தேசிகரின் பூஸ்துதி தமிழாக்க முயற்சி (கோபால்)

15 views
Skip to first unread message

GOPAL Vis

unread,
Mar 11, 2026, 2:19:35 AMMar 11
to santhav...@googlegroups.com
சந்த வசந்த அன்பர்களுக்குப் பணிவான வணக்கம். சுமார் 3 வாரங்களுக்கு முன், திருப்புல்லாணி திரு ரகுவீரதயாள் அவர்கள், உ வே ஸ்ரீ வேதாந்த தேசிகர் இயற்றிய 33 விருத்தங்களைக் கொண்ட பூஸ்துதி என்ற வட்மொழி நூலைத் தமிழ்க் கவிதை வடிவில் யாத்துத் தருமாறு பணித்தார். அது அடியேன் அறிந்திராத நூலாதலினால் புத்தகத்திலிருந்து தமிழ்ப் பொழிப்புரையோடு கூடிய் pdf நகல் ஒன்றையும் அனுப்பி வைத்தார். வடமொழி நூலின் தமிழாக்கமாக நான் இதுவரை முயன்றதில்லை. அவர் பணித்ததால், இறைவன் சித்தம் என்று ஏற்றுக் கொண்டேன். அது இன்று முழுமை அடைந்தது. தேவநாகரி வடிவில் பாடல்கள் தனித்தனியாக வலைத்தளத்தில் கிட்டின. அவற்றை அக்‌ஷரமுகா துணை கொண்டு தமிழ் எழுத்து வடிவத்துக்கு மாற்ற இயன்றது. பொழிப்புரைகள் புத்தக நகலாதலின் தனித்தனியே எடுக்க இயலவில்லை. ஆகவே பொழிப்புரை, பதவுரைகளோடு கூடிய நகலை இங்கே இணைப்பாகச் சேர்த்திருக்கிறேன். தமிழ் எழுத்தில் வடமொழி வடிவையும், அடியேன் முயன்ற தமிழாக்கத்தையும் அறிஞர்களின் பார்வைக்காக இங்குப் பத்துப் பத்தாக இட எண்ணி, இன்று தொடங்குகிறேன். பிழைகளைச் சுட்டி அருளுமாறு வேண்டுகிறேன். 
என் பாடல்கள் எண்சீர் விருத்தங்களால், பொதுவாக விள/விளாச் சீர்களாலும், சில (பெரும்பாலும் விளமாகத் தொனிக்கக் கூடிய) காய்ச் சீர்களாலும் ஆனவை. சொல்லுக்குச் சொல் தமிழாக்கம் இல்லாமல் தேசிகர் சொல்ல வந்த கருத்துகளாக எனக்குப் பட்டதை ஆதாரமக வைத்து என் உணர்ச்சிகளுக்கும் ஞானத்திற்கும் எட்டிய சொற்களால் தமிழாக்கம் செய்ய முயன்றிருக்கிறேன் என்பதையும் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி.


தேசிகன் திருவடிகள் சரணம்!
பூஸ்துதி தமிழாக்க முயற்சி! [பாடல்கள் 01 - 10]

ஸ்ரீமான் வேங்கட நாதார்ய: கவிதார்கிக கேஸரீ |
வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||


வேதாந்த தேசிகனே சீமானே வேங்கட
நாதாவெம் ஆசானே ஆசுகவி நாவலனே
வாதத்தில் பேரரியே வாழ்ந்திருப்ப தென்னெஞ்சில்
நீதானே என்றும் நிலைத்து! ..(0.1)


சமர்ப்பணம்
மாவருளி மாலருள மாகவியாய் ஆனநின
நாவருளும் பாவின் நகலாக்க - ஆவதிலை!
தேசிகனே நீயருளிச் சேர்த்துவிடு பூமிக்கே
யாசித்தேன் யாப்பிதனை ஏற்று! (0.2)

[மா = திருமகள்; நகல் (இற்றைய வழக்குச் சொல்) = பிரதி]


முன்மொழி

இருமறைத் தத்துவத்(து) இணையிலான் தேசிகன்

……இமையடி விழியென இறைவனைக் கொண்டவன்

கருவையும் கருத்தையும் கவினையும் கொண்டதாய்க்

……கருணையால் தந்ததோர் காவியம் பூத்துதி!

அருகதை இன்றியோர் ஆசையால் அதனையீங்(கு)

……அமுதெனும் தமிழினில் ஆக்கிட முயன்றுளேன்!

வருபிழை என்கவி வறுமையால், நிறைவுநான்

……வணங்கிடும் தேசிகன் வாக்கினில் வந்ததே! (0.3)


பூஸ்துதி:
வேதா³ந்ததே³ஶிகக்ருʼதா .
வேதாந்த தேசிகர் இயற்றிய பூத்துதி

ஸங்கல்பகல்பலதிகாமவதிம்ʼ க்ஷமாயா
ஸ்வேச்சா²வராஹமஹிஷீம்ʼ ஸுலபானுகம்பாம் .
விஶ்வஸ்ய மாதரமகிஞ்சனகாமதேனும்ʼ
விஶ்வம்பராமஶரணஶரணம்ʼ ப்ரபத்³யே .. 1..

