
எண்சீர் விருத்தம்
அரையடி - காய் காய் மா தேமா
கைப்பேசி சுகமே!
உள்ளங்கை அடக்கிவிடும் உலகை நித்தம்
ஒயிலாகத் துணையிருக்க அனைத்தும் வித்தை
கள்ளமற்ற உறவகளைப் பேணும் ஆற்றல்
கணப்பொழுதில் இணைத்திடுமச் சேவை ஏற்றம்
தெள்ளுதமிழ் இலக்கியத்தை விரலால் தேடித்
தெளிவாகக் கற்றுணர வழிகள் கோடி
நள்ளிரவோ நடுப்பகலோ இதற்கொன் றில்லை
நாம்சிறக்கக் கைப்பேசி சுகத்தின் எல்லை
கைப்பேசி ஒரு சுமை!
காலமெல்லாம் கைப்பேசி எனுமவ் வாட்டம்
கண்பொறியை இழத்தற்குத் தருமே ஊட்டம்
கோலமுறும் உறவுகளின் குணத்தைக் காணாக்
குறைபாட்டைத் தருமன்றிச் சீரா பேணும்?
ஞாலமதில் தனிமையினை நாளும் நல்கும்
நலந்தாராக் கைப்பேசி நமக்காம் வில்லன்
பாலருந்தும் பாலருடன் பல்லோர் பார்க்கும்
பாரிதனில் இக்கருவி படைக்கும் தாக்கம்
On Apr 17, 2026, at 20:32, Subbaier Ramasami <elan...@gmail.com> wrote:
18-4-2025 அன்று நான் நியூஜெர்சியில் ஒரு பட்டிமண்டபத்திற்கு நடுவராகப் பொறுப்பேர்கிறேன்.தந்தையும் மகளும் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்கிறோம்
பட்டிமண்டபத்தலைப்பு
இன்றையச் சூழலில் கைப்பேசி சுகமா, சுமையா?
இலந்தை
--<PHOTO-2026-04-07-22-28-51.jpg>
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAH_qdSmzNpp6sNvtPAc4STKS8MohHqa_%3DGR-TwefHLiCoYbj4Q%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/E750D3C8-9BDD-475E-AE6E-EE0282E4A52D%40gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CACXjW-tZyVQbGg0sk%3DJcgx%3DoDemMx7ecV6N6JeRu6H5aUNb%3Ddg%40mail.gmail.com.