அவரவர் குணவெளிச்சம் - மீ. விசுவநாதன்

2 views
Skip to first unread message

M. Viswanathan

unread,
May 14, 2026, 9:28:24 PM (17 hours ago) May 14
to Santhavasantham, M. Viswanathan
"அவரவர் குணவெளிச்சம்"
              (மீ. விசுவநாதன்)

உப்பு நீரைத்தான்
கதிரவன்
சுத்த அமுத நீராக்கி 
"குறிஞ்சி, முல்லை,  மருதம், 
நெய்தல், பாலை"
எங்கும்
குலம், கோத்திரம் கேட்காமல்
வள்ளலாக
மாமழையைப்
பருவம் தப்பாமல்
வாரிச் சொரிகிறான்.

ஆனால்
அரசாங்கமோ
நாங்கள்
பிறந்தது முதல்
பள்ளிக் கல்வி,
வேலைச் சான்றிதழ்,
திருமணச் சான்றிதழ்
இறப்புச் சாந்றிதழ் வரை
குலம், கோத்திரம் பார்க்காமல்
எந்த வேலையிலும் இறங்க மாட்டார்கள்.

அவர்களைக் குறை சொல்லாதீர்கள்!

எங்களுக்கு
உண்பதற்கும், குடிப்பதற்கும்
அவர்கள் தருவதென்ன 
சுத்த அமுதமழை நீரா?
ஆறு, குளங்களில்
ஊர்ச்சாக்கடைக் கழிவைக்
கலந்த 
நச்சு நீர் தானே!

உப்பு நீரை அமுதாக்குவதும்
அமுதைக் கழிவாக்குவதும்
அவரவர் குணவெளிச்சம்.
        (15.05.2026 06.11 am)

                   

Kaviyogi Vedham

unread,
11:17 AM (3 hours ago) 11:17 AM
to santhav...@googlegroups.com
appadi podu. good  idea,
 yo

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CACXjW-vqSvM_CAmb2djM0b5qw6mApEr_Qzzvw%2B0O%2BHy1vr5w6A%40mail.gmail.com.
Reply all
Reply to author
Forward
0 new messages