கந்தம் கமழ் சந்தம் - Chandam 101 - a primer

659 views
Skip to first unread message

Siva Siva

unread,
Jun 2, 2020, 1:55:08 PM6/2/20
to santhavasantham

கந்தம் கமழ் சந்தம் - Chandam 101 - a primer

வரலாறு காணாத வரவேற்பின் காரணமாக (!!) இவ்விழையில் சந்தப்பாடல் குறித்த எளிய அறிமுகம் இட உள்ளேன்.

திருவிளையாடல் திரைப்படத்தில், "இலக்கணத்தைப் படித்துவிட்டுப் பாட்டு எழுதுபவர்கள் இருக்கின்றார்கள். எழுதிவிட்டும் இலக்கணத்தைப் படியாதவர்கள் இருக்கின்றார்கள். இதில் நீர் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர் என்பது உமக்கே தெரியும்" என்று நாகேஷ் வசனம் பேசியதுபோல் என் காதில் கேட்கின்றது! :)

"என் வழி தனி வழி" என்றபடி இது தொடங்க உள்ளது. ஆனால் என்னைத் தனியே விட்டுவிடாமல் நீங்களும் கூடவருவீர்கள் என்று நம்புகின்றேன்!

வி. சுப்பிரமணியன்

--
"மதிசூடி துதிபாடி" blog: http://madhisudi.blogspot.com/

Vis Gop

unread,
Jun 2, 2020, 2:18:09 PM6/2/20
to santhav...@googlegroups.com
கூட்டிச் செல்லுங்கள். கூட வருகிறோம். ஒரு வரலாறு படைப்போம். 
நல்வாழ்த்துகள்.  
கோபால். 

Sent from my iPhone

Ramamoorthy Ramachandran

unread,
Jun 2, 2020, 9:12:51 PM6/2/20
to Santhavasantham
பக்கத்தில் பாருங்கள், நானும் தொடர்வேன்! 
- புலவர் 

--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/EDCC7E3C-8DF6-4543-AEA9-FDF9669735AF%40gmail.com.

Pas Pasupathy

unread,
Jun 2, 2020, 9:32:37 PM6/2/20
to Santhavasantham
மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்! 

சந்தம்! சந்தம்! சந்தம்!
சந்த மொலிக்கும் பாவில் மிளிரும்
அந்தம்! அந்தம்! அந்தம்! 

தொடர்வேன்! படிப்பேன்! ரசிப்பேன்!  

ramaNi

unread,
Jun 2, 2020, 9:37:20 PM6/2/20
to சந்தவசந்தம்
சிவசிவாவின் திருவிளையாடலில் ஒரு பெரிய மாற்றம்: (சந்தக்) கேள்விகளை அவர் தருவார். விடைகளை நாம். 
தொடர்வீர் தொடர்வோம்!
ரமணி

Swaminathan Sankaran

unread,
Jun 3, 2020, 8:27:08 AM6/3/20
to santhav...@googlegroups.com
மிக்க மகிழ்ச்சி. உங்கள் விளக்கங்களையும், பாடங்களையும் ஆவலுடன் எதிர்பார்க்கும்.

சங்கரன் 

--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Jun 3, 2020, 8:42:07 AM6/3/20
to santhavasantham

சந்தம் ஆர் தமிழ் - சம்பந்தர் அருளிய தேன் சிந்தும் அரவிந்தம்

சந்தம் ஆர் தமிழ் - சந்தம் நிறைந்த தமிழ். சந்தத்தமிழ் யார் தந்தது?

சம்பந்தர் பாடியருளிய, என்றும் கந்தம் கமழத் தேன் சிந்துகின்ற வாடாத தமிழ் அரவிந்தம் இது!

யாப்பிலக்கண நூல்களைக் கல்லாத என்னைச் சந்தத்தை விளக்கச் சொல்கின்றீர்கள்!

என் எண்ணத்தில் - சந்தம் என்பது புரிந்துகொள்ள எளிது.

பாடல் இயற்றும்பொழுது சந்தத்திற்குத் தக்க சொற்களைத் தேர்ந்தெடுப்பதுதான் சற்றுச் சிரமமாக இருக்கக்கூடும்.

லகு, குரு - இவற்றின் அடிப்படையைப் புரிந்துகொண்டுவிட்டால், முன்னோர் பாடல்களைப் படிக்கப் படிக்கச் சந்தப்பாடல்கள் எழுதுவதில் முன்னேற்றம் தானே வந்துவிடும்.

பசுபதியார் எழுதிய "கவிதை இயற்றிக் கலக்கு" நூலில் - பாடங்கள் 37 - 45 காண்க.

"நீ படித்தாயா" என்று என்னைக் கேட்கக்கூடாது ! :)

(நீங்கள் கேட்பதன் முன்னமே அவ்வினாவிற்கு விடையை ஏற்கெனவே சொல்லிவிட்டேன்! )

அப்பாடங்களைப் படிக்கும்பொழுது உங்களுக்கு ஐயங்களும் வினாக்களும் எழக்கூடும். அப்படி எழுந்தால் அவற்றை இவ்விழையில் கேளுங்கள்.

உங்களோடு நானும் கற்றுப், பின் நான் புரிந்துகொண்ட அளவில் விளக்க முயல்வேன்.

குழுவில் உள்ள வல்லுநர்களும் கைகொடுப்பர்!

நான் இங்கே எழுதவிருப்பதில் ஏதேனும் பிழைகள் இருக்குமாயின், சுட்டிக்காட்டி உதவுக!

பொந்தின்னிடைத் தேனூறிய பொழில்சூழ்புள மங்கை

அந்தண்புனல் வருகாவிரி ஆலந்துறை யானைக்

கந்தம்மலி கமழ்காழியுட் கலைஞானசம் பந்தன்

சந்தம்மலி பாடல்சொலி ஆடத்தவம் ஆமே

                                                  (சம்பந்தர் தேவாரம் - 1.16.11)

வி. சுப்பிரமணியன்

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jun 3, 2020, 10:24:25 AM6/3/20
to சந்தவசந்தம்
சந்தமணி* சங்கரன் அடியார் சந்தமணி சிவசிவா தலைமையில் நடக்கப் போகும் இந்தக் கவியரங்கத்தில் பங்கேற்க ஆசை எழுகிறது. எனினும் சில காரணங்களால் இப்போதைக்குப் பெயர் கொடுக்க இயலாமல் உள்ளேன். பயிற்சி வகுப்பும் கவியரங்கமும் மிகச் சிறப்பாக அமைய என் வாழ்த்துகள். 

அனந்த் 3-6-2020
*சந்தம் அணி

On Wed, Jun 3, 2020 at 8:42 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

சந்தம் ஆர் தமிழ் - சம்பந்தர் அருளிய தேன் சிந்தும் அரவிந்தம்

சந்தம் ஆர் தமிழ் - சந்தம் நிறைந்த தமிழ். சந்தத்தமிழ் யார் தந்தது?

சம்பந்தர் பாடியருளிய, என்றும் கந்தம் கமழத் தேன் சிந்துகின்ற வாடாத தமிழ் அரவிந்தம் இது!

சந்தப்பாடல்கள் எழுதுவதில் முன்னேற்றம் தானே வந்துவிடும்.

Siva Siva

unread,
Jun 4, 2020, 8:15:53 AM6/4/20
to santhavasantham

சந்தம் - 101

1)

இயற்றமிழ்ப் பாடல் உறுப்புகள் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்பன. இவற்றுள் அசை, தளை என்ற இரண்டும் சந்தப்பாடல்களில் பொதுவாகத் தேவையில்லை.

(விதிவிலக்கு என்ற வகையில், சம்பந்தர் தேவாரத்தில் சில இடங்களில் வெண்டளை போன்ற ஒரு கருத்தைக் காணலாம்.

உதாரணம்: சம்பந்தர் தேவாரம் 1.135 பதிகத்தின் சில பாடல்களில் ஈற்றடியிற் காண்க);

அதேபோல் சீர்களின் குறியீடுகளான (வாய்பாடு) தேமா, புளிமா, கூவிளம், கருவிளம், தேமாங்காய், இத்யாதி இவையும் பொதுவாகத் தேவையில்லை. பழக்கதோஷத்தால் வேண்டுமாயின் மனத்தில் ஒரு பக்கத்தில் வைத்துக்கொள்ளல் ஆம்!

2) சந்தம் - அலகிடல்:

2.1) குரு/லகு :

ஒவ்வொரு எழுத்தையும் (syllable) நோக்கவேண்டும்.

குரு = 2 மாத்திரை = நெடில் / நெடில்+ஒற்றுகள் / குறில்+ஒற்றுகள் / அடி ஈற்றில் வரும் குறில்

லகு = 1 மாத்திரை = குறில்

இது வடமொழி யாப்பின் அடிப்படையாக உள்ளது. ( பிற தென்னிந்திய மொழிகளிலும் இதுவே அலகிடலின் அடிப்படை).

குருவை நன்கு பிடித்துக்கொண்டுவிட்டீர்கள் என்றால் பின் எல்லாம் லகுவே! :)

உதாரணம்:

பதி - லகு லகு

பார் - குரு

பார்த்தான் - பார்த்/தான் - குரு குரு

படிக்கின்றவன் - /டிக்/கின்//வன் - லகு குரு குரு லகு குரு

2.2) ஐகாரக் குறுக்கம்:

வடமொழியில் '' ஒலி எவ்விடத்தும் நெடிலாகவே கருதப்படும்.

தமிழில் 'ஐகாரக் குறுக்கம்' - தமிழ் யாப்பில் எங்கெல்லாம் '' ஒலி குறில்போல அலகிடப்படுமோ அங்கெல்லாம், 'லகு' என்று கருதவேண்டும்.

உதாரணம்:

மையல் - மை/யல் - குரு குரு

உண்மை - உண்/மை - குரு லகு

குடையை - கு/டை/யை - லகு லகு லகு

பயிற்சி:

கீழுள்ள சொற்றொடர்களைச் சந்த அடிப்படையில் அலகிடுக.

பீடினால்

பெரியோர்களும்

பேதைமை

கெடத்

தீதிலா

பெரிய

மேருவரையே

சிலையா

மலைவுற்றார்

வி. சுப்பிரமணியன்

On Wed, Jun 3, 2020 at 8:41 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

சந்தம் ஆர் தமிழ் - சம்பந்தர் அருளிய தேன் சிந்தும் அரவிந்தம்

--

Vis Gop

unread,
Jun 4, 2020, 12:30:19 PM6/4/20
to santhav...@googlegroups.com

பயிற்சி:

கீழுள்ள சொற்றொடர்களைச் சந்த அடிப்படையில் அலகிடுக.

பீடினால்:   குரு லகு குரு

பெரியோர்களும்:   லகு லகு குரு லகு குரு

பேதைமை:   குரு லகு குரு

கெடத்: லகு குரு

தீதிலா:   குரு லகு குரு

பெரிய:   லகு லகு லகு

மேருவரையே:    குரு லகு லகு லகு குரு

சிலையா:   லகு லகு குரு

மலைவுற்றார்:   லகு லகு குரு குரு

கோபால் 4.6.20

Sent from my iPhone

V. Ramasamy

unread,
Jun 4, 2020, 12:48:42 PM6/4/20
to santhav...@googlegroups.com
பயிற்சி: சந்த அடிப்படையில்                        அலகிடல்:
*****

பீடினால்    : குரு, லகு, குரு.

பெரியோர்களும்: லகு, லகு, குரு, லகு, குரு.

பேதமை: குரு, லகு, லகு.

கெடத்:  லகு, குரு.

தீதிலா:  குரு, லகு, குரு.

பெரிய:  லகு, லகு, லகு.

மேருவரையே: குரு, லகு, லகு, லகு, குரு.

சிலையா: லகு, லகு, குரு.

மலைவுற்றார்: லகு, லகு, குரு, குரு.

V. ராமசாமி (ராமு).

--

Subbaier Ramasami

unread,
Jun 4, 2020, 3:01:42 PM6/4/20
to santhavasantham
குருவைப் பிடித்தோம் லகுவில் கற்போம்.
 ஏற்கனவே அறிந்தவர்களும் போகப்போகபக் கிடைக்கும் புதுத் தெளிவிற்காகப் பயிற்சியில் பங்கெடுத்துக் கொள்ளலாம்

பீடினால்                       குரு லகு குரு

பெரியோர்களும்                 லகு லகு குரு லகு குரு

பேதைமை                     குரு லகு லகு

கெடத்                          லகு குரு

தீதிலா                           குரு லகு குரு

பெரிய                           லகு லகு லகு

மேருவரையே                   குருலகுலகுலகு குரு

சிலையா                        லகு லகு குரு

மலைவுற்றார்                      லகு லகு குரு குரு

--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Jun 4, 2020, 11:37:29 PM6/4/20
to santhavasantham
One minor oversight.

