மதிசூடி துதிபாடி 4ஆம் தொகுதி - நூல் வெளியீடு

46 views
Skip to first unread message

sankara dass nagoji

unread,
Nov 9, 2025, 9:41:40 AMNov 9
to சந்தவசந்தம்
வணக்கம்.

மதிசூடி துதிபாடி நூலின் 4ஆம் தொகுதி வெளியீட்டு விழா, டிசம்பர் 10ஆம் தேதி, புதன் கிழமை, காலை 10.30 முதல் 12.30 வரை, மயிலாப்பூர் லஸ் ஆர் கே அரங்கத்தில் நடைபெற உள்ளது. 

நிகழ்ச்சி பற்றிய விவரங்களைக் கூடிய சீக்கிரம் தருகிறோம்.

அனைவரும் வருக.

- சங்கர தாஸ்

Nagoji

unread,
Nov 29, 2025, 1:56:52 AMNov 29
to santhav...@googlegroups.com
அழைப்பிதழ். அனைவரும் வருக.


--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/JmvZ-o7XfW0/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/4f347c92-0823-42da-90f3-3a29c880c966n%40googlegroups.com.
WhatsApp Image 2025-11-29 at 12.19.58 PM.jpeg

Ram Ramakrishnan

unread,
Nov 29, 2025, 2:29:28 AMNov 29
to santhav...@googlegroups.com
வருவேன். நம்மில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பும் அமையும் என நம்புகிறேன்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Nov 29, 2025, at 12:26, Nagoji <nag...@gmail.com> wrote:


You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAE_cqFTSgYOAoQihvZ3rYL15UyptVTVVdJVwgvXMMAASPPHUqA%40mail.gmail.com.
<WhatsApp Image 2025-11-29 at 12.19.58 PM.jpeg>

Siva Siva

unread,
Nov 29, 2025, 11:32:49 AMNov 29
to santhav...@googlegroups.com
மிக்க மகிழ்ச்சி.

சென்னைப் பகுதியில் உள்ளீரெல்லாம் வருக!

சென்னைக்கு வர இயலாத வெளியூர் அன்பர்கள் யூட்யூபில் கண்டு ஆதரவு தருக!
(YouTube link will be shared later when available).

வி. சுப்பிரமணியன்

Nagoji

unread,
Dec 9, 2025, 12:06:31 PM (7 days ago) Dec 9
to santhav...@googlegroups.com
நாளை சந்திப்போம்.

Dec 10, 2025 - Wed - 10:30 am - 12:30 pm IST
Arkay Convention Center
146, 3rd floor, OMS Lakshana, Royapettah High Rd,
Mylapore, Chennai

Livestream: https://www.youtube.com/watch?v=yz3PbCRawI4

- சங்கர தாஸ்
--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/JmvZ-o7XfW0/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.

Nagoji

unread,
Dec 10, 2025, 12:36:32 PM (6 days ago) Dec 10
to santhav...@googlegroups.com
வணக்கம். இன்று மதிசூடி துதிபாடியினுடைய  நான்காம்  தொகுதி  நூல் விழா மிகச் சிறப்பாக நடந்தேறியது. பத்து மணியிலிருந்தே நண்பர்கள் வரத் தொடங்கிவிட்டார்கள்.

முதலில் ஆர்யா நாகராஜன் இறைவணக்கம் பாடினார். கற்பகாம்பாள் கபாலீஸ்வரர் மேல் கற்பக மனோகரா என்ற பாடல்.

அதை தொடர்ந்து சங்கரதாஸ் நாகோஜினுடைய வரவேற்புரை. இதில் நெல்லை சீர்வளர்சீர் சோமசுந்தரத் தம்பிரான் சுவாமிகள் அவர்களை முதலில் வரவேற்றார். அதன் பிறகு நிறைய தமிழ் ஆன்றோர்கள் வந்திருந்தார்கள். அசோக் சுப்ரமணியம் அவர்கள் வந்திருந்தார்கள். ராம்கிராம் வந்திருந்தார்கள். சிவ சிவாவுடன் ஐஐடியில் படித்த பத்து பேர் வந்திருந்தார்கள். சிவ சிவா அவருடைய உறவினர்களும் வந்திருந்தார்கள். நண்பர்களும் வந்திருந்தார்கள். ஆர்கே கலையரங்கு கொஞ்சம் கொஞ்சமாக நிரம்பத் தொடங்கியது.

