து வாழ நேர்ந்தது. இராணி லக்‌ஷ்மிபாய் தான்.பிறந்தது காசியில்தான். சிப்பாய்ப் புரட்சியில் காசியின் பங்கு மிக மிக அதிகம்.  பாரதி காசியில் வாழ்ந்த காலத்தில் அன்னிபெஸண்ட் அம்மையார் காசியில் இருந்தார். 1898ம் ஆண்டு செண்ட்ரல் ஹிண்டு காலேஜ் அவரால் தொடங்கப்பட்து. அங்கு அன்னிபெஸண்டைச் சந்தித்துப் பாரதி பேசியதாக அவர் உறவினர் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

காசியில் அடிக்கடி  சுதந்திர எழுச்சிப் போராட்டங்கள் நடக்கும். பாரதி அவற்றைப் பார்க்கவும்  பேச்சுகளைக் கேட்கவும் நேர்ந்தது. வெள்ளையர்களின் அசதியின் காரணமாகத்தான் தன் தந்தை இறந்தார் என்பதால் வெள்ளையர்மேல் பாரதிக்குக் கோபம் எழுந்ததுண்டு. ஆனால்  காசியில் தான்  மக்கள் எவ்வாறு கொடுமைப்படுத்தப் பட்டார்கள் என்பதை  சுதந்திரப்போராட்ட வீர்களின் பேச்சிலிருந்து  அறிந்தான். அது அவனைக் கொதிப்படையச் செய்தது. அந்தக் கால கட்டத்தில் கர்ஸான் வைஸ்ராயாய்  இருந்தான். அவன் கொடூரமானவன் .
 

 

1903ம் ஆண்டு ஜனவரியில்  ஏழாம் எட்வர்ட் இந்தியாவின் சக்கரவர்த்தியாகப் பொறுப்பேற்றார். அந்த நிகழ்ச்சியைக் கொண்டாடும் வகையில் அப்பொழுது வைஸ்ராயாக இருந்த லார்ட் கர்ஸான் மிகப்பெரிய அளவு தர்பார் நடத்த விரும்பினார். தர்பார் திடல் ஒன்று டெல்லியில் உருவாகியது. தானே முன்னின்று எல்லா ஏற்பாடுகளையும் கர்ஸான் கவனித்தார்இந்தியாவில் அப்பொழுது சிற்றரசர்களாக இருந்த 63 அரசர்களும் தங்கள் அலங்கார வரிசைகளுடன் வந்திருந்து விழாவில் கலந்துகொள்ள வேண்டுமென்று கர்ஸான் உத்தரவிட்டார். சிற்றரசர்கள் தவிர ஜமீந்தார்களாக இருந்தவர்களுக்கும் அழைப்புப் போயிற்று.. எல்லோரும் குடும்பத்தோடு அவ்விழாவில் கலந்து கொள்ளப் புறப்பட்டனர். எட்டையபுரம் ஜமீந்தார்  டெல்லி தர்பாரில் கலந்து கொள்ள முடிவுசெய்தார். முதலில் மனைவி காசி கண்ணப்பாவை காசிக்கு அனுப்பிவைத்தார். அங்கே சிவமடத்தில் அவரும் அவருடன் வந்தவர்களும் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஜமீந்தாரிணிக்குப் பாரதியை நன்கு தெரியும் என்றாலும் அவர் அங்கு இருந்த நாட்களில் அவரைச் சந்திப்பதைப் பாரதி தவிர்த்தான். காசியில் விலையுயர்ந்த பட்டுப்புடவைகள் அணிமணிகள் வாங்கினார் ஜமீந்தாரிணி. அங்கிருந்து டெல்லிக்குக் கிளம்பிச் சென்றார். ஜமீந்தார் நேரடியாக டெல்லிக்குச் சென்று விட்டார்.  1903க்கு முன்னும் அதற்குப் பின்னும் தர்பார்கள் நடந்ததுண்டு. ஆனால் 1903ல் கர்ஸான் நடத்திய  தர்பாரைப்போல வேறொன்றும் அமையவில்லை என்று வரலாறு பேசுகிறது. ஏழாம் எட்வர்ட் அதில் கலந்து கொள்ளவில்லை. அவர் சார்பில் அவரது சகோதரர் ட்யூக் ஆஃப் கன்னாட் கலந்து கொண்டார். ஹைதராபாத் நவாப்பின் தலைமையில் ‘63 தேசத்து மஹாராஜாக்களும்ஒருவர்பின் ஒருவராக அவர்களுக்கென்று நியமிக்கப்பட்ட வரிசையில் ஊர்வலமாகச் சென்றனர். அவர்களுக்குப் பின்னே ஜமீந்தார்கள் சென்றனர். ஒருவாரம் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின் ஆடம்பரத்தையும் கோலாகலத்தையும் பத்திரிகையில் படித்த பாரதிக்குக் கடும். கோபம் தலை தூக்கியது. இந்திய மக்களின் பணத்தை  எப்படியெல்லாம் வீணடிக்கிறார்கள் என்று வேதனைப்பட்டான். வெறும் ஆடம்பரத்திற்காகவும் ஆங்கில அரசி அளிக்கும் காகித கௌரவத்திற்காகவும் மஹாராஜாக்களும் ஜமீந்தார்களும் ஆங்கிலேயனுக்கு அடிமை போல நடந்து கொண்டதைக் கண்டு மனம் நொந்தான்

ஒவ்வொரு சுதேச மன்னரும் தமது ஆடையலங்காரத்தையும் செல்வ வளத்தையும் காட்டுவதற்காக யானைகளை அலங்கரித்து அதன் மேல் நகைக்கடையாக உலா வந்தார்கள். 48 யானைகள் அணிவகுப்பில் கலந்துகொண்டன. இதையெல்லாம் பத்திரிகைச் செய்தில் படித்தான் பாரது. யாருக்காக  அந்த டர்பார் நத்தப்பட்தோ அந்த இங்கிலாந்து மன்னர் அதில் கலந்துகொள்ளவில்லை. அவருடைய பிரதிநிதியாக ட்யூக் ஆஃப் கன்னாட் கலந்துகொண்டார்.  சக்கரவர்த்தியைப் பாராட்டிக் கவிதை எழுதியவர்களுக்கெல்லாம் பரிசு வழங்கப்பட்டது. என்ன எழுதினார் என்பதை வித் தன் அடிமைப்புத்தியைக் கவிதை எழுதி வெளிப்படுத்திக்கொண்டார் என்பதற்காகத் தான் பரிசு.  பாரதியின் எரிச்சல் அதிகமாகியது

. அந்த விழாவில் கலந்து கொண்ட மகிழ்ச்சியோடு எட்டையபுரம் ஜமீந்தார் காசிக்கு வந்தார்.

