சென்றது இனி மீளாது - சிந்துக் கவிதை

31 views
Skip to first unread message

இமயவரம்பன்

unread,
Dec 6, 2024, 6:34:55 PM12/6/24
to சந்தவசந்தம்

சென்றது இனி மீளாது 

(சிந்துக் கவிதை)

நடந்து முடிந்த தனைத்தும் நினைந்து

நலிவுற் றயராமல் - மனமே

சுடர்ந்து விரிந்த கதிர்போல் எழுந்து  

துயரற் றுயர்வாயே. (1)

நிகழ்கா லந்தான் நிசமென் றுணர்ந்துன்

நினைவில் சிறப்பாயேல் -  மனமே  

திகட்டா இனிப்பாய்த் திகழும் வாழ்வில்

திளைத்துக் களிப்பாயே.  (2)

ஒவ்வோர் கணமும் இறந்து மீண்டும்

உயிர்ப்புற் றெழுவாயேல் - மனமே

செவ்வே உன(து)ஆ ரிடர்தீர்ந் துணர்வில்     

தீப்போல் ஒளிர்வாயே. (3)

இன்(று)இப் பொழுதிவ் விடமே இனிதென்

றிருந்(து)இன் புறுவாயேல் - மனமே

சென்ற பொழுதாம் சிறைப்பட் டுழலும்

சிறுமை விடுவாயே.  (4)

கடந்த பொழுதைக் கடந்து வென்று

கவலை துறப்பாயேல் - மனமே

தொடர்ந்து வந்து வாட்டும் நினைவைத்

துணிந்து மறுப்பாயே.  (5)

முன்னம் முயன்ற செயல்கள் பழுதாய் 

முடிவுற் றிழிந்தாலும் - மனமே

உன்னி உன்னித் தளரா துனக்குள்

உரங்கொண் டெழுவாயே. (6)

இழந்த தெண்ணி இளைத்து வாடி

ஏங்கி அழியாமல் - மனமே

கழிந்த நினைவாம் கறையற் றிந்தக்

கணத்தில் பொலிவாயே. (7)

என்றோ நிகழ்ந்த தெல்லாம் ஆய்ந்தாய்ந்(து)

இனிநீ மெலியாமல் - மனமே

இன்றைப் பொழுதில் நிலைபெற் றுன்னுள்  

இருளைக் களைவாயே. (8)

முன்னாள் அதனை நினைத்து வெதும்பும்

முரணற் றிடுவாயேல் - மனமே

நன்னாள் அதுஇந் நாளென் றுணர்ந்து

நவமாய்ச் சுடர்வாயே. (9)

முந்தை நினைவை இந்தக் கணத்தில்

முற்றும் மறப்பாயேல்  - மனமே

முந்தும் வினைமோ திடினும் அசைவில்

மோனத் திருப்பாயே. (10)

போனதை எண்ணிப் புலம்பித் தவிக்கும்

புன்மை விடுவாயேல் - மனமே

நானெனும் பொய்யை நவையறப் போக்கும்

ஞானம் பெறுவாயே.(11)

கண்போல் இந்தக் கணத்தைக் கருதும்

கண்ணோட் டத்தாலே - மனமே

கண்ணார் அமுதாம் கடவுள் தன்னைக்

காண்பாய் இப்போதே. (12)

- இமயவரம்பன்

Subbaier Ramasami

unread,
Dec 6, 2024, 9:42:24 PM12/6/24
to santhav...@googlegroups.com
பாடல் அருமை. ஒரே கருத்தைத் திரும்பத் திரும்பச் சொல்வது சற்று இழுக்கிறது.

தொடர்ந்து வந்து வாட்டும் நினைவைத்

துணிந்து மறுப்பாயே.- மறப்பாயே என்றிருக்கலாம். 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/FFF6555A-B195-49DD-9B95-4A20339086FE%40gmail.com.

Siva Siva

unread,
Dec 6, 2024, 10:41:38 PM12/6/24
to santhav...@googlegroups.com
Nice.

#2
திகட்டா /

தெவிட்டா? But then edhugai may need tweaking.

#7
இழந்த தெண்ணி இளைத்து வாடி
ஏங்கி அழியாமல் /

Very emphatic phrasing!

V. Subramanian

இமயவரம்பன்

unread,
Dec 6, 2024, 10:42:32 PM12/6/24
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
தங்கள் கருத்துக்கும் குறிப்புக்கும் மிக்க நன்றி, தலைவரே! 

On Dec 6, 2024, at 9:42 PM, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

இமயவரம்பன்

unread,
Dec 6, 2024, 10:43:35 PM12/6/24
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
Thank you! 

On Dec 6, 2024, at 10:41 PM, Siva Siva <naya...@gmail.com> wrote:

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

RNachi

unread,
Dec 7, 2024, 8:48:54 AM12/7/24
to சந்தவசந்தம்
மிக அருமை ஐயா

இமயவரம்பன்

unread,
Dec 7, 2024, 9:56:13 AM12/7/24
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. நாவ்சியப்பன்! 

On Dec 7, 2024, at 8:48 AM, RNachi <rna...@gmail.com> wrote:

மிக அருமை ஐயா
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Arasi Palaniappan

unread,
Dec 7, 2024, 10:13:09 AM12/7/24
to சந்தவசந்தம்
மிக அருமை இமய வரம்பரே!

அடடா! அடடா! அழகிய  சிந்தை 
     ஆனந்த் படைத்தாரே! - 
மனிதா!
விடடா நடந்த வினையை என்று 
      விளங்க உரைத்தாரே!