வரவேற்புரைையைத் தொடர்ந்து நெல்லைத் தம்பிரான் அடிகளாரினுடைய திருக்கரங்களால் நான்காவது தொகுதி நூல் வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியம் ஐயா அவர்களை பற்றி நாகோஜி ஒரு அறிமுக உரையை வழங்கினார். கலைமகளுடைய ஆசிரியர் உவேசா அவர்கள், கிவாஜ அவர்களைத் தொடர்ந்து, கீழாம்பூர் ஐயா அவர்கள் சிறந்த முறையிலே பணியாற்றி வருகிறார் என்பதை எடுத்துச் சொல்லி, அவருடைய தீராத திருக்குறள் பற்றையும் எடுத்துச் சொன்னார்.

அதைத் தொடர்ந்து ஒரு இருபத்தைந்து முப்பது நிமிடங்கள் கீழாம்பூர் ஐயா அவர்களுடைய சிறந்த சொற்பொழிவு. நூல் நயத்தையும் எடுத்துச் சொல்லி இந்த நூலுக்கு அவர் அடிமை என்றே சொல்லிவிட்டார்ச் அவருடைய குலெய்வம் சிவசைலம் சுவாமிச் சிவசைலம் சிவபெருமானைப் பற்றிய பதிகம் இந்த தொகுதியிலே இடம் பெற்றிருந்ததால் அவர் முழுமையாக ஆட்கொள்ளப்பட்டு விட்டேன் என்று குறிப்பிட்டார். அவருடைய உரை கேட்கக் கேட்க இனிமையாக இருந்தாலும் நேரம் கருதி அவர் முப்பது நிமிடங்களிலேயே முடித்து கொண்டு விட்டார். கிவாஜ அவர்களைப் பற்றியும் தினமணி ஆசிரியர் ஏ என் சிவராமந் அவர்களைப்பற்றியும் மிக அருமையாக எடுத்துச் சொன்னார். 

அதைத் தொடர்ந்து  நெல்லைத் தம்பிரான் சுவாமிகள் ஆசியுரை வழங்கினார். அந்த ஆசியுரையிலே பல திருமுறைகளிலிருந்தும் பாடல்களை எடுத்துச் சொல்லி, பக்தியின் மூலமாக எப்படி ஞானமும் தவமும் ஒருவருக்குக் கைகூடும் என்பதை மிக அழகாக எடுத்துச் சொன்னார். இந்த நூல் ஒரு பாராயணத்துக்குண்டான நூல், வெறும் வாசிப்பிற்கு மட்டும் இல்லாமல் பாராயணம் செய்யப்பட வேண்டியது என்று சொன்னார். அவருடைய திருக்கரங்களாலே காசி அன்னபூரணி விக்கிரகமும் புத்தக மண்டலத்துக்கு நடுவேை வைக்கப்பட்டிருந்த திரிசூலமும் சிவசிவா ஐயாவுக்கு  வழங்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து சிவ சிவா அவர்களுடைய ஏற்புரை. ஏற்புரையிலே அவர் அனைவருக்கும் நன்றியைச் சொன்னார்.  இதை எப்படியெல்லாம் அவர் தொடர்ந்து எழுதி வருகிறார் என்பதையும் அதற்கு ஊக்கம் அளிக்கின்ற அவருடைய குடும்பத்தாரைப் பற்றியும் அழகாகச் சொன்னார். 

தொடர்ந்து நாகோஜியினுடைய நன்றி உரை. நன்றியுரைக்குப் பிறகு பவ்யா ஹரி அவருடைய குழுவினுடைய இசைக் கச்சேரி. இந்த நாலாம் தொகுதியிலிருந்து பல பாடல்களை, பவ்யா பல ராகங்களில் மிக அழகாக எடுத்துப் பாடினார்.

