<> இவள் ஆட்டம் <>
ஆயிரம் அண்டங்கள் ஆக்கிடுவாள் -அன்னை
மாயிரு ஞாலத்தில் காட்டிடுவாள் – அந்த
….வண்ணக் கொலுவினில் பாட்டிசைக்கச்
சேய்களாம் மாந்தரைச் சேர்த்திடுவாள் - அவர்
சிந்தையெல் லாம்தன்பால் ஈர்த்திடுவாள்
ஆ!இவள் ஆட்டமோ கோடியடா! – அந்த
.. ஆட்டம் ப்ரபஞ்சத்தின் நாடியடா!
.. அனந்த் 23-10-2025
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAF%2Bqia0k2iROiOnbuvetMEvBdTyyaen2VDB0%3D-mdDZFwgpaxTw%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABMnAXZeYhboqqeR4pwB_244HL3qCc42yUtDU06GN8E6x8dcAQ%40mail.gmail.com.
துர்க்கை:
மன்பதை காத்திடும் மாசத்தி மாண்பினைநாம்
ஒன்பது நாட்கள் உணர்வுடன் - கும்பிட்(டு)
அகத்தூய்மை எய்திடுவோம் அஃதொன்றே கண்டீர்
சகமாயை மாய வழி.
பொங்கும் கடலில் புயலில் புவிபற்றித்
தங்கும் கதிரோன் தணல்வீச்சில்- மங்கா
தெரிந்திடும் என்னுள்ளத் தீபத்தி லென்றுந்
தெரிந்திடும் தேவி திறல்
மாரியாய்ப் பேச்சியாய் மாகாளி யம்மையாய்ப்
பேரிகை கொட்டியுன் பேர்சொல்லிக் - கோரிடுமெம்
குற்றங் களைவாய் குமரியுன் தாளன்றி
மற்றேதும் வேண்டா மெமக்கு.
அனந்த் 24-9-2025
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAF%2Bqia3q98xnjFir4Yvdv8oYjY6SbhfLQXFrVYswSEh9_xWswA%40mail.gmail.com.
மாரியாய்ப் பேச்சியாய் மாகாளி யம்மையாய்ப்
பேரிகை கொட்டியுன் பேர்சொல்லிக் - கோரிடுமெம்
குற்றங் களைவாய் குமரியுன் தாளன்றி
மற்றேதும் வேண்டா மெமக்கு.
மிக அருமையான வரிகள், அனந்த்!
சங்கரன்

To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABMnAXZ1D_FoG2-RtL%3D_U-PN39mrQ0_hd0w5qQC%3Do3ksbNgNhg%40mail.gmail.com.
இலக்குமி:
இல்லார்க் களிப்பதற்கும் இல்லறம் பேணுதற்கும்
நல்லார் பணிவளர நல்குதற்கும்- எல்லாப்
பொருளுமெனக் கீந்திடுவாய் பூமகளே கேட்டார்க்
கருளும்தாய் அல்லவோ நீ
செல்வம் எனச்செப்பி யோடுமச் செல்வங்கள்
அல்லயாம் வேண்டுவ தம்ம!நின்- நல்லருளை
அள்ளிப் பருக அளித்திடுவாய் கள்ளமிலா
உள்ளமெனும் செல்வத் துயர்வு.
ஒருகணம் உத்தமியே உன்னைத்தன் மார்பில்
திருமாலோன் தாங்க மறப்பின் - திருவோட்டை
ஏந்துந்தன் மைத்துனனுக் கீடாய் இரந்தன்னம்
மாந்திடும் வாழ்வெய்துங் காண்
மாரியாய்ப் பேச்சியாய் மாகாளி யம்மையாய்ப்
பேரிகை கொட்டியுன் பேர்சொல்லிக் - கோரிடுமெம்
குற்றங் களைவாய் குமரியுன் தாளன்றி
மற்றேதும் வேண்டா மெமக்கு.
மிக அருமையான வரிகள், அனந்த்!
சங்கரன்
On Wed, Sep 24, 2025 at 11:06 AM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
துர்க்கை:
அனந்த் 24-9-2025
சரசுவதி:
வெண்பா வனத்தில் மகிழ்ந்து விளையாடும்
பெண்மானாய்ப் பேசும் பசுங்கிளியாய்ப் பாவலரின்
கண்கட்குத் தோன்றும் கலைமகளே கற்பனையாம்
மண்ணிற்கு நீயே மழை.
கண்ணிருந்து மாங்கெழுதக் கோலிருந்தும் கற்பகமுன்
தண்ணருள் தானிலையேல் தாரணியில்- பண்ணழகு
பொங்கிவரும் பாக்கள் புலவோர்தம் கைவழியே
எங்ங னிழியு மியம்பு.
கனியே! கலைஞர்க்குக் கற்கண்டே! காற்றில்
இனிதே மிதக்கு மிசையே! - தனியே
முனிவர்தாம் துய்த்திடும் முடிபே! தனியேற்
கினியார் துணையிங் கியம்பு
அனந்த் 29-9-2025
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAF%2Bqia1ydftf4KYvAxvQHR3LFCsUdjpFq5%2BWteih3OFZcq0ukg%40mail.gmail.com.
தண்ணருள் தானிலையேல் தாரணியில்- பண்ணழகு
பொங்கிவரும் பாக்கள் புலவோர்தம் கைவழியே
எங்ங னிழியு மியம்பு.”
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
என்னும் குறளை நினைவுறுத்துகிறது.
வெண்பாக்கள் மூன்றும் மிக அருமை!
On Sep 29, 2025, at 11:34 PM, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
நன்றி பழனியப்பன்.
அனந்த்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAF%2Bqia1hvzygoiCWRxvhi_7ck-hqVuXqBcz9P9OSfbN6e1x%2BRQ%40mail.gmail.com.