எண்ணிய எண்ணுமுன் ஈந்திடும் கற்பகம்!

……எல்லையில் லாப்பிழை இயல்பினால் பொறுப்பவள்!

அண்ணல்வ ராகனின் அன்புடை மனையவள்!

……அருள்வதில் எளியவள் அகிலமிஃ(து) ஈன்றவள்!

நண்ணிடும் கதியிலார் நலம்பெற அளிப்பவள்!

……நங்கைதன் சுதந்திரம் நனிஉணர்ந் தவளவள்!

மண்ணெனும் தாயவள் மகனென புகலவள்

……மலரடி அன்றியோர் மறுபுகல் இல்லையே! ..(1)

[மகன் என = மகனாகிய என்னுடைய]


த்வாம்ʼ வ்யாஹ்ருʼதிப்ரத²மதப்ரணவப்ரியம்ʼ தே ஸம்ʼவேத³யத்யகி²லமந்த்ரக³ணஸ்தமேவ .
இத்த²ம்ʼ ப்ரதீதவிபவாமிதரேஷ்விதா³னீம்ʼ
ஸ்தோதும்ʼ யதா²வத³வனே க இவார்ஹதி த்வாம் .. 2..

ஓமெனும் பிரணவ ஒண்ணொலி மந்திரம்
……
உயர்மறை யாவையும் உன்னரும் காதலன்!
ஆமிதை அவைகளே அறுதியாய் நிறுவிடும்!
……
அற்புதத் திருவியா கிருதியின் ஆதியாய்ப்
பூமிநீ நிற்பதைப் போற்றியும் சாற்றிடும்!
……
புகழிதன் மாட்சியைப் புலமையின் ஆற்றலால்
தாமிதை உண்மையின் தரமறிந் தோதிடத்
……
தரணியில் யாருளார்? தனிப்பெருந் தேவியே! ..(
2)
[
வியாகிருதி = வ்யாஹ்ருதி மந்த்ரம்: பூ: புவ: ஸுவ:| இதில் முதன்மையான பூ: பூமியைச் சுட்டும்.]

நித்யம்ʼ ஹிதாஹிதவிபர்யயப³த்³பாவே
த்வத்³வீக்ஷணைகவிநிவர்த்யப³ஹுவ்யபாயே .
முக்³தாக்ஷரைரகி²லதாரிணி மோத³மானா
மாதஸ்தனந்தயதியம்ʼ மயி வர்தயேதா²꞉ .. 3..

அன்னையே பேருல கனைத்தையும் தாங்குவை
……
ஆளுவை அரசியாய் அன்புடன் பேணுவை!
நன்மையும் தீமையும் நானறிந் தேனிலேன்!
……
ஞானமற் றேயிவை நடுவிலே குழம்புவேன்!
நின்விழித் தயையலால் நீங்கொணாப் பாவமும்
……
நிறைந்திடத் திணறுவேன்! நிலையிலா துளறினும்
இன்முகத் தோடவை ஏற்றெனைச் சேய்தனக்(கு)
……
இன்னமு தூட்டுமன்(பு) இயல்புடன் ஆட்கொளே! ..(
3)

ஸங்கல்பகிங்கரசராசரசக்ரவாலம்ʼ
ஸர்வாதிஶாயினமனந்தஶயஸ்ய பும்ʼ꞉ .
பூமானமாத்மவிபவைபுனருக்தயந்தீ
வாசாமபூமிரபி பூமிரஸி த்வமேகா .. 4..

படம்பயில் பலதலை அனந்தனாம் பணிதனிற்
……
படுத்தவன் ஆண்மையின் பதியவன் இச்சையில்
அடங்கிடும் சராசரம் அத்தனைக் கூட்டமும்!
……
அற்புதன் உத்தமன் அவன்றிரு உளத்தினில்
இடங்கொடு பெருமையை இன்னமும் ஏற்றுமோர்
……
இணையிலாத் துணைவிநீ! எம்மொழி நின்புகழ்
திடம்பெறும் சொற்களால் செப்பிட வல்லது?
……
தெய்வமே பூமிநீ தியாகமே அல்லையோ
? ..(4)

வேதஸ்த்ருʼணாவதிவிஹாரபரிச்ச²³ம்ʼ தே
விஶ்வம்ʼ சராசரதயா வ்யதிபித்³யமானம் .
அம்ப³ த்வதா³ஶ்ரிததயா பரிபோஷயந்தீ
விஶ்வம்பரஸ்ய த³யிதா(அ)ஸி ததே³கநாமா .. 5..