முக்கியமாக விழா ஆரம்பித்து ஒரு பத்து பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு சங்கீத கலாநிதி நெய்வேலி சந்தானகோபாலன் அவர்களும் வந்து கலந்து கொண்டார்கள். மிகவும் ரசித்தார்கள். அசோக் சுப்ரமணியன் அவர் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்தார்.  முடிவிலே நெய்வேலி சந்தானகோபாலன் அவர்கள் பவ்யா பாடும்பொழுது ராமரைப் பற்றிய ஒரு பாடல்குறிப்பு வரும்பொழுது, ராமப்ரியா  ராகத்தில நீங்கள் அமைத்திருப்பது மிக அருமை என்றும் எடுத்துச் சொன்னார்.

அருமையாக வாசித்த ஹரிதா அவர்களையும் பாராட்டி மிருதங்கம் குரு ராகவேந்திரா அவர்களையும் பாராட்டினார். மிருதங்கத்தினுடைய சொல்லானது பவ்யா பாடுகின்ற சொல்லுக்கு இழைந்து வருகிறது என்று அழகாக எடுத்துச் சொன்னார். விழாவுக்கு வந்தவர்கள் எல்லாருக்கும் தொகுதி 4இன் படி வழங்கப்பட்டது. நிறைய பேர் தொகுதி ஒன்று இரண்டு மூன்றையும் வாங்கிச் சென்றார்கள். பன்னிரண்டு நாற்பதுக்கு  விழா இனிது நிறைவேறியது.

ஆர்கே களையரங்கம்  பாதி விழாவின் போதே நிரம்பி விட்டது. புதன்கிழமை காலையிலே நடக்கின்ற ஒரு தமிழ் விழாவுக்கு இவ்வளவு கூட்டமா என்று ஆர் கே ராமகிருஷ்ணன் அவர்கள் அசந்துவிட்டார். சாயங்காலம் வைக்கக்கூடிய தலை சிறந்த வித்வான்களுடைய இசைக் கச்சேரிக்குக் கூட அரங்கம் நிரம்புவதில்லை; இன்று இவ்வளவு பேர் வந்திருக்கிறார்கள், ரொம்ப சந்தோஷம், அசாத்தியம், என்று அவருடைய வாயாலேயே சொன்னார். இந்த விழா இது நிறைவேற உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.

திருச்சிற்றம்பலம்.


-- sankara dass

VETTAI ANANTHANARAYANAN

unread,
Dec 10, 2025, 6:06:02 PM (6 days ago) Dec 10
to santhav...@googlegroups.com

நாகோஜி: நிகழ்ச்சியை நேரில் காண்பதுபோல் நன்கு விவரித்துள்ளீர்கள். மிக்க நன்றி. காணொளிப் பதிவு விரைவில் கிட்டுமென நம்புகிறேன்.

அனந்த்

--.

Ram Ramakrishnan

unread,
Dec 10, 2025, 10:25:41 PM (6 days ago) Dec 10
to santhav...@googlegroups.com
மிக அருமையான நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பளித்தமைக்கு திரு. சிவசிவா மற்றும் திரு. நாகோஜிக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன்.

பவ்யா ஹரி அவர்களின் இன்னிசை மழையில் நனைந்தேன் என்பது உண்மை.

அத்துணைப் பேச்சாளர்களும் அருமையான கருத்துகளைத் தெரிவித்தனர்.

விழா முடிந்தவுடனே சென்னையிலிருந்து பங்களூருக்குக் காரில் வந்து கொண்டிருக்கையில் மதிசூடி 4 புத்தகத்திலிருந்து 4 பதிகங்களைப படித்து இன்புற வாய்ப்பும் கிடைத்தது.



அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Dec 10, 2025, at 23:06, Nagoji <nag...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAE_cqFT65mkjbBbHbcLE3oWkoian57wmQd3q3RRVmf4-A2mdCQ%40mail.gmail.com.

Nagoji

unread,
Dec 10, 2025, 10:47:16 PM (6 days ago) Dec 10
to Santhavasantham
Youtube link is given at the end of the report ji.
Sdn.

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/JmvZ-o7XfW0/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAF%2Bqia21yFQdbgyt5NHiT8HUux%2BS4z5HOBtbFbs3W-vx_CQnhw%40mail.gmail.com.

M. Viswanathan

unread,
Dec 11, 2025, 4:52:18 AM (5 days ago) Dec 11
to Santhavasantham
மதிசூடி நூல் வேளியீட்டு விழா சிறப்பாக நிறைவடைந்தது என்று நண்பர், கலைமகள் ஆசிரியர் திரு.கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் தெரிவித்தார். மிக்க மகிழ்ச்சி. நல்வாழ்த்துகள்.

