குருவே சரணம்
1989ஆம் வருடம் ஐப்பசி மாதம் சுக்ல பக்ஷ ஏகாதசி தினத்தன்று என் தாயார் திருமதி இராமலெஷ்மி அம்மாளின் சஷ்டியப்த்த பூர்த்தி சாந்தி (அறுபது வயது நிறைவு) நந்நாள் சிருங்கேரியில் குருநாதர் ஜகத்குரு ஶ்ரீ பாரதீய தீர்த்த மகாஸ்வாமிகளின் நிறைந்த கருணையோடு சிறப்பாக நிறைவடைந்தது.
இன்று அடியேன் தாயாரின் 97ஆவது பிறந்த தினம்.
மறுநாள் துவாதசி. துளசி கல்யாணம். இரவில் 12 மணியளவில் குருநாதர் செய்த துளசி கல்யாண பூஜையை எங்கள் குடும்பத்தினர் அனைவரும் தரிசிக்கும் பேறு பெற்றோம். நரசிம்ம வனத்தில் இருந்து துங்கை நதியின் வடகரைக்கு ஆசார்யாளின் காலடியைத் தொடர்ந்து நாங்கள் வந்து கொண்டிருந்தோம்.
நடந்து வரும் போது என் மூன்றரை வயதான மகனைப் பார்த்து,"டேய்..ஒனக்கு தூக்கம் வல்லையா?" என்று ஆசார்யாள் கேட்ட போது," தூக்கம் வரலை ஆசார்யாள்..நான் பூஜை பாக்கப் போறேன்" என்றதும்,"வா..வா.." என்ற கருணை நிறைந்த குருநாதரின் வார்த்தைகள் இன்றுவரை எங்களுக்கு வரமாக அமைந்த கொடுப்பினை.
துவாதசி தினத்தில் காலை எட்டு மணிக்கு அடியேனின் பிராத்தனைக்காக குருநாதர் மந்திரோபதேசமும் செய்தருளினார்.
இது நடந்து முப்பத்தாறு வருடங்கள் ஆனாலும் இன்னும் அனைத்து நிகழ்ச்சிகளும் மனத்தில் பசுமையாக வாழ்கிறது.
ஒன்றும் கற்றறியாத மூடனான அடியேனுக்கு இவையெல்லாம் அமைந்தது பெற்றோர்களின் ஆசியாலும், குருநாதரின் கருணையாலும்தான் என்பதை அடியேனின் மனச்சாட்சி சொல்லிக் கொண்டே இருக்கிறது.
பிறவிப் பெருங்கடலைக் கடக்க இவனுக்கு இந்தப் படகுகளே நற்றுணையான நமச்சிவாயம்.
அடியேன்,
மீ.விசுவநாதன்
02.11.2025 18.40pm