அசைவன அசைவிலா தனவென ஆயிரம்
……
அறுகெனச் சிறிதுமாய்ப் பிரமமா அண்டமாய்
நசையுடன் ஆடநீ நண்ணிடும் பொருள்களால்
……
ஞாலமீ(து) ஆனது; நாரணன் கருணையாம்
பசையினால் காத்தது; பாங்கொடு புரவலன்
……
பத்தினி நின்னருட் பரிவினில் வளர்வது!
இசையுனக் குரியதும் இனியநின் நாமமும்
……
இருநிலம் தாங்கியின் துணைவிநீ என்பதே! ..(
5)
[
அறுகு = புல்; நசை = ஆசை; ஆட = விளயையாட; பசை = பற்று; இசை = புகழ்; இருநிலம் = பெரிய உலகம்]

ஸர்வம்ʼஸஹேத்யவநிரித்யசலேதி மாத
விஶ்வம்பரேதி விபுலேதி வஸுந்தரேதி .
அன்யானி சான்யவிமுகா²ன்யபிதானவ்ருʼத்த்யா
நாமான்யமூனி கத²யந்தி தவானுபாவம் .. 6..

எவருனக் கேற்றபேர் இடவலார் இகத்தினில்?
……
இயல்பினில் தயைதனில் இறைவனை விஞ்சுவோய்!
அவனியென் பாருனை அகிலமே காப்பதால்!
……
அசலையென் பாருன(து) அலைவிலா உறுதியால்!
தவறெலாம் பொறுப்பவள், தாரணி தாங்குவாள்,
……
தழைத்திடும் செல்வியென் றுனதருந் தனயர்கள்
உவமையற் றாயுனை உனபுகழ் போற்றியே
……
உனக்கெனத் தேர்ந்தநற் பெயர்சொலி உவப்பரே ..(
6)

தாபான் க்ஷிபன் ப்ரஸவிதா ஸுமனோக³ணானாம்ʼ
ப்ரச்சா²யஶீதலதலப்ரதி³ஶன் ப²லானி .
த்வத்ஸங்க³மாத்³வதி மாதவி லப்³போஷ
ஶாகா²ஶதைரதி³தோ ஹரிசந்த³னோ(அ)ஸௌ .. 7..

ஆதவன் வெம்மையை அதுமறைத்(து) உயர்மரம்
……
அடிநிழல் தண்மையோ(டு) அலர்கனி சுகந்தரும்!
வேதமார் கிளைகளும் விண்ணவர் வடிவிலார்
……
விரைமலர் வகைகளும் வெகுவெனப் பலன்களும்
மாதவன் மரமென வழங்குவான், கருணையாம்
……
மருமிகு மலரடி நீழலும் அருளுவான்!
காதலார் துணைவிநீ காஞ்சிசூழ் மாதவிக்
……
கடிமலர்க் கொடியென அணைப்பதால் கமழ்வனே! ..(
7)
[
காஞ்சி = ஆற்றோரம் வளரும் மரம்; மாதவி = ஒருவகைக் கொடி; மாதவன் மரமாதலும் மாதவி கொடியாதலும் காண்க!]

ஸ்மேரேண வர்திதரஸத்ய முகே²ந்து³னா தே
நிஷ்பந்த³தாம்ʼ விஜஹதோ நிஜயா ப்ரக்ருʼத்யா .
விஶ்ராந்திபூமிரஸி தத்த்வதரங்க³பங்க்தே
வேலேவ விஷ்ணுஜலதேரப்ருʼ²க்³வந்தீ .. 8..

அலைகடல், அம்புலி அங்குற ஓங்கினும்
……
அடங்குமாம் அணைக்குளே! ஆங்குநீள் உலகினில்
நிலையருள் நீலமா வண்ணனாம் நெடுங்கடல்
……
நின்முகச் சிரிப்பெழில் நிலவினால் கருணைநீர்
எலையறப் பொங்கினும் இயற்கையார் இயல்புகள்
……
எவையுமுன் அணைப்பெனும் எல்லையை மீறொணா!
தலைவனின் தத்துவ தரங்கமார் வரிசையில்
……
தகவுமிக் கிறுதியைத் தாங்கிடும் தேவியே! ..(8)

[
ஆங்கு = அதுபோல; தரங்கம் = அலை; தகவு .= மாட்சிமை]

ஸ்வாபாவிகே வஸுமதி ஶ்ருதிபிர்விபாவ்யே
பத்யுர்மஹிம்னி பவதீம்ʼ ப்ரதிபன்னவாஸாம் .
ஶங்கே விமானவஹனப்ரதிமாஸமானா
ஸ்தம்பே³ரமப்ரப்ருʼதயோ(அ)பி வஹந்தி ஸத்த்வா꞉ .. 9..