அடியேனுக்கு மருத்துவரைப் பார்க்க வேண்டியிருந்த காரணத்தால் கலந்து கொள்ள இயல வில்லை. இறையருளால் ஐந்தாவது தொகுதி வெளியீட்டு விழாவில் கலந்து கொள்கிறேன்.நன்றி.
அன்பன்,
மீ.விசுவநாதன்
11.12.2025 15.21pm



You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAE_cqFQTtr2%3D8%3DOhp_0%3DiCRiCz6iW9yuetAJ78tv4VeSBumwGA%40mail.gmail.com.

இமயவரம்பன்

unread,
Dec 11, 2025, 7:10:21 AM (5 days ago) Dec 11
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
திரு நாகோஜி அவர்களின் நிகழ்ச்சித் தொகுப்பு மிகச் சிறப்பு!   பல்வேறு அறிஞர்களின் பாராட்டுரைகளையும் இசைக்குழுவினரின் பாடல்களையும் காணொலியில் கண்டு களித்தேன்! காணொலி இணைப்பை அளித்தமைக்கு நன்றி! 

- இமயவரம்பன் 

Subbaier Ramasami

unread,
Dec 11, 2025, 8:34:56 AM (5 days ago) Dec 11
to santhav...@googlegroups.com
மதிசூடி துதிபாடி 4ம் தொகுதி மிகச் சிறப்பாக வெளியிடப்பட்டதை அறிந்து மகிழ்ச்சி.
காணொளியை இன்னும் பார்க்கவில்லை. பார்த்துவிட்டு எழுதுகிறேன். சிவசிவாவுக்கும், புத்தகத்தை  வெளியிட ஏற்பாடு செய்த திரு. நாகோஜிக்கும் நல்வாழ்த்து.

On Sun, Nov 9, 2025 at 8:41 AM sankara dass nagoji <nag...@gmail.com> wrote:
வணக்கம்.

மதிசூடி துதிபாடி நூலின் 4ஆம் தொகுதி வெளியீட்டு விழா, டிசம்பர் 10ஆம் தேதி, புதன் கிழமை, காலை 10.30 முதல் 12.30 வரை, மயிலாப்பூர் லஸ் ஆர் கே அரங்கத்தில் நடைபெற உள்ளது. 

m.

Siva Siva

unread,
Dec 11, 2025, 12:49:34 PM (5 days ago) Dec 11
to santhav...@googlegroups.com
இந்த நூல்வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வாழ்த்திய அன்பர்களுக்கும், யூட்யூபில் பார்த்து வாழ்த்திய அன்பர்களுக்கும் என் வணக்கம்.

வி. சுப்பிரமணியன்

Saranya Gurumurthy

unread,
Dec 12, 2025, 10:17:38 PM (4 days ago) Dec 12
to சந்தவசந்தம்
Namaskaram. I couldn't make it up for the function. Apologies for the same. Will definitely watch in YouTube. Thanks for sharing the same.

Regards,
Saranya

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Dec 13, 2025, 1:49:48 AM (4 days ago) Dec 13
to சந்தவசந்தம்

அனைவரும் வணக்கம் 🙏

மதிசூடி துதிபாடி நான்காம் தொகுதி நூல் வெளியீட்டு விழா 
மிகச் சிறப்பாக நடைபெற்றது என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன்.

நேரில் கலந்து கொள்ள இயலாதது மனவருத்தமளித்தாலும்,
நாகோஜி ஐயாவின் உரையைப் படித்து ரசித்தேன்.

YouTube மூலம் விழாவைப் பார்த்தது, விழாவில் கலந்து
 கொண்ட உணர்வை ஏற்படுத்தியது.

எல்லாம் வல்ல இறைவன் அருளால் இத்தகைய சிறந்த விழாவை 
ஏற்படுத்திய அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

திருச்சிற்றம்பலம்.

Siva Siva

unread,
Dec 13, 2025, 9:11:28 AM (3 days ago) Dec 13
to santhav...@googlegroups.com
Hope you are feeling better now.

V. Subramanian
Reply all
Reply to author
Forward
0 new messages