Siva Siva

unread,
Jun 4, 2020, 11:39:04 PM6/4/20
to santhavasantham
Good.

ramaNi

unread,
Jun 4, 2020, 11:49:04 PM6/4/20
to சந்தவசந்தம்
மாத்திரைச் சந்தம் அலகிடல்

பீடினால்: குரு லகு குரு 
பெரியோர்களும்: லகு லகு குரு  லகு குரு 
பேதைமை: குரு லகு லகு
கெடத்: லகு குரு
தீதிலா: குரு லகு குரு
பெரிய: லகு லகு லகு
மேருவரையே: குரு லகு லகு லகு குரு
சிலையா: லகு லகு குரு
மலைவுற்றார்: லகு லகு குரு குரு

ரமணி

Anu

unread,
Jun 5, 2020, 4:17:06 AM6/5/20
to santhav...@googlegroups.com
வணக்கம் சார்.

பீ/டி/னால் = குரு லகு குரு 

பெ/ரி/யோர்/க/ளும் = லகு லகு குரு லகு குரு 

பே/தை/மை =குரு லகு லகு

கெ/டத் = லகு குரு 

தீ/தி/லா = குரு லகு குரு 

பெ/ரி/ய = லகு லகு லகு

மே/ரு/வ/ரை/யே = குரு லகு லகு லகு குரு 

சி/லை/யா = லகு லகு குரு

ம/லை/வுற்/றார் = லகு லகு குரு குரு 

-----

எனது தெளிவிற்காக ஒரு வினா....

சொல்லின் முதலில் வரும் ஐ = குரு 

சொல்லின் இடையிலும், கடையிலும் வரும் ஐ = லகு

இந்த புரிதல் சரியா?

----

மிக்க நன்றியுடன் 

அனு 

--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhavasantham@googlegroups.com

குழுவிலிருந்து விலக:

குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.

--
Many thanks.
Best regards
Anu

Siva Siva

unread,
Jun 5, 2020, 8:58:29 AM6/5/20
to santhavasantham
/எனது தெளிவிற்காக ஒரு வினா....

சொல்லின் முதலில் வரும் ஐ = குரு 

சொல்லின் இடையிலும், கடையிலும் வரும் ஐ = லகு

இந்த புரிதல் சரியா?/

ஆம். பொதுவாக அப்படியே.

Siva Siva

unread,
Jun 5, 2020, 9:06:08 AM6/5/20
to santhavasantham

3) சந்த அமைப்புக் குறியீடுகள்:

3.1) சந்த அமைப்பு - அடிப்படைக் குறியீடுகள்:

தன, தான, தனா, தானா, தனன, தனதன, இத்யாதி - இவை ஒரு பாடலின் சந்த அமைப்பைச் சுட்டும் குறியீடுகள்.

, , - லகு

தா, னா - குரு

சில சமயம், சில நூல்களில் சில பாடல்களின் அமைப்பைச் சுட்டும் சந்த வாய்பாட்டில் தந்த, தத்த, தய்ய, தன்ன போன்ற குறியீடுகளைக் காணக்கூடும். அவை வண்ணப்பாடல்களுக்கே பொருந்தும். வண்ணம் அல்லாத சந்தப்பாடல்களுக்கு அக்குறியீடுகள் பொருந்தா. இங்கே நாம் எடுத்துக்கொண்ட syllabus-இல் வண்ணப்பாடல் இல்லை!

உதாரணம்:

"உண்ணாமுலை யுமையாளொடு முடனாகிய வொருவன்" -

உண்ணாமுலை - தானாதன

யுமையாளொடு - தனதானன

முடனாகிய - தனதானன

வொருவன் - தனனா

3.2) சந்தக்குழிப்பு - பாடலின் சந்த வாய்பாடு -

இது பாடலின் ஓர் அடியின் அமைப்பையோ (அன்றேல், அரையடி, காலடி, என்று பாடலின் அடிப்படையாக உள்ள சந்த அமைப்பையோ) குறிக்கும்.

சந்தக்குழிப்பின் இறுதியில் வரும் ஒலி அலகிடும்பொழுது குருவாகக் கருதப்படுவதால், சந்தக்குழிப்பில் அதனை "" என்றோ 'னா" என்றோ குறிப்பிடலாம்.

சில முடுகு அமையும் அசந்தங்களில் அடியின் ஈற்றில் வரும் ஓசையும் லகுவாக அமையும். அவ்விடங்களில் பாடலில் லகுவே அமையும். சந்தக்குழிப்பிலும் ஈற்றுச் சந்தத்தில் தனதன, தனன, போலக் குறிலே சுட்டப்பெறும்.

உதாரணம்:

"தானன தானன தான தானன"

"தான தான தானனா"

பயிற்சி:

1. கீழுள்ள பாடல் அடிகளின் சந்தக் குழிப்பு என்ன?

"நாற்ற மாமல ரானொடு மாலுமாய்த்

தோற்ற மும்மறி யாதவர்" - (சம்பந்தர் தேவாரம் - 1.135.9)

2. கீழ்க்காணும் பாடலின் அடிகளின் சந்த அமைப்பை அலகிடுக. எல்லா அடிகளும் ஒரே சந்த அமைப்பில் உள்ளனவா?

ஆதியடி யைப்பணிய வப்பொடு மலர்ச்சேர்

சோதியொளி நற்புகை வளர்க்குவடு புக்குத்

தீதுசெய வந்தணையு மந்தக னரங்கக்

காதின னிருப்பது கருப்பறிய லூரே. (சம்பந்தர் தேவாரம் - 2.31.7)

வி. சுப்பிரமணியன்

On Thu, Jun 4, 2020 at 8:15 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

சந்தம் - 101

Anu

unread,
Jun 5, 2020, 10:58:52 AM6/5/20
to santhav...@googlegroups.com

வணக்கம் ஐயா.

பயிற்சி:

1. கீழுள்ள பாடல் அடிகளின் சந்தக் குழிப்பு என்ன?

"நாற்ற மாமல ரானொடு மாலுமாய்த்

தோற்ற மும்மறி யாதவர்" - (சம்பந்தர் தேவாரம் - 1.135.9)

<b> தான தானன தானன தானனா 

தான தானன தானனா </b>

2. கீழ்க்காணும் பாடலின் அடிகளின் சந்த அமைப்பை அலகிடுகஎல்லா அடிகளும் ஒரே சந்த அமைப்பில் உள்ளனவா?

ஆதியடி யைப்பணிய வப்பொடு மலர்ச்சேர்

சோதியொளி நற்புகை வளர்க்குவடு புக்குத்

தீதுசெய வந்தணையு மந்தக னரங்கக்

காதின னிருப்பது கருப்பறிய லூரே. (சம்பந்தர் தேவாரம் - 2.31.7)

<b>

தானனன தானனன தானன தானா

தானனன தானன தானனன தானா

தானனன தானனன தானன தனானா

தானன தனானன தனானனன தானா

இல்லை, எல்லா அடிகளும் வெவ்வேறு சந்த அமைப்பில் உள்ளன.

</b>

மிக்க நன்றியுடன்

அனு 00

--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhavasantham@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasantham+unsubscribe@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCOnxPfJGy-Rpw6-p8kNpzYQyRZWU9LE%2BE_BHx_57uwuzQ%40mail.gmail.com.

V. Ramasamy

unread,
Jun 6, 2020, 5:22:45 AM6/6/20
to santhav...@googlegroups.com

V. Ramasamy

unread,
Jun 6, 2020, 8:20:07 AM6/6/20
to சந்தவசந்தம்
3.1: நாற்ற மாமல ரானொடு மாலுமாய்த்
தான தானன தானன தானனா

தோற்ற மும்மறி யாதவர்

தான தானன தானனா.

3.2: ஆதியடி யைப்பணிய வப்பொடு மலர்ச்சேர்

தானனன தானனன தானன தனானா

சோதியொளி நற்புகை வளர்க்குவடு புக்குத்

தானனன தானன தனானனன தானா

தீதுசெய வந்தனையு மந்தக னரங்கத்
தானனன தானனன தான தனானா

காதின னிருப்பது கருப்பறிய லூரே

தானன தனானன தனானனன தானா.

அடிகள் சந்த அமைப்பில் வேறுபட்டுள்ளன.

ராமு.

Vis Gop

unread,
Jun 6, 2020, 10:59:52 AM6/6/20
to santhav...@googlegroups.com

பயிற்சி:

1. கீழுள்ள பாடல் அடிகளின் சந்தக் குழிப்பு என்ன?

"நாற்ற மாமல ரானொடு மாலுமாய்த்

தோற்ற மும்மறி யாதவர்" - (சம்பந்தர் தேவாரம் - 1.135.9)

தான தானன தானன தானனா
தான தானன தானனா

2. கீழ்க்காணும் பாடலின் அடிகளின் சந்த அமைப்பை அலகிடுகஎல்லா அடிகளும் ஒரே சந்த அமைப்பில் உள்ளனவா?

ஆதியடி யைப்பணிய வப்பொடு மலர்ச்சேர்

சோதியொளி நற்புகை வளர்க்குவடு புக்குத்

தீதுசெய வந்தணையு மந்தக னரங்கக்

காதின னிருப்பது கருப்பறிய லூரே. (சம்பந்தர் தேவாரம் - 2.31.7)

இல்லை. ஆனால் திருத்தி ஒரே அமைப்பில் கொண்டுவர இயலும். 

ஆதியடி யைப்பணிய வப்பொடும லர்ச்சேர்

சோதியொளி நற்புகைவ ளர்க்குவடு புக்குத்

தீதுசெய வந்தணையு மந்தகன ரங்கக்

காதினனி ருப்பதுக ருப்பறிய லூரே

ஒவ்வொரு அடிக்கும் ஒரே வாய்பாடு:
தானதன தானதன தானதன தானா

நல்வாழ்த்துகள் 
கோபால். 
Sent from my iPhone

Siva Siva

unread,
Jun 6, 2020, 12:07:31 PM6/6/20
to santhavasantham
I have highlighted some places where your scansion may have errors.

Siva Siva

unread,
Jun 6, 2020, 12:09:43 PM6/6/20
to santhavasantham
 
I have highlighted one place where your scansion may need review. 
 
Siva Siva

unread,
Jun 6, 2020, 12:11:35 PM6/6/20
to santhavasantham
Good.

Siva Siva

unread,
Jun 6, 2020, 2:37:25 PM6/6/20
to santhavasantham

ஆதியடி யைப்பணிய வப்பொடு மலர்ச்சேர்

சோதியொளி நற்புகை வளர்க்குவடு புக்குத்

தீதுசெய வந்தணையு மந்தக னரங்கக்

காதின னிருப்பது கருப்பறிய லூரே.      (சம்பந்தர் தேவாரம் - 2.31.7)

இப்பாடலில் அடிகளிடையே சீர்களின் சந்த அமைப்பு வேறுபடுவதுபோல் தோன்றினும், தேவைப்படும் இடங்களில் சீர் பிரித்தலைச் சற்று மாற்றி நோக்கினால் எல்லா அடிகளிலும்

"தானதன தானதன தானதன தானா"

என்ற சந்தம் பயில்வதைக் காணலாம்.

வி. சுப்பிரமணியன்

On Fri, Jun 5, 2020 at 9:05 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

3) சந்த அமைப்புக் குறியீடுகள்:

Siva Siva

unread,
Jun 6, 2020, 10:47:43 PM6/6/20
to santhavasantham

4) அளவியற் சந்தம் -

எல்லா அடிகளிலும் ஒரே சந்த அமைப்பு வருவது. அதனால் கட்டளை அடிகளும் அமையும்.

உதாரணம்:

"தனனா தனனா தனனா தனனா"

"தானதன தானதன தானதன தானா"

5) அளவழிச் சந்தம் -

பிறமொழிகளில் இதனை "மாத்திரைச் சந்தம்" (matra chandas) என்பர்.

அடிகளில் வரும் மொத்த மாத்திரைக் கணக்கு மட்டும் கருதப்படும். (வேறு கட்டுப்பாடுகளும் அமையக்கூடும்). அதனால், அடிகளிடையே (அல்லது சீர்தோறும்) காணும் லகு, குரு அமைப்பு வேறுபடலாம். அடிகளிடையே எழுத்தெண்ணிக்கையும் வேறுபடலாம்.

உதாரணம்:

பஜகோவிந்தம்: அடிதோறும் 16 மாத்திரை.

मूढ जहीहि धनागमतृष्णां

कुरु सद्बुद्धिं मनसि वितृष्णाम् .

यल्लभसे निजकर्मोपात्तं

वित्तं तेन विनोदय चित्तम् .. ..

மூட⁴ ஜஹீஹி த⁴னாக³மத்ருʼஷ்ணாம்ʼ = 16 மாத்திரை (11 எழுத்துகள்)

குரு ஸத்³பு³த்³தி⁴ம்ʼ மனஸி வித்ருʼஷ்ணாம் . = 16 மாத்திரை (11 எழுத்துகள்)

யல்லப⁴ஸே நிஜகர்மோபாத்தம்ʼ = 16 மாத்திரை (10 எழுத்துகள்)

வித்தம்ʼ தேன வினோத³ய சித்தம் .. 2.. = 16 மாத்திரை (10 எழுத்துகள்)

குறிப்பு : வடமொழியில் க்ருʼ, த்ருʼ முதலிய எழுத்துகள் குறில். அவை சம்யுக்தாக்ஷரம் என்று (அதாவது கூட்டெழுத்தாகக்) கருதப்படமாட்டா. பாடலில் அலகிடும்பொழுதும் அப்படியே.