மறையலால் அறியொணா மாண்பினில் மகிமையில்
……
மாலினுக்(கு) உவமையார்? மாநிலச் செல்வியே!
இறைவனின் பெருமையில் இறைகுறை(வு) அற்றநீ
……
இயல்பினில் உறுதியால் இணையிலாய் அல்லையோ!
நறைமதக் களிறுகள் நாலிரு திக்கிலும்
……
நனியுனைச் சுமப்பதாய் நாவலர் கூறினும்
பொறையொடு. கோபுரப் பொதிசுமை தாங்கிடும்
……
பொம்மைகள் போன்(று)அவை பொய்ம்மையே அல்லவோ! ..(
9)
[
மாநிலச் செல்வி = வளம் நிறைந்த பூமிதேவி; இறை = சிறிதும்; நறை = நறுமணம்; களிறு = யானை; பொறை = பொறுமை] 

ஸம்பாவயன் மதுரிபுப்ரணயானுரோதாத்
வக்ஷஸ்த²லேன வருணாலயராஜகன்யாம் .
விஶ்வம்பரே ப³ஹுமுக²ப்ரதிபன்னபோ³꞉
ஶேஷாத்மனா து பவதீம்ʼ ஶிரஸா த³தாதி .. 10..

அம்புதி அருளிய அமுதினும் இனியளுக்(கு)
……
அச்சுதன் அன்பினால் அகலமீந்(து) உவந்தனன்!
எம்பெரு மானிடம் இதயமே நல்கிநல்
……
இன்புகள் பலதரும் இச்சகத்(து) அன்னையே!
கொம்பினைப் படையெனக் கொண்டுனைக் காத்தவன்
……
குடுமியில் தாங்கிடக் குலமுதல் அரவெனத்
தெம்புடைச் சேடனாய்த் தானவன் மாறியுன்
……
சீரது செழித்திடச் செய்தவன் ஆவனே! ..(
10)
[
அம்புதி = கடல்; அகலம் = மார்பு; படை = ஆயுதம்; குடுமி = உச்சித் தலை; குல முதல் அரவு = பாம்புக் குலத்தின் முதல் பாம்பு; சேடன் = ஆதிசேடன்.]

நல்வாழ்த்துகள்
கோபால்.
[11/03/2026]

Siva Siva

unread,
Mar 11, 2026, 9:28:59 AMMar 11
to santhav...@googlegroups.com
If you intended to attach something, it is missing.

V. Subramanian

On Wed, Mar 11, 2026 at 2:19 AM GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
.... பொழிப்புரைகள் புத்தக நகலாதலின் தனித்தனியே எடுக்க இயலவில்லை. ஆகவே பொழிப்புரை, பதவுரைகளோடு கூடிய நகலை இங்கே இணைப்பாகச் சேர்த்திருக்கிறேன். 

GOPAL Vis

unread,
Mar 11, 2026, 10:29:44 AMMar 11
to santhav...@googlegroups.com
I realised it immediately after sending, and posted another with the attachment.
Wish to know if that attachment is readable. In the meantime, I located an English version of the meanings, which I will try to add.
gopal.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCO3USkjO6%3DUqWTW5Hh-TsRXB71guj%3DrboQEsm%2BK881X3A%40mail.gmail.com.

Siva Siva

unread,
Mar 11, 2026, 10:33:09 AMMar 11
to santhav...@googlegroups.com
It did not come. Maybe the attachment size is larger than what google group allows?
You can store it in your google drive and share a publicly accessible link to that file.

V. Subramanian

GOPAL Vis

unread,
Mar 11, 2026, 11:29:48 AMMar 11
to santhav...@googlegroups.com
Thanks. I will share it through my Google drive.
gopal.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Kaviyogi Vedham

unread,
Mar 11, 2026, 11:39:01 AMMar 11
to santhav...@googlegroups.com
அபாரம் கோபால்.  அருமையாக வந்துளது. தொடர்க..உம் பணி,
 யோகியார்

On Wed, Mar 11, 2026 at 2:19 AM GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

GOPAL Vis

unread,
Mar 11, 2026, 11:47:15 AMMar 11
to santhav...@googlegroups.com

I learn from Sri Sivasiva that the attachment is not seen. I have given public access to the above link, where you could read the slokam, phrase/word meanings, and pozhippurai. Hope you are able to read it.
gopal.

On Wed, Mar 11, 2026 at 11:54 AM GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
மன்னிக்கவும். என் முந்தைய இடுகையில் இணைப்பைச் சேர்க்க மறந்து போனேன்.
இவண் இணைத்திருக்கிறேன்.
கோபால்.

GOPAL Vis

unread,
Mar 11, 2026, 11:51:29 AMMar 11
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு யோகியார் அவர்களே.
கோபால்.

. . . . . . . . 

Govindaraju Arunachalam

unread,
Mar 11, 2026, 8:51:07 PMMar 11
to santhav...@googlegroups.com
உரை இனிது. உரைக்கும் விதமும் இனிது. 

rgds,
 
Dr. A. GOVINDARAJU,
Retired Principal - National Awardee,



--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

GOPAL Vis

unread,
Mar 12, 2026, 1:14:11 AMMar 12
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி. 
கோபால்

Subbaier Ramasami

unread,
Mar 12, 2026, 11:55:16 AMMar 12
to santhav...@googlegroups.com
முழுது படித்தேன். மொழியாக்கம் சிறப்பாக இருக்கிறது

இலந்தை

இமயவரம்பன்

unread,
Mar 12, 2026, 5:54:05 PMMar 12
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக அருமையான பாடல்கள் 

- இமயவரம்பன் 

GOPAL Vis

unread,
Mar 12, 2026, 8:54:34 PMMar 12
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி கவிவேழம் அவர்களே. 
மேலும் இடவிருக்கும் பகுதிகளையும் கண்டு ஆசி கூறுங்கள. 
கோபால். 