 அங்கே சுப்பையாவும் ஜமீந்தாரும் சந்தித்துக் கொண்டார்கள். சுப்பையா ஆங்கிலமும் ஹிந்தியும் மிகச்சிறப்பாகப் பேசுவதைக் கண்டார் ஜமீந்தார். அவனைத் தன்னுடன் வந்துவிடுமாறும் அவனுக்குச் ஜமீனில் உரிய வேலைபோட்டுத் தருவதாகவும் அவன் மற்றவர்களைப்போல் கைகட்டி நிற்கவேண்டிய அவசியம் இல்லையென்றும் சொன்னார்.



Subbaier Ramasami

unread,
Oct 21, 2021, 12:15:46 AM10/21/21
to santhavasantham
தர்பாரில் லார் கர்ஸனை ஏற்ற யானை படுத்துக் கிடக்கிறது.  2      சுதேச மன்னர்களின் யானை அணிவகுப்பு 

image.pngimage.pngவ்

Niranjan Bharathi

unread,
Oct 21, 2021, 3:46:01 AM10/21/21
to santhav...@googlegroups.com

இலந்தை ஐயா,

பாரதியார் 1902 ஆம் ஆண்டே காசியிலிருந்து எட்டயபுரத்துக்குத் திரும்பிவிட்டார்.  1903 அன்று.

எனவே, டெல்லி தர்பாருக்கு எட்டயபுரம் மகாராஜா சென்ற ஆண்டு 1902 ஆம் ஆண்டாகவே இருத்தல் வேண்டும். 

Subbaier Ramasami

unread,
Oct 21, 2021, 10:11:33 AM10/21/21
to santhav...@googlegroups.com
தர்பார் 29-12-1902  முதல் 10-1-1903 வரை நடந்தது. ஜனவரி 1ந்தேதேதிதான் பெரிய விழா. அது முடிந்து ஜமீந்தார்  2ந்தேதி வாக்கில்காசிக்குக்கிளம்பி வந்து பாரதியை அழைத்து வந்திருக்கவேண்டும். எனவே 1903 ம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் பாரதி காசியிலிருந்து புறப்பட்டதாகக் கொள்ளவேண்டும்.

இலந்தை

On Thu, Oct 21, 2021 at 2:46 AM Niranjan Bharathi <niranjan...@gmail.com> wrote:

இலந்தை ஐயா,


Subbaier Ramasami

unread,
Oct 21, 2021, 8:54:01 PM10/21/21
to santhavasantham
தினமொரு பாரதி சிந்தனை

40   21-10-2021

இந்த நிகழ்ச்சிக்குச் சில நாட்களுக்கு முன்பு செல்லம்மாள் வயதுக்கு வந்துவிட்ட செய்தி கிடைத்தது.  

பாரதி செல்லம்மாளைக் காசிக்கு அழைத்துவர விரும்பவில்லை. எனவே ஜமீந்தாரின் அழைப்பு அவனது எண்ணத்திற்கு உகந்ததாகத் தெரிந்ததுசெல்லம்மா வயதுக்கு வந்துவிட்டதால் இனியும் சுப்பையாவைக் காசியில் வைத்துக்கொண்டிருப்பது உசிதமில்லை என்று அத்தை குப்பம்மாள் சொன்னாள் கிருஷ்ண சிவனும் அவன் எட்டையபுரம் சென்று செல்லம்மாளுடன் வாழ்க்கை நடத்துவதுதான் சரியென்று சொன்னார். பேரனுக்குச் ஜமீனில் உத்தியோகம் கிடைக்கப் போவதை

அறிந்து பாகீரதிப்பாட்டி மகிழ்ந்தாலும் அவனை விட்டுப்பிரிய வேண்டியிருக்கிறதே என வருத்தப்பட்டாள். தனக்கும் வயதாகிவிட்து, இனிச் சுப்பையாவைப் பார்க்கமுடியுமோ இல்லையோ என்று மனம் கலங்கினாள்செல்லம்மாளின் தமக்கை பார்வதி அவனை எட்டையபுரத்துக்கே சென்றுவிடும்படி வற்புறுத்தினாள். எனவே ஜமீந்தாருடன் எட்டையபுரம் செல்வதற்கு ஒத்துக்கொண்டான். கங்கைக் கரையையும், அங்கு தன் வாழ்க்கையில் ஒரு பெரும் மாற்றத்தைக் கொணர உதவிய நண்பர்களையும் பிரிந்து செல்லவேண்டியிருக்கிறதே என வருந்தினா.ன் பாரதி. ஜமீந்தார் ஊருக்குக் கிளம்பிய போது அவருடன் சுப்பையாவும் கிளம்பினான். காசி பதித்த முத்திரையைத் தனது உணர்விலும் உடையிலும் உடலிலும் சுமந்து கொண்டு எட்டையபுரம் சென்றான்..

Ramamoorthy Ramachandran

unread,
Oct 22, 2021, 12:58:40 AM10/22/21
to Santhavasantham
அருமையான தொடர்! தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன்! - புலவர் இராமமூர்த்தி 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Subbaier Ramasami

unread,
Oct 23, 2021, 7:52:26 PM10/23/21
to santhavasantham

தினமொரு பாரதி சிந்தனை

40  23-10-2021

செல்லம்மாநாங்க இன்னும் இரண்டு நாள்லே இடையங்குளம் போகப்போறோம்என்றாள் அப்பாத்துரையின் மனைவி லஷ்மி.