உதாரணம்:

प्रकृति - ப்ரக்ருʼதி - 3 மாத்திரை

विकृति - விக்ருʼதி - 3 மாத்திரை

पितृ - பித்ருʼ - 2 மாத்திரை

பயிற்சி:

1. கீழ்க்காணும் பாடலின் சந்த அமைப்பையும் மாத்திரைக் கணக்கையும் அலகிடுக. இஃது அளவியற் சந்தமா?

வரைத்தலைப் பசும்பொனோ டருங்கலன்க ளுந்திவந்

திரைத்தலைச் சுமந்துகொண் டெறிந்திலங்கு காவிரிக்

கரைத்தலைத் துருத்திபுக் கிருப்பதே கருத்தினாய்

உரைத்தலைப் பொலிந்துனக் குணர்த்துமாறு வல்லமே. (சம்பந்தர் தேவாரம் - 2.98.1)

2. கீழ்க்காணும் பாடலின் சந்த அமைப்பையும் மாத்திரைக் கணக்கையும் அலகிடுக.

கழுமல நகரிறை உமைவர

அழுதவ ரிசையார் தமிழினை அருளிய நாவர்

வழுதியை நீறணி வித்தார்

பழுதில் புகழார் அடியிணை பணிமட நெஞ்சே.

வி. சுப்பிரமணியன்

On Fri, Jun 5, 2020 at 9:05 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

3) சந்த அமைப்புக் குறியீடுகள்:

Vis Gop

unread,
Jun 7, 2020, 4:00:45 AM6/7/20
to santhav...@googlegroups.com

பயிற்சி:

1. கீழ்க்காணும் பாடலின் சந்த அமைப்பையும் மாத்திரைக் கணக்கையும் அலகிடுகஇஃது அளவியற் சந்தமா?

வரைத்தலைப் பசும்பொனோ டருங்கலன்க ளுந்திவந்

திரைத்தலைச் சுமந்துகொண் டெறிந்திலங்கு காவிரிக்

கரைத்தலைத் துருத்திபுக் கிருப்பதே கருத்தினாய்

உரைத்தலைப் பொலிந்துனக் குணர்த்துமாறு வல்லமே.

சந்தம்: 
இஃது அளவியற் சந்தமே. 
24 மாத்திரைகள் கொண்டது. 
தனாதனா தனாதனா தனாதனான தானனா 

2. கீழ்க்காணும் பாடலின் சந்த அமைப்பையும் மாத்திரைக் கணக்கையும் அலகிடுக.

கழுமல நகரிறை உமைவர

அழுதவ ரிசையார் தமிழினை அருளிய நாவர்

வழுதியை நீறணி வித்தார்

பழுதில் புகழார் அடியிணை பணிமட நெஞ்சே.

மாத்திரைச் சந்த அமைப்பு. 
12, 20 மாத்திரைகள் கொண்ட இரட்டைகளாக அமைந்துள்ளது. 

நல்வாழ்த்துகள் 
கோபால். 
Sent from my iPhone

ramaNi

unread,
Jun 7, 2020, 6:37:57 AM6/7/20
to சந்தவசந்தம்
பயிற்சி:
1. கீழ்க்காணும் பாடலின் சந்த அமைப்பையும் மாத்திரைக் கணக்கையும் அலகிடுக. இஃது அளவியற் சந்தமா?

(சம்பந்தர் தேவாரம் - 2.98.1)
வரைத்தலைப் பசும்பொனோ டருங்கலன்க ளுந்திவந்
தனாதனா தனாதனா தனாதனான தானனா
6 + 6 + 7 + 5 = 24 மாத்திரைகள் (16 எழுத்துகள்)

திரைத்தலைச் சுமந்துகொண் டெறிந்திலங்கு காவிரிக்
தனாதனா தனாதனா தனாதனான தானனா
6 + 6 + 7 + 5 = 24 மாத்திரைகள் (16 எழுத்துகள்)

கரைத்தலைத் துருத்திபுக் கிருப்பதேக ருத்தினாய்
தனாதனா தனாதனா தனாதனான தானனா
6 + 6 + 7 + 5 = 24 மாத்திரைகள் (16 எழுத்துகள்)

உரைத்தலைப் பொலிந்துனக் குணர்த்துமாறு வல்லமே. 
தனாதனா தனாதனா தனாதனான தானனா
6 + 6 + 7 + 5 = 24 மாத்திரைகள் (16 எழுத்துகள்)

அளவியற் சந்தம், கட்டளை அடிகள்

*****
2. கீழ்க்காணும் பாடலின் சந்த அமைப்பையும் மாத்திரைக் கணக்கையும் அலகிடுக.

கழுமல நகரிறை உமைவர
தனதன தனதன தனதன
4 + 4 + 4 = 12 மாத்திரகள் (12 எழுத்துகள்)

அழுதவ ரிசையார் தமிழினை அருளிய நாவர்
தனதன தனனா தனதன தனதன தானா
4 + 4 + 4 + 4 + 4 = 20 மாத்திரகள் (17 எழுத்துகள்)

வழுதியை நீறணி வித்தார்
தனதன தானன தானா
4 + 4 + 4 = 12 மாத்திரகள் (9 எழுத்துகள்)

பழுதில் புகழார் அடியிணை பணிமட நெஞ்சே.
தனனா தனனா தனதன தனதன தானா
4 + 4 + 4 + 4 + 4 = 20 மாத்திரகள் (16 எழுத்துகள்)

மாத்திரைச் சந்தம்: 12, 20 என்று திரும்பும் மாத்திரைகள்.

அன்புடன்,
குருநாதன் ரமணி

*****

Anu

unread,
Jun 7, 2020, 7:23:58 AM6/7/20
to santhav...@googlegroups.com
Thank you sir!
--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhavasantham@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasantham+unsubscribe@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCOcqNrTxXT%3DWdBN%2BTC7wVj7hh8P_t9cBgC2x_Rx1OkRrQ%40mail.gmail.com.

Ashok Subramaniam

unread,
Jun 7, 2020, 9:46:29 AM6/7/20
to santhavasantham
அன்பு சிவா,

சிவசிவ என்னவும் சீர்த்தியாய்ச் சந்தம்

நவநவ மாய்வரும் நன்றெனவே நம்பித்

தவமே யிருந்தோர் தவத்திற் கிசைவீர்

உவந்தளிப்பீர் சந்த உணர்வு/உறவு/உணவு

--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com

குழுவிலிருந்து விலக:

குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAF%2Bqia248rDAeecEu%3Dw4ixS9bx_G6NE1BYamXJWEjvzT_Lu4yQ%40mail.gmail.com.

--

V. Ramasamy

unread,
Jun 7, 2020, 1:26:26 PM6/7/20
to சந்தவசந்தம்
4. அளவியற் சந்தம்:

பயிற்சி:

கீழ்க்காணும் பாடலின் சந்த அமைப்பையும் மாத்திரைக் கணக்கிடுக.

இஃது அளவியற் சந்தமா?

வரைத்தலைப் பசும்பொனோ டருங்கலன்க ளுந்திவந்
திரைத்தலைச் சுமந்துகொண் டெறிந்திலங்கு காவிரிக்

கரைத்தலைத் துருத்திபுக் கிருப்பதேக ருத்தினாய்

உரைத்தலைப் பொலிந்துனக் குணர்த்துமாறு வல்லமே.

தனாதனா தனாதனா தனாதனான தானனா (24 மாத்திரைகள், 16 எழுத்துகள்)

தனாதனா தனாதனா தனாதனான தானனா (24 மாத்திரைகள், 16 எழுத்துகள்)

தனாதனா தனாதனா தனாதனான தானனா (24 மாத்திரைகள், 16 எழுத்துகள்)

தனாதனா தனாதனா தனாதனான தானனா (24 மாத்திரைகள், 16 எழுத்துகள்).

எல்லா அடிகளிலும் ஒரே சந்த அமைப்பு இருப்பதாலும், மாத்திரைகளும் எழுத்துகளும் எல்லா அடிகளிலும் ஒரே எண்ணிக்கையில் இருப்பதாலும் இது அளவியற் சந்தமே.

5. அளவழி (அல்லது) மாத்திரைச் சந்தம்:

பயிற்சி:

கீழ்க்காணும் பாடலின் சந்த அமைப்பையும் மாத்திரைக் கணக்கையும் அலகிடுக:

கழுமல நகரிறை உமைவர
அழுதவ ரிசையார் தமிழினை அருளிய நாவர்
வழுதியை நீறணி வித்தார்

பழுதில் புகழார் அடியினை பணிமட நெஞ்சே.

தனதன தனதன தனதன(12 மாத்திரைகள், 12 எழுத்துகள்)

தனதன தனனா தனதனா தனதன தானா (20 மாத்திரைகள் 17 எழுத்துகள்)

தனதன தானன தானா (12 மாத்திரைகள், 9 எழுத்துகள்)

தனனா தனனா தனதன தனதன தானா

(20 மாத்திரைகள், 16 எழுத்துகள்).

மாத்திரைகள் அடிகளுக்கிடையே 12, 20, 12, 20 என வேறுபட்டு வருவதாலும் அடிகளிடையே எழுத்தெண்ணிக்கையும் வேறுபட்டு வருவதாலும் இஃது அளவழி (அல்லது)
மாத்திரைச் சந்தமாகும்.

அன்புடன்,
ராமு.

Siva Siva

unread,
Jun 7, 2020, 9:51:25 PM6/7/20
to santhavasantham
Good.

Siva Siva

unread,
Jun 7, 2020, 9:54:00 PM6/7/20
to santhavasantham
On Sat, Jun 6, 2020 at 10:47 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

4) அளவியற் சந்தம் -

5) அளவழிச் சந்தம் -

பயிற்சி:

1. கீழ்க்காணும் பாடலின் சந்த அமைப்பையும் மாத்திரைக் கணக்கையும் அலகிடுக. இஃது அளவியற் சந்தமா?

வரைத்தலைப் பசும்பொனோ டருங்கலன்க ளுந்திவந்

திரைத்தலைச் சுமந்துகொண் டெறிந்திலங்கு காவிரிக்

கரைத்தலைத் துருத்திபுக் கிருப்பதே கருத்தினாய்

உரைத்தலைப் பொலிந்துனக் குணர்த்துமாறு வல்லமே. (சம்பந்தர் தேவாரம் - 2.98.1)

 1. இஃது அளவியற் சந்தம்.

இப்பாடலின் சந்தக்குழிப்பு: "தனாதனா தனாதனா தனாதனா தனாதனா"

தேவாரப் பாடல்களைச் சில சமயம் சந்தம் சிதையாதபடி பொருள்தெளிவு கருதிச் சீர் பிரித்தலும் உண்டு. அதனால் அடியின் சீர்களின் சந்த அமைப்பு வேறுபடுவதுபோல் தோற்றம் இருக்கினும் ஒலியமைப்பில் மாற்றமின்மையை உணரலாம்.

இப்பாடலில் 1, 2, 4-ஆம் அடிகளில் சீர் 3-4 இவ்வாறு அமைந்துள்ளன.

வடமொழியில் கணேச பஞ்சரத்தினம் இந்த அமைப்பே.

முதா³கராத்தமோத³கம்ʼ ஸதா³ விமுக்திஸாத⁴கம்ʼ

கலாத⁴ராவதம்ʼஸகம்ʼ விலாஸிலோகரக்ஷகம்

அநாயகைகநாயகம்ʼ விநாஶிதேப⁴தை³த்யகம்ʼ

நதாஶுபா⁴ஶுநாஶகம்ʼ நமாமி தம்ʼ விநாயகம் ( 1 )

2. கீழ்க்காணும் பாடலின் சந்த அமைப்பையும் மாத்திரைக் கணக்கையும் அலகிடுக.

கழுமல நகரிறை உமைவர

அழுதவ ரிசையார் தமிழினை அருளிய நாவர்

வழுதியை நீறணி வித்தார்

பழுதில் புகழார் அடியிணை பணிமட நெஞ்சே.

2. இது மாத்திரைச் சந்தத்தில் அமைந்த பாடல்.

தனதன தனதன தனதன (= 12 மாத்திரை)

தனதன தனனா தனதன தனதன தானா (= 20 மாத்திரை)

தனதன தானன தானா (= 12 மாத்திரை)

தனனா தனனா தனதன தனதன தானா (= 20 மாத்திரை)

(இது தெலுங்கு/கன்னட மொழிகளில் உள்ள "கந்த பத்யம்" என்ற அமைப்பை ஒட்டிய பாடல்

கந்த பத்ய அமைப்பின் மற்ற விதிகளின் விளக்கம் இங்கே தேவையில்லை - Out of syllabus! )

வி. சுப்பிரமணியன்

Siva Siva

unread,
Jun 8, 2020, 9:37:08 AM6/8/20
to santhavasantham

6) சந்தப் பாடல்களில் வடமொழி / தமிழ் (தேவாரம்) இடையே வித்தியாசங்கள்

வடமொழியில் சந்தம் அலகிடுதல், தமிழில் தேவாரத்தில் உள்ள சந்தப்பாடல்களில் அலகிடுதல் இவற்றினிடையே சில வேறுபாடுகளைக் காணலாம்.