On Thu, Mar 12, 2026 at 9:25 PM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
முழுது படித்தேன். மொழியாக்கம் சிறப்பாக இருக்கிறது

இலந்தை

On Thu, Mar 12, 2026 at 12:14 AM GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
மிக்க நன்றி. 
கோபால்

......
On Wed, Mar 11, 2026 at 2:19 AM GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
சந்த வசந்த அன்பர்களுக்குப் பணிவான வணக்கம். சுமார் 3 வாரங்களுக்கு முன், திருப்புல்லாணி திரு ரகுவீரதயாள் அவர்கள், உ வே ஸ்ரீ வேதாந்த தேசிகர் இயற்றிய 33 விருத்தங்களைக் கொண்ட பூஸ்துதி என்ற வட்மொழி நூலைத் தமிழ்க் கவிதை வடிவில் யாத்துத் தருமாறு பணித்தார்.
 
.........
 
..........

GOPAL Vis

unread,
Mar 12, 2026, 9:02:45 PMMar 12
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி திரு இமயவரம்பன். 
கோபால் 

--

GOPAL Vis

unread,
Mar 15, 2026, 6:54:44 AM (12 days ago) Mar 15
to santhav...@googlegroups.com

பூஸ்துதி தமிழாக்க முயற்சி இரண்டாம் பகுதி (11-20)

[சுலோகங்களின் சுருக்கமான பொழிப்புரைகளைப் புத்தகத்திலிருந்து திரு ரகுவீரதயாள் அவர்கள் OCR மூலம் கையாள எளியவைகளாக ஆக்கிக் கொடுத்தார். அவருக்கு நன்றியுடன் அவற்றையும் இங்கே சேர்த்திருக்கிறேன்.]

 

க்ரீடா³வராஹத³யிதே க்ருʼதினக்ஷிதீந்த்³ரா
ஸங்க்ரந்த³னஸ்ததி³தரே(அ)பி தி³ஶாமதீஶா꞉ .
ஆமோத³யந்தி புவனான்யலிகாஶ்ரிதானாம்ʼ
அம்ப³ த்வத³ங்க்ரிரஜஸாம்ʼ பரிணாமபேதை³꞉ ..(11)

 

வராஹ மஹிஷியே, பாக்கியம் செய்த அரசர்களும், இந்திரன் முதலிய திக்பாலகர்களும், மற்றவர்களும் தமது வணங்கிய முடிகளில் படிந்த உன் பாதபங்கயத்தின் துகள்களின் விளைவாக உலகை மணக்கும்படி மகிழ்விக்கிறார்கள். ..(11)

 

ஆதிவ ராகனின் அன்புடை மனைவியே!
……
அகிலமாள் அரசரும் அமரரின் தலைவனோ(டு)
ஏதிலார் அடங்கிய எண்டிசை மன்னரும்
……
ஏற்றதம் பணிகளை இடையறா(து) என்றுமே
நீதியோ(டு) ஆற்றிடும் நேர்மையும் திறமையும்
……
நெற்றியில் ஒட்டிட நேர்ந்தமண் துகளினைக்
கோதிலா நின்னடி கும்பிடும் போதவர்
……
குடுமியை இடுகையில் கொண்டதால் பெற்றதே! ..(11)
[ஏதிலார் = மற்றவர்; கோது = மாசு; குடுமி = தலை உச்சி.]

பூதேஷு யத்த்வத³பிமானவிஶேஷபாத்ரம்ʼ
போஷம்ʼ ததே³வ பஜதீதி விபாவயந்த꞉ .
பூதம்ʼ ப்ரபூதகு³ணபஞ்சகமாத்³யமேதத்
ப்ராயோ நித³ர்ஶனதயா ப்ரதிபாத³யந்தி .. 12..

 

பஞ்சபூதங்களுள் உனது விசேஷ அபிமானத்தைப் பெற்றது எதுவோ, அதுவே உயர்ந்தது – உபயோககரமானது என்று எண்ணிய பெரியோர்கள், இவ்விஷயத்தில் சப்தம் ஸ்பர்சம் ரூபம் ரஸம் கந்தம் என்ற ஐந்து குணங்களும் பொருந்திய முதல் பூதமாகிய ப்ருதிவியையே உதாஹரணமாகக் காட்டுவர். ..(12)


கஞ்சமென் மலரினன் காசினிப் படைப்பினில்
……காணுயிர் பலவிலுன் கருத்தினைக் கவர்ந்ததே
விஞ்சிவ ளத்தொடு விளையுமாம்! இயல்பிது
……விளங்கிய சிந்தையர் விளக்கிட ஏதுவாய்
அஞ்சுபூ தங்களின் அமிசமும் கொண்டமண்
……அன்னையாம் உன்னையே அவற்றினுள் முதலெனச்
செஞ்சொலார் சொல்வதன் சிறப்பினைச் சுட்டுவர்!
……தேவிநின் பெருமைகள் செப்பிடத் தீருமோ! ..(12)

[கஞ்சம் = தாமரை; மலரினன் = பிரம்மா; செஞ்சொலார் = சான்றோர்.]

