பாரதியார் யாரென்று
பாரதனாற் தானென்று
பாரதியாய் நானன்று
படபடத்துத் திரிந்ததவும்
பாரிதனை எந்தமிழாற்
பார்மாற்று வேனென்று
பாடலிடுங் கேள்விகளாற்
பலகணைகள் பூட்டியதும்
ஏனெதற்கு சாதிமதம்
இனச்செருக்கு பெண்கொடுமை
ஊனெதற்குப் பிறர்க்குதவா
உயிரெதற்கு என்றதுவும்
இளவயதின் நினவாக
எனுட்கனலும் தணிவாக
களவுமனம் புனைவாகக்
கரைந்ததுவோ எனதுறுதி!
ஊழலிலே அரசாங்கம்!
உண்மைகளுக் கவமானம்!
பாழுமறி வீனர்களின்
பகுத்தறிவுச் சொறிசிறங்கு!
தொகுத்துணரத் தெரியாத
துட்டர்களின் கையிற்சட்டம் !
வகுப்புவத வாதங்கள்!
வன்மமுடன் ஆபாசம்!
விடுதலையில் குழறுபடி!
விருப்பமுடன் சிறைவாசம்!
கொடுமையிது பணலசதிக்
கொள்ளையரின் ராஜாங்கம்!
ஏனெனக்குள் பாரதியார்
எழுந்தின்னும் வரவில்லை!
ஊன்மிகுத்த காரணத்தால்
உணர்விழப்பு ஆனதுவோ!
சீரளித்த பாரதியே!
செந்தமிழின் நல்வேந்தே!
யாரினித்தீ மூட்டுவது?
கும்பிருட்டை ஓட்டுவது?
மீ. ரா
11-12-2025
On 11 Dec 2025, at 07:27, Lalitha & Suryanarayanan <lall...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAE7KeNO4TPgHwguTJaRU3WhgmL2O-8VhcVhJkr6rxa8gQzYCow%40mail.gmail.com.