6.1) சீர்பிரித்தல் - வடமொழி யாப்பில் சீர்பிரித்தல் என்பது காண இயலாது. (வடமொழியில் 'கணம்' என்று சொல்வது அம்மொழிப் பாடல்களின் சந்த வாய்பாடு சொல்லவே பயன்படுகின்றது. 'ஜாதி' என்று சொல்லப்படும் மாத்திரைச் சந்த அமைப்புகளிலும் எழுதும்போது அம்மொழி யாப்பில் சீர் பிரிக்கும் வழக்கம் இல்லை.

- ஆனால் தமிழில் சந்தப்பாடல்களிலும் சீர் பிரித்தலைக் காணலாம்.

6.2) சீர்தோறும் மாத்திரைக் கணக்கு ஒத்து வருதல். அதாவது முதலடியில் ஒரு சீரில் எத்தனை மாத்திரையோ அதே அளவில் மற்ற அடிகளில் அதே இடத்தில் உள்ள சீர் வருவது. (இதனைப் பரவலாகக் காணலாம். இசைப்பாடல்களில் வேறுபாடுகள் இருக்கக்கூடும்).

உதாரணமாகத் - தானா என்பது தனனா என்றும், தானன என்பது தனதன என்றும் வரக் காணலாம். தானதனா என்பது தானதான என்றும் (தானதான என்பது தானதனா என்றும்) சில பாடல்களில் / சீர்களில் வரக் காணலாம். தானதனா என்பது தானானா என்றும் ஒரோவழி வரக் காணலாம்.

ஆனால் தான என்ற சீர் தனா என்று வாராது (இரண்டும் 3 மாத்திரைகள் எனினும்).

தானன என்ற சீர் தனனா என்று பொதுவாக வாராது (இரண்டும் 4 மாத்திரைகள் எனினும்).

தானா என்ற சீர் தானன என்று பொதுவாக வாராது (இரண்டும் 4 மாத்திரைகள் எனினும்).

6.3) அடிமுதலில் வரும் தா / தன:

தேவாரப் பதிகங்களில் ஒரு பதிகத்தின் எல்லாப் பாடல்களும் பொதுவாக ஒரே ஓசை அமைப்பு உடையன.

ஒரே சந்தத்தில் பல பாடல்கள் எழுதும்பொழுது அடியின் முதற்சீரில் முதலில் வரும் 'தன' என்ற சந்தமும் 'தா' என்ற சந்தமும் பதிகப் பாடல்களிடையே மாறி வரலாம்.

தேவாரப் பதிகங்கள், கந்தர் அனுபூதி முதலியன - இவற்றில் இப்படி அமைவதைக் காணலாம்.

உதாரணம்:

"தனனா தனனா தனனா தனனா"

"தானா தனனா தனனா தனனா"

என்ற இரண்டும் ஒரே பதிகத்தின் வெவ்வேறு பாடல்களில் வரும்.

சடையா யெனுமால் சரண்நீ யெனுமால் - (சம்பந்தர் தேவாரம் - 2.18.1)

சிந்தா யெனுமால் சிவனே யெனுமால் - (சம்பந்தர் தேவாரம் - 2.18.2)

6.4) இடையின மெய்கள் பெரும்பாலான இடங்களில் அலகு பெறா. (சில சமயம் பாடலின் ஓசை கருதி அலகிடப்படுவதும் உண்டு). அதுபோல, மெல்லின மெய்யை அடுத்து மெல்லினம் வரின், சில இடங்களில் அந்த மெல்லின மெய் அலகு பெறாமையைக் காணலாம்.

உதாரணம்:

உரிசெய்து - தனதன

வாழ்க - தான

வான்மியூர் - தானனா

6.5) சீரின் ஈற்றில் வரும் மெய்யெழுத்தைச் சில இடங்களில் அலகிடுவதில்லை. (ஒரோவழி சீரின் இடையே உள்ள மெய்யெழுத்து அலகு பெறாமையையும் காணலாம்).

உதாரணம்:

தானன தனதன தனதன தனதன

தானன தனதன தானா

செந்நெல வயலணி சிறுகுடி மேவிய

ஒன்னலர் புரமெரித் தீரே (சம்பந்தர் தேவாரம் - 3.97.4)

ஒன்னலர் - தானன

புரமெரித் - தனதன

பயிற்சி:

1. கீழ்க்காணும் பாடலின் சந்தக் குழிப்பு என்ன?

நீறு சேர்வதொர் மேனியர் நேரிழை

கூறு சேர்வதொர் கோலமாய்ப்

பாறு சேர்தலைக் கையர் பராய்த்துறை

ஆறு சேர்சடை யண்ணலே. - (சம்பந்தர் தேவாரம் - 1.135.1)

2. கீழ்க்காணும் பாடலின் சந்தக் குழிப்பு என்ன?

சடையுடை யானும்நெய் யாட லானுஞ் சரிகோவண

உடையுடை யானுமை யார்ந்த வொண்கண் ணுமைகேள்வனும்

கடையுடை நன்னெடு மாட மோங்குங் கடவூர்தனுள்

விடையுடை யண்ணலும் வீரட் டானத் தரனல்லனே. (சம்பந்தர் தேவாரம் - 3.8.1)

வி. சுப்பிரமணியன்

On Sat, Jun 6, 2020 at 10:47 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

4) அளவியற் சந்தம் -

5) அளவழிச் சந்தம் -

--

ramaNi

unread,
Jun 8, 2020, 9:58:02 AM6/8/20
to சந்தவசந்தம்
> ஆனால் தான என்ற சீர் தனா என்று வாராது (இரண்டும் 3 மாத்திரைகள் எனினும்).
> தானன என்ற சீர் தனனா என்று பொதுவாக வாராது (இரண்டும் 4 மாத்திரைகள் எனினும்).
> தானா என்ற சீர் தானன என்று பொதுவாக வாராது (இரண்டும் 4 மாத்திரைகள் எனினும்).

விளக்கம் வேண்டுகிறேன்:
தான என்பது ஈரசை, தனா ஓரசை என்பதால் வரதா?
தானன-தனனா, தானா-தானன என்பவை ஈரசைச் சீர்களாதலால் ஏன் ஒன்றுக்கொன்று மாற்றில்லை என விளக்கவேண்டுகிறேன்.

அன்புடன்,
ரமணி

Siva Siva

unread,
Jun 8, 2020, 5:53:50 PM6/8/20
to santhavasantham
On Mon, Jun 8, 2020 at 9:58 AM ramaNi <sai...@gmail.com> wrote:

முன்னோர் பாடல்களில் நான் படித்த / கேட்ட பாடல்களிலிருந்து நான் உணர்ந்ததைச் சொன்னேன். நான் சொன்னது 100% சரி என்று சொல்ல இயலாது.
இலக்கண நூல்களில் வேறு விளக்கங்களும் உதாரணங்களும் இருக்கக்கூடும். யாப்பிலக்கண ஆராய்ச்சி நூல்களில் வேறு விளக்கங்களும் இருக்கக்கூடும். அறிந்தோர் சுட்டக்கூடும்.

On Monday, June 8, 2020 at 7:07:08 PM UTC+5:30, siva siva wrote:

6) சந்தப் பாடல்களில் வடமொழி / தமிழ் (தேவாரம்) இடையே வித்தியாசங்கள்

வடமொழியில் சந்தம் அலகிடுதல், தமிழில் தேவாரத்தில் உள்ள சந்தப்பாடல்களில் அலகிடுதல் இவற்றினிடையே சில வேறுபாடுகளைக் காணலாம்.

Siva Siva

unread,
Jun 8, 2020, 9:32:05 PM6/8/20
to santhavasantham
On Mon, Jun 8, 2020 at 5:53 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

On Mon, Jun 8, 2020 at 9:58 AM ramaNi <sai...@gmail.com> wrote:
> ஆனால் தான என்ற சீர் தனா என்று வாராது (இரண்டும் 3 மாத்திரைகள் எனினும்).
> தானன என்ற சீர் தனனா என்று பொதுவாக வாராது (இரண்டும் 4 மாத்திரைகள் எனினும்).
> தானா என்ற சீர் தானன என்று பொதுவாக வாராது (இரண்டும் 4 மாத்திரைகள் எனினும்).

விளக்கம் வேண்டுகிறேன்:
தான என்பது ஈரசை, தனா ஓரசை என்பதால் வரதா?
தானன-தனனா, தானா-தானன என்பவை ஈரசைச் சீர்களாதலால் ஏன் ஒன்றுக்கொன்று மாற்றில்லை என விளக்கவேண்டுகிறேன்.

முன்னோர் பாடல்களில் நான் படித்த / கேட்ட பாடல்களிலிருந்து நான் உணர்ந்ததைச் சொன்னேன். நான் சொன்னது 100% சரி என்று சொல்ல இயலாது.
இலக்கண நூல்களில் வேறு விளக்கங்களும் உதாரணங்களும் இருக்கக்கூடும். யாப்பிலக்கண ஆராய்ச்சி நூல்களில் வேறு விளக்கங்களும் இருக்கக்கூடும். அறிந்தோர் சுட்டக்கூடும்.

உதாரணம்-1:

தனனா தனனா தனனா தனனா

புனலா டியபுன் சடையா யரணம்

அனலா கவிழித் தவனே யழகார்

கனலா டலினாய் கழிப்பா லையுளாய்

உனவார் கழல்கை தொழுதுள் குதுமே. (சம்பந்தர் தேவாரம் - 2.21.1)

இப்பாடலில் அடி-3 சீர்-3-இல் - 

கழிப்பா = தனனா என்று அலகுபெறுமாறு பாடப்பெறும்.

விதிவிலக்கு என்னுமாப்போல் சில பதிகங்களில் தலப்பெயர் வரும் இடத்தில் அப்படித் தனனா வருமிடத்தில் தானன / தனான வரக்கண்டுள்ளேன்.

உதாரணம்-2:

தானா தனனா தனனா தனனா

பொன்நேர் தருமே னியனே புரியும்

மின்நேர் சடையாய் விரைகா விரியின்

நன்னீர் வயல்நா கேச்சுர நகரின்

மன்னே யெனவல் வினைமாய்ந் தறுமே. (சம்பந்தர் தேவாரம் - 2.24.1)

இப்பாடலில் அடி-3 சீர்-3-இல் "கேச்சுர" என்று வந்துள்ளது.

உதாரணம்-3:

தனனா தனனா தனனா தனனா

தொழுமா றுவல்லார் துயர்தீ ரநினைந்

தெழுமா றுவல்லார் இசைபா டவிம்மி

அழுமா றுவல்லார் அழுந்தை மறையோர்

வழிபா டுசெய்மா மடம்மன் னினையே. (சம்பந்தர் தேவாரம் - 2.20.1)

இப்பாடலில் அடி-3 சீர்-3-இல் "அழுந்தை" என்று வந்துள்ளது.
 
On Monday, June 8, 2020 at 7:07:08 PM UTC+5:30, siva siva wrote:

6) சந்தப் பாடல்களில் வடமொழி / தமிழ் (தேவாரம்) இடையே வித்தியாசங்கள்

வடமொழியில் சந்தம் அலகிடுதல், தமிழில் தேவாரத்தில் உள்ள சந்தப்பாடல்களில் அலகிடுதல் இவற்றினிடையே சில வேறுபாடுகளைக் காணலாம்.

Subbaier Ramasami

unread,
Jun 8, 2020, 11:51:05 PM6/8/20
to santhavasantham

நீறு சேர்வதொர் மேனியர் நேரிழை

கூறு சேர்வதொர் கோலமாய்ப்

பாறு சேர்தலைக் கையர் பராய்த்துறை

ஆறு சேர்சடை யண்ணலே. - (சம்பந்தர் தேவாரம் - 1.135.1)

தான தானனா தானனா  தானனா
தான தானனா தானனா
தான தானனா தனா  தனாதனா
தான தானனா தானனா 

2. கீழ்க்காணும் பாடலின் சந்தக் குழிப்பு என்ன?

சடையுடை யானும்நெய் யாட லானுஞ் சரிகோவண

உடையுடை யானுமை யார்ந்த வொண்கண் ணுமைகேள்வனும்

கடையுடை நன்னெடு மாட மோங்குங் கடவூர்தனுள்

விடையுடை யண்ணலும் வீரட் டானத் தரனல்லனே

தனதன தானானா தான  தானா தனதாதனா

தனதன தானன தான தானா தனதாதனா
தனதன தானன தானா  தனதாதனா
தனதன  தானன  தானா தானா தனதாதனா

--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Pas Pasupathy

unread,
Jun 9, 2020, 11:31:03 AM6/9/20
to Santhavasantham
என் கருத்து ;
சந்தப் பாடலில் உள்ள கட்டுப்பாடுகள், சந்த மாத்திரைகள் தொடர்பு மட்டுமின்றி, பாடலின் வடிவத்தாலும் நிர்ணயிக்கப் படும். சான்று; சந்த விருத்தமென்றால், பெரும்பாலும் சீர் வாய்பாடு இருக்கும். மா என்ற ஒரு சீர்  வாய்பாடு இருந்தால், அங்கே விளம் வரமுடியாது( சந்த மாத்திரைக் கணக்குப்படி நான் விளத்தை இடமுடிந்தாலும்.)   வெண்டளை வரும் சந்தப்பாடலென்றால் சில விதிவிலக்குகள் இருக்கலாம். 