காந்தஸ்தவைஷ கருணாஜலதி⁴꞉ ப்ரஜானாம்ʼ
ஆஜ்ஞாதிலங்கனவஶாது³பஜாதரோஷ꞉ .
அஹ்னாய விஶ்வஜனனி க்ஷமயா பவத்யா
ஸர்வாவகா³ஹனஸஹாமுபயாத்யவஸ்தா²ம் ..(13)

லோகமாதாவே, கருணைக் கடலாகிற உன் கணவன் பகவான் - ஜனங்களின் தவற்றைக் கண்டு திருவுள்ளம் கலங்கிக் கிட்ட ண்ணாதிருக்கும்போது, ஒரே நொடியில் பொறுமையின் உருவான உன்னாலே, அணுகி அநுபவிக்கத் தக்கவனாக்கப்படுகிறான். ..(13)

 

கருணையின் கடலுன காந்தனே! ஆயினும்
……கறைமிகும் தீயரைக் கடிபவன்! அன்பரும்
தருமமற்(று) எல்லையைத் தாண்டிடில் சினந்துதன்
……தயைதனைக் கரப்பவன்! தனதருங் காதலி
அருகினில் பொறுமையின் அழகிய வடிவுநீ
……அணுகிடக் கண்டதும் அடக்கொணா வெள்ளமாய்ப்
பெருகிடும் கருணையால் பிழையெலாம் தள்ளுவான்
……பேறெலாம் கேட்டவர் பெற்றிட ஈவனே! ..(13)


ஆஶ்வாஸனாய ஜக³தாம்ʼ புருஷே பரஸ்மின்
ஆபந்நரக்ஷணத³ஶாமபினேதுகாமே .
அந்தர்ஹிதேதரகு³ணாத³³லாஸ்வபாவாத்
ஔத³ன்வதே பயஸி மஜ்ஜனமப்யனைஷீ꞉ ..(14)


அம்மா, ஸம்ஸார ஸாகரத்தில் மூழ்கிப்போன தன் ப்ரஜைகளைக் கைதூக்கிவிடப் பரமபுருஷன் பல அவதாரங்களைச் செய்ய நினைக்கும் போது, நீ அதற்காகத் தைரியம் முதலிய மற்றக் குணங்களை மறைக்கும் பெண்மைக்குச் சேரப் பயந்து பாசத்தாலே ப்ரளயகால வெள்ளத்தில் குதித்தே விட்டாய். ..(14)

வெற்றிமற்(று) அறிகிலா வீரமும் ஆண்மையும்
……மிக்கவன் ஒப்பிலான் மெல்லிடை நின்கரம்
பற்றினான் பரம்பொருள், பணிந்தவர் துயரெலாம்
……பாற்றுவான் என்றெலாம் பக்கமே நின்றுநீ
கற்றவள் கற்பெனும் கனலுனில் இருப்பினும்
……கணவனின் பெருமையைக் காட்டவே அபலையாய்
அற்றைநீ உகந்தனை ஆழியில் மூழ்கவே
……அல்லையோ? நாடகம் ஆடிய அன்னையே! ..(14)

[பாற்றுதல் = நீக்குதல்; அபலை = மென்மையான பெண்; அற்றை = அன்று; உகந்தனை = விரும்பினாய்]

பூர்வம்ʼ வராஹவபுஷா புருஷோத்தமேன
ப்ரீதேன போகி³ஸத³னே ஸமுதீ³க்ஷிதாயா꞉ .
பாதா³ஹதாப்ரலயவாரிதயஸ்தவாஸன்
உத்³வாஹமங்க³லவிதேருசிதா ம்ருʼ³ங்கா³꞉ ..(15)


முன்பு கோலவராகமாக வந்த புருஷோத்தமன் பாதாள லோகத்தில் உன்னைக் கண்டான். உடனே காதல் கொண்டான். அப்போது அங்கு நடந்த உங்கள் திருமணத்துக்கு அவன் காலடியில் கொந்தளிக்கும் கடல் ஒலிகளே மங்கள வாத்திய இசையாயின. ..(15)

 

முன்னமோர் வராகமா முகங்கொடு புருடருள்
……முதலவன் மகிழ்ச்சியால் முறுவலின் முகிழ்வொடு
பன்னக உலகிலுன் பார்வையை ஈர்த்தசீர்ப்
……பரிணய வரிசைகள் பலவரும் வேளையில்
தன்னருந் தாமரைத் தாள்களால் எற்றிய
……தரங்கமார் பிரளயச் சாகரம் தக்கநல்
இன்னிசை மத்தளம் இனிதவண் முழங்கியே
……எம்பெரு மானுடன் இணைத்தது நின்னையே! ..(15)