அதுக்குள்ளேயாஎன்று கேட்டாள் செல்லம்மா.

உங்கண்ணாவுக்குச் சர்க்கார் உத்தியோகமாச்சே. அதுக்குமேலே லீவு கிடைக்கல்லே. நீ எப்போ எட்டையபுரம் போகப் போறே?”

ஏன், நான் இங்கே இருக்கக்கூடாதா?”

அடி அசடே, கல்யாணமாயிட்டா பொம்மனாட்டிக்குப் புகுந்த வீடுதான் சொர்க்கம்

பெரிய பாட்டி மாதிரி பேசறியே! நீயும் நானும் ஒருஒட்டைதான்.

நான் உனக்கு மன்னியாக்கும். ஞாபகம் வச்சுக்கோ.”

சரி, மன்னி, அவருக்கு எட்டையபுரம் போகவே பிடிக்கலே

ஏனாம்.”

கடையத்திலேயே இன்னும் கொஞ்சநாள் இருக்கலாமேன்னு சொல்றார். . ஆனால் சின்னம்மா சித்தியிட்டேருந்து கடுதாசி வந்திருக்கு. பெருமாள்கோயில் தெருவிலே  வீடு பார்த்தாச்சாம். எங்க இரண்டு பேரையும் உடனே கிளம்பி வரச்சொல்லி எழுதியிருக்கா!”

மனைவி வயதுக்கு வந்ததும் மனைவியுடன் புது வாழ்வைக் கடையத்தில்தான் தொடங்கினார். புதுமையான அனுபவம். அதற்கேற்ற இயற்கைச்சூழல். மலை, அருவி இவற்றையெல்லாம் விட்டு உடனே செல்லப் பாரதிக்கு மனமில்லை.

 எட்டையபுரத்தில்  இராஜாவுக்குச் செய்தி வாசிக்கிற வேலை. அதிகம் வேலை இல்லைதான்

இரண்டு நாட்கள் கழித்து அவர்கள் எட்டையபுரம் சென்றார்கள். தனி வீடு. பகற்போதில் சின்னம்மாச் சித்தி செல்லம்மாவுடன் இருப்பாள். இரவுப் போதுக்குத் தந்தை வீட்டுக்குச் சென்று விடுவாள்..சிறுவயதிலேயே கணவனை இழந்த சின்னம்மா பாரதியின் தாய் லஷ்மியின் தங்கை. பாரதியிடம் அபரிமிதமான அன்பு. அந்த அன்பே ஆளுமையாக மாறுகிறபோது சிலசமயங்களில் அதுவே இடைஞ்சலாகவும் ஆனதுண்டு.

பாரதி செல்லம்மாளை மிகவும் நேசித்தார். அளவுக்கு அதிகமான காதலால் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. எட்டையபுரம் அரண்மனை இளம் பெண்கள் வந்து போவதற்கு ஏற்ற இடம் இல்லையென்பதால் செல்லம்மா தன்னுடைய அனுமதி இல்லாமல் அரண்மனைக்குப் போகக்கூடாது என்று கண்டிப்பான உத்தரவு போட்டிருந்தார். சுப்பையாவின் மனைவியைப் பார்க்க வேண்டும் என்று ஜமீந்தாரின் மனைவிகள் சொல்லி அனுப்பியும் பாரதி அவளை அரண்மனைக்கு அனுப்பவில்லை..

ஓரிரு சமயங்களில் அவர் தன்னுடன் கூட்டிக்கொண்டு சென்றதுண்டு.   நவராத்ரி விழா அரண்மனையில் சிறப்பாக நடைபெறும். அப்பொழுது ஊர்ப்பெண்கள் பலரும் அரண்மனனக்குச் சென்று அங்கு நடைபெறும் விழாக்களில் கலந்து கொள்வதுண்டு. சின்னம்மாச் சித்தி அழைத்துக்கொண்டு செல்கிறேன் என்று சொன்னால் கூட செல்லம்மாவை பாரதி அனுப்ப மாட்டார். அரண்மனையிலிருந்து பட்டுப்புடவைகளும் அணிமணிகளும் வரும்.   அவற்றிற்காக ஆசைப்படக்கூடாது என்று பாரதி சொல்லியிருந்தார்.

 

செல்லம்மா சின்னப்பெண்தானே! அவளுக்கும் வெளியிடங்களுக்குச் செல்லவேண்டும், நாலு பேரைப்பார்க்க வேண்டும் என்று ஆசையிருக்காதா? ஆனாலும் செல்லம்மா வருத்தத்தை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. அதற்குக் காரணம் கணவர் தன் மேல் காட்டிய அன்புதான். அவருக்கு உற்சாகம் வந்துவிட்டால் பாட்டும் கூத்துந்தான். அவளைப்பற்றிப் பாட்டு இட்டுக்கட்டிப் பாடுவார். அவளுக்குக் கொஞ்சம் புரியும். சிலசமயங்களில் என்ன சொல்கிறார் என்பது புரியாது. அதனால் என்ன? அவர் தன்னைப் பற்றிப் பாடுகிறார் என்ற இன்பம் போதாதாதன் கணவர் அரண்மனையில் உத்தியோகம் பார்க்கிறார் என்பதிலே செல்லம்மாளுக்கு மகிழ்ச்சிதான். என்ன உத்தியோகம் பார்க்கிறார் என்கிற விவரமெல்லாம் அதிகம் தெரியாது. மஹாராஜா அவரிடம் அன்பு வைத்திருக்கிறார். மரியாதையுடன் நடத்துகிறார் என்று கேள்விப்பட்டாள். சின்னம்மாச் சித்தி வாய் ஓயாமல் பாரதியின் புகழ் பாடுவாள். சின்னம்மாச் சித்தி சில சமயங்களில் கொஞ்சம் அதிகமாக அதிகாரம் செய்வதுண்டு.