அதனால், சந்தப் பாடல் இயற்றும்போது, முன்னோடிப் பாடல் ஒன்றைப் பின்பற்றி இயற்றினால் நலம்.

On Mon, 8 Jun 2020 at 17:53, Siva Siva <naya...@gmail.com> wrote:

On Mon, Jun 8, 2020 at 9:58 AM ramaNi <sai...@gmail.com> wrote:
> ஆனால் தான என்ற சீர் தனா என்று வாராது (இரண்டும் 3 மாத்திரைகள் எனினும்).
> தானன என்ற சீர் தனனா என்று பொதுவாக வாராது (இரண்டும் 4 மாத்திரைகள் எனினும்).
> தானா என்ற சீர் தானன என்று பொதுவாக வாராது (இரண்டும் 4 மாத்திரைகள் எனினும்).

விளக்கம் வேண்டுகிறேன்:
தான என்பது ஈரசை, தனா ஓரசை என்பதால் வரதா?
தானன-தனனா, தானா-தானன என்பவை ஈரசைச் சீர்களாதலால் ஏன் ஒன்றுக்கொன்று மாற்றில்லை என விளக்கவேண்டுகிறேன்.

முன்னோர் பாடல்களில் நான் படித்த / கேட்ட பாடல்களிலிருந்து நான் உணர்ந்ததைச் சொன்னேன். நான் சொன்னது 100% சரி என்று சொல்ல இயலாது.
இலக்கண நூல்களில் வேறு விளக்கங்களும் உதாரணங்களும் இருக்கக்கூடும். யாப்பிலக்கண ஆராய்ச்சி நூல்களில் வேறு விளக்கங்களும் இருக்கக்கூடும். அறிந்தோர் சுட்டக்கூடும்.

ramaNi

unread,
Jun 10, 2020, 9:35:34 AM6/10/20
to சந்தவசந்தம்
பயிற்சி விடை:

1. கீழ்க்காணும் பாடலின் சந்தக் குழிப்பு என்ன?
சந்தக் குழிப்பு
தான தானனா தானன தானனா
தான தானன தானனா 

நீறு சேர்வதொர் மேனியர் நேரிழை
தான தானன தானன தானனா

கூறு சேர்வதொர் கோலமாய்ப்
தான தானன தானனா 

பாறு சேர்தலைக் கையர்ப ராய்த்துறை
தான தானனா(?) தானன தானனா

ஆறு சேர்சடை யண்ணலே. - (சம்பந்தர் தேவாரம் - 1.135.1)
தான தானன தானனா 

2. கீழ்க்காணும் பாடலின் சந்தக் குழிப்பு என்ன?
சந்தக் குழிப்பு
தனதன தானன தான தானா தனதானனா

சடையுடை யானும்நெய் யாட லானுஞ் சரிகோவண
தனதன தானன தான தானா தனதானனா

உடையுடை யானுமை யார்ந்த வொண்கண் ணுமைகேள்வனும்
தனதன தானன தான தானா தனதானனா

கடையுடை நன்னெடு மாட மோங்குங் கடவூர்தனுள்
தனதன தானன தான தானா தனதானனா

விடையுடை யண்ணலும் வீரட் டானத் தரனல்லனே. (சம்பந்தர் தேவாரம் - 3.8.1)
தனதன தானன தான தானா தனதானனா

அன்புடன்,
ரமணி

On Monday, June 8, 2020 at 7:07:08 PM UTC+5:30, siva siva wrote:

V. Ramasamy

unread,
Jun 10, 2020, 10:58:46 AM6/10/20
to சந்தவசந்தம்
6.1: கீழ்க்காணும் பாடலின் சந்தக் குழிப்பு:

நீறு சேர்வதொர் மேனியர் நேரிழை

தான தானன தானன தானனா

கூறு சேர்வதொர் கோலமாய்ப்

தான தானன தானனா

மாறு சேர்தலைக் கையர்ப ராய்த்துறை
தான தானன தானன தானனா

ஆறு சேர்சடை யண்ணலே.

தான தானன தானனா.

6.2: கீழ்க்காணும் பாடலின் சந்தக் குழிப்பு:

சடையுடை யானும்நெய் யாட லானுஞ் சரிகோவண

தனதன தானன தான தான
தனதானன

உடையுடை யானுமை யார்ந்த வொண்கண் ணுமைகேள்வனும்

தனதன தானன தான
தான தனதானன

கடையுடை நன்னெடு மாட மோங்குங்
கடவூர்தனுள்

தனதன தானன தான தான
தனதானன

விடையுடை யண்ணலும் வீரட் டானத்
தரனல்லனே.

தனதன தானன தான தான
தனதனனா

Siva Siva

unread,
Jun 10, 2020, 4:44:34 PM6/10/20
to santhavasantham
On Mon, Jun 8, 2020 at 11:51 PM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

நீறு சேர்வதொர் மேனியர் நேரிழை

கூறு சேர்வதொர் கோலமாய்ப்

பாறு சேர்தலைக் கையர் பராய்த்துறை

ஆறு சேர்சடை யண்ணலே. - (சம்பந்தர் தேவாரம் - 1.135.1)

தான தானனா தானனா  தானனா
தான தானனா தானனா
தான தானனா 
தனா  தனாதனா
தான தானனா தானனா 

3-ஆம் அடியில் ஓரிடத்தில் எழுத்துப்பிழையைக் காண்க.
வடமொழி யாப்பின் வழியில் நீங்கள் சொல்வது சரி.
ஆனால் தமிழில் அப்படிக் கொள்ளமாட்டார்.

2. கீழ்க்காணும் பாடலின் சந்தக் குழிப்பு என்ன?

சடையுடை யானும்நெய் யாட லானுஞ் சரிகோவண

உடையுடை யானுமை யார்ந்த வொண்கண் ணுமைகேள்வனும்

கடையுடை நன்னெடு மாட மோங்குங் கடவூர்தனுள்

விடையுடை யண்ணலும் வீரட் டானத் தரனல்லனே

தனதன தானானா தான  தானா தனதாதனா

தனதன தானன தான தானா தனதாதனா

தனதன தானன xxxxx தானா  தனதாதனா

தனதன  தானன  தானா தானா தனதாதனா

3-ஆம் அடியில் அலகிடுதலில் ஒரு சீர் விடுபட்டதைக் காண்க.
 தமிழில் இச்சந்தக்குழிப்புச் சற்று வேறுவிதமாகக் கருதப்படும் என்று எண்ணுகின்றேன்.

Siva Siva

unread,
Jun 10, 2020, 4:48:22 PM6/10/20
to santhavasantham
ஓரிடத்தில் எழுட்திப்பிழையைக் காண்க.

Siva Siva

unread,
Jun 10, 2020, 4:49:33 PM6/10/20
to santhavasantham
Good.

Siva Siva

unread,
Jun 10, 2020, 4:55:06 PM6/10/20
to santhavasantham

 1. இப்பாடலின் சந்தக்குழிப்பு:

தான தானன தானன தானன

தான தானன தானனா

பொதுவாக, இடையின ஒற்றுகள் அலகு பெறா.

அதேபோல் சீர்களின் ஈற்றில் வரும் ஒற்றும் சிலசமயம் அலகு பெறாமையைக் காண்க. 

 3-ஆம் அடியில் "கையர் பராய்த்துறை" என்று நூலில் சீர் பிரித்திருந்தாலும் அதனைக் "கையர்ப ராய்த்துறை" என்று நோக்கில் "தானன தானன" சந்தம் ஆவது காண்க.

2. கீழ்க்காணும் பாடலின் சந்தக் குழிப்பு என்ன?

சடையுடை யானும்நெய் யாட லானுஞ் சரிகோவண

உடையுடை யானுமை யார்ந்த வொண்கண் ணுமைகேள்வனும்

கடையுடை நன்னெடு மாட மோங்குங் கடவூர்தனுள்

விடையுடை யண்ணலும் வீரட் டானத் தரனல்லனே. (சம்பந்தர் தேவாரம் - 3.8.1)

 2. இப்பாடலின் சந்தக்குழிப்பு:

தனதன தானன தான தான தனதானனா
 
வி. சுப்பிரமணியன்

V. Ramasamy

unread,
Jun 10, 2020, 10:10:52 PM6/10/20
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி ஐயா.  திருத்திக் கொள்கிறேன்.

அன்புடன்,
ராமு.
--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

ramaNi

unread,
Jun 10, 2020, 11:52:50 PM6/10/20
to சந்தவசந்தம்
சிவசிவா சொன்ன திருத்தம் என் பதிவுக்கு ஓய்! நீர் தொடர்ந்து அவரிடம் ’குட்டு’ வாங்குவது மகிழ்ச்சி!
ரமணி

Siva Siva

unread,
Jun 11, 2020, 8:29:28 AM6/11/20
to santhavasantham

7) எதுகை, மோனை

7.1) அடிதோறும் எதுகை அமையவேண்டும்.

7.2) அடியினுள் மோனை: சந்தப்பாடல்களில் மோனை சில சமயம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் / சீரில் அமையாமல் வேறு இடத்திலும் அமையலாம்.

உதாரணம்:

பித்தாபிறை சூடீபெரு மானேயரு ளாளா (சுந்தரர் தேவாரம் - 7.1.1)

மன்னே யெனவல் வினைமாய்ந் தறுமே (சம்பந்தர் தேவாரம் - 2.24.1)

7.3) பாடலின் அடிகள் மிகச் சிறிய அளவு ஆயின், அடியினுள் மோனை அவசியம் இல்லை.

குறளடி - 2 சீர்கள்

சிந்தடி - 3 சீர்கள்

8) புணர்ச்சி விதிகள்.

8.1) புணர்ச்சியால் சந்தம் / ஓசை மாறக்கூடும். ஆதலால் புணர்ச்சி விதிகளை இயன்ற அளவு கற்கவேண்டும்.

முன்னோர் பாடல்களை மூல வடிவில் (அதாவது பதம் பிரியாத வடிவில்) படித்துப் பழகுதல் உதவும்.

8.2) சில பாடல்களில் சில இடங்களில் ஓசை கருதிப் புணர்ச்சி இன்றி விதிவிலக்காக வரும் இடங்களை முன்னோர் பாடல்களில் காணலாம்.

உதாரணம்:

உருவளர் பவள மேனி யொளிநீ றணிந்து உமையோடும் வெள்ளை விடைமேல் (சம்பந்தர் தேவாரம் - 2.85.3)

கவனத்திற் கொள்க:

நாம் பாடல் இயற்றும்பொழுது, புணர்ச்சிவிதிகளைத் தளர்த்தாமல் எழுதிப் பழகவேண்டும்.

தேவைப்படின், செய்யுள் விகாரங்களை முன்னோர் இலக்கிய வழக்கினை ஒத்துக் கையாளுதல் தகும்.

9) வகையுளி.

செய்யுளில் சில சமயம் சில சொற்கள் ஒரே சீரில் அமையாமல் பிரிந்து இரு சீர்களில் அமையும். இதனை வகையுளி என்பர்.

சந்தப் பாடல்களில் வகையுளி பரவலாகக் காணப்படக்கூடும்.

ஆனால், இவை இசையோடு பாடத்தக்க பாடல்கள். ஆதலால், பாடலைப் பாடும்பொழுது எவ்வெவ்விடத்தில் நிறுத்திப் பாடுவார்களோ அவ்விடங்களில் வகையுளி இல்லாமல் இருந்தால் சிறக்கும். அடியின் அமைப்புக்கு ஏற்றபடி எங்கு நிறுத்தி ஒலிக்கவேண்டும் என்பதை முன்னோர் பாடல்களைப் பார்த்தும் கேட்டும் உணர்ந்துகொள்க.

உதாரணம்:

அடி அமைப்பு நீளமாக - "தானன தான தான தனதான தான தனதான தான தனனா" என்று இருந்தால், "தானன தான தான - தனதான தான - தனதான தான தனனா" என்பதுபோல், ஓதுவார்கள் பாடும்பொழுது " - " குறியிட்ட இடங்களில் இடைவெளி சற்றுக் கூடுதலாக விட்டுப் பாடுவதைக் கேட்டு உணரலாம்.

"முருகலர் கொன்றை திங்கள் முடிமேல ணிந்தென் உளமேபு குந்த அதனால்" (சம்பந்தர் தேவாரம் - 2.85.3)

(வண்ணம் அல்லாத சந்தப்பாடல்களுக்கு நூல்களில் சந்தக் குழிப்பை அச்சிட நூல் பதிப்பாசிரியர்கள் பொதுவாகக் கருதுகின்றிலர். எங்கு நிறுத்திப் பாடவேண்டும் என்பதைக் குறிக்கும் பழக்கமும் இல்லை. நாமே படித்து உணர்ந்துகொள்ளவேண்டியிருக்கும்).

10) வெண்டளை?!

சில சமயம் ஒரு சீரில் சந்தம் சந்தக்குழிப்பிலிருந்து சற்றே மாறும் இடத்தில் "வெண்டளை"யைக் காணலாம்! இது தேவாரம் போன்ற இசைப்பாடல்களுக்கு மட்டுமே உரியதோ?