அரசி. பழனியப்பன் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
Dec 7, 2024, 1:52:32 PM12/7/24
to santhav...@googlegroups.com
அருமை, திரு. இமயவரம்ப்

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Dec 7, 2024, 2:09:42 PM12/7/24
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
எழில் சிந்தும் சிந்து பாடி அன்பொழுக வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி, திரு. பழனியப்பன்!

On Dec 7, 2024, at 10:13 AM, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:

இமயவரம்பன்

unread,
Dec 7, 2024, 3:06:05 PM12/7/24
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. ராம்கிராம்!

On Dec 7, 2024, at 1:52 PM, Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:

NATARAJAN RAMASESHAN

unread,
Dec 7, 2024, 3:08:24 PM12/7/24
to santhav...@googlegroups.com
சிறப்பான சிந்துக் கவிதை

          — தில்லைவேந்தன்.
..

இமயவரம்பன்

unread,
Dec 7, 2024, 3:33:18 PM12/7/24
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. தில்லைவேந்தன்! 

On Dec 7, 2024, at 3:08 PM, NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:

சிறப்பான சிந்துக் கவிதை

          — தில்லைவேந்தன்.
..

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Kavingar Jawaharlal

unread,
Dec 7, 2024, 5:14:18 PM12/7/24
to santhav...@googlegroups.com

இமயவரம்பன்

unread,
Dec 7, 2024, 5:16:33 PM12/7/24
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
கவிஞர் ஜவஹர்லால் அவர்களுக்கு நன்றி!

On Dec 7, 2024, at 5:14 PM, Kavingar Jawaharlal <kavingar....@gmail.com> wrote:

Mohanarangan V Srirangam

unread,
Dec 10, 2024, 1:57:09 PM12/10/24
to santhav...@googlegroups.com

பாரதி பாட்டை நினைவு படுத்தும் அருமையான பாடல். ஆனாலும் சென்றதையும், வருவதையும் மனத்தினின்றும் அகற்றி நிகழ்காலத்தில் மட்டும் நிற்க முடியுமா? ஆனால் ஓர் ஆசுவாசம்.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Dec 10, 2024, 2:30:44 PM12/10/24
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு.மோகனரங்கன்!

Aldous Huxley என்னும் அறிஞர் எழுதிய Island என்னும் நூலில் வரும் கிளி ஒன்று அடிக்கடி ‘Here and now, boys’ என்று சொல்லிக்கொண்டே இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அந்தக் கிளியைப் போல, பாரதி சொல்லிக்கொடுத்த இந்த வாசகத்தின் கருத்தை மீண்டும் மீண்டும் பல stanzaக்களில் எழுதத் தான் என்னால் முடியும். நிகழ்காலத்தில் நில் என்று சொல்லி என் மனத்தை நிலைநிறுத்த முடியாது என்பது உண்மையே!

இமயவரம்பன்

unread,
Jun 2, 2026, 9:42:04 PM (3 days ago) Jun 2
to சந்தவசந்தம்
இந்தப் பாடலைப் புதுவிதமாக மீண்டும் எழுதிப் பார்த்தேன்:

கடந்ததை எண்ணிக் கலங்காதே மனமே!

(பல்லவி)

மனமே! மனமே!

மனமே! மனமே!

நடந்ததை நினையாதே! - உன்

… நடையினில் தளராதே!

(சரணம் 1)

கடந்திடும் பொழுதினில் நடந்தவை நினைத்துநீ

… கவலைகள் வளர்க்காதே! - மனமே!  

தொடர்ந்திடும் இடரிலும் சுடும்துயர் நடுவிலும்

… துணிவினை இழக்காதே! 

(சரணம் 2)

நிகழ்கணம் நிசமெனக் கழிந்தவை கனவென

… நிதம்நிதம் உணர்வாயே! - மனமே! 

அகல்நிலம் அனைத்தையும் அமுதென அருந்திடும்

… அனுபவம் உறுவாயே!

(சரணம் 3)

பொழுதுகள் தொறும்தொறும் பழையவை கழிந்திட

… புதிதென எழுவாயே! - மனமே! 

பழுதெலாம் மறைந்திடப் பளிச்சிடும் உணர்வுடன்

… பளிங்கென பொலிவாயே! 

(சரணம் 4)

அறிவெனும் ஒளியுடன் பரிவெனும் விழியுடன்

… அறவினை புரிவாயே! – மனமே! 

உறுதுயர் விலகிட வருகணம் எதனிலும்

… உயர்நலம் அடைவாயே! 

- இமயவரம்பன்

Ram Ramakrishnan

unread,
Jun 3, 2026, 8:42:56 AM (3 days ago) Jun 3
to santhav...@googlegroups.com
அற்புதம், திரு. இமயவரம்பன்.

தொறும் தொறும் - புதிய பிரயோகம் அடியேன் கண்டேன்.

பளிங்கெனப் பொழிவாயே- வல்லினம் மிக வேண்டுமோ.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jun 2, 2026, at 21:42, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:

இந்தப் பாடலைப் புதுவிதமாக மீண்டும் எழுதிப் பார்த்தேன்:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Jun 3, 2026, 10:41:24 AM (3 days ago) Jun 3
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. ராம்கிராம்!

“ஆயும் தொறும்தொறும் இன்பம் தரும்தமிழ்” என்று எங்கோ படித்திருக்கிறேன். அதையொட்டி எழுதினேன். 

ஆம். வல்லினம் மிக வேண்டிய பல இடங்களை இந்தப் பாட்டில் இப்போதுதான் பார்க்கிறேன். சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி. 

இமயவரம்பன்

unread,
Jun 4, 2026, 6:01:38 PM (2 days ago) Jun 4
to சந்தவசந்தம், santhav...@googlegroups.com
Reply all
Reply to author
Forward
0 new messages