என்றாலும் தன்  பக்கம் நியாயமிருக்கிறது என்று உணர்ந்தால் அதைத் தயங்காமல் சின்னம்மாச் சித்தியிடம் எடுத்திச் சொல்லித் தனக்கு  ஆதரவாக இருக்கும் அன்பான கணவன் வாய்த்தது செல்லம்மாளுக்கு ஆறுதலாக இருந்தது.   தாத்தா வீட்டைத் தவிர வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டுக்குள்ளேயே அடைபட்டுக் கிடப்பதுதான் கொஞ்சம் வருத்தமாக இருந்தது.  

 


Subbaier Ramasami

unread,
Oct 24, 2021, 9:05:27 PM10/24/21
to santhavasantham
42

பாரதிக்கு அப்படி என்ன உத்தியோகம்பாரதியின் புலமைக்கும் ரசனைக்கும் ஏற்ற உத்தியோகமாஅப்படியொன்றும் இல்லை. காலையிலேயே அரண்மனைக்குப் போய்விடவேண்டும்  அப்பொழுதிருந்த ஜமீந்தார் வயதில் இளையவர். ஆங்கிலம் நன்கு தெரியும். தமிழிலும் ஆர்வமுடையவர். அவருக்குப் பத்திரிகை படித்துச் செய்தி சொல்வதும், நாட்டு நடப்புகளை எடுத்துச் சொல்வதும், ஆங்கிலக் கவிதைகள் சிலவற்றை விளக்குவதும் அவ்வப்போது அவைக்களப் புலவர்களின் விவாதங்களில் பங்கு கொள்வதும் தான் அவர் பணி

 

சின்ன ஜமீந்தாருக்குப் பதில் அதுவரை ஜமீன் பொறுப்பைக்கவனித்து வந்த சித்தப்பா மஹாராஜா தமிழில்  ஆர்வமுடையவர்.. பாரதியும் ஜமீந்தாரும் ஆங்கிலக் கவிதைகளைப் பற்றிப் பேசுவதைக் கேட்டால் அவருக்குக் கோபம் வரும்அதுவும் ஆங்கிலத்தில் அவர்கள் பேசினால் கோபம் அதிகரிக்கும்.   பாரதி தமிழில் பாண்டித்தியம் உள்ளவன்தான். அதற்காக அவனுக்கு அளவுக்கு அதிகமாக ஜமீந்தார் இடம் கொடுத்துவிடுவானோ என்று கண்கொத்திப் பாம்பாய்க் கவனித்துக்கொண்டிருந்தார். அதனாலேயே பாரதி மேல் கொஞ்சம் கொஞ்சமாக அவருக்கு வெறுப்பு வளர்ந்தது. ஆனால் ஜமீந்தார் பாரதிமேல் நல்ல மதிப்பு வைத்திருந்தார். அவருடைய பரந்துபட்ட அறிவை வியந்தார். பாரதிக்குச் ஷெல்லியின் கவிதைகள் என்றால் மிகவும் பிடிக்கும். எனவே ஷெல்லியின் கவிதைகளைப் பாரதி உணர்ச்சிகரமாக எடுத்துச் சொல்லி விளக்கம் கொடுப்பதை மகிழ்ந்து கேட்பார். ஜமீந்தாரிடம் பாரதிக்கு இருந்த மரியாதைக்கண்டு எட்டையபுர அவைக்களத்திலிருந்த மூத்த வித்வான்கள் பொறாமை கொண்டனர்அதுமட்டுமல்ல. பாரதி காசிக்குச் சென்று இந்திய நாட்டின் அப்போதைய நிலையை நன்கு அறிந்து வந்த காரணத்திலே அவர் அதைப்பற்றிப் பேசுவார். கிணற்றுத் தவளைகளாக இருக்கும் அவைக்கள அறிஞர்கள் தம்மை விட பாரதி நாட்டு நடப்பைத் தெரிந்திருப்பதைக் கண்டு அழுக்காறு கொண்டனர். ஆங்கிலம் அறிந்த ஜமீந்தாரோடு பாரதி ஆங்கிலத்தில் உரையாடியது வேறு அவர்களை எரிச்சலடையச் செய்தது.

எட்டையபுரத்தில் பாரதி மிகவும் மதிக்கின்ற பெரியவர் ஒருவர் இருந்தார். அவருக்கும் பாரதியை மிகவும் பிடிக்கும். அவர் யார்?  நாளை பார்க்கலாம்

Lalitha & Suryanarayanan

unread,
Oct 24, 2021, 10:44:46 PM10/24/21
to santhav...@googlegroups.com
தினமொரு பாரதி சிந்தனை என்கின்ற
மனமிக விரும்பும் மணிமணி நடையில்
இனிதொரு கடையை இங்குநீர் விரித்து
தனியொரு சிறையில் எனையடைப் பதுமேன் ?

சிவசூரி.

Subbaier Ramasami

unread,
Oct 25, 2021, 10:05:58 AM10/25/21
to santhav...@googlegroups.com
அருமை. நன்றி

Subbaier Ramasami

unread,
Oct 25, 2021, 10:05:16 PM10/25/21
to santhavasantham
43

எட்டய்ய புரத்தில் அவர் மதிக்கின்ற பெரியவர்களில் ஒருவர் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீக்ஷிதரின் தம்பி பாலுசாமி தீக்ஷிதரின் மகள் வயிற்றுப்பேரன் சுப்பராம தீக்ஷிதர் . பாலுசாமி தீக்ஷிதர் தன் பேரனையே சுவீகாரப் புத்திரனாக த்தெடுத்துக் கொண்டார். பாலுசாமி தீக்ஷிதர்தான் வயலினைக் கர்நாட இசைக்குள் புகுத்தியதாகச் சொல்லப்படுகிறது. எட்டையாபுரம் சமஸ்தானத்தின் இசைப்புலவராகப் பாலுசாமி தீக்ஷிதர் விளங்கினார். தன் சுவீகார புத்திரனுக்குச் சிறு வயதிலேயே இசை நுணுக்கங்கள் அனைத்தும் ஐயம் திரிபறக்  கற்றுக்கொடுத்தார்..

