அன்புள்ள சந்தவசந்தச் சொந்தங்களே,
இன்று காலை சிவ சிவாவுடன் பேசிக்கொண்டிருக்கும்போது இந்த ஆண்டு நாங்கள் மேடையேற்றும் நாடகம் 'குங்கிலியக் கலய நாயனாரைப் பற்றியது என்று கூறினேன்.
அப்போது இதுவரை மேடையேற்றிய நாடகங்களின் சுட்டிகளை அவருக்கு அனுப்புவதாகச் சொன்னேன்.
அதற்கு அவர், நம் சந்தவசந்தக்குழுவிற்கு அனுப்பினால் பலரும் பயனடைவர் என்று கூறினார்.
இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 16 ம் தேதி மாலை 6 மணிக்கு சிங்கப்பூர் பீஜீபீ அரங்கத்தில் மேடையேற இருக்கிறது.
அப்பொழுது யாரெல்லாம் சிங்கப்பூருக்கு வர இயலுமோ , வந்து அனுபவிக்க அழைப்பு விடுக்கிறேன்.
இதுவரை ஆண்டுக்கு (குரோனா காலத்தைத் தவிர) ஒரு இசை நாடகத்தை மேடையேற்றி வருகிறோம்.
பாடல்களைப் புனைந்தவர்/ புனைபவர்
;அ கி வரதராஜன்
பாடல்களைப் பாடுபவர்கள் : திருமுறையைப் பாடும் மாணவ மாணவியரும், பெரியோர்களும்.
நடிகர்கள்: திருமுறை அடியார்களும் அவர்களது குடும்பத்தினரும்.
இத்துடன் ஒரு சுட்டியை இணைத்துள்ளேன். அதில் நாங்கள் இதுவரை மேடையேற்றிய எல்லா நாடகங்களும் உள்ளன,
முதல் நாடகம் 2014 ம் ஆண்டு மேடையேறிய 'பித்தா பிறைசூடி"
ஆண்டுவாரியாக நாடகத்தைப் பார்த்து இரசியுங்கள்.
எங்களது ஒரே குறிக்கோள் ஒரு ஆண்டில் மேடையேறும் நாடகம் அதன் முந்தைய ஆண்டின் நாடகத்தைவிடச் சிறப்பாக இருக்க வேண்டும்.
எல்லா நாடகங்களையும் பார்த்துவிட்டு உங்கள் அபிப்பிராயங்களை மடலிடுங்கள்.
எல்லாப் புகழும் எங்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளர் (தலைவர் என்ற சொல்லை விரும்பமாட்டார்) அகிவ ஐயாவுக்கே.