[முகிழ்வு = மலர்ச்சி; பன்னக உலகம் = நாகலோகம்; பரிணயம் = திருமணம்; தரங்கமார் = அலையோசை மிகுந்த]

 

வ்யோமாதிலங்கினி விபோ⁴꞉ ப்ரலயாம்பு³ராஶௌ
வேஶந்தலேஶ இவ மாதுமஶக்யமூர்தே꞉ .
ஸத்³ஸமுத்³ரவஸனே ஸரஸைரகார்ஷீ
ஆனந்த³ஸாக³ரமபாரமபாங்க³பாதை꞉ .. 16..

 

நாற்புறமும் சூழ்ந்த கடலுடை தரித்த தேவியே, ஆகாயமளாவிய பிரளய வெள்ளம் ஒரு குட்டை போலத் தமது கணுக்காலளவாகும்படி நிமிர்ந்து நிற்கும் வராகப் பெருமானின் உள்ளத்தில், நீ உனது ஸரஸ க்ரீடைகளால், அளப்பரிய ஆனந்த வெள்ளத்தைத் தூண்டிவிட்டாய். ..(16)

வானையும் விழுங்கிடும் ஊழிநாள் வாரிதி
……வரைகரை சொலவொணா வராகனுக்(கு) ஒருதுளி
தான்!ஐயன் திருமலர்த் தாள்நனைத் தில(து)அது!
……தாரணி வடிவளே சாகரச் சேலையோய்!
கோனையும் மூழ்க்குமுன் கூர்விழிக் காதலார்
……கொண்டல்நீர் கொட்டியே கூடிய மாகடல்!
ஏனையோர் தவங்களுக்(கு) எட்டிடாப் பரம்பொருள்
……எளியநின் அன்பினுக்(கு) ஏங்குவான் போலுமே! ..(16)

[ஊழி = பிரளயம்; வாரிதி = கடல்; தாரணி = உலகம்; சாகரம் = கடல்; கொண்டல் = மழைமேகம்]

³ம்ʼஷ்ட்ராவிதா³ரிதமஹாஸுரஶோணிதாங்கை
அங்கை³꞉ ப்ரியஸ்தவ த³தேபரிரம்பலீலாம் .
ஸா தே பயோதிஜலகேலிஸமுத்தி²தாயா
ஸைரந்த்ரிகேவ வித³தேநவமங்க³ராக³ம் .. 17..


ஆதிவராஹமூர்த்தி தன் பற்களால் பிளக்கப்பட்ட ஹிரண்யாக்ஷனின் ரத்தக்கரை படிந்த மேனியால் உன்னை அணைக்கும்போது, அது சிறிது முன்னே - ப்ரளய ப்ரவாஹத்திலே குளித்தெழுந்த உனக்கு, பணிப்பெண் போல, உடலெங்கும் செஞ்சந்தனப் பூச்சை விளைவித்தது போலும். ..(17)

 

கோரமா அசுரனைக் கோரைவெண் எயிற்றினால்
……கொலைபடக் கிழிக்கையில் குறுதியும் பீச்சிட
வீரமா வராகனின் மின்னுடல் நனைந்(து)அது
……வெற்றியின் சின்னமாய் விளங்கிட மகிழ்ச்சியில்
நீரலை ஆடிய நினதெழில் மேனியை
……நெருங்கியே தழுவிட நிமலைநின் சேடியர்
சூரணச் செம்பசை சொரிந்தது போலவே
……சுந்தரி நின்னுடல் சுடர்ந்ததெம் அன்னையே! ..(17)
[நீரலை = கடல்; சுடர்ந்தது = சுவாலை போல் ஒளிர்ந்தது]

அன்யோன்யஸம்ʼவலனஜ்ருʼம்பிததூர்யகோஷை
ஸம்ʼவர்தஸிந்துஸலிலைர்விஹிதாபிஷேகா .
ஏகாதபத்ரயஸி விஶ்வமித³ம்ʼ கு³ணைஸ்வை
அத்யாஸ்ய பர்துரதிகோன்னதமம்ʼஸபீட²ம் .. 18..

 

ஒன்றுடன் ஒன்று மோதித் தூரிய நாதம் முழங்கும் பிரளய காலக்கடல் வெள்ளத்தில் அபிஷேகம் செய்து, உன் நாதனின் நெடிதுயர்ந்த புயங்களாகிற பீடத்திலேறி, உன் குணங்களால் உலகமனைத்தையும் ஒரு குடையின் கீழ்க் கொணர்ந்து ஆள்கிறாய். ..(18)


ஊழியின் உததிகள் உரசிட ஓங்கிடும்
……ஒலியிசை முழங்கிட உலகினுக்(கு) அரசியாய்
ஆழியின் நீரினில் ஆட்டியுன் நாயகன்
……அணிமிகு தோளினில் ஆசன முந்தர
ஏழிரண்(டு) உலகையும் எழிலுடன் அறத்துடன்
……இயல்பினில் தோன்றிய இணையிலாக் குணங்களால்
வாழியென்(று) அனைவரும் வாழ்த்திட ஆள்கிறாய்
……வானென விரிந்ததோர் வெண்குடை மாண்பிலே! ..(18)