எட்டயபுர அரசரும் ஒரு இசை மேதை.

. சுப்பராம தீட்சிதர் தனது 17 ஆம் வயதில் சொந்தமாக கீர்த்தனைகாள் எழுத்த தொடங்கினார், அட தாள வர்ணத்தை தர்பார் இராகத்தில் இயற்றி அரசர் முன்னர் ஒரு இசைநிகழ்ச்சி அளித்தார். அரசவையில் பலர் அந்த இசையை அவரது தந்தை எழுதி தனது மகன் புகழ் பெற உதவியுள்ளார் எனக் கருதினர். ஆகவே அவரது திறமையை சோதிக்க விரும்பிய அரசர் தாம் வெளியில் சென்று ஒரு மணிநேரத்தில் திரும்பி வருவதற்குள் யமுனா இராகத்தில் பாடல் அமைத்து தனக்குப் பாடிக் காட்டும்படி உத்தரவிட்டுச் சென்றார். அவர் திரும்பி வருவதற்குள் சுப்பராம தீட்சிதர் அரசர் கூறியவாறே அவர் கொடுத்த இசைக் குறிப்புகளை உள்ளடக்கிய பாடலொன்றை இசையமைத்து மன்னருக்குப் பாடிக் காட்டினார்.  அரசர் மகிழ்ந்து அவருக்குப் பொன்னாடை போர்த்திப் பாராட்டி பத்து பொற்காசுகள் பரிசளித்தார். வளர்ப்புத் தந்தைக்குப் பிறகு சுப்பராம தீட்சிதரும் எட்டயபுர அரசவை கர்நாடக இசைக் கலைஞர் பொறுப்பை வகித்தார். 

 

அவரைப் பாரதி அடிக்கடி சென்று சந்திப்பதுண்டு. பாரதியை சுப்பராம தீக்ஷிதருக்கும் பிடிக்கும். ஒருநாள் சுப்பராம தீக்ஷிதரைப் பாரதி பார்க்கச் சென்றிருந்தார்.

வா, சுப்பையா. உன்னைத்தான் நினைத்துக்கொண்டிருந்தேன். நீயே வந்துவிட்டாய். “

என்னையா..?”

ஆமாம், சுப்பையா. முன்பு நீ இங்கே வந்திருந்த போது என்னிடம் சில கேள்விகள் கேட்டாயே, நினைவிருக்கிறதா?”

கேள்விகள் கேட்பதுதான் என்வேலை. எதைப்பற்றி நீங்கள் சொல்கிறீர்கள் என்று நீங்கள் சொன்னால் தெரிந்துகொள்கிறேன்

சுப்பய்யா, நீ எல்லாரிடமும் தடால்புடால் என்று பேசிவிடுவாய் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்கு அப்படித் தெரியவில்லையே

அவர்கள் சொல்வது சரிதான் மாமா. . எங்கே உண்மையான கலைஞானம் இருக்கிறதோ, உண்மையான அறிவு விகசிக்கிறதோ அங்கே நான் பணிந்துதான் போவேன். மன்னரிடம் மற்றவர்கள் கூழைக்கும்பிடு போடுவார்கள். நான் அப்படிச் செய்வதில்லை. அதனால் அவர்கள் அப்படிச் சொல்லியிருக்கலாம்

மன்னர் கொஞ்சம் முற்போக்கு வாதி.. உன்னிடம் அன்பு அதிகம்ஆனால் அந்தச் சித்தப்பா இருக்கிறாரே அவரிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்துகொள். “

அவருக்கும் என் தமிழ் பிடிக்கும். ஆமாம். நான் முன்பு கேட்டதைப்பற்றி எதையோ சொல்லவந்தீர்களே!”

ஆமாம் சுப்பய்யா. நீ காசியில் பார்த்த சங்கீத வித்வான்களைப் பற்றிச் சொன்னாயல்லவா? அவர்கள் குரலைப் பழக்குவதுபோல நம் சங்கீதவித்வான்கள் பழக்குவதில்லை என்று. அது உண்மைதான். சாதகம் செய்தால் மட்டும் போதாது. குரலையும் நம் வசப்படுமாறு பழக்க வேண்டும். நானும் அம்முயற்சியில் இறங்கிவிட்டேன். என் சிஷ்யர்களிடமும்  வற்புறுத்துகிறேன்

 

இன்னொன்றும் சொன்னேனே!”

 

நினைவிருக்கிறது. ஏன் கச்சேரியில் எப்பொழுது பார்த்தாலும் வாதாபி கணபதிம்’, , ‘ராமநீ சமானமெவரு’,  ‘மரியாத காதுரா’ ‘வரமுலோசகிபோன்ற உருப்படிகளையே  பாடுகிறீர்கள் என்றுதானே!. பாடுபவர்கள் சிரமமில்லாமல் பாடமுடிகிறதுகேட்பவர்களும் தான் கேட்டுப் பழக்கப்பட்டபாட்டை வெவ்வேறு பாடகர்கள் எப்படிப்பாடுகிறார்கள் என்பதைச் சீர்தூக்கிப் பார்க்கிறார்கள்.

பாரதி மெலிதாகச் சிரித்தார்

ஏன் சிரிக்கிறாய் சுப்பையா?”

தமிழர்களுக்கு இரும்புக்காது என்று வித்துவான்கள் நினைக்கிறார்கள். அவர்கள் காதுகளும் தோற்காதுகள்தாம். விதவிதமான ரசங்களில் கொடுத்தால் அவர்களும் ரசிப்பார்கள்

 “ ஆமாம்.  சுப்பையா நீ சொல்வதைப்போல ஒரு சில கிருதிகளை மாத்திரம் பாடினால் ஒரு தேக்கநிலை உருவாகிவிடும். புதிது புதிதாகப் பாடவேண்டும். குறிப்பாகத் தமிழிலும் பாடவேண்டும். உனக்காக ஒரு தமிழ்க் கீர்த்தனை பாடட்டுமாஎன்றார் சுப்பராம தீக்ஷிதர்.