ஒரு பாடலின் சந்தக்குழிப்பில் "தானன தான...." என்பது போல் இரு சீர்கள் இருக்குமாயின், பாடலில் ஓரிடத்தில் அவற்றுள் முதற்சீர் "தான" என்பது போல் ஓசை குறைந்து வரின், அடுத்த "தானன..." சீர் "தன...." என்பதுபோல் தொடங்குவதைக் காணலாம்.

("தானன தானன" என்று வரும் இடத்தில் "தான தனாதன" என்பதுபோல் ஓரிடத்தில் வரின், அது "தானன தானன" என்ற சந்தமே ஆவதை உணர்க).

உதாரணம்:

சம்பந்தர் தேவாரம் - 1.135 - சந்தக் குழிப்பு:

தான தானன தானன தானன

தான தானன தானன.

சில பாடல்களின் ஈற்றடிகளைக் காண்க:

1.135.1 - "ஆறு சேர்சடை யண்ணலே."

1.135.2 - "அந்த மில்ல வடிகளே."

1.135.3 - "ஆதி யாய வடிகளே."

1.135.10 - "மருவி னான்றனை வாழ்த்துமே."

1.135.11 - "செல்வ மாமிவை செப்பவே."

பயிற்சி:

1. கீழ்க்காணும் சந்தங்கள் அமையும் சொற்றொடர்கள் சில எழுதுக:

தனதனா

தானதன

தானதான

தானாதன

தனதானன

தனன தனன

2. கீழ்க்காணும் பாடல்களின் சந்தக் குழிப்பு என்ன? இவை ஒரு பதிகத்தில் வரும் பாடல்கள்.

ஒல்லையாறி யுள்ளமொன்றிக் கள்ள மொழிந்துவெய்ய

சொல்லையாறித் தூய்மைசெய்து காம வினையகற்றி

நல்லவாறே யுன்றனாமம் நாவில் நவின்றேத்த

வல்லவாறே வந்துநல்காய் வலிவல மேயவனே. (சம்பந்தர் தேவாரம் - 1.50.1)

பொதியிலானே பூவணத்தாய் பொன்றிக ழுங்கயிலைப்

பதியிலானே பத்தர்சித்தம் பற்று விடாதவனே

விதியிலாதார் வெஞ்சமணர் சாக்கிய ரென்றிவர்கள்

மதியிலாதா ரென்செய்வாரோ வலிவல மேயவனே. (சம்பந்தர் தேவாரம் - 1.50.10)

வி. சுப்பிரமணியன்

On Mon, Jun 8, 2020 at 9:36 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

6) சந்தப் பாடல்களில் வடமொழி / தமிழ் (தேவாரம்) இடையே வித்தியாசங்கள்

Siva Siva

unread,
Jun 15, 2020, 9:06:28 AM6/15/20
to santhavasantham
Should I declare "Mission accomplished"?

On Thu, Jun 11, 2020 at 8:29 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

பயிற்சி:

1. கீழ்க்காணும் சந்தங்கள் அமையும் சொற்றொடர்கள் சில எழுதுக:

தனதனா

தானதன

தானதான

தானாதன

தனதானன

தனன தனன

2. கீழ்க்காணும் பாடல்களின் சந்தக் குழிப்பு என்ன? இவை ஒரு பதிகத்தில் வரும் பாடல்கள்.

ஒல்லையாறி யுள்ளமொன்றிக் கள்ள மொழிந்துவெய்ய

சொல்லையாறித் தூய்மைசெய்து காம வினையகற்றி

நல்லவாறே யுன்றனாமம் நாவில் நவின்றேத்த

வல்லவாறே வந்துநல்காய் வலிவல மேயவனே. (சம்பந்தர் தேவாரம் - 1.50.1)

பொதியிலானே பூவணத்தாய் பொன்றிக ழுங்கயிலைப்

பதியிலானே பத்தர்சித்தம் பற்று விடாதவனே

விதியிலாதார் வெஞ்சமணர் சாக்கிய ரென்றிவர்கள்

மதியிலாதா ரென்செய்வாரோ வலிவல மேயவனே. (சம்பந்தர் தேவாரம் - 1.50.10)

வி. சுப்பிரமணியன்

Subbaier Ramasami

unread,
Jun 15, 2020, 10:27:18 AM6/15/20
to santhavasantham

தனதனா    கடமுடா

தானதன     நாதமய

தானதான     தேனுலாவு

தானாதன     கூறாமறை

தனதானன    கடனேயென

தனன தனன  அடட அடட

--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

V. Ramasamy

unread,
Jun 15, 2020, 12:32:10 PM6/15/20
to சந்தவசந்தம்
பயிற்சி 7:

1. தனதனா: தடதடா இடிமுழங் கியதுகாண்.

தானதன: வேதனையில் வாடுவர்
சோதனையில் வென்றிடுவர்

தானதான: மாயமான காசுமாலை.

தானாதன: பொன்னாடையை நீபோர்த்திய பாங்கேதனி.

தனதாதன: வரதாயுனை மறவாவர மளிமாதவ!

தனனதனன: பலபலவென புலருபொழுது.

2. 1. ஒல்லையாறி எனத் துவங்கும் பாடலின் சந்தக் குழிப்பு:

தானதான தானதானா தான தனாதனான.

2. பொதியிலானே எனத் துவங்கும்
பாடலின் சந்தக் குழிப்பு:

தனதனானா தானதானா தானன தானதனா.

ramaNi

unread,
Jun 15, 2020, 12:45:14 PM6/15/20
to சந்தவசந்தம்
பயிற்சி:
1. கீழ்க்காணும் சந்தங்கள் அமையும் சொற்றொடர்கள் சில எழுதுக:
தனதனா ⇒ பறவைகள், பலவிதம், வருவதோ?
தானதன ⇒ வானமழை, ஞானமுகில், போனதுவா?
தானதான ⇒ ஞானவாப்பி, போனபோது
தானாதன ⇒ சிற்பக்கலை, ஞானாம்பிகை
தனதானன ⇒ அரிவாள்மனை, சமையல்வினை
தனன தனன ⇒ கனவு நனவு, பதவி யறிவு

2. கீழ்க்காணும் பாடல்களின் சந்தக் குழிப்பு என்ன? இவை ஒரு பதிகத்தில் வரும் பாடல்கள்.
ஒல்லையாறி யுள்ளமொன்றிக் கள்ள மொழிந்துவெய்ய
தானதான தானதானா தான தனானதான

சொல்லையாறித் தூய்மைசெய்து காம வினையகற்றி
தானதானா தானதான தான தனதனான

நல்லவாறே யுன்றனாமம் நாவில் நவின்றேத்த
தானதானா தானதானா தானா தனாதான

வல்லவாறே வந்துநல்காய் வலிவல மேயவனே. (சம்பந்தர் தேவாரம் - 1.50.1)
தானதானா தானதானா தனதன தானதனா

பொதியிலானே பூவணத்தாய் பொன்றிக ழுங்கயிலைப்
தனதனானா தானதானா தானன தானதனா

பதியிலானே பத்தர்சித்தம் பற்றுவி டாதவனே
தனதனானா தானதானா தானன தானதனா

விதியிலாதார் வெஞ்சமணர் சாக்கிய ரென்றிவர்கள்
தனதனானா தானதனா தானன தானதனா

மதியிலாதா ரென்செய்வாரோ வலிவல மேயவனே. (சம்பந்தர் தேவாரம் - 1.50.10)
தனதனானா தானதானா தனதன தானதனா

அன்புடன்,
ரமணி

*****

V. Ramasamy

unread,
Jun 15, 2020, 12:49:50 PM6/15/20
to சந்தவசந்தம்
ஐயா,

பயிற்சி 7-1-ல், தானதன என்ற சந்தக் குழிப்பிற்கு நான் எழுதிய சொற்றொடரை, வேதனையில் வாடுபவர் சோதனையில் வென்றிடுவர் எனத் திருத்திக்கொள்ள வேண்டுகிறேன்.

Siva Siva

unread,
Jun 15, 2020, 7:23:03 PM6/15/20
to santhavasantham
1. சரியே.
2. கவனிக்கவில்லையோ?

On Mon, Jun 15, 2020 at 10:27 AM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

தனதனா    கடமுடா

தானதன     நாதமய

தானதான     தேனுலாவு

தானாதன     கூறாமறை

தனதானன    கடனேயென

தனன தனன  அடட அடட

On Mon, Jun 15, 2020 at 6:36 PM Siva Siva <naya...@gmail.com> wrote:
Should I declare "Mission accomplished"?

On Thu, Jun 11, 2020 at 8:29 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

பயிற்சி:

Siva Siva

unread,
Jun 15, 2020, 7:32:46 PM6/15/20
to santhavasantham
On Mon, Jun 15, 2020 at 12:32 PM V. Ramasamy <vrama...@gmail.com> wrote:
பயிற்சி 7:

1. தனதனா: தடதடா இடிமுழங் கியதுகாண்.

   தானதன: வேதனையில் வாடுவர்
சோதனையில் வென்றிடுவர்

-->  check pattern of " வாடுவர் "

   தானதான: மாயமான காசுமாலை.

   தானாதன: பொன்னாடையை நீபோர்த்திய பாங்கேதனி.

   தனதாதன: வரதாயுனை மறவாவர மளிமாதவ!

   தனனதனன: பலபலவென புலருபொழுது.

2. 1. ஒல்லையாறி எனத் துவங்கும் பாடலின் சந்தக் குழிப்பு:

தானதான தானதானா தான தனாதனான.

--> check the first  " தானதான" across lines.

   2. பொதியிலானே எனத் துவங்கும்
பாடலின் சந்தக் குழிப்பு:

தனதனானா தானதானா தானன தானதனா.

--> I suggest using தொடங்கும் instead of துவங்கும்.

Siva Siva

unread,
Jun 15, 2020, 7:43:26 PM6/15/20
to santhavasantham
On Mon, Jun 15, 2020 at 12:45 PM ramaNi <sai...@gmail.com> wrote:
பயிற்சி:
1. கீழ்க்காணும் சந்தங்கள் அமையும் சொற்றொடர்கள் சில எழுதுக:
தனதனா ⇒ பறவைகள், பலவிதம், வருவதோ?
--> " பறவைகள், பலவிதம் "  
அந்த நாள் ஞாபகம் வந்ததோ? :)

தானதன ⇒ வானமழை, ஞானமுகில், போனதுவா?
-->  check " போனதுவா"
தானதான ⇒ ஞானவாப்பி, போனபோது
தானாதன ⇒ சிற்பக்கலை, ஞானாம்பிகை
தனதானன ⇒ அரிவாள்மனை, சமையல்வினை
தனன தனன ⇒ கனவு நனவு, பதவி யறிவு

2. கீழ்க்காணும் பாடல்களின் சந்தக் குழிப்பு என்ன? இவை ஒரு பதிகத்தில் வரும் பாடல்கள்.
ஒல்லையாறி யுள்ளமொன்றிக் கள்ள மொழிந்துவெய்ய
தானதான தானதானா தான தனானதான

சொல்லையாறித் தூய்மைசெய்து காம வினையகற்றி
தானதானா தானதான தான தனதனான

நல்லவாறே யுன்றனாமம் நாவில் நவின்றேத்த
தானதானா தானதானா தானா தனாதான

வல்லவாறே வந்துநல்காய் வலிவல மேயவனே. (சம்பந்தர் தேவாரம் - 1.50.1)
தானதானா தானதானா தனதன தானதனா

பொதியிலானே பூவணத்தாய் பொன்றிக ழுங்கயிலைப்
தனதனானா தானதானா தானன தானதனா

பதியிலானே பத்தர்சித்தம் பற்றுவி டாதவனே
தனதனானா தானதானா தானன தானதனா

விதியிலாதார் வெஞ்சமணர் சாக்கிய ரென்றிவர்கள்
தனதனானா தானதனா தானன தானதனா

மதியிலாதா ரென்செய்வாரோ வலிவல மேயவனே. (சம்பந்தர் தேவாரம் - 1.50.10)
தனதனானா தானதானா தனதன தானதனா

--> How will you describe the pattern of a line of this song / padhigam?

Siva Siva

unread,
Jun 15, 2020, 7:45:07 PM6/15/20
to santhavasantham
OK. You can then ignore my feedback comment on that phrase.

V. Ramasamy

unread,
Jun 15, 2020, 11:03:27 PM6/15/20
to சந்தவசந்தம்
மிக்க நன்றி ஐயா.

V. Ramasamy

unread,
Jun 15, 2020, 11:04:53 PM6/15/20
to சந்தவசந்தம்
மிக்க நன்றி ஐயா.

V. Ramasamy

unread,
Jun 15, 2020, 11:23:50 PM6/15/20
to சந்தவசந்தம்
ஐயா,

பயிற்சி 7-2-1: இடையின ஒற்று அலகு
பெறாதென்பதால்,
முதற் சீரை, தனதான

எனத் திருத்திக்

கொண்டேன். நன்றி.

இனி, துவங்கும் என்பதற்குப் பதில்,
தொடங்கும் என்ற பதத்தையே பயன் படுத்துகிறேன்.

Siva Siva

unread,
Jun 16, 2020, 8:31:43 AM6/16/20
to santhavasantham
When replying keep some text - relevant comment / question / line from prior message for context.

Please check again.
இங்கே ல் அலகு பெறும்.