[உததி = கடல்]

ர்துஸ்தமாலருசிரே புஜமத்யபாகே³
பர்யாயமௌக்திகவதீ ப்ருʼஷதைபயோதே⁴꞉ .
தாபானுப³ந்தஶமனீ ஜக³தாம்ʼ த்ரயாணாம்ʼ
தாராபதே² ஸ்பு²ரஸி தாரகிதா நிஶேவ ..(19)

 

நிலமகளே, தமாலம் என்னும் வ்ருக்ஷம் போல் கறுத்த மாதவனின் மார்பில் கோயில் கொண்டு, கடல்நீர்த் திவலைகள் ஆங்காங்கு முத்துப்போல் உனது திருமேனியில் தெறிக்க விளங்கும் நீ, ஸகல லோகதாபஹரமான, ஆகாயத்தில் நக்ஷத்திரங்கள் நிறைந்த கோடை இரவுபோலப் பிரகாசிக்கிறாய். ..(19)

புத்தெழில் அடர்கரும் பச்சிலை போன்றநின்
……புருடனின் பருத்தமா மார்பில்நீ பொலிகையில்
சத்தமும் சலனமும் வீசிடும் சமுத்திரத்
……தண்புனல் துளிகளுன் தனுவிலே பரவிட
நித்திலம் போலவை நிறைந்திடத் தாரைகள்
……நிசிதனில் மின்னிடும் நெடுங்கரு நீலவான்
ஒத்ததாய்க் காணுமே உலகுகள் மூன்றிலும்
……உறுதொடர் துயரெலாம் ஒழிக்குமோர் தேவியே! ..(19)

[தனு = உடல்; நித்திலம் = முத்து]

ஆஸக்தவாஸவஶராஸனபல்லவைஸ்த்வாம்ʼ
ஸம்ʼவ்ருʼத்³யே ஶுபதடித்³கு³ணஜாலரம்யை꞉ .
தே³வேஶதி³வ்யமஹிஷீம்ʼ த்ருʼதஸிந்துதோயை
ஜீமூதரத்னகலஶைரபிஷிஞ்சதி த்³யௌ꞉ .. 20..

அம்மா, ஆகாயம் அழகிய மின்னற் கொடிகள் பின்னப்பட்ட இந்திர தநுஸ்ஸு என்னும் வண்ணத் தளிர்மாலைகளாலே தேவதேவ திவ்யமஹிஷியான உன்னை அலங்கரித்து, ஆகாய கங்கையின் நீர் நிறைந்த மேகக் குடங்களினால், லோக க்ஷேமத்துக்காக அபிஷேகம் செய்து வைக்கிறது. ..(20)

கொண்டலாம் இரத்தினக் குடத்தினில் மின்னலாம்
……கோடிநூல் ஆடையும் கோலமா வண்ணமார்
விண்டல வில்லெனும் விரைதளிர் சரங்களும்
……வியத்தகு கவின்மிக விளங்கிட விரிந்தஇம்
மண்டலம் சூழ்அலை வாரிதி நீர்கொடு
……மன்பதை நலம்நனி வளர்ந்திட வானமே
அண்டமாள் அரசனுக்(கு) அரசியுன் புனிதநீர்
……ஆட்டலை ஆற்றிட அற்புதக் காட்சியே! ..(20)

[கொண்டல் = மேகம்; கோடி = புதிய; விண்டல வில் = வானவில்; விரை = நறுமணம்; மண்டலம் = நிலப்பரப்பு; வாரிதி = கடல்; மன்பதை = சமுதாயம்]


நல்வாழ்த்துகள்

கோபால்

[15/03/2026]
 


On Wed, Mar 11, 2026 at 11:49 AM GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
சந்த வசந்த அன்பர்களுக்குப் பணிவான வணக்கம். சுமார் 3 வாரங்களுக்கு முன், திருப்புல்லாணி திரு ரகுவீரதயாள் அவர்கள், உ வே ஸ்ரீ வேதாந்த தேசிகர் இயற்றிய 33 விருத்தங்களைக் கொண்ட பூஸ்துதி என்ற வட்மொழி நூலைத் தமிழ்க் கவிதை வடிவில் யாத்துத் தருமாறு பணித்தார். . . . . .  தமிழ் எழுத்தில் வடமொழி வடிவையும், அடியேன் முயன்ற தமிழாக்கத்தையும் அறிஞர்களின் பார்வைக்காக இங்குப் பத்துப் பத்தாக இட எண்ணி, இன்று தொடங்குகிறேன். பிழைகளைச் சுட்டி அருளுமாறு வேண்டுகிறேன். 
. .. . . . . . . . . . . 
Reply all
Reply to author
Forward
0 new messages