கரும்பு தின்னக் கூலியா?” என்றார் பாரதி

ஊத்துக்காடு வேங்கட சுப்பய்யர் கீர்த்தனை ஒன்றைப்பாடினார் சுப்பராம தீக்ஷிதர். மிக உருக்கமாக அவர் பாடியதைக் கேட்டுப் பாரதியின் கண்களில் நீர் வழிந்தது.

 

சுப்பய்யா, நீயும் ஏன் கீர்த்தனை எழுதக்கூடாதுஎன்று கேட்டார்

உங்களைப் போன்ற பெரியவர்களின் ஆசியால் நிச்சயம் எழுதுவேன். அதற்குமுன் இசையைப் பற்றி நிறையத் தெரிந்துகொள்ளவேண்டும்.”

 

உனக்கு நேரம் கிடைக்கும் போது இங்கே அடிக்கடி வா. சங்கீதத்தைப் பற்றிப் பேசுவோம்.”

 

நீங்கள் சங்கீதத்தைப் பற்றி ஓர் நூல் எழுதவேண்டும். உங்களுடைய ஞானம் ஒரு வழிகாட்டியாக வருங்கால சந்தியினருக்குப் பயன்பட வேண்டும்.என்றார் பாரதி.

 

உனக்குத்தெரியாதா? நான் சங்கீத சம்பிரதாயப் பிரதர்சினி என்ற பெயரில் ஒரு நூல் தெலுங்கில் எழுதிக்கொண்டிருக்கிறேன். நான்கு தொகுதிகள் வரும். என்னுடைய  சீடர்- (சீடர் என்றதும் இளவயது என்று நினைக்காதே), அவருக்கு என்வயதிருக்கும். ஏ. எம் சின்னச்சாமி முதலியார்.  கிறித்துவர். மதராஸ் போய் அவருக்குக் கர்நாடக இசை கற்றுக்கொடுத்தேன்.மஹா அறிவாளி. அவர் வற்புறுத்தலால்தான் இந்த நூலை எழுதிவருகிறேன். சீக்கிரம் முடிந்துவிடும். மஹாராஜா வெளியிட உதவுவதாகச் சொல்லியிருக்கிறார்.”  என்றார் சுப்பராம தீக்ஷிதர்.  

 

“ரொம்ப சந்தோஷம் . என்னை  ஆசீர்வாதம் பண்ணுங்கோ” என்றார் பாரதி
“உனக்கென்னப்பா! சரஸ்வதி உன் வாக்கிலே இருக்கா! நீ பெரியாளா வருவே!  நீ கீர்த்தனை எழுது.  நான் பாடிக்காட்டறேன்” என்றார் சுப்பராம தீக்ஷிதர்.

 

சங்கீதச் சம்ப்ரதாயப் ப்ரதசினி  மிகச் சிறந்த நூல் பல வெளியீடுகளைக் கண்டிருக்கிறது.  தமிழாக்கம் செய்தும் வெளியிட்டிருக்கிறார்கள்

 

2011ம் ஆண்டு மியூசிக் அகாதமி இந்த நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டதாக அறிகிறேன்



image.png


Subbaier Ramasami

unread,
Oct 25, 2021, 10:28:56 PM10/25/21
to santhavasantham
இந்தப் புகைப்படத்தை  முகநூலிலும் வெளியிட்டிருந்தேன். இந்தப்புகைப்படத்தில் இருப்பவர் நிவாணமாக இருப்பதால்  இதை வெளியிடுவது முகநூலின் தரத்துக்கு இழிவு என்று சொல்லிப் புகைப்படத்தோடு என் கட்டுரையையும் நீக்கி விட்டது. பிறகு முகம் மட்டும் கத்தரித்து கட்டுரையை வெளியிட்டேன்.. ஏற்றுக்கொண்டது.

On Mon, Oct 25, 2021 at 9:06 PM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

Subbaier Ramasami

unread,
Oct 25, 2021, 10:32:13 PM10/25/21
to santhavasantham
இந்தப் புகைப்படத்தை  முகநூலிலும் வெளியிட்டிருந்தேன். இந்தப்புகைப்படத்தில் இருப்பவர் நிர்வாணமாக(nudity) இருப்பதால்  இதை வெளியிடுவது முகநூலின் தரத்துக்கு இழிவு என்று சொல்லிப் புகைப்படத்தோடு என் கட்டுரையையும் நீக்கி விட்டது. பிறகு முகம் மட்டும் கத்தரித்து கட்டுரையை வெளியிட்டேன்.. ஏற்றுக்கொண்டது.

Swaminathan Sankaran

unread,
Oct 25, 2021, 11:08:15 PM10/25/21
to santhav...@googlegroups.com
அருமையான தகவல்கள். படிக்கப் படிக்க இனிக்கிறது.
ஆவலைத் தூண்டுகிறது.

சங்கரன் 

On Mon, Oct 25, 2021 at 10:05 PM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
43


Subbaier Ramasami

unread,
Oct 26, 2021, 9:19:21 AM10/26/21
to santhav...@googlegroups.com
நன்றி

Subbaier Ramasami

unread,
Oct 26, 2021, 9:25:16 AM10/26/21
to santhav...@googlegroups.com
தினமொரு பாரதி சிந்தனை

44

எட்டய்யபுரம் ஜமீந்தாருக்குச் சுமார் முப்பது வயதிருக்கலாம். அவர் எப்படி  இருப்பார் , அவருடைய நடையுடை பாவனை எப்படி என்பதைப் பற்றி  கொட்டையசாமி என்ற சிறுகதையில் மறைமுகமாகக் கூறியிருக்கிறார் பாரதி.

