பசி நேர உணவு - மீ. விசுவநாதன்

1 view
Skip to first unread message

M. Viswanathan

unread,
Mar 16, 2026, 9:52:14 PM (2 days ago) Mar 16
to Santhavasantham, M. Viswanathan
"பசி நேர உணவு"
(மீ. விசுவநாதன்)

சுண்டக் குழம்புச் சோறு
சுட்ட அப்ளம் சேர்த்து
குண்டு உருண்டை யாகக்
கூட்டி வாயில் போட்டால்
கொண்ட வயிறு வாழ்த்தும்
கொஞ்சித் தூங்க வைக்கும்
கண்டு சொன்னேன் ஐயா
காசு அதிக மில்லை.

பருப்புத் தொகையில் சாதம்
பச்சைத் தேங்காய் எண்ணை
விருப்ப மாகச் சேர்த்து
விரைந்து நாவில் வைத்தால்
நெருப்பில் வார்த்த நெய்யாய்
நெகிழ்ந்து சக்தி கூட்டும்
வருத்த மேதும் வேண்டாம்
வார மோர்நாள் உண்பீர்.

அன்னம் பசியைப் போக்கும்
அறிவுப் பசியைப் போக்க
என்றும் ஆழ மாக
இறங்கிப் படிக்க வேண்டும்
அன்பு கொண்ட சொந்தம்
அமைதல் வரமே யாகும்
நன்றி சொல்ல நாளும்
நாவைப் பழக்க வேண்டும்.
      (17.03.2026 07.15 am)

Arasi Palaniappan

unread,
Mar 17, 2026, 12:08:19 AM (yesterday) Mar 17
to சந்தவசந்தம், M. Viswanathan
அற்புதம் அண்ணா!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CACXjW-vkwyx1Lay3wh9X27QewZFLB5EUzuCFO%2BJGe3XydVAAhA%40mail.gmail.com.

GOPAL Vis

unread,
Mar 17, 2026, 12:27:48 AM (yesterday) Mar 17
to santhav...@googlegroups.com
அற்பப் பசிபோக்கும் அன்னம்! அறிபசி
கற்கப் பெருகிடும் கல்!

கோபால். 

On Tue, Mar 17, 2026 at 7:22 AM M. Viswanathan <meev...@gmail.com> wrote:
"பசி நேர உணவு"
(மீ. விசுவநாதன்)
................

M. Viswanathan

unread,
Mar 17, 2026, 1:07:33 AM (yesterday) Mar 17
to Santhavasantham
அன்புக் கவிஞர் அரசி பழனியப்பன், கவிஞர் கோபால் ஜி ஆகியோரின் கருத்துக்கு மகிழ்ச்சி. நன்றி.

அன்பன்,
மீ. விசுவநாதன்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages