நவிர மலையின் தலைவனான நன்னன் என்பவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டது இந்நூல். நவிர மலை மக்களின் வாழ்க்கை முறைகளையும், அவர்கள் தலைவனின் கொடைத் திறத்தையும் புகழ்ந்து பாடும் பாடல்களில், அக்காலத் தமிழரின் இசைக்கருவிகள் பற்றியும் ஆங்காங்கே குறிப்புகள் காணப்படுகின்றன.
முத்தாய்ப்பாக, 578 - 583 ம் அடிகள் நன்னனின் கொடைத்திறத்தை வர்ணித்து நூலை முற்றுப்பெற வைக்கின்றன.
வளம் பிழைப்பு
அறியாது வாய்வளம் பழுநிக்
கழை வளர் நவிரத்து மீமிசை ஞெரேரென
மழை சுரந்தன்ன ஈகை நல்கி
தலைநாள் விடுக்கும் பரிசில் மலை நீர்
வென்று எழு கொடியின் தோன்றும்
குன்று சூழ் இருக்கை நாடு கிழவோனே 583
இதன் பொருள்:
வளமை முற்றுப்பெற்ற மூங்கில் வளர்ந்த நவிரம் என்ற மலை உச்சியில் விரைவில் கொட்டும் மழையினைப் போல், பரிசுகள் தந்து
முதல் நாளிலேயே போக விடுவான்,, மலைகளிலிருந்து வடியும் அருவிகள் வெற்றிக் கொடிகள் போல் தோன்றும் மலைகள்
சூழ்ந்த நாட்டு மன்னனான நன்னன்.
மேலிட்ட வரிகள், கொடையின் வலிமையையும், பெருமையையும், அவசியத்தையும் உணர்த்திக் கீழ்க் கண்ட கவிதை எழுதக் காரணமாயிற்று.:
நாலடித் தரவு
கொச்சகக் கலிப்பா
மூங்கிலடர் நவிரமலை முக்காலும் *பெறுமழை*போல்
ஆங்காண்ட நன்னனென்பான் அகஞ்சுரக்கும் கருணையினன்
ஏங்கிவந்த வறியோர்க்கே எந்நாளும் தலைநாள்போல்
நீங்காத பெருமிதத்தில் நிதம்நிலைத்துப் பொருளீந்தான்.
அன்பில்லார் தமக்குரியர் அருள்மனத்தை அகங்கொண்டோர்
என்பாலும் பிறர்க்குரியர் எடுத்தரைத்தார் திருக்குறளார்
கன்றதனைச் சூழ்ந்தபசுக் கருணையொத்த குணத்தவரே
பொன்றிடினும் புகழ்நீங்கார் பொருளீயத் தயக்கமிலார்.
கடையேழு வள்ளல்போல் கொடையளிக்க மனம்வேண்டும்
மடைதிறந்த வெள்ளம்போல் மனமுருக அருள்வேண்டும்
விடைதெரியா நிலைவரினும் விலக்ககலாத் தருமமெனக்
கடைநிலையில் உழல்பவரும் கனிவுகொளத் தயைசிறக்கும்.
உண்ணாமல் உடுக்காமல் உறங்காமல் பதுக்கிவைத்துக்
கண்ணாகக் கொளும்பணந்தான் கடவுட்பால் சேர்த்திடுமோ
மண்ணோடு மண்ணாக மறைந்தழியும் மனிதவுடல்
எண்ணாதே அளித்திடுக இரப்பவர்க்காய் எந்நாளும்.
இரப்பவரின் முகம்காண வருத்தமுறும் மனம்வேண்டும்
கரத்தலினால் பெறும்செல்வம் கடைசிவரை உடன்வருமா
அரமறுக்கும் மரம்போல பிறர்துயர்கண் டகம்வருந்தத்
தருமமென்னும் குணம்பரவித் தரணியதும் துலங்கிடுமே.
பெருமிதம் – பேருகை, உள்ளக்களிப்பு
*புணர்ச்சியில் மகர ஒற்று கெட்டது.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAENLqthwec%2BdG5Fq3kW-Bu5uwTkkNqkwBY6jsDa%3D_jPa9Bam9A%40mail.gmail.com.
On Jan 26, 2026, at 14:09, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABMnAXZH7ZUbexksQoaE6em0YnYQRZTUhCYOJ1M%3DKvGK6v3Faw%40mail.gmail.com.
On Jan 26, 2026, at 20:14, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/E9586328-8324-449C-9C07-B6A263525840%40gmail.com.