அவருக்கு இப்போது சுமார் முப்பது அல்லது முப்பத்தைந்து வயதிருக்கும். செக்கச் செவலேன்று எலுமிச்சம் பழம்போலே பார்வைக்கு மிகவும் அழகாக இருக்கிறார். அவருடைய நடையுடை பாவனைகளில் உடை மாத்திரம் இங்கிலீஷ் மாதிரி, நடையும் பாவனைகளும் முற்காலத்துப் பாளையக்காரர் போலேயாம். பூட்ஸ் முதல் தொப்பிவரை அம்மனிதருடைய உடுப்பைப்பார்த்தால் லண்டன் நகரத்து லார்டு மக்களின் அச்சு சரியாக இருக்கும். இவர் மூன்றுதரம் இங்கிலாந்துக்குப் போய் வந்திருக்கிறார். இங்லீஷ் பாஷை பேசினால் , திக்காமலும் தட்டாமலும் சரசரவென்று மழைவீசுவது போல் வீசுவார். .. இவருடைய அந்தப்புரத்தில் பன்னிரண்டு தாலி கட்டிய பெண்டாட்டிகளும் வேறு பல காதல் மகளிரும் இருக்கிறார்கள்.”

 

அத்தகைய ஜமீந்தாரிடம்தான் அவர் பணி செய்ய நேர்ந்தது. அவராவது பரவாயில்லை

அவருடைய சித்தப்பா தமிழ்ப்பிரியர் என்பதைத் தவிர மற்றப்படி பொல்லாதவர்.

 ஒருசமயம் ஜமீந்தார் சென்னைப்பட்டணத்திற்கு விஜயம் செய்தார். ஜமீந்தார் விஜயம் என்றால் சும்மாவா? தனியாகச் சென்றால் ஏது மதிப்பு.?

எனவே தன்னுடன் தன் அவைக்களப் புலவர்கள் சிலரையும் அழைத்துக்கொண்டு சென்றிருந்தார்..  அங்கே அவர்கள் தங்குவதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பல பெரிய மனிதர்கள் ஜமீந்தாரைப் பார்க்க வந்திருந்தனர்.

அவர்களைக் கவி பாடிப் புலவர்கள் மகிழ்வித்தனர். பாரதியையும் ஜமீந்தார் அழைத்துச் சென்றிருந்தார். அங்கிருந்து ஊருக்குத் திரும்புவதற்கு முன் ஒவ்வொருவருக்கும் ஜமீந்தார் 500 ரூபாய் கொடுத்தார்.

 

பாரதி திரும்புவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே அவைக்கள வித்வான்களில் ஒருவர் எட்டய்யபுரம் திரும்பி வந்துவிட்டார். ஜமீந்தார் கொடுத்த 500 ரூபாயில் மனைவிக்கு நகைகளும் காஞ்சிபுரம் பட்டுப்புடவையும் இன்னும் சில அதிசயமான பொருட்களும் வாங்கி வந்திருந்தார். அந்த வித்துவானின் மனைவி சின்னம்மாச் சித்தியிடம் தன் கணவர் வாங்கிவந்தவற்றைச் சொல்லிப் பெருமைப்பட்டாள்.

சின்னம்மாச் சித்தி செல்லம்மாவிடம் சொன்னாள். தன் கணவரும் தனக்கு நகைகளும் புடவைகளும் வாங்கிவருவார் என்று கற்பனை செய்யத் தொடங்கினாள். தன்கணவர் சற்றுக் கோபக்காரரே தவிர தன்னிடம் மிகவும் ஆசையாகத் தான் இருக்கிறார். எனவே நிச்சயம் நகைகள் வாங்கிவருவார்

என க்கனவு கண்டாள்.

இரண்டு நாட்கள் கழித்துப் பாரதி திரும்பினார். அவருக்குப் பின்னாள் இரண்டு மூட்டைகளைச் சுமந்து கொண்டு ஒருவன் வந்தான்.

 

வீட்டுக்குள் நுழைந்ததும் மூட்டைகள் இறக்கப்பட்டன.

 

ஒரு மூட்டையைப் பிரித்தார். மேலாக ஒரு சுங்குடிப்புடவை. எடுத்துச் செல்லம்மாவிடம்கொடுத்தார். இன்னொரு புடவைசின்னம்மாச் சித்திக்கு என்று வாங்கி வந்திருந்தார்பிறகு மூட்டையிலிருந்து ஒவ்வொன்றாக எடுத்துவைக்கத் தொடங்கினார். எல்லாம் புத்தகங்கள். சில புதிதாக இருந்தன. சில செல்லரித்துப்போனப் பழைய புத்தகங்கள்:. இரண்டு மூட்டையிலும் புத்தகங்கள் மட்டுமே!

 

செல்லம்மாள் முகம் சுண்டியது. பாரதி கவனித்தார்

செல்லம்மா, நீ ஒருகவிஞனுடைய மனைவிமற்றவர்களைப் போலச் சாதாரணமானவள் அல்ல நீ. இப்புத்தகங்கள் விலைமதிப்பில்லாதவை. .வே சாமிநாதய்யர் என்று ஒருவர் இருக்கிறார். அவர் எங்கெங்கெல்லாமோ ஓலைச்சுவடிகளைத் தேடி எடுத்து இரண்டு புத்தகங்களைப் பதிப்பித்திருக்கிறார்.

இதோபார். இது சீவக சிந்தாமணி. இதோ பார் இது புறநானூறு. இவையெல்லாம் பொக்கிஷங்கள். ஜமீந்தாரின் நூலகத்தில் உள்ள புத்தகங்கள் போலில்லை இவை. உனக்கு அப்புறம் படித்துச் சொல்கிறேன்.” என்றார்

செல்லம்மாளுக்கு அழுகையாக வந்ததுஅடக்கிக் கொண்டாள்.

ஏண்டா சுப்பையா, செல்லம்மாளும் சின்னப் பொண்ணுதானே! ஏதாவது நகை வாங்கி வந்திருக்கக்கூடாதோ? “என்றாள் சின்னம்மாச் சித்தி.

நகைகள் எப்பொழுதுவேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். 500 ரூபாய்தானே இருந்தது. இன்னும் இருந்திருந்தால் அதிகம் புத்தகங்கள் வாங்கியிருப்பேன்என்று சிரித்தார் பாரதி.

செல்லம்மாளைப் பார்த்து  கண்சிமிட்டிக்கொண்டே

காஞ்சிப்புடவை ஆசையா போ போ போ

கம்பன் மேலே ஆசையா வா, வா, வாஎன்று பாடிக் குதிக்கத் தொடங்கிவிட்டார்.

நல்ல பிள்ளையடா நீஎன்று சொல்லிக்கொண்டே சின்னம்மச் சித்தி உள்ளே சென்றாள்.

 

செல்லம்மாளுக்கு மூன்று வகையிலே வருத்தம்.

ஒன்று தனக்கு நகை நட்டோ புடவைகளோ வாங்கிவரவில்லையே என்ற வருத்தம்

இரண்டாவது வாங்கி வந்திருக்கிற புத்தகங்களிலேயே மூழ்கிவிடுவார். தன்னுடன் பேசக்கூட நேரமிருக்காது.

மூன்றாவதாகத் தான் படித்து ரசிப்பதைத் தன்னைக்கூப்பிட்டுச் சொல்ல ஆரம்பித்துவிடுவார். வீட்டு வேலை மெனக்கிடும்.

 

எல்லாப்பெண்களையும் போல நிறையக் கனவுகளோடு வந்தவள்தான் செல்லம்மாள். இன்னும் ஒரு கவிஞனுடைய வாழ்க்கையில் ஒத்துப்போவதற்குத் தன்னைப் பழக்கிக்கொள்ளவில்லை. அதற்கு நாளாகும். சாதாரணப் பெண் என்ற நிலையிலிருந்து தான் உயரப்போகிறோம் என்பதை அவள் அப்போது அறிந்திருக்கவில்லை

Rajja Rajagopalan

unread,
Oct 26, 2021, 3:14:52 PM10/26/21
to santhav...@googlegroups.com
செல்லம்மாக்களும், கஸ்தூரிபாய்களும் செய்த தியாகங்கள்தான் எத்தனை!   பாரதி, கந்திஜி போன்ற முனிவர்களைப் பாடும்போது, இந்தப் பைங்கிளிகளின் சோகமும், சுகமும் மறக்கப்படுகிறதோ என மனம் பதைக்கிறது.   

நல்ல பணி இலந்தையார் அவர்களே!

மீ. ரா

Sent from my iPhone

On 26 Oct 2021, at 15:25, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Subbaier Ramasami

unread,
Oct 26, 2021, 10:17:55 PM10/26/21
to santhav...@googlegroups.com
உண்மைதான். அவர்கள் பலம் பின்புலப் பலம்.  வெற்றிக்குக் கிரியாவூக்கி

Subbaier Ramasami

unread,
Oct 26, 2021, 10:19:02 PM10/26/21
to santhav...@googlegroups.com
45

ஜமீந்தாரின் அரசவையில் ஒருநாள் ஒரு விவாதம் நடந்தது.

26 வயதுக்குள்ளேயே சென்னிக்குளம் அண்ணாமலை ரெட்டியார் மிக அற்புதமாகக் காவடிச் சிந்து பாடியிருக்கிறார். அவரைப் போல இன்னொருவரால் காவடிச் சிந்து பாட முடியாது என்று அவைக்களப் புலவர் ஒருவர் சொன்னார்.

இன்னொருவர் ஒரு காவடிச் சிந்துப் பாடலைப் பாடிஇதைப்போல எவராலும் பாட முடியுமா?” என்று கேட்டார்.

அவையில் இருந்த புலவர்கள் எவரும் பதில் சொல்லவில்லை.

 

ஏன், 11 வயதில்பாரதிபட்டம் பெற்ற நமது சுப்பிரமணிய பாரதி பாடலாமேஎன்று கிண்டலாகச் சொன்னார் ஒருவர். பாரதியின் கவித்திறமையில் அபார நம்பிக்கை உடைய அவைக்களப்புலவர் ஒருவர்

பாரதியைச் சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள்.. பாரதி நிச்சயமாகப் பாடுவார்என்றார்.

 

ஜமீந்தார் பாரதியைப் பார்த்துசுப்பையா, உன்னால் பாடமுடியுமா?” என்று கேட்டார்

 

மஹாராஜா,பெரியவர்கள் பேசி முடிக்கட்டும் என்றிருந்தேன். என்னால் முடியும்என்றார் பாரதி

ஒரு வாரம் கால அவகாசம் தருகிறேன். அதற்குள் பாடு பார்க்கலாம்என்றார் ஜமீந்தார்.

ஒரு நாள் போதும்என்றார் பாரதி

இளங்கன்று பயமறியாதுஎன்றார் ஒரு வயதான புலவர்

அன்று மாலையே பாரதி ஒரு அருமையான காவடிச் சிந்துப்பாடல் எழுதிக் கொணர்ந்தார். அதைப் பார்த்த ஜமீந்தார் ஆளை அனுப்பி எல்லாப் புலவர்களையும் வரவழைத்தார்.

அவரது வளார்ச்சியை விரும்பாதவர் கூட எந்தக் குறையும் காண இயலாத படி அமைந்திருந்தது அந்தப்பாடல். பாரதி தான் எழுதிய பாடலைக் கம்பீரமாகப் பாடினார்.. எல்லோரும் பாரதியின் திறமையை வியந்து பாராட்டினர்.

 

என்னடி நான் பெற்ற மங்கை என்ற மெட்டில் அமைந்த அந்தப் பாடல் முழுதும் கிடைக்கவில்லை. அதில் கிடைத்துள்ள ஒரு சிறுபகுதி::

 

பச்சைத் திருமயில் வீரன்

அலங்காரன், கௌமாரன் - அடி

பன்னிரு திண்புயப்பாரன் - அடி

பணிசுப்பிர மணியர்க்கருள்

அணிமிக்குயர் தமிழைத்தரு

பக்தர்க்கெளிய சிங்காரன் - எழில்

பண்ணு மருணாசலத் தூரன்

 

பாடலில் காவடிச்சிந்துக்கே உரிய இயைபுகளும் முடுகும் அமைந்து பாடல் குதிபோடுகிறது. முழுப்பாடலும் கிடைக்காதது பெரும் இழப்புத்தான்.

 

It is loading more messages.
0 new messages