ஒல்லையாறி

சொல்லையாறித்

நல்லவாறே

வல்லவாறே

V. Ramasamy

unread,
Jun 16, 2020, 9:00:39 AM6/16/20
to சந்தவசந்தம்
மிக்க நன்றி ஐயா. நான் இன்னும் புரிந்துகொள்ளவேண்டியது உள்ளது என்பதை உணருகிறேன்.

Siva Siva

unread,
Jun 16, 2020, 10:20:39 PM6/16/20
to santhavasantham

இப்பதிகப் பாடல்களின் சந்தக்குழிப்பு:

தானதானா தானதானா தானன தானதனா

தானதானா என்ற சீர்கள் இப்பாடலில் தனனதானா / தானதனா என்றும் வரக்காணலாம்.

இப்பாடலில் அடிதோறும் கடைசி இரு சீர்களிடையே வெண்டளை வரக் காணலாம்.

தானன என்ற சீர் தான என்று வரின், அடுத்து வரவேண்டிய தானதனா என்ற சீர் தன என்று தொடங்கித் தனதனனா / தனதானா என்று வரும்.

Siva Siva

unread,
Jun 16, 2020, 10:26:59 PM6/16/20
to santhavasantham

சமைத்துப் பார் - Cook and See !! :)

ஓர் அடியில் ஒவ்வோர் எழுத்தின் இடத்திலும் லகு / குரு என்று இரண்டில் ஒன்று வரும். அப்படி நோக்கினால், ஓர் அடியில் இருக்கும் எழுத்துகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் மிக அதிக அளவில் உறழ்வுகள் (பிரஸ்தாரம் - permutations) அமையும்.

"n" எழுத்துகள் உள்ள ஓர் அடியில் வரக்கூடிய உறழ்வுகள் = 2 to the power n .

உதாரணமாக:

6 எழுத்து அடி = 2^6 (2 to the power 6) = 64

12 எழுத்து அடி = 2^12 (2 to the power 12) = 4096

16 எழுத்து அடி = 2^16 (2 to the power 16) = 65,536

அடிகளின் நீளத்திற்குப் பொதுவாக எல்லை என்பது இல்லை. ஆகவே, சந்த உறழ்வுகளும் எண்ணற்றவை.

ஆதலால், முன்னோர் பாடல்களில் காணக்கூடிய சந்தக்குழிப்புகளை மட்டும் கருத்திற்கொண்டு, அவற்றுள் சில சந்தக்குழிப்புகளைப் பாடல் உதாரணங்களோடு காண்போம்.

பயிற்சி:

இனி வரவிருக்கும் ஒவ்வொரு சந்தக்குழிப்பிலும் நீங்கள் ஒரு பாடலேனும் எழுதுங்கள்.

சில நீளம் மிக்க சந்தக்குழிப்பில் பாடல் எழுத உங்களுக்குக் கடினமாக இருந்தால் அந்த அமைப்பில் ஒரு சில சொற்றொடர்களையேனும் எழுதுங்கள்.

***************

முதலில்:

C-1) "தான தானனா" - (இருக்குக்குறள்)

இதுபோல் சிறிய அடிகள் ஆயின், பாடலில் அடியினுள் மோனை அவசியம் இல்லை.

அரனை யுள்குவீர்

பிரம னூருளெம்

பரனை யேமனம்

பரவி யுய்ம்மினே. (சம்பந்தர் தேவாரம் - 1.90.1)

வாசி தீரவே

காசு நல்குவீர்

மாசின் மிழலையீர்

ஏச லில்லையே. (சம்பந்தர் தேவாரம் - 1.92.1)

* மிழலையீர் - தானனா என்ற இடத்தில் தனதனா என்று வந்துள்ளதை நோக்குக.

வி. சுப்பிரமணியன்

On Thu, Jun 11, 2020 at 8:29 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

7) எதுகை, மோனை

8) புணர்ச்சி விதிகள்.

9) வகையுளி.

10) வெண்டளை?!

V. Ramasamy

unread,
Jun 17, 2020, 10:29:57 AM6/17/20
to santhav...@googlegroups.com
C-1:  "தான தானனா"
        
1.   கலக மூட்டியே
      குலமு மோவவே
       இலகு வாகவே
       உலக மெண்ணுமே.
       
       (ஓவல் = ஒழிதல்)

2.    தான தர்மமே
       ஆனி நீக்குமே
       ஊன மென்றுமே
       கான லாகுமே.
   
       (ஆனி = கேடு)

அன்புடன்,
ராமு.
       
--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Jun 17, 2020, 6:18:56 PM6/17/20
to santhavasantham
"தான தானனா" என்பதை முதல் பாடலில்  "தனன தானனா" என்று கொண்டது கண்டேன்.

சந்தம் சரியே.

அடிதோறும் ஏகாரம் (பல இடங்களில் அசையோ?) காண்கின்றேன். பாடலின் ஈற்றில் ஏகாரம் வரும். மற்ற இடங்களில் குறைந்த அளவில் வருதல் நலம்.

On Wed, Jun 17, 2020 at 10:29 AM V. Ramasamy <vrama...@gmail.com> wrote:
C-1:  "தான தானனா"
        
1.   கலக மூட்டியே
      குலமு மோவவே
       இலகு வாகவே
       உலக மெண்ணுமே.
       
       (ஓவல் = ஒழிதல்)

2.    தான தர்மமே
       ஆனி நீக்குமே
       ஊன மென்றுமே
       கான லாகுமே.
   
       (ஆனி = கேடு)

அன்புடன்,
ராமு.
       
Siva Siva

unread,
Jun 17, 2020, 9:23:39 PM6/17/20
to santhavasantham
When replying, please do not change the subject line. If you do so, it will become a separate subject thread.

On Wed, Jun 17, 2020 at 9:17 PM V. Ramasamy <vrama...@gmail.com> wrote:
மிக்க நன்றி ஐயா. தங்கள் அறிவுரையைக் கவனத்தில் கொள்கிறேன்.

அன்புடன்,
ராமு.

V. Ramasamy

unread,
Jun 17, 2020, 9:44:39 PM6/17/20
to santhav...@googlegroups.com
சரி ஐயா.  இதையும் கவனத்தில் கொள்கிறேன்.

அன்புடன்,
ராமு.

--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

ramaNi

unread,
Jun 17, 2020, 11:14:13 PM6/17/20
to சந்தவசந்தம்
01. குயிலும் காப்பியும்!
(சந்த வஞ்சித்துறை: தான தானனா)

தோப்பி லேகுயில்
ஆர்ப்பு வேளையில்
காப்பி வாசனை
ஈர்ப்ப தாகுமே!

02. நடனமும் படனமும்!
(சந்த வஞ்சித்துறை: தனன தானனா)

நடன நாயகன்
உடனு றைமனப்
படன மாம்துதி
கடனை நீக்குமே!
[கடன்=பிறவிக்கடன்]

--குருநாதன் ரமணி, 17/06/2020

*****

Siva Siva

unread,
Jun 18, 2020, 9:38:52 AM6/18/20
to santhavasantham
குயிலும் பால்குக்கரும் சேர்ந்து துயிலெழுப்பும் வேளை!

Siva Siva

unread,
Jun 19, 2020, 8:28:18 AM6/19/20
to santhavasantham

C-2) "தனனா தனனா தனதானா" - (வஞ்சிவிருத்தம்)

இதுபோல் சிறிய அடிகள் ஆயின், பாடலில் அடியினுள் மோனை அவசியம் இல்லை.

அரவச் சடைமேன் மதிமத்தம்

விரவிப் பொலிகின் றவனூராம்

நிரவிப் பலதொண் டர்கள்நாளும்

பரவிப் பொலியும் பனையூரே. (சம்பந்தர் தேவாரம் - 1.37.1)

* டர்கள்நாளும் - தனதானா என்று ஆவதை நோக்குக.

எண்ணொன் றிநினைந் தவர்தம்பால்

உண்ணின் றுமகிழ்ந் தவனூராம்

கண்ணின் றெழுசோ லையில்வண்டு

பண்ணின் றொலிசெய் பனையூரே. (சம்பந்தர் தேவாரம் - 1.37.2)

* முதல் மூன்று அடிகளில் வகையுளி அமைந்துள்ளதை நோக்குக.

கொக்கின் னிறகின் னொடுவன்னி

புக்க சடையார்க் கிடமாகும்

திக்கின் னிசைதே வர்வணங்கும்

அக்கின் னரையா ரதையாறே. (சம்பந்தர் தேவாரம் - 1.36.3)

* கொக்கின் னிறகின் னொடுவன்னி - (கொக்கின் இறகினொடு வன்னி) - சந்தம் கருதி னகர ஒற்று விரித்தல் விகாரத்தை நோக்குக.

விசுப்பிரமணியன்  

On Tue, Jun 16, 2020 at 10:26 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

சமைத்துப் பார் - Cook and See !! :)

C-1) "தான தானனா" - (இருக்குக்குறள்)

--

V. Ramasamy

unread,
Jun 20, 2020, 11:44:43 AM6/20/20
to santhav...@googlegroups.com
C-2: தனனா தனனா தனதானா:

திருமால் மருகன் முருகன்தான்
அருளைப் பொழிவான் மழையாக!
பெருகுந் துயரும் கரையாதோ
அருணன் கதிரில் பனிபோலே!

அன்புடன்,
ராமு.

--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Subbaier Ramasami

unread,
Jun 20, 2020, 12:17:10 PM6/20/20
to santhavasantham
கவிதைக் கலையின் சிறப்பாலே
      கடவுள்  வரமே பெறலாமே
அவையும் மகிழச் செயலாமே
     அடடா   அதுதான்  உரமாமே

Siva Siva

unread,
Jun 20, 2020, 12:41:25 PM6/20/20
to santhavasantham
Good.

On Sat, Jun 20, 2020 at 11:44 AM V. Ramasamy <vrama...@gmail.com> wrote:
C-2: தனனா தனனா தனதானா:

திருமால் மருகன் முருகன்தான்
அருளைப் பொழிவான் மழையாக!
பெருகுந் துயரும் கரையாதோ
அருணன் கதிரில் பனிபோலே!

அன்புடன்,
ராமு.

On Fri, Jun 19, 2020, 17:58 Siva Siva <naya...@gmail.com> wrote:

C-2) "தனனா தனனா தனதானா" - (வஞ்சிவிருத்தம்)

இதுபோல் சிறிய அடிகள் ஆயின், பாடலில் அடியினுள் மோனை அவசியம் இல்லை.

Siva Siva

unread,
Jun 20, 2020, 12:42:54 PM6/20/20
to santhavasantham
/ சிறப்பாலே /
தனதானா என்ற சந்தம் சற்று மாறுகின்றது.

On Sat, Jun 20, 2020 at 12:17 PM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
கவிதைக் கலையின் சிறப்பாலே
      கடவுள்  வரமே பெறலாமே
அவையும் மகிழச் செயலாமே
     அடடா   அதுதான்  உரமாமே

On Sat, Jun 20, 2020 at 9:14 PM V. Ramasamy <vrama...@gmail.com> wrote:
C-2: தனனா தனனா தனதானா:

Subbaier Ramasami

unread,
Jun 20, 2020, 1:52:12 PM6/20/20
to santhavasantham
கவிதைக் கலையின்  அருளாலே

கடவுள்  வரமே பெறலாமே
அவையும் மகிழச் செயலாமே
     அடடா   அதுதான்  உரமாமே  

V. Ramasamy

unread,
Jun 20, 2020, 10:03:43 PM6/20/20
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி ஐயா.

அன்புடன்,
ராமு.
--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

ramaNi

unread,
Jun 21, 2020, 9:32:15 AM6/21/20
to santhav...@googlegroups.com

C-2) "தனனா தனனா தனதானா" - (வஞ்சிவிருத்தம்)

02. புதிதாமே!
(சந்த வஞ்சிவிருத்தம்: தனனா தனனா தனதானா)

நிலவில் முகிலின் நிழலாடும்
அலவன் மணலில் வளைதூங்கும்
பலவிற் கடுவன் பசியாறும்
புலவர் கவிதை புதிதாமே!

02. இன்றியும் நின்றும்!
(சந்த வஞ்சிவிருத்தம்: தனனா தனனா தனதானா)

மண்ணின் றியடித் ததுகாற்று
பண்ணின் றியொலித் தனர்செண்டை
விண்ணின் றுபறந் ததுகாக்கை
கண்ணின் றுகளித் திடுமூரே!

02. முனியாண்டி!
(சந்த வஞ்சிவிருத்தம்: தனனா தனனா தனதானா)

முக்கின் னிசைகேள் முனியாண்டி ... [முக்கு = மூலை]
சிக்கல் சடையார் சிவனாண்டி
கக்கின் னழலார் கணைகண்ணாம்
நொக்கின் னசுரர் நொடியாரோ?

--குருநாதன் ரமணி, 21/06/2020

*****
 
Siva Siva

unread,
Jun 21, 2020, 9:38:41 AM6/21/20
to santhavasantham
/ நிலவில் முகிலின் நிழலாடும் / = ?

One place may need some review.
/ கண்ணின் றுகளித் ததுவூரே  /
புணர்ச்சியை நோக்குக.

On Sun, Jun 21, 2020 at 9:32 AM ramaNi <sai...@gmail.com> wrote:

C-2) "தனனா தனனா தனதானா" - (வஞ்சிவிருத்தம்)

02. புதிதாமே!
(சந்த வஞ்சிவிருத்தம்: தனனா தனனா தனதானா)

நிலவில் முகிலின் நிழலாடும்
அலவன் மணலில் வளைதூங்கும்
பலவிற் கடுவன் பசியாறும்
புலவர் கவிதை புதிதாமே!

02. இன்றியும் நின்றும்!
(சந்த வஞ்சிவிருத்தம்: தனனா தனனா தனதானா)

மண்ணின் றியடித் ததுகாற்று
பண்ணின் றியொலித் தனர்செண்டை
விண்ணின் றுபறந் ததுகாக்கை
கண்ணின் றுகளித் ததுவூரே!

M. Viswanathan

unread,
Jun 21, 2020, 9:46:26 AM6/21/20
to Santhavasantham
(தனனா தனனா தனதானா)

(கந்தன் கழலே கனி)

உதவும் கரமாய் அருளோடு
நிதமும் வருவான் வடிவேலன்
அதனால் அவனின் இருகாலைப்  
பதமாய் மனதில் பணிவேனே. 

அன்பன்,
மீ.விசுவநாதன்

Siva Siva

unread,
Jun 21, 2020, 10:04:34 AM6/21/20
to santhavasantham
Fits the meter.

M. Viswanathan

unread,
Jun 21, 2020, 10:26:06 AM6/21/20
to Santhavasantham

(தனனா தனனா தனதானா)

"குமரன் நினைவே குறி"

வெயிலும் மழையும் அவனாகப்
பயிலும் குணமே சுகமாகும்!
குயிலும் அவனின் குரலாக
உயிருள் கவிதை பொழிவோனே. 

M. Viswanathan

unread,
Jun 21, 2020, 10:45:27 AM6/21/20
to Santhavasantham

(தனனா தனனா தனதானா)

(கந்தன் கழலே கனி)

உதவும் கரமாய் அருளோடு
நிதமும் வருவான் வடிவேலன்
அதனால் அவனின் இருகாலைப்
பதமாய் மனதில் பணிவேனே.

வெயிலும் மழையும் அவனாகப்
பயிலும் குணமே சுகமாகும்!
குயிலும் அவனின் குரலாக
உயிருள் கவிதை பொழிவோனே.

நிலவின் அமுதாம் குகனேஉன்
பொலியும் முகமே வரமாகும் !
உலகின் கவலை பனிபோலே
விலகி மறைய விழிபாராய்! 

அன்பன்,
மீ.விசுவநாதன்
21.06.2020 20.14 pm

ramaNi

unread,
Jun 21, 2020, 10:53:22 AM6/21/20
to சந்தவசந்தம்
/ நிலவில் முகிலின் நிழலாடும் / = ?
முகில் நிலவை மறைப்பதைத் தற்குறிப்பேற்றிச் சொன்னது!

திருத்திய வடிவில்
02. இன்றியும் நின்றும்!
(சந்த வஞ்சிவிருத்தம்: தனனா தனனா தனதானா)

மண்ணின் றியடித் ததுகாற்று
பண்ணின் றியொலித் தனர்செண்டை
விண்ணின் றுபறந் ததுகாக்கை
கண்ணின் றுகளித் திடுமூரே!

*****

Siva Siva

unread,
Jun 21, 2020, 10:57:19 AM6/21/20
to santhavasantham
Just as a FYI:
தனனா என்ற சீரின் முடிவில் நெடிலோ ஒற்றோ வந்தால் சிறக்கும். சில சமயம்  ஒற்று விரித்தல், விட்டிசைத்தல் முதலியன மூலம் சந்தம் அமையக் கருதலாம்.

--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

RAJAGOPALAN APPAN

unread,
Jun 21, 2020, 11:48:32 AM6/21/20
to santhav...@googlegroups.com
தனனா தனனா தனதானா

புதிதாய் வருமோ இனிமேலும்?
அதைநான் உணரா ததனாலே
விதிதான் இதுவென் றுளனானேன்
எதுதான் வழியென் றறியேனே.

அ.ரா.

On Sun, Jun 21, 2020, 8:23 PM ramaNi <sai...@gmail.com> wrote:
/ நிலவில் முகிலின் நிழலாடும் / = ?
முகில் நிலவை மறைப்பதைத் தற்குறிப்பேற்றிச் சொன்னது!

திருத்திய வடிவில்
02. இன்றியும் நின்றும்!
(சந்த வஞ்சிவிருத்தம்: தனனா தனனா தனதானா)

மண்ணின் றியடித் ததுகாற்று
பண்ணின் றியொலித் தனர்செண்டை
விண்ணின் றுபறந் ததுகாக்கை
கண்ணின் றுகளித் திடுமூரே!

*****

On Sunday, June 21, 2020 at 7:08:41 PM UTC+5:30, siva siva wrote:
/ நிலவில் முகிலின் நிழலாடும் / = ?

One place may need some review.
/ கண்ணின் றுகளித் ததுவூரே  /
புணர்ச்சியை நோக்குக.

--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Mani Mee

unread,
Jun 21, 2020, 12:36:39 PM6/21/20
to santhav...@googlegroups.com

வணக்கம்

இங்கே என் முயற்சி...

(தனனா தனனா தனதானா)

மலரே, பனியின் சிலைநீயே,

மணிமுத் தணியுன் னழகாலே

மதுவுற் றதுபோ லொருபோதை

மனதுஞ் சுழலெந் திரமானேன்!

நன்றி
மீ.மணிகண்டன்

Sent from my iPhone

On Jun 21, 2020, at 10:48 AM, RAJAGOPALAN APPAN <appan.ra...@gmail.com> wrote:

Siva Siva

unread,
Jun 21, 2020, 12:57:56 PM6/21/20
to santhavasantham
Yes, both verses conform to the meter.

Swaminathan Sankaran

unread,
Jun 21, 2020, 8:22:15 PM6/21/20
to santhav...@googlegroups.com
'குரலாக'
 எப்படி 'தனதானா' ஆகும்? அது 'தனதான' அல்லவா?

சங்கரன் 
 
--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

--
 Swaminathan Sankaran

Siva Siva

unread,
Jun 21, 2020, 8:33:19 PM6/21/20
to santhavasantham
Good question.
Please see 2.1 for 'guru' definition. (June 4, 2020 post).

RAJAGOPALAN APPAN

unread,
Jun 22, 2020, 2:00:33 AM6/22/20
to santhav...@googlegroups.com
ஒவ்வொரு வரியின் முடிவிலும் வருகிற குறிலுக்கும் மாத்திரை அளவு கூடுமென்று நான்  புரிந்துகொண்டிருப்பது சரி என்று நினைக்கிறேன்.

அ.ரா.

Siva Siva

unread,
Jun 22, 2020, 8:20:19 AM6/22/20
to santhavasantham

C-3) "தானன தானன தானதனா" - (வஞ்சிவிருத்தம்)

இதுபோல் சிறிய அடிகள் ஆயின், பாடலில் அடியினுள் மோனை அவசியம் இல்லை.

ஆனால் இந்த அமைப்பில் முயன்றால் மோனை அமைய இயற்றலாம்.

இன்குர லிசைகெழும் யாழ்முரலத்

தன்கர மருவிய சதுரனகர்

பொன்கரை பொருபழங் காவிரியின்

தென்கரை மருவிய சிவபுரமே. (சம்பந்தர் தேவாரம் - 1.112.1)

* அடிதோறும் ஈற்றுச்சீரில் தானதனா என்பது சில சமயம் தனதனனா என்று வந்ததை நோக்குக. (அச்சீரின் மாத்திரைக் கணக்கு மாறாமல் 6 என்று வருவதையும் நோக்குக).

பாறணி வெண்டலை கையிலேந்தி

வேறணி பலிகொளும் வேட்கையனாய்

நீறணிந் துமையொரு பாகம்வைத்த

மாறிலி வளநகர் மாற்பேறே. (சம்பந்தர் தேவாரம் - 1.114.2)

* அடிதோறும் ஈற்றுச்சீரில் தானதனா என்பது சில சமயம் தானதான, தானானா என்றெல்லாம் வந்ததை நோக்குக. (அச்சீரின் மாத்திரைக் கணக்கு மாறாமல் 6 என்று வருவதையும் நோக்குக).

வி. சுப்பிரமணியன்  

On Fri, Jun 19, 2020 at 8:28 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

C-2) "தனனா தனனா தனதானா" - (வஞ்சிவிருத்தம்)

--

V. Ramasamy

unread,
Jun 23, 2020, 12:39:15 PM6/23/20
to santhav...@googlegroups.com
C-3 தானன தானன தானதனா:

சோதனை யாயிர மாயினுமென்?
ஆதவ னாமுன தாசிரியர்
போதனை கேட்டுயர் பூமிதனிற்
சாதனை செய்வது சாத்தியமே!

அன்புடன்,
ராமு.

--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jun 23, 2020, 3:59:30 PM6/23/20
to சந்தவசந்தம்
அருமை!  

... அனந்த்

 முதலடியிலும் மோனை வரும்படி, சோதனை ஆயிரந் தோன்றிடுமென் என்றும் அமைக்கலாம் 

On Tue, Jun 23, 2020 at 12:39 PM V. Ramasamy <vrama...@gmail.com> wrote:
C-3 தானன தானன தானதனா:

சோதனை யாயிர மாயினுமென்?
ஆதவ னாமுன தாசிரியர்
போதனை கேட்டுயர் பூமிதனிற்
சாதனை செய்வது சாத்தியமே!

அன்புடன்,
ராமு.

On Mon, Jun 22, 2020, 17:50 Siva Siva <naya...@gmail.com> wrote:

C-3) "தானன தானன தானதனா" - (வஞ்சிவிருத்தம்)

வி. சுப்பிரமணியன்  

V. Ramasamy

unread,
Jun 23, 2020, 9:05:16 PM6/23/20
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி பேராசிரியர் ஐயா.
ஆயிரந் என்றால் தானனா என்று ஆகிவிடுமோ என்றோர் அச்சம். (சந்தத்தில் நான் ஆரம்ப நிலை மாணவன் - மற்றதில் அரைகுறை!)

அன்புடன்,
ராமு.
--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

ramaNi

unread,
Jun 24, 2020, 3:52:28 AM6/24/20
to சந்தவசந்தம்
C-3) "தானன தானன தானதனா" - (வஞ்சிவிருத்தம்)
03. மாலை!
(சந்த வஞ்சிவிருத்தம்: தானன தானன தானதனா)

காற்றினி லேயொரு கார்வையெழும்
ஆற்றினி லேயலை ஆர்த்துவரும்
சேற்றினி லேயொரு தேரைவிழும்
ஈற்றினி லேகதிர் வீழ்மலையே!

[கார்வை = இசையில் நாதநீட்சி]

03. காலை!
(சந்த வஞ்சிவிருத்தம்: தானன தானன தானதனா)

வேரணி தாவரம் மேலெழவே
காரணி முகிலின் கட்டவிழும்
ஊருணி நீர்நிறை யும்விதமாய்
ஆரணி யின்னரு ளற்புதமே
[ஆரணி = பார்வதி]

--குருநாதன் ரமணி, 24/06/2020

*****

RAJAGOPALAN APPAN

unread,
Jun 24, 2020, 9:34:16 AM6/24/20
to santhav...@googlegroups.com
முகிலின்- தனனா ?  தானன?

அ.ரா

On Wed, Jun 24, 2020, 1:22 PM ramaNi <sai...@gmail.com> wrote:
C-3) "தானன தானன தானதனா" - (வஞ்சிவிருத்தம்)
03. மாலை!
(சந்த வஞ்சிவிருத்தம்: தானன தானன தானதனா)

காற்றினி லேயொரு கார்வையெழும்
ஆற்றினி லேயலை ஆர்த்துவரும்
சேற்றினி லேயொரு தேரைவிழும்
ஈற்றினி லேகதிர் வீழ்மலையே!

[கார்வை = இசையில் நாதநீட்சி]

03. காலை!
(சந்த வஞ்சிவிருத்தம்: தானன தானன தானதனா)

வேரணி தாவரம் மேலெழவே
காரணி முகிலின் கட்டவிழும்
ஊருணி நீர்நிறை யும்விதமாய்
ஆரணி யின்னரு ளற்புதமே
[ஆரணி = பார்வதி]

--குருநாதன் ரமணி, 24/06/2020

*****

On Monday, June 22, 2020 at 5:50:19 PM UTC+5:30, siva siva wrote:

C-3) "தானன தானன தானதனா" - (வஞ்சிவிருத்தம்)

--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

ramaNi

unread,
Jun 24, 2020, 9:50:13 AM6/24/20
to சந்தவசந்தம்
முகிலின் => தனனாச் சந்தமே. ஆயின் நான்கு மாத்திரை அளவென்பதால் தானனவுடன் ஒன்றும்.
ரமணி

RAJAGOPALAN APPAN

unread,
Jun 24, 2020, 10:53:36 AM6/24/20
to santhav...@googlegroups.com
நன்றி ஐயா.

அ.ரா.

--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
It is loading more